Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. அப்ப பிறகென்ன? டபக்கெண்டு லுப்தான்சாவில ஏறி சென்னைல இறக்கி, டபாரெண்டு யாழ்ப்பாணம் தட்டி வசு.. ச.. சா... பிளேனுக்கு உள்ளீட்டா, பலாலில றங்கி, வசுவை பிடித்து கந்தர்மடச் சந்தீல இறங்க வேண்டியது தானே.
  2. பெரிய நோட்டா கொண்டு போங்கோ. போகமுதல், கூகிளில் மணி எக்சேஞ் என்று தேடி, ஒவ்வொண்டா போன் பண்ணி ரேட் கேளுங்கோ. சேலை வாங்க, வெள்ளவத்தைப் பக்கம், போனால், அவ்வளவும் காலியாகும். புறக்கோட்டை மெயின் வீதியில் மலிவு. (நண்பரா, நீங்களா?) 😁
  3. 2005 அல்லது 06ல் ஒரு அமெரிக்க தூதுவர். அவர் புலிகளுக்கும், தமிழர்களுக்கும், வன்முறை வேண்டாம் என்று புத்திமதி வழங்கிக்கொண்டிருந்தார். அவரை லண்டன் தமிழ் கார்டியன் 'travelling preacher' என்று நக்கல் அடித்து எழுதியது,அதுக்கும் பதில் எழுதி இருந்தார். அவரது பதிலுக்கு, அமெரிக்க தூதரகத்தில் பதவி வகித்து, இப்போது வேறு ஊரில் இருக்கிறேன் என்று ஒருவர் வெள்ளையர் பெயரில் பதில் சொல்லி இருந்தார். தமிழர் பயங்கரவாதம் இருக்கும் வரை, சிங்களத்தின் இனவாதம் வெளியே தெரியாது. அது தெரியவரும் போது, உலகின் மனசாட்சி அதிர்வுறும். அப்போது, சிங்களத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டு விழும். விழும் போது, சிங்களம் கையறு நிலையில் இருக்கும். அந்த நிலை நெருங்குகிறதா? பி.கு: இந்த மேர்வின், ரணிலுக்கு பிள்ளை இல்லை, அவரால் பெற முடியாது, வேண்டுமானால், உதவ ரெடி என்று சொன்னவர், நினைவு இருக்கிறதா? 😁
  4. படித்தவர்கள் நாட்டை விட்டோட, படிக்காதவர்கள் தலையேற்க தயாராகும் அழகு 🥰😩
  5. அட இது இன்னும் இழுபடுதா? கோப்பாயில் அடுத்த கொலையும் விழுந்து ஆறு பேர் கைது. இந்த முறை 51 வயசு, 9 வயசு சிறுமி மீது பாலியல் வன்புணர்வு. https://www.dailymirror.lk/breaking_news/Six-arrested-over-killing-of-man-accused-of-raping-underage-girl/108-265224
  6. குமுதினி கொலை கடற்படை வேலை. இது அல்லாட காவலோட நடந்தது.
  7. இந்த சுவரொட்டியின் பின், சிங்களமே இருக்கிறது போல தெரிகிறது. இனவாதிகளே, கனடிய அரசின், கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மேலான நிலைப்பாட்டை, புலிகள் மேலானது என்று கயிறு திரிக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்கள்.
  8. Simon Howell என்ற ஒரு பிரிட்டிஸ், அமேரிக்க டிவியில் வரும் இசை தொடர்பில் ஆளுமை. இவர் ஒரு மில்லியனேயர். இவரது அமெரிக்க நண்பர் பில்லியனேயர். நம்பி வீட்டுக்குள்ள விட.... கல்யாணமே கட்டாத Simon, பிள்ளைய நான் சுமக்கிறன் எண்டு அம்மணி சொல்ல, நண்பர் டிவோசில ஓட, இவர் பிள்ளைய வளக்கிறார். ஆக, நம்மூரில மட்டுமல்ல, இது உலகளாவிய பிரச்சணை. நம்மூரில இப்ப கைதாகின ஆட்கள் உள்ள போக அடுத்த முறை நமக்கேன் வம்பு என கவனமாக இருப்பர். மேலும் இறந்த நபர், 18 வயசுப் பெண்ணை தீடீரென காதலித்து இழுத்துக் கொண்டு ஓடீயிரார். அதாவது பெண் சிறுமியாக இருக்கும் போதே, அதாவது 17 வயதுக்கு முன்னரே இவர் நிச்சயமாக தவறாக (child abuse) நடாத்தி இருப்பார் என்று நிணைக்கிறேன். (Grooming) விகடனில் வாசித்த தமிழகத்தில் குக்கிராமத்தில் நடந்த சம்பவம். இரு child abusers. குடும்பஸ்தர்கள். கண நாட்களாக சேட்டை. ஊர் பஞ்சாயத்து காதும், காது வைச்ச மாதிரி விசாரிச்சு, கடும் எச்சரிக்கை விட்டது. கேட்டகவில்லை. ஒருநாள் இருவரும் மரமொன்றில் தூக்கில் தொங்கினார்கள். பஞ்சாயத்து தற்கொலை என்று சொல்ல, போலீசும் ஏற்று பைல் மூடப்பட்டது. ஆகவே, நாம் ஊராரின் கோவத்துக்கு காரணம் இந்தக் கோணத்திலும் இருக்கலாமோ என்றும் பார்க்கவும் வேண்டும். விசாரணையில் வெளிவரலாம்
  9. பண்ணியிள், பண்ணிப்பாருங்கோவன். சீனாவா, இந்தியாவா உசத்தி என்று காட்டுங்கோ!
  10. #நாட்டுக்கு தான் பாதிப்பு.. நீண்ட கால நோக்கில்.!# உங்க பக்கத்து வீட்டில வாடகைக்கெடுத்தது ஒரு ரொமேனியன் குடும்பம். இப்ப 4 குடும்பம் இருக்குது!
  11. கருணாநிதி, எம்ஜியாருக்கு எதிராக, தமிழர் அல்லாதோர், வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம் என்றார். அவரே தெலுங்கர் என்று எம்ஜியார் போட்டுடைத்த போது வெலவெலத்துப் போனார். சரத் பொன்சேகா மலையாளி.... அப்படியே சரத் வீரசேகராவும் இருக்கக்கூடும். முன்னர் ஜெயராஜ் பர்ணாண்டோபிள்ளே என்ற தமிழர் சிங்களவராக நடித்தார்... SWRD Banda??
  12. 2. கிரிசாந்தி வழக்கு: சந்திரிகாவின் காலத்தில் நடநது குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதே. 5. மைத்தரி காலத்தில் நடநது குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதே.
  13. நான் மேல போட்ட லிங்கில் விபரமாக உள்ளதே. 30 | 90 டபிள் என்றி $50. நாம் மட்டுமே 90 கேட்போம். ஏணையோர் 30 தான். உள்ள போனபின் யாழ் கச்சேரீல போய் இல்லாத தாத்தா, பாட்டிய பராமரிச்சு பார்க்கோணும் என்று பிறப்புச் சான்றிதழ் காட்டினால் ஒரு வருசம் அடிச்சு தருவினம். கணக்க செலவாகாது.
  14. அடங்கொக்கா மக்கா.. ம். ம்ம்ம்... பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும். அடதங்க முடிக்கு வந்த சோதனை.
  15. சில்லையூர் செல்வராசன் என்று ஒரு நாடக நடிகர் இருந்தார். அவருக்கு குடும்பம் இருந்தது. அவரது நண்பருடன் அவரது வீட்டில் தனது நாடக வசனங்களை சொல்லி, அவரது கருத்துக்களை கேட்டு மெருகேற்றுவார். நாளடைவில், நண்பர் மகள் கமலா, ஆர்வத்துடன் இதில் பங்கு எடுக்க, கடைசியில் அவர்களுக்குள் காதல் மலர்ந்த்து. தள்ளிக் கொண்டு போய் கலியாணத்தில் முடிந்து, ஒரு மகனையும் பெற்றுக் கொண்டனர். நாடகத்துறையில் இணைந்து பெரும் சேவை செய்தனர். ஆக, இந்த விடயங்களில் பொருளாதார பலம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு இருக்காது போலவே தெரிகிறது. எழுதுமட்டுவாழ் என்ற ஊரின் பெயரே இப்படி ஒரு கதையினை சொல்லி நிக்கிறது. இந்த 54 வயது ஆண், பெரும் பொருள் படைத்தவராக இருந்திருக்க மாட்டார். இணையத்தில் வந்த ஒரு ஜோக். ஒரு டிவி நிகழ்வில், ஒரு பிரபலத்திடம் ஜோக் சொல்லுமாறு கேட்க அவர் சொன்னது. அந்த ஜோக், நிதர்சனத்தினை சொல்கிறது. ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு இரண்டு மாதமாக பீரியட் வரவில்லை என்று தாயார் பதறி, டெஸ்ட் செய்கிறார்கள். கர்ப்பம் என்று தெரிய வர, தாயும், தந்தையும் பெண்ணை, யார், எப்படி என்று கேள்வியால் துளைக்கிறார்கள். பதில் சொல்லாமல் பெண் ஒரு போன் செய்கிறார். 20 நிமிடத்தில், பெர்ராரி கார் ஒன்று வந்து நிக்கிறது. இறங்கி வருகிறார், வயதான, டிப் டாப் உடை அணிந்த ஒரு நபர். தன்னை அறிமுகப்படுத்தி, நான் தான் குழந்தைக்கு பொறுப்பு. பிறக்கப்போவது பெண் குழந்தையானால், $10மில்லியன் உடனே வங்கியில் போடுவேன். ஒரு வீடும் எழுதி விடுவேன். ஆண் ஆயின், எனது சொத்தின் பாதியையே எழுதி வைக்கிறேன். எனக்கு பிறகு, என் வியாபாரமும் அவனுக்கே. மேலும், கருச்சிதைவு நடந்தால்..... அவர் முடிக்க முன்னர், வேகமாக எழுந்த, தாயும், தந்தையும், அதனால் என்ன, 'மீண்டும் try பண்ண வேண்டியது தானே' என்றார்கள்.
  16. ஈழத்து அகதிகளா? வந்தவர்களில் பெரும்பான்மை அல்லாட காவலோடவந்தவர்கள். குறிப்பாக அல்பானியர்கள்.
  17. அரச தளத்தில், அகதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன படிகள், வசதிகள் கிடைக்கும் என்று விலாவாரியாக போட்டுள்ளனர். இதை வாசித்துக் காட்டிய வெள்ளைகாரி ஒருவர், அய்யோ நம்ம வரி எப்படி செலவாகுதென்னு பாருங்க மக்களே, இப்படி விபரமாக போட்டால், வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன ரிஸ்க் எடுத்தாவது வரத்தானே முணைவர் என்கிறார். அவரது வீடியோ வைரலாக பரவுது.
  18. அவர்கள் பணத்தை வங்கிக் கொண்டு ஓடாத வரை..... வியாபாரிகள் எண்டு. 😁 கனடா விசா யூகே விசா போம் நிரப்பித் தர எவ்ளொ தெரியுமா?
  19. உந்த பண்டி சோசேய் எனக்கு கண்ணிலை காட்டேலாது கண்டியளே. இறைச்சியை வாங்கி சவ்வுகள், சங்கதிகள வெட்டி எறிவம். உந்தக் கோதாரி விழுவார் ஒண்டையும் எறியமாட்டாங்கள். எல்லா நசலுகளையும், வெங்காயம், உள்ளி, உப்பு போட்டு அரைச்சு அனுப்ப.... 🥺☹️
  20. 180 இல்லை என்று நிணைக்கிறேன். 30 | 90 நாட்கள் தான். https://www.eta.gov.lk/slvisa/visainfo/fees.jsp?locale=en_US
  21. இவரது வழக்கு எனக்கு புரிந்த வகையில் வெல்லக்கூடியது. இருவரும் உடல் உறவுக்கு இணங்கி உள்ளனர். பெண்ணின் நிபந்தணை, ஆணுறை அணிய வேண்டும் என்று. Stealthing (புதிய ஆங்கில சொல்) என்பது, உடலுறவின் போது ஆண், ஆணுறையை நீக்கிவிடுவது. இது பாலியல் பலாத்காரமாக (Rape) கருதப்படும். இவர்கள் விடயத்தில், எல்லாம் முடிந்து கட்டிலில் இருந்து இறங்கிய போது கீழே ஆணுறை இருந்ததை கண்டு தான் Rape பண்ணப்பட்டதாக முறையிட அவர் கைதாகியுள்ளார் ( 🥸 ) இது போன்ற வழக்கொன்றில், பிரிட்டனில், ஆணுறை நழுவியது தனக்கு தெரியாது என்று சொல்லி, உற்பத்தியாளர் தவறு என்று சொல்ல, தலையில் அடித்துக் கொண்ட யட்ய் அய்யா, வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த பெண், இவர் சொல்லப் போவதை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். அதாவது கட்டிலில் இருந்து இறங்கும் வரை, ஆணுறை நழுவியது அவருக்கும் தெரியவில்லை. ஆக அவர் சொல்லப்போவதை இவர் முறைப்பாட்டிலே ஒத்துக்கொண்டு விட்டார்.
  22. இலங்கை அரசினது போலவே அச்சு அசலாக தளங்கள் உலாவுகின்றன. சகல விபரங்களையும் வாங்கி, $50 க்கு பதிலாக $70 கேட்பார்கள். அட தீடீரெண்டு கூட்டிப் போட்டார்கள் போல என்று அதை கட்ட, அவர்கள் கொடுத்த விபரத்தை அப்படியே அரச தளத்தில் போட விசாவும் வந்து விடும். ஏமாந்தவர், பார்டிகளில், $50 இல்லை, $70. அட நேற்றுத் தான் எடுத்தேன், விசர் கதை கதையாத என்று அடம் பிடிப்பார். அதே கதை தான் 30 | 180 ம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.