Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2973
 • Joined

 • Last visited

Everything posted by colomban

 1. ஹஸ்பர்_ சிங்களம், தமிழ் மொழி பாட கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் ஒருங்கிணைப்புடன் சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் மூலமாக ஏற்பாடு செய்த 90 மணித்தியாலய சிங்கள மற்றும் தமிழ் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கே இச் சான்றிதழ் திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (22) இடம் பெற்றது. "நல்லிணக்கத்திற்கான மொழி" எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இப்பாடநெறியானது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் மொழி சிங்களத்தை மேம்படுத்தும் நோக்கிலும் அரச ஊழியர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,சர்வமத தலைவர்கள் ஆகியோர்களுக்காக நடாத்தப்பட்ட இப்பாடநெறியானது திருகோணமலை,அக்குறனை,பேருவளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்காக தமிழ் சிங்கள ஆகிய மொழியில் நடாத்தப்பட்டது. இப்பாடநெறிகளை முழுமையாக பூர்த்தி செய்த 53 நபர்களுக்கு இதன் போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை நகர சபை முன்றலில் இருந்து பிரதான வீதி ஊடாக சமாதான நடை பவணியும் இடம் பெற்றது. சிங்களம் தமிழ் போன்ற மொழிகள் அரச கரும மொழிகளாக காணப்படுகிறது இவ்வாறான மொழிகளை ஒருவருக்கொருவர் சிங்கள தமிழ் சகோதரர்கள் கற்றிருப்பது அவசியமாக கருதப்படுவதுடன் அரச சேவைக்கு இவ்வாறான மொழிகளை கற்றிருப்பதும் சேவைகள் வழங்குவதில் சிரமங்கள் இன்றி திறம்பட செயற்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கற்கை நெறியானது தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற் திட்டம் ஊடாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் குறித்த நிகழ்வுக்கு இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜோ வில்லியம்,நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா,உதவி முகாமையாளர் என்.விஜயகாந்தன் மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்யப் பிரியா ,சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஆசிக்,சர்வமத தலைவர்கள், பாடநெறி பங்குபற்றுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர். Hasfar A Haleem BSW (Hons) Journalist https://www.madawalaenews.com/2022/01/blog-post_305.html
 2. அருண், பாடசாலை முடிந்து அம்மாவின் முந்தனையை பிடித்துகொண்டு நீங்கள் சிறுவனாக இருந்தபோது கொட்டாஞேனை மட்டக்குளி பஸ்ஸில் பயணித்த காலம் நினைவில் வந்து போகின்றது. சிங்களவன் கூட இவ்வளவு துவேசமாக இருக்க மாட்டான்.
 3. இவரை பலர் ஏசுகின்றார்கள் இவருக்கு உறவினரான மகேஸ்வரி என்னும் பெண்னையும் கொலை செய்தார்கள் தானே "ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்" - சையட் பஷீர் சையட் பஷீர் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையம் (லண்டன்) ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம் மகேஸ்வரியை எனக்குத் தெரியாது .ஆனால் வழக்கறிஞர் என்ற முறையில் அவர் மனித உரிமைகளுக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களும் வேலைப்பாடுகளும் எனக்குத் தெரியும். அவரின் சேவையைப் பாராட்டி புலிகளின் ஊடகமான லண்டனைச் சேர்ந்த ஐபீசீ வானொலி மகேஸ்வரியைப் புகழ்ந்து பேட்டி எடுத்தது. அப்போது புலிகளுக்கு மகேஸ்வரி எதிரியாகத் தெரியவில்லை . மகேஸ்வரி ஈ பீ டி பியுடன் இணைந்து மக்களுக்கு வேலை செய்யத் தொடங்கியதும் எதிரியாக்கி கொலை செய்து விட்டார்கள். புலிகளால் தமிழர் மட்டுமல்லாமல் முஸ்லிம் சிங்கள மக்களும் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.சமூக நலவாதியான ஒரு பெண் என்பதால் மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.இவரும் புலிகளாற் கொலை செய்யப்பட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாதிரிப் புலிகளுக்கு ஒரு சவாலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இன்று புலிகளாற் தொடக்கிவைக்கப்பட்ட" துரோகி" என்ற வார்த்தை சிங்கள. முஸ்லிம், அரசியல்வாதிகளாலும் பாவிக்கப்படுகிறது..ஒருத்தரை அழித்தொழிக்க முதல் "துரோகி" என்ற பதம் பாவிக்கப்படுகிறது. கொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாத அளவு தமிழ்த் தலைவர்களின் நிலை இருக்கிறது. ஒரு தடவை டக்லஸ் தேவானந்தாவைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்த காலகட்டத்தில் லண்டனுக்கு வந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஏன் நீங்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நான் கேட்ட போது எங்கள் தலைவர் சம்பந்தர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்தபின் அதுபற்றி யோசிப்போம் என்றார். இந்த நிலையில்தான் இன்றைய தலைமைகள் இருக்கின்றன. சிலரால் சில மரணங்களுக்கு அஞ்சலி நடத்தப்படும் அதே நேரம் அதே மரணங்கள் சிலரால் கொண்டாடப்படும் நிலையும் இருக்கிறது. கொலையையும் மரனத்தையும் கொண்டாடும் கூட்டமாக சமுதாயம் பின்னடைந்து போய்விட்டது. சமூகம் மரணங்களைத் தடுக்க முடியவில்லை தைரியமாக வந்து புலிகளின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்காத வரைக்கும் இவை தொடரும் எதிர்வரும் சில தினங்களில் லண்டனுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் புலிகளும் முற்போக்குவாதிகள் என்று சொல்வோரும் முன் வருகிறார்கள் .இலங்கையில் குழந்தைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொலை செய்யும் புலிகள் பேச்சுவார்த்தை என்று வெளிநாட்டுக்கு வந்த காலகட்டத்தில் புலிகளுக்கு எதிராக யாரும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை , நன்றி : மகேஸ்வரி வேலாயுதத்தை புலிகள் கொலை செய்ததையிட்டு தேசம் சஞ்சிகை இலண்டனில் நடத்திய கண்டனக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி தேசம் 2008 http://www.bazeerlanka.com/2013/02/blog-post_4.html?m=1
 4. கலா­நிதி அமீ­ரலி, மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம், மேற்கு அவுஸ்திரேலியா இலங்­கை­யி­லுள்ள எந்­த­வொரு முஸ்லிம் தலை­வ­னுக்கோ கட்­சிக்கோ இக்­கட்­டு­ரை­யாளர் ஆத­ர­வா­ள­ரல்ல என்­பதை ஆரம்­பத்­தி­லேயே கோடிட்டுக் காட்­டி­யபின் இதில் சமர்ப்பிக்­கப்­படும் கருத்­துகள் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­தை­மட்டும் கரு­வா­கக்­கொண்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஏற்­பதும் தவிர்ப்­பதும் வாச­கரின் உரிமை. பௌத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தின் நீண்­ட­கால நோக்­கத்தை தமி­ழினம் புரிந்­து­வைத்­துள்ள அள­வுக்கு முஸ்­லிம்கள் புரிந்­துள்­ளார்­களா என்­பது சந்­தேகம். பௌத்த சிங்­கள பேரி­ன­வா­திகள் என்று குறிப்­பி­டும்­போது அது சாதா­ரண சிங்­கள மக்­க­ளையோ பௌத்த மக்­க­ளையோ குறிப்­பி­ட­வில்லை. உல­கத்­திலே எங்­கே­யா­வது உளம்­தி­றந்த சிநே­கி­தத்­துடன் சகோ­தரர்போல் உற­வா­டு­வ­தற்கு சிங்­கள பௌத்தர்களைப்­போன்ற இன்னோர் இனம் உண்டா என்­பது சந்­தேகம். அந்த அப்­பாவி இனத்தின் மத்­தி­யி­லேதான் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சிறப்­புடன் வாழ்ந்­துள்­ளனர் என்­பதை நன்­றி­யுடன் இங்கே பதி­வு­செய்ய வேண்டும். ஆனால் அவர்களை மந்­தை­க­ளாகப் பாவித்து கட்­டுக்­க­தை­க­ளையும் புரா­ணக்­க­தை­க­ளையும் வர­லா­றென்று கூறிக்­கொண்டு இந்த நாட்டைத் தனிச்­சிங்­கள பௌத்த நாடாக மாற்றி சிறு­பான்மை இனங்­க­ளை­யெல்லாம் குற்­றேவல் புரியும் அடி­மை­க­ளாக்கும் நோக்கில் ஆட்­சி­செய்யத் துடிக்கும் கூட்­ட­மொன்­றையே சிங்­கள பௌத்த பேரி­ன­வா­திகள் என்று இங்கே அழைக்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பேரி­ன­வாதம் இன்­றைய ராஜ­பக்ச ஆட்­சியில் இம­யத்தைத் தொட்டு நிற்­கி­றது. பேரி­ன­வா­தத்தின் நீண்­ட­கா­லத்­திட்டம் 1948ல் இந்­தியத் தமி­ழரின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஆரம்­ப­மாகி படிப்­ப­டி­யாக வளர்ந்துள்­ளது. இந்தத் திட்­டத்தின் பேரா­பத்தை முதன்­மு­தலில் உணர்ந்தவர்கள் தமிழ் தலைவர்களே. அதற்­கெ­தி­ரான அவர்களின் போராட்டம் சமஷ்டி அர­சியல், தமிழ் மொழி, தமி­ழீழம், என்­ற­வாறு பல வடி­வங்­களைப் பெற்று அவற்றால் எண்­ணற்ற உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து இன்னும் தொடர்கிறது. இவர்களு­டைய போராட்­டத்தின் தத்­து­வத்­தை விளங்­கு­கின்ற திறமை முஸ்லிம் தலைவர்களி­டையே இன்­னுந்தான் வள­ர­வில்லை என்­பதை வருத்­தத்­துடன் இங்கே குறிப்­பிட விரும்­பு­கிறேன். அர­சி­ய­லையே ஒரு வியா­பா­ர­மாகக் கருதிச் செயற்­பட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு இனப்­பற்று, மொழிப்­பற்று, தேசப்­பற்று என்­ப­வையும் வெறும் கடைச்­ச­ரக்­காகத் தோன்­றி­யதில் வியப்­பில்லை. இவ்­வாறு கூறு­வ­தன்­மூலம் தமிழ் தலைவர்கள் தவ­றி­ழைக்­க­வில்லை என்­பது கருத்­தல்ல. முஸ்லிம் தலைவர்கள் ஏன் தமி­ழரின் போராட்­டங்­களிற் கலந்­து­கொள்­ளாது வேடிக்கை பார்க்­கின்­றனர் என்­பதை புரிந்­து­கொண்டு முஸ்லிம் மக்­க­ளுக்கு எவ்­வாறு உண்­மையை உணர்த்தி அவர்களையும் தமது பக்கம் இழுப்­ப­தற்­கான முயற்­சிகள் தமிழ் தலைவர்களால் இத­ய­சுத்­தி­யுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மேடை­க­ளிலே தமிழ் பேசும் மக்­க­ளென்ற கூட்­டுக்குள் முஸ்­லிம்­களை அடக்­கிக்­கொண்டு மேடை­யை­விட்டு இறங்­கி­யபின் தமிழர்கள் என்று பேசிய தலை­மை­களால் எவ்­வாறு இரண்டு இனங்­க­ளையும் இணைக்க முடியும்? ஒரு சந்தர்ப்பத்தில் அன்­றைய தமிழ் தலைவர் எஸ். ஜே. வி. செல்­வ­நா­யகம் அவர்கள் “முஸ்­லிம்­களை அவர்கள்பால் விட்­டு­வி­டுங்­கள்”, என்று சொன்­னமை என் ஞாப­கத்­துக்கு வரு­கின்­றது. இதைப்­பற்றி இங்கே விப­ரிக்க விரும்­ப­வில்லை. அது கட்­டு­ரையை வேறு திசைக்குத் திருப்­பி­விடும். எத்­த­னையோ இழப்­பு­களைச் சந்­தித்­த­பின்னர் இறு­தி­யாக இந்­தி­யாவின் அழுத்­தத்தால் 1987இல் நிறை­வேற்­றப்­பட்ட மாகா­ண­சபை நிர்­வா­கத்தை அமு­லாக்க வேண்டும் என்ற அடிப்­படையில் அப்­போது நிறை­வேற்­றப்­பட்ட 13ஆம் திருத்­தத்துக்கு உயிர்­கொ­டுக்கத் தமிழ் தலை­மைகள் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றன. அதை மோடி அரசும் வலி­யு­றுத்­து­கின்­றது. ஆனால் அந்தத் திருத்­தத்தை முற்­றாகக் குழி­தோண்டிப் புதைக்க ஜனா­தி­பதி தலை­மையில் பேரி­ன­வா­திகள் திட­சங்­கற்பம் பூண்­டுள்­ளனர். தமிழ் கூட்­ட­ணியின் தலை­மையில் இலங்கை முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வ­ருடன் சேர்ந்து மலை­யகத் தமி­ழரின் தலை­வ­ரையும் இணைத்து இத்­தி­ருத்தம் சம்­பந்­த­மாக ஓர் உடன்­பாட்­டுக்கு வந்து இந்­திய அர­சுக்கு ஓர் ஆவ­ணத்தைச் சமர்ப்பிக்க முடி­வெ­டுத்­தனர். இந்தத் திருத்­தத்தின் ஒரு முக்­கிய அம்சம் கிழக்­கையும் வடக்­கையும் இணைத்த ஒரு மாகாண சபையை உரு­வாக்­கு­தலே. இதற்­கெ­தி­ராக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலர் போர்க்­கொடி தூக்­கி­யதால் தமது தலை­மைக்கு ஏற்­ப­டப்­போகும் ஆபத்தை உணர்ந்த முஸ்லிம் தலைவர் தயக்­க­முறத் தொடங்­கினார். இப்­போது வெளியில் இருந்­து­கொண்டு ஆத­ரவு வழங்­கு­வ­தாக ஒரு செய்தி கூறு­கி­றது. இது ஒரு பம்­மாத்து. எனினும் அவர் இணங்­கி­னாலும் இணங்­கா­விட்­டாலும் தமிழ் தலைவர்கள் தமது முடிவை மாற்­று­வ­தாக இல்லை. இந்தச் சூழலில் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபையா தனித்­த­னியே இரு மாகாண சபை­களா என்ற சர்ச்சை மீண்டும் முஸ்­லிம்­க­ளி­டையே தலை­தூக்கி உள்­ளது. இதற்­கு­ரிய விடையை பேரி­ன­வா­தத்தின் எதிர்­காலச் சுனா­மி­யையும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் வியா­பார அர­சி­ய­லையும் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­தையும் தொடர்புறுத்­தாமல் விளங்­கு­வது கடினம். பேரி­ன­வாத்தின் ஒரே இலட்­சியம் கிழக்­கையும் வடக்­கையும் ஏனைய மாகா­ணங்­க­ளைப்­போன்று சிங்­களப் பெரும்­பான்­மை­யாக்­கு­வதே. பேரி­ன­வா­தி­களைப் பொறுத்­த­வரை கிழக்­கையும் வடக்­கையும் சிங்­கள மாகா­ணங்­க­ளாக மாற்­றாமல் இலங்­கையை ஒரு பௌத்த நாடு என்று கூறு­வதில் அர்த்­த­மில்லை. வவு­னியா, திரு­கோ­ண­மலை, கந்­தளாய், அம்­பாறை ஆகி­ய­ப­கு­திகள் அவ்­வாறு மாற்­றப்­பட்­டு­விட்­டன அல்­லது விரை­வாக மாறிக்­கொண்டு வரு­கின்­றன. இப்­பொ­ழுது முல்­லைத்­தீவு மாவட்­டமும் அவர்களின் குறியில் விழுந்­துள்­ளது. இரா­ணு­வத்தின் பாது­காப்­பு­டனும் கடும்­போக்கு பிக்­கு­களின் ஆசீர்­வா­தத்­து­டனும் சிங்­கள அத்­து­மீ­றல்கள் துரி­த­மாக நிறை­வே­று­கின்­றன. ராஜ­பக்ச அரசு இதற்குப் பூரண ஆத­ரவு. இதனை முஸ்­லிம்கள் முதலில் விளங்க வேண்டும். எனவே வரை­ய­றுக்­கப்­பட்ட சட்­ட­திட்­டங்­க­ளு­டனும் இன விகி­தா­சார அடிப்­ப­டையில் வளங்­களின் பங்­கீட்டு அதி­கா­ரத்­து­டனும் உரு­வாக்­கப்­படும் கிழக்கும் வடக்கும் இணைந்த ஒரு மாகாண சபை இவ்­வா­றான அத்­து­மீ­றல்­க­ளையும் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளையும் மட்­டுப்­ப­டுத்த முடியும். இத­னா­லேதான் 13ஆம் திருத்­தத்தை நீக்­கு­வ­தற்கு அரசு முயல்­கின்­றது. இதற்கு ஒரு வழி தமிழர்களையும் முஸ்­லிம்­க­ளையும் பிரித்து வைப்­பதே. அந்தச் சதிக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ராக உள்­ளது வியா­பார அர­சியல் நடத்தும் ஒரு முஸ்லிம் தலை­மைத்­துவம். அந்தத் தலை­மையைக் கொண்டே முஸ்­லிம்­களின் எதிர்­கால வளர்ச்சியை சித­ற­டிக்க பேரி­ன­வாதம் திட்­ட­மி­டு­கின்­றதை முஸ்­லிம்கள் உணர்வார்­கள? தமிழர்களுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே வளர்ந்துள்ள அர­சியல் ரீதி­யான வேற்­று­மைக்கு சுமார் ஒன்­றரை நூற்­றாண்டு வய­துண்டு. அத­னையும் இங்கே விப­ரிக்கத் தேவை­யில்லை. ஆனால் 1980கள் தொடக்கம் விடு­தலைப் புலி­களும் மற்­றைய தமிழ் போராட்டக் குழுக்­களும் இந்­திய அமை­திப்­ப­டையும் இலங்கை இரா­ணு­வமும் நடத்­திய திரு­வி­ளை­யா­டல்­களால் தமிழ் முஸ்லிம் பிளவு மிகவும் விரி­வ­டை­ய­லா­யிற்று. காத்­தான்­குடி, ஏறாவூர் படு­கொ­லைகள், யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் வெளி­யேற்றம் ஆகி­ய­ன­வெல்லாம் முஸ்­லிம்­களால் மறக்­க­மு­டி­யாத துயர்கள் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அதே­போன்று பழிக்­குப்­பழி வாங்கும் எண்­ணத்தில் முஸ்­லிம்கள் சில தமிழ் கிரா­மங்­களில் அரங்­கேற்­றிய கொலை­க­ளையும் வன்­செ­யல்­க­ளையும் தமிழ் மக்­களால் மறக்க முடி­யுமா? ஆனால் இந்தத் துயர்களையே கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டு வரப்­போகும் ஒரு சுனா­மிக்கு இரு இனங்­களும் பலி­யா­வதா என்­பதே இன்­றைய கேள்வி. முன்னர் ஏற்­பட்ட காயங்­களை மீண்டும் மீண்டும் கிள­றிக்­கொண்­டி­ருந்தால் புண்கள் புரை­யோடி உயி­ரையே பறித்து விடும். இதனை கிழக்­கு­மா­காணத் தமி­ழரும் முஸ்­லிம்­களும் உண­ர­வேண்டும். கிழக்­கி­லங்­கையில் அதிலும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அர­சாங்­கத்தின் ஆத­ரவில் சிங்­க­ள­மக்கள் விரை­வாகக் குடி­யே­று­வதன் நீண்­ட­கால விளைவை முதன்­மு­த­லாக உணர்ந்த ஒரு முஸ்லிம் அர­சி­யல்­வாதி அன்­றைய எம். எஸ். காரி­யப்பர் என்ற உண்மை இன்­றைய முஸ்லிம் தலை­மை­க­ளுக்குத் தெரி­யுமோ தெரி­யாது. அர­சாங்­கத்தின் கல்­லோயா குடி­யேற்றத் திட்­டத்தை முழு­மை­யாக ஆத­ரித்த அவர் அதே­வேளை முஸ்­லிம்­க­ளையும் அங்கு குடி­யேற்­று­வ­தற்கு அரும்­பா­டு­பட்டார். ஆனால் எந்­த­வொரு முஸ்­லிமும் அங்­குபோய் குடி­யே­று­வ­தற்கு அன்று முன்­வ­ர­வில்லை. அதன் விளை­வாக அம்­பாறை தொகு­தியே தனிச் சிங்­களத் தொகு­தி­யாக இப்­போது மாறி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில் இன்னும் பல அம்­பா­றை­களை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் வடக்­கிலும் உரு­வாக்க பேரி­ன­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ளனர். இதனை முஸ்­லிம்கள் அவர்களின் வியா­பார அர­சியல் தலைவர்களை வைத்­துக்­கொண்டு தடுக்க முடி­யுமா? கிழக்­கி­லங்கை முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு நில­மில்லை என்று கூச்­சல்­போ­டு­கின்ற இந்த அர­சியல் தலை­மைகள் தனித்து நின்று போராடி ஒரு ஏக்கர் நிலத்­தை­யேனும் அவர்களுக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பெற்றுக் கொடுக்க முடி­யுமா? இது­வரை எதைத்தான் இவர்கள் பெற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள்? ஒன்­று­மட்டும் உண்மை. இப்­போது இருப்­ப­தை­யா­வது முஸ்­லிம்கள் காப்­பாற்ற வேண்­டு­மென்றால் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபை­யி­னா­லேதான் அது முடியும். கிழக்­கு­மட்டும் ஒரு மாகாண சபை­யாக வரு­மானால் இருப்­ப­தையும் இழக்­க­வேண்டி நேரிடும். அவ்­வா­றான ஒரு மாகாண சபையில் பேரி­ன­வா­திகள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை விலைக்­கு­வாங்கி தமி­ழரின் வளங்­களை பறிப்பர். அதே­போன்று தமிழ் எட்­டப்பர்களை விலைக்­கு­வாங்கி முஸ்­லிம்­களின் வளங்­களை குறைப்பர். அது ஈற்றில் குரங்கு அப்பம் பிரித்த கதை­யாக முடியும். முஸ்­லிம்­களின் இப்­போ­துள்ள மனோ­நிலை தமிழ் போராட்டக் குழுக்­கள்­ மீது ஏற்­பட்ட வெறுப்­பினால் தனக்கு மூக்குப் போனாலும் எதி­ரிக்குச் சகு­னப்­பிழை என்ற நிலையில் செயற்­ப­டு­வ­தாக உணர முடி­கி­றது. இதன் நீண்­ட­கால விளை­வுகள் பார­தூ­ர­மா­ன­வை­யாக அமையும் என்­பதை இக்­கட்­டுரை எச்­ச­ரிக்க விரும்­பு­கி­றது. கிழக்­கிலே முஸ்­லிம்கள் இப்­போது வழு­கின்ற பிர­தே­சங்­களை ஆகா­ய­வெ­ளியில் நின்று படம்­பி­டித்தால் அவை ஒரு ஒடுங்­கிய ஒழுங்­கை­யா­கவே தெரியும். கடற்­க­ரை­யி­லி­ருந்து சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்­துக்­குள்­ளேதான் முஸ்­லிம்­களின் சிறு பட்­டி­னங்கள் அமைந்­துள்­ளன. தனி­யான கிழக்கு மாகாணசபையில் இவை விரிவடைவது எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படியாயின் இன்னும் இருபது வருடங்களில் காத்தான்குடி, சாய்ந்தமருது, கல்முனைக்குடி போன்ற முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பட்டினங்கள் பெரும் சேரிகளாகவே பரிணமிக்கும். அவைகளுக்கு மத்தியிலோ அருகாமையிலோ விகாரைகளும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றுபட்ட கிழக்கும் வடக்கும் இணந்த ஒரு மாகாணசபையில் இந்த ஆபத்து குறைவு. அதற்கேற்றவாறான உடன்பாடுகளுடன் முஸ்லிம்கள் தமிழருடன் இணைய வேண்டும். தமிழினத்தின் போராட்டத்தின் தத்துவங்களை முஸ்லிம்கள் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. அதற்குக் காரணம் முஸ்லிம் தலைவர்களே. ஆனால் ஒன்று. இந்தக் கவலைகள் எதுவும் எழமாட்டா ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாப் பிரஜைகளையும் இலங்கை என்ற ஒரு குடும்பத்தின் பிள்ளைகளாக நினைத்து ஜனநாயக அடிப்படையில் அனைவரையும் சமமாக நடத்துமாக இருந்தால். அப்படியான எண்ணங்களுடன் சிங்கள மக்களிடையே தலைவர்கள் இன்று உருவாகியுள்ளனர். அவர்களின் கைகளையாவது பலப்படுத்த முஸ்லிம்கள் தயங்குவதேன்? அதைப்பற்றி இன்னுமொரு கட்டுரையில் விரைவில் அலசுவோம்.-Vidivelli https://www.vidivelli.lk/article/12235
 5. எனக்கும் கடந்த 29ம் திகதி 2 டோஸ் ஃபைசட் எடுத்து சரியாக 9 மதங்களுக்கு பின் காலை எழுந்தவுடன் வித்தியாசமான ஒரு வலி உடல் முழுவதும் இருந்தது. வழமைபோல் எனக்கு வராது என்னும் மமதையில் பெனடோல் போட்டுவிட்டு இருந்தேன். மாலை 6 மணிபோல் கடும் உடல்வலி, கடுல் காச்சல் 39.5 க்கு மேல், உடல் கட கட வேன ஆட ஆரம்பித்து விட்டது. பற்கள் தந்தியடித்தது, கை நடுங்கியது. மெடிக‌ல் இன்சூரன்ஸ் இருப்பதால் உடனடியாக ஓடினேன் பக்கத்தில் உள்ள சிறந்த் பிரவேட் கிளினுக்குக்கு. உடனடியாக எடுத்தார்கள் அன்டிஜென்ட் டெஸ்ட். பொசிடிவ். பீசீஆர் செய்ய அரசங்க கிளினிக்குக்கு செல்ல அறிவுருத்தினார்கள் இரவு 11 மணியளவில் இருமல்+கடும் காச்சல்+உடல்வலி + மூக்கடைப்பு+ உடல் ந‌டுக்கம் ஆகியவற்றுடன் முன‌ங்கிக்கொண்டு சென்றேன். என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. பின்பு பீசீஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. விடிய‌ 2 மணியளாவில் வந்து படுத்ததுதான். 4 நாட்கள் அம்பானைக்கு இருமலும் காச்சலுல், உடல்வலி, சளி மூச்சு விட முடியவில்லை. புதுவருட கொண்டாட்டல் எல்லாம் போய் விட்டது. இன்றுடன் ஒருவாரம் ஆகின்றது. இபொழுது சுகமாகிவிடேன். எனக்கு பீசீஆர் டெஸ்ட் POSITIVE அல்ல, ஆனால் REACTIVE எனெ வந்திருந்தது. அதாவது முன்பு வைரஸ் உடலில் தாக்கியுள்ளது அது எனக்கு தெரியாமல் அப்படியே இருந்துள்ளது. பின்பு நான் சமீபத்தில் யாருடனோ ஒரு நோயாளியுடன் தொடர்புபடுள்ளேன் அது அது உடனடியாக இப்பொழுது REACTIVE ஆகிடுள்ளது. நேற்று இரண்டாவது முறையும் பீசீஆர் செய்தேன் இன்னும் முடிவு வரவில்லை.
 6. அப்படியல்ல மீரா தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் பில் கேட்சில் இருந்து பலர் ஒரளவு படித்தவர்கள் தான். வாழ்க்கையில் அவர் அவர்க்கு அளந்து வைத்த படியே கிடைக்கும். நன்றாக யோசித்து பாருங்கள் உங்களுடன் வகுப்பில் படித்த பலர் நல்ல புள்ளிகள் எடுத்திருப்பார்கள் ஆனால் இன்னும் அவர்கள் சாதரண நிலையிலேயே இருப்பர்கள். ஆனால் ஒரளவு படித்தவர்கள் இன்று பெரிய பொஸ் ஆகி பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்திருப்பார்கள். உலகம் படிப்பை வைத்து வெற்றியை மதிப்பிடுவதில்லை valuation creation வைத்து மதிப்பிடப்படுகின்றது
 7. வாழ்த்துக்கள் ஆனால் புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை.
 8. ஐசே கடும் கொவிட் பொஸ்டிவ் வா..இந்த கருத்த படித்தவுடன் இருமி இருமி பக பக வேன சிரித்தேன் பரகத்தா டிஸ்கவுன்ட் போட்டு தங்கா வா.. இந்த வருட யாழ் கருத்துக்களம் சுவரஸ்யாமாக போக‌ கோசானும் நாதமுனியும்தான் காரணம்
 9. ஆழ்ந்த் இரங்கல்கள் யுத்தம் செய் மிஸ்கினின் திரில்லர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
 10. நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான். https://vampan.net/wp-content/uploads/2021/12/269565160_242147331382458_1406662015373078646_n.mp4?_=1 https://vampan.net/34938/
 11. கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காகதற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கு,, விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தமது இல்லத்துக்கு, கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால், அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும், அதுவரை அதை ஏற்று தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும், தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சல் பதில் கடிதத்தை, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மனோ கணேசன் எம்பி அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி மனோ எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது, இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் நீண்ட காலமாக நடக்கின்றன. பல எதிரணி எம்பீக்கள் பலமுறை அழைக்கப்பட்டார்கள். நான் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது திடீரென நான் அழைக்கப்பட்டுள்ளேன். ஏனிந்த திடீர் அழைப்பு என தெரியவில்லை. தனது மூன்றில் இரண்டு பலத்தை பயன்படுத்தி, கடந்த ஆட்சியின் முழு அமைச்சரவையையும், குற்றம் சாட்டி தண்டனைக்கு உள்ளாக்க முடியும் என்ற பாணியில் ஜனாதிபதி சமீபத்தில் பேசி இருந்தார். அதன் வெளிப்பாடோ இதுவென தெரியவில்லை. இந்த அழைப்பாணை முழுக்க சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கின்றது. இந்நிலையில் இதை ஏற்று என்னால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு வர முடியாது என அறிவித்து விட்டேன். அத்துடன் எனக்கு சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை அனுப்பி இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளர்கள், இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) பிரிவுகளை மீறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளேன். இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) என்ற சட்ட விதிகளின்படி இலங்கையின் எந்தவொரு பிரஜையும், எந்தவொரு அரசு அலுவலகத்தில் இருந்தும், தமிழ் மொழியில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும், தொடர்பாடல்களை பெற உரிமை கொண்டவர்கள் என்பதையும், நான் ஒரு தமிழர் என்பதை அறிந்த நீங்கள், இலங்கையின் சக ஆட்சிமொழியான தமிழ் மொழியில், என்னுடன் தொடர்பாடல் செய்ய தவறி, அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியுள்ளீர்கள் எனவும், நான் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன். எதுவானாலும் முதலில் தமிழ் மொழியில் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை வரட்டும். அப்புறம் விசாரணைகளை அவசியமானால் சந்திப்பேன். ஆனால், அங்கேயும் பிழையில்லா தமிழ் மொழியில் இவர்கள் எனது வாக்குமூலத்தை எழுதி பதிவு செய்ய வேண்டும். https://www.madawalaenews.com/2021/12/blog-post_690.html
 12. பாகிஸ்தானில் ந‌ட‌ந்த‌ கொலை வன்மையான‌ க‌ண்டன‌த்துக்குரிய‌து... இத‌ற்கும் இஸ்லாத்துக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை. பாகிஸ்தானில் ந‌ட‌ந்த‌ கொலை வன்மையான‌ க‌ண்டன‌த்துக்குரிய‌து என்ப‌துட‌ன் இத‌ற்கும் இஸ்லாத்துக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை என்ப‌தும் உண்மையாகும். கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர் அங்குள்ள‌ இய‌க்க‌ம் ஒன்றின் போஸ்ட‌ர்க‌ளை கிழித்து குப்பையில் போட்ட‌த‌னால் அந்த‌ இய‌க்க‌த்தின‌ர் இக்கொடுமையை செய்திருப்ப‌துட‌ன் இத‌ன் மூல‌ம் இது க‌ட்சி, இய‌க்க‌ வெறிச் செய‌ல்தானே த‌விர‌ ம‌த‌ வெறிய‌ல்ல‌. இல‌ங்கையில் ஒரு கால‌த்தில் ஜேவிபியும் த‌ம‌து பிர‌ச்சார‌ போஸ்ட‌ர்க‌ளை த‌டை செய்தோரை கொன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் உள்ள‌ன‌. அதே போல் த‌மிழ் ஆயுத‌ இய‌க்க‌ங்க‌ளும் செய்துள்ள‌ன‌. எது எப்ப‌டியிருப்பினும் பொதும‌க்க‌ள் ச‌ட்ட‌த்தையும் நீதியையும் கையில் எடுப்ப‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌ ஒன்றாகும். அதே போல் இல‌ங்கையில் க‌ட‌ந்த‌ ர‌ணில், மைத்திரி, ச‌ஜித், ஹ‌க்கீம் ரிசாத் ஆகியோரின் ந‌ல்லாட்சியின் போது திக‌ன‌யில் ஒரு முஸ்லிம் வாலிப‌ர் கொல்ல‌ப்ப‌ட்டு தீயில் எரிக்க‌ப்ப‌ட்ட‌ போது அன்றைய‌ அர‌சாங்க‌ம் இத‌ற்காக‌ எவ‌ரையும் கைது செய்யாம‌ல் புதின‌ம் பார்த்த‌ நிலையில் பாகிஸ்தான் அர‌சாங்க‌ம் இல‌ங்கைய‌ர் கொலையில் ஈடுப‌ட்டோரில் நூற்றுக்க‌ன‌க்கானோரை கைது செய்திருப்ப‌து பாராட்ட‌த்த‌க்க‌ விட‌ய‌மாகும். ஆக‌வே, த‌னியார் வெறித்த‌ன‌மான‌ இய‌க்க‌ங்க‌ள் உல‌கில் ஒழிக்க‌ப்ப‌டுவ‌தோடு இத்த‌கைய‌ இய‌க்க‌ங்க‌ள் உருவாக‌ கார‌ண‌மான‌ நாடுக‌ளும் அர‌ச‌ இராணுவ‌ங்க‌ளும் த‌ம்மை திருத்திக்கொண்டு அமைதியான‌ உல‌கை நோக்கி வ‌ர‌வேண்டும். Mubarak Abdul Majeed - ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி https://www.madawalaenews.com/2021/12/i.html
 13. தொலைந்துபோன அத்திபட்டிபோல 20 வருட காலமாக மட்டக்களப்பு, வாழைச்சேனை முஸ்லிம்களின் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர பாராளுமன்ற விவாதமொன்றை உருவாக்கிய நசீர் அஹமட், ஹரீஸ் எம்.பிக்களுக்கு நன்றிகள் - வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் தாயிப் மாளிகைக்காடு நிருபர் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் வாழைச்சேனை பிரதேச செயலக விவகாரமான ஆவணங்கள் கோப்புகள் அமைச்சில் காணவில்லை. தேடியும் கிடைக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் பிரபல்யமான நகைச்சுவை காட்சியான வைகைப்புயல் வடிவேலுவின் கிணற்றை கானவில்லை என்று தேடுவது போன்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. இதன் மூலம் வாழைச்சேனை முஸ்லிம் மக்களின் தலையெழுத்து மாறியுள்ளது உண்மையென சமாதான மற்றும் கல்விக்கான அமைப்பின் தலைவரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஆசிரியர் முஹம்மட் தாயிப் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், மறைந்த முன்னாள் அமைச்சர் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் முயற்சியினால் பன்னம்பல ஆணைக்குழு நிறுவப்பட்டு அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுப்படி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலத்திற்கு 11 கிராம சேவகர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டு ஏறத்தாழ 185 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாக 2002 இல் ஸ்தாபிக்கப்பட்டு வாழைச்சேனை பிரதேச செயலகம் (கோறளைப்பற்று மத்தி) நான்கு ஆண்டுகள் எதிர்கால சந்ததிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிம்மதியை கெடுத்து மட்டக்களப்பு மாவட்ட சில எம்.பிக்களும், கச்சேரி அதிகாரிகளும் இணைந்து பட்டப்பகலில் முஸ்லிங்களின் காணிகளை கொள்ளையடித்து சென்றனர். அப்போது எமது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை வரலாற்றில் யாராலும் மன்னிக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. இப்படியாக வஞ்சிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட காணிகள் தொடர்பில் பல அரசியல் தலைவர்களிடம் மக்கள் எடுத்துக் கூறியும் இதுவரை தீர்வுகாணமுடியாத விடயமாகவே இருந்துவந்தது. இருந்தும் தொலைந்து போன அத்திப்பட்டி கிராமத்தை தமிழ் திரைப்படமொன்றில் அஜித் தேடியது போன்று 20 வருடங்களின் பின்னர் புதைந்து கிடந்த பல ரகசியங்களையும், உண்மைகளையும் வெளிக்கொண்டுவர எமது நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் வாழைச்சேனை முஸ்லிம் மக்களுக்காக சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்களுக்கும், அந்த பிரேரணையை ஆமோதித்து உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை மட்டக்களப்பு முஸ்லிம் மக்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரேரணையை சபை விவாதத்தில் இணைத்துக்கொள்ளவும், அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களான அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்களும், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் பல கஷ்டங்களை சந்தித்தார்கள் என்பதை நான் அறிவேன். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்கள் ஏனையோர்களை போன்று வாக்கு அரசியலை முன்னிறுத்தாது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்களின் பிரச்சினைகளை ஆக்கிரோஷமான முறையில் புள்ளிவிபரங்களுடன் விளக்கி பொதுமக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்ததன் மூலம் எங்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. பல தசாப்தங்களாக ஆயுத பயங்கரவாதத்தினாலும், நிர்வாக பயங்கரவாதத்தினாலும் கொள்ளையடிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்களின் காணிகள் தொடர்பில் புள்ளிவிபரங்களையும், சரியான தரவுகளையும் கொண்டு தனது வாதத்தை முன்வைத்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பொறியியலாளர் அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் முஸ்லிங்களுக்கு மட்டக்களப்பில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவரும் அநீதிகளை நாட்டின் உயர்ந்த சபையில் வெளிச்சம் போட்டுக்காட்டி பல அரசியல் அஜந்தாக்களுக்கும் முற்றுப்புள்ளியை வைத்துள்ளார். கடந்த காலங்களில் சோம்பேறித்தனமாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளினால் சமூகம் படும் இன்னல்களை வெளிக் கொண்டுவந்த அல்ஹாபிழ் இஸட்.ஏ. நஸீர் அஹமட் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், சக முஸ்லிம் சகோதரர்கள் படும் கஷ்டங்களை அறிந்து மட்டக்களப்பு மாவட்ட சந்ததி எதிர்வரும் 10 ஆண்டுகளின் பின்னர் வாழ இடமில்லை எனும் உண்மையை உணர்ந்து வாழைச்சேனை மகன் போன்று உயிரோட்டமாக மக்களின் பிரச்சினைகளை எதார்த்த பூர்வமாக பேசியதை இங்கு யாரும் மறுக்க முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளை விளங்கி உரையாற்றியமையையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுவதுடன் வாழைச்சேனை பிரச்சினைகளை பேசியது போன்று கிழக்கில் உள்ள ஏனைய பிரதேசங்களின் பிரச்சினைகளையும் சாணக்கியமாக அணுகி தமிழ் பேரினவாத அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். என்று தெரிவித்துள்ளார் https://www.madawalaenews.com/2021/12/blog-post_19.html
 14. அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலையை எடுத்துச் சொல்லுங்கள். வடமாகாண ஆளுனரே! அரசாங்க அதிபரே! மனித உரிமை ஆர்வலர்களே! தொண்டு நிறுவனங்களே! இது உங்களின் கவனத்திற்கு! பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் #இடுப்பளவு #வெள்ளநீரில் #உடைகள் #ஏதுமின்றி #நடந்து #வந்து #கரையை சேர்ந்து, A9 வீதியோரத்தில் நின்று பாடசாலைக்கு தயாராகிச் செல்கின்றனர். தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் J/327 கிராமசேவையாளர் பிரிவு கிராமம் தொடரும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. பல வருடங்களாக நாம் யாரை எல்லாமே கேட்டு விட்டோம் இன்னும் ஒன்றுமில்லை. கிராம மீள் எழுச்சி என்கிறார்கள், நகர அழகுபடுத்தல் என்கிறார்கள் ஆனால் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எந்த அரசியல்வாதிகளும் , அரச அதிகாரிகளும் பார்கிறார்கள் இல்லை. என ஆதங்கப்படும் கிராம மக்கள். தமக்கு அரிசி, மா,சீனி, அங்கர் கேட்கவில்லை. தமக்கான வீதியினை செப்பனிட்டுத் தாருங்கள், சரியான நீர் வடிகாலமைப்பை செய்து தாருங்கள் எனத்தான் கோருகின்றனர். எமது பிள்ளைகளை படிக்க வைக்க நல்ல சூழலைத் தாருங்கள் எனத்தான் கோருகிறார்கள். #வடமாகாண ஆளுனரை நேரில் வந்து இந்த நிலையை ஒரு முறை பாருங்கள் எனக் கோருகிறார்கள். ஆளுனர் ஐயாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் இப் பிள்ளைகள் அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலையை எடுத்துச் சொல்லுங்கள். மீள்பதிப்பு ஊடக நண்பர் மதி மீள்பதிப்பு ஊடக நண்பர் மதி https://thayagam24.com/யாழ்ப்பாணத்தில்-இடுப்பள/
 15. சண்முகம் தவசீலன் - மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும் என மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம் கிராமத்தில், நேற்று (28) இடம்பெற்றுள்ளது. மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர், தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிழவன்குளம் பகுதிக்கு, ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் சனிக்கிழமை (27) சென்ற ஒரு குழுவினர், அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று, அந்த வீட்டு குடும்பஸ்தரை அழைத்து, தமது மதத்துக்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், குறித்த குடும்பஸ்தரை அங்கு சென்றவர்கள் தரக்குறைவாக பேசியதுடன், கடவுளின் பெயரால் சாபமிட்டு அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கி, மாங்குளம் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்று (28) குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, கிழவன்குளம் பகுதியில், சட்டவிரோதமாக சபைக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டு, மதமாற்ற செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.jaffnamuslim.com/2021/11/3_29.html
 16. அருமையான கருத்து இத்தகைய காடைகளை ஆதரிக்கும் எல்லொரினதும் immigration status இப்படித்தான் இருக்கும்
 17. புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் நேற்று (21) மாலை 4 மணியளவில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தள சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ‘கொல்பவன் வெல்வான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித் துள்ளது. http://www.jaffnamuslim.com/2021/11/blog-post_717.html
 18. காடைத்தனமான செயலகள் கண்டிக்கபட வேண்டும். தலைவர் தன்னுடய விரோதியாக இருந்தாலும் நன்கு உபசரித்து அனுப்புவார். அவர்களது கருத்தையும் செவிமடுப்பர்.
 19. இலங்கையில் சராசரியாக நான்கு பேரில் ஒருவர், நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் அச்சமூட்டுவதுடன், படித்த இளைஞர்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறும் விருப்பம் 50% ஆல் உயர்ந்துள்ளதையும் காணமுடிகிறது. அறிக்கையின்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 34 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தைக் கொண்டுள்ளனர்என்றும் அவர்களில் 24 வீதமானவர்கள் ஏற்கனவே அதற்காக திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் 20 வீதமானவர்கள் இன்னும் நாட்டை விட்டு வெளியேறும் முறைகளைப் பின்பற்றுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. நாட்டில் 22% பெண்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதுடன், அவர்களில் 22 சதவீதமானோர் அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளனர். நாட்டில் 12 வீதமான பெண்கள் இன்னும் அதே முறைகளைப் பின்பற்றுவதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும் அவர்களில் 20% பேர் இதற்காகத் திட்டமிடுவதுடன், மேலும் 29% பேர் அதற்கான படிமுறைகளை பின்பற்றுகின்றனர் என அறியமுடிகிறது. கடந்த 3 – 5 வருடங்களில் இலங்கையர்கள் மத்தியில் வெளிநாடு செல்வதற்கான அபிலாஷைகள் இரட்டிப்பாகியுள்ளதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, சராசரியாக க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு 2.6% ஆக உள்ளது, அதே சமயம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் தொகை 10.2 % ஆக உள்ளது. அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் (IHP) இந்த ஆய்வுகளுக்கு, இலங்கை கருத்து கண்காணிப்பு ஆய்வு (SLOTS) முறையைப் பயன்படுத்தியது. கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாடு மீண்டு வருவதால், பொதுமக்களின் கருத்தை மதிப்பிடுவதற்கு இந்தக் கணக்கெடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது. தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்த கருத்தை இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாடு செல்வதில் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து சரியானது எனக் கணக்கெடுப்பு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பொருளாதாரத்தின் மீதான அவநம்பிக்கையான பார்வை, கொவிட்-19 ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை மீதுள்ள அதிருப்தி, விரக்தி என்பவற்றை முக்கிய ஆதாரங்களாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், ஒரு வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என எதிர்பார்ப்பதாக கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்து கணிப்பு தொடர்பில் விசேட பயிற்சிபெற்ற, துறைசார் நிபுணரான கலாநிதி ரவி ரன்னன் எலிய கூறுகையில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த கொள்கைகளில் அவ்வப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் அரசாங்கத்தின் மீதான ஆதரவும் நம்பிக்கையும் பாரியளவில் இல்லாது போயுள்ளது. கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் அதிகமாக செயற்பட வேண்டும் என்று பல அரசாங்க சார்பு வாக்காளர்கள் இன்னும் நம்புகின்றனர் என்றார். https://www.madawalaenews.com/2021/11/ihp.html
 20. இராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, இராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், இராவணன் தன் விமானம் வாயிலாக இந்தியாவுக்கு முதன்முதலாக பறந்து சென்று, மீண்டும் இலங்கை திரும்பியதாக கூறப்பட்டது.இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்காக இலங்கை அரசு, 20 லட்சம் ரூபாய் நிதியை அப்போது ஒதுக்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் தற்போதுள்ள இலங்கை அரசு, இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாக கருதுகிறது. இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஆய்வு மீண்டும் தொடங்குகிறது.இலங்கையின் விமான வரலாறு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவரும், அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவருமான சசி தனதுங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: இராவணன், இதிகாசத்திற்காக புனையப்பட்ட கற்பனை கதாபாத்திரம் அல்ல. அவர் உண்மையில் வாழ்ந்த அரசன். அவரிடம் விமானங்களும், விமான நிலையங்களும் இருந்தன. அவை இன்றைய விமானங்களை போல் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை வேறு தொழில்நுட்பத்தில் இயங்கி இருக்கக்கூடும். அந்த காலத்தில், இலங்கை மற்றும் இந்தியாவில் பல நவீன தொழில்நுட்பங்கள் இருந்துள்ளன. இது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம் என்றார். https://www.aljazeeralanka.com/
 21. சிறுமிகளுக்கு நடனத்தில் ஆர்வம் ஆனால் பெற்றோர் கடும்போக்கு முஸ்லீம்கள் என்பதால் பவேறுதடைகள் இது இவர்களை வீட்டை விட்டு வெளியேர தூண்டுயுள்ளது.
 22. 8ஆம் திகதி காணாமல் போயிருந்து நேற்று (09) வீடு திரும்பிய 3 சிறுமிகளும் நடன நட்சத்திரங்களாக ஆவதற்கு வீட்டை விட்டு சென்றதாக காவல்துறை வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டி The Morning பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. The Morning பத்திரிகையிடம் பேசிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ, 3 சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை தெரிவித்துள்ளார். “ நடன நட்சத்திரம் ஆகும் ஆசையில் குறிப்பிட்ட சிறுமிகள் நவம்பர் 8ஆம் தேதி அதிகாலையில் ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் கையில் இருந்த 2 மோதிரங்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஃபேஷன் பக் என்ற ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று ஜீன்ஸ், டி-சர்ட்கள் மற்றும் பிற சாதாரண உடைகள் போன்ற ஆடைகளை வாங்கியுள்ளனர். ஏனென்றால், அவர்கள் அணிந்திருந்த உடையை அணிந்துகொண்டு நடனக் குழுவில் அல்லது வகுப்பில் சேர வாய்ப்பில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். குறிப்பிட்ட சிறுமிகள் தமது கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற தன்னிச்சையாக செயல்பட்டனர், ”என்று நிஹால் தல்துவ மேலும் கூறினார். அவர்கள் ஆடைகளை மாற்றிய பின்னர், வத்தளையில் உள்ள நடனக் குழுவில் சேர முயற்சித்ததாக அவர் கூறினார். அதேசமயம், முயற்சி தோல்வியடைந்ததால், 3 சிறுமிகளும் அனுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். பஸ் நடத்துனர் சிறுமிகள் மைனர் என்பதால் சந்தேகத்தில் உடனடியாக அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார். நடனக் குழுவில் இணைவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில், சிறுமிகள் பின்னர் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உதவி பெற முயன்றனர். “சிறிகொத்தாவில் உதவி கேட்டு சிறுமிகள் வந்துள்ளனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யாரும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டபோது, பெண்கள் SJB தலைவர் அலுவலகத்திற்குச் சென்றனர், அங்கு பிரேமதாச பதவியில் இல்லாததால் அவர்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டனர், ”என்று தல்துவா கூறினார். பெண்கள் மிகவும் "கடுமையான மற்றும் பழமைவாத" வீடுகளில் இருந்து வருகிறார்கள், எனவே அவர்கள் இசையைக் கேட்கவோ அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று நிஹால் தல்துவ குறிப்பிட்டார். "இது வருத்தமாக இருக்கிறது, பெண்கள் நட்சத்திரங்களாக வேண்டும் என்ற தங்கள் கனவுகளைப் பின்பற்றுகிறார்கள். போலீசார் இப்போது அவர்களின் கதையை விசாரித்து வருகின்றனர், மேலும் சிறுமிகள் மன மற்றும் உடல் மதிப்பீட்டை நடத்த நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறுமிகள் பாதிப்பில்லாமல் இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் நாங்கள் இன்னும் சிறுமிகளை மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும், ”என்று SSP தல்துவ மேலும் தெரிவித்தார். https://www.madawalaenews.com/2021/11/3_10.htm
 23. நூருல் ஹுதா உமர்- எம்மை பயமுறுத்தும் மோசமான காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மூத்த தலைவர்கள் கடந்த காலங்களில் பெற்றுத்தந்த உரிமைகளை பறித்தெடுக்க கோஷமிடும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களுக்கு அழிவை உண்டாக்க இறைவனை நிந்தித்த ஒரு தேரரை ஒரே நாடு ஒரே சட்ட செயலணிக்கு தலைவராக நியமித்து எமக்கு மற்றுமொரு அச்சுறுத்தலை விடுத்து நினைத்ததை செய்வோம் நீங்கள் இணங்கிச்செல்ல வேண்டும் என்ற செய்தியை கூறியுள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சனிக்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வரலாற்றில் நும்ரூத், பிரௌனை கண்ட நாங்கள் ஈமானுடன் இருப்பதனால் இந்த நாட்டில் வரப்போகும் ஆபத்துக்களை எதிர்கொண்டு அச்சமில்லாத சமூகமாக எம்மை நாம் மாற்றிக் கொள்ளவேண்டிய தேவை எமக்கிருக்கிறது. இந்த நாட்டில் எமக்கெதிரான சதிகளை முறியடித்த நிம்மதியான ஆட்சி மலர்ந்து பல்லின ஒற்றுமை மலர நாம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த நாட்டில் எவ்வித பயங்கரவாதமும் தலைதூக்க கூடாது என்று விரும்பும் நாட்டுப்பற்று மிக்கவர்கள் நாங்கள். பயங்கரவாத செயல்களுக்கு நாங்கள் எப்போதும் துணை போகின்றவர்கள் இல்லை. இஸ்லாமிய பெயரில் பல சதிகள் இடம்பெற்று முஸ்லிங்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கியுள்ளார்கள். எந்த குற்றமும் செய்யாத சிறு பிள்ளைகள், உலமாக்கள், சட்டத்தரணி, அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழ் சகோதரர்கள் என பலரும் பல மாதங்களாக சிறையில் வாடுகிறார்கள். நான் அமைச்சராக இருந்த போது உணவுப்பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதில் மிகக்கடுமையாக இருந்தோம். நான் அமைச்சராக இருந்தபோது என்னிடம் வந்து எரிவாயு கம்பனியினர் 200 ரூபாய் கூட்டுமாறு பலமணிநேரம் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் ஒரு கம்பனியை திருப்திப்படுத்துவதா அல்லது இந்த நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களை திருதிப்படுத்துவதா? அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதா என்று சிந்தித்து மக்களின் பக்கமே இறுதியில் முடிவுகளை எடுத்தோம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உற்பத்தியாளர்கள், நிறுவனங்களை சந்தித்து பேசினோம். அப்படி கலந்துரையாடித்தான் உணவுப்பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு வழங்கினோம். நான் தனியாளாக நிர்வாகித்த அமைச்சை இன்று விமல், பந்துல, லசந்த அழகியவண்ண போன்ற எட்டுபேருக்கு பிரித்து கொடுத்திருக்கிறார்கள். நான் தனியாளாக அதை கையாண்டபோது எப்படி கடினமாக இருந்திருக்கும் என்பதை உங்களுக்கு சிந்திக்க முடியும். அப்படியான காலத்தில் கூட மக்கள் வீதிக்கு இறங்கி விலையுயர்வுக்காக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அந்த காலத்தில் எங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களை மக்கள் நன்றாக அறிவார்கள். தாங்கமுடியாதளவு பொய் குற்றச்சாட்டுக்கள் எங்கள் மீது முன்வைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டு எனக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்காக எவ்வித வழக்குகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதை நீதியின் பக்கம் இருப்போர் நன்றாக அறிவார்கள். இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்குரிமையை சட்டரீதியாக உறுதிப்படுத்தியமைக்காக நான் முதலில் சிறையில் அடைக்கப்பட்டேன். இந்த நாட்டின் எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் பயங்கரவாத தடுப்பு கீழ் இதுவரை செய்யவில்லை ஆனால் ஜனாதிபதியை போன்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட என்னை பாராளுமன்ற மரபுகளை மீறி, சட்டமா அதிபர் திணைக்கள அனுமதியில்லாமல் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நியாயமான விடயங்களை முன்வைத்து என்னுடைய விடுதலைக்கு முன்னர் தெளிவாக பாராளுமன்றத்தில் பேசினார். கட்சி பேதங்களுக்கு அப்பால் எனக்காக பலரும் நியாயம் கேட்டார்கள். விக்னேஸ்வரன், சம்பந்தன், சாணக்கியன், சுமந்திரன், பொன்னம்பலம் போன்றோர்கள் உட்பட லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித போன்ற பலருமாக 44 பேரளவில் கையெழுத்திட்டு பாராளுமன்ற மரபுகளை கோடிட்டுக் காட்டி நீதியையும், சட்டத்தையும் முன்னிறுத்தி சபாநாயகரிடம் எனக்காக நீதியை கேட்டார்கள். சட்டமா அதிபர் இது தொடர்பில் விளக்கமளிக்க கோரினார்கள். மக்களும் எனக்காக போராடியதுடன் இறைவனிடமும் கையேந்தி பிராத்தித்தார்கள். இவர்களுக்கு நன்றி கூற செல்லுமிடமெல்லாம் அவர்களின் உள்ளம் நெகிழ்ந்து என்னை கட்டியணைத்து அழுகிறார்கள். என்னையும் தமிழ் சமூகத்தையும் பிரிக்க பல சதிகள் கடந்த காலங்களில் நடந்தது. ஆனால் என்னுடன் தமிழ் மக்களும், தாய்மார்களும் அன்புடனே இருக்கிறார்கள். நான் வடக்கின் பல பகுதிகளுக்கும் சென்ற போது தாய்மார்கள் கண்ணீர்மல்க என்னை வரவேற்றனர். பௌத்த தேரர்கள் என்னுடன் அன்பாக இருக்கிறார்கள். எனக்காக பேசுகிறார்கள். எனக்கு அநீதியிழைத்த அநீதியாளர்களை சபிக்கிறார்கள். என்னுடைய கைதின் தாக்கம் பலருக்கும் உள்ளங்களை உருகவைத்துள்ளது. எனக்கு ஒரு வங்கிக்கணக்குத்தான் உள்ளது. அதுவும் பாராளுமன்றத்தில் உள்ள வங்கியில் மட்டுமே எனக்கு கணக்கிருக்கிறது. வெளிநாடுகளிலிரு ந்து ஒரு ரூபாய் கூட என்னுடைய வங்கிக்கணக்குக்கு வந்ததும் கிடையாது. என் மீது எந்த குற்றமும் இருக்கவில்லை என்றார். http://www.importmirror.com/2021/11/blog-post_84.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.