Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. ஒரு ஊறுகாய் போத்தலினுள் புதிய ஆணி இருந்தது. கடையில் திருப்பி கொண்டுபோய் கொடுத்த போது சந்தேகத்துடன் எடுத்து திகதியையும் பார்த்து, என்னையும் பார்த்து ஆணியையும் பார்த்தார். கொண்டு போன சொப்பிங் பாக்கை விரித்து, எல்லாவற்றையும் கொட்ட, அடியில் இருந்து மேலும் இரண்டு விழ வெலவெலுத்துப் போனார். சம்பளம் ஓழுங்காக கொடுக்காவிடில், அல்லது சரியாக நடத்தாவிடில் இப்படி இந்தியாவில் நடப்பது சகயமப்பா!
  2. இது ஒரு பெரும் மனித அவலம். ஆயினும், பயணிப்பவர்கள் சுயமாக எடுக்கும் ஆபத்தான முடிவுக்கு, யார்தான் என்ன செய்யமுடியும்?
  3. 180 டிகிரி மாறுதல் அல்லவே. இன்று மோடியின் அழுத்தத்தினால் தான் ரணில் 13 குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள். இதனை 6 மாதம் முன்னர் நான் சொன்னபோது, அன்றைய நிலையில் சரியாக இருந்தது. இன்று ரணில் டெல்லிக்கு போக ஒரு வருடம் எடுத்த காரணத்தின் பின்னால், டெல்லி அவரை விரும்பி இருக்க வில்லை என்ற செய்தி உறுதியான பின்னர், எனது பார்வை மாறி உள்ளது. அதாவது, அமெரிக்க, சீன, இரும்பு பிடிக்குள் இலங்கை. இந்திய நிலை, வடிவேலுவின் நானும் ரௌடிதான் கதை போலவே தெரிகிறது. *** வெளியே போக வேணும். பிறகு தொடர்வோம்.
  4. பிந்திய செய்தி: கீரிமலை கேணி பகுதியை தொல் பொருள் திணைக்களம் கையகப்படுத்த முனைவதை தடுக்குமாறு, ஆறுமுகம் திருமுருகன் ஜனாதிபதி ரணிலுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
  5. நீங்கள் தானே, சில நாட்கள் முன்னர் திண்ணையில், நாம் ஊகிக்க மட்டுமே முடியும். எதுவுமே புரியவில்லை என்று ஏத்துக்கொண்டீர்கள். 😁 ஆக, இலங்கை அரசியல் வாரத்துக்கு, வாரம் மாறுகிறது. இதில் 6 மாத கதை எங்க அய்யா? 🤪 நாம் ஒன்றை நினைக்க, வேறு ஒன்று அல்லவா நடக்கிறது. 🤦‍♂️ இன்று இருப்பதிலும் பார்க்க அதிகமாக இருந்திருப்போம். குறிப்பாக, தீவுப்பகுதி இன்று உள்ளதை போலல்லாமல், மக்களால் நிரம்பி காணித்துண்டே இல்லாமல் இருந்திருக்கும். தமிழனை சிறுபான்மையாக்கி, இடத்தினை பறிக்கவே சிங்களவன் முனைந்தான்.
  6. 15% வெளியே போனபோது, மொத்த சனத்தொகை ஒருகோடிக்கும் குறைவு. அவ்வகையில் 1958, 77, 83 பின்னர் யுத்தம் மலையக தமிழர்களை பெருமளவில் தமிழகம் அனுப்பியது. ஈழத்தமிழர் நாமும் இங்கே வந்துவிட்டோம். ஆக 60 -62% தான் சிங்களம் வந்திருக்கும்.
  7. உண்மை என்னவென்றால், 1. மகிந்த இந்துவுமல்ல, பெளத்தருமல்ல 😁 2. சீனாகாரன் அல்வா கொடுத்து விட்டான். இந்தியாவின் இயலாமை, கையறுநிலை கண்டே அமெரிக்கன் உள்ள வந்து சீன சார்பு கோத்தாவை துரத்தி, இந்தியா விரும்பாத ரணிலை ஏத்திவிட்டார்கள். 3. ஆக, RSS நிலைப்பாடு நமக்கு முக்கியமல்ல என்று நிணைக்கிறேன்.
  8. 1. RSS இலங்கை பௌத்த அமைப்புகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய தேவை தான் என்ன? அப்படி நெருக்கமாக இருந்து அடையும் நன்மைகள் எதுவுமே இல்லையே. 2. மிக சிறிய இலங்கையில் கிறிஸ்தவம் பரவினால், மிகப் பெரிய இந்தியாவின், RSS க்கும் கவலைப்பட தேவை இல்லையே. அவர்களுக்கு முக்கியமானது இந்து மதம், அதுகுறித்த கவலைப்படுவார்கள். பௌத்தமதம் குறித்ததாக இராதே. 3. சீனா சிங்களத்துடன் இணையும் ஒரே ஒரு புள்ளி, பௌத்தம். சீனாவின் நோக்கம் ராணுவ நலன், மதமல்ல. ஆனால் மதத்தினை ஒரு காரணமாக காட்டி உள்ளே புக வேட்டி, சால்வையுடன் நல்லூர் வந்தார்கள் என்பதை மறக்காமல், இப்போது, வேறு வகையில் வருகிறார்கள் என்பதை புரிவது புத்திசாலித்தனமானது. இஸ்லாமியர் மத்திய கிழக்குடன் இணையும் ஒரே புள்ளி இஸ்லாம். ஆயினும், உள்ளே புகுந்து, சன்னி, சியா என்று ஆய்வது, பிரயோசனம் இல்லாத வேலை. சீனாவுக்கு, இராணுவ நலன் முக்கியமானது. இந்தியா அதனை மறந்ததால், தென் இலங்கையும், கொழும்பு போர்ட் சிட்டியும் கைமாறியது. இதனாலேயே, அமெரிக்கா உள்ளே வந்தது. .
  9. நன்றி, ஆனாலும் திரி பேசும் முக்கியவிடயத்தை திசை திரும்புவதை தவிர்க்க, திண்ணையில் அல்லது புது திரியில் இதனை விவாதிப்பது நல்லது.
  10. கடந்த 500 வருட கால எமது வரலாறு அவ்வாறு சொல்லவில்லை. பல ஆலயங்களை அழித்த போர்த்துக்கேயர் இரும்புப்பிடியில் இருந்த யாழ்ப்பாண ராஜ்ஜியம், அதனிடம் இருந்து எப்படி தப்பும் என்று தவித்த போது, ஒல்லாந்தர்கள் வந்தார்கள். ஓரளவு மத சுதந்திரமும் வந்தது. அவர்களை வெளியே அனுப்ப முடியுமா என்று தவித்த போது, ஐரோப்பாவில் நடந்த குழப்பத்தால், ஒல்லாந்தர் இடம் இருந்து, ஆங்கிலேயர் கை மாறியது. ஹிட்லர் செய்த குழப்பத்தால், ஆங்கிலேயர்களும் நம்மை விட்டு கிளம்பினார்கள். இப்போது, சிங்களவர்கள் முறை.... அவர்களும் கிளம்ப இலங்கைக்கு வெளியே சில வேலைகள் நடக்கின்றன. பொறுத்து இருப்போம். **** கடந்த வாரம் நடந்த சீமான் சர்ச்சையின் போது, சீமானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையா என்று. சிறப்பான பதில் ஒன்றை வழங்கி இருந்தார்: சாத்திரி ஒப்பந்தத்தின் படி, 15 லட்ச்சத்தினை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களை சிறுபான்மை என்று சொல்ல முடியாதே.
  11. உங்கள் விரக்தி புரிகிறது. ஆனால் ரணில், அதிகார பகிர்வுக்கு வில்லன் (வில்லர்கள்) யார் என்று தெளிவாக்க முயல்வதாகவே நான் பார்க்கிறேன். 13A யினை அமுல் படுத்தப்போவதாக சொல்லி இன்று பாரளுமன்றில் சொன்னபோது, ரிச்சர்ட் நெப்யூ என்ற அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி, இன்னோருவருடன் கொழும்பில் இருக்கிறார். இந்த வில்லர்கள் வெளியே தெரியப்போகிறார்கள் என்று பதறும் விசயம் தெரிந்த, பீரிஸ், இது (13A யினை அமுல் படுத்துவது) பாராளுமன்றம் வர தேவையில்லாத, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ரணில் வேலை என்று சொல்கிறார். பாராளுமன்றில் சமர்ப்பித்தது ரணிலின் நரி மூளை என்று சிலர் சொன்னாலும், அதன் பின்னால் வெளிநாடுகள் உள்ளன என்பதே யதார்த்தம். வில்லர்கள் வெளியே தெரிந்தால், அவர்களை கையாள்வதும் எப்படி என்று தெரிய வரும். மொட்டுகள், இறுதியாக, மொட்டைகளை அவிழ்த்து, தெருவுக்கு விடலாம். அது எமக்கு நன்மையாகவே முடியும். ஆகவே, அமைதியாக இருந்து, நம்ம தமிழ் சிறியர் வழக்கமாக சொல்வது போல, 'நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்போம்'.
  12. ரணில் ஜனாதிபதி தான். ஆனாலும், மொட்டுக்கட்சியின் கையில் அரசும், மந்திரிசபையும். ஆக, ரணில் என்ன செய்தாலும், இந்த முழு இனவாதிகள் பின்னால் இருக்கும் வரை, ரணிலுக்கு benefit of doubts கொடுப்போம். ரணில் இனவாதி இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும், சிறிது நேரம் கொடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். எனது சிறு நம்பிக்கையின் காரணம்: ரணிலை பதவிக்கு கொண்டு வந்த அமெரிக்காவும், மேலை நாடுகளும். ரணில் இந்தியாவின் தெரிவு இல்லை என்ற வகையில் இந்த எனது சிறு நம்பிக்கை. இவர்கள் இதே வழியில் போனால், நாமும், வேறு வழியில்லாமல், சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல் என்று கிளம்ப வேண்டியது தான்.
  13. மகிந்த காலத்து, பெரும் இனவாதியான முன்னாள் பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்காவின் மகன் தான் பௌத்த சாசன அமைச்சர், விதுர விக்கிரமநாயக்கா. இந்த மொட்டு கட்சி பின்னால் இருந்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்கிறது. இந்த பௌத்த சாசன உயர் அதிகாரியை பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார் ரணில். ஆனாலும், விதுர தன் வேலையினை காட்டிக் கொண்டே இருக்கிறார். எனது சந்தேகம், இவர்களுக்கு பின்னால் சீனாவும், அதன் நிதியுதவியும் இருக்க கூடும். காரணம், சீனமும், சிங்களமும் இணையும் ஒரே ஒருபுள்ளி பௌத்தம். சீனா நேரடியாக, வடபகுதியில் இயங்க முனைந்த போது, இந்தியா தடுத்ததால், இப்போது வேறு வகையில் நுழைகிறது போல தெரிகிறது. அண்மையில் மறவன்புலவு சச்சியர், குருந்தூர் சென்றார். அது இந்தியாவின் வேண்டுதலில் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிய போயிருக்கலாம் என்று கொழும்பு பத்திரிகையாள நண்பர் குசுகுசுத்தார். ஆக, இந்தியா வழக்கம் போல ஆவெண்டு இருந்தால், சீனன் வேறு வகையில் குடைச்சல் கொடுக்கத்தான் போகிறான்.
  14. நன்னியின் குழப்பத்துக்கு காரணமாக நான் கருதுவது: 'வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தோர், கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவர்களது சரணுக்குப் பின்னான நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதே' என்று நினைக்கிறேன். இவர்களுக்கு முன்பே சரணடைந்த தயா மாஸ்டர் மற்றும் இன்னொருவர் (ஜோர்ஜ் ?) அவர்கள் மேலிருந்த மறைமுக அழுத்தம் காரணமாக போராட்டத்துக்கு எதிராக பேசியதால் மக்களால் விரும்பப்படவில்லை. எனது நிணைவு சரியானால் இவர்களில் ஒருவர் இயற்கையா மரணித்த போது மாவீரர் என்றோ, நாட்டுப்பற்றாளர் என்றோ யாராளும் அழைக்கப்படவில்லை. தலைவர் உடலை அடையாளம் காண கருணாவுடன் கொண்டு செல்லப்பட்டவர், தயா மாஸ்டர் என்று நினைக்கிறேன். சரணடைந்து புனர்வாழ்வு என்ற பெயரில் மூளைச்சலவை செய்த வெளியேவந்து எழுதிக் கொடுக்கப்பட்ட புத்தகம் வெளியிட்டு பின்னர் நோயால் இறந்த பெண் போராளியின் (தமிழினி) நிலையும் அவ்வாறே. ஆகவே வெள்ளைக் கொடியுடன் வந்து, (கொல்லப்பட்டோர்), உயுருடன் இருந்திருந்தால் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே இருக்கவேண்டிய சிங்கள அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பர். ஆகவே... நன்னியின் நிலைப்பாடு... நிராகரிக்க முடியாத விவாத ஆய்வுக்குரியது என்றே கருதுகிறேன். இது கருத்து மட்டுமே, எனது நிலைப்பாடல்ல.
  15. முன்னர், இந்தியா திரும்ப நோர்வே, ஓஸலோ விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய குடும்பத்தில், தாய், மகனுக்கு கையால் உணவூட்டினார், அது தவறு என்று குழந்தையை பறித்துக் கொண்டணர். அங்கும் இந்திய அரசே தலையிட்டு, கையால் உண்ணுதல் இந்திய கலாச்சாரம் மேலும் அவர்கள் இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்தனர் என வாதாடி குழந்தையை மீட்டது. இந்த சிறுவர் நலஅமைப்புகள் பல விடயங்களில் அலட்சியமாகவும், சில விடயங்களில் அநியாயத்துக்கு கவனமாகவும் இருப்பர்.
  16. இந்த கருத்துக்குழப்பத்தினை தவிர்க்க ஒரு ஆலோசனை. (இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்) தன்னை மாவீரர் என்று அழைக்கவேண்டாம் என்றும், மாவீரர் என்று அழைக்க இரண்டு விடயங்கள் நடந்திருக்க வேண்டும் என்று தலைவர் சொல்லி இருந்தார். அந்த இரண்டு விடயங்கள் என்ன என்று யாராவது விளக்கம் தர முடியுமா?
  17. இறந்தவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டே தாக்கப்பட்டுள்ளார். 19 வயசு பெண்ணும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  18. சீமான் கருத்து சரியா, பிழையா ஒருபக்கம் இருக்கட்டும். திமுக + காங்கிரஸ் கூட்டு சேர்ந்தே எம்மை கருவறுத்தார்கள். அவர்களை திட்டிவிட்டு இன்று சேர்ந்து நிக்கும், திருமா, வைக்கோ போன்ற நீலீக்கண்ணீர் வடித்த கோஸ்டிகளும், எம்மைப் பொறுத்தவரை...... ம்...ம்ம்.... செந்தில் பாலாஜி, பொன்முடி..... திமுக இனி அரசாள்வது கடினம். அவர்களுடன் சேர்ந்து நிற்பவர்கள் அரசியல் ரீதியாக பலவீனமாக இருப்பார்கள். ஆகவே இது அரசியல் ரீதியாக சந்தர்ப்பம் பார்த்து நடத்திய தாக்குதல் கருத்து என்பதே எனது பார்வை. சீமான் கருத்து தவறாயின் தன்னெழுச்சியாக சம்பந்தப்பட்ட மக்கள், வெளியே வந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் என்ன? வேண்டுமென்றே ஊதிப் பெரிப்பிக்கப்படுவதாலா? ஐயா, நமது பிரச்சணை ஊடாக இன்றைய தமிழக அரசியலை பார்ப்பதே தவறு. அதனை தனித்தே அதன் போக்கிலே பாருங்கள்.
  19. திடீரென பௌத்த வாதம் கிளம்பி, இடங்களை பிடிப்பதுக்கு பின்னால், சீனா இருப்பது தெரிகிறது. பௌத்த தூபிகள் ஊடாக, இந்தியா வேவு பார்க்கப்படுகின்றது போல சந்தேகம் உண்டாகிறது. இது இந்தியாவுக்கு தெரியுமா அல்லது வழக்கம் போல, தலைக்கு மேலே வெள்ளம் போன பின்னர், குய்யோ, முறையோ என்று கிளம்ப போகிறதா? 🤦‍♂️
  20. இலங்கையில், பல நாட்களாகவே, மருந்து நாளைக்கு வரும், வந்து கம்பவுண்டரிடம் கேளுங்கோ எண்டு சொல்லுறதும், அடுத்தநாளும் இதே கதை என்பதால், ஆட்கள் அலைய விரும்பாமல், டாக்குத்தர் துண்டு எழுதி கொடுப்பதும், வெளியில போய், ஊசி வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து, போடுவிப்பதும், குளுசை வாங்கிக்கொண்டு போவதும் வழமை.
  21. ஸ்ராலினிடம் கேட்டா நல்ல விக் கடையை காட்டியிருப்பாரு. போட்டுக்கொண்டு ஜம் எண்டு போய் இறங்கியிருந்தா, கதையே வேற 😜
  22. நாடு படிப்படியாக இலவச மருத்துவ சேவையினை இல்லாமல் செய்கிறது. இன்சுலின் மட்டுமல்ல, சகல மருந்துகளும் தாராளமாக இருக்கிறது. மருத்துக்கடைகளில், காசு கொடுத்து வாங்கவேண்டும். காசு இல்லாவிடில், கதை காலி. இலங்கையில் இன்னொரு விடயம், காசு இருப்பவர்கள் தரமான மேலை நாட்டு மருந்துகளையும், இல்லாதவர்கள், இந்திய மருந்துகளையும் வாங்கி கொள்ளலாம்.
  23. அதாவது நீங்கள் சொன்ன போசணைகளை, புழுக்கள் தாமாகவே உருவாக்கி, 46,000 வருடங்கள் உறைநிலையில் இருந்திருக்கின்றன. ஆனாலும் என்னைப் பொறுத்தவகையில், இந்த போசணைகளை உருவாக்கி, விலங்கு விந்தணுக்களை, முட்டைகளை உறைநிலையில் வைத்திருந்திருக்கலாம் என்பதே அரிய கண்டுபிடிப்பு. சரிதானா? இந்த கண்டுபிடிப்பு இப்போது, புழுக்களால் இயல்பாக செய்யக்கூடியதாக இருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள். அப்படித்தானே? விளக்கத்துக்கு மிக்க நன்றி.
  24. நன்றி. எனது கேள்வி: நீங்கள் சில வருடங்களின் பின்னர் மீள எடுத்து உயிர்ப்பிக்கலாம் என்கிறீர்கள். அந்த சிலவருடங்கள் 46,000 வருடங்களா இருக்க முடியாதா? அதாவது, இரண்டு விடயங்களிலும், உறைநிலை, உயிரை மடக்கி வைத்துக்கிறது என்பது சரியானதா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.