படம் : மணபந்தல்(1961)
இசை: MSV & ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியோர் : PB சீனிவாஸ் & சுசிலா
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன் - நீ
பாடும் மொழி கேட்டதிலே வார்த்தையிழந்தேன்
நேற்று வந்த நினைவினிலே நெஞ்சமிழந்தேன் - நீங்கள்
நேரில் வந்து நின்றவுடன் என்னை மறந்தேன்
காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்தேன்
ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓஓ
காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்தேன் - தென்றல்
காற்று வைத்த நெருப்பினிலே ஆவியிழந்தேன்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன்
கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன் - உங்கள்
கையருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் -
வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே - இங்கே
காய் திறந்தும் கனிந்ததம்மா மாதுளங்கனியே
மாதுளங்கனியே காதலன் கிளியே - இனி
மயங்கும் இன்ப இரவினிலே
வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள்
வடிவத்தோடு மனது சேரும் வாழ்வினில் ஒரு நாள் இனி
வளரும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள்