Everything posted by colomban
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நிதர்சனமான கருத்து. கோசான் நிறைய பேர் இப்பொழுது நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். படிக்கவோ, வேலை வாய்ப்புக்னெவோ. பணம் உள்ளவர்களும் வசதியாக சொத்துக்களுடன் வாழ்பவர்களும் நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். பலர் நல்ல தகவல்களுடன் யூ ரிப் வீடியோக்களை வெளியிடுகின்றார்கள். இங்கிலந்தில் இப்பொழுது வேலை அனுமதி இலகுவாக நிறைய கிடைக்கின்றது, சாதரண கடை வைதிருப்பவர்கள் கூட தங்களுக்கு விருபமானவர்களை எடுக்கலாம் என இந்த வீடியோவில் கூறுகின்றார்கள். என்னுடைய நண்பர்கள் 4 அல்லது 5 பேர் வ்ரை இந்த 2 வருடங்ளில் (50 வயதில்) கனடா சென்றவர்கள். திழர்கள் இந்த நாட்டை விட்டு போவதே நல்லது. ஆம் மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக இலகுவாக குடியுரிமயும் எடுக்கலாம். இலங்கை போலாவே இந்த நாடுகளின் கால நிலையும் இருக்கின்றது.
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..
டொரொன்டொவில் சிங்களவனின் கடைகள் உள்ளதா? இங்கு போல் அங்கு பொல்சம்போல், கட்ட சம்பல், கிரிபத், மாலு எபுல் கறி, சிறிய ரோஸ்பாண், பருப்பிகறி, கொலகெத எல்லாம் கிடக்குமா?
-
நானும் மனம் திருந்திய யூதாசும்
கொழும்பிம் புறநகர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொடங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்தவன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்கவும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. மரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
-
நானும் அந்த போதைவஸ்துகாரனும்
1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிகலா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிறந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கறல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்டரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற கதற அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் அனுபவம்-1
-
புட்டினும் புதுமாத்தளனும்
ஐசே வா சரி சிரிப்பு..Epic வா. எங்களுக்கு பாக்கிஸ்தான் ஈக்கிவா.. அதிலும் முதல் வெடிசத்தம்......🤣
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நல்லதொரு கட்டுரை ஈழப்பிரியன் ஐயா ஆம் புங்கை நானும் இதை பற்றி கேள்விப்ட்டேன். என்னுடைய முன்னாள் மேலாளர் ஒரு மெக்க்சிகன். அடிக்கடி இலங்கைக்கு விடுமுறைக்கும் வருவான். அவன் கூறிய ஒரு விடையன் என்னவென்றால் ஆங்கிலேயர்கள் தாங்கள் பிடித்த நாடுகளை அபிவிருத்தி செய்தார்களாம் உ+ம் ரயில் பாதைகள் போன்றவற்றை அமைத்துள்ளார்கள். ஆனால் ஸ்பானிய ஆக்கிரமிப்ளர்கள் அப்படி எதுவும் செய்வதிலையாம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சுவி ஐயா இந்த பாடல் முந்தனை முடிச்சு படத்தில் என நினக்கின்றேன். அப்பொழுது எனக்கு பதிம வயது. நடிகை தீபாவை இந்த பாடலில் பார்த்த்து பலமுறை மனம் கிறங்கியுள்ளேன்.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
சித்தெறும்பு கடித்திருக்கும். ராசாவே சிந்த்தெறும்பு என்னை கடித்தது என்று பாட்டும் உண்டல்லவா
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
ஆம் இது உண்மை, ஆனால் ஜபெல் அலி சுதந்திர வர்த்தக வலயத்தில் அப்படி அல்ல என நினக்கின்றேன். 100% வெளிநாட்டவரை கொண்டு உருவாக்கலாம்
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
இங்கிருந்தால் கட்டாயமாக நானும் வருவேன். (அடுத்த வருடம் சிலகாலம் நண்பனுடன் டோக்கியோ, ஜப்பானில் வேலை செய்ய நினத்துள்ளேன். செலவுகள் / வாழ்க்கைதரம் எப்படியோ தெரியாது)
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
ஆம் இப்பகுதிக்கு நான் வந்துள்ளேன். இது கில்ஃபொர்ட், சரே என்ன்னும் ஏரியாவில் உள்ளது என நினக்கின்றேன். அழகிய பெரிய வீடுகள். விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி மலயாளி லூலூ குழும அதிபர் மிகவும் மத வெறியும்/ இனவெறியும் உடைய மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நாடுகள் இவை. ஏன் இரண்டு மில்லியன்? இதிவிட குறைவாக பல்வேறு நாடுகளில் குடியுரிமமை இலகுவாக வங்கலாம். உதாரணம் போர்த்துகல், பனாமா அல்லது தென்னமரிக்க நாடுகள்.
-
ஐம்பதில் ஆசை
ரோட்டில் அல்லது தார் நிலத்தில் ஓடுவது நல்லதா? அல்லது புற்கள் உள்ள இடத்தில் ஓடுவது நல்லதா?
-
நான் ரசித்த விளம்பரம் .
இந்த பத்திரிக்கை சிறுவயதில் வாசிப்பேன். அப்பொழுது பல விடயங்கள் புரியாது. இதனோடு ராணீ கமிக்ஸ் என்னும் இம்மொரு வெளீயிடும் வரும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் F M இல் கேட்டேன் இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் இல் கேட்டேன்
-
துபாய் எக்ஸ்போ 2020
கோசான் இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....
-
"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்
இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இன்றுதான் இந்த திரியயை பார்த்தேன் உடையார். இவை எனக்கு 80 களில் இலங்கை வானொலியில் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் பாடல்கள் போல் உள்ளது. இதில் இன்னும் காலத்தினால் அழிக்கவே முடியாத சில கிறிஸ்தவ பாடல்கள் உள்ளன. அவற்றில் ஜிக்கி அவர்களது பாடல்களை மறக்க முடியாது. தேனினிமயிலும் யேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே, தாசரே இத்தரணியில் அன்பாய் ஏசுவிக்கே சொந்தமாக்குவோம், எல்லாம் யேசுவே எனக்கெல்லாம் ஏசுவே போன்ற பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பபடும். அதே போல் சூலமங்களம் ராசலஷ்மி, பெஙக்ளூர் ரமணியம்மள் போன்றவர்களின் பாடல்கள் மறக்கமுடியாது
-
சமையல் செய்முறைகள் சில
வெள்ளை அப்பம் என்பது மலையாளிகள் செய்வது. இலங்கையில் இது ப்ளேன் அப்பம் என சிங்களவன் செய்வான். வாட்டி ஒரம் எல்லாம் மொறு மொறு என இருக்கும். நடுவில் மென்மையாக இருக்கும். சுட சுட கட்ட சம்பலுடன் சாப்பிடும் சொல்லி வேலை இல்ல. முட்டையாப்பமும் போடலாம், அல்லது பெணி அப்பமும் போடலாம். பிறகு இஞ்ஜி போட்டு ஒரு ப்லேண்டி குடிக்க அந்த மாதிரி. இந்த செய்முறையில் ஆப்ப சோடா சேர்க்கப்படுமே? ஏன் சேர்க்கவில்லை? கிச்சன் கீர்த்தானா மலையாளியாக இருக்க வேண்டும்.
-
மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
என்ன இருந்தாலும் எங்கட கத்தார் எர்வேயசாய் அடிக்க எலாது. இதைவிட அப்பனான சாமன் எல்லாம் ஈக்கீ
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இலங்கையில் விஸ்வாசத்தின் நிலைமை இதுதான்! தலை தெறிக்க ஓடிய ரசிகர்களின் வீடியோ இதோ அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகள் திரையிடப்பட்டதால் நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் அத்தகைய திரையரங்குகள் முன்பு காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். அதேபோல் தான் இலங்கையில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன்பு காத்திருந்த ரசிகர்கள் கேட்டை திறந்தவுடன் எப்படி வேகமாக ஓடுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்...
-
உங்களுக்கு தெரியுமா?
இது பிரான்ஸிற்கு சொந்தமான ஒரு தீவுதானே இணையவன் ஆகவே இந்த குடிமக்களும் பிரான்ஸ் குடிமக்களாக நடத்தப்படுகின்றார்கள். இப்பொழுது சிங்களவர்கள் வள்ளங்களில் இங்குதான் சட்ட விரோதமாக செல்கின்றார்கள். இவர்கள் பொரும்பாலும் இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தை செர்ந்தவர்கள். இது மொறிசியஸ் தீவுக்கு அண்மையில் உள்ளது.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இலங்கையில இப்ப சீன ஆதிக்கம் அதிகம் என்று பேச்சு. இங்கு சுவி ஐயா தீபவளிக்குள்ளும் சீன ஆதிக்கத்தை கொண்டு வந்திட்டீங்கள்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ரோஜா மலரே ராஜகுமாரி.... - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.