Everything posted by நவீனன்
-
கருத்து படங்கள்
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வுக்கு 2 வாரத்தில் அனுமதி! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”மதுரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழைமையான 5300 பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருள்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால், ஒரு ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழ்வாய்வுப் பணியை தொடரவும், பழங்கால பொருள்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ''கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பதுதான் சிறப்பு. ஹரப்பா, மெகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களை தனியாருக்கு இழப்பீடு வழங்கி அரசு பெற நடவடிக்கை எடுக்கலாம்'' என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், கடந்த 19-ம் தேதி நீதிபதிகள் கீழடி சென்று நேரில் ஆய்வுசெய்தனர். அப்போது, அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பன குறித்தும் அகழாய்வு கண்காணிப்பாளரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். மேலும், இங்கிருக்கும் நில உரிமையாளர்கள் நிலத்தை தர தாமதிப்பதாக கூறினார். அப்போது நீதிபதிகள், நிலத்தை தர மறுப்பவர்கள் யார். யார்? என்பதுகுறித்து நாளை தெரிவிக்க வேண்டும். 4-ம் கட்ட அகழாய்வை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தி, மாநில தொல்லியல் துறையினருக்கு ஆய்வுநடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறியதோடு, அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், " சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் , தமிழக அரசு உள்ளிட்ட பலதரப்பினர் நான்காம் கட்ட அகழாய்வு தொடங்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களாக இருந்தாலும் இங்கு முந்தைய அகழாய்வில் பழங்கால மற்றும் ரோமானிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதால் மிகவும் தொன்மையாக கருதப்படுகிறது. எனவே, அனுமதியை இரண்டுவார காலத்தில் வழங்க வேண்டும். மேலும் அதன் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர். http://www.vikatan.com/news/tamilnadu/103014-high-court-madurai-branch-orders-central-government-in-keezhadi-issue.html- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
“கீழடி அகழாய்வு திசை திருப்பப்படுவதை முறியடிப்போம்..!” - எழுத்தாளர் சு.வெங்கடேசன்! ''திராவிட நாகரிகத்தின் மிக முக்கிய அடையாளம் கீழடி. உலகின் மிகச் சிறப்புமிக்க இலக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதாரம். கீழடியைப் பாதுகாப்பது, அதன் ஆய்வினை அறிவியல்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வது மிக முக்கியம். ஸ்ரீராமன் போன்ற ஆய்வாளர்கள் ஆய்வினைத் திசை திருப்பும் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை அனுமதிக்கக் கூடாது'' என்று சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். கீழடி மூன்றாம்கட்ட ஆய்வுக்காலம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஆய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை என்று அகழாய்வுப் பணி இயக்குநர் பு.சு.ஸ்ரீ ராமன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சு.வெங்கடேசனிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: ''கீழடியில் மூன்றாம்கட்ட அகழாய்வின் முடிவுகளை அதன் பொறுப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ளாரே. இதுகுறித்து உங்கள் கருத்து?'' ''மூன்றாம்கட்ட அகழாய்வு தொடங்கப்பட்ட உடன் கீழடி அகழாய்வு மையம் ராணுவ முகாம்போல மாற்றப்பட்டது. அங்கு என்ன நடக்கிறது என்று எந்தவிதமான தகவல்களையும் ஊடகங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை. மேலும், 'இவ்விடத்தில் (கீழடியில்) கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று தெரியவருகிறது' என்ற முடிவினை பு.சு.ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்ததுபோல கீழடி அகழாய்வை இழுத்துமூடவேண்டிய வாசகத்தை ஸ்ரீராமன் எழுதி முடித்துள்ளார்''. “இந்த ஆண்டு நடந்த ஆய்வினைப் பற்றிய உங்களின் கருத்து என்ன..?” “மூன்றாம் ஆண்டு அகழாய்வுக்கு அனுமதி மறுப்பு; பின்னர், ஆய்வின் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு நடந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே ஆய்வு நடந்தது. கடந்த ஆண்டு அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 80-க்கும் மேல் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 25-க்கும் மேல் இல்லை. எந்த ஒருநாளும் 80 பேர் பணியில் அமர்த்தப்படவில்லை. இது திட்டமிட்ட சூழ்ச்சி. ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட 2015-ம் ஆண்டில் 43 குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், ரூ. 40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு 10 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன''. “மழையின் குறுக்கீடும், இயற்கை இடர்பாடுகளும் அகழாய்வுக்கு இடையூறாக இருந்ததாக ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?'' ''இதைவிட அபத்தமான காரணத்தை யாரும் சொல்ல முடியாது. அமர்நாத் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டுகளும் கீழடியில் மழையே பொழியவில்லையா? இதே செப்டம்பர் மாதத்தில்தானே அவரும் ஆய்வை முடித்தார். உரிய எண்ணிக்கையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தாமல், திட்டமிட்டே வேலையை மந்தப்படுத்தும் செயல் முதல் நாளில் இருந்து நடைமுறையானதைக் கீழடியில் உள்ள அனைவரும் அறிவர். இதில், மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இவ்வாண்டு அகழாய்வு செய்யப்பட்ட ஒரு குழிகூட இயற்கை மண்படிமம் (கன்னி மண் – Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவது, எந்த ஓர் அகழாய்வுக் குழியும் முழுமையடைவில்லை. ஒரு குழியைக்கூட முழுமையாகத் தோண்டாமல்தான் பல முடிவுகளை ஸ்ரீராமன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இயற்கை மண் அடுக்குகளுக்குக் கீழே மணல் அடுக்குகளும் கண்டறியப்பட்டன. அதை வைத்துதான், 'வைகை நதி முதலில் இப்பகுதியில் ஓடியுள்ளது; பின்னர், நதியின் போக்கு மாறியவுடன் வளமிக்க வண்டல் மண் படிவம் தோன்றியுள்ளது; அந்த வளமிக்க மண்ணின் பரப்பில்தான் இந்நகரம் உருவாகியுள்ளது' என்று ஆய்வாளர்கள் கூறினர்''. “ ‘இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகளைக் கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் காலநிர்ணயம் செய்யப்படும்’ என்று ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?” “ஒரு குழிகூட இயற்கை மண்படிமம்வரை தோண்டப்படவில்லை என்பதை அவரே தெரிவித்துள்ளார். அப்படியிருக்கையில், அகழாய்வுக் குழியின் எந்த நிலையில் எடுக்கப்பட்ட கரிமத் துகளை மாதிரிக்கு அனுப்பப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. குழியின் மேற்புறத்தில் இருக்கிற மாதிரிகளை அனுப்பிக் கால நிர்ணயத்தை மிக அருகில் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது மோசமான அணுகுமுறை. கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு, 20 மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கோரியது. ஆனால், மத்திய அரசு இரண்டு மாதிரிகளை ஆய்வு செய்ய அனுமதி கொடுத்தது. மீதமுள்ள பதினெட்டு மாதிரிகள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்த ஆண்டு ஸ்ரீராமன் குழு சேகரித்துள்ள மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பக் கூடாது. தவறான கால நிர்ணயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை அனுமதிக்க முடியாது''. “ ‘கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ அல்லது அதனுடன் தொடர்புடைய எவ்விதக் கூறுகளோ இவ்வாண்டு ஆய்வுசெய்த குழிகளில் கிடைக்கவில்லை’ என்று ஶ்ரீராமன் சொல்லியிருக்கிறாரே?” “இவர்களின் நோக்கம் முழுமையாக வெளிப்பட்டு நிற்கும் இடம் இதுதான். கடந்த ஆண்டு மிக விரிந்த கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது. அது குடியிருப்பல்ல; தொழிற்கூடம், ஈனுலைகள், மூன்று விதமான வடிகால்கள், சதுரவடிவ தொட்டிகள், வட்டவடிவத் தொட்டிகள் எனப் பலவும் இருந்ததைப் பார்த்தோம். அந்தக் கட்டுமானத்தின் தொடர்ச்சி தென் திசை நோக்கிப் பூமிக்குள் போயிருந்தது. அதன் தொடர்ச்சியைக் கண்டறிய வேண்டும் என்றால், தென் திசையில் குழி அமைத்திருக்க வேண்டும். ஆனால் தென் திசையில் ஒரு குழிகூட அமைக்கப்படவில்லை. அதற்கு நேர் எதிராக வட திசையில்தான் இவ்வாண்டின் அனைத்துக் குழிகளும் தோண்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானத்தின் பிற மூன்று பகுதிகளில் தோண்டாமல், கட்டுமானப் பகுதியின் தொடர்ச்சி இருக்கும் தென் திசையில் தோண்டாமல், கட்டுமானப் பகுதியின் தொடர்ச்சி இல்லாத பகுதியில் மட்டும் தோண்டியது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வி? அது மட்டுமல்ல, முதலாமாண்டு ஆய்வு மூன்று இடங்களில் தோண்டப்பட்டது, இரண்டாமாண்டு ஆய்வு ஆறு இடங்களில் தோண்டப்பட்டது. ஆனால், இவ்விரு ஆண்டிலும் கிடைத்த நிதியைவிட இவ்வாண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தோண்டப்பட்டது ஏன்? 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மேட்டில் எவ்வளவோ இடங்கள் இருந்தும் இவர்கள் தோண்டவில்லை. கட்டடத்தின் தொடர்ச்சியற்ற அந்தக் குறிப்பிட்டஇடத்தில் மட்டுமே தோண்டியுள்ளனர். அங்கும் முழுமையாக இயற்கை மண்படிமம்வரை தோண்டவில்லை. இவ்விடத்தில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளது என்ன நோக்கத்துக்காக இவர் நியமிக்கப்பட்டாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது''. “ ‘நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அருங்காட்சியம் அமைத்தல், கட்டுமானங்களைப் பொதுப்பார்வைக்குக் கொண்டுவருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்று ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?” “கள அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் கடந்த மே மாதம் மாவட்ட நிர்வாகத்தால் தரப்பட்டுவிட்டது. ஆனால் இன்றுவரை, அதை ஏற்றுக்கொண்டு நிர்வாக நடவடிக்கையைக்கூட மத்திய அரசு செய்யவில்லை. அப்புறம் எங்கே இருந்து அருங்காட்சியம் அமைக்கப்படும்?.” ''அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'' ''திராவிட நாகரிகத்தின் மிகமுக்கிய அடையாளம் கீழடி. உலகின் மிகச் சிறப்புமிக்க இலக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதாரம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டுள்ள இத்தொல்லியல் மேடு என்பது நமது வரலாற்றுக்கு மிகமிக முக்கியமான இடம். இந்துத்துவா அரசியல் முழுவிசையோடு வரலாற்றின் கட்டமைப்புகளைக் குலைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கீழடியைப் பாதுகாப்பது, அதன் ஆய்வை அறிவியல்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வது மிகமுக்கியம். தமிழகத்தில் உள்ள பலரும் சந்தேகப்பட்டதுபோலவே, இவ்வாண்டு அகழாய்வு என்பது அவர்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் பகுதியாக அமைந்துள்ளதாகத்தான் பார்க்கிறோம். ஓர் அகழாய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்று நிரூபிக்க என்னனென்ன வழிகளுண்டோ அத்தனையும் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளனர். எனவே, மிகுந்த விழிப்பு உணர்வோடு இதனை அணுகவேண்டும். அகழாய்வு தொடர வேண்டும் என்பதைவிடத் திசை திருப்பவிடக் கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்ரீராமன் போன்ற ஆய்வாளர்கள் ஆய்வினைத் திசை திருப்பும் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை அனுமதிக்கக் கூடாது''. http://www.vikatan.com/news/tamilnadu/102962-sriram-claims-on-keezhadi-are-false-says-writer-svenkatesan.html- சமையல் செய்முறைகள் சில
உடல் எடையை குறைக்கும் பரங்கிக்காய் - சுக்கு சூப் அதிகளவு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1 பரங்கிக்காய் - சிறிய துண்டு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு செய்முறை : வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் ஆம்லெட் குழந்தைகளுக்கு முட்டை, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 2 வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் மொசரல்லா சீஸ் (Mozzarella cheese) - 2 டேபிள்ஸ்பூன் குடை மிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) - தலா 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - சிறியது 1 கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன் பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு. செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை துருவிக்கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் நறுக்கி குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை, உப்பு, பொடித்த மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு உருகி வரும் பொழுது முட்டை கலவையை ஊற்றி சிறிது மூடவும். அடுப்பை மீடியமாக வைக்கவும். பின்பு திறந்து பிரட்டி விடவும். முட்டை வெந்தவுடன் மேலே சீஸ் தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும். சீஸ் உருகியதும் மேலே நறுக்கிய வெங்காயத்தாளை தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான சத்தான சீஸ் ஆம்லெட் தயார்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் வறுவல் குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கனை வைத்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - ½ கிலோ சின்ன வெங்காயம் - 10 வெள்ளை மிளகுத் தூள் - ½ டீஸ்பூன் சீரகத்தூள் - ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1½ டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - ¾ டீஸ்பூன். செய்முறை : வெங்காயத்தை தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கத்தியால் கீறல் போடவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவிடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும். சுவையான வெள்ளை சிக்கன் வறுவல் தயார்.- கருத்து படங்கள்
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில் 3-ம் கட்ட அகழாய்வில் 1800 பொருட்கள் கண்டெடுப்பு: தங்க அணிகலன்கள், தமிழ் பிராமி மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய மட்பாண்ட ஓடு. கீழடியில் நடைபெற்ற மூன்றாம்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு, பழைய மட்பாண்டங்கள். இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தாமதமாக தொடங்கப்பட்டு, 3 மாதமே நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் தங்கத்தால் ஆன அணிகலன்கள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், மட்பாண்ட உறை கிணறுகள் கிடைத்துள்ளன. கீழடி அருகே பள்ளிச்சந்தை புதூர் திடலில் உள்ள அகழாய்வு முகாமில் பெங்களூரு பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் பி.எஸ்.ஸ்ரீராமன் நேற்று கூறியதாவது: கீழடியில் 2 ஆண்டுகளாக மேற்கொண்ட அகழாய்வில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய, வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடங்கள் உள்ளிட்ட 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கீழடியில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மே 27-ம் தேதி பெங்களூரு அகழாய்வு ஆறாம் பிரிவு சார்பில், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. 1800 தொல் பொருட்கள் ஏற்கெனவே கிடைத்த கட்டிட எச்சங்களின் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், வடபுறத்தில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலம் குறைவாக இருந்ததாலும், தொடர்ச்சியாக மழை பெய்ததாலும் திட்டமிட்டபடி முடிக்க இயலாமல் 400 சமீ பரப்பளவில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் 1500-க்கும் மேலாக கண்ணாடி மணிகள், பளிங்கு, சூது பவளம், பச்சைக் கல் மற்றும் சுடுமண் மணிகளாகும். மேலும், தந்தத்தால் ஆன சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. தங்கத்தால் ஆன பழங்கால அணிகலன்கள். இணையதளத்தில் பதிவேற்றம் மேலும், பதினான்கு தமிழ்பிராமி எழுத்துகளுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன. இதில், ஒளிய(ன்) என்ற பெயருள்ள மட்பாண்ட ஓடு, ஓரிரு எழுத்துக்களுடய ஓடுகள் கிடைத்துள்ளன. இதில் ‘……ணிஇய் கிதுவரன் வேய்இய்’ என்ற 12 எழுத்துகளுடைய ஓடும் கிடைத்துள்ளது. சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், ஐந்து தங்கத்தால் ஆன ஓரிரு அணிகலன்கள், சுடுமண் உருவ பொம்மைகள் கிடைத்துள்ளன. ஆவணப்படுத்தப் பட்டுள்ள அனைத்து தொல்பொருட்களும் National Mission on Monuments and Antiquities என்ற அமைப்பின் அதிகாரபூர்வ பல வகையான கண்ணாடி மணிகள். இணையதளமான http://nmma.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுப்பப்படும். மேலும், கரிம பகுப்பாய்வுக்கும் அனுப்பி இவற்றின் காலம் கணக்கிடப்படும். நான்காம் கட்ட அகழாய்வு வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடையும். நான்காம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறையின் மூலமாக வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து இந்தியத் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். http://tamil.thehindu.com/tamilnadu/article19707205.ece?homepage=true- சமையல் செய்முறைகள் சில
- சமையல் செய்முறைகள் சில
புளியோதரைக் குழம்பு தினமும் ஒரே மாதிரியான சமையல், அலுக்கத்தானே செய்யும்? வாரம் ஒரு நாளாவது மாறுபட்ட ருசியில் சமைத்துச் சாப்பிடலாம் என்று பலருக்கும் தோன்றும். அதுவும் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் காரக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றை எப்போதாவதுதான் செய்வார்கள். அதனால் காரசாரமாகச் சாப்பிட சிலர் ஏங்கிக் கிடப்பார்கள். இன்னும் சிலருக்கோ பாரம்பரிய உணவு சாப்பிட ஆசையாக இருக்கும். இப்படிப் பலரின் ஆவலுக்கும் தீர்வு தருகிறார் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த திலகவதி. புட்டு, கொழுக்கட்டை, புளிக் காய்ச்சல் என்று வகைக்கு ஒன்றாகச் செய்யக் கற்றுத்தருகிறார் இவர். புளியோதரைக் குழம்பு என்னென்ன தேவை? புளி - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 6 வெந்தயம் - ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை - தேவைக்கேற்ப நல்லெண்ணெய் - கால் லிட்டர் எப்படிச் செய்வது வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, தனியா, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு மிளகாய் வற்றல் போட்டு வறுக்க வேண்டும். அதன்பின்பு புளிக் கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட வேண்டும். நன்கு கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள பொருட்களைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். குழம்பு கெட்டியான பதத்துக்கு வரும்போது வேர்க்கடலை போட்டு இறக்க வேண்டும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
பாகற்காய் தக்காளிப் புளிக்கறி உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை. தேவையான பொருட்கள்: பாகற்காய் - 250 கிராம் தக்காளிப்பழம் - 250 கிராம் வெங்காயம் - 5 பூண்டு - 10 வெந்தயம் - சிறிது மிளகாய் வத்தல் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 25 கிராம் நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன் நீர் - தேவைக்கேற்ப செய்முறை: முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
முட்டை ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ஃபிரை குழந்தைகளுக்கு முட்டை, உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்லகாம். தேவையான பொருட்கள் : முட்டை - 5 மிளகாய் தூள் - 1 கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - அரைக்கிலோ வெங்காயம் - 1 தேங்காய்பால் - அரை கப் மிளகு தூள் - 1 தேக்கரண்டி மைதா - 2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. செய்முறை : 4 முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து 2 துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு, மிளகு துள் போட்டு கலக்கி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பின்னர் உருண்டையை கையில் வைத்து வட்டமாகத் தட்டி நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் பிரட்டி வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதம் பிரட்டி வைத்துள்ள முட்டையை எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும். சூப்பரான முட்டை ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
வரகு அரிசி காய்கறி சாதம் சிறுதானியங்களுடன் காய்கறி சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி, காய்கறிகள் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வரகு அரிசி - 2 கப், காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) - 1 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா - 2, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 3, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், தயிர் - அரை கப், புதினா, கொத்தமல்லி - தலா அரை கட்டு, பச்சை மிளகாய் - 3, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன். செய்முறை : காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வரகு அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய்யை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி காய்கறிகளை சேர்த்து வதக்கவும். தக்காளி காய்கறிகள் சற்று வதங்கியதும் தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வரகு அரிசியை சேர்த்து கிளறி மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். சூப்பரான சத்தான வரகு அரிசி காய்கறி சாதம் ரெடி.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான கேரட் - பட்டாணி ரைஸ் பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதியம் சாப்பிட வெரைட்டியான லஞ்ச் செய்து கொடுக்க விரும்பினால் கேரட் - பட்டாணி ரைஸ் செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் - 2 கப், துருவிய கேரட் - ஒரு கப், உரித்த பட்டாணி - கால் கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 4, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, சோம்பு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : ப.மிளகாய், புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து கேரட், பட்டாணி, உப்பு சேர்த்துக் கிளறவும். அனைத்து நன்றாக வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்கவும். கேரட் - பட்டாணி ரைஸ் ரெடி! இதற்கு சிப்ஸ், ஆனியன் பச்சடி சரியான சைட் டிஷ்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
குழந்தைகளுக்கு விருப்பமான ரொட்டி ஜாலா சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக முறையில் செய்து குடித்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ரொட்டி ஜாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மைதா மாவு - 2 கப், முட்டை - ஒன்று (முட்டை தவிர்த்தும் செய்யலாம்), தேங்காய்ப்பால் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - தேவைக் கேற்ப, உப்பு - ஒன்றரை டீஸ்பூன். செய்முறை : முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். மிக்சியில் மைதா மாவை போட்டு அதனுடன் தேங்காய் பால் மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, அடித்து வைத்துள்ள முட்டை சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு அடிக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை வடிகட்டி கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். சிறிய தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஓட்டை போட்டு அந்த பாட்டிலில் கரைத்திருக்கும் மாவை ஊற்றி நன்கு மூடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பாட்டிலில் உள்ள மாவை தோசை அளவுக்கு மாவைச் சுற்றினால் கோடு கோடாக விழும் (ஓட்டையிலிருந்து திரி திரியாக மாவு விழும். அதைச் சுற்றி சுற்றி ஊற்றிவிட்டு அதன்மேல் அந்தக் கோடுகள் இணையும்படி பூப்போல ஊற்றவும்). மேலே சிறிது நெய் தடவி, மிதமான தீயில் அடி சிவக்காமல் மடித்து சுருட்டி எடுத்துப் பரிமாறவும். சூப்பரான ரொட்டி ஜாலா ரெடி.- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்