படம்: பெண் ஒன்று கண்டேன் (1974)
இசை: MSV
வரிகள்: வாலி
பாடியவர்: SPB
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி (நீ ஒரு)
நான் வாவனெ அழைக்கையில்
விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை (நீ ஒரு)
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே (நீ ஒரு)