Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3050
 • Joined

 • Last visited

Everything posted by colomban

 1. இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல. நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள். இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல
 2. மாளிகைக்காடு நிருபர் தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும் அவர்கள் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தமிழ் தலைமைகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிங்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி, கலாச்சாரம் என்பன தமிழ் கலாச்சாரத்திலிருந்து வேறானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இன்று காலை அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு சமீபத்தைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், பெரும்பான்மை சிங்கள மக்களால், சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தர்களோ, அதனை விட அதிகமான துன்பங்களை வடக்கில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்களினால் முஸ்லிம் மக்கள் அனுபவித்தார்கள் என்பதனை தமிழ் தலைமைகளினால் மறுக்க முடியுமா? இனியும் முஸ்லிங்களினால் தமிழ் தலைமைகளை நம்ப முடியாது. நம்பி இன்னுமொரு முறை சோதித்துப் பார்க்க முஸ்லிங்கள் முட்டாள்களில்லை. இரவோடு இரவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது இன்றுள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் இறந்து போகாமல் உயிருடன்தான் இருந்தனர், அவர்களில் ஒருவர் கூட இது தவறு முஸ்லிம்களும் எமது சகோதரர்கள் தான் என கூற நாவு துடிக்காமல் போனதன் மூலம் தமிழ் தலைமைகளின் வரண்டுபோன இதயத்தைக் காட்டுகிறது. அதனைவிடவும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்கு குறைந்தது ஒரு தமிழ் நண்பர் இருந்திருந்தால் கூட 5000 தமிழ் நண்பர்கள் இருந்திருப்பார்கள், இவர்களில் 5 பேராவது வெளியில் வந்து பசித்த வயிறோடும், கோர வெயிலில் வெறும் காலோடும் நின்று கொண்டிருந்த தமது முஸ்லிம் நண்பர்களுக்கு குடிக்க தண்ணீராவது கொடுத்தார்களா? என்பதை வரலாற்றை மீட்டிப்பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அன்றைய நாட்களில் முஸ்லிங்களிடமிருந்து சூறையாடப்பட்ட விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் மறுநாள் புலிகள் ஏலத்தில் விட்டபோது முண்டியடித்துக் கொண்டு வாங்க முற்பட்டது தமிழ் நண்பர்கள்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. முஸ்லிம் மக்கள் பட்ட துயரை கண்டும் காணாதது போல் கண்பொத்தி வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் மக்களை இறைவன் தண்டிக்காமல் இல்லை. எங்கள் பகுதிகளில் மிருகங்களைக்கூட கம்புகளை நாட்டி இரண்டு வரியில் கம்பி இட்டு அடைத்து வைப்பர், ஆனால் வடக்கு தமிழ் மக்களை மெனிக் பாமில் 9 பட்டுக் கம்பியால் சுத்தப்பட்ட கூண்டுக்குள் மிருகங்களை விடவும் மோசமாக அடைத்து வைத்திருன்தனர், இதனை நான் சுட்டிக் காட்டுவது அம்மகளை நோவினை செய்வதற்காக அல்ல கண்முன்னே அநீதி நடந்தும் கண்கெட்டவர்கள்போல் இருந்தமையின் விளைவுகளால் ஏற்பட்ட வரலாற்றை புதிதாக வேடமிடுபவர்களுக்கு நினைவுபடுத்தவே விரும்புகிறேன். . தமிழ் தலைமைகள் வரலாறுகளை திரும்பிப் பார்க்கவேண்டும். அவர்களின் முன்னாள் நிறைய துரோக சம்பவங்கள் உள்ளதை அறிந்துகொள்வார்கள். பள்ளிவாயல்களுக்குள் முஸ்லிம்கள் சுடப்பட்டது, வயல் காணிகளுக்கு கப்பம் அறவிட்டது, முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என மூச்சு விடாமல் எங்களால் வரலாற்றில் நடந்த கோர சம்பவங்களையும் கூற முடியும். அப்போதெல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்த தமிழ் தலைமைகளை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். அவர்கள் மின்னுவது போன்று தங்கமல்ல. ஆகவே போலியை இன்னுமொருமுறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. கடல் நீர் என்ற அடிப்படையில் கருங்கடலும் செங்கடலும் ஒட்டி இருந்தாலும் இரண்டற கலக்காமல் தனித்தனியாக இருப்பது போன்று இருக்கவே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர், அதனால் தான் விருப்பத்துக்கு மாற்றமாக இணைக்கப்பட்ட வடகிழக்கை சட்டரீதியாக பிரித்தனர். வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பது என்பது தமிழ் தலைமைகளின் கனவாக இருந்துவிட்டுப்போகட்டும். மாறாக இணைப்பதற்கு முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த வடக்கு கிழக்கு முஸ்லிங்கள் தயாராக இல்லை என்றார். https://www.madawalaenews.com/2021/10/blog-post_535.html
 3. நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் அவரது கணவர் நடேசனின் வெளிப்படுத்தப்படாத செல்வம் பெண்டோரா பத்திரிகையில் இருந்ததால் இலங்கையில் உள்ள மக்கள் ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இந்த வெளிப்பாடுகளில் எமது நாட்டைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் நடேசனின் பெயர்கள் மட்டும் தானா இருந்தது வேறு பெயர்கள் இல்லையா அல்லது பெண்டோரா பத்திரைகைக்கும் புலப்படாத விதத்தில் ஏனையோர் கலவாடிய செல்வங்களை அவர்கள் மறைத்து வைத்துள்ளனரா என்பதுதான் எனக்கு இதில் உள்ள ஆச்சரியமான கேள்வி? இலங்கையைச் சேர்ந்த 93 பேர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரும் இந்த பெண்டொரா பத்திரிகையில் உள்ளனர் என்பதும் வெளியிடப்பட்டுள்ளது. நிரூபமா ராஜபக்ஷவும், நடேசனும் வெளிப்படுத்தாத அளவுக்கு செல்வத்தை மறைத்து வைத்திருந்தால், இங்கு பெயர் குறிப்பிடப்படாத மற்றவர்கள் எவ்வளவு செல்வத்தை மறைத்து வைத்திருப்பார்கள் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும். பல எமது நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாகப் பழகும் தொழிலதிபர்கள் எவ்வளவு சொத்துகளை மறைத்து வைத்துள்ளார்கள் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஒருவேளை அந்த மொத்த சொத்துக்கள் இலங்கையின் தேசிய வருமானத்தை விட பலமடங்கு அதிகமாகவும் இருக்கலாம். அரசியல்வாதிகளும் அவர்களின் அனுசரணையுள்ள தொழிலதிபர்களும் இத்தகைய சொத்துக்களை திருடி, கண்டுபிடிக்க முடியாத இடங்களில் மறைத்து வைத்திருப்பதால், இலங்கை போன்ற சிறந்த எமது நாடு மிகவும் ஏழ்மையாகிவிட்டது, மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். பல அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக, கட்சி வேறுபாடின்றி ஒன்றாக திருடுகிறார்கள். திருடப்பட்ட செல்வத்தை ஒன்றாக பதுக்கின்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே தொழிலதிபர்கள் தான் பணம் கொடுக்கிறார்கள். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தம் செய்துகொண்டு இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். இந்த தொழிலதிபர்களுடனான நட்பு வட்டம் தான் அரசியலையும் கையாளுகிறது, அரசாங்கங்களை உருவாக்குகிறது, அவர்களை இல்லாமலும் செய்கிறது, மீண்டும் எதிக்கட்சியுடன் சேர்ந்து அரசங்கத்தை உருவாக்க முயற்சிப்பது என்று தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரம் நாம் கண்ட சாக்கடை அரசியலை விடவும் மோஷமான அரசியல் கலாச்சாரம் இன்று எமது நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு எமது நாட்டில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் சில இந்த அரசாங்கத்தை உருவாக்க நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி மக்களை குழப்பி இன்று அரசில் பணம் சம்பாதிக்கும் கும்பலாகவும், மரணதண்டனை கைதியான தனது சகோதரனையும் விடுவித்ததை சொல்லலாம். இந்த அரசியல்வாதிகளுக்குப் பிறகு அவர்களில் பலரின் குழந்தைகள் அரசியலுக்கு வருகிறார்கள். அந்தந்த அரசியவாதிகளின் பிள்ளைகள் பாடசாலை, விளையாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகங்களில், நைட் கிளப், பார்ட்டிக்கு ஒன்றாக செல்கின்றனர். இவ்வாறு ஒன்றாக சென்று விளையாடும் அவர்களின் பிள்ளைகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து மக்களிடம் வாக்கு கேட்பார்கள். ஒரு ரிலே போல, தள்ளாத கிழட்டு வயதில் அதிகாரத்திலிருக்கும் தாத்தாவிலிருந்து, பின் தந்தைக்கு, தந்தையிலிருந்து மகன், மகள்,மருமக்கள் அல்லது பேரப்பிள்ளைகளுக்கு மாறுகிறது. இந்த மகள்கள், மகன்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மாமாக்கள், அத்தைகள் அல்லது அவர்களிடம் வேலைசெய்த பணியாளர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இப்படித்தான் தலைமுறைகளாக இலங்கையில் தற்போது அரசியலும், வணிகமும் நடைபெறுகிறது. அதனால் தான் இன்று பாராளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமாக வார்த்தை பிரயோகங்களை பாவிப்பதுடன் எந்தவிதமான சிறப்பான ஆதாரமுமற்ற விவாதங்களுடன் இனவாதத்தையும் கலந்து பேசிக் கொண்டிருப்பதனை காண்கிறோம். யார் எதை வெளிப்படுத்தினாலும், இவர்கள் யாரும் விசாரிக்கப்படமாட்டார்கள் என்பது தெளிவாகிறது. யாரும் யாரையும் காட்டிகொடுக்காது கமிட்டிகளை நியமித்து, கமிஷன்களை நியமித்து, காவல்துறைக்கும்,நீதித்துறைக்கும் இடையில் பந்தாடி பின் வாக்களிக்கும் மக்கள் இதையெல்லாம் மறக்கும் வரைக்கும் நேரத்தை வீணடிக்கிறார்கள். பின்னர், தேர்தல் வந்ததும் அவர்கள் ஏற்கனவே செய்தவற்றை திரும்பவும் மக்களிடம் கூறி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் பிறகு, வாக்களித்த மக்களும் இதையெல்லாம் மீண்டும் மறந்து விடுகிறார்கள். அதுதான் அவர்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்ய தூண்டுகிறது. மக்கள் எப்போதும் பரிதாபமானவர்கள் ஏனென்றால் எப்போதும் எதிர்பார்ப்புகளை நம்பி, நம்பி ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இந்தக் கும்பல் திருடுவது மக்களுக்கும் தெரியும். அவர்கள் தங்கள் செல்வத்தை திருடுகிறார்கள் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களும் தங்கள் குழந்தைகளும் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு இந்த கும்பல் தான் காரணம் என்பதையும் அறிவார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் ஒரு சிறிய நன்மைக்காக, ஒரு குறுகிய கால நன்மைக்காக அதை ஒரு பிச்சைக்காரனின் புண் போல அதனை பராமரிக்கிறார்கள். பிச்சைக்காரன் காயத்தைத் தக்கவைக்க வேண்டியது போலவே, இந்த நாட்டு மக்களும் மீண்டும் மீண்டும் ஏமந்துபோகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயம். தேர்தலின் பின்னர் இலங்கையில் பெரும்பாலான கருப்புப் பணம் வெள்ளையாக்கப்படுகிறது, அதற்கான புதிய சட்டங்களும் அதே அரசாங்கத்தினால் இயற்றப்பட்டு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுகிறது அதற்கும் தேவையென்றால் வரப்பிரசாதங்களை கொடுத்து 2/3 பெரும்பான்மையும் பெற்று பின்னர் மக்களுக்கு புதிய கதைகளை கூறுவார்கள். அவ்வாறுதான் தற்போது ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கூறினார் தனது உறவினர் நிரூபமா ராஜபக்‌ஷ முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவுக்கு ஆதரவளித்தாராம் அவருடைய 3500 கோடி செல்வம் முன்னாள் ஜானாதிபதிகளான ஆர் பிரேமதாச மற்றும் சந்திரிகா அம்மையார் போன்றோரின் காலத்தில் நடந்தவையென்றும் அவரது திருமனத்தின் போது கிடைத்த செல்வங்கள் என்று புதியகதை கூறுகிறார். பெண்டோரா பத்திரிகையின் வெளிப்பாடுகளின் கால எல்லை இன்னும் வெளியாகவுமில்லை. இலங்கையில் இருக்கும் அரசியல் தலைமைகளினது பொதுவான கனவு, இலங்கையை சொர்க்கபூமியாக மாற்றுவதை விட பொருளாதார ரீதியாக படு பாதாளத்துக்கு எடுத்துச் செல்வது போன்றுதான் இருக்கிறது அப்போதுதான் அவர்களுக்கு ஊழல் செய்வதும் நாட்டை சூரையாடுவதும் மிகவும் இலேசாக இருக்கும் ஒருவேளை 33 வருட கால யுத்தத்தை முடித்ததும் தற்போது ஒரு சிலருக்கு கவலையாகவும் இருக்கலாம் அதனால்தானோ மீண்டும் இனவாதம் மதவாதம் தலை தூக்குமளவுக்கு ஏஜெண்டுகளும், மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சுக்களும் இருக்கிறது இதற்கு இன்னொருவகையில் மீண்டும் மக்களின் எண்ணப்பாடுகளை திசை திருப்பி மீண்டும் மீண்டும் நாட்டின் சொத்துக்களை இலங்கை மக்கள் எல்லோரும் நித்திரை கொண்டிருக்கும் நேரத்தில் ஏலம் போட்டு விற்பனை செய்யவும் அது துணையாக அமையலாம் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை. நாடுமுடக்கம் நீக்கப்பட்டதும் கடவுச்சீட்டு பெற்றுகொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் நிற்கிறார்கள் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்று ஆனால் நாட்டை விட்டு வெளியேறுவது இதற்கு தீர்வல்ல. நம் அனைவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான இந்த நயவஞ்சகர்களை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வைக்காமல் தகுந்த பாடம் புகட்ட ஒன்றுசேர வேண்டும். எமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை - 225 அதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 69 பேர், சாதாரண தரம்(O/L) சித்தியடைந்தவர்கள் - 95 பேர், உயர்தரம்(A/L) சித்தியடைந்தோர் - 126 பேர், இவர்களில் மதுபான கடைக்கு அனுமதிப் பத்திரம் வைத்திருப்போர் - 110 பேர், இவர்களைத் மீண்டும் மீண்டும் தெரிவு செய்த இலங்கை மக்களின் கல்வி அறிவு 80%க்கு மேல்! சிந்திப்போம்…. நாட்டை பாதுகாக்க மக்களாக ஒன்றுபடுவோம். #ஹிதாயத்_சத்தார் https://www.madawalaenews.com/2021/10/blog-post_546.html
 4. ஏன் இப்பொழுது கே பியை ஏச வேண்டும்? அவர் தன்னல் முடித்ததை சிறுவர் இல்லத்தில் இருந்து செய்கின்றார் இவர் குப்பி கடித்திருந்தால் தியாகியாக்ப்படிருப்பாரா? வெளினாட்டில் புலிகளின் சொத்துக்களை ஆட்டையை போட்டவர்கள் காரில் போகும் போது ஏன் தட்டிக் கேட்க கூடாது? இப்படி எழுதுவதனால் நான் சிங்கள்வனுக்கு சப்போர்ட் அல்ல‌
 5. அப்படியானால் இஸ்லாத்தில் 4 முறை கட்டலாம் எனவே இஸ்லமிய முல்லாக்கள் உத்தமர்களா? இப்படி எல்லாம் பொதுவாக சொல்ல முடியாது. அப்படியானால் இஸ்லாத்தில் 4 முறை கட்டலாம் எனவே இஸ்லமிய முல்லாக்கள் உத்தமர்களா? இப்படி எல்லாம் பொதுவாக சொல்ல முடியாது.
 6. காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள். விசாக்கள். கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச் சாரதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நாடெங்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை உண்டாக்கிப் பெருமளவில் வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. அதன் பின்னணிக்கு முக்கிய காரணமாக பிரெக்ஸிட் கட்டுப்பாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஐரோப்பாவின் தொழிலாளிகள் முன்பு போல ஐக்கிய ராச்சியத்தில் தொழில் விசாவின்றி வேலை செய்ய முடியாது. ஐக்கிய ராச்சித்தின் கொவிட் 19 கட்டுப்பாடுகள், வயதாகிவரும் தொழிலாளர்கள் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன. திங்களன்று காலையிலும் ஐக்கிய ராச்சியத்தின் பல பகுதிகளிலும் எரிநெய் போட்டுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அத்தட்டுப்பாடானது பக்க விளைவுகளாக உணவுகளைக் காவிச்செல்லும் பாரவண்டிகளையும் முடக்கியதால் நாட்டில் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாட்டை உண்டாக்கியிருக்கிறது. ஐக்கிய ராச்சியத்தில் எரிநெய் விற்பனை நிலையங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பலவும் ஞாயிறன்றே தமது நிலையங்களில் மூன்றிரண்டு பங்கு முதல் 90 விகிதமானவை வெறுமையாகிவிட்டதாகக் குறிப்பிடுகின்றன. ஐக்கிய ராச்சியத்தின் அரசு தனது கணிப்பீடுகளுக்கு உள்ளாகாத இந்த அவசர நிலைமையைக் கையாளப் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதாகியிருக்கின்றது. அவைகளிலொன்றாக குடிவரவுக் காரியாலயம் மூலமாக பாரவண்டிச் சாரதிகள் உட்பட்ட அவசிய தொழிலாளர்களை ஈர்க்க 10,500 விசாக்களைக் கொடுக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. தவிர நாட்டில் வேலையின்றி வேறு துறையில் இருப்பவர்களுக்கு பயிற்சியளித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சேவைகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களும் அறிமுகப்படவிருக்கின்றன. சாள்ஸ் ஜெ. போமன் https://vetrinadai.com/
 7. மன்னாரில் உண்மை செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கு மத குருவால் அச்சுறுத்தல் மன்னார் மடு பிரதேச் செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக உண்மை செய்திகளை வெளியிட்ட ஊடகவியளாலருக்கு மடு பகுதியில் கடமையாற்றும் லோரன்ஸ் என்ற கத்தோலிக்க மத குரு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் குறித்த ஊடகவியளாலரின் வீட்டுக்கு அடியாட்களுடன் சென்று அடவடித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார் மடு கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் லோரன்ஸ் மதகுரு குழுவினருக்கும் முரண்பாடு தோற்றம் பெற்ற நிலையில் குறித்த செய்தியை ஊடகவியளாலர் அறிக்கையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மடு தேவலயத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த மத குருவிடம் கோரியுள்ளார் ஆனாலும் குறித்த மத குரு விளக்கம் கொடுக்க மறுத்த நிலையில் தன்னால் சேகரிக்கப்பட தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை அறிக்கையிட்டுள்ளார் செய்தி வெளியாகிய நிலையில் லோரன்ஸ் என்ற பிரச்சினையுடன் சம்ம்தப்பட்ட மத குரு தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியளாலரை அச்சுறுத்தும் விதமாக பேசியதுடன் தான் யார் என்பதை காட்டுவேண் எனவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் தொலைபேசியில் அச்சுறுத்தியதுடன் நிறுத்தாமல் இன்று இரவு குறித்த ஊடகவியளாலர் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை சில அடியாட்களுடன் சுற்றிவளைத்ததுடன் வீட்டின் மீது கற்றகளை வீசியுள்ளனர் விடயம் அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் ஓடி ஒளிந்துள்ளனர் மத குருவாக இருந்து மன்னார் மறை மாவட்ட ஆயரின் அனுமதி இன்றி மத குரு என்ற நிலையை மறந்து ஏழை விவசாயிகளின் காணிக்காக இவ்வாறு அச்சுறுத்தல் செய்ற்பாட்டில் ஈடுபட்ட மத குரு மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட ஊடகவியளாலரால் மடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது http://www.newmannar.lk/ blob:https://www.facebook.com/e2fe2eba-b5c3-4f4c-84a7-7811afe0fd77
 8. ஈஸ்ட‌ர் தாக்குத‌லின் சூத்திர‌தாரி அள்ளாஹ்தான் என‌ ஞான‌சார‌ தேர‌ர் கூறியிருப்ப‌து எந்த‌வொரு அடிப்ப‌டையும‌ற்ற‌ முட்டாள்த‌ன‌மான‌ க‌ருத்தாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ளுக்கு அவ‌ர் தெரிவித்துள்ள‌தாவ‌து, ஞான‌சார‌ தேர‌ர் என்ப‌து வெளிநாட்டு த‌மிழ் ட‌ய‌ஸ்போராக்க‌ளின் பின்ன‌ணியை கொண்ட‌வ‌ர் போன்றே 2013ம் ஆண்டு முத‌ல் பேசி வ‌ருகிறார். 2009ம் ஆண்டு எம‌து க‌ட்சியும் பொதுப‌ல‌ சேனாவும் இணைந்து எல் ரி ரி யீ க்கெதிராக‌ கொழும்பில் பாரிய‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்தோம். இதுவே புலிக‌ள் ஒழிக்க‌ப்ப‌டுமுன் அவ‌ர்க‌ளுக்கெதிராக‌ ந‌ட‌ந்த‌ இறுதி ஆர்ப்பாட்ட‌மாகும். அத‌ன் பின் 2009ம் ஆண்டு நாட்டின் வீர‌த்த‌ள‌ப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ளின் உறுதியான‌ அர‌சிய‌ல் நிலைப்பாடு கார‌ண‌மாக‌ யுத்த‌ம் முடிந்த‌ பின், யுத்த‌த்தின் போது முஸ்லிம்க‌ள் சிங்க‌ள‌ ராணுவ‌த்துட‌ன் நின்ற‌தே தமிழீழ‌ தோல்வி என்ப‌தை புரிந்த‌ வெளிநாட்டு ச‌க்திக‌ள் முஸ்லிம்க‌ளையும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் பிரித்து மோத‌விட்டால்த்தான் எதிர்கால‌த்தில் த‌ம்மால் மீண்டும் விடுத‌லை போராட்ட‌த்தை கொண்டு செல்ல‌ முடியும் என்ப‌த‌ற்காக‌ விலை கொடுத்து வாங்க‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌வே நாம் அவ‌ரை ச‌ந்தேகிக்கிறோம். இந்த‌ நிலையில் ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு மூல‌ க‌ர்த்தா இறைவ‌னும் குர்ஆனும்தான் என‌ ஞான‌சார‌ சொல்வ‌து உண்மையாயின் உல‌கில் வாழும் குர்ஆனை ப‌டித்த‌ கோடிக்க‌ன‌க்கான‌ முஸ்லிம்க‌ளில் எத்த‌னை ஆயிர‌ம் பேர் முஸ்லிம் அல்லாத‌ அப்பாவிக‌ள் மீது த‌ற்கொலை தாக்குத‌ல் செய்துள்ள‌ன‌ர் என்ப‌தை அவ‌ரால் ஆதார‌த்துட‌ன் நிரூபிக்க‌ முடியுமா என‌ ச‌வால் விடுகிறோம். இன்று வ‌ரை முஸ்லிம் அல்லாத‌ நாடுக‌ளில் பெரும்பாலான‌ முஸ்லிம்க‌ள் ப‌ல‌ கொடுமைக‌ளுக்கும் அழுத்த‌ங்க‌ளுக்கும் முக‌ம் கொடுத்தும் அந்நாடுக‌ளில் பிர‌ச்சினைக‌ள் ஏற்ப‌டாத‌ கால‌த்தில் எத்த‌னை தாக்குத‌ல்க‌ள் அப்பாவிக‌ளை இல‌க்கு வைத்து முஸ்லிம்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌ என்ப‌தை நிரூபிக்க‌ முடியுமா? இந்தியாவில், இல‌ங்கையில், தாய்லாந்தில், ஐரோப்பாவில், ப‌ர்மாவில் ஆயிர‌க்க‌ன‌க்கான‌ முஸ்லிம்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ போதும் கூட‌ இந்நாடுக‌ளில் முஸ்லிம்க‌ள் அப்பாவிக‌ள் மீது ம‌னித‌க்குண்டாக‌ மாறிய‌தில்லை. தம்மீது தாக்குத‌ல்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ பின்னும் இல்லை, முன்னும் இல்லை. குர்ஆன் இவ்வாறு மூளைச்ச‌ல‌வை செய்யுமாயின் முஸ்லிம்க‌ள் த‌ம் மீது தாக்குத‌ல் இல்லாத‌ கால‌த்திலும் ம‌னித‌ குண்டாக‌ மாறியிருக்க‌ வேண்டும். அவ்வாறு எங்கும் ந‌ட‌ந்த‌தில்லை. ப‌ல‌ஸ்தீன‌த்தை இஸ்ர‌வேல‌ர் ஆக்கிர‌மித்த‌ போதுதான் ப‌ல‌ஸ்தீன‌ முஸ்லிம்க‌ள் முத‌ன் முத‌லில் ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ளை தூக்கின‌ர். சோவிய‌த் ர‌ஷ்யா ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து ல‌ட்ச‌க்க‌ன‌க்கான‌ முஸ்லிம்க‌ளை கொன்ற‌ போது சோவிய‌த் ப‌டைக‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ குண்டுக‌ள் வெடித்த‌ன‌. அமெரிக்கா பொய்யான‌ குற்ற‌ச்சாட்டை விதைத்து ஈராக்குக்குள் நுழைந்து அழிச்சாட்டிய‌ம் செய்த‌ போது ம‌னித‌ குண்டுக‌ள் அமெரிக்க‌ ப‌டைக‌ளுக்கெதிராக‌ வெடித்த‌ன‌. ச‌த்தாம் ஹுசைன் கால‌த்தில் ஒரு ம‌னித‌க்குண்டும் ஈராக்கில் வெடிக்க‌வில்லை. இத்த‌னைக்கும் 98 வீத‌மான‌ ஈராக்கிய‌ முஸ்லிம்க‌ள் குர்ஆனையும், அள்ளாஹ் ஒருவ‌னையும் ந‌ம்புப‌வ‌ர்க‌ள். அள்ளாஹ்வும் குர்ஆனும் ம‌னித‌னை வெடிகுண்டாக‌ முஸ்லிம்க‌ளை மாற்றுமாயின் வ‌ர‌லாற்றில் வாழ்ந்த‌ கோடிக்க‌ன‌க்கான‌ முஸ்லிம்க‌ளில் நூற்றுக்கு ஒரு வீத‌த்தையாவ‌து ம‌னித‌ வெடி குண்டுக‌ளாக‌ மாற்றியிருக்காதா? அப்ப‌டி எதுவும் ந‌ட‌க்க‌வில்லை. சில‌ விர‌ல் விட்டு எண்ணும் முஸ்லிம்க‌ள் ம‌னித‌க்குண்டுக‌ளாக‌ மாறிய‌த‌ற்கான‌ கார‌ண‌ம் ரஷ்யாவும், அமெரிக்காவும், முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ தாக்குத‌லை அனும‌திக்கும் அர‌சுக‌ளுமே த‌விர‌ குர்ஆனோ குர்ஆன் மூல‌மான‌ ஓரிறைவ‌ன் அள்ளாஹ்வின் வார்த்தைக‌ளும‌ல்ல‌ என்ப‌தை தேர‌ர் உட்ப‌ட‌ அனைத்து ம‌க்க‌ளும் புரிந்து கொள்ள‌ வேண்டும். இல‌ங்கையின் ஈஸ்ட‌ர் குண்டு தாக்குத‌லுக்கும் குர்ஆன் கார‌ண‌ம‌ல்ல‌. ர‌ணில், ச‌ஜித் அர‌சின் ப‌க்க‌ப‌ல‌மான‌ ஆத‌ர‌வுட‌ன் திக‌ன‌, க‌ண்டி போன்ற‌ அப்பாவி முஸ்லிம்க‌ள் மீதான‌ தாக்குத‌லாகும். இத‌ற்குப் பின்ன‌ணியில் பொது ப‌ல‌ சேனாவும் இருந்த‌தாக‌ ஜ‌னாதிப‌தி க‌மிஷ‌ன் குறிப்பிட்ட‌தாக‌ செய்திக‌ளும் வ‌ந்த‌ன‌. இத்தாக்குத‌லை தொட‌ர்ந்து நாமும் வெடிகுண்டாய் மாறுவோம் என‌ ஸ‌ஹ்ரான் பேசிய‌ வீடியோக்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ வெகிவ‌ந்த‌ன‌. அப்ப‌டியாயின் ஸ‌ஹ்ரானை ப‌ய‌ங்க‌ர‌வாதியாக‌ மாற்றி வெறி கொண்ட‌ முட்டாளாக‌ மாற்றிய‌து ந‌ல்லாட்சி அர‌சின் பாதுகாப்புட‌ன் ந‌ட‌ந்த‌ திக‌ன‌, க‌ண்டி, அம்பாரை பள்ளி தாக்குதலாகும் என்ப‌தை நாம் புரியலாம். இதை திசை திருப்ப‌வே ஞான‌சார‌ தேர‌ர் குர்ஆன் மீதும், அள்ளாஹ் மீதும் ப‌ழி போடுகிறார். திக‌ன‌, க‌ண்டி தாக்குத‌ல்க‌ளால் விர‌க்தியுற்றிருந்த‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளை ஏதோ ஒரு வெளிநாடு மூளைச்ச‌ல‌வை செய்திருக்க‌ வேண்டும் என்ப‌தே எம‌து க‌ருத்தாகும். ஆக‌வே க‌வுர‌வ‌ ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌, மாண்புமிகு பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வினால் ந‌ம‌து நாடு இப்போது தேசிய‌ பாதுகாப்பை உறுதி செய்து மிக‌ச்சிற‌ந்த பாதுகாப்பான‌ நாடாக‌ மாறிக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் வீணான‌ குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்த‌ ஞான‌சார‌ர் முய‌ற்சிப்ப‌தாக‌வே தெரிகிற‌து. இத‌னை க‌ருத்திற்கொண்டு அவ‌ர் ப‌கிர‌ங்க‌ ஊட‌க‌ங்க‌ளில் குர்ஆன், அள்ளாஹ், இஸ்லாம் ப‌ற்றி பேச‌க்கூடாது என்ற‌ த‌டை உத்த‌ர‌வு பெற‌ அர‌சு முய‌ல‌ வேண்டும் என‌ அர‌சின் ப‌ங்காளி க‌ட்சி என்ற‌ வ‌கையில் நாம் அர‌சை த‌ய‌வாய் கேட்டுக்கொள்கிறோம். முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைவ‌ர் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி. https://www.madawalaenews.com/2021/09/blog-post_707.html
 9. சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார். சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. https://puthithu.com/?p=58434&fbclid=IwAR1s-ZBrCeYa-SRaVflenG8gkX4XjLW3MxlWQEQha-FgIf4pfEum_C-CdfU
 10. மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். அவர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்றும் உறுதியாகியது. https://vampan.net/32833/
 11. புலிகள் இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு தமிழர்களை கொல்ல, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இடமளித்ததாக தேவாலஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். ஆனால் இராணுவ வீரர்களை கொலை செய்த அந்த இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு அன்று அனைத்து பொலிஸாருக்கும் விடுமுறை கொடுத்து வேலை செய்ய விடாமல் ஜே.ஆர்.ஜெயவர்தன தடுத்தார். பின்னர் அனைத்து தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் உடைத்து அவர்களின் பொருட்களை திருடி, அவர்களுடைய அனைத்து சொத்துக்களுக்கும் தீ வைத்து கொளுத்தி, தமிழர்களை கொல்ல இடமளித்தார். இது மிகவும் வேதனையான கொடூரமான சம்பவம். மனித இனத்தில் இடம்பெற கூடாத ஒரு கொடூரமான சம்பவம் தான் அன்று அவ்வாறு நடந்தது. நமது சிங்கள சமூகத்தில் வாழும், அரசியல் நோக்கங்களுக்காக செயற்படும் சில கொடுமைக்காரர்கள், முக்கியமாக யாழ். நூலக எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருந்த காமினி லொக்குகே உள்ளிட்ட இன்று அரசாங்கத்தில் இருக்கும் பலர் அன்று தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல கொடூர சம்பவங்களுக்கு தலைமை வகித்தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் யாருக்கும் தண்டனை வழங்கவில்லை. இதன் காரணமாகவே அன்று நிறைய தமிழ் மக்கள் இந்த நாட்டில் இந்த சிங்கள சமூகத்தோடு வாழ முடியாது என்ற அச்சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆசீர்வாதத்தில் அன்று பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றார்கள். ஆகவே இது போன்ற இனக்கலவரங்களை இனியும் ஆரம்பிக்காது மக்கள் அனைவரும் அனைத்து இன, மதங்களையும் மதித்து, இன்று நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினைகளை மறைப்பதற்காக உருவாக்கப்படும் ஏனைய பிரச்சினைகளுக்குள் சிக்கிவிடாமல் சிந்தித்து செயற்படுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். http://www.jaffnamuslim.com/2021/09/blog-post_819.html
 12. அருமையான கருத்து கோஷான் என் வாழ்க்கையாயை அப்படியே பிரதிபலிகின்ற‌ரது இளமையில் வறுமை என்பது கொடிது கொடிது
 13. life begins at 40 என்று சொல்வார்கள். இதென்ன இப்படி ஒரு புலம்பல். ஒபாமா 50 வயதிற்கு முன்பே ஜனாதிபதியாகி விட்டார். பைடன் 70 கு பின்புதான். இப்படியெல்லாம் சிந்தித்தால் வாழ்வில் எதிர்நீச்சல் அடிக்க முடியாது
 14. இந்தப்பெண்ணை குற்றம் சாட்டக்கூடாது. கேவலமாக இப்படி கள்ளக்காதல் என்று இழிவாக‌ எழுதக்கூடாது. கணவர் ஒரு குடிகாரான். அன்பில்லா கணவன். தன்னுடைய எந்தவித பொறுப்பையும் ஒழுங்காக செய்யவில்லை. ஒரு பெண் தடம் மாற இவர்தான் முழுகாரணம். கொழும்பில் ஒர் slum ல் பிறந்து வளர்ந்த நான் இதேபோல் நிறைய விடயங்களை பார்த்துள்ளேன். மேலும் ஒரு குடிகார தகப்பனுக்கு மகனாக பிறந்து நான்பட்ட கஷ்டங்களை எழுத முடியாது இதேபோல் மத்தெயு பீரிஸ் எனும் அங்கிலிகன் பாதர் ஒருவர் தன் மனைவியை விசம் குடுத்து கொன்றதாகவும் ஒர் வழ்க்கு உண்டு.
 15. 10 பிள்ளைகளா இவருக்கு? கடைசி பிள்ளைக்கு எத்தனை வயது? குடிதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
 16. க‌ட‌ந்த‌ ஆட்சியில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் போன்றோர் பொக‌வ‌ந்த‌லாவை முஸ்லிம் ஆசிரியைக‌ள் அபாயா அணிந்து வ‌ந்த‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ளை கேவ‌ல‌ப்ப‌டுத்தி மாண‌வ‌ர்க‌ள் முன்பாக‌ பாட‌சாலையை விட்டு வெளியேற்றிய‌வ‌ர்க‌ள் ராஜாங்க‌ அமைச்ச‌ர் லொஹான் ர‌த்வ‌த்த‌வின் செயலை க‌ண்டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌மும் அருக‌தையற்ற‌வ‌ர்க‌ள் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி அவ‌ர் ஊட‌க‌ங்க‌ளுக்கு தெரிவித்திருப்ப‌தாவ‌து, ராஜாங்க‌ அமைச்ச‌ர் சிறைச்சாலைக்குள் சென்று அங்குள்ள‌ குற்ற‌வாளிக‌ளைத்தான் அச்சுறுத்தினார். ஆனால் க‌ட‌ந்த‌ அர‌சில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் போன்றோர் முஸ்லிம் பெண்க‌ளின் ஆடைக‌ளில் ச‌ண்டித்த‌ன‌ம் காட்டின‌ர். திருகோண‌ம‌லை ச‌ண்முகா வித்தியால‌ய‌ முஸ்லிம் ஆசிரியைக‌ள், பொக‌வ‌ந்த‌லாவை ஆசிரியைக‌ள் ஆடைக்காக‌ கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு பாடசாலைக‌ளில் இருந்து வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ஈன‌ச்செய‌ல்க‌ளை அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் நியாய‌ப்ப‌டுத்தி பேசினார். நாங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ இந்த‌ அர‌சாங்க‌த்தில் முஸ்லிம் பெண்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வாழ்கிறார்கள். ச‌ண்முகா, பொக‌வ‌ந்த‌லாவ‌ போன்ற‌ ஆடைக்கான‌ இன‌த்துவேஷ‌ங்க‌ள் இல்லை. இ.பொ.ச‌ ப‌ஸ்க‌ளில் ஸ்டிக்க‌ர்க‌ள் இல்லை. இத‌னால்த்தான் நாம் கூறினோம், ம‌னோ, த‌மிழ் கூட்ட‌மைப்பு போன்ற‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌லை க‌ட்டுப்ப‌டுத்தும் தைரிய‌மும் ஆளுமையும் ராஜ‌ப‌க்ஷ‌ த‌ர‌ப்புக்கே உண்டு என‌. இப்போது பெரும்பாலான‌ முஸ்லிம் த‌மிழ் பொது ம‌க்க‌ள் இன‌வாத‌ம் இன்றி ஒற்றுமையுட‌ன் வாழ்கின்ற‌ன‌ர். இத‌ற்கு கார‌ண‌ம் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ நீதியான‌, இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சியாகும். https://www.madawalaenews.com/2021/09/blog-post_348.html
 17. மருத்துவராக அல்லது விமானி போன்ற தொழில்கல்வியை தேர்ந்தெடுப்போர் மனரீதியாக வலிமையுடையவராக இருக்க வேண்டும். மனவலிமை இல்லா விட்டால் எப்படி இந்த தொழிலை செய்வது? தற்கொலை தவறான முடிவு
 18. ஆப்கானின், 100 பயணிகள் கொண்ட முதல் பயணிகள் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக கத்தாரில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கானில் நடைபெற்ற உள்நாட்டு போர், தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானில் இருந்து வெளிநாட்டு மக்களும், ஆப்கான் மக்களும் வெளியேறி வந்தனர். தாலிபான்கள், காபூலை கைப்பற்றினாலும் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகள் வசமே இருந்தது. ஆனால் கடந்த 31 ஆம் தேதி, தோஹா ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், காபூல் விமான நிலையம் தாலிபான்களின் வசம் வந்தது. இந்நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகள் கொண்ட, முதல் பயணிகள் விமானம் கத்தாருக்கு புறப்பட்டது. அதில் 13 இங்கிலாந்து நாட்டவரும் இருந்தனர். ஆப்கானில் நிலவிய பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது கூறும்போது, காபூலில் இருந்து ஆப்கான் விமானத்தை புறப்பட அனுமதித்ததற்காக தாலிபான்களுக்கு பாராட்டை தெரிவித்தார். மேலும் ஆப்கானில் இருந்து பயணிகளுடன் முதல் விமானம் பத்திரமாக தரையிறங்கியதற்காக தாலிபான்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு, தாலிபான்கள் சொன்னதை செய்கிறார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்த்தும் இது தான் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். அதோடு இது ஒரு நல்ல தொடக்கம் என்றும், இதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார். இதனையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எமிலி ஹார்ன், தாலிபான்கள், நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளனர் என்றும், இது ஒரு நேர்மறையான முதல்படி என்றும் கூறினார். ஆப்கான் அரசின் இந்த முயற்சிகளை தொடர்ந்து, மேலும் பல நாடுகளும் தங்கள் விமான சேவையை ஆப்கானுக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (Thanks to q7news.com) https://qatartamil.com/
 19. நல்லதொரு திரி. ஆர்வத்துடன் வாசிப்பேன். எனக்கு பெரியளவில் ப்ரக்டிகலாக நிதிசந்தையில் நேரடி அனுபவமில்லை. ஆனால் இங்கு பாவிக்கப்படும் technical term எல்லாவற்றின் வரைவிலகணம் / அர்த்தமும் தெரியும். Technical Analysis, Fundamental Analysis, Futures, Forwards, option, (call option/put option, long call, short call/long put short put) Swaps MBA finance ல் - Derivatives எனும் பகுதியில் இவை படிப்பிக்கப்பட்டது இவை ஒரு பாடமாக படித்ததினால் தியரி அனுபவமே உள்ளது.
 20. Mano Ganesan - 09/09/21 - இந்த நொடியில் என் மனதில் >>> <முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட “சம்பவம்” வேண்டும். ஆனால், அதில் சிங்கள பெளத்த மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே மெது இலக்கு (Soft Target) நாதியற்ற தமிழர்கள்தான். இந்த "உறங்கும் உண்மை"யை கண்டு பிடிக்க “ரொக்கெட் விஞ்ஞானிகள்” தேவையா என்ன?> கொழும்பு பேராயர் ரஞ்சித் மெல்கம், "ஈஸ்டர் ஞாயிறு 4/21 சஹாரான் கும்பல் தாக்குதல்" தொடர்பில், இரண்டு வருடமாகியும் நியாயம் நிலைநாட்ட படவில்லை என்றும், இதில் ஒளிந்து நிற்கும் உண்மையை அரசு மறைத்து வருகிறது என்று பொருள் படவும் கூறுகிறார். அரசாங்கம் சர்வதேசத்தை நாடுமானால், தாமும் சர்வதேசத்தை நாடுவோம் என்கிறார். சர்வதேசத்தை நாடுவது பற்றி இரண்டாம் முறை கூறியுள்ளார். குறிப்பாக ஐநா மனித உரிமை ஆணையகத்தில், இதுபற்றி பேச தமது ஜெனீவா தொடர்பாளர்கள் தயார் என்றும் பேராயர் கூறுகிறார். பிரதமர் மகிந்தவும், வெளிவிவகார அமைச்சர் பீரிசும் ஏதோ "வெண்டிக்காய் பீட்சா" வாங்க இத்தாலி போகிறார்கள். அதன்போது பாப்பரசரை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டு பார்க்க இருந்தவர்கள், இப்போது, பேராயரின் மிரட்டலுக்கு அஞ்சி, பாப்பரசரை சந்திக்க எண்ணமில்லை என்று கூறிவிட்டார்கள். கடந்த தேர்தலின் போது இன்றைய ஆளும் கட்சியை கடுமையாக ஆதரித்தவர், என்பதால் எனக்கு பேராயர் மீது கொஞ்சம் அதிருப்தி இருந்தது. ஆனால், இவர் கத்தோலிக்க மக்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வேண்டி உறுதியாக இருப்பது கண்டு நான் இன்று மகிழ்கிறேன். இங்கே எனக்கு விளங்குகின்ற, "உறங்கும் உண்மை" ஒன்றை தர்க்கரீதியாக வெளியே சொல்ல விரும்புகிறேன். 290 பேர் கொல்லப்பட்டு, 500 பேர் காயமடைந்த 4/21 சஹாரான் கும்பல் தாக்குதலில் இறந்த, காயமடைந்தோரில் மிக பெரும்பான்மையோர் மதரீதியாக கத்தோலிக்கர்கள். எவரதும் கவனத்தில் பெரிதும் வராத உண்மை ஒன்று உள்ளது. இறந்த காயமடைந்தோரில் பெரும்பான்மையோர் தமிழர்கள். எனது வாக்காளர்கள் நிறைந்த கொழும்பு கொட்டாஞ்சேனை அந்தோனியார் தேவாலயத்தில், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டோர் மிகப்பெரும்பாலோர் தமிழ் கத்தோலிக்கர்கள்/கிறிஸ்தவர்கள். நீர்கொழும்பு செபஸ்டியன் தேவாலயத்தில் கொல்லப்பட்டோரும் கணிசமாக சிங்களம் பேசும் முன்னாள் தமிழர்கள்தான். ஆனால், நல்லவேளை இவர்களுக்கான நீதி இனரீதியாக இல்லாமல் மத ரீதியாக இன்று கோரப்படுகிறது. இனரீதியாக நீதி கோரி இருந்தால், இன்று ஈஸ்டர் தாக்குதல் சம்பவம், குழி தோண்டி புதைக்கப்பட்டு இருக்கும். அது மட்டுமல்ல, கொல்லப்பட்ட தமிழர் பற்றி ஐநாவுக்கு யார் கடிதம் எழுதுவது என்று தமிழ் கட்சிகள் இன்னமும் அடிபட்டு கொண்டிருப்பார்கள். இங்கே கவனிக்கப்பட வேண்டியது, தாக்குதல் நடத்திய குண்டுதாரிகள், ஒரு மெது இலக்கை (Soft Target) தேடித்தான் தமிழ் தேவாலயங்களை தாக்கியுள்ளார்கள். அரசின்மீது, சிங்கள மக்கள் மீதும் கோபம் இருந்திருந்தால், அவர்கள் ஒன்றில் சிங்கள பெளத்த விகாரைகளை தாக்கி இருக்கலாம். அல்லது, ஒரு மாதம் தாமதித்து வெசாக் பண்டிகையை குறி வைத்து இருக்கலாம். தாக்குதலுக்கு பிறகு ஓடியோடி போய், நியுசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கவே தாக்கினோம் என “ஐஎஸ்ஐஎஸ்”கார்களை சொல்ல வைத்த முயற்சி, சிறுபிள்ளைத்தனமானது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். ஆகவே “நாதியற்ற அப்பாவி” தமிழர்கள் பலிகடா ஆனார்கள். இதுதான் இதன் பின்னே ஒளிந்து நிற்கும் உண்மை. இந்த ஒளிந்து நிற்கும் உண்மைக்கு பின்னே இன்னொரு உறங்கும் உண்மை இருக்கிறது. அது என்ன? “ஐஎஸ்ஐஎஸ்”, “தலிபான்”, “அல்கைடா” போன்ற பயங்கரவாத ஆயுத கும்பல்களின் “சிந்தனை மற்றும் தோற்றப்பாடு” போன்றவைகளால் கவரப்பட்டு வழி தவறிய ஒரு பிரிவு இந்நாட்டு முஸ்லிம் இளையோரை, ஒரு அயோக்கிய அரசியல் கும்பல் பயன்படுத்தி உள்ளது. அந்த கும்பல், “பாம்பும் சாகனும், கம்பும் உடைய கூடாது” என்று செயற்பட்டுள்ளது. அதாவது, முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்கள் தூண்டப்பட வேண்டும். அதற்கு “சம்பவம்” வேண்டும். ஆனால், அந்த "சம்பவ"த்தில் சிங்கள் பெளத்த மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே அந்த மெது இலக்கு (Soft Target) நாதியற்ற தமிழர்கள்தான். இதைதான் இவர்கள் செய்தார்கள். யார் செய்தார்கள் என்பதை கண்டறிய “ரொக்கெட் விஞ்ஞானிகள்” தேவையா என்ன? http://www.jaffnamuslim.com/2021/09/blog-post_790.html
 21. ஐயா நான் என்னுடைய சிறு வயதில் கேள்விப்பட்டது உண்மையே தெரியாது. முன்பு சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் முன்பின் தெரியாதவர்கள் தண்னீர் கேட்டால் சிரட்டையில் தண்ணீர் மொண்டு வந்து கொடுப்பார்கலாம். இது உண்மையா ? இதை ஒர் சிங்கள நண்பனும் என்னிடம் உறுதிப்ப்டித்தினான். ஒரு வேளை சாதி வேறுபாட்டினால் இப்படி செய்வார்களோ தெரியவில்ல.
 22. எனக்கு நண்பொருவர் கூறியது இது உண்மையோ தெரியவில்லை. இப்பொழுது யாழ்பாணத்து பெண்கள் சிங்களம் பேசும் ஆண்களயே திருமணம் முடிக்க விரும்புகின்றார்களாம். பண்பான / ஸ்டயிலான சிங்கள ஆண்களை மிக பிடிக்குமாம். வங்கிகள் / அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சிங்கள்வர்களுடன் ஒன்றினைந்து ஒரு புரிந்துணர்வுடன் ஆக வேலை செய்வதற்கு சிங்களம் அவசியம் என தெரிந்து வைத்திருக்க விரும்புகின்றார்க்ளாம். அதேபோல் அழகுக்கலை போன்றவற்றை சிங்கள பெண்களிடமே இவர்கள் கற்று வருகின்றார்களாம். இளயோர்கள் சிங்கள் இன்வாதிகளையும், தமிழ் இனவாதிகளயும் வெறுக்கின்றார்களாம். சாணக்கியன் போற்ரோர் இதானாலேயே இளையோர் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.