Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3247
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது ராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்கு பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார். "உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது கோத்தாவின் அமைச்சராக இருந்து கொண்டு இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை. அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கேப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார். கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்து கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே புலிகள் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் அறிவிக்கின்றார். அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்க இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள். தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள். ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்… பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன. இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்க தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள். சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தை சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் அணிகளோ அமைதி காக்கிறார்கள். புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார். கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது. கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்கை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள். மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தில் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை. ட்ரக்கை reverseல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கூறப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் டர்க்கை புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம். ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாலவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார். ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமை சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்களை போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க, பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முனவந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பை சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார். பின்னர் இராணுவத் தளபதிகளுடனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வர, ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில், முதல் நாளிரவு அமைதியாக நடந்தேறிய வரலாற்று சம்பவத்தை பற்றிய செய்தி பின்வரும் தலையங்கத்தில் பதிவாகியது. “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” Posted 5th December 2021 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/2022/01/blog-post_10.html
  2. முள்ளியவளையில் தனது முச்சக்கரவண்டியில் ‘மாவீரன்’ என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். ‘மாவீரன்’ என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பெயர். ஆகவே குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகிறார். அவரைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்யவேண்டும், எனக் கூறியே பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் சட்டத்தரணிகளின் விரைவு நடவடிக்கையினால் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டார். உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள் குறித்த இந்த சம்பவமானது, மாவீரரை தமிழர்கள் மறந்தாலும், தமிழர்கள் மீது வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துக்கொண்டிருக்கும் பேரினவாத சிறீலங்கா அரசும், அதன் படைக்கட்டமைப்பும் மறக்காது என்பதையே சொல்லி நிற்கிறது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வளவு தடைகள், அச்சுறுத்தல்கள், கைதுகள், விசாரணைகளுக்குப் பின்பும் ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் தமிழ் மக்கள் சுயமாகத் திரள்வதற்கு இதுவேதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://meiveli.com/2023/11/22/மாவீரன்-என-எழுதப்பட்ட-பெ/
  3. U K க்கு போய் ஆங்கிலத்தில் படித்து தானெ பெரிய சோலிசிட்டர் எல்லாம் உருவாகியுள்ளார்கள். ஏன் தமிழில் ப்டிக்க வேண்டும்?
  4. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை என்று சோமாலியா என்ற நிலையில் தான் இருந்திருக்கும். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் இருந்திருக்காது. ஆகவே நன்றி கெட்டத்தனமாக இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. என்றார் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார். https://www.madawalaenews.com/2023/11/i_183.html
  5. என் வாழ்த்துக்களை இந்த பாடல் மூலம் சு வி ஐயாவுக்கு சம்ர்பிகின்றேன்
  6. ‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? - ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்தவே முயற்சிக்கின்றனர். மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்காளர் இடாப்பிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அரச அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும். 1990 இல், வடக்கிலிருந்து புலிகள் இதே பாணியில்தான் முஸ்லிம்களை வெளியேற்றினர். இன்னும், இதே சிந்தனையில் அரச அதிகாரிகள் செயற்படுவது வெட்கக்கேடானது. நான் அமைச்சராக இருந்தவேளை, முப்பதாயிரம் தமிழர்களை மீளக்குடியேற்றினேன். ஆனால், முஸ்லிம்களை குடியேற்ற வடக்கிலுள்ள அதிகாரிகள் விரும்பவில்லை. எனினும், அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று பலத்த சவால்களுக்கு மத்தியிலேதான், ஏழாயிரம் வீடுகளை நிர்மாணித்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டனர். முல்லைத்தீவில் முஸ்லிம்களை குடியேற்ற காணிகளை துப்புரவு செய்தபோது, எங்களது முயற்சிகளுக்கு குறுக்காக நின்ற சிலர், எங்களை கொன்றுவிட்டுத்தான் முஸ்லிம்களை குடியேற்ற வேண்டும் என்றனர். எங்களிடம் அதிகாரம் இல்லாத நிலையில், முஸ்லிம்களின் காணிகளை இலஞ்சம் பெற்று வேறு பலருக்கு விற்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எனவே, எஞ்சியுள்ள வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற முறையான வேலைத்திட்டத்தை கோருகின்றேன். இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போருக்கே எதிர்வரும் தேர்தலில் எமது ஆதரவு. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஜெனீவாவில் வழங்கப்பட்ட உறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவர்கள் மீள்குடியேறும் வரை எதிர்கொள்ளும் தொழில்ரீதியான சவால்களை தீர்ப்பதற்கும் நடவடிக்ககைள் எடுக்கப்பட வேண்டும்” என்றார். https://www.madawalaenews.com/2023/11/i_21.html
  7. பல தாசப்தங்களுக்கு பிறகு கொழும்பு பம்பலபிட்டி மெஜெஸ்டிக் தியேட்டரில் பார்த்தேன். விஜை நடிப்பை ரசிக்கலாம். பாட்சாவை ஞாபகப்டுத்துகி
  8. குஷ்பு நடிக்க வந்தபோது நான் ஒரு டீன் ஏஜ் வயது பையன். இவரது உண்மையான பெயர் நக்கத். இவரது சின்னத்தம்பி போன்ற படங்கள் பார்த்து கிளர்சிசியடைந்த காலம் ஞாபகம் வந்து போகின்றது. நக்கத், நக்கத் என்று இரவில் புலம்பி நா வரண்டுபோன நிலையில் காலையில் எழுது பார்த்தால் சாரமெல்லம் நனைது போய் இருக்கும் அது அருமையான கனா காலங்கள். கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ உன்னாட்டம் பொம்பள யாரடி இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி அல்லி ராணி என் அருகில் வா நீ முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா
  9. மேன்முறையீட்டு நீதிமன்ற ஷண்முகா ஹபாயா வழக்கு: பாடசாலைகளில் ஹபாயா ஆடை அணியத் தடையில்லை என பிரதிவாதிகள் எழுத்து மூலம் ஏற்பு. ஷண்முகா ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த (Writ) வழக்கு (07.11.2023) முடிவிற்கு வந்தது. தனது கலாச்சார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என ஆசிரியை பஹ்மிதா அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் Writ வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்தமைக்கு எதிராக ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்திருந்தார். பாடசாலை அதிபர் சமூகம் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து வரத் தடையில்லை என்ற உத்தரவாதத்தைத் தந்ததைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமரச அடிப்படையில் முடிவிற்கு வந்ததிருந்தது. எனினும் நீதவான் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் அப்பாடசாலையினை மாத்திரமே கட்டுப்படுத்தும். ஆனால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பிரதிவாதிகளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஷண்முகா அதிபர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், அரசைப் பிரதி நிதித்துவப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பாடசாலைகளில் ஹபாயா அணிந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவாத்தினை எழுத்து மூலம் தந்ததை அடுத்து இவ்வழக்கு முடிவிற்கு வந்தது. இந்த முடிவின் மூலம் இலங்கையில் இருக்கும் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொறேயா, குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் இன்று ஆஜராகி இருந்தனர். குரல்கள் இயக்கம் (Voices Movement) பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாகஆரம்பம் முதல் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.jaffnamuslim.com/2023/11/blog-post_500.html
  10. என்னை உரையாற்ற அழைக்கும் போது ‘கலாநிதி’ என்ற எனது கல்வித்தகுதி பட்டத்தை கூறியே அழைக்க வேண்டும். இதனை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்” என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி.க்கு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நீதிமன்றம். நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பின்போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தினார். இந்த விவாத்தில் முக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான ஹேசான் விதானகே உரையாற்றி பின்னர் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அரச தரப்பு எம்.பி.யான சமன் பிரிய ஹேரத், ‘அடுத்ததாக உரையாற்ற கௌரவ சுரேன் ராகவனை அழைக்கின்றேன்’’ என்றார். இதனையடுத்து, எழுந்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், “என்னை உரையாற்ற அழைக்கும் போது ‘கலாநிதி’ சுரேன் ராகவன் என்றே அழைக்க வேண்டும். இதனை இந்த சபையில் சபாபீடத்துக்கு தலைமை தாங்கும் பலருக்கும் பல தடவைகள் கூறியுள்ளேன். நான் பல்கலைக்கழகம் சென்று கஷ்டப்பட்டு படித்து பெற்ற பட்டம் கலாநிதி. எனவே எப்போது என்னை அழைத்தாலும் ‘கலாநிதி’ என்ற பட்டத்தை எனது பெயருடன் சேர்த்து பயன் படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார். https://www.madawalaenews.com/2023/11/i_9.html
  11. இந்த கூட்டம் நடக்கும்போது நான் யூனியன் பிளேஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். கடும் மழை, மின்னல் காற்று வீசியது. கையில் குடையுடன் சிறிது நேரம் நின்று பார்த்தேன். பெரும்பாலன இலங்கை முஸ்லீம்கள் ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்ப்பாக பார்க்க மாட்டார்கள். ஹமாசின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள்.
  12. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மிக கொடூரமாக திட்டமிட்ட முறையில் கலை, கலாச்சார, சமூகவிழுமியங்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. காணி ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது சமூக, கலாச்சார சீர்கேடுகளும் மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் திட்டமிட்டு சீர்கேடான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள். யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த 4ஆம் திகதி இரவு “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பை சேர்ந்த Eventsby ShuttleVibe எனும் நிறுவனத்தின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக பார்ட்டிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1500 ரூபாய்க்கும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1000 ரூபாய் என விளம்பரம் செய்து 0741102280 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கோரி இருந்தனர். அதன் அடிப்படையில் அன்றைய தினம் பல இளையோர் நுழைவு சீட்டுக்களை பெற்று தமது பெண் நண்பிகளுடன் கொண்டாட்டத்திற்கு சென்று இருந்தனர். முன்னதாக DJ இசையுடன் ஆரம்பித்த கொண்டாட்டம் பின்னர் மது விருந்துடன் நிகழ்வு சூடு பிடிக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து அங்கு வந்த சிலர் மது போதை தலைக்கு ஏற தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கி கடும் போதையில் ஆட்டம் போட்டுள்ளனர். ஹோட்டலில் மதுபானம் மாத்திரமே வழங்க பட்டதாகவும், ஆனாலும் அங்கு வந்த பலரும் தம் வசம் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கலாசாச்சர சீரழிவு நிகழ்வுக்கு ரில்கோ ஹோட்டல் துணை போனமை தொடர்பில் பலரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். அதேவேளை தென்பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போதை விருந்துக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு எதிராகவும் , விருந்து கலந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்நிலையிலையே தற்போது , யாழ்ப்பாணத்தில் அவ்வாறான விருந்து கொண்டாட்டத்தை தெற்கை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர் எனவும். இவ்வாறானவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள புகைப்படங்களில் காணப்படுபவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள். இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் உங்களது பிள்ளைகள் தொடர்பு கொண்டிருந்தால் உடனடியாக அவர்களை கண்டித்து வையுங்கள். இவர்களை ஏற்கனவே திருமணம் செய்வதற்கு யாராவது ஆயத்தமாகியிருந்தால் கொஞ்சம் யோசியுங்கள்…. இங்கு காணப்படுபவர்களில் திருமணம் முடித்தவர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களின் மனைவிமார் கவனமாக இருங்கள்… உங்களுக்கும் எயிட்ஸ் நோய் காணப்படலாம்…. https://vampan.net/50210/ படங்கள் இணைக்க முடியவில்லை
  13. நல்லதொரு திறமையான முதலாளி இவர். இவரைப்போன்றவர்களுக்கு இந்த நிலமை வர‌க்கூடாது. இவரது கடசிக்காலம் மிகவும் வருந்தத்தக்கது
  14. அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு கடந்த ஓகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர். https://www.madawalaenews.com/2023/11/i_90.html
  15. அருமையான கருத்து. இதைத்தான் நானும் இளையோருக்கு கூறுகின்றேன், skill set ஐ சரியாக தயாரக்கி கொள்ள வேண்டும்
  16. நல்லதொரு ஆக்கம். பொதுவாக தமிழ‌ர்கள் போருக்கு முந்தியே ஏஜன்சி மூலம் போகும் பழ‌க்கம் இருக்கின்ரது. 1978/79 களில் நான் அக்கால இளைஞர்களை கண்டுளேன். ஜெர்மனி போக கொழும்பில் வந்து நிற்பார்கள். இது ஒவ்வொருவரின் சூழ்னிலைக்கு ஏற்ப வேறூபடும்
  17. நவா இப்பொழுது இல்லை, ரியோ போனவாரம் அப்ப‌குதியால் சென்ன்றபோது கண்டேன் பாழடைந்து காணப்படுகின்றது, படம் ஓடுகின்றததோ தெரியவில்லை. இரண்டும் கொம்பனி வீதியில் உள்ளது. கொன்கோர்ட் இன்னும் இயங்கின்றது என நினக்கின்றேன். சமந்தா மிகவும் பழையது இப்போ லியோ ஒடுகின்றது.
  18. (எம்.பஹ்த் ஜுனைட்) 1990 ஒக்டோபர் 29 இல் புலிகளால் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு மேற்கொண்டு 33 வருட நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (29) காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லூரி , அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது . எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜெ.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அமைப்பின் செயலாளர் சட்டமானி பி.எம்.முஜீபுர்ரஹ்மான் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்துகொண்டு வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினார்கள். இந் நிகழ்வின் போது 1990 இல் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அடிப்படை உதவிகள் வழங்கிய புத்தளம் மாவட்ட மக்களை கெளரவித்து புத்தள மாவட்ட மக்கள் சார்பில் மெளலவி எம்.பீ.எம். ஷிப்னாஸ் (மிஸ்பாஹி) அவர்களுக்கு கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.jaffnamuslim.com/2023/10/blog-post_503.html வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட 33 ஆவது வருட நினைவு கூறல் வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு புலிகளால் இனச்சுத்திகரிப்பு (வெளியேற்றப்பட்டு) செய்யப்பட்ட 33 ஆவது வருட நினைவுகூறலை முன்னிட்டு விசேட ஊடகவியலாளர் மாநாடு யாழ்ப்பாணம் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (2023.10.30) இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பு :- கறுப்பு நிற கொடிகளை வெளிப்படையாக காட்சிப்படுத்தி வெளியேற்றத்தின் மறக்க முடியாத துன்பியல் நாளை வெளிப்படுத்தியிருக்கும் இன்றைய சோனகதெருவின் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. தகவல் என்.எம்.அப்துல்லாஹ் https://www.jaffnamuslim.com/2023/10/33_30.html
  19. இப்படியான தியெட்டர்களை பாதுகாக்க வேண்டும். கொழும்பிலும் இப்படி இருந்த நிறைய பழைய தியேட்டர்களை எல்லாம் உடைத்து அழித்து விட்டார்கள் (கெயிட்டி, கெப்பிடல், முருகன், கிங்ஸ்லி, செல்லமஹால், மைலன், கல்பனா, ஜெஸீமா என பல)
  20. வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(30)நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் தெரிவித்தனர். அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலேயே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது. திகில் அனுபவங்களை அந்த வீட்டினுள் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் செல்ல முடியும். ஒலி , ஒளி அமைப்புக்களுடன் மிக பிரமாண்டமாக இந்த வீடு உருவாகி வருகிறது. பேய் படங்களை பார்க்கும் போது ஏற்படும் திகில் அனுபவங்களை இந்த வீட்டினுள் சென்று திரும்பும் போது நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும். வீட்டினுள் சுமார் 30 நிமிடங்கள் ஒவ்வொருவரும் செலவிட முடியும். அந்த 30 நிமிடங்களும் பல்வேறு வகையான திகிலான அனுபவங்களை உணர முடியும். ஒரு நாளைக்கு 800 பேர் வரையிலேயே வீட்டுக்குள் அனுமதிக்க கூடிய நிலைமைகள் காணப்படுவதனால் , நுழைவு சீட்டுக்களை முற்பதிவு செய்து கொள்வது சிறந்தது. பிரமாண்டமான முறையில் நுழைவு சீட்டானது ஆளொருவருக்கு 750 ரூபாய் ஆகும். அதனை பெற்றுக்கொள்ள 0776016344 மற்றும் 0772018833 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும். அதேவேளை திகில் வீட்டுக்கு வெளியே உணவு திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அத்துடன் முகங்களில் படங்களை கீறி கொள்ளவும், செல்பி பூத்தில் படம் எடுத்து மகிழ கூடியவாறான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அவற்றுக்கான கட்டணங்கள் வேறானதாகும். இந்த திகில் வீட்டுக்கு 10 வயதுக்கு குறைவானவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள் , இருதய நோய் உள்ளவர்கள், வருவதை தவிர்த்து கொள்வது நல்லது. ஏனெனில் இது மிக பிரமாண்டமான முறையில் திகிலை ஏற்படுத்த கூடியவகையில் உருவாகி வருகின்றது என மேலும் தெரிவித்தனர். https://lanka-times.lk/jaffna-ghost-house-1698680996
  21. - M.Mohamed - டியூனிசியாவில் ஆட்சி மாற்றம் அங்கு ஒரு தனியாவரின் போராட் டத்தினால் உருவாகியது. தனிநபர் போராட்டம் சிறுக சிறுக மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து என் காரணமாக பெரும் போராட்டமாக மாறி அரபு வசந்தமாக மாறி துனீசியா லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது. முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டார்கள் அந்தக் காலப்பகுதியில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புரட்சிகரமாக மக்கள் முன் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள் அதனால் தாறுமாறாக தாக்கப்பட்டு மயங்கி விட்டார்கள். ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அவரும் தான் இஸ்லாத்தை ஏற்றதே புரட்சிகரமாக மக்கள் முன் தெரிவித்தார்கள் ஆனால் உங்களுடைய வீரத்தன்மையை அரபிகள் அறிந்திருந்த காரணமாக அவர்கள் பயந்து அவருக்கு எதுவும் செய்யவில்லை இந்தப் புரட்சியின் பின்னர் தான் முஸ்லிம்கள் ஓரளவுக்கு துணிவுடன் மக்காவுக்குள் நடமாட முடிந்தது. உலகில் கைத்தொழில் புரட்சியை ஆடும் ஆட்சி மாற்றங்களுக்கான புரட்சியாகட்டும் கம்யூனிச புரட்சியாகட்டும் எல்லாமே ஒரு சிலரால் ஏலனப்படுத்தப்பட்ட அதை வேலை அந்தப் புரட்சிகள் எல்லாம் பல்கிப் பெருகி மக்கள் ஆதரவு அதிகமாகி பெரும் போராட்டங்களாக மாறி மக்களுக்கு பல நன்மைகளை பெற்றுக் கொடுத்தது. இலங்கையை எடுத்துக் கொண்டாலும் இங்கும் பல்வேறு புரட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இடம்பெற்ற புரட்சி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது பலரும் கண்களால் கண்ட உண்மை. 1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் காத்தாங்குடி ஏராவூர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தப் பிரதேசங்களில் கை வைக்க முடியாது என அறிந்த இயக்கத்தினர் பாதுகாப்பு குறைவாக இருந்த பொலநறுவை பிரதேசத்தில் படுகொலைகளை நிகழ்த்தி ஏறக்குறைய 150 முஸ்லிம்களை கொலை செய்திருந்தனர்.. இதை அடுத்து அக்டோபர் மாதத்திலும் அக்டோபர் மாதத்தில் மீண்டும் ஒரு படுகொலையை நிகழ்த்தி 190 கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலை செய்திருந்தனர். இதனை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் இப் படுகொலைக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் கருப்பு அக்டோபர் நினைவு தினத்தை அனுஷ்டித்தனர். இவற்றுக்கெல்லாம் ஆதரவாக இலங்கை முஸ்லிம்கள் சகல ஊர்களிலும் தமது கடைகளை அடைத்து ஹர்த்தால் அனுஷ்டித்தனர். இதன் காரணமாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சர்வதேச மன்னிப்பு சபை சர்வதேச ஊடகங்கள் புலிகளை கடுமையாக சாடியதுடன் எச்சரிக்கையும் செய்திருந்தனர். புலிகள் நூற்றுக்கணக்கு முஸ்லிம்களை கொன்று குவித்தது இறுதியாக நடந்தது 1992 ஆம் ஆண்டு தான். கருப்பு அக்டோபர் நிகழ்வுகள் அவர்களுடைய இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தியது வரலாற்றை அலசி ஆராய்வு செய்பவர்களுக்கு தெரியும். 2015 ஆம் ஆண்டு கூட யாழ்ப்பாணத்தில் வீடமைப்பு திட்டங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாத காரணமாக ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்கள் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து புரட்சி செய்தனர். இதன் பிறகு தான் சுமார் 225 முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. 1744 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் நல்லூரில் இருந்து வெளியேற்றப்பட்ட சமயம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் தமது பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர் என்பதை ஒல்லாந்தரின் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. இந்தப் போராட்டம் காரணமாக ஏறக்குறைய நூறு ஆண்டுகள் அதனுடைய தாக்கம் இருந்தது. எப்போது முஸ்லிம்கள் அந்தப் போராட்டத்தை கைவிட்டார்களோ அதன் காரணமாக அடுத்த தலைமுறைகளில் வந்தவர்களுக்கு தம்மை பாதுகாக்க திட்டம் வகுத்து செயற்பட தெரியவில்லை. அப்படி தெரிந்து இருந்தால் புதிய தலைமுறைகள் தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் யாழ்ப்பாணத்திலேயே குவித்து வைத்திருந்து 1990 இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் பொழுது பறிகொடுத்து இருக்க மாட்டார்கள். அவர்களின் செல்வத்தின் ஒரு பகுதியை ஏனைய மாவட்டங்களில் சரி சொத்துக்களாக வைத்திருந்திருப்பார்கள். பாலஸ்தீனத்தை பொருத்தவரையில் இந்த பலஸ்தீனத்தை கைப்பற்றும் திட்டம் ஓர் இரண்டு நாட்களில் தீட்டப்பட்டதல்ல. பல ஆண்டுகளாக தீட்டப்பட்டு உடன்படிக்கையில் செய்யப்பட்டு அதற்குள் உருவாகியதுதான் இன்று உலக முஸ்லிம்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்கி நடத்தும் நாடாகும். அந்தப் பாலஸ்தீனர்களை பெருந்தொகையானால் இந்த போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து வேறு நாடுகளில் சென்று குடியேறி தமக்கு என ஜோர்தான் என்ற பெயரில் ஒரு நாட்டையும் உருவாக்கி வாழ்ந்து வந்த காரணமாக காசா மேற்கு கரை பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பலம் இழந்து சிறு தொகையாகினர். மிகுதியாக இருந்த மக்களும் நமது காணிகளையும் வீடுகளையும் பெருந்தொகைக்கு விற்பனை செய்துவிட்டு எகிப்து உட்பட மேற்கு நாடுகளில் குடியேறினர். இன்று பலரும் புரியாமல் கதைப்பது போன்று அன்றும் பலஸ்தீனத்திலே யாழ்ப்பாணத்தில் மக்கள் எச்சரிக்கை இல்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து விட்டனர். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நினைவுபடுத்துதல் என்பது பல்வேறு தாக்கங்களை சொந்த மக்களுக்கும் எதிரிகளுக்கும் ஏற்படுத்தக் கூடியது. இன்று கருப்பு அக்டோபர் என்றால் அதனை தடுத்து நிறுத்த எத்தனையோ தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. முஸ்லிம்களை வெளியேற்றி அவர்களை செய்துவிட்ட மகா பெரிய தவறு அவர்களது போராட்டத்தை மழுங்கடித்து விட்டது ஒரு புறம் இருக்க முஸ்லிம்கள் தொடர்ந்து செய்து வரும் இந்த கருப்பு அக்டோபர் நினைவுபடுத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து அவர்களுக்கு நெற்றியடியை கொடுத்து வருகின்றது. கருப்பு அக்டோபர் நினைவுகளை மீட்டுபவர்கள் அடுத்த தலைமுறைக்கு சில எச்சரிக்கை தகவல்களை சொல்லுகின்றனர். வெள்ளம் வரும் முன் அணை கட்டுவோம் என்பது போல் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு தற்போது இருந்தே எமது உம்மத்தை பாதுகாப்புடன் வாழ எச்சரிக்கையுடன் வாழ இந்த நினைவுபடுத்தல்கள் உதவும். யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு 2000 முஸ்லிம் குடும்பங்கள் மீளவும் குடி ஏறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். சுமார் ஐந்து வருடங்கள் இழுத்தடிப்பு செய்யப்பட்ட இவர்களுடைய மீள்குடியேற்றம் ஐந்து வருட முடிவில் எந்த ஒரு வீடும் அவர்களுக்கு வழங்கப்படாமல் சூழ்ச்சிகரமாக முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தடுக்கப்பட்டது.. பின்னர் நீதி கேட்டு முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டம் செய்ததன் பின்னர்தான் 50 வீடுகள் வழங்கப்பட்டது. வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் கருப்பு அக்டோபர் நிகழ்வுகள் மூலமாக மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக மேலும் சில வீடுகள் காலத்துக்கு காலம் வழங்கப்பட்டு சுமார் 225 முஸ்லிம்களுக்கு இதுவரை வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இழுத்தடிப்பு செய்வது ஒரு மனித உரிமை மீறலாகும். அதேபோன்று 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திரும்பவும் குடியேறுவதற்காக சுமார் 2000 முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுடைய விண்ணப்பங்கள் எல்லாம் தொலைந்து விட்டது என கூறப்பட்டு 2016 ஆம் ஆண்டு நடமாடும் சேவை என்ற பெயரில் இரண்டாவது தடவையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது . முக்கியமான ஆவணங்களை தொலைத்து விட்டோம் எனக் கூறும் அதிகாரிகளின் செயற்பாடுகள் மனித உரிமை மீறல் அல்லவா? இந்த விடயம் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் பொழுது ஏறக்குறைய 3000 குடும்பங்கள் திரும்ப குடியேறுவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் இதுவரை வீடுகள் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கப்படவில்லை. மேலும் 2017 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால் யாழ்ப்பாணம் முஸ்லிம்களை குடி ஏற்றுவதற்கு சுமார் 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை ஒரு குடும்பத்துக்கு தலா எட்டு லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் சுமார் 200 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆகும். இந்த நிதியை சுமார் எட்டு மாதங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒழித்து வைத்துவிட்டு இந்த நிதியை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் இல்லாத காரணமாக அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக அப்போதைய அமைச்சர் ரிசாத் அவர்கள் 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மீளாத் விழா நிகழ்வுகளின் போது மேடையில் வைத்து தெரிவித்திருந்தார். எனவே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்வதன் ஜனாதிபதிக்கும் இந்த விடயம் தெரிவிக்கப்பட வேண்டும். எனவே கருப்பு அக்டோபர் நினைவுகள் பல தசாப்தங்களுக்கு நடத்தப்பட வேண்டும். நீங்கள் அதனூடாக எதிர்கால சந்ததிகள் எச்சரிக்கையுடன் வாழ்ந்து தம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் வியூகங்கள் போன்றவற்றை வகுத்து தமது பொருளாதார இழப்புகளை குறைத்துக் கொள்ள வழி சமைக்கப்பட வேண்டும். https://www.jaffnamuslim.com/2023/10/blog-post_694.html
  22. யூதர்களின் புனித நூலான டோரா எனப்படுவது பைபிளில் உள்ள முதல் 5 புத்தக‌ங்களுமே. அவையாவன ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பவயே. மேலும் கிறீஸ்து பிறந்தவுடன் கிறிஸ்த‌வம் தோன்றவில்லை அவர், பிறந்து,வாழ்ந்து ம‌ரித்து, விண்ணேற்றம் அடந்த பின்பு ஒரு மதமாக உருவாகியது. புனித பவுல் இந்த மத்தை பரப்ப ஒரு ஊக்கியாக இருந்தார். இதை அப்பொஸ்தலர் ந‌டபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம்.
  23. - யாழ் அஸீம் - உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை நினைவுப்புதையல்களை உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை மண்ணின்மேல் உங்களது மதலைத் தமிழ் ஏன் மறைந்ததென்ற அங்கலாய்ப்பில் உங்களது முன்னோர்களின் எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற ஈமப்புகை குழிகளை வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகளை அல்லாஹூ அக்பர் என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை எல்லாம் முன்வைத்து மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல் எல்லாம் அபகரித்து நட்பில்லாச் சூரியனின் கீழ் உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டிவிட்ட குற்றமெதுவுமறியா இக்குணக்குன்று மானிடர்கள் ஐந்து வருடங்கள் கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றனர். ஆறாம் வருடமும் அழுவதே விதியென்றால் வ. ஐ. ச. ஜெயபாலன் 1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக மண்ணிலிருந்து வேறோடு பிடுங்கி வீசப்பட்டதை முன்னிட்டு கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களால் பாடப்பட்ட கவிதையின் சில வரிகளே அவை. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஆறாவது வருட முடிவை முன்னிட்டு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் உயர்ச்சி பொங்கப் பாடிய இக்கவிதை இப்பொதும் எம் செவிகளில் எதிரொலிக்கிறது. சிறந்த கவிஞராக மட்டுமன்றி சிறந்த நடிகருமான 'ஆடுகளம்' புகழ் ஜெயபாலன் அவர்கள் மானிடதேசம் மிக்க உயர்ந்த பண்புடையவராவார். பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 33 வருடங்களானாலும், இவ்வரலாறானது வட மாகாண முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாக வடுவாக பதிந்து விட்டது. 1990 ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் வடமாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலிருந்து சுமார் 75,000 முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்ட துயர நிகழ்வை நினைவு கூறும் கறுப்பு ஒக்டோபருக்கு மூன்று தசாப்தங்கள் கடந்தும் முடியாத துயரோடு வடபுல முஸ்லிம் அகதிகள் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும். வட புல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூரல் மூலம் நடந்து முடிந்த கசப்பான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் மீட்டுதல் மூலம் தமிழ் முஸ்லிம் உறவுக்குப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென விமர்சித்து சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு விமர்சிப்பது கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் உரிமையையும் மறுப்பதற்குச் சமமாகும். 1987 ஜூலை சம்பவத்தின் போது தமிழ் மக்கள் மீது பெரும்பான்மைச் சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்களையும், மாவீரர் தினத்தையும், மற்றும் திலீபன் நினைவு தினத்தையும் தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இவ்வாறு நினைவுபடுத்தலானது உறவுகளைப் பாதிக்கும் என எவரும் விமர்சிப்பதில்லை. ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் உரிமையுள்ளது. அவ்வாறே எமது வடபுல முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பை கறுக்கு ஒக்டோபர் என நினைவு கூரலானது அவசியமானதும் நியாயமானதுமாகும். அத்துடன் கறுப்பு ஒக்டோபர் நிகழ்வுகளில் எம்மை பலவந்தமாக வெளியேற்றிய தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றோமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு சமூகம் தனது சொந்த வரலாற்றை அறியவில்லையோ, அந்த சமூகம் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாத சமூகமாகும். எனவே எமது வரலாற்றை ஆதாரபூர்வமாக அடுத்த சந்ததிக்கு உரிய முறையில் கடத்தி வைக்க வேண்டியது. எமது தார்மிகக் கடமையாகும். எமது முன்னோர்கள், ஆய்வாளர்கள் எழுதி வைத்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்துதான் தற்போது எமது வரலாற்றை அறிந்து கொள்னிறோம். அண்மையில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் வடமாகாணச் சபையின் அவைத் தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள், நல்லூர் கந்தசாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமிய பாபா ஒருவரின் சமாதி இருக்கின்றது என்று கூறப்படும் கருத்து முழுமையாக தவறானது என்று தெரிவித்திருந்தார். சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் யாழ்ப்பான முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர் எனினும் இவ்வாறான தவறான கருத்துக்களை சுட்டிக் காட்டுவதன் மூலம் எமது தமிழ் முஸ்லிம் உறவு வலுப்பபெற வேண்டும் என்ற நோக்கில் ஏற்கனவே பிரபல எழுத்தானரும் நாவலாசிரியருமான செங்கை சூழியான் எழுதிய நல்லூர் கந்தசாமி கோயில் வரலாறு என்ற ஆய்வு நூலிலிருந்தும், அ. முத்துத் தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் (1972) என்ற வரலாற்று நூலிலிருந்தும் நல்லூர் கந்தசாமி கோயில் வீதிக்குள் முஸ்லிம் பெரியாருடைய சமாதி இருந்தது என்பதை விளக்க முடிந்தது. எனவே எமது எதிர்கால சந்ததிக்கு தற்போதைய வரலாறுகளையும், நிகழ்வுகளையும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதிவு செய்து வைக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 33 வருடங்களாகியும், பூரணமான மீள் குடியேற்றம் செய்யப்படாமல் அகதி முகாம்களில் வாழும் அவலம் இன்னும் தொடர்கின்றது என்பது கசப்பான உண்மையாகும். இன்னும் ஆக்கபூர்வமான பூரண மீள் குடியேற்றம் நடைபெறாத காரணத்தை முன்னிட்டும் வெளியேற்றத்தை ஆண்டுதோறும் நினைவுகூர்வதன் மூலம் மறுக்கப்படும் எமது உரிமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். சில அரசியல்வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும், புனர்வாழ்வு நிறுவனங்களாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒதுக்கப்படுகின்ற நிலை இன்னும் காணப்படுவது வேதனைக்குரியதாகும். முப்பத்து மூன்று வருடங்கள் கடந்தாலும் அந்த வெளியேற்ற நிகழ்வுகளும், அவலங்களும் எமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களும் இப்போது நினைத்தாலும் இதயம் வலிக்கின்றது. காலத்தின் நீட்சியில் எம்மால் மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்களின் அமைப்பின் செயலாளர் நிஸாம் நைஸர் ஒக்டோபர் 30ம் திகதி யாழ் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட இறுதி நேரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நேரில் கண்டவர் அனுபவித்தவர். இறுதி நேர அவலங்களை அவர் பின்வருமாறு கூறுகிறார். 1990 ஒக்டோபர் 30ம் திகதி அதிகாலையில் ஒலிபெருக்கி கட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் வாகனங்களில் இவ்வாறு அறிவிப்புச் செய்யப்பட்டது. வீடுகளிலுள்ள ஆண்கள் யாவரும் ஜின்னா மைதாலத்தில் உடனடியாக வாருங்கள் அங்குள்ள ஆண்கள் யாவரும் சென்றபோது விடுதலைப் புலிகளின் முக்கியமான பொறுப்பிலுள்ள இளம்பரிதி இரண்டு மணித்தியாலங்களில் உடனடியாக வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டபோது எங்களில் ஒருவர் 'நாங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்று வினவியபோது சகல கட்டிடங்களையும் தவிர ஏனைய பொருட்களை கொண்டு செல்ல முடியும். என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வேளையில் ஒருவர் எமது முஸ்லிம் சகோதரர்கள் சிலரை கைதிகளாக பிடித்து வைத்திருக்கின்றீர்கள் சிலரிடம் கப்பம் கேட்டும் தடுத்தும் வைத்துள்ளீர்கள்! அவர்களுடைய நிலைமை என்ன? என்று வினவிய போது, கைதிகளாக இருப்பவர்கள் நாங்கள் கோரும் மன்னிப்பு நிதியைக் கட்டி அவரைக் கூட்டிச் செல்லலாம். அவருடன் ஒருவர் மட்டும் நிற்கலாம் என்று எமக்கு கூறப்பட்டது. தொடர்ந்து, 20 நிமிடம் கடந்து விட்டது. இன்னும் ஒரு மணி 40 நிமிடம் உள்ளது. எந்தப் பிரச்சினையும் செய்யாமல் உடனடியாக வெளியேறுங்கள். அல்லது நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். என்று எமக்குக் கூறப்பட்டது. நாங்கள் வீடுகளுக்குச் சென்ற போது வீடுகள் பூட்டப்பட்டு பெண்களும், சிறுவர்களும் வீதியில் நின்று அழுது கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் 16 பள்ளிவாசல்கள், 4 பாடசாலைகள் 13 பிரதான வீதிகள் அமைந்திருந்தன. சகலவற்றையும் துறந்து எமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நினைவுகள் துயரம் மிக்க அந்தக் கணங்கள் எந்த வினாடியும் மறக்க முடியாது. குறிப்பிட்ட 3 வீதிகளால் மட்டும் வெளியேற அனுமதித்தார்கள். கையில் கொண்டு செல்லக்கூடியவற்றையும் பணத்தையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது ஐந்து சந்தியிலும், சில முக்கிய சந்திகளிலும் நின்ற விடுதலைப்புலிகள் எமது பொருட்கள் யாவற்றையும் நகைகள் பணம் முழுவதையும் பறிமுதல் செய்தனர். 200 ரூபாய்கள் மட்டும் தந்தது மட்டுமன்றி எங்களுடைய உடல்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், பெண்புலிகள் பெண்களுடைய உடை, உடல்களை பரிசோதனை செய்து சகலதையும் பறிமுதல் செய்தனர். குழந்தைகளின் கை, கழுது;து, காதுகளிலிருந்த நகைகளையும் அபரித்தனர். பெண்புலி ஒருவர் உரப்பையொன்றை வைத்து சகலருடைய கைக்கடிகாரங்களையும் இடும்படி அவற்றை சேகரித்தார். எங்களுடைய பைசிக்கிள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் சகலவற்றையும் அபகரித்த பின்னர் எமது லொறிகளில் ஆடு, மாடுகளைப் போல் ஏற்றப்பட்டோம். வவுனியாவின் எல்லைப் பகுதியில் எம்மை இறக்கிவிட்டு எமது வாகனங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். பின்னர் அனேமான வடமாகாண முஸ்லிம்கள் புத்தளத்துக்கு வந்து சேர்ந்தனர். புத்தளத்து மக்கள் எம்மை அன்புடன் அரவணைத்து தற்காலிகமாக அங்குள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டோம். அம்மக்கள் தமது உடல், பொருள் பணத்தை எமக்ககாகச் செலவழித்து அவர்கள் செய்த தியாகத்தை எம் உயிருள்ள வரை மறக்க முடியாது. இவ்வாறு வட மாகாணத்திலிருந்து வெறியேற்றப்பட்டு 33 வருடங்கள் கடந்தும், இம்மக்களின் மீள்குnயேற்றம் பூரணமாக நடைபெறவில்லை. மீள்குடியேற்றம் முற்றுப்பெறாத காரணத்தால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதிக முகாம்களின் வாழ்வியல் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பலர் கல்வியை இழந்துள்ளனர். சிலர் உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல இளைஞர்கள் சரியான தொழில் வசதிகள் இன்றி அகதி முகாம்களில் அல்லலுற்று வாழ்கின்றனர். இத்தகைய சிரமமான சூழ்நிலையிலும் கல்வி தொழில் விடயத்தில் முன்னேறியவர்கள் பலர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீள்குடியேற்றமும் வீட்டுத் திட்டமும். 1990ம் ஆண்டு வடக்கிலிருந்து 75,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 33 வருடகால சனத்தொகை வளர்ச்சி காரணமாக இப்போது இத்தொகை பலமடங்காக அதிகரித்துள்ளது. எனினும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பல சவால்கள் காணப்படுகின்றன. அசரு புலிகள் யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். '1990ம் ஆண்டு முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்ட போது அதனைத் தடுக்க எவரும் முன்வரவில்லை. இப்போது எனது அரசாங்கம், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தபடியால், 2010 மே மாதமளவில் முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்படுவதற்கான சகல வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றார். இவ்வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்தும் வடமாகாண முஸ்லிம்கள் குடியேறுவதில் பல இறுக்கமான நிபந்தனைகள் காரணமாகவும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டுமாயின் மீள்குடியேறிய மாவட்டத்திலுள்ள அந்த இடிந்து சிதைந்த வீட்டில் தான் வசிக்க வேண்டும். குறுகிய கால 2 அல்லது 3 வருடங்களில் மீளக் குறியேறும் தமிழ் மக்களுடைய வீடுகளில் உடன் குடியேற முடியும். முப்பத்து மூன்று வருட காலமாக இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் அல்லலுற்று வீடு திரும்பும், வட மாகாண முஸ்லிம்கள், இடிந்து சிதைந்து குட்டிச் சுவராகி காடுகளாக மாறியிருக்கும் நிலையில் எவ்வாறு குடியேறுவது? எப்படி வசிப்பது? கிணறுகளும் மலச கூடங்களும் அழிந்து சிதைந்த நிலையிலுள்ள வீட்டில் எவ்வாறு வாழ்வது? இத்தகைய இறுக்கமான நிபந்தனையும் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தால் வெளியேற்றப்பட்டு, அகதிகளாகவும் உள்நாட்டிலும், இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு நஷ்டஈட்டையும் பெற்றுக் கொடுக்கவும் மீண்டும் இவ்வாறு நடக்காது என உத்தரவாதம் அளிப்பதும் நிலைமாறு கால நீதி எனப்படும். இம்முறைமை பல நாடுகளில் நடைமுறைமைப்படுத்துகிறது. இந்நீதி ஒழுங்கை ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளது. இதனை கடந்த நல்லாட்சி அரசும் அங்கீகரித்து கையொப்பமிட்டுள்ளது. இந்நீதி ஒழுங்கின்படி வட மாகாண முஸ்லிம்கள் உடனடியாக மீளக்குடியேற முடியாத காரணம் 30 வருடங்களாக பாவனையற்று, காடுகளாக மாறியுள்ள இடங்களில் கொட்டில்கள் அமைத்து, மலசல கூடங்கள் ஒருவாக்கி எவ்வாறு குடியேறுவது என்பதாகும். இவ்வாறு பல இறுக்கமான நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி சமத்துவத்துக்கான யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவரும், யாழ் கிளிநொச்சி முஸடலிம் சம்மேளகத்தின் பொதுச் செயலாளருமான ஆர். கே. சுவர்கஹான் (சுனீஸ்) பல்வேறு காரணிகளைக் குறிப்பிட்டுள்ளார். 'வடமாகாண முஸ்லிம்கள் மீளக்குடியேற்ற விடயத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். 1. மீள் குடியேற்றத்துக்கான ஆண்டுகள் 13 வருடங்கள் சென்றாலும் யாழ் முஸ்லிம்களைப் பொறுப்பவரை பூரணமாக சாத்தியப்படவில்லை. இதுவரை 250 க்கு உட்பட்ட வீட்டு உதவிகள் தான் யாழ் முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் வெளியேற்றப்படும்போது 4500 குடும்பங்கள் இருந்தன. மீள் குடியேறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 2500 குடும்பங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. அதனை பேருக்கும் பதிவு ஏற்படுத்தி பங்கீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்ட இதனைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மீளாய்வு என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களை மட்டும் பதிவில் வைத்தனர். பதிவில் உள்ள 600 பேரைத் தவிர ஏனையவர்களை இரத்துச் செய்தனர். தற்போது சிறிது சிறிதாகக் குடியேறி 1000 குடும்பம் குடியேறியுள்ளனர். இன்னும் 1000 குடியேறக்கூடிய சாத்தியம் உண்டு. கடந்த 13 ஆண்டுகளில் 250 க்கு உட்பட்ட வீட்டு உதவிகள் கிடைத்தன என்றால் 2000 குடும்பங்களுக்கு எடுக்கும் காலம் மிகக் கூடியதாகும். இவ்வாறான சூழ்நிலையில் வெளியேற்றத்தின் வலிகளை சுமந்தவர்களும், மீள்குடியேற்றம் தேவை என விருப்புடன் வந்தவர்களும் மீளக்குடியேறுவதில் விரக்தியடைந்து திரும்பி விடுவார்கள். இவ்வாறான சூழ் நிலைக்குக் காரணம் அரசாங்கமா, மவாட்ட அரசாங்க அதிகாரிகளா என்பதை நாம் சிந்திக்கும்போது யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 2. மேலும் புத்தளம் மாவட்டத்தில் யாழ் முஸ்லிம் வாக்குகள் 21,000 ஐ தாண்டியுள்ளது. யாழ் மண்ணில் இந்த வாக்குகள் இருக்குமாயின் நாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறக்கூடிய சாத்தியம் உண்டு. அதே நேரம் புத்தளம் மாவட்டத்தில் யாழ் மண்ணில் பிறந்தவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவராயின் புத்தளம் மகக்ளுடன் முரண்படக்கூடிய சூழ்நிலை உருவாகக் கூடும். அதேநேரம் புத்தளத்திலுள்ள பல அகதி முகாம்களில் அடிப்பதை வசதிகளின்றி பல சிரமங்களை எதிர்நோக்கி வாழ்கின்றனர். எனவே அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்னும் யாழ் மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு அது சாத்தியமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 2010 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் 4 பிரதிநிதிகளைப் பெற முடிந்தது. 2018 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் 4 பிரதிநிதிகளைப் பெற முடிந்தது. 2018 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் ஒரு பிரதி நிதியையே பெற்றோம். எதிர் காலத்தில் எவரையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. வட்டார இணைப்புக்கள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் முஸ்லிம்களாகிய நாம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறோம். 3. வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளிமாவட்டத்தில் சொந்தமாக விடு இருக்கக் கூடாது என்பதும் மீள் குடியேற்றத்தை தடுக்கும் ஒரு காரணியாகும். 33 வருடங்கள் வாழ்பவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்து சிறியதொரு குடிசையை வாங்கினாலும் மீள்குடியேற்ற உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரும் அநீதியாகும். 4. தாம் வாழும் பிரதேசத்திலிருந்து வாக்குகளை இரத்துச் செய்து விட்டு மீளக்குடியேறும் மாவட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி, தொழில் போன்ற காரணங்களால் ஏற்கனவே வாழ்ந்த மாவட்டங்களில் திடீரென வாக்குகளை வெட்டிச் செல்வது சாத்தியமில்லை. இதன் காரணமாகவும் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது. 5. வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்;பாக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடப்பட்ட போதிலும், இன்றுவரை நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. 6. அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு போன்ற நிறுவனங்களுக்கு, வடபுலமுஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரச அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும், சில இனவாதிகளும், மீளத்திரும்பும் அகதிகள் தம் சொத்துக்களை விற்பதற்கும், வியாபாரத்துக்காகவும், நட்டஈட்டைப் பெறவும் வருகின்றனர். இவர்கள் நிரந்தரமாக குடியிருக்க வரவில்லை என்ற காரணங்களைக் கூறி மீள் குடியேற்றத்தை தந்திரமாகத் தடுத்து வருகின்றனர். 7. மீள் குடியேற்றத்தை தடுப்பதிலும், வீட்டுத் திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கும் இடையூறான காரணிகளுள் பிரதானமானது யாதெனில், 2008 க்கு முன் இடம் பெயர்ந்தவர்கள், பழைய அகதிகள் எனவும், 2008 க்கு பின்னர் இடம் பெயர்ந்தவர்கள் பழைய அகதிகள் எனவும் பாகுபடுத்தப்பட்டு, புதிய அகதிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாதும். இதில் 1990 இல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளைப் புறக்கணிப்பதற்கு அரசியல்வாதிகளாலும், சில தமிழ் உயர் அதிகாரிகளாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். அண்மையில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள், வடக்கில் வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 100 ஏன்னர் காணி வழங்கத் திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள், தமிழ் - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் முயற்சிக்கிறார் என இம்மீள்குடியேற்றம் சாத்தியமில்லை எனக்கூறி தடுக்க முயற்சிக்கிறார். இவ்வாறான அரசியல்வாதிகளும், தமிழ் உயர் அதிகாரிகளும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க முடியற்சிக்கின்றனர் என்பதற்கு இந்நிகழ்வு அத்தாட்சியாகும். 33 வருடங்கள் அகதி வாழ்க்கை வாந்து தாயக மண்ணுக்கு திரும்பும் இம்மக்கள் மீது கருணைகாட்டுவதற்குப் பதிலாக, எவ்வித நெகிழ்வுத் தன்மையற்ற இறுக்கமாக நிபந்தனைகளையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். மீள்குடியேற்றம் ஆரம்பமாகி கடந்த 13 வருடங்களாக யாழ் முஸ்லிம் அகதிகளுக்கு கிராம சேவையாளர் பிரிவு, மீள்குடியேற்ற அமைச்சு, இந்திய வீடமைப்புத் திட்டம் என்பவற்றினூடாக இதுவரை 250 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நாச்சிக்குடா பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை அரசுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் நாச்சிக்குடாவிலிருந்து ஹாமீம் என்ற சகோதரரும் அவருடன் ஈசப்பா என்பவரும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் வரை நடந்து சென்று தமது கோரிக்கைகளை; கையளித்தனர். 45 நாட்களாக பலசிரமங்களுக்கு மத்தியிலும் நடந்து சென்ற அவர்களுக்கு நீர்கொழும்பில் சிறிது தடை ஏற்பட்டாலும் அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினர். நாச்சிக்குடா மக்களுடைய மீள்குடியேற்றத்தில் பல தடைகளும், பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய வாழ்விட எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன. நாச்சிக்குடா என்ற பிரதேசம் சுருங்கி முழங்காவில் என்ற பிரதேசம் விரிவாக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகளால் எமது மீள்குடியேற்றம் புறக்கணிக்கப்படுவதற்கு இந்நிகழ்வும் ஒரு உதாரணமாகும். 1990 ஒக்டோபரில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு சகல பொருட்களும் சூறையாடப்பட்டு வெளியேற்றப்பட்ட வரலாறு உலகறிந்த விடயம். அம்மக்கள் வாழ்ந்து இடிந்து சிதையுண்ட வீடு, காணி உறுதிப்பத்திரம், முன்னர் குடியிருந்ததற்கான வாக்குப்பதிவு, இவைகள் யாவும் இருக்கும்போது, இம்மக்கள் தாயக மண்ணில் வாழ்ந்த உரிமையை நிரூபிக்க வேறென்ன ஆதாரம் வேண்டும். எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் வடமாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக சேவை நிறுவனங்கள், நலன் விரும்பிகள், புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து இம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதி, பிரதமர், ஆகியோருக்கு அறியத்தருவதுடன் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், 90ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கும், குறுகிய காலத்தில் மீள் குடியேறிய தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குnடியேற்றத்துக்கென விசேட திட்டங்களையும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் கட்டாயமாகும். https://www.jaffnamuslim.com/2023/10/33.html
  24. 64 வயதில் ஏன் செல்கிறார்? பணமும் அனியாயம். பிள்ளைகள் வருடம் ஒருமுறை வந்து ஊரில் பார்க்கலாமல்ல‌வா?
  25. தள்ளுப்பட்டு களைத்த டயானா செல்லத்தை கட்டித் தழுவி ஆறுதல்படுத்தும் சாணக்கியன்!! முழுமையான அடிபாட்டுக் காட்சிகள்!! இப்படி ஒரு தமிழ் பத்திரிக்கையும் தலையங்கம் இட்டுள்ளது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.