Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. என்னவாயிருந்தாலும், நம்ம கீரோ, எங்கண்ட தூசணப்பிக்கர் தான். என்ன, இண்டைக்கு காத்தாலவே, மெண்டிஸ் ஸ்பெசல் வாங்கனுப்பின ஆள் வர லேட்டாயிட்டுதெண்டு, ஆத்திரம் அவசரத்துக்கு வைச்சிருந்த கசிப்பில வாயை நணைச்சுப் போட்டார். கழுதை டபக்கெண்டு ஏத்தி விட்டுது! 🤣😂 அதுக் காண்டி, வழக்கு, கைது.... ரூ மச்.... அப்புறம் தூசண ரெயினிங் ஆர் தருவினமாம்?🤔
  2. இவர் தேப்பன மாதிரி இல்லை. இவர்அதுக்கு சரிப்பட்டு வரார்.
  3. இந்தால் சரத் வீரசேகரா, மொட்டில கேக்கலாம் எண்டுதானாம் இனவாத கத்து கத்துறார். ராஜபக்சேக்கள் இப்போதைக்கு வரமாட்டினம் என நிணைக்கிறாராம். அமெரிக்க விசாமறுப்பு, கொதிய கிளப்பியிருக்கு. கொஞ்ச நாளா, விமல் கப்சிப். அவுஸ் விசா மறுப்புக்குப் பின் கமன்பிள்ள அமைதி!
  4. சித்தார்தன், தமிழ் வேட்பாளரும் நிக்கவேணுமாம். ஏன் அப்படி சொல்லியிருப்பாரூ? 🤔
  5. இது ரசனியா? சூரியா மாதிரி இருக்குதே. பாலில குளித்து இளமையாயிட்டாரோ? 😂🤣
  6. இது ஆப்கன் பெண்ணுரிமை! 19 வயசு ரொக்சாணா. அழகை, அல்லா அள்ளிக் கொடுத்திருக்கிறார். முல்லா யூசுப், 55 வயதான தனது சகோதரருக்கு பெண் கேட்கப் போயிருக்கிறார். இல்லீங்க, வந்து... 25 வயசுப் பையனுக்கும் அவளுக்கும் அடுத்த மாசம் கலியாணம்.... யாரு பையன்.... அவனா? பிச்சைக்காரப் பயல்... என் தம்பி, பணக்காரன், ராணி மாதிரி வைத்திருப்பான். இதுக்கு முன்னாடி கட்டின 4 பேரும் நல்லா இருக்காங்களே!! வேணாம், மறுத்தார்கள் பெற்றவர்கள். இரண்டு நாளில் பஞ்சாயத்து, முல்லா யூசுப் தலமையில்... திருமணத்துக்கு முன்பே, அந்த வாலிபருடன் உறவு கொண்டது கராம். பயலுக்கு 50 கசையடி. ரொக்சானாவுக்கு கல்லெறி. முல்லா உத்தரவில் கல்லடி பட்டு பிணமாணார், ரொக்சானா! உறவு பற்றி? அல்லா ரகசியமா சொல்லியிருப்பார். கொடுமை!!
  7. தாம்பரம் தங்கவேலு பேசுறேனுங்க. நம்ம ஊரு பத்தி ரொம்பத்தான் கவலை உங்களுக்கு. உங்க ஊரில செப்டம்பர் மாசம் மட்டும், 168 பேர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி இருக்கிறானுங்கோ. அம்புட்டு பேரும் 16 வயசுக்கு குறைவுங்கோ. இந்த அக்கிரமத்தை பண்ணினவனுகள்ள பாதி பேரு, போதை பொருள் ஆசாமிகள் என்று ஒரு பெண்ணுரிமைவாதி சொல்கிறாருங்கோ. அதில, 22 பேர் கர்ப்பமாகி ஆஸ்பத்திரி போனப்புறம் தான், சங்கதி வெளிலே தெரிஞ்சிருக்குங்க. 2022 ல, கேஸ் 2000 க்கு மேல. ஆக, 2023 முடியேகுள்ள கேசு 3000 தாண்டிருங்கோ. 2021 இல் இலங்கையில் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன உங்க ஊரு என்றால், தமிழர் வாழும் பகுதியும் சேர்த்து தானுங்கோ. முதலில அங்கே, பெண்குழந்தைகளை அவர்களின் பாதுகாப்பினை, பெண் உரிமைகளை பேசிப்புட்டு, இந்த பக்கமா வாருங்கப்பா. அப்புறம் வரட்டுமா?? https://www.dailymirror.lk/print/front-page/168-rape-cases-reported-in-September-22-of-them-pregnant-Eran/238-269977 https://www.dailymirror.lk/breaking-news/Drug-addicts-responsible-for-half-of-child-rape-cases-Geetha/108-269941 ***** இது குறித்து, திண்ணையில் பதிந்தேன். யாருமே கண்டுகொள்ளவில்லை. அதையும் கடந்து போய், தமிழகத்தில் நடக்கும் விடயத்துக்கு குய்யோ, முறையோ என்று குளறுவது வேடிக்கையானது.
  8. அதுதான் சொல்கிறேனே, நீங்கள் குப்பைக்குள் குண்டுமணியை தேடுகிறீர்கள். அது தமிழக அரசியலில் சாத்தியமில்லை என்ற புரிதலுடன்.... நகர்வோம். எமது, பார்வைக்கு கலாசாரம் சிறிது வித்தியாசமானது. தமிழகத்தில் பார்வை மிகவும் வித்தியாசமானது. அதுக்கு முக்கிய காரணம் சினிமா. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் கூட்டத்தினிடையே, என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். ஒரு போலீஸ் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதன் பிறகு என்ன, பெண் உரிமை பேசி எழுதுகிறார்கள்? இவர்கள் பணத்தினை வாங்கிக் கொண்டு, அரசியல் நோக்கத்துடன் எழுதுவார்கள். ஜெயலலிதாவை, சேலையை உருவி அடித்து திரத்தியவர், துரைமுருகன். பெரியகருப்பன், வீடியோ வந்த பின்னும், முன்னர் கிடைக்காத பெரும்பான்மையுடன் வென்றார். அதுதான் தமிழகமும் வாக்காளர்களும். சில நேரங்களில் யோசிக்கும் போது, பெரும் சனத்தொகையும், அங்கே நடக்கும், வளங்களை பகிர நடக்கும் தனிமனித பெரும் போட்டி காரணமாக மனிதாபிமானம் இல்லை என்று தோன்றுகிறது. இதில் பெண்ணுரிமை இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆகவே, ரிலாக்ஸ். குட் நைட்.
  9. அதைத்தான் பெரியாரும், அவரது திராவிட போதனைகளும் தமிழகத்துக்கு செய்தன. பேச்சுக்கே இந்த குதி, குதிக்கிறீர்கள். வேறு பல விடயங்கள் இருந்தாலும், போலீஸ்கார பெண்கள் இருவரை பாலியல் ரீதியில் சீண்டி, அழுத்தத்தினை பிரயோகித்து, கடந்த வாரம், கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது என்றவுடன், ஸ்டேஷன் வந்து, பயமுறுத்தினாரே, திமுக ஏரியா பிஸ்தா. அது குறித்து, இந்த பத்திரிக்கை யாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படித்தானே. திமுக, ஊடகங்களை விலைக்கு வாங்கி, தாம் விரும்பியதை சொல்ல வைக்கிறது. ஆனால், அதனையே ஸ்டாலின் நம்புவதே, அவருக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியில் பெரும் பிரச்சனைகளை கொடுக்கப்போகிறது. ***** சில நேரம், உங்கள் ஜோக்குகளையே, சீரியஸ் ஆக நினைத்து, பக்கம், பக்கமாக கருத்து எழுதுகிறீர்கள். நாம் தமிழக வாக்காளர்கள் அல்ல, இந்தளவுக்கு அக்கறை கொள்ள. பார்த்தமா, சிரித்தமா... போய்கிட்டே இருப்போம். அதுக்குள்ள போய், வேலை இல்லாத ஆட்கள் போல மினக்கடுவதை, தமிழகத்தில் உள்ளவர்கள் பார்த்தால், சிரிப்பார்கள்.
  10. அதுதான் விசயம்.... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தெரிந்தும், குப்பைக்குள், குண்டுமணியை தேடுவதாக, ஜோக் அடிக்கிறார்கள். 😁🤣
  11. உடான்சர், உங்களுக்கு பொழுது போகவில்லை எண்டால், எங்கையாவது துலாவி, எதையாவது கொண்டு வந்து ஓட்டுவது மட்டுமல்லாமல், ஆழமாக கவலை வேற படுகிறீர்கள். அட போங்க சாமியாரே, ஜோக் அடிக்காம... பெரியார் நம்ம ஊரு வந்தாரு, மணியம்மையை பார்த்தார், தூக்கிக்கொண்டு போயி, கண்ணாலம் கட்டிக்கிட்டாரு என்கிறார், அமைச்சர் துரைமுருகன். கருணாநிதி, ஒன்றல்ல, இரண்டு... மனைவி, துணைவி. அதுக்கும் மேலே, கண்ணதாசனின் வனவாசம் மிச்ச கதையின் உதாரணம் சொல்லும். எம்ஜிஆர், திரை உலகில் அடித்த கூத்து, கடைசியில் ரஜனியை அடிக்கும் அளவுக்கு போனது. ஜெயலலிதா, காதல், தொடர்புகள், எம்ஜிஆர், ஜெய்சங்கர், சோபன்பாபு என்று நீள்கிறது. ஸ்டாலினுக்கு ஒரு பாத்திமா பாபு. அடுத்த முதல்வர் மகனுக்கு ஒரு நயன்தாரா, சிறீ ரெட்டி. நீங்க வேற, இந்த தமிழகத்து தலைவர்களிடம் எதையோ எதிர்பார்த்து சீரியஸ் ஜோக் அடித்துக்கொண்டு.... உதுக்குள்ள, உங்கள் ஜோக் புரியுமா, ஒரு அய்யா சீரியஸ் ஆக டபார் என்று வந்து நிற்பார். பாம்பின்கால், பாம்பறியும். உங்கள் உளநோக்கம் யான் அறியும், உடான்சரே 😁🤣
  12. தமிழக சினிமா உலகில், இன்று பெரும் புயலை கிளப்பி இருக்கும் ஒரு விசயம், இசையமைப்பாளார் இமான் அண்மையில் ஒரு பேட்டியில், தனக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றினை நடிகர் சிவகார்த்திகேயன் செய்துவிட்டார் என்று சொல்லி இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த விடயத்தின் விளைவாக, இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து, வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து இருந்தார். இங்கே என்ன நடந்திருக்கிறது என்று புரியக் கூடியதாக உள்ளது. ஒரு தூய கிறஸ்தவரான இமான் (inman), சினிமாவில் பெரிய வாய்ப்பில்லாமல் இருந்த சிவகார்த்திகேயனை, தனது சிபாரிசு மூலமும், சிறப்பான இசை, மட்டும் பாடல்களினால் மிக உயர்ந்த இடத்தினை அடைய உதவினார். இது, இவர்களை மிக சிறந்த நண்பர்களாகவும், குடும்ப அளவில் உறவினை உருவாக வழி சமைத்தது. இறுதியில், ஒரு மன்னிக்க முடியாத துரோகத்தினை செய்யவும் வைத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு, பல பெண் ரசிகர்கள், குறிப்பாக சிறுவர்கள் கூட உள்ளனர். இந்த ரசிகர்களில் பலர், இமானின் குற்றசாட்டினை ஏற்றுக் கொள்ளவோ, ஜீரணிக்கவோ முடியாது, இமான் எரிச்சலில் இப்படி சொல்கிறார். சிவகார்த்திகேயனின் எதிரியான தனுசின் தூண்டுதலில் இப்படி செய்கிறார் என்று சொன்னாலும், உண்மை முகத்தில் அடித்து போல அல்லவா நிக்கிறது. மனைவியை பற்றி நண்பனிடம் சொல்லாதே. நண்பன் குறித்து மனைவியிடம் சொல்லாதே என்பது, இமானை பொறுத்த வரை, காலம் கடந்த ஒன்று போலுள்ளது.
  13. என்ன காரணம்? அஜெனிசி மேல் அதீத நம்பிக்கை அவ்வளவு தான். வரியை ஒழுங்கா கட்டி, ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட முடியாதா என்ன?
  14. ஊரில, கோவில், குளம் எண்டு, சும்மா இருந்த மனிசியை கொண்டு போய் சிறையில போட்டிருக்கினம் பிள்ளையள். 🥲
  15. சரத்தரிண்ட பொஸ் கோத்தா. பத்தாததுக்கு விசா வேற இல்லையெண்டாச்சு எண்ட கொதியில, இந்த இனவாதி துள்ளுது. அமேரிக்கா இல்லையெண்டா, கோத்தா இருந்திருப்பார். அரகலயும் நடந்திராது. எல்லாற்ற வாயிலும் ஆமீ துவக்கை வைச்சு பொட்டா, பூவா எண்டு கேட்டு அனுப்பிக் கொண்டிருந்திருக்கும்.
  16. நாசமறுந்தது. வாகணம் ஓடுறவயளப் பிடிச்சு, வலுக்கட்டாயமா, வாய்குள்ள சாரயத்தை ஊத்திப்போட்டு, அரசாங்கத்திட்ட, தா 5,000 எண்டு நிக்கப் போறாங்கள், சிறீ லங்கன் போலீஸ் ராலாமிகள். 🫨🥴🤢
  17. அந்தம்மா, அதை முதலீடா வைச்சு, முதல்வர் ஆகினாங்க! இந்தம்மா, ஆண்மையற்றவன் என்று பொருள்படும், பொன்ன என்று திட்டினால், திட்டு வாங்கியவர், கையை நீட்டுவார் தானே! அக்கா, மட்டக்கிளப்பு தூசணப் பிக்கருகு றப் கொடுப்பா எண்டு உடான்சர் சொல்லுறார். இருந்தாலும், அக்கா, கஞ்சா வெவசாய உற்பத்திக்கு கடுமையா உழைக்கிறா என்ற படியால, அவோவை, ஆஸ்பத்திரீல படுக்க வைச்சது பிழை தான். இருந்தாலும், கழுத்தில கைய வைச்சு போ அங்கால, தள்ளினத்துக்கே போய் கட்டெல்லாம் போட்டுப் படுத்ததால, தள்ளினவர் பொன்ன அல்ல எண்ட முடிவுக்கு வரலாம். வாக்கா, பொங்காம எண்டு கூட்டிக் கொண்டு போன நம்ம சாணக்கியன் தான், ஆஸ்பத்திரீல படுக்கிற ஐடியா கொடுத்திருப்பாரோ 🤔😂🤣
  18. அட்றா சக்கை! பையர், தமிழ்சிறி எல்லாரையும் திண்ணையில் பார்ப்பது சந்தோசம். பையா, நிதானமாக கலந்துரையாடுங்கள். கோவம் வரும் போது, விலகிச் சென்று ஆறுதலாக வந்து கருத்தாடவும். கருத்தை இழக்கலாம், களத்தை இழக்கக் கூடாது. அதே வேளை, களத்தை உற்சாகமாக வைத்திருக்கும் கருத்தாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் நன்றி! 🙏
  19. ஆழ்ந்த இரங்கல்கள்! அமைதியாக உறங்குங்கள் அய்யா.
  20. வாருங்கோ, வாருங்கோ, உங்க... பலாலி ஏர்போர்ட் உள்ள இடத்தில தான் புத்தர் முதலில் வந்து றங்கினவராம். அங்கின, ஓடு பாதையில ஒரு புத்தரிண்ட சிலை ஒண்டை வச்சுப்போட்டு போங்கோ... நல்லா இருப்பியள்...
  21. இதைத்தான் மேலே எனது நண்பர் உதவிய விசயத்திலும் நடந்தது. வந்து, உறவினர் வீட்டில் நன்றாக சாப்பிட்டு, வீடியோவில் படமும் பார்த்து, அட, இது அருமையான வாழ்வு என்று காலை நீட்டிக்கொண்டு இருந்தவர்கள், வேலை தேட மாட்டார்கள் போல என்று, வீட்டுக்காரர், மெதுவாக கதைகொடுத்து, கூப்பிட்டவர்கள் சம்பளம் தர தானே வேண்டும், கேட்டு பாருங்கோவன் என்று கிளப்பி.... அவரும் என்ன பேசிக்கொண்டு வந்தமோ அதனை மறந்து... நன்றி கெட்ட வேலை பார்த்தார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.