Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3242
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத‌ கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முனைவது உலகெங்கிலும் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகின்ற மாணவர் சேட்டிலைட்டுகள் 🛰️ ஆகும். இவ்வகையான மாணவர் சேட்டிலைட்டுகள் satellite 🛰️ நிறைய விண்ணுக்கு ஏவப்பட்டு கொண்டிருக்கிறது. Please Google, YouTube பன்னி‌ பாருங்க. இந்த சேட்டிலைடினை காத்தாங்குடி மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பி வைப்பதே எனது ஆசை. இந்த சாட்டிலைட்டுக்கு நான் வைத்திருக்கும் பெயர் "KATSAT" 🛰️ ஆகும் (Kattanakudy Satellite என்பதன் சுருக்கம்). இந்த Satellite 🛰️ உடன் தொடர்பு கொள்வதற்கும் தொடர்ச்சியாக விண்வெளி 🌌 ஆராய்ச்சிகளை செய்வதற்கும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் "Kattanakudy Space Research Institute 📡" (KSRI)‌ என்ற‌ நிறுவனம் நிறுவப்படும். பெயரும் நல்லா இருக்கு இல்ல 😃. இந்த KATSAT 🛰️ திட்டத்தில் இரண்டு பிரிவு காணப்படும். 1. சாட்டிலைட்‌ satellite 🛰️ தயாரிப்பு 2. ராக்கெட் 🚀 தயாரிப்பு இந்த satellite 🛰️ இனை இரண்டு வழியில் விண்வெளிக்கு அனுப்ப‌ முடியும். 1. சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (International Space Station) அனுப்பப்படுகின்ற Cargo Spaceship 🚀 மூலம் இவ்வாறு மாணவர்களினால் தயாரிக்கப்படுகின்ற சேட்டிலைட் இணை அனுப்பி அங்கே இருக்கின்ற Astronaut உதவியுடன் விண்ணில் Manual ஆக‌ launch செய்வது. இது சம்பந்தமான‌ ஆராய்ச்சிகளை‌ நாம் இன்றிலிருந்து தொடங்க வேண்டும். நான்‌ தொடங்கிட்டன்.. 2.‌ அல்லது நாமே ராக்கெட்டினை 🚀 தயாரித்து அதனுள் நமது Satellite யினை 🛰️ வைத்து விண்ணுக்கு அனுப்புவது. இதற்கான தேடல்கள், நல்ல முன் உதாரணங்கள்‌ தமிழ் நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். Google பன்னி‌ பாருங்க. நாம் அனுப்ப இருக்கின்ற இந்த KATSAT 🛰️ ஆனது காலநிலை சம்பந்தமான தரவுகளை சேகரித்து அனுப்புகின்ற வேலையினை பிரதானமாக செய்யும். அவ்வப்போது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப: - இலங்கை சார்ந்த சேட்டிலைட் படங்களை எடுத்து அனுப்புதல், - அவசரகால warning ⚠️ யினை‌ முன்கூட்டியே கூட்டியே தெரியப்படுத்துதல், - மாணவர்கள் எப்படி ஒரு செய்மதியுடன்‌ தொடர்பாடல் (satellite communication) செய்தல் போன்ற பயிற்சிகளை (training) வழங்குவதற்காக இந்த சாட்டிலைட் பயன்படுத்தப்படும். இதனுடைய fun factor ஆக: - தானாகவே விண்வெளி புகைப்படங்கள் எடுத்து அனுப்புவது. - ஒவ்வொரு ஆண்டினை பூர்த்தி செய்கின்ற பொழுதும் Kattanakudy Satellite 🛰️ என்ற LED யினை விண்ணில் ஒளிரச் செய்து வீடியோ எடுத்து அனுப்புவது. - விண்வெளியில் கிடைக்கின்ற ஒலிகளினை record (30 second) செய்து அவ்வப்போது அனுப்புதல்.‌ - தனக்கான ட்விட்டரை (X தளம்) அக்கவுண்ட் தொடர்ச்சியாக தானாகவே அப்டேட் செய்தல். - KATSAT இருக்கும் AI தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளி சம்பந்தமான கேள்விகளுக்கு email மூலம் பதில் அளித்தல் போன்ற பல செயற்பாடுகளை நமது KATSAT 🛰️ செய்மதி கொண்டிருக்கும். இந்த சாட்டிலைட் launch 🚀 ஆனது NASA or ISRO இல் இருந்து காத்தான்குடியின் முதல் செய்மதி KATSAT 🛰️ விண்ணுக்கு ஏவப்படுகின்ற அதே தருணம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டும் அதே நேரத்தில் விண்ணை நோக்கி ஏவப்படும். இந்த வரலாற்று நிகழ்வினை கண்டுகளிக்க காத்தான்குடியில் அனைத்து மாணவர்களும் மத்திய கல்லூரி கிரவுண்டில் ஒன்று கூடி இருப்பர். இந்த ராக்கெட் லான்ச் ஆனது காத்தான்குடியில் எந்த மூலையில் இருந்தும் மக்கள் பார்வையிடக் கூடியதாகவே அமைந்திருக்கும். இதனது நேரடி ஒளிபரப்பும் குட்வின் ஜங்ஷனில் அமைந்திருக்கும் திரையிலும் மக்கள் பார்வைக்கு காட்டப்படும். 2019 ம் ஆண்டு எனது மனதில் தோன்றிய அந்த எண்ணம் இன்று அது முழு திட்டமாக உருவாகி வருகிறது. இறைவனின் உதவியினால் இந்த திட்டம் நான் மரணிப்பதெற்கு முன்னர் Project Lead ஆக இருந்து இந்த சாதனையை நம் மண்ணில் நிகழ்த்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். "வரலாறுகளுக்காக காத்திருக்கக் கூடாது அதனை நாமே தொடங்கி வைக்க வேண்டும்" கனவு காணுங்கள் என்ற‌ அப்துல் கலாம் ஐயாவின் வரிகளினை‌ உதாரணமாக கொண்டு நீங்களும் உங்களது பிள்ளைகளுக்கு ஆர்வம் ஊட்டுங்கள். கொச்சிக்கா பிரச்சினை தானாகே தீரும். "அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி" இர்ஷாத் இஸ்மாயில் https://www.madawalaenews.com/2024/01/satellite.html
  2. இன்றுதான் இந்த ஹீரோவை பற்றி கேள்விப்படுகின்றேன். நாமெல்லம் 70 கிட்ஸ் எனக்கு தெரிந்ததெல்லம் ரூபவாகினியில் பார்த்த‌ Black-7, Doctor Who?, star track, bionic woman, incredible hulk போன்றவை
  3. இவை medical equipment / diagnosing equipment கீழ் வருகின்றது. இவை பொதுவாக tax அடிக்கபட வேண்டும். Pharmaceutical items அடிக்கப்ப‌டாது
  4. ஆம். வருமான வரியை Income Tax (நேர் வரி) நுகர்வோர் தலையில் கட்ட முடியாது, ஆன VAT ஐ நுகர்வோர் தலையில் (நேரில் வரி) கட்டலாம். எந்த ஒரு வ‌ருமானமும் பின்வரும் நான்கு வ‌ழிகளில் பெறப்படுகின்றது 1. தொழில் மூல‌ வருமானம் (Employment Incme) 2. வியாபர வருமானம் (Business Income) 3. முதலீட்டு வருமானம் (Capital Gain) 4. ஏனைய வருமானம் (Others) தனியொரு நபர், வேலையும் செய்து கொண்டு, வியாபாரம் , முதலீடு போன்றவற்றையும் மேற்கொண்டு வருமானம் உழைக்கலாம். அதற்கேற்ப வருமான மூலதாரத்தை அடிப்ப‌டையாக கொண்டு வரி அறவிடப்படும். இதன்போது, Tax Free Allowances, Relief, என்பனவும் கழிக்கபட வேண்டும். (to arrive at taxable income) VAT உள்ளும் , Standard Rated, Zero Rated, exempted என வகையுண்டு அவயும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். இந்த குடிகாரருக்கு alcohol and tobacco tax rate என்ன வென்று தெரியுமா? (40%) Advance Personal Income Tax பிடிக்கப்படுகின்றது. பின்பு இவை tax credit காட்டப்படும் WHT உம் சில வற்றிற்க்கு இவ்வ்வாறே.
  5. அருமையான கருத்து வைரவன் எப்போதவது இருந்து வந்து நச் என்று கொடுபீர்கள் ஆம் மிகவும் ஒரு யாழ் மையவாத துவேசம் பிடித்த கருத்து 1000 ரூபா சம்பளத்துக்காக அல்லல் பட்டு இன்னும் போராடும் சக தமிழ் இனத்தின் மீது இவருக்கு பரிதாபம் ஏற்படுகின்ற‌தா? இன்று காலை சிங்களவனின் கடையில் சுட சுட சிறிய ரோஸ் பாணும், ஒரு பருப்பும், பொல் சம்பளுடன் சாப்பிட்டு விட்டு பார்த்தல் 350 ரூபா, ஒரு சில‌ நல்ல ஓட்டல்களில் 400 ரூபா ஒரு பகலுணவு பொதி. யாரோ ஒரு மலையக பெண் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை இவரால் பொருத்து கொள்ள முடியவில்லை. ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20 க்கும் மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி தாங்களுக்குள் முட்டி மோதி அழிந்திபோய் இன்னும் இந்த மைய வாததுடன் இருக்கும் இவர்களுக்கு என்று விடிவு? கிழே ஐலண்டின் கருத்து சால பொருந்தும் "ஈழத்தமிழனுக்கு மூளை இருந்திருந்தால் கிடைத்த சந்தர்பங்களை சமயோசிதத்துடன் உபயோகித்து மெல்ல மெல்ல உயர்ந்து இருப்பான். இனியாவது மூளையை உபயோகித்து முன்னேற வேண்டும். இல்லை என்றால் இப்படியே தனது தவறுகளுக்கு உலகின் மீது பழியைப போட்டு இப்படியே பைத்தியங்கள் மாதிரி கத்திக் கொண்டு திரிய வேண்டியது தான்
  6. இப்பா யாரு மலையக தமிழர்கள் இலங்கையில் பாதி கேட்கப் போராப்ல? மனோ கணேசனன் கனடா வர‌ கூடாதா?
  7. எம்.எல்.எம். மன்­சூர் ”புத்­தரின் போத­னை­களில் புனிதப் போர் என்ற கருத்­தாக்கம் இல்லை; புத்த தர்­மத்­தையும், அதைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் பாது­காத்துக் கொள்­வ­தற்குக் கூட போர் புரி­வ­தற்கு அதில் அனு­ம­தி­யில்லை. இந்தப் பின்­ன­ணியில், புத்த தர்­மத்தைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கென ஆட்­களை கொலை செய்­வ­தனை நியா­யப்­ப­டுத்த வேண்­டு­மானால், புத்­தரின் போத­னை­க­ளுக்கு வெளியில் ஒரு வலு­வான புதிய அத்­தி­யா­யத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்­ட­கை­மு­னு­வுக்கும், (இந்து) எல்­லா­ள­னுக்கும் இடையில் இடம்­பெற்ற போரை, சிங்­கள அர­சியல் மேலா­திக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கென முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு புனிதப் போராக சித்­த­ரித்துக் காட்­டு­வதன் மூலம் மகா­வம்ச ஆசி­ரியர் அந்தக் காரி­யத்தை கச்­சி­த­மாக செய்­தி­ருக்­கிறார்.” ”இவ்­விதம், கௌதம சித்­தார்த்­தரின் பௌத்த மதத்தை (ஐந்தாம் நூற்­றாண்டில் பாளி மொழியில் எழு­தப்­பட்ட) ‘புதிய சமயக் கிரந்­த­மான‘ மகா­வம்சம் ‘சிங்­கள பௌத்­த­மாக‘ மாற்­றி­ய­மைத்­தது” என்­கிறார் திச­ரணி குண­சே­கர. இந்தப் பின்­ன­ணியில், புரா­தன கால வீரர்கள் மற்றும் மன்­னர்கள் குறித்து மகா­வம்சம் முன்­வைக்கும் புராணக் கதைகள் சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு மத்­தியில் பின்­வரும் விதத்­தி­லான ஓர் உணர்வைத் தூண்­டி­யி­ருந்­தன: ”ஓர் உண்­மை­யான இலங்­கை­ய­ராக இருக்க வேண்­டு­மானால், ஒரு சிங்­க­ள­வ­ராக இருக்க வேண்டும்; உண்­மை­யான ஒரு சிங்­க­ள­வ­ராக இருக்க வேண்­டு­மானால், ஒரு பௌத்­த­ராக இருக்க வேண்டும்.” விருந்­தோம்­பு­ப­வர்கள் (சிங்­கள பௌத்­தர்கள்) மற்றும் விருந்­தா­ளிகள் (ஏனைய சிறு­பான்மை இனங்­களைச் சேர்ந்­த­வர்கள்) என்ற கருத்­தாக்கம் இந்தத் தொன்­மத்­தி­லி­ருந்தே தோன்­றி­யது. அதன் பிர­காரம், ‘இந்தத் தீவு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்குச் சொந்­த­மா­னது; அவர்­களே அதன் அசல் உரி­மை­யா­ளர்கள்‘ என்ற கருத்து சிங்­கள மக்­களின் பிரக்­ஞையில் ஆழ­மாக வேரூன்­றி­யது. இதுவே மகா­வம்ச மனோ­பாவம் (Mahawamsa Mindset) என அழைக்­கப்­ப­டு­கி­றது. இதன் விளை­வாக தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும், சிங்­கள கிறிஸ்­த­வர்­களும் மற்றும் ஏனைய சிறு­பான்­மை­யி­னரும் ஒரு­போதும் இலங்­கை­யர்­க­ளாக இருந்து வர முடி­யாது என்ற நம்­பிக்கை உரு­வா­கி­யது. இந்த நம்­பிக்­கையே இன்­றைய சிங்­கள தேசி­ய­வா­தத்தின் சாராம்­ச­மாக இருந்து வரு­கின்­றது. ”1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாவ­லப்­பிட்டி நகரில் இடம்­பெற்ற கூட்­ட­மொன்றில் சிங்­கள இனத்­தையும், பௌத்த மதத்­தையும் மிக மோச­மான விதத்தில் இழி­வு­ப­டுத்தி ஜீ ஜீ பொன்­னம்­பலம் நிகழ்த்­திய உரை, பல நூற்­றாண்டு காலம் இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டையில் நிலவி வந்த நல்­லு­றவை முற்­றிலும் சீர்­கு­லைத்­தது” என எழு­து­கிறார் சிங்­கள தேசி­ய­வா­தத்தின் தீவிர ஆத­ர­வாளர் ஒருவர். ”அதன் விளை­வாக, சுதந்­தி­ரத்­துக்குப் பின்­பட்ட இலங்­கையின் 75 வருட கால வர­லாறு கண்­ணீ­ராலும், இரத்­தத்­தி­னாலும் எழு­தப்­பட வேண்­டிய நிலை தோன்­றி­யது” என அவர் முத்­தாய்ப்­பாகச் சொல்­கிறார். ஆனால், 1920 களி­லேயே சிங்­கள பௌத்த சமூ­கத்­துக்கு மத்­தியில் இன­வாத உணர்­வு­களைத் தூண்­டு­வ­தற்கும், அவற்றை நிலைத்­தி­ருக்கச் செய்­வ­தற்கும் அந­கா­ரிக தர்­ம­பால (1864 -–1933) முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்தார். அவ­ரு­டைய எழுத்­துக்­க­ளிலும், பேச்­சுக்­க­ளிலும் அவர் தொடர்ந்தும் தமி­ழர்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும் சிங்­கள இனத்தின் எதி­ரி­க­ளா­கவே கட்­ட­மைத்து வந்தார். ”Sri Lanka: War -Torn Island” (1998) என்ற நூலில் Lawrence J Zwier இப்­படி எழு­து­கிறார்: ”தமி­ழர்­களும், சிங்­க­ள­வர்­களும் சுமார் 2000 ஆண்டு கால­மாக இலங்­கையில் பரம வைரி­க­ளாக இருந்து வந்­துள்­ளார்கள் என்ற தப்­பெண்­ணத்தை ஜன­ரஞ்­ச­கப்­ப­டுத்­திய மிக முக்­கி­ய­மான தலைவர் அந­கா­ரிக தர்­ம­பால. அவர் பல சந்­த­ரப்­பங்­களில் மகா­வம்­சத்தை மேற்கோள் காட்­டி­யி­ருக்­கிறார்; அதில் எழு­தப்­பட்­டி­ருக்கும் அனைத்து விட­யங்­களும் முற்­றிலும் உண்­மை­யா­னவை என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்தே அவர் அவ்­வாறு கூறி­யி­ருக்­கிறார்…. அவ­ரு­டைய பெரும்­பா­லான பேச்­சுக்­களும், எழுத்­துக்­களும் இன­வாத இயல்­பி­லா­னவை. சிங்­க­ள­வர்கள் இன ரீதியில் தூய ஆரி­யர்கள் என்ற விட­யத்தை அவர் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்தார். சிங்­க­ள­வர்­களின் பூர்­வீகம் வேறு, தமி­ழர்­களின் பூர்­வீகம் வேறு என்­பது அவ­ரு­டைய நிலைப்­பாடு. அதனால், தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­க­ளிலும் பார்க்க தாழ்­வா­ன­வர்கள் என்று அவர் கூறினார்.” தர்­ம­பா­லவின் பரப்­பு­ரைகள் கார­ண­மாக சுதந்­தி­ரத்­துக்கு முன்­ன­ரேயே இந்த மகா­வம்ச மனோ­பாவம் சிங்­கள சமூ­கத்தில் ஆழ­மாக வேரூன்­றி­யி­ருந்­தது. இதற்­கான சுவா­ர­சி­ய­மான ஓர் உதா­ரணம் அசோ­க­மாலா (1947) என்ற சிங்­கள திரைப்­படம். இரண்­டா­வது சிங்­களப் பட­மான அசோ­க­மாலா கோயம்­புத்தூர் சென்ரல் ஸ்டூடி­யோவில் தயா­ரிக்­கப்­பட்­டது. T.R. கோபு என்ற தமிழர் அதன் இயக்­குநர். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்­கையில் அப்­படம் திரை­யி­டப்­பட்­டது. அக்­கால சிங்­கள பத்­தி­ரி­கைகள் ‘அசோ­க­மாலா‘ திரைப்­படம் தொடர்­பான விமர்­ச­னங்­களை கடும் இன­வாதக் கண்­ணோட்­டத்தில் முன்­வைத்­தி­ருந்­தன. இது தொடர்­பாக ‘சர­சவி சந்­த­ரஸ‘ என்ற பத்­தி­ரிகை எழு­திய ஆசி­ரியர் தலை­யங்கம் இது: ”இப்­பொ­ழுது கொழும்பு திரை­ய­ரங்­கு­களில் காண்­பிக்­கப்­பட்டு வரும் ‘அசோ­க­மாலா‘ என்ற திரைப்­படம் ஒட்­டு­மொத்த சிங்­கள இனத்தின் மீதும் அவ­தூறு பொழிந்­துள்­ளது. மாவீ­ரனும், சிங்­கள பேர­ர­ச­னு­மான துட்­ட­கை­முனு ஒரு கோழை­யாக, பல­வீ­ன­மான மனி­த­னாக சித்­த­ரிக்­கப்­ப­டு­வதைப் பார்த்து எந்­த­வொரு சிங்­கள மகனும் மௌன­மாக இருக்க முடி­யாது….” ”….புத்த சாச­னத்­தையும், சிங்­கள இனத்­தையும், சிங்­களத் தீவையும் தமி­ழர்­களின் பிடி­யி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­காகப் பிறந்­தவன் தான் மாவீரன் துட்­ட­கை­முனு…. அந்தக் கால கட்­டத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்கும் இடையில் ஒரு பாரிய பிளவு நிலவி வந்­தது. அதற்குப் பதி­லாக அக்­கா­லத்தில் தமி­ழர்­க­ளுக்கும், சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் ஒரு சகோ­த­ரத்­துவம் நிலவி வந்­த­தாகக் காட்­டு­வ­தற்கு இப்­ப­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் முயற்சி வெட்­கக்­கே­டான ஒரு அவ­தூறு; பொய்; வர­லாற்றை திசை­தி­ருப்­பு­வ­தற்­கான ஒரு முயற்சி”. ஆனால், மார்ட்டின் விக்­ர­ம­சிங்க (மயூ­ர­பாத என்ற புனை­பெ­யரில்) எழு­திய விமர்­சனம் இந்தப் பார்வைக் கோணத்தை முற்­றிலும் நிரா­க­ரிக்கும் விதத்தில் வர­லாறு குறித்த துல்­லி­ய­மான ஒரு பார்­வையை முன்­வைத்­தது: ”…..சோழர் படையை முறி­ய­டித்த பின்னர் பௌத்த மதத்தின் கொடியின் கீழ் நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்­திய மாவீ­ர­னாக இள­வ­ரசன் துட்­ட­கை­மு­னுவை வர­லாறு சித்­த­ரிக்­கின்­றது. அவன் தமி­ழர்­க­ளுடன் நட்­பு­றவைப் பேணு­வ­தற்கு முயற்­சித்த சந்­தர்ப்­பத்தில் ஒரு கீழ்­மட்ட படை­ய­தி­காரி துட்­ட­கை­மு­னு­வுக்கு எதி­ராக கலகம் செய்தான் எனக் கூறு­வது வர­லாற்று ரீதியில் பொருத்­த­மற்­றது…. நாட்­டையும், மக்­க­ளையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்த சோழர்­களின் அந்­நியப் படை­க­ளுக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட போர் மகா­வம்­சத்தில் ஒரு சிங்­கள – தமிழ் போராக குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.” ”அந்த ஆக்­கி­ர­மிப்­புக்குத் தலைமை தாங்­கிய சோழ மன்னன் கொல்­லப்­பட்டு, அவ­னு­டைய படை முறி­ய­டிக்­கப்­பட்ட பின்னர், இந்­நாட்டில் வாழ்ந்து வந்த சிங்­க­ள­வர்­க­ளுக்கும், திரா­வி­டர்­க­ளுக்­கு­மி­டையில் எத்­த­கைய பிரி­வி­னை­களும் நிலவி வர­வில்லை. இள­வ­ரசன் துட்­ட­கை­மு­னுவின் காலத்தில் இடம்­பெற்ற சோழ மன்­னனின் ஆக்­கி­ர­மிப்பின் போது சிங்­கள பௌத்­தர்­களும், தமிழ் பௌத்­தர்­களும் நசுக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்­தி­லேயே அந்தப் பிளவு தோன்­றி­யது. அந்­நிய இரா­ணுவம் முறி­ய­டிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் ‘தீர்த்து வைக்­கப்­பட வேண்­டிய சிங்­கள – தமிழ் பிரி­வி­னை­யொன்று‘ இருந்து வர­வில்லை.” 1950 களில் செல்­வ­நா­யகம் போன்­ற­வர்கள் முன்­வைத்த சமஷ்டிக் கோரிக்­கை­யையும், 1980 களில் எழுச்­சி­ய­டைந்த தமி­ழீழ கோரிக்­கை­யையும், அத­னுடன் இணைந்த விதத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்­டத்­தையும் இந்த மகா­வம்ச மனோ­பாவ கருத்­தி­யலை பரப்­புரை செய்­வ­தற்­கான ஒரு சிறந்த வாய்ப்­பாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள் சிங்­களத் தேசி­ய­வா­திகள். எனவே, ‘சுதந்­திர இலங்­கையின் எழு­பத்­தைந்து வருட கால வர­லாறு ‘கண்­ணீ­ராலும், இரத்­தத்­தி­னாலும் எழு­தப்­பட்­ட­மைக்கு‘ பொன்­னம்­ப­லத்தைப் பார்க்­கிலும், தர்­ம­பா­லவும், அவர் போஷித்து வளர்த்த (இன­வெ­றுப்பு) தேசி­ய­வா­தத்தை அதே விதத்தில் முன்­னெ­டுத்து வரும் (‘1956 இன் குழந்­தைகள்‘ என தம்மை அழைத்துக் கொள்ளும்) சிங்­கள தேசி­ய­வா­தி­க­ளுமே பொறுப்புக் கூற வேண்டும். சம­கால இலங்கை அர­சியல் சமூ­கத்தில் இந்த மனோ­பாவம் எந்­தெந்த வழி­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது என்­பதை எடுத்துக் காட்­டு­வ­தற்கு உதா­ர­ணங்­களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் மிக முக்­கி­ய­மா­னது அர­சியல் யாப்பில் பௌத்த மதத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் அதி­வி­சேட முக்­கி­யத்­துவம். அடுத்­தது, அரச கரும மொழிகள் தொடர்­பான அர­சியல் யாப்பின் பிரிவு 18 (1) மற்றும் 18 (2) என்­ப­வற்றில் தரப்­பட்­டி­ருக்கும் பின்­வரும் விநோ­த­மான வாக்­கி­யங்கள்: 18. (1) இலங்­கையின் அரச கரும மொழி சிங்­கள மொழி­யாதல் வேண்டும். (2) தமிழும் அர­ச­க­ரும மொழி­யாதல் வேண்டும். ஒரே வாக்­கி­யத்தில் இதனை சொல்ல முடி­யாமல் போனது ஏன்? இதன் பின்­ன­ணியில் செயற்­படும் நுட்­ப­மான உள­வியல் என்ன? ஓர் ஒப்­பீட்­டுக்­காக அரச கரும மொழிகள் தொடர்­பாக தென்­னா­பி­ரிக்க அர­சியல் யாப்பு என்ன கூறு­கி­றது என்­பதைப் பார்ப்போம். தென்­னா­பி­ரிக்க அர­சியல் யாப்பின் பிரிவு 6(1) ”குடி­ய­ரசின் அரச கரும மொழிகள் Sepedi, Sesotho, Setswana….” எனத் தொடங்கி பதி­னொரு மொழி­களை வரி­சைப்­ப­டுத்­து­கி­றது. ஆனால், பெருந்­தொ­கை­யான பழங்­குடி மொழி­களைக் கொண்ட அந்­நாட்டின் குடித்­தொ­கையில் ஆகக் கூடிய சத­வீ­தத்­தினர் (23%) பேசும் Isi Zulu என்ற மொழி அந்தப் பட்­டி­யலில் கடை­சியில் அதா­வது, பதி­னோ­ரா­வது ஸ்தானத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நாட்டு மக்­களில் 16 சத­வீ­தத்­தினர் பேசும் இரண்­டா­வது பெரும்­பான்மை மொழி­யான Isi Xhosa பத்­தா­வது இடத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இத்­த­கைய ஒரு நிலை­மையை இலங்­கையில் கற்­பனை செய்து கூட பார்க்க முடி­யுமா? தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­படும் பொழுது தோன்றும் எதிர்ப்­புக்­களும், ‘தமிழ் பௌத்­தர்கள் இருந்து வந்­துள்­ளார்கள்‘ என வர­லாற்று ஆதா­ரங்­க­ளுடன் கூறும் பொழுது தோன்றும் அதீத பதற்ற உணர்­வு­களும் இந்த வகையைச் சேர்ந்­தவை. ‘சிங்­கள பௌத்தம் என்ற கருத்­தாக்கம் கட்­ட­மைத்­தி­ருக்கும் தமிழ் விரோத உணர்வு கார­ண­மாக ‘தமிழ் பௌத்தம்‘ என்ற சொல்லே கடும் ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. 2015 ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் வெளி­யான போது விமல் வீர­வன்ச தெரி­வித்த கருத்து: ”பெரும்­பான்மை மக்­களில் சிறு தொகை­யி­னரும், சிறு­பான்மைச் சமூ­கங்­களைச் சேர்ந்­த­வர்கள் பெரும் எண்­ணிக்­கை­யிலும் வாக்­க­ளித்து ஒரு ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­தி­ருக்­கி­றார்கள்”. இலங்கைப் பிர­ஜை­க­ளான தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளுக்கு (சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளுக்கு இருக்கும் அதே­ய­ள­வி­லான) மதிப்பு இருந்து வர முடி­யாது என்­பதே அவர் இங்கு சொல்ல வரும் விடயம். ”கோல்பேஸ் அற­க­லய பூமியில் தாரா­ள­மாக பிரி­யா­ணியும், வட்­ட­லப்­பமும் பரி­மா­றப்­ப­டு­வதை நாங்கள் பார்த்தோம்” என்­கிறார் நளின் டி சில்வா. ”விதி­வி­லக்­கான விதத்தில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் பெண்­களும், மௌலவிமாரும் அங்கு திரண்­டி­ருந்­ததைப் பார்க்க முடிந்­தது” என்று எழு­து­கிறார் மற்­றொரு சிங்­கள தேசி­ய­வா­தி­யான சேன தோர­தெ­னிய. ”(சிங்­கள) அர­சுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்யும் உரிமை முஸ்­லிம்­க­ளுக்கு – குறிப்­பாக, சிறு­பான்மை சமூ­கத்­தி­ன­ருக்கு – இல்லை; அதனை ஏற்றுக் கொள்­ளவும் முடி­யாது” என்­பதே இத்­த­கைய கருத்­துக்­க­ளுக்கு ஊடாக இவர்கள் பூட­க­மாக முன்­வைக்க முயலும் நிலைப்­பாடு. ”சிங்­கத்தின் மக்கள்: சிங்­கள அடை­யாளம் மற்றும் வர­லாற்­றி­னதும், வர­லாற்­றி­ய­லி­னதும் கருத்­தியல்” (1979) மற்றும் ”இனப் போராட்டம் நிகழ்ந்து வரும் ஒரு கால கட்­டத்தில் வர­லாற்­றியல்: சம கால இலங்­கையில் கடந்த காலம் கட்­ட­மைக்­கப்­படும் விதம்” (1995) போன்ற விரி­வான ஆய்வுக் கட்­டு­ரை­களில் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் வர­லாற்­றுத்­துறை பேரா­சி­ரியர் லெஸ்லி குண­வர்­தன இந்த ‘மகா­வம்ச மனோ­பாவம்‘ தொடர்­பான சில கேள்­வி­களை எழுப்­பி­யுள்ளார். ” பன்­னி­ரண்டாம் நூற்­றாண்டில் எழு­தப்­பட்ட ‘தம்ம பிர­தீப்­பி­காவ‘ என்ற காவி­யத்­தி­லேயே முதன் முதலில் ”சிங்­கள இனம் என்ற சொல் காணப்­ப­டு­கி­றது” என அவர் முன்­வைத்த கருத்து கடும் சர்ச்­சை­களைக் கிளப்­பி­யது. ”சிங்­கத்தின் மக்கள்: சம­கால இலங்­கையில் சிங்­கள இனத்­துவ அடை­யாளம், கருத்­தியல் மற்றும் வர­லாற்றுத் திரி­பு­வாதம்” (1989) என்ற நீண்ட கட்­டு­ரையில் அதற்கு எதிர்­வி­னை­யாற்­றினார் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் சிங்­க­ளத்­துறை பேரா­சி­ரி­ய­ரான கே என் ஓ தர்­ம­தாச (ஆர்­வ­முள்­ள­வர்கள் இணை­யத்தில் தேடி, அந்த ஆங்­கிலக் கட்­டு­ரை­களை படிக்க முடியும்). பதி­னேழாம் மற்றும் பதி­னெட்டாம் நூற்­றாண்­டு­களில் எழு­தப்­பட்ட ‘கிரள சங்தேசய‘ மற்றும் ‘வடிக சட்டன‘ போன்ற சிங்கள காவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான வன்மம், கண்டி இராச்சியத்தில் அக்கால கட்டத்தில் நிலவி வந்த (சிங்கள – தமிழ் உறவுகள் தொடர்பான) முதன்மைக் கருத்தாக்கத்துக்கு நேர்மாறானது என்கிறார் லெஸ்லி குணவர்தன. ஆனால், அநகாரிக தர்மபாலவின் வாரிசுகளான குணதாச அமரசேகர, நளின் டி சில்வா, சேன தோரதெனிய மற்றும் வசந்த பண்டார போன்ற சமகால தேசியவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களையும், (ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர்) முஸ்லிம்களையும் சிங்களவர்களின் எதிரிகளாக கட்டமைக்க முயற்சித்து வருகின்றார்கள். சிங்கள சமூகத்தின் முதன்மைக் கருத்தியலாக அந்தச் சிந்தனைப் போக்கு நீடிக்கும் வரையில், உத்தேச புதிய அரசியல் யாப்பில் இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக (Secular Nation) பிரகடனம் செய்வது எப்படிப் போனாலும், சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபை அந்தஸ்தை பெற்றுக் கொள்வது கூட சாத்தியப்பட முடியாது. ஏனென்றால், அத்தகைய ஒரு சிறு நிர்வாக ஏற்பாட்டையும் கூட, ‘சிங்கள இனம் எதிர்கொள்ளும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக‘ சித்தரித்துக் காட்டி, அதற்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டும் காரியத்தை இன்றைய சூழலில் மிக எளிதில் மேற்கொள்ள முடியும். அந்தப் பின்புலத்தில், கரையோர அம்பாறை மாவட்டம் மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற அபிலாஷை மிக்க கோரிக்கைகள் தொடர்ந்தும் வெறும் கனவுகளாக மட்டுமே நீடிக்க முடியும்.– Vidivelli https://www.vidivelli.lk/article/16105
  8. தலையங்கம் வம்மனில் எடுக்கப்பட்டதுதான். செய்திகள் எல்லா தளங்களிம் வந்ததுத கேள்வி இப்படி ஒருசம்பவம் ஒரு ஊத்தை செய்தால் சிங்களவன் மடையனா?
  9. வருட இறுதி சில மணித்தியாலங்கள் ஒரு சந்தோசமான, எல்லவற்றையும் மறந்து ஒரு பெக் அடித்து, அடுத்த வீட்டு கொல்லைக்குள் வெடி போட்டு, இசைகச்சேரியில் ஆடி பாடி, கொஞ்சம் அடிபாடு, கொழுவுப்பட்டு புது வருடத்தை வரவேற்பது இலங்கயில் காலங் காலமாக நடப்பது. கனடா, ஆஸ்ரேலியவில் வெள்ளைகள், வாண வேடிக்கைகளுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்பார். போதைவஸ்து பாவித்திருந்தால் அவர்களை கவனித்து பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது என்ன தலிபான் கணக்கில் ஆடல் பாடல்களுக்கு தடை செய்வது?
  10. எல்லா இனத்திலும் இப்படி ஊத்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? பின்வரும் தலையங்ககளை பாருங்கள் இவையெல்லம் தமிழர் பிரதேசங்களில் நடந்தவைகள் அல்லவா? அப்ப தமிழர்கள் இன்னும் நாகரீகம் அடையாதா முட்டாள்களா? கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது! சுவிஸ் சித்தியும் தாயும் ஏசியதால் யாழில் மாணவி தற்கொலை முயற்சி!! ஓ.எல் பெறுபேற்றில் விஞ்ஞான பாடத்தில் சாதாரண சித்தியாம்!! யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!! லண்டன் தமிழன் வாகீசனை புலி என பொலிசாரிடம் மாட்டிவிட்ட மனைவி தர்சிகா!! பரபரப்பு தகவல்!! யாழில் மாணவிகள் ஆண்களுடன் சாப்பிட்டு படுத்து எழும்ப மணித்தியாலத்திற்கு வாடகை!! விதானை,அரச ஊழியர்களின் பாலியல் வீடியோக்கள்!! ஆண் உறுப்பை பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன? யாழில் பட்டப்பகலில் ஆவா குழுக் காவாலிகள் சினிமாப் பாணியில் மோதல்!! மக்கள் சிதறி ஓட்டம்!! இப்படி நான் கேட்பதனால் சிங்கள‌? ஆதரவாளன் அல்ல?
  11. 45 வயதிற்கு மேல் நிச்சயமாக செய்து கொள்ள வேண்டும். கடந்த எனக்கு தெரிந்த ஒருவர் (49 வயது) 3 மாதங்களுக்கு முன் இறந்த் போனார். இவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர். சாதரண நெஞ்செரிச்சல் என்று கவனிக்காமல் இருந்தார்.
  12. நன்றி நன்னி அவர்களே. உங்களுக்கும் சேர்த்துதான் இந்த கேள்வி அனால் எழுதும்போது விடுபட்டுவிட்டது. குறிப்பு நான் இவ்வளவு காலமும் நினைத்தேன். நீங்கள் ஆண் என்று, இன்று தான் பர்த்தேன் நீங்கள் உங்கள் ப்ரொபைலில் பெண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
  13. இந்த திரியில் கருத்தெழுத நான் தகுதியற்றவன் ஆனால் மனதில் பட்டதை எழுதுகின்றேன். இறந்து போன துவாராகவை மீண்டும் அவர் உயிரோடு எழுந்து வந்து மக்கள் மத்தியில் வாழுகின்றார் என்று கூறி அதன் மூலம் தாங்கள் வியாபாரத்தை நடத்த முயல்வது கடைந்தெடுத்த அயோக்கியதனம். இது இறந்த ஆன்மாக்களை நினவு கூறும் இந்த நவம்பர் மாதத்தில் இப்படிபட்ட‌ ஈனசெயல் மிகவும் அருவருக்கத்தக்கது. நிழலி அவர்களின் இந்த கருத்துடன் நான் ஒத்துபபோகின்றேன். இது எனக்கும் பொருந்தும் இங்கு என் மனம் இன்னும் நம்ம மறுப்பது, பொட்டு அம்மான் இறந்து போனதைதான், ஒரு வசீகரமான முகவெட்டுடைய திரைப்பட கதாநாயன் போன்ற‌ இவர் எங்கோ இன்னும் இருக்கின்றார் என்றே என் மனம் சொல்கின்றது. இவருடய சடலம் இன்னும் கிடைக்கவில்லை. டீ என் ஏ அறிக்கையும் இல்லை. ஒரு சாதாரண வியாபாரியே பிளான் ‍ஏ இல்லா விட்டால் பிளான் பீ வைத்திருப்பார். இவ்வளவு திறமை வாய்ந்த இவர் கடைசி நேரத்தில் ஒரு எக்ஸிட் ப்ளான் வைத்திருந்திருப்பர் என்பது, இவர் திறமை மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கைதான். மாவீரர் என்பவர் யார்? வரைவிலக்கனம் என்ன? இவர்கள் புலிகளின் அமைப்பில் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்கள் மட்டுமா? அல்லது வேறு சகோதர இயக்கங்களிலும் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களும் உள்ளடங்குவார்களா?
  14. மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஜனாதிபதி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களே! கிழக்கு ஆளுனர் நியமனம். கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள்.கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதும்,முஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் ,சிங்களவராக இருந்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடாத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையிலும் ஏற்படுத்தியுள்ளது இதுவரையிலும் கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளே மிகச் சிறப்பாக தமது கடமைகளை செய்துள்ளது மக்களிடையே பதிவாகியுள்ளது,இராணுவ அதிகாரிகள் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் எந்த இனமும் நிர்வாக ரீதியாக பாதிக்கப் பட்டதாக எந்த பதிவுகளையும் காண முடியவில்லை ஆகவே மேதகு ஜனாதிபதி அவர்களே! எதிர்காலத்தில் கிழக்குக்கு நியமிக்கப்படவிருக்கும் ஆளுனரை மூன்று இனங்களும் விரும்பும்,மூன்று இனங்களையும் பாதிக்காத வகையில் நிர்வாகம் செய்யும் இராணுவ அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்களை நியமித்து கிழக்கின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறோம். ஜெ.எல்.எம். ஷாஜஹான் பணிப்பாளர் https://www.madawalaenews.com/2023/11/s.html
  15. நிச்சயமாக அல்ல. இப்படி நீங்களே நினைத்து மற்றவர்களையும் தவறாக வழிந‌டத்தாதீர்கள்.
  16. உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழிநின்று தன்னிகரற்றபோர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் உலகம் இதுவரை கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு கூடிய பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதைக் கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள். அத்தகைய மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது. ‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல; அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். ஏகாதிபத்திய காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் பொருத்தி எதிர்கால இலட்சிய பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை நினைத்துப் போற்றி வணங்குகிற பொன்னாள். அத்தகைய புனிதத் திருநாளை தமிழர்கள் பெருமளவில் வாழும் தாய் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு மாவீரர் நாளானது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் (ஜி கார்னர் திடல், டி. வி. எஸ். சுங்கச்சாவடி அருகில்) நாம் தமிழர் கட்சியால் பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அப்பெருநிகழ்விற்கான ஏற்பாட்டிற்குப் பொருளாதார நெருக்கடி என்பது மிகப்பெரிய பெருந்தடையாக உள்ளது. எனவே நிகழ்வு ஏற்பாட்டிற்கான நிதி பற்றாக்குறையைப் போக்க மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.toptamilnews.com/thamizhagam/maaveerar-day-naam-tamilar-katchi-seeman-statement/cid12778733.htm
  17. எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வரலாற்றை நோக்கும் அவதானிகள். 1985 ஏப்ரலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதலிற்கும், 1987 ஓகஸ்டில் இந்திய இராணுவ வருகைக்கும் இடைப்பட்ட அந்தக் கனாக் காலத்தின் கதாநாயகன் கிட்டர், கிட்டண்ணா அல்லது கிட்டு மாமா தான். கேணல் கிட்டு ஒரு ஆளுமை என்றால் அவரைச் சூழு இருந்த அவரது அணியிலும் ஆளுமைகள் மிகுதியாகவே இருந்தார்கள். ரஹீம், ஜொனி, திலீபன், ஊத்தை ரவி, வாசு, கேடில்ஸ், சூசை என்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நிஜ வாழ்க்கை நாயகர்களின் நாமமாகவே இருந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் குரங்கோடு, கிட்டர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவார். கிட்டரின் குரங்கிற்கு பெயர் Bell. அந்தக் காலத்தில் இலங்கை விமானப்படை பாவித்த Bell ரக உலங்குவார்த்திகளின் பெயரையே கிட்டு தனது குரங்கிற்கும் வைத்திருந்தாராம். கட்டையான ஆள், தலையில் மொட்டை வேறு, ஆனால் அவர் தான் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்று சொன்னால் நம்பியே ஆகவேண்டும். ஆனையிறவு, பலாலி, கோட்டை, நாவற்குழி, பலாலி, காரைநகர், பருத்தித்துறை, என்று யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை இரண்டு வருடங்களிற்கு மேலாக முடக்கி வைத்து, யாழ்ப்பாணத்தை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, கிட்டுவின் காலத்தில் தான். கிட்டுவின் காலத்தில் தான், முதன்முறையாக சண்டையில் உயிரிழந்த இராணுவத்தின் உடலங்களை புலிகள் இராணுவத்திடம் நேரடியாக கையளித்தார்கள். தனியொருவராக ரஹீம் அந்த உடலங்களை லெப் கேணல் ஆனந்த வீரசேகரவிடமும் கப்டன் ஜெயந்த கொத்தலாவிடமும் சென்று கையளித்த கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கும். லெப் கேணல் ஆனந்த வீரசேகர, இராணுவத்தில் இருந்து விலகி பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டு விட்டார். அவரின் தம்பி தான் ஜெனிவாக்கு போய் இனவாதம் கக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. தற்போதைய ஆட்சியில் சரத் வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பாராளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அடிக்கடி மோதுபவர். விக்டர் விழுதான மன்னார் சண்டையில் சிறை பிடித்த சிப்பாய்களை வைத்து, முதன் முதலில் கைதிகள் பரிமாற்றம் நடந்ததும் கிட்டரின் காலத்தில் தான். அதுவும் மட்டக்களப்பு தளபதியாக இருந்து, இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் பிடிபட்டு, வேறு பெயரில் இலங்கைச் சிறையில் இருந்த அருணாவை, இலங்கை அரசை சாதுரியமாக ஏமாற்றி, கைதிகள் பரிமாற்றத்தில் மீட்டெடுத்த கதைகள் எல்லாம் கனாக் காலக் கதைகள் தான். அது ஒரு காலமடாப்பா... என்று அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அங்கலாய்த்து ஏங்கும் காலங்கள் அவை.. அது ஒரு கனாக்காலம்! Posted 24th November 2020 by Jude Prakash Labels: நினைவுகள் வரலாறு https://kanavuninaivu.blogspot.com/
  18. ஆண்டாண்டு காலமாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டு, ஆக்கிரமிப்பாளர்களால் ஆண்டுக்காண்டு அடித்துத் துரத்தும் போது ஓடி ஒளிந்து கொண்டிருந்த மென்மையான சுபாவம் கொண்ட இனத்திற்குள், வீரத்தையும் ஓர்மத்தையும் விதைத்து, அடித்த எதிரியை திரும்ப அடித்து ஓட ஓட விரட்டிய வரலாற்றைப் படைத்த வரலாற்று நாயகன் தான் எங்கள் தலைவர். ஓரு குட்டித் தீவில், அதியுச்ச சுயநலமிக்க, ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிறுபான்மை இனத்திற்காக, அந்த இனத்தின் ஆட்பலத்தையும் வளங்களையும் வைத்தே, எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமின்றி, முப்படைகளையும் உருவாக்கி, சர்வதேச ஆதரவுடன் போரிட்ட ஒரு அரசாங்கத்தை தோல்வியின் விளிம்புவரை கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த இராணுவ வித்தகன் தான் எங்கள் தலைவர். தன்னலம் துறந்து, இனத்திற்காகச் சகல விதமான அர்ப்பணிப்புகளையும் புரிந்து, தளராத கொள்கையுடன் இறுதிவரை போராடிய ஒரு யுக புருஷன் தான் எங்கள் தலைவர். அந்த யுக புருஷன் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வதா, இல்லை அந்த யுக புருஷன் காலத்திலும் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்காமல் போய் விட்டதே என்று ஏங்கித் தவிப்பதா? “விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ் வீடுகள் யாவிலும் மலரனான் படுகளம் மீதிலொரு புலியானான் பிரபாகரன் எங்கள் உயிரானான் பொங்கிடும் கடற்கரையோரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே தங்கத் தமிழீழ மண்ணில் எங்கள் தலைவன் பிறந்தான்” Posted 26th November 2020 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/
  19. யாழ்ப்பாணத்தில் யுவதிகள் குளிக்கும் போது இரகசியமாக படம் பிடித்த மன்மதராசாவை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நூதனமக வலைவிரித்து பிடித்துள்ளனர். கைதான மன்மதராசா, மொடல் அழகனாக பணிபுரிபவர். கடந்த வாரமளவில், யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றிற்குள் இரகசியமாக நுழைந்த இளைஞன், குளியலறைக்குள் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்த போது, கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார். குளியலறை துவாரமொன்றின் ஊடாக கையடக்க தொலைபேசி ஒன்று தென்பட்டதையடுத்து யுவதி கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த இளைஞன் தப்பியோடி விட்டார். இது தொடர்பில் பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் ஒருமுறை அந்த வீட்டுக்குள் இளைஞன் இரகசியமாக நுழைந்துள்ளார். யுவதி மீளவும் அந்த இளைஞனை கண்டு சத்தமிட, தப்பியோடி விட்டார். யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர். இதன் போது, கொக்குவில், பூநாரிமடத்தடியை சேர்ந்த இளைஞன் ஒருவரே, தொடர்புடைய மன்மதராசா என்பதை கண்டறிந்தனர். குறிப்பிட்ட இளைஞன், யாழ்ப்பாணத்திலுள்ள சில ஆடை விற்பனை நிலையங்களின் விளம்பரங்களில் ஆண் மொடலாக நடித்துள்ளார். ஆயினும், அவர் தற்போது தங்கியுள்ள இடத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. இதையடுத்து, பொலிசார் நூதனமாக வலைவிரித்துள்ளனர். பிறிதெரு தொலைபேசி இலக்கத்தின் வழியாக இளைஞனை தொடர்பு கொண்டு, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுள்ளனர். முன்னணி நடிகையொருவரும் அதில் நடிப்பார் எனவும், அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென குறிப்பிட்டனர். இளைஞனும் அதற்கு சம்மதித்தார். இந்த உரையாடலின் போது, மருதனார்மடத்திலுள்ள உணவகம் ஒன்றில் தற்போது பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இளைஞனின் ஆடை அளவை பெறுவதற்காக சந்திக்க வேண்டுமென பொலிசார் தெரிவிக்க, தானே நேரில் வருவதாக இளைஞன் தெரிவித்துள்ளார். இதன்படி, சுன்னாகத்திலுள்ள குறிப்பிட்ட இடமொன்றுக்கு வருமாறு பொலிசார் தெரிவித்தனர். இளைஞன் ஆர்வம் மிகுதியில் சுன்னாகத்துக்கு சென்ற போது, அங்கு சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது, சமூக வலைத்தளங்கள் வழியாக பல யுவதிகளுடன் அவர் தொடர்பிலிருந்தது தெரிய வந்தது. குறிப்பிட்ட இளைஞனுக்கு எதிராக யுவதி முறைப்பாடும் பதிவு செய்துள்ளார். இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியை பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. இதேவேளை, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, குறிப்பிட்ட யுவதியை தான் காதலிப்பதாக இளைஞன் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பொலிசாரின் விசாரணையில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றத்தின் பாரதூரதன்மையிலிருந்து தப்பிக்க இளைஞன் அப்படியொரு கதையை சோடிக்க முற்படுகிறாரா என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். கைதான மன்மதராசாவை அதற்கு முன்னர் கண்டிருக்கவேயில்லையென பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்துள்ளார். அத்துடன், தேவைப்படின் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உண்மையை வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக பொலிசாரிடம் தெரிவித்தார். பல்வேறு விதமாக இளம் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிக்காக போராட தயாராக இருப்பதில்லை. எனினும், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதியின் முன்மாதிரியான துணிச்சலை பொலிசாரும் பாராட்டினர் https://vampan.net/50650/
  20. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது ராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்கு பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார். "உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது கோத்தாவின் அமைச்சராக இருந்து கொண்டு இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை. அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கேப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார். கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்து கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே புலிகள் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் அறிவிக்கின்றார். அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்க இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள். தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள். ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்… பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன. இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்க தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள். சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தை சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் அணிகளோ அமைதி காக்கிறார்கள். புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார். கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது. கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்கை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள். மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தில் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை. ட்ரக்கை reverseல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கூறப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் டர்க்கை புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம். ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாலவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார். ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமை சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்களை போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க, பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முனவந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பை சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார். பின்னர் இராணுவத் தளபதிகளுடனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வர, ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில், முதல் நாளிரவு அமைதியாக நடந்தேறிய வரலாற்று சம்பவத்தை பற்றிய செய்தி பின்வரும் தலையங்கத்தில் பதிவாகியது. “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” Posted 5th December 2021 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/2022/01/blog-post_10.html
  21. முள்ளியவளையில் தனது முச்சக்கரவண்டியில் ‘மாவீரன்’ என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். ‘மாவீரன்’ என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பெயர். ஆகவே குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகிறார். அவரைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்யவேண்டும், எனக் கூறியே பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் சட்டத்தரணிகளின் விரைவு நடவடிக்கையினால் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டார். உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள் குறித்த இந்த சம்பவமானது, மாவீரரை தமிழர்கள் மறந்தாலும், தமிழர்கள் மீது வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துக்கொண்டிருக்கும் பேரினவாத சிறீலங்கா அரசும், அதன் படைக்கட்டமைப்பும் மறக்காது என்பதையே சொல்லி நிற்கிறது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வளவு தடைகள், அச்சுறுத்தல்கள், கைதுகள், விசாரணைகளுக்குப் பின்பும் ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் தமிழ் மக்கள் சுயமாகத் திரள்வதற்கு இதுவேதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://meiveli.com/2023/11/22/மாவீரன்-என-எழுதப்பட்ட-பெ/
  22. U K க்கு போய் ஆங்கிலத்தில் படித்து தானெ பெரிய சோலிசிட்டர் எல்லாம் உருவாகியுள்ளார்கள். ஏன் தமிழில் ப்டிக்க வேண்டும்?
  23. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை என்று சோமாலியா என்ற நிலையில் தான் இருந்திருக்கும். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் இருந்திருக்காது. ஆகவே நன்றி கெட்டத்தனமாக இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. என்றார் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார். https://www.madawalaenews.com/2023/11/i_183.html
  24. என் வாழ்த்துக்களை இந்த பாடல் மூலம் சு வி ஐயாவுக்கு சம்ர்பிகின்றேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.