Jump to content

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8892
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by துளசி

  1. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  2. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  3. நேற்று (4.12.13) மாலை 5மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்ட அண்ணன் கொளத்தூர் மணி அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யகோரி இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் ஓருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம்தமிழர் கட்சி. எஸ்.டி.பி.ஐ. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர்பாதுகாப்பு வரலாற்று நடுவம். புரட்சிகரஇளைஞர்முண்ணனி, மனிதநேய பாசறை.உள்ளிட்ட ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு கண்டண கோசம் எழுப்பினர். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர்.சே.ஜெ. உமர்கயான் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் சிறப்புக் கண்டனஉரையாற்றியமனித உரிமை மக்கள் வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் ஈழத்தமிழர் விசயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம்போட்டு வருவதை கண்டித்து பேசினார். இந் நிகழ்வில் பங்குகொண்டு ஆதரவு அளித்த அத்தனை தோழர்களுக்கும். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நன்றிகளும், நேசிப்புகளும். தோழர் சதீஸ்குமார் பரமேஸ்வன் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து தொகுத்துவழங்கிய இந் நிகழ்வு எழுச்சியும், உணர்ச்சியுமாக நடை பெற்றது... அநீதிகளுக்கு எதிராக தீ பரவட்டும்... (facebook)
  4. மனித நேயம் கொண்ட சொந்தங்களே ! தோழர்களே எதிர் வரும் 4.12.2013 அன்று இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக திருப்பூரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுகிறோம். அநீதிகளுக்கு எதிராக.. அணி திரள அழைப்பது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம். (facebook)
  5. எனக்கு தெரிகிறது தமிழ்சிறி அண்ணா.
  6. விசுகு அண்ணா, அவரை மட்டம் தட்டும் நோக்கம் எனக்கு அறவே இல்லை. ஆனால் அவர் கூறிய வரிகளே அவரை நோக்கி திரும்பியுள்ளது. இதற்குள் தமிழரின் சொத்து அது இது என கொண்டுவந்து புகுத்தாதீர்கள். ஒருவர் தமிழரின் சொத்து என்பதற்காக அந்நபர் கூறும் அனைத்தையும் சரி என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. அதற்காக அவரை குழிபறிக்க நினைக்கவில்லை. தனியே சுட்டிக்காட்டுதல் தான் இங்கு இடம்பெறுகிறது. மற்றபடி ஜெயபாலன் ஐயாவுக்கு என்னை பற்றி தெரியும். ஏற்கனவே பலதடவை இவருடன் களத்திலும், திண்ணையிலும் முரண்பட்டுள்ளேன். ஆனாலும் பின்னரும் உரையாடியுள்ளேன்.
  7. நான் எழுதியதில் ஒரு தவறையும் காணவில்லை.அதற்கு ஆதாரம் உங்கள் அறிக்கை மற்றும் கருத்துக்கள். தப்பிவந்த களை ஆற முன்னம் முதலறிக்கை விட மட்டும் தெரிகிறது. களையாறிய பின்னர் அதையும் எழுதியிருக்கலாமே. உங்களுக்கு களைப்பாக இருக்கிறது என்றால் நீங்கள் களையாறி விட்டு வந்து பதிலளிக்கலாம். அவசரமில்லை. அதற்காக மற்றவர்கள் முதல் அறிக்கையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுவதில் பிழையில்லை. மற்றபடி நீங்கள் நாரதர் அண்ணாவுக்கு எழுதிய அந்த கூற்று உண்மையெனின் நீங்கள் எனக்கு எழுதியதை ஒப்பிட்டு பார்க்கும் போது உங்களுக்கு உளவியல் பிரச்சினை இருப்பதாக நீங்களே சொல்வது போல் உள்ளது. நானாக உங்களுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது என கூறவில்லை என்பதை கவனிக்கவும். நீங்கள் நாரதர் அண்ணாவை மட்டம் தட்ட வெளிக்கிட்டு அது உங்களுக்கு வினையாகி விட்டதற்கு நான் என்ன செய்ய?
  8. நீங்கள் உயிருடன் வந்தது எனக்கு பிடிக்கவில்லை என முன்னர் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவும் இல்லை, சொல்லியிருக்கவும் இல்லை. உங்களுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது என எடுத்துக்கொள்ளலாமா?
  9. உங்களை கைது செய்வார்கள், உங்கள் நண்பர்கள் காப்பாற்றுவார்கள், நீங்கள் விடுதலையாவீர்கள் என நினைத்தால் தயவு செய்து இனிமேலும் இலங்கைக்கு செல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் கைது செய்யப்பட்டால் ஒரு தமிழர் கைது செய்யப்பட்டார் எனவே உலகம் பார்க்கும். நீங்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டாலும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தோற்றத்தையே உருவாக்கும். (விடுதலையின் பின்னர் தகுந்த காரணங்களை உலகின் முன் நீங்கள் வைக்காத நிலையில்) நீங்களும் உங்கள் நண்பர்களும் நல்ல பாதுகாப்பாக இருப்பீர்கள். ஆனால் உங்களின் இவ்வாறான செயற்பாடுகளால் அங்கு உண்மையில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படாதவர்களும் அனுபவித்த, அனுபவிக்கும், அனுபவிக்கப்போகும் சித்திரவதைகள் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படும். ஒரு சிலரை காப்பாற்றுகிறேன் என கூறி நீங்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களை மறந்து விடுகிறீர்கள். அவர்களுக்கு தீமை விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கிறீர்கள். இப்பொழுதும் கூட திரும்ப இலங்கைக்கு செல்வீர்கள் என கூறுகிறீர்கள். நீங்கள் போனாலென்ன வந்தாலென்ன மீடியாக்களுக்கு தெரிவிக்காமலேயே உங்களை காப்பாற்றக்கூடிய நண்பர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அறிவித்து விட்டு போய் வாருங்கள். ஏனென்றால் உங்கள் ஒருவரை தான் தமிழர் என உலகம் கணக்கு போட்டுவிடக்கூடாது. தேவையான நேரத்தில் குரல் கொடுக்காத நீங்கள் எல்லாம் இணக்க அரசியல் செய்து எந்த காலத்திலும் பிரயோசனம் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்காக ஹக்கீம் குரல் கொடுப்பது தான் உங்களை பொறுத்தவரை இணக்க அரசியலோ தெரியவில்லை.
  10. நீங்கள் இந்த திரியில் எழுதியிருப்பவை அனைத்தையும் திரும்ப வாசியுங்கள். உங்களுக்கு சுட்டிக்காட்டுவதாக இருந்தால் உங்கள் அனைத்து கருத்துகளையும் நான் திரும்ப பதிந்துகொண்டிருக்க வேண்டும். அதே போல் மற்றவர்கள் எழுதியவற்றையும் வாசியுங்கள். திரும்ப திரும்ப ஒன்றையே எழுதிக்கொண்டிருக்க முடியாது.
  11. நீங்கள் இறந்திருக்க வேண்டும் என நான் எங்காவது கருத்து கூறியுள்ளேனா? நான் தனியே கருத்து கூறியது விடுதலையின் பின்னராவது நீங்கள் எமது மக்களின் பிரச்சினை பற்றி கதைத்திருக்க வேண்டும், உங்களை கைது செய்த அரசாங்கம் பற்றி உலகத்துக்கு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும் என்பதே. ஆனால் நீங்கள் உங்கள் நண்பர்களை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் அரசாங்கம் பற்றி நல்லறிக்கை கொடுக்கிறீர்கள். அதை தான் தவறு என கூறுகிறேன். அது நீங்கள் இறக்கவில்லையே என நான் கவலைப்படுவது போல் உங்களுக்கு தெரிந்தால் புரிந்துணர்வு விடையத்தில் நீங்கள் படு சுட்டி எனவே கொள்கிறேன். இந்த திரியில் நீங்கள் எழுதிய அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் மூலம் உங்களை பெரிய ஹீரோ போல் காட்ட முற்படுகிறீர்கள். Callum Macrae, Frances Harrison போன்றவர்கள் உங்களை கைது செய்த செய்தியை twitter இல் பதிந்திருந்தார்கள். இலங்கையில் தற்பொழுதும் கைதுகள், கடத்தல்கள் தொடர்கிறது என்ற ஒரு செய்திக்காகவே அதை பகிர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நீங்கள் விடுதலையின் பின்னர் சொல்ல வரும் செய்தி என்ன? அடக்குமுறைகள், மக்களின் பிரச்சனைகளை பற்றி பேச வேண்டிய நேரத்தில் நீங்கள் உங்களை ஹீரோவாக்கி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.அதே போல் இலங்கை அரசு பற்றி நற்சான்றிதழ் கொடுக்கிறீர்கள். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாத ஒரு சந்தர்ப்பவாதியாகவே உங்களை நான் பார்க்கிறேன்.
  12. பேய்நிழல் அண்ணா, ஜெயபாலன் ஐயாவை வைத்து கவிஞர்கள் அனைவரும் அவ்வாறே என முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
  13. கொளத்தூர் மணியை விடுதலை செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (28.11.2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். முல்லிவாய்க்காலோடு திமுக கதை முடிந்தது.முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு அதிமுகவின் கதை முடியபோகிறது இந்த அரசுக்கு வரும் நாடளமன்றதேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என நேற்று நடந்த கண்டன உரையில் அண்ணன் சீமான் அவர்கள் கூறினார் .. (facebook)
  14. சண்டமாருதன் அண்ணா, இலங்கை முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்தியாவை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. இந்தியா மற்றும் உலகத்துக்கு அழுத்தம் கொடுத்து சாதிக்க நினைப்பவர்களால் தான் பிரயோசனம் உண்டு. அந்த வகையில் தமிழக மக்களின் வாக்குகள் தமக்கு தேவை எனின் அவர்கள் விரும்புவதை செய்வது போல் நடிக்க இந்தியா முயலும். அந்த நடிப்பால் கிடைக்கும் நன்மையை தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். இங்கு தமிழக மக்கள் மற்றும் அவர்கள் போராட்டம் முக்கிய வலுவாக உள்ளது. அதேபோல் தமிழர்கள் அதிகளவில் உள்ள நாடுகள் தொடர்பில் தமிழர்களின் வாக்குகள் தமக்கு தேவை எனின் அவர்கள் விரும்புவதை சிறிதேனும் செய்ய வேண்டும் எனும் நிலையில் புலம்பெயர் மக்களின் போராட்டங்கள், அழுத்தங்கள் செல்வாக்கு செலுத்துகிறது. (சிலர் எதிர்பார்ப்பில்லாமல் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதுமுண்டு.) அதேபோல் இன்றைய உலக அரசியல் மாறி வருவதும் எமக்கு சாதகம். புலம்பெயர் அமைப்புகள், தமிழர்கள் ஏனோ தானோ என்றிருந்தால் இந்த உலகம் எம்மை பற்றி நினைத்து கூட பார்க்காது. அவ்வாறு இருப்பின் மகிந்தவுக்கு தமிழ் மக்களை மேலும் அழிக்க இன்னும் வசதி. சும்மா புலம்பெயர் அமைப்புகள் மேல் காழ்ப்புணர்வில் எழுதி விட்டு ஜெயபாலன் ஐயாவை உயர்த்தி வைக்காதீர்கள். இவ்வளவு காலமும் அவர் முயற்சித்து அதனால் கிடைத்த நன்மை என்ன?
  15. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய வேண்டும் என்பதற்கு குறுக்காக இலங்கை முஸ்லிம்கள் தான் உள்ளார்கள். இலங்கையிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் மட்டுமல்ல முஸ்லிம் பொதுமக்களிலும் பலர் (அனைவரும் அல்ல) தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். அண்மையில் கமரூனுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை எதிர்த்து முகநூலில் சில இலங்கை முஸ்லிம்கள் கருத்து கூறியிருந்தார்கள். அடடா நல்லவர்களாக உள்ளார்களே என பார்த்து விட்டு அவர்கள் timeline க்கு போய் பார்த்தால் புலி எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு கருத்துகள் பல இருந்தது. ஆனாலும் அவர்கள் கமரூனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து கருத்து கூறியிருந்தமைக்கு காரணம் சிங்களவர்களால் தமக்கு அநியாயம் நடக்கும் போது பேசாமல் மௌனமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் இப்பொழுது மட்டும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என கூறியிருந்தார்கள். (அரசாங்கத்துக்காக கதைக்கும் பலர் மத்தியில் தமது முஸ்லிம் மக்களை நினைத்து தன்னும் சிங்களவர்களுக்கு எதிராக கருத்து கூறியமைக்கு அவர்களை பாராட்ட தான் வேணும்.) முஸ்லிம்கள் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக தூற்றி கருத்து கூறினால் அது மட்டும் தமிழர்களின் நலன்களுக்கு நன்மை தரும் விடையமா என்ன? அவர்கள் செய்வதற்கு எதிராக உங்களை போன்றவர்கள் விமர்சனம் வைப்பதில்லை. தனியே தமிழர்களில் தான் பழி சுமத்துகிறீர்கள். இங்கு கவிஞர் ஐயா தமிழ் மக்களுக்காக எவ்வாறு கதைத்திருக்க வேண்டும் என்பது பற்றி பலர் கருத்து கூறி விட்டார்கள். அவர் அரசாங்கத்தை பற்றி நல்லறிக்கை கொடுப்பதை தவிர்த்து இலங்கை அரசாங்கத்தின் உண்மை தன்மையை கூறியிருக்க வேண்டும். இன்னும் பல மக்கள் அங்கு கைது செய்யப்பட்ட நிலையில் உள்ளார்கள். உலகம் மற்றும் ஊடகங்கள் தனது விடுவிப்புக்கு தலையிட்டது போல் அவர்கள் விடுவிப்புக்கும் தலையிட வேண்டும் என கோரியிருக்க முடியும். ஊடகங்களின் கவனத்தை பெறாத கைதுகள் பெரும்பாலும் கொலையில் முடிவடையும் சந்தர்ப்பமே உள்ளது இல்லாவிட்டாலும் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்பதையும் கூறியிருக்க முடியும். இனி அங்கு செல்வோரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதை தனது கைது நிரூபிக்கிறது என கூறியிருக்க முடியும். இவ்வளவையும் அவர் கூறாதது ஏன்? கூறாதது மட்டுமல்லாமல் அரசாங்கத்தை பற்றி நல்லறிக்கை கொடுத்திருக்கிறார். இவர் கைது செய்யப்பட்டார் என்றதும் அதை ஊடகங்கள், பல முக்கிய நபர்கள் அரசாங்கத்துக்கு எதிராக அதை பயன்படுத்தினார்கள். அப்படியானவர்கள் விடுதலையின் பின்னர் இவர் என்ன கூறுகிறார் என்பதை அறியவும் முயற்சிப்பார்கள்.
  16. உலக அரசியல், கவிஞர் ஐயாவின் அரசியல் என்பன தெரிந்திருந்தாலும் கவிஞர் ஐயா தனது கைதின் பின்னராவது மாறி தமிழ் மக்களுக்காக கதைக்க மாட்டாரா என பலர் எதிர்பார்த்திருந்தார்கள். (நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மாறமாட்டார் எனவே நினைத்திருந்தேன்.) தமிழ் மக்களுக்காக கதைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதை அவர் தவற விட்டு விட்டார்.
  17. :lol: பகலவன் அண்ணாவின் சுவாரஸ்யமான நகைச்சுவையான எழுத்து முறைக்கே பச்சைகளை அள்ளி வழங்கலாம். பச்சை முடிந்து விட்டது பகலவன் அண்ணா. நாளைக்கு போடுகிறேன்.
  18. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  19. அஞ்சரன் அண்ணா, ஜெயபாலன் ஐயா பற்றி ரகுநாதன் அண்ணா கூறிய கருத்து தான் எனதும். ஆனால் இலங்கையில் தொடர்ச்சியாக கைதுகள் நடப்பது பற்றி பிரச்சாரம் செய்வதற்கு இதையும் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டவர்களே இதை twitter இல் பதிகிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்ப்பது தகுமா? UN, Amnesty போன்றவற்றுக்கு அனுப்புவதால் அவர்கள் பதிவில் இதையும் சேர்க்க உதவும். அது இலங்கைக்கு எதிரான பிரச்சாரமாக அமையும்.
  20. Frances Harrison ‏@francesharris0n 5h More on the award-winning #norwegian #tamil poet detained in #srilanka y. #lka http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/416-award-winning-tamil-poet-jayapalan-arrested-in-sri-lankas-north Frances Harrison ‏@francesharris0n 4h #srilankan justice minister Rauf Hakeem shocked that #jayapalan was arrested - elderly #tamil poet dedicated 2 peace & reconciliation #lka (twitter)
  21. ஈழத்து கவிஞரும் நண்பருமான ஜெயபாலனை இலங்கை அரசு சட்டவிரோத காவலில் வைத்திருக்கிறது.. அவரை விடுவிக்க நண்பர்கள் இந்த உதவியை செய்ய வேண்டும்.. Dear Sir, This letter is to bring your attention that Mr. VIS Jayapalan, a renowned Tamil poet, resident of Norway, who is on a personal trip to Sri Lanka to pay homage to his mother during her anniversary, has been unlawfully detained by Sri Lankan Authorities citing that he has violated visa rules. As Sri Lanka is known for abducting and killing people who raises voice against the Sri Lankan government on human rights issues. Jaya Palan, who is of from minority Tamil origin has been raising concerns about human rights violations when he was outside Sri Lanka. Now, while he was travelling to Sri Lanka he has been abducted. We are worried about his safety in hands of Sri Lankan authorities. We request to intervene in this issue to ensure Mr.Jaya Palan's safety and return back from Sri Lanka. Thank You Sincerely, (Your Name) ********** Please send this email to ------------------------- Amnesty International NORWAY Email: info@amnesty.no Phone: + 47 22 40 22 00 Fax: + 47 22 40 22 50 Address: Grensen 3, 0159 Oslo NO Amnesty International London Email: amnestyis@amnesty.org Telephone: +44-20-74135500 Fax number: +44-20-79561157 Twitter account: @Amnestyonline Address: 1 Easton Street London WC1X 0DW, UK நன்றி :சரவணன் கன்னியாரி (facebook: Cartoonist Bala)
  22. ஜெயபாலன் ஐயா வந்து விடுவார் என்பது தெரிந்தாலும் இதையும் எமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் இதில் சென்று கையொப்பமிடுங்கள். Petitioning United Nations United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED http://www.change.org/petitions/united-nations-urgent-appeal-renowned-tamil-poet-arrested-and-detained (இணைப்பு: முகநூல்)
  23. கவிஞர் ஜெயபாலன் குற்றமற்றவர்- நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2013-11-23 இலங்கையின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்களை வா.ஐ.ச ஜெயபாலன் வெளியிடவில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஈழத்துக் கவிஞரும் தென்னிந்திய நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் நேற்று மாலை கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார். வா.ஐ.ச ஜெயபாலனின் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் ஜெயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசியலைக் கடந்து இலக்கியவாதி என்ற அடிப்படையில் ஜெயபாலனின் அறிமுகம் தனக்கு உள்ளதாகவும் அவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தமிழ், முஸ்ஸிம் உறவு குறித்தும் நல்லிணக்கம் குறித்தும் கரிசணையுடன் ஜெயபாலன் செயற்பட்டதாகவும் அவர் கூறினார். ஜெயபாலனை வெளிநாட்டவர் என கருதிவிட முடியாது, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டவர் என அமைச்சர் சுட்டிக் காட்டினார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் ஜெயபாலன் செயற்பட்டதாக கூறிய கருத்தை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மறுத்தார். இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஜெயபாலன் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் துறையில் ஒப்படைப்பதற்காக வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி அஜித் ரோஹண தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=97478&category=TamilNews&language=tamil
  24. Callum Macrae ‏@Callum_Macrae 1h Protest arrest & detention in SL of Tamil poet and writer VIS Jayapalan.@PresRajapaksa Where is @commonwealthsec princioles of free speech? (twitter)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.