Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. WhatsUp செய்தி. அனுப்பியவர்கள் தனிப்பட்ட வகையில் தெரியும் என்பதால் பகிர்கிறேன். முடிந்தால் விரைவாக பகிருங்கள்: இன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமென்றில் , அந்த வைத்திய சாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்பட்டது . அப்போது ஒரு தமிழ் வைத்தியநிபுணர் அதற்க்கு ஆட்சேபம் தெரிவித்தார் . அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என ! அதற்க்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் … வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்க்கு தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது , அதுபற்றி சுகாதார அமைச்சே தீர்மானிக்க வேண்டும் என்றாராம் . இந்த விடயத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து , முல்லைத்தீவு மாவட்ட அரசியல் தலைமைகளும் , சுகாதார திணைக்கள அதிகாரிகளும் , அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இதுபற்றிய தங்களின் கரிசனையை வாஞ்ஞையோடு எதிர்பார்க்கிறேன் .
  2. ஆகா, உருட்டல் அருமை! A/L law வா? நன்னா இருக்கு ப்ரோ! எதுக்கோ சொன்னதை, எங்கவோ கோர்கிறீங்க பாருங்க. நான் அதை சொன்னது, பெடி ஏதோ தப்பி விட்டான், அதுக்குள்ள கடவுளை இழுப்பதா என்றவர்களுக்கு. ஒரு உதாரணமாக சொன்னேன். நீங்கள் அதை பிடித்து தொங்கிக் கொண்டே வழக்கம் போல வகுப்பெடுக்க துவங்கி விட்டீர்கள். 😂 சரி விடுங்கோ, எனக்கும் தொடர ஆர்வம் இல்லை!!!
  3. Misnomer?? இதை பாருங்கள், மேலதிக விளக்கத்துக்கு, https://www.investopedia.com/terms/a/act-god.asp#:~:text=Generally speaking%2C an act of,%2C government lockdowns%2C or war. பொதுவாக Act of God clause insurance company கள் பாவிப்பதாக சொல்லப்பட்டாலும், சட்டத்தின் பல இடங்களில் பாவிகப்படுகிறது. நான் முதலில் படித்தது கணக்கியல் பாடங்களில். முக்கியமாக sale of goods actல். உங்கள் பிறந்தநாள் படம் எடுக்க ஒப்பந்தப்படி பணம் வாங்கியவர் வாற வழீல மரம் குறுக்கால விழுந்து பாதை தடை பட்டால்..... அவர் மறந்து எனது பிறந்தநாள் படம் எடுக்க வந்தால்..., அதுவே வித்தியாசம்!
  4. இங்க அலப்பறை பண்ண என்றே சிலர் திரியினம். அவர்களது கருத்துகளின் தரத்தை வைத்தே விலத்தி நகர்ந்தாலும், நானும் ரவுடிதான் ரைப்பில கருத்தாடல் செய்யாமல் தரத்துடன் பதிவுகளை வையுங்கள். கிட்டிப்புல் வெளாடுற வயசா?
  5. நீங்கள் குழப்பிறீயள் பாரூங்கோ! முதல்ல என்னவோ சொல்லிக் கொண்டு வந்தீங்கோ, அதுக்கு விளக்கம் தந்தோன்ன... அது ச.....ரீ...... ஆனா.... இது.... என்ன உடான்சர் இதெல்லாம்.... விட்டுட்டு திண்ணைக்கு வாங்க.... யூதர் கூத்து வர்ணணைக்கு வெயிற்றிங்... 🤣😂 உடனடியா பாலத்தீனம் அனுப்பி விடுங்க... பெரும் நாசம் நடக்கப் போகுது... 🥺
  6. நான்அவர் சொன்னது பிழை என்று சொல்லவில்லையே. அதன் தொடர்சியாக மேலதிக விளக்கம் தந்தேன். மீண்டும் பாருங்கோ!
  7. இதை யாரையும் புண்படுத்த எழுதவில்லை: 🤔 எழுதியாச்சே. இனி என்ன?? சரி விடுங்க.🥹 Act of God' to describe natural disasters that were beyond human control. இதனைச் சொல்லி, காப்புறுதி தொகை தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்த காப்புறுதி நிறுவனங்களுக்கு, எது வரை Act of God பாவிக்கலாம் என்பதை வரையறை செய்தே சட்டம் வந்தது. இன்று காப்புறுதி நிறுவனங்கள், Act of God இயற்கை அனர்தங்களுக்கும் காப்புறுதி செய்கின்றன. ஆக, காப்புறுதி எடுக்கும் போது, இதெல்லாம் கேட்டு தேவையானால் எடுக்க வேண்டும். உதாரணமாக பள்ளக் காணியில் இருப்போர், வீட்டுக் காப்புறுதிக்குப் போனால், வெள்ள ஏரீயா என்று காப்புறுதி நிறுவனமும் கூட பிரிமியம் கேட்கும். வீடு வாங்கியவருக்கும், ரிஸ்க் தெரிந்தே வாங்கியிருப்பார். ஆக எந்த பார்ட்டியும் Act of God என்று நிக்கேலாது.
  8. கா(ல்)வாளி, கடைசீல சபைக்குதவா முரட்டுப் பயல் (rude boy) தானே
  9. இவரது வீடு, யாழ் கந்தர்மடம், அம்மன் வீதியில் இருந்தது. இவரது ஒரு மகன் லண்டனில் ஈஸ்ட்ஹாம் பகுதியில் இருந்தார் என்று நினைக்கிறேன்.
  10. காவாலி என்பது, கா(ல்)வாளி என்பதன் பேச்சுச்சொல். அதாவது கா(ல்)க்குடம். முழுக்குடம் தளும்பாது. காக்குடம் தளும்பும். ஆகவே, இவன் அந்த காவலிகளுடன் திரிகிறான் என்றால்.... படிப்பை தூக்கி கடாசி விட்டு, திரிபவர்கள் உடன் கூடி, அவர்கள் போலவே தெருவுல நிக்கப்போறன் என்று அர்த்தம். 😁🤣
  11. இந்த விதமான over protecting of their kids இங்கும் இருக்கிறது. ஸ்ரேசனில் ரிக்கற் எடுக்கும் லைனில் நின்றவர், வேறு கவுண்டர் போகலாம் என்று திரும்ப பின்னால் நின்ற கறுப்பரின் (கறுவ* எண்டால் கோவிக்க ஆளிருக்கு) மகனின் காலை தவறுதலாக மிதிக்க, சிறுவன் வலியில் துடிக்க, மகனை அங்கேயே விட்டுவிட்டு, சாரி சொல்லி போனவர் பின்னால் போய் தலையில் ஒரு குத்து. கீழே விழுந்து தலை அடிபட்டு ஆள் அவுட். இன்னுமொரு குடும்பத்துக்கு தந்தை இல்லை. இவரது மகனுக்கு தந்தை கொலை செய்து உள்ளே!! 🥹 விளையாட்டுப் போட்டிகளில் தமது பிள்ளையை முந்தும் சக மாணவனின் பெற்றோரை தாக்குவது பொதுவானது. ஆக, இந்த குடும்பம், தமது பிள்ளையை யாரும் கண்டிக்க கூடாது என்ற நிலைப்பாடு கொண்டோராயும் இருக்கலாம்.
  12. உங்களையும், என்னையும், படைத்து, உந்த உலகத்தில் உலாவ விட்டதே பெரிய நாசமறுத்த கடவுள் வேலை தானே என்று விளங்கிக் கொள்ளலாமா?🤣😁
  13. பகுத்தறிவு பேசுவோர் கவனத்திற்கு: இன்றும் கூட ஆங்கில சட்டத்தில் கடவுள் செயல் என்ற வரைவிலக்கணம் உள்ளது. Common examples of 'acts of God' include earthquakes, tsunamis, hurricanes, and storms.
  14. விளங்க எதுவுமில்லை. கல்வியின் அருமை புரிந்த பெற்றோரே பிள்ளைகளுக்கு கடத்துவர். இது அருமை புரியாத, பிள்ளையின் எதிர்காலத்தையே நாசமறுக்கும் குடும்பம்.
  15. கிளிஞ்சுது போங்கோ.... என்ன, கந்தையர் இதெல்லாம்? 🤦‍♂️ கண்ணை செக் பண்ணி கண்ணாடி போடுங்கோ. 😰
  16. சீனத்து வெடிமருந்தை, பாவித்து பீரங்கி போன்ற போர்கருவிகளையும், துப்பாக்கிகளையும், கண்டு பிடித்த பின்னர், அதுவரை இருந்த துடுப்புகளால் இயக்கப்பட்ட சிறு படகுகளை, பெரியதாக்கி, புதிய நெடும்தூரம் செல்லும் பாய்கப்பல் பாவனைக்கு வந்த பின்னர், 1444AD அளவில் போர்த்துகேயர்கள், மேற்கு ஆப்பிரிக்க கறுப்பர்களை அடிமைகளாக ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தனர். அப்படியே ஸ்பானியர்கள் அமெரிக்காவுக்கும், 1498ல் இந்திய துணைக்கண்டத்துக்கும் போர்த்துகேயர்கள் வந்த பின்னர், தம்மை வெல்ல முடியாத ஒரு பிம்பமாக காட்டியபோதே, நமது பகுதி உள்ளிட்ட கறுத்ததோல் காரர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டனர். இது பிரிட்டிஷ் காலத்தில் அதிகமாக இருந்தது. அதேபோல, வெள்ளைத்தோல் ஆரியர்களும் , தென் இந்தியரை, முக்கியமாக தமிழரை ஏமாத்த, இமயமலையில் இருந்து இறங்கி வரும், இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்று கதை விட்டு, கோவில்களை ஆக்கிரமித்துக்கொணடார்கள்.
  17. வெள்ளைத்தோல் என்றால், உயர்வு, கறுப்பு தோல் என்றால் தாழ்வு என்பது, எமது பார்வை என்றே சொல்வேன்.
  18. எனது பெரியம்மா, தலை மயிர் வெட்டாமல் இரண்டு மூன்று மாதம் போனால், இதென்னடா இது, காப்பிலி, கடப்புலி மாதிரி மோனே என்று சொல்வார். ஆனால் அவருக்கு அர்த்தம் தெரிந்து சொல்வதில்லை. இன்று கேட்டாலும் தெரியாது. அது காலகாலமாக தொடர்ந்து வரும் சொல்வடை போலுள்ளது.
  19. சோ இராமசாமி; ஜெயின் பிரதம ராஜகுரு ஆக அரசியலில் கோலோச்சினார். சுப்ரமணிய சாமி மத்திய அமைச்சர் ஆக இருந்தாரே ப்ளு சட்டை மாறன் படம் எடுத்தாரே என்ன தல, எல்லா உதாரணமும், டமால், பணால் வகையில இருக்குதே. அதுசரி, அக்கா, கணநாளுக்கு பிறகு ஆசையா எழுத வந்திருக்கிறா என்றால், political correctness அதிகமாக இருக்குதே..
  20. காப்பிரி நாடு அவசொல்லானால், யவனரின் யவனநாடு, அவச் சொல்லா, இல்லையா?
  21. அமெரிக்காவில், கடத்தப்பட்ட சிறுமி, 48 மணி நேரத்தில் மீட்பு. நியூயோர்க் மாநில அரச பூங்கா ஒன்றில், உள்ள காம்ப் ஒன்றில் குடும்பம் ஹொலிடே எடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. 9 வயது சிறுமி, தனது நண்பியுடன் சைக்கிளில் பார்க்கினை சுத்தி ஒரு ரவுண்டு வந்து இருக்கிறார்கள். இரண்டாவது ரவுண்டு போக சிறுமி தயாராக, நண்பி களைப்பாக இருப்பதாக சொல்ல, சிறுமி, தான் மட்டுமே போவதாக கிளம்பி போய் இருக்கிறார். 15 நிமிடமாக அவர் திரும்பி வராததால், குடும்பம் தேட தொடங்கி, நேரமாக, போலீசாரை அழைத்திருக்கிறார்கள். நியூயோர்க் மாநில போலீசார், FBI, பொதுமக்கள் 400 பேர், சுற்று வட்டார பகுதிகளில் எல்லாம் தேடுதலை தொடங்கினர். நேரமாக, நேரமாக அனைவரிடமும் பதட்டம் அதிகரித்தது. 36 மணிநேரத்தின் பின்னர், காலை 4.20 மணியளவில், ஒரு கார் வேகமாக வந்து, அவர்களது குடும்ப வீட்டின் தபால் பெட்டியில் ஒரு கடிதம் போட்டு சென்றதை அயலவர்கள் கவனித்து போலீசாருக்கு அறிவிக்க, போலீசார் கடிதத்தினை மீட்டு, கவனமாக பரிசீலனை செய்த போது, கப்ப பணம் கேட்டு எழுதிய அந்த கடிதத்தில், கைவிரல் அடையாளம் இருந்ததை கண்டு, அதனை தமது தரவு வங்கியில் பரிசீலித்த போது, அவர்களுக்கு அறிமுகமான கிரிமினல் தான் என்று தெரிய வந்த போது, மிக கச்சிதமாக திட்டம் போட்டனர். அவர்கள், சந்தேகநபரின் தாயாரின் வீட்டினை சிவில் உடையில் போய்,நண்பர்கள் தேடி வந்ததாக சொல்ல, விசயம் தெரியாத தாய், பின்னால் உள்ள காம்பேரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். பின்னால், கப்ப பணத்துக்காக, வெய்டிங் இல் இருந்த சந்தேக நபர், சில திமிறலின் பின்னர் கைதானார். அங்கிருந்த கேபினெட் ஒன்றில் இருந்து சிறுமி மீட்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் பின்னர், சிறுமிக்கு பாலியல் ரீதியான வன்முறைகள் இல்லை என்று உறுதி செய்து, வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். கைவிரல் அடையாளம், சிறுமியை காத்தது. (கடவுள் செயல் தான் 🙏) இவர் தான் கடத்தி மாட்டியவர் பரலோகத்து பரமபிதாவே, இவரை மன்னியும்.
  22. விளக்கத்துக்கு நன்றி. காக்கா என்றால், உண்மையான அர்த்தம் என்ன? கடல் கடந்து செல்லும் இஸ்லாமிய வியாபாரிகளை. 'குருவி' என்று அழைக்கின்றனர். இருவாரங்களுக்கு முன்னர் குவைத்தில் இருந்து, விமானத்தில் வந்த 113 குருவிகளிடம் இருந்து பல கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல் என்று, தமிழக செய்தி சொன்னது. அதேபோல, ஊர், ஊராக சைக்கிளில் பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்பவர், 'காக்கா' என்று அழைக்கப்பட்டாரோ? எனது நினைவு சரியானால், களஉறவு ராசவன்னியன் இதன் அர்த்தம் என்ன என்று கேட்க, யாரோ, 'நானா' என்று பொருள்படும், சகோதரத்தினை குறிக்கும் அரபு சொல் என்று சொன்னதாக நினைவு.
  23. UK யில் இருந்து ஒருவரும் நிர்வாகத்தில் இல்லாததால், தெரியாது என்றேன். மோகன் அண்ணை, இதனை கவனித்து, உங்களை மட்டு ஆக்க வேண்டும்.
  24. நம்மிடையே மட்டுமே சாதியம் இருப்பது போலவும், அதன் தொடர்ச்சியே இது என்று ஒரே போடாக போடுகிறீர்கள். இந்திய உபகண்டம் முழுவதும் உள்ளது. மேலும், உகாண்டாவின் இடி அமீன், ஆசியர்களை வெளியேற சொன்னதன் காரணம், அவர் ஒரு இந்திய வம்சாவளி பெண்ணை விரும்பி, காதலை சொன்ன போது, அவர், எனது வீட்டில் குரங்கு ஒன்றினை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று சொன்னதாகவும், அதன் பின், அவர் பதவிக்கு வந்த போது. அந்த குடும்பத்தை பழிவாங்க ஆள் அனுப்பிய போது, இல்லாத காரணத்தால், ஆசியர்கள் அனைவரையுமே வெளியேற சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன, அடை, சப்படை, அய்யாதுரை (ஐரிஸ்) எல்லாம் ஒரு அடையாள குறியீடு. Black என்ற அடையாள குறியீடு தவறாக ஒருகாலத்தில் கருதப்பட்டது. பின்னர், நாளடைவில் அவர்களே அதனை அது சரியானது என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பார்கள். வெள்ளையரின் இனத்துவேசம் நம்மூரில் மட்டுமல்ல, இந்த நாடுகளிலும் மிக மோசமானது. ஒரு காலத்தில், நமது கணக்காளர்கள், இந்திய பட்டேல், சீக்கியர்களே வேலைக்கு ஒரே கதி என்று இருந்தார்கள். IT காரணமாகவே, இன்று இந்தியர்களும், எம்மவர்களும் பெரு நிறுவங்களின் வேலை செய்யக்கூடியதாக உள்ளது. ஆக, அடையாள குறியீட்டினை, சாதிய குறியீடாக கருதுகிறீர்கள் போல படுகிறது. இது குறித்து மேலதிக விளக்கம் தர முடியுமா? நன்றி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.