Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. அவர்கள் செய்த கொலைகள் எத்தனை கோடி ? நாங்கள் கவலைப்படலாமா ? 1945 க்கு பின்பு உலகில் அமெரிக்கா நடாத்திய கொலையாட்டத்தில் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது நடாத்திய அணுகுண்டு தாக்குதலினால் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அந்த பிராந்தியமே சுடுகாடானது. அதன் பின்பு 1950 இல் இருந்து ஆரம்பமான கொரியா யுத்தம், 1955 – 1975 வியட்நாம் போர் அத்துடன் 1980, 1990 காலங்களில் சோமாலியா மற்றும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் கொல்லப்பட்டும், காணாமல் போனவர்கள் என மொத்தமாக பல மில்லியன்கள் ஆகும். 1999 இல் இருந்து யூகோஸ்லாவியாவில் நேட்டோ என்ற போர்வையில் அமெரிக்கா 15,000 தடவைகள் நடாத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டுவதற்காக நடாத்திய கொலையாட்டம் மற்றும் சவூதி அரேபியாவுடன் இணைந்து யேமனில் நடாத்திய விமானக் கொலையாட்டம் என மொத்தமாக கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மில்லியனை தாண்டும். இதில் நேரடி கொலையாட்டம் ஒருபுறமிருக்க, இஸ்ரேல் போன்ற தனது கூலிப்படைகளுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி அவர்கள் மூலமாக உலகின் பல பாகங்களிலும் நடாத்தப்பட்ட கொலைகள் ஏராளம். அந்தவகையில் 1948 தொடக்கம் இன்று வரைக்கும் பாலஸ்தீனில் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகும். பொருளாதார இழப்புக்கள் பற்றி எதுவும் இங்கே குறிப்பிடவில்லை. மேலும், 1945 க்கு பின்பு இடம்பெற்ற சம்பவங்களை மாத்திரமே மேலோட்டமாக கூறியுள்ளேன். 1945 க்கு முன்பு நடந்தவை பற்றி எழுதினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும். இவைகள் அனைத்தையும் விரிவாக எழுதினால் நீங்கள் வாசிக்கமாட்டீர்கள். அத்துடன் எனது முகநூல் முடக்கப்படலாம். உலகில் உள்ள வளங்களை சூறையாடி மற்றும் நாட்டுத் தலைவர்களை மிரட்டி, மிரட்டலுக்கு பணியாதவர்களை கொலை செய்து அல்லது ஆட்சியை கவிழ்த்து, கோடிக்கணக்கான மக்களை கொலை செய்த அராஜகவாதிகள் தற்போது உலகிற்கு ஜனநாயகம் போதித்துக்கொண்டு பாதுகாப்பான புவி அமைவிடத்தில் அமெரிக்க மக்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள். இவர்களை பழிவாங்குவதற்கு யாரும் நெருங்கமுடியாத நிலையில் லோஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் இயற்கையினால் ஏற்பட்ட தீ அனர்த்தமானது அவர்கள் செய்த அட்டூழியங்களில் ஒரு வீதமும் சமனாகாது. இந்த நிலையில் இங்குள்ள சில அப்பாவிகள் அவர்களுக்காக அனுதாபப்படுவதனை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. இவர்களை என்னவென்று கூறுவது ? முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2025/01/blog-post_86.html
  2. கிட்டத்தட்ட 20 ஊர்களையும் 51 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதே காத்தான்குடி பொலீஸ் பிரிவு! சமூக அரசியல் உரிமைகளிற்கான அமைப்பு (OSPR) ஊடகங்களுக்கு விளக்கம்! அண்மைக் காலமாக நாடு முழுவதும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் செய்து வருகின்றது. அந்த வகையில் காத்தான்குடி பொலீஸ் பிரிவும் தங்கள் எல்லைகளிற்கு உற்பட்ட பிரதேசங்களில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பலரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி வருகின்றனர். அவ்வாறு கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பட்சத்தில் குறித்த செய்திகளினை பிரசுரிக்கும் சில ஊடகங்கள் கைதுகள் அல்லது சம்பவங்கள் நடைபெறும் ஊரைக் குறிப்பிடாமல் அல்லது பொலீஸ் பிரிவின் எல்லையினை குறிப்பிடாமல் காத்தான்குடி பொலீஸ் பிரிவிற்குள் அடங்கும் 20 இற்கு மேற்பட்ட ஊர்களில் ஒன்றான காத்தான்குடியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது போன்று செய்தியினை அண்மைக் காலமாக வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான பொறுப்பற்ற செய்தி பிரசுரிப்பினால் கடந்த 30 வருடங்களிற்கு மேலாக யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் குண்டு வெடிப்பு போன்ற சோதனைகளை கண்டு இன்று ஓரளவு சாதாரண நிலைக்கு திரும்பி சுற்றுலாப் பயணிகள் வருகை, வியாபாரம் என்று மீண்டு வரும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான பிழையான தலைப்பிடப்பட்ட செய்திகள் காத்தான்குடி மக்களிற்கு மனதளவில் பாரிய தாக்கத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்துவதை எமது அமைப்பு வெளிக் கொண்டு வருகின்றது. காத்தான்குடி பொலீஸ் பிரிவு என்பது கல்லடி, நாவலடி, வேலூர், நாவற்குடா, நொச்சிமுனை, பூநொச்சிமுனை, காத்தான்குடி, ஆரையம்பதி, காங்கேயனோடை, கர்பலா, பாலமுனை, கீச்சான்பள்ளம், ஒல்லிக் குளம், மண்முனை, தாழங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தர்மபுரம், வேடக்குடியிருப்பு, உப்போடை போன்ற 20 இற்கு மேற்பட்ட ஊர்களையும், குறித்த ஊர்களில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதே தவிர “காத்தான்குடி” என்ற ஊர் மாத்திரம் காத்தான்குடி பொலீஸ் பிரிவில் அடங்கவில்லை என்பதை ஊடகங்களிற்கும், செய்திகளை வாசித்த பொது மக்களிற்கும் தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளோம். காத்தான்குடி என்று பிழையாக தலைப்பிட்டு சில ஊடகங்களினால் பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் சில செய்திகளானது சம்பவம் தொடர்பானதும், சம்பவம் நடைபெற்ற பிரதேசம் தொடர்பாகவும் சரியான தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை மறைத்து காத்தான்குடி என்று வேண்டுமென்றே தலைப்பிட்டு ஊடக தர்மத்தை மீறும் வகையில் செய்திகளை பிரசுரித்தமையினை வண்மையாக கண்டிப்பதோடு இனிவரும் காலங்களில் செய்திகளை உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் மிக வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் சமூக அநீதிகள் விடயங்களில் சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு(OSPR) மிகக் கவனமாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். https://madawalaenews.com/12994.html
  3. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கெதிராக இந்து சமய கலாசார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், "இராமநாதன் அர்ச்சுனா, பயன்படுத்துகின்ற வார்த்தைகள், சைவக்குருமார்கள், இந்துக்குருமார்கள் அனைவரையும் தாக்கக் கூடிய அளவிற்கு உள்ளன. ஆகவே, எமது புனிதமான திருநீற்றையும் அதனை அணிகின்ற சைவ மக்களையும், குறிப்பாக "அங்கு ஒருவன் இருப்பான்" என்று சுட்டிக் காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை மூலம் எங்களுடைய குருமார்களை தாக்கி அவர் பேசுகின்றார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, இவ்வாறான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துபவருக்கு எதிராக இலங்கைச் சட்டத்தின்படி சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், அவர் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பேசுகின்ற இவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்கள் கவலைப்படுவர். எனவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளை பேசுவதை நிறுத்த வேண்டும். இதேபோன்று, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்த்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாக பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது சம்பந்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியோ, இந்து கலாசார அமைச்சோ அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள், சைவ அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடிக் கொண்டிருப்போம் என்பதை சகலருக்கும் அறியத் தருகின்றோம்" என குறிப்பிட்டுள்ளனர். https://www.jaffnamuslim.com/2025/01/blog-post_859.html
  4. (எப்.அய்னா) வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண் ஒரு­வ­ரையும், வாழைச்சேனை பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு அழைத்து அங்கு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. பெண்­ணுக்கு 50 கசை­ய­டியை ஒத்த தண்­ட­னையும், ஆணுக்கு 100 கசை­ய­டியை ஒத்த தண்­ட­னையும் பள்­ளி­வா­சலில் வைத்து வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில், இது குறித்து வாழைச்­சேனை பொலி­சா­ருக்கு கிடைத்த தகவல் மற்றும் முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போதே, குறித்த நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­பட்ட 6 பேரை வாழைச் சேனை பொலிசார் கைது செய்­துள்­ள­துடன், அவர்கள் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வாழைச்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கூறினார். இந்த சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.- Vidivelli https://www.jaffnamuslim.com/2025/01/6_17.html
  5. ஆம் இதுதான் உண்மை. கிறிஸ்தவர்கள் இதை அறுவடை நன்றி செலுத்தல் நாளாகவே கொண்டாடுகின்றார்கள். வருடத்தின் முதல் நாளில் தங்கள் கைபிரயாசத்தின் முதற் பலன்களை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுகின்றார்கள். கத்தோலிக்கர் அல்லாதா பைபிள் சபையினர் இவற்றை கொண்டடுவதில்லை.
  6. நான் 89/90களில் இருந்து இருந்து கண்களால் கண்டு, பங்கு பற்றிய அனுபவத்தில் சொல்கின்றேன். கொழும்பு செக்கடித்தெருவில் இருக்கும் தமிழ் கத்தொலிக்க பங்கு மக்கள் ஒவ்வொரு வருடமும் இந்த பொங்கல் விழாவை அன்று தொடக்கம் இன்றுவரை கொண்டாடி வருகின்றார்கள். இது கொழும்பு தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விழாவகவே நோக்கப்படுகின்ற‌து.
  7. (எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்) நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இஸ்ரேல் இனத்­த­வர்­களின் மதஸ்­த­லங்கள் அல்­லது அவர்­களின் கலா­சார நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி வாங்கி அவை நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்கி அமைக்­கப்­படும் இந்த கட்­டி­டங்கள் என்ன? என்­பதை அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரிடம் கேட்­கப்­படும் கேள்வி நேரத்தின் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் தெரி­வு­செய்­யப்­பட்ட சில அர­சாங்­கங்கள் பலஸ்தீன் பிரச்­சி­னை­யை­விட இஸ்­ரே­லுடன் தொடர்­பு­களை வைத்­துக்­கொள்ள மிகவும் ஆர்­வத்­துடன் செயற்­பட்டு வந்­தது. இதன்­மூலம் இஸ்­ரே­லுடன் வைத்­துக்­கொண்ட சில தொடர்­புகள் கார­ண­மாக, பலஸ்தீன் தொடர்பில் எமது நாடு பின்­பற்­றி­வந்த கொள்­கை­க­ளுக்கு சர்­வ­தேச ரீதியில் எங்­க­ளுக்கு இருந்­து­வந்த நற்­பெ­யரும் தற்­போது பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது. குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­களில் எமது நாடு தொடர்பில் இருந்­து­வந்த தொடர்பும் தற்­போது ஓர­ளவு பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எமது நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இஸ்ரேல் இனத்­த­வர்­களின் மதஸ்­த­லங்கள் அல்­லது அவர்­களின் கலா­சார நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி வழங்கி அவை நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. மாத்­தறை வெலி­கம பிர­தே­சத்தில், தெஹி­வளை அல்விஸ் பிர­தே­சத்தில் இவர்­களின் மத நிலையம் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதே­போன்று கொழும்பு 7 இல் ரெட் சினி­ம­னுக்கு முன்னால் பாரிய கட்­டி­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த கட்­டி­டங்­களை நிர்­மா­ணிக்கும் இடங்­களில் பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்­கப்­பட்டு வரு­கி­றது. பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்கி அமைக்­கப்­படும் இந்த கட்­டி­டங்கள் என்ன? இலங்­கையில் யூதர்கள் இல்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர்­களின் மத வழி­பாட்டு இந்­த­ளவு பாரிய கட்­டிடம் எதற்­காக என கேட்­கிறோம்? கடந்த ஒரு தினத்தில் அல்விஸ் பிளேசில் அமைக்­கப்­படும் கட்­டி­டத்­துக்கு அரு­கா­மையால் நடந்து சென்ற பல்­க­லைக்­க­ழக மாணவன் ஒரு­வர் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்யப்பட்டு தெஹி­வளை பொலிஸில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அந்த மாணவன் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தியே விடு­விக்­கப்­பட்டார். அந்­த­ளவு பலத்த பாது­காப்பு இஸ்­ரே­லி­யர்­களால் அமைக்­கப்­படும் கட்­டி­டங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் பலஸ்தீன் ஆத­ரவு அர­சாங்கம் என்­ற­ வ­கையில், பலஸ்தீன் மக்­களின் விடு­த­லைக்­காக எங்­க­ளுடன் இணைந்து வீதியில் இறங்கி போரா­டி­ய­வர்கள் என்­ற­வ­கையில் அமைக்­கப்படும் இந்தக் கட்­டி­டங்கள் தொடர்பில் அர­சாங்கம் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன? மறு பக்­கத்தில் இது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்­த­லாகும். ஏனெனில் மொசாட் இங்கு வரு­வது என்­பது அது நல்ல விட­ய­மல்ல. வெலி­க­மவில் முஸ்லிம் மக்கள் இருக்கும் இடத்­தி­லேயே அவர்­களின் நிலையம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதனால் இது­தொ­டர்­பாக அர­சாங்கம் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன என்­பது தொடர்பில் அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்த வேண்டும். அதே­போன்று பலஸ்­தீனில் பொது மக்­களை, சிறு­வர்­களை கொலை­செய்யும் இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் எமது நாட்­டுக்குள் நுழை­கி­றார்கள். குறிப்­பாக அவர்கள் பலஸ்­தீனில் மேற்­கொள்ளும் மனி­தா­பி­மா­­ன­மற்ற செயல்கள் கார­ண­மாக உள­ரீ­தியான ஆறு­தலை பெறு­வ­தற்கே வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக அதி­க­மான நாடுகள் இஸ்ரேல் சுற்­றுலா பய­ணிகள் வரு­வதை நிறுத்தி இருக்­கின்­றன. தென்­ஆ­பி­ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மாலைத் தீவு போன்ற நாடுகள் நிறுத்தி இருக்கின்றன. அதேநேரம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை எமது நாட்டில் குறைவடைந்துள்ளது. அதனால் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் வருவதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறோம் என்றார்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18369
  8. ஆம் இந்த சனி லேசுப்பட்ட சாமனல்ல இல்லவா யூரிப்பில் பின்வரும் தலைங்களில் பட்டையை கிள‌ப்புவார். கெத்து காட்டும் சனி வைச்சு செய்யும் சனி கொட்டி கொடுக்கும் சனி சுக்கிரனுடன் சேரும் சனி, 100% நிச்சயமாக திருமணத்திற்கு அப்பால் இன்னொரு உறவுக்கு வழி வகுப்பார். சனியும் குருவும் வக்கிரம் மறுமணம் நிச்சயம் குருவும் சனியும் இணைவு வெளிநாட்டு யோகம் கதவருகில் சனி/செவ்வயும் தோசம், தலைகீழாக நின்றாலும் காலம் பூரவும் கையில்தான் கதை சுக்கிரதசை ஆரம்பம் அந்தப்புரம் போக தயராகும் மிதுனராசியினர் சனி பெயர்சி ஜக்போட் அள்ளப்ப்கும் ராசிகள் வாசகர் அனுபவத்தில் இன்னும் யூரிப் தலையங்கள் வரவேற்கப்டுகின்றது
  9. அம்மா 38 வருடங்களாக தனிமையாக வாழ்ந்துள்ளார். எவ்வளவு கொடுமை? இந்த பிள்ளைகள் ஏன் இவ்வளவு சுயந‌லமாய் நடந்து கொள்கின்றார்கள்? இந்த வயது போன காலத்திலும் ஒரு companionship தேவைதானே?
  10. சுய இன்பம் கண்டால் கண்கள் உள்ளே போய், கன்னங்கள் ஒட்டிபோய் மெலிந்து,உள்ளங்கயில் மயிர் வளர்ந்துவிடும் என நமபினேன்.
  11. டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பரஸ்டு அஹமதி உடன் மொத்தம் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பரஸ்டு அஹமதி கருப்பு நிற ஆடை அணிந்து ஹிஜாப் அணியாமல் பாடல்கள் பாடியுள்ளார். முன்னதாக அந்த வீடியோவில், அவர், ‛‛நான் பரஸ்டு. எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன்'' என்று கூறியிருந்தார். அதாவது ஈரான் நாட்டில் பொதுவெளியில் பெண்கள் பாட அனுமதியில்லை. அதேபோல் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இருப்பினும் ஈரானின் இந்த உத்தரவை பரஸ்டு அஹமதி விரும்புவது இல்லை. இதனால் தான் அவர் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற பெயர் கொண்ட பெண் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெண்களை கொதிப்படைய வைத்தது. அப்போது அதனை எதிர்த்து பரஸ்டு அஹமதி பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது பரஸ்டு அஹமதி விவகாரம் ஈரானில் சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி ஈரான் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதித்துறை சார்பில் மிஷான் ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‛‛பாடகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி அவர் மீது அவரது இசைக்குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறியுள்ளார். Read more at: https://tamil.oneindia.com/news/international/iranian-singer-who-performed-without-hijab-to-face-appropriate-action-says-judiciary-department-662997.html
  12. நானும் நாதமுனியை "பொய்பொத்தல்" என்று ஒரு முறை அழைத்தேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். மறுபடியும் வந்து எழுத வேண்டுகிறேன்.
  13. நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
  14. ஆம் இதை நானும் கேள்விப்பட்டுள்ளேன் ரசோ. 2000 அல்லது ௨001 காலத்தில் நைஜீரியர் ஒருவருடன் வேலை செய்தேன். இவர் அமெரிக்காவில் degree mill ஒன்றை ந்டத்துபவர். எந்த டிகிரியும் accredited இல்லை. ஆனால் வேலை அனுபவங்களை convert டிக்ரி செய்து degree கொடுப்பார்கள். இவை அமெரிக்கவில் சட்டரீதியானது, தொழில் வழன்குனோரினால் எற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார்
  15. லத்தீப் பாரூக் தமிழில்: சப்ரி அஹமட் கடந்த 14 மாதங்­க­ளுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்­சாரம் உள்­ளிட்ட உயிர் வாழ்­வ­தற்­குத் ­தேவை­யான அனைத்தும் பறிக்­கப்­பட்ட நிலையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்­மனி போன்ற நாடு­களால் விநியோ­கிக்­கப்­பட்டு வீசப்­படும் 85,000 தொன் இற்கும் அதி­க­மான குண்­டு­க­ளாலும் இஸ்­ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயு­தங்­க­ளி­னாலும் இன்­று­வரை காசா, பலஸ்தீன் மக்­களின் மீதான படு­கொலை தாக்­கு­தல்கள் தினம் தினம் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த அப்­பட்­ட­மான இனப்­ப­டு­கொ­லைக்கு அமெ­ரிக்­காவின் அடி­வ­ரு­டி­க­ளாக செயற்­படும் சில முஸ்லிம் அரபு நாடு­களும் உடந்­தை­யாக உள்ளன. இரண்டாம் உல­கப்­போ­ருக்­குப்­பின்னர் மனி­த­குல வர­லாற்றில் நடை­பெற்ற மிக மோச­மான இனச்­சுத்­தி­க­ரிப்­பாகக் கரு­தப்­படும் இத்­தாக்­கு­தல்­கள்­ கா­ர­ண­மாக இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீ­னப்­பி­ர­தே­ச­மா­னது உலகின் மிகப்­பெ­ரிய அக­தி­கள்­ மு­கா­மாக மாற்றம் பெற்று இது­வரை சுமார் 44,000 இற்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்­களை கொன்று குவித்­த­தன்­மூலம் இன்று அது மாபெரும் மயான பூமி­யாக காட்­சி­ய­ளிக்­கி­றது.கொல்­லப்­பட்ட மக்­களில் மூன்றில் இரண்டு பங்­கினர் பெண்கள் மற்றும் குழந்­தைகள். இதில் எஞ்­சி­ய­வர்கள் குடிநீர், சுகா­தாரம் உள்­ளிட்ட அடிப்­படை வச­திகள் எது­வு­மற்று தத்­த­மது உயிர்­களை மட்டும் காப்­பாற்­றி­ய­வர்­க­ளாக திறந்­த­வெ­ளியில் தற்­கா­லிக கொட்­டில்­களில் வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். போர்க்­குற்­றங்­களுக்காக உலகின் பெரும்­பா­லான நாடுகள் இஸ்­ரேலை புறக்­க­ணித்து வரு­கின்­றன. இதில் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் இஸ்ரேல் பிர­தமர் பென்ஞ்­சமின் நெதன்­யாகு மீது போர்க்­குற்றம் சுமத்தி அவரை கைது செய்­வ­தற்­கான பிடி­வி­றாந்தை பிறப்­பித்­துள்­ளது. பலஸ்தீன் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள இக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னது மேற்­கு­லகில் உள்ள யூதர்­க­ளையும் கிறிஸ்­த­வர்­க­ளையும் உட­ன­டி­யாக போர் நிறுத்தம் செய்­யக்­கோரி முஸ்­லிம்­க­ளுடன் இணைந்து கொள்ள வேண்­டிய கட்­டா­யத்திற்கு தள்ளியுள்­ளது. இஸ்­ரே­லிய போர் குற்­றங்­க­ளுக்கு முடிவு கட்டக் கோரி உல­கெங்­கிலும் ஆர்ப்­பாட்­டங்­களும் எதிர்ப்புக் கோஷங்­களும் எழுப்­பப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக பல மேற்கு நாடு­களின் தலை­ந­க­ரங்­களில் இவை தின­சரி நிகழ்­வாகிவிட்டன. அந் நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் முன்­னெ­டுக்­கப்­படும் இஸ்­ரே­லிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நசுக்க எடுக்கும் முயற்­சி­களால் பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் போர்க்­க­ளங்­க­ளாக மாறி­யுள்­ளன. மனித குலத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யங்­களால், இறை­மை­யுள்ள நாடாக இருந்த பலஸ்­தீன நிலத்தின் மீது 1948 ஆம் ஆண்டு யூத சியோ­னிச சதிகள் மூலம் ஆக்­கி­ர­மித்து உரு­வாக்­கப்­பட்ட இஸ்­ரே­லினை, ஐக்­கிய நாடுகள் சபையில் இருந்து வெளி­யேற்ற வேண்டும் என்ற கோஷங்­களும் முன்­னரை விட தற்­போது வலுப்­பெற்று வரு­கின்­றன. இவ்­வாறு உல­கமே இஸ்­ரேலை ஒதுக்கித் தள்ளும் இந்தப் பின்­ன­ணியில், இலங்­கையின் ஹிக்­க­டுவை மற்றும் அரு­கம்பை பகு­தி­களில் பலஸ்­தீ­னத்தில் இனப்­ப­டு­கொலை செய்யும் இஸ்­ரே­லிய படை­க­ளுடன் இணைந்து போரி­டு­வ­தற்­காக பல்­வேறு உலக நாடு­க­ளி­லி­ருந்தும் அழைத்து வரப்­பட்­டுள்ள கூலிப்­ப­டை­க­ளுக்கு பயிற்சி முகாம்கள் நடாத்­தப்­ப­டு­வ­தாக அதிர்ச்சி தரும் அறிக்­கைகள் வெளி­யா­கி­யுள்­ளன. அதிலும் குறிப்­பாக அரு­கம்பை, எல்ல மற்றும் வெலி­கம போன்ற பிர­தே­சங்­களில் இவர்­க­ளது சட்ட விரோத செயற்­பா­டு­களின் பிர­சன்னம் தொடர்பில் உள்ளூர் ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன. மேலும் தெஹி­வளை உள்­ளிட்ட நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் “சபாத்” (Chabad) என்று அழைக்­கப்­படும் யூதர்­களின் வழி­பாட்டுத் தலங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது வெளி­வ­ரு­கின்ற அறிக்­கை­களின் படி, இலங்­கையின் உள்­நாட்டு சட்­டங்­க­ளுக்கு மாற்­ற­மாக இஸ்­ரே­லி­யர்கள் சொத்­துக்­களை வாங்­கு­கி­றார்கள், ஹோட்­டல்­களை கட்­டு­கி­றார்கள் மற்றும் இலங்­கையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் உள்ளூர் மக்­களை வேலைக்கு அமர்த்தி அவர்­களை பலஸ்­தீ­னிற்கும் ஹமா­சிற்கும் எதி­ரான மனோ­பாவம் உடை­ய­வர்­க­ளாக மூளைச்­ச­லவை செய்­வதில் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கின்­றனர். இன்று பலஸ்­தீனில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் போர்க்­குற்­றங்­களை பிர­தான ஊட­கங்­களில் வெளி­வரா வண்ணம் தடுக்கும் முயற்­சி­க­ளிலும் இஸ்­ரே­லிய முக­வர்கள் ஊடு­ருவி செயற்­ப­டு­கின்­றனர். குறிப்­பாக தின­சரி இடம் பெறும் பலஸ்தீன் காசா அழி­வுகள் தொடர்பில் இலங்­கையின் முன்­னிலை ஊட­கங்­களில் செய்­திகள் இருட்­ட­டிப்பு செய்து வெளி­யி­டப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­யது. இதன் மூலம் நாட்டு மக்­க­ளுக்கு இஸ்­ரேலின் மனித குலத்­திற்கு விரோ­த­மான செயற்­பா­டுகள் தொடர்பில் மிகக் குறைந்த தக­வல்­களே வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக, இலங்­கையில் ஒளி­ப­ரப்­பப்­படும் பியோ டீவி (Peo TV) இன் “செனல் 97” மூல­மாக இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வா­கவும் யூத அரசை மிகவும் அமை­தியை விரும்பும் ஒரு நாடா­கவும் காண்பிக்கும் வகையில் அப்­பட்­ட­மான பொய்­க­ள் பரப்பப்­ப­டு­கின்­றன. ஆத­ர­வற்ற பலஸ்­தீன மக்கள் மீதான போர், படு­கொ­லைகள், மனித அவ­லங்கள் மற்றும் அழி­வு­க­ளுக்குப் பின்னால் இஸ்­ரே­லிய அரசு உள்­ளது என்ற உண்­மையை இந்த ஒளி­ப­ரப்பு அலை­வ­ரிசை மூடி மறைக்­கின்­றது. மேலும் ஒரு எடுத்­துக்­காட்­டாக, யூடியூப் சமூக வலைத்­த­ளத்தில் ஒரு சிங்­களப் பெண்­மணி யூதர்­களை மிகவும் மனி­தா­பி­மா­ன­மு­டைய மக்கள் என்றும் பலஸ்­தீ­னர்­க­ளையும் அவர்­களின் பிர­தி­நி­தி­யான ஹமா­ஸினையும் மிகவும் மோச­மாக சித்­த­ரித்து விவ­ரிக்கும் காட்­சி­க­ளையும் காணக் கூடி­ய­தாக உள்­ளது. அண்­மையில் கிழக்கு மாகாணம் மட்­டக்­க­ளப்பில் சியோ­னிச சார்புப் பேரணி ஒன்றை யூத முக­வர்கள் ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். அதே வேளை, இலங்­கை­யி­லி­ருந்து தொழி­லுக்­காக அனுப்­பப்­பட்ட சுமார் 10,000 பேருக்கு அதி­க­மான மனித வளங்கள் இஸ்­ரேலின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. மேலும் கடந்த ஆட்­சியில் இலங்கை இஸ்­ரே­லுடன் பல புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளிலும் கைச்சாத்­திட்­டுள்­ளது. இலங்­கையில் யூத வழி­பாட்டுத் தலங்­களை அமைப்­ப­தற்கும் பல்­வேறு நாடு­களில் இருந்து அழைத்து வரப்­படும் கூலிப்­ப­டை­யி­ன­ருக்கு இலங்­கையில் இரா­ணுவப் பயிற்சி வழங்­கு­வ­தற்கும் பொறுப்­பா­கவிருக்கும் இஸ்­ரே­லிய முக்­கிய புள்ளி ஒரு­வ­ருக்கு இலங்கை இராணுவம் பாது­காப்பு வழங்­கு­வ­தாக மற்­று­மொரு அதிர்ச்சித் தக­வலும் வெளி­யா­கி­யுள்­ளது. இது கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக இடம் பெறு­வ­தாக யூடியூப் அறிக்­கை­யொன்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. Kader Master (காதர் மாஸ்டர்) என்ற யூடி­யூ­பரின் தக­வ­லின்­படி இஸ்­ரே­லிய தனியார் பாது­காப்பு நிறு­வ­னங்­களால் பயிற்சி மையங்கள் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் “சபாத்” எனப்­படும் இஸ்­ரே­லிய வழி­பாட்டுத் தளங்­களில் ராணுவப் பயிற்சி வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இது தொடர்­பான ஒரு மிக முக்­கிய செய்­தி­யாக, ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தா­பிக்­கான சபாத் தூது­வ­ரான ரப்பி ஸ்வி கோகன் (Rabbi Zvi Kogan )கடந்த மாதம் கடத்­தப்­பட்டுக் கொல்­லப்­பட்டார். ஐக்­கிய அரபு அமீ­ரக அதி­கா­ரிகள் இது முன்­கூட்­டியே திட்­ட­மிட்ட ஒரு கொலைத் தாக்­குதல் என்று தெரி­வித்­தனர். “சபாத்” இஸ்­ரே­லிய உளவுப் பிரி­வான மொசாட்டின் ஒரு முன்­னிலை அமைப்­பாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை மொல்­டோ­விய நாட்டு வம்­சா­வளி இஸ்­ரே­லி­ய­ரான கோகன் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்­பித்­த­தி­லி­ருந்து சமூக வலைத்­த­ளங்­களின் பல­மான எதிர்ப்­புக்கு இலக்­கா­கி­யி­ருந்தார். இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இந்த விட­ய­மா­னது இஸ்ரேல் தொடர்பில் காலம் கால­மாக ஆட்சி செய்த முன்­னைய அர­சாங்­கங்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த நட­வ­டிக்­கை­களின் பிரதி பல­னாக தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள ஒரு நெருக்­க­டி­யா­கவே தோன்­று­கின்­றது. எவ்வாறாயினும், இலங்கையின் சமூக மத நல்லிணக்கத்தையும், நாட்டின் தற்போதைய அமைதிச் சூழ்நிலையையும் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இவ்விடயம் தொடர்பில் தீர ஆராய்ந்து சட்டவிரோத சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் யூதர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இலங்­கையில் சில காலங்­க­ளுக்கு முன்பு முடுக்கி விடப்­பட்ட முஸ்­லிம்கள் மீதான அடக்­கு­மு­றையும் இஸ்­லாத்தை பூதா­க­ர­மாக சித்­த­ரிக்கும் பல்­வேறு நிகழ்­வு­களும் நடை­பெற்ற போது இந்­துத்­துவ பாசிச அமைப்­பான ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு கட்­ட­மைப்­பு­களின் பிர­சன்னம் ஒரே நேரத்தில் நிகழ்ந்­தது ஒரு தற்­செயல் நிகழ்­வல்ல என எண்ணுவது ஆச்சரியமன்று. இதேவேளை இலங்கையில் பல அப்பாவி கிறிஸ்தவ மக்களின் படுகொலைக்குக் காரணமான ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்புலத்தில் இப்புனிதமற்ற சக்திகளின் கூட்டணிச் செயற்பாடுகளும் உள்ளது என்பதையும் மறந்து விடலாகாது.- Vidivelli https://www.vidivelli.lk/article/18166
  16. ரே நாளில் 1000 பேருடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார். லில்லி பிலிப்ஸ் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகையான லில்லி பிலிப்ஸ்(lily phillips), 24 மணி நேரத்திற்குள் 1,000 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு புதிய சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளார். ரெக்கார்டு பிரேக்கிங் ஈவன்ட் ஆஃப் தி இயர் என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 300 பேருடன் பயிற்சி இதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்களை தேர்வு செய்து வருகிறார். இதுவரை ஏகப்பட்ட பேர் இதற்காக விண்ணப்பித்து வரும் நிலையில், அதில் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது குறித்து பேசிய லில்லி பிலிப்ஸ், "எப்படியாவது இந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதற்காக கடந்த சில வாரங்களில் மட்டும் குறைந்தது 300 பேருடன் உடலுறவு கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன். பலரும் நான் செய்யும் வேலையைத் தப்பாகப் பேசுகிறார்கள். ஏதோ சுலபமான வேலை போலச் சொல்கிறார்கள். ஆனால், இது ஒரு குத்துச்சண்டை போட்டி போன்றது. இது உண்மையில் ரொம்பவே கஷ்டமான வேலை. வழக்கமான அலுவலக வேலையை விடப் பல மடங்கு கடினமானது" என தெரிவித்துள்ளார். எச்சரிக்கும் மருத்துவர்கள் இந்த விபரீதம் வேண்டாம் என்று லில்லி பிலிப்ஸை எச்சரிக்கும் மருத்துவர்கள், "ஒரே நேரத்தில் இத்தனை பேருடன் உடலுறவு கொள்வது பாலியல் நோய் பரவல் ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கும். அத்தோடு உடலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும்" என கூறியுள்ளனர். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டில் போலந்தில் நடந்த நிகழ்வில், லிசா ஸ்பார்க்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை, ஒரு நாளில் அதிகபட்ச 919 பேருடன் உடலுறவு கொண்டு ஒரே நாள் அதிக பேருடன் உடலுறுவு கொண்ட சாதனையை படைத்தார். அதே நேரம் அந்த நிகழ்வுக்குப் பிறகு ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டதாக லிசா கூறியிருந்தார். https://ibctamilnadu.com/article/actress-break-record-intimate-with-1000-men-in-day-1733654909
  17. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்டது. அதில், தேசிய இனப்பிரச்சினை, மாகாணசபை முறைமை, காணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம், கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் கல்முனை வடக்கு பிரேதச செயலக தரம் உயர்த்தல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இதில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழ் தரப்பின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்வினை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும், தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை தொடர்ந்து நடைமுறைப்படுவதுடன், மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரமும் குறைக்கப்பட மாட்டாது என்றும், காணிகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லையென்றும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை முழுமையாக அல்லது கட்டம் கட்டமாக விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கடந்த காலங்களில் JVP யினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த சட்டத்தின் இறுக்கமான போக்கை நீக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால் சில இனவாதிகள் இதனை வேண்டுமென்று குழப்ப முயற்சிப்பார்கள் என்பதனால் இதனை கவனமாக ஆராய உள்ளதாகவும், இழுபறியாக இருக்கின்ற கைதிகள் விடையத்தில் சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கவனமாக கையாள உள்ளதாகவும், வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு தமிழரசு கட்சியில் உள்ளவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென்றும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் பற்றிய நிருவாக விடையத்தில் அரசியலுக்கு அப்பால் நடைமுறைப்படுத்துவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பினால் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருப்தியை வெளியிட்டுள்ளனர். இவ்வாறுதான் நல்லாட்சி காலங்களிலும் அடுத்த தீபாவெளிக்குள் தீர்வு கிடைத்துவிடுமென்று இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் ஒவ்வொரு வருடமும் கூறிக்கூறி காலங்கள் கரைந்தது. இங்கே பேச்சுவார்த்தை மூலமாக ஏற்றுக்கொண்ட விடையங்களை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் நடைமுறைப்படுத்துவாரா அல்லது நல்லாட்சிக் காலத்தில் ஏற்பட்டதுபோன்று தடைகள் ஏற்படுமா என்பதனை சில மாதங்களில் உணர்ந்துகொள்ளலாம். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/12/blog-post_76.html
  18. பாறுக் ஷிஹான் க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ற‌ செய‌ல‌க‌ம் இல்லை. அத்துட‌ன் இது விட‌ய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ ஜ‌னாதிப‌திக‌ள் இது ப‌ற்றி முஸ்லிம் த‌ர‌ப்புக‌ளுட‌ன் பேசாம‌ல் எத்த‌கைய‌ தீர்வுக்கும் வ‌ர‌முடியாது என்றே கூறியுள்ளனர்.க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌லக‌ம் ச‌ம்ப‌ந்தமாக‌ அத‌ற்குரிய‌ அமைச்சின் செய‌லாள‌ருட‌ன் தான் பேசுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌இ சாண‌க்கிய‌ன் எம்பி உட்ப‌ட்ட‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு எம்பீக்க‌ளிட‌ம் உறுதி தெரிவித்த‌தாக‌ சாண‌க்கிய‌ கூறியுள்ளமை ப‌ற்றி ஜ‌னாதிப‌தி த‌ர‌ப்பு தெளிவு ப‌டுத்த‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார். க‌ல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அண்மையில் ஜ‌னாதிப‌தியுட‌னான‌ ச‌ந்திப்பின் பின்ன‌ரே சாண‌க்கிய‌ன் எம்பி கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ற‌ செய‌ல‌க‌ம் இல்லை. அத்துட‌ன் இது விட‌ய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ ஜ‌னாதிப‌திக‌ள் இது ப‌ற்றி முஸ்லிம் த‌ர‌ப்புக‌ளுட‌ன் பேசாம‌ல் எத்த‌கைய‌ தீர்வுக்கும் வ‌ர‌முடியாது என்றே சொல்லியுள்ள‌ன‌ர்.2020ம் ஆண்டு பிர‌த‌ம‌ராக‌ இருந்த‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் க‌ருணா இக்கோரிகையை முன் வைத்த‌ போது அக்கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ முஸ்லிம்க‌ளின் க‌ருத்தை கேட்காம‌ல் முடிவுக்கு வ‌ர‌வேண்டாம் என‌ தெரிவித்த‌தை ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌ச ஏற்றிருந்தார். இத்த‌னைக்கும் ம‌ஹிந்த‌விக்கு எந்த‌ தேர்த‌லிலும் க‌ல்முனை முஸ்லிம்க‌ளில் 20 வீத‌த்துக்கு மேல் வாக்கு போட்ட‌தில்லை.அது போல் பசில் ராஜ‌பக்ச அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ பேச‌ த‌மிழ் எம்.பீக்க‌ள் முற்ப‌ட்ட‌ போது அது ப‌ற்றி பேச‌ வேண்டாம் என‌ அவ‌ர் உறுதிப‌ட‌ கூறியிருந்தார்.இந்த‌ பொது தேர்த‌லில் தேசிய மக்கள் சக்திக்கு க‌ல்முனைத்தொகுதி முஸ்லிம்க‌ளில் 70 வீத‌மானோர் வாக்கு போட்ட‌துட‌ன் க‌ல்முனை தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்ப‌ற்ற உல‌மா க‌ட்சி உட்ப‌ட‌ ப‌ல‌ரும் உத‌வியுள்ள‌ன‌ர். ஆக‌வே க‌ல்முனையை வ‌ட‌க்கு கிழ‌க்கு என்றோ த‌மிழ் செய‌ல‌க‌ம் முஸ்லிம் செய‌ல‌க‌ம் என்றோ இன‌ ரீதியில் பிரிப்ப‌த‌ற்கு ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌ இட‌ம‌ளிக்க‌ கூடாது என்ப‌தை வ‌லியுறுத்துகிறோம்.த‌மிழ‌ர்க‌ள் பிர‌ச்சினைக‌ள் ச‌ம்ப‌ந்த‌மாக‌வும்இ க‌ல்முனை செய‌ல‌க‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌வும் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின‌ர் பாராளும‌ன்றில் பேசுவ‌துட‌ன் ம‌ட்டும் நிற்காம‌ல் ஜ‌னாதிப‌தியையும் நேர‌டியாக‌ க‌ண்டு பேசியுள்ள‌ன‌ர். ஆனால் ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌க்கீம் இது ப‌ற்றி பாராளும‌ன்றில் க‌ல்முனையில் முஸ்லிம்க‌ளுக்கும் பிர‌ச்சினை உண்டு என்றும் இது பற்றி க‌ல‌ந்துரையாட‌ வேண்டும் என்ற‌ வார்த்தையுட‌ன் அட‌ங்கிவிட்டார்.இது ப‌ற்றி ந‌ல்லாட்சி கால‌த்தில் எத்த‌னையோ க‌ல‌ந்துரைடாட‌ல்க‌ள் ந‌டைபெற்று அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்ட‌ன‌. இந்த‌ நிலையில் ஹ‌க்கீம் மீண்டும் ப‌ழைய‌ ப‌ல்ல‌வி பாடாது எதிர்க்க‌ட்சியில் உள்ள‌ முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌ன் ஜ‌னாதிப‌தியை ச‌ந்தித்து க‌ல்முனையை இன‌ரீதியாக‌ துண்டிப்ப‌தை அனும‌திக்க‌ முடியாது என்றும் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பாண்டிருப்பு செய‌ல‌க‌ம் வ‌ழ‌ங்க‌லாம் என்ப‌தையும் வ‌லியுறுத்த‌ வேண்டும் என்றார். https://madawalaenews.com/9925.html
  19. கள்ளுத்தவ‌றணைக்கும் அனுமதி பத்திரம் அவசியம்தானே? இதுவும் மதுபானமல்லவா?
  20. பி எம் எம் பெரோஸ் நளீமி ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர், மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பாரிய உரிமை மீறல்கள் எல்லாம் கடந்த காலங்­களில் இடம்­பெற்ற பொழுது வீட்­டுக்குள் ஒழிந்து கொண்­டி­ருந்­த­வர்கள் இப்­போது முகப்­புத்­தக பொது வெளியில் மல்­யுத்த வீரர்­க­ளாக பிர­கா­சிக்­கி­றார்கள்.. கடந்த பல தசாப்­தங்­க­ளாக அம்­பாறை மட்­டக்­க­ளப்பு திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்­லிம்­களின் காணி பிரச்­சி­னைகள் வட­மா­காண முஸ்­லிம்­க­ளு­டைய பிரச்­சினைகள் இன்னும் வட கிழக்­குக்கு வெளியில் வாழு­கின்ற முஸ்­லிம்­க­ளு­டைய கல்வி, பொரு­ளா­தார, பாது­காப்பு பிரச்­சி­னைகள், வியா­பா­ரங்­களை சுதந்­தி­ர­மாக செய்ய முடி­யாமல் வியா­பார தலங்கள் பள்­ளி­வா­சல்கள் வீடுகள் எரிக்­கப்­பட்ட பல பிரச்­சி­னைகள் எல்லாம் இடம்­பெற்­றன. கலாச்­சார உரிமை மத உரிமை மத வணக்க வழி­பா­டு­களை செய்­வ­தற்­கான உரிமை மார்க்க கல்­வியை கற்­ப­தற்­கான உரி­மைகள் அதற்­கான கலா­பீ­டங்­களை நடத்­து­வ­தற்­கான உரி­மைகள் எல்லாம் அப்­பட்­ட­மாக மீறப்­பட்­டன. தேர்­தல்கள் வரு­கின்ற பொழுது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான, இஸ்­லா­மிய மார்க்­கத்­துக்கு எதி­ரான இனத் தேசியவாத தீவிர சிந்­தனை உள்ள பல நபர்­களின் வெறுப்பு பேச்­சுக்கள் மார்க்­கத்தை நமது கலாச்­சார உடை­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுகள் எல்லாம் இடம்­பெற்ற பொழுது அன்­றி­ருந்த அர­சாங்­கங்கள் அவர்­க­ளுக்கு எதி­ராக எதுவும் செய்­யாமல் சட்­டத்தை அமுல்­ப­டுத்­தாமல் அமை­தி­யாக வேடிக்கை பார்த்த பொழுது இந்த போரா­ளிகள் எங்­கி­ருந்­தார்கள்…? இந்த பிரச்­சி­னைகள் சிறு­பான்மை சமூ­கத்தின் சமத்­துவ உரிமை, சட்­டத்தின் முன் சம­மாக நடத்­தப்­ப­டு­வ­தற்­கான உரிமை, சட்­டப்­பா­து­காப்பை பெறு­வ­தற்­கான உரிமை, பாது­காப்பு உரிமை கலா­சார உரிமை மத உரிமை என பல்­வேறு உரி­மைகள் மீறப்­பட்­டன. அப்­பொ­ழு­தெல்லாம் இருந்த அர­சாங்­கங்­க­ளுக்கு எதி­ராக இவர்கள் வாய் திறக்­காமல் எங்­கி­ருந்­தார்கள்? மிகவும் சந்­தோ­ஷ­மான செய்தி தற்­பொ­ழு­தா­வது நம்­ம­வர்கள் விழித்­தி­ருக்­கி­றார்கள் …. எனவே விழித்த கையோடு மேற்­படி உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தற்கு தயா­ரா­குங்கள். உங்கள் போராட்­டங்கள் முகப்­புத்­த­கத்­திலோ அல்­லது ஜும்மா முடிந்­த­வுடன் சில பதா­கை­களை தூக்­கிக்­கொண்டு வீடு செல்­கின்ற வழியில் ஒன்று சேர்ந்து கோச­மிட்டு விட்டுச் சென்­று­வி­டுதோ அல்ல.. இந்தப் பிரச்­சி­னை­களை ஆவண படுத்­து­வ­தற்கு தயா­ரா­குங்கள்.. நீதி­மன்­றத்தில் வழக்­கி­டு­வ­தற்கு தயா­ரா­குங்கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பா­டாக பதிவு செய்­வ­தற்கு வெளி வாருங்கள். இவை­களால் முடி­யாத பொழுது சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்பு வரைக்கும் கொண்டு செல்­வ­தற்கு முன் வாருங்கள் இவற்றைச் செய்­வ­தற்கு நிதிப்­பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாறுங்கள் கல்­வித்­து­றையில் அல்­லது பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கற்­கின்ற மாண­வர்­க­ளுக்கு இப்­ப­டி­யான சமூகப் பிரச்­சி­னை­களை ஆய்வுத் தலைப்­பு­க­ளாக எடுக்­கும்­படி ஆலோ­சனை கூறுங்கள். இவைகள் உருப்­ப­டி­யான முன்­னெடுப்­பு­க­ளாக அமையும். இவை­களை விட்டு விட்டு சில்­ல­றத்­த­ன­மான விட­யங்­களை சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளாக இந்த பொது வெளியில் பயன்­ப­டுத்­தா­தீர்கள். நவீன தொழில்­நுட்ப சாத­னங்கள் மூலம் நம்­மு­டைய எழுத்­துக்கள் எல்லாம் யாருக்கு என்ன மொழியில் வேண்­டுமோ அவைகள் அடுத்த கணம் மொழி பெயர்க்­கப்­பட்டு பார்ப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கின்­றன. நாம் அறி­வில்­லாத சமூகம் என பிறர் சிந்திக்கும் வகையில் நடந்து கொள்­ளா­தீர்கள். புதிய அர­சாங்கம் இன­வா­தத்தை ஒழித்து ஊழ­லையும் ஒழித்து சிறந்த நாட்டைக் கட்டி எழுப்­பு­வ­தற்­கான முயற்­சி­களை செய்வதாக கூறுகிறார்கள். இவர்களுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியும். நமது உரிமைகளை இழந்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்கிற ஒரு நிலை ஏற்படுமாக இருப்பின் அப்பொழுது விலகிக்கொள்ள முடியும்.மூன்றில் இரண்டை அவர்கள் வைத்திருக்கின்ற பொழுது நாம் மிகவும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18154
  21. வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணி திரட்டிப் போராடுவோம்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். கடந்த 27 ஆம் திகதி கடும் மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இது தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும். தமிழ் மக்களின் பார்வையில் மாவீரர்கள் யார்? அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணித்த விடுதலைப்புலிகளாவர். நாட்டை அழித்த – சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய அந்தப் பயங்கரவாதிகளை எப்படி நினைவேந்தலாம்? நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி இல்லை. எனவே, மாவீரர் நாள் நிகழ்வுக்கு அநுர அரசு ஏன் அனுமதி வழங்கியது? தமிழ் டயஸ்போராக்களுக்குப் பயந்து அநுர அரசு செயற்படுகின்றதா? வடக்கு, கிழக்கில் இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதுதான் நல்லிணக்கம் அல்ல என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார். https://madawalaenews.com/9470.html
  22. எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது. குறிப்­பாக கண்டி இரா­ஜியம் வலு­வான அர­சாக இருந்­தது. எனினும் 1796 இலங்­கைக்கு படை­யெ­டுத்த பிரித்­தா­னியர் 1815 இல் முழு இலங்­கை­யையும் கைப்­பற்றி ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்­தனர். கால­னித்­து­வத்தின் வரு­கை­க்கு முன்­னரும் பின்பும் இலங்­கையின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்­துள்­ளனர். குறிப்­பாக குரு­நாகல் யுகத்­தின்­போது அர­ச­னா­கவும் குராசான் மன்­னரின் கதையும் இருக்­கி­றது. இருப்­பினும் பிரித்­தா­னியர் 1833 இல் அறி­மு­கப்­ப­டுத்­திய கோல்­புறூக் அர­சியல் யாப்பின் படி ஆறு நிர்­வாக உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். இதில் இலங்கை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டனர். இலங்கை முஸ்­லிம்­களின் மறு­ம­லர்ச்­சியின் தந்­தை­யான எம்.சி.சித்­தி­லெப்பை போன்­றோரின் போராட்­டத்தின் பின்பு 1889 ஆம் ஆண்டு கோல்­புறூக் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு பிர­தி­நி­தித்­துவம் எட்­டப்பட்டது. இதன்­போது, இலங்கை முஸ்லிம் ஒருவர் சட்ட நிரூ­பன சபையின் உத்­தி­யோகப்பற்­றற்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானார். 1910 ஆம் ஆண்டு குரு­மக்­கலம் யாப்­பிலும் 1921 தற்­கா­லிக மெனிங் அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­பட்­டது. எனினும், 1924 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மனிங் டெவொன்­சயர் அர­சியல் சீர்­தி­ருத்தம் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை மூன்­றாக உறுதி செய்­தது. இவ்­வாறே 1931 இல் டொனமூர் சீர்­தி­ருத்தம் முன்­வைத்த நிர்­வாக முறையில் மந்­திரி சபையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இருந்­தது. இத­னி­டையே, 1947 சோல்­பரி யாப்பு, சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான அமைச்­ச­ர­வையில் தொடர்ச்­சி­யாக முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்­து­வந்­துள்­ளனர். எந்­த­வித அழுத்­தங்­களும் இன்றி நாட்டின் இன பல்­வ­கை­மையை கருத்­திற்­கொண்டு ஒவ்­வொரு அர­சாங்­கமும் நாட்டின் நிர்­வா­கத்­து­றையின் பங்­கு­தா­ரர்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­யொன்றை உள்­ளீர்க்கும் நடை­முறை இருந்து வந்­துள்­ளது. எனினும், முதன் முறை­யாக இலங்கை சோச­லிச ஜன­நா­யக குடி­ய­ரசின் பத்­தா­வது பொதுத் தேர்­த­லுக்கு பின்னர் நாட்டின் ஒன்­ப­தா­வது ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட 22 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால், தேசிய மக்கள் சக்­தியை 61 வீதத்­திற்கும் அதி­க­மான வாக்குப் பலத்­துடன் மூன்றில் இரண்டு பாரா­ளு­மன்ற ஆச­னத்தைப் பெற்று வலு­வான ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்கு பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்த முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை பல்­வேறு வகை­யிலும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. வாக்­க­ளித்த, வாக்­க­ளிக்­காத, ஆத­ர­வ­ளித்த, ஆத­ர­வ­ளிக்­காத மக்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைக்கும் நிலையில் அர­சாங்கம் இதற்கு பதி­ல­ளிக்கும் விதம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சிம்­மா­சன உரை­யின்­போது தனது உரையின் ஆரம்­பத்­தி­லேயே இன­வாதம், மத­வாதம் பற்­றி­யெல்லாம் பேசி­யி­ருந்தார். எனினும், கடந்த 18 ஆம் திகதி அவர் வழங்­கிய அமைச்­ச­ரவை நிய­மனம் குறித்து முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கத்தான் இந்த பதிலை குறிப்­பிட்­டாரா என்ற கேள்­வியும் எழுந்­தது. இதை­விட கடந்த வார இறு­தியில் அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு சென்ற வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­திடம் இது விட­ய­மாக முஸ்­லிம்கள் நேர­டி­யாக கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் விஜித, “முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேண்­டு­மென கேட்­கா­தீர்கள். அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்­ச­ராக இருந்­த­போது, முஸ்லிம் பாட­சாலை மாண­வி­க­ளுக்கு ஹிஜாப் அணி­வ­தற்­கான துணியை வழங்க வேண்­டு­மென அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்தேன். நான் சிங்­கள அமைச்சர் தானே. முஸ்லிம் அமைச்சர் அல்­லவே?அம்­பா­றையில் எங்­க­ளுக்கு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­க­வில்லை. ஆனால் நாங்கள் ஆதம்­பா­வாவை தேசி­யப்­பட்­டி­யலில் நிய­மித்தோம்.மேல்­மா­காண ஆளுநர் முஸ்லிம் ஒருவர். எனவே முஸ்லிம் ஒருவர் அமைச்­ச­ர­வையில் இலை­யென்று, அந்த விட­யத்தில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்டாம்” என குறிப்­பிட்­டி­ருந்தார். இது இப்­ப­டி­யி­ருக்க கடந்த திங்­க­ளன்று சபா­நா­யகர் அசோக்க ரன்­வல அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு சென்று அதன் தலைவர் முப்தி ரிஸ்வி, செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் உலமா சபையின் நிர்­வாக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­தி­ருந்தார். இதன்­போது, நாட்டில் சகல இன மக்­களும் தங்கள் மத, கலா­சார அடை­யா­ளங்­களை பேணி வாழும் உரிமை பெற்­றுள்­ளனர். ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் பாரா­ளு­மன்ற அக்­கி­ரா­சன உரையை மேற்­கோ­ளிட்டு, நாட்டில் ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும். இன­வாத, மத­வாத சிந்­த­னை­களை தூண்டி மக்­களை பிரிப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­தினார். எனினும், அவர் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­ப­டுத்­தப்­ப­டாமை குறித்து எந்த கருத்­தையும் நேர­டி­யாக குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை. இத­னி­டையே, இது­வி­ட­ய­மாக நேற்­றுமுன் தினம் செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பேச்­சாளர் நலிந்த ஜய­திஸ்­ஸ­வினால் சில கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டது. ஊட­க­வி­ய­லாளர் றிப்தி அலி­யினால் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நிதி இல்­லாமை தொடர்பில் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரிடம் நேர­டி­யாக கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்”நாங்கள் இனம், மதம் அல்­லது சாதி அடிப்­ப­டையில் அமைச்­ச­ர­வையை அமைக்­க­வில்லை. அமைச்சு அதி­கா­ரங்­களை கையாள்­வதில் மிகவும் திற­மை­யான நபர்­களை நாங்கள் தேர்ந்­தெ­டுத்தோம். மேல் மாகாண ஆளு­ந­ராக முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பிரதி சபா­நா­யகர், பிரதி அமைச்சர் போன்ற பத­வி­களை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் வகிக்­கின்­றனர். மேலும், முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் ஒருவர் தேசியப்பட்­டியல் மூலம் நிய­மிக்­கப்­பட்டார். குறிப்­பிட்ட இனங்கள், மதங்கள் அல்­லது சாதிகள் அன்றி ஒட்­டு­மொத்த இலங்கை தேசத்­துக்கும் சேவை செய்­வ­தி­லேயே நாம் கவனம் செலுத்­து­கிறோம்” என்றார். அத்­துடன், தற்­போ­தைய நிலை­மையை இனம் அல்­லது மதத்தின் கண்­ணோட்­டத்தில் பார்க்க வேண்டாம். ஒன்­றி­ணைந்த இலங்கை தேசம் என்ற தொலை­நோக்கு பார்­வை­யுடன் புதிய அர­சாங்­கத்­தையும் அமைச்­ச­ர­வை­யையும் நாங்கள் நிறு­வி­யுள்ளோம். இந்த அணு­கு­மு­றை­யா­னது பிரச்­சி­னை­களை மிகவும் திறம்­பட கையாள்­வ­தற்கு எமக்கு இட­ம­ளிக்கும்” என்றும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தாரம் மற்றும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ கூறினார். இங்கு அமைச்­சர்­க­ளான விஜித ஹேரத் மற்றும் நலிந்த ஜய­திஸ்ஸ ஆகியோர் ஒரே மாதி­ரி­யான பதில்­க­ளையே குறிப்­பிட்­டுள்­ளனர். எனவே, இந்த விவ­கா­ரத்­திற்கு இப்­ப­டித்தான் பதி­ல­ளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்­தி­யினால் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்ற வினா எழு­கி­றது. இத­னி­டையே, மிகவும் தகு­தி­யு­டைய அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்­குத்தான் அமைச்சுப் பத­வி­களும் பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் அமைச்­சு­களின் செய­லாளர் பத­வி­களும் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆக, தேசிய மக்கள் சக்தி ஊடாக எட்டு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­கினர். இவர்­களில் ஒருவர் மாத்­திரம் பிர­தி­ய­மைச்சுப் பத­விக்கு தகு­தி­யா­ன­வ­ராக இருந்­துள்ளார். அத்­தோடு, பிரதி சபா­நா­யகர் பத­வியே இன்­னொரு முஸ்லிம் பிர­தி­நி­தியின் தகு­திக்கு பொருத்­த­மா­ன­தாக இருந்­துள்­ளது. எனினும், இலங்கை நிர்­வாக சேவையில் இருக்கும் முஸ்லிம் அதி­கா­ரிகள் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. இம்­முறை பொதுத் தேர்தல் இலங்கை அர­சியல் வர­லாற்றில் முற்­றிலும் மாறு­பட்­ட­தாக அமைந்­தது. இந்த மாற்­றத்தை விரும்­பியே பெரும்­பா­லான முஸ்லிம் மக்­களும் தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். இந்­நி­லையில், அவர்கள் பாராம்­ப­ரி­ய­மாக ஆத­ரித்து வந்த ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது அந்த கட்­சி­யி­லி­ருந்து பிரிந்த ஐக்­கிய மக்கள் சக்­தி­யையும் முஸ்­லிம்­ கட்­சி­க­ளையும் விட்டு வெளி­யேறி புதிய அர­சியல் பாதையை தேர்ந்­தெ­டுத்து தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். ஜனா­தி­பதி அநுர மீதான நம்­பிக்கை மற்றும் முஸ்லிம் கட்­சிகள் மீதான அதி­ருப்­தி­யினால் மக்கள் இந்த தீர்­மா­னத்­திற்கு தள்­ளப்­பட்­டனர். மோச­மான முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டு­களை பிழை என்று கருதி தமது பாதையை மாற்­றிக்­கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களை அரவணைக்க தவறுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது. முஸ்­லிம்கள் மத்­தியில் நன்­ம­திப்பை பெற்­றுள்ள தேசிய மக்கள் சக்தி அதனை தொட­ர்ந்தும் தக்க வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க வேண்­டுமே தவிர முஸ்லிம் சமூ­கத்தை அதி­ருப்­திக்­குள்­ளாக்கும் தீர்­மா­னங்­களை எடுக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.- Vidivelli https://www.vidivelli.lk/article/18149
  23. இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் - பொதுஜன பெரமுன விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எவ்வாறு இடமளிக்க முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் மனோஜ் கமகே (Manoj Gamage) கேள்வியெழுப்பியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கயைில், ”வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இம்முறை வடக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுபாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் வடக்கு மக்கள் இம்முறை போராளிகளையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் பகிரங்கமாக நினைவு கூர்ந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் 32 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை எவ்வாறு வரையறைகளுடன் அனுஷ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் ஒசாமா பின் லேடனையும் இலங்கையில் அனுஷ்டிக்க நேரிடும். தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் நாட்டு பற்றுள்ள இலங்கையர்களுக்கு கிடையாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மாதமளவில் பெருமளவான இராணுவ முகாமைகளை வடக்கில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை பகிர்ந்தளித்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய மீளாய்வுகளுக்கு பின்னர் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இச்செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். வடக்கிலும், கிழக்கிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கமும் அரச தலைவர்களும் மறக்க கூடாது“ என தெரிவித்தார். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_706.html
  24. (நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, மேலும் கூறியிருப்பதாவது, நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும். இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது. மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும். அதேபோன்று தெற்கில் உள்ள கடும்போக்கு சக்திகள் இனவாதத்தைப் பரப்புவதற்கு ஏதுவான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்குவதைத் தவிர்ப்போம். அதேவேளை , பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய 'இலங்கையர்' என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_953.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.