படம்: பெண் ஒன்று கண்டேன்
(1974)
இசை: MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர்கள்: SPB & P. சுசிலா
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது
உறவில் இன்பம் அள்ளித் தந்தது
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை
நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது
ஏன் ஏன் ஏன்
மாதுளம் என்பது மாங்கனிப் போன்றது
காதலர் கை பட பொங்கி வழிந்தது
தேன் தேன் தேன்
தேன் சுவையோ இல்லை மான் சுவையோ
என நான் துடித்தேன் இந்த வேளையிலே
நான் தரவோ இல்லை நீ தரவோ
என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்துப் பதிக்க
.
பாலிடை ஊறிடும் திராட்சையை போல் இரு
சேல் விழி பார்த்தும் காதல் பிறந்ததோ
சொல் சொல் சொல்
பாதரசம் என ஓடிடும் பார்வையில்
காதல்ரசம் தரும் கன்னியின் அருகே
நில் நில் நில்
ஆத்திரமோ இல்லை அவசரமோ - எனை
அணைத்திடவே இந்த நாடகமோ
நீ அறிவாய் அதை நான் அறிவேன் - இதில்
கேள்விகள் நூறு கேட்கனுமா
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க..