1970'S புன்னகை அரசி ..👌
K.R. விஜயா 70 களில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். சரோஜாதேவி சாவித்திரி ஜெயலலிதா போன்ற நடிகைகளுக்கு இல்லாத பெருமை KR.விஜயாவுக்கு உண்டு. K.R.விஜயா தனிப்பெரும் கதாநாயகியாக விளங்கினார். இவர் நடித்த திருடி, வாயாடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, கியாஸ்லைட் மங்கம்மா, நம்ம வீட்டு தெய்வம் மற்றும் அம்மன் படங்களிலும் தனியாக ஜொலித்தார்.
அதிலும் மதுரை திருமாறன் இவரை கதாநாயகியாக வைத்து தொடர்ச்சியாக படம் எடுத்தார்.
நம்ம வீட்டு தெய்வம் படத்துக்கு பெண்களுக்கு தனிகாட்சி வைக்கும் அளவு தாய்மார்களின் கூட்டம் இருந்தது. சின்ன சின்ன ஊர்களில் கூட 50 நாட்களை தாண்டி ஓடியது.
ஜெய்சங்கர், ரவிச்சந்திரனை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கினார் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் இவரே. இப்போ நயன்தாரா இருந்தாலும் சில படங்கள்(டோரா) அவரையும் கவிழ்த்து விடுகின்றன..