ராகினி & பத்மினி றான்ஸ்..👌
படம் : விக்ரமாதித்யன் (1962)
இசை : ராஜேஸ்வர ராவ்
வரிகள் : சரவண பாவனந்தர்
பாடியோர் : லீலா & ரத்னம்
நிலையான கலை வாழ்கவே – உலகிலே
விலையென்றும் இலையென்றும்
பாடும் ஆடும் இன்ப....
நிலையான கலை வாழ்கவே.....
ஆடினால் போதுமோ அறிந்தவையாமோ
தேடிடும் லய ஞானம் தீரம் வீரம்
சீருடன் சார்ந்திடப்போமோ
பரதமென்றால் முகம் பரிந்தூட்டும் பாவம்
கருதிடும் ஜதி தாளம் கன ராகமாகும்
அலைகடல் ஒலியும் உலவிடும் காற்றும்
அனைத்தும் கலையின் சாதனை
மலையதன் திடமும், மயிலதன் நடமும்
மகிழ்வுடன் சொல்லும் போதனை
நாகரீகமான ஞான கலையே
நாகரீக யோக வாழ்வு நிலையே
காதலென்றும் போதை எங்கும் கலையே
காட்சி வேஷம் ஆட்சியென்றும் நிலையே
புதுமையதே பழமையதே
மலரது மணமும் கலை வளமே
மணமதன் குணமும் கலை வளமே
மங்கலமெங்கும் முழங்க விளங்கும்
இளங்கதிரானது கலை வடிவே
துங்கமிகுங்களி பொங்கு செழுங்குளிர்
தங்கிய வெண்மதி கலை வடிவே
அமுதினும் உயர்ந்தது கலையமுதே
அதனினும் உயர்ந்தது நிலையமுதே
நவரசமே சமரசமே அழகு பழகு.......