Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. இருப‌து வ‌ருடமாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை தேர்த‌லுக்கு ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்தி எந்த‌ உரிமையையும் பெற்றுத்த‌ராத‌ ச‌மூக‌த்தை ஏமாற்றும் முஸ்லிம் க‌ட்சிக‌ளை முஸ்லிம்க‌ள் ஒன்று ப‌ட்டு நிராக‌ரிக்காத‌ வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் அர‌சிய‌லில் வெற்றிபெற‌ முடியாது என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, ஒரு உறையில் இர‌ண்டு வாள்க‌ள் இருப்ப‌து த‌வ‌று என‌ ரிசாத் ப‌தியுதீனுக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னோம். ஹ‌க்கீம் இருக்கும் ப‌க்க‌ம் இருப்ப‌து பிழை என்றும் அர‌சிய‌ல் சாண‌க்கிய‌ம் ப‌ற்றிய‌ அறியாமை என்றும் சொன்னோம். இப்போது இர‌ண்டு பெரிய‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஆத‌ரித்தும் ச‌ஜித் பிரேம‌தாச‌ தோற்ற‌த‌ன் மூல‌ம் இந்த‌ இரு ஏமாற்று க‌ட்சிக‌ளும் இருக்கும் ப‌க்க‌த்தை ஆத‌ரிப்ப‌தில்லை என்ற‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் முடிவு தெளிவாகியுள்ள‌து. இதையே க‌ட‌ந்த‌ 2019 தேர்த‌லிலும் காட்டின‌ர். அதிலும் த‌மிழ் கூட்ட‌மைப்பு யாரை ஆத‌ரிக்கிற‌தோ அவ‌ர் ப‌டு தோல்வி அடைவார் என்ப‌தும் மீண்டும் நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் ச‌ஜித் பிரேம‌தாச‌ இணைந்த‌து மிக‌ப்பெரிய‌ த‌வ‌று. 2010ம் ஆண்டு தேர்த‌லில் ச‌ம்ப‌ந்த‌ன் ச‌ர‌த் பொன்சேக்காவுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌ போது அடித்துச்சொன்னேன் ம‌ஹிந்த‌வின் வெற்றி உறுதியாகிவிட்ட‌து என‌. அத்தேர்த‌லில் ஆடையின்றி நிற்கும் முஸ்லிம் ச‌மூக‌த்துக்குரிய‌ கோவ‌ண‌ம் ச‌ர‌த் பொன்சேக்கா என‌ ஹ‌க்கீம் கூறினார். பின்ன‌ர் கோவ‌ன‌த்தையும் இழ‌ந்து நின்றார். ஆக‌வே இருப‌து வ‌ருடமாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை தேர்த‌லுக்கு ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்தும் ச‌மூக‌த்தை ஏமாற்றும் ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ், அ.இ. மக்க‌ள் காங்கிர‌ஸ், தேசிய‌ காங்கிர‌ஸ் போன்ற‌ க‌ட்சிக‌ளை முஸ்லிம்க‌ள் ஒன்று ப‌ட்டு நிராக‌ரிக்காத‌ வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் அர‌சிய‌லில் வெற்றிபெற‌ முடியாது. முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி 23.9.2024 https://www.importmirror.com/2024/09/blog-post_872.html
  2. இவர் திருமணமானவரா என்று தெரியவில்லை? இவர் பொது நிகழ்வுகளில் குடும்ப அங்கத்தவர்களை தவிர்த்து வருகின்றார் என நினக்கின்றேன்.
  3. அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத்த போராளி இராகவன் தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு என்றார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தை பேசி தமது எதிர்கால அரசியலுக்கு திட்டமிடுகின்றனர். இன்று புலம்பெயர் நாடுகளில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக பணம் தாருங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தைப் பெற்று அதனை கையகப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர். ஏனெனில் பிரச்சனை தீர்ந்து விட்டால் நீதி திரட்ட முடியாது தாங்கள் நினைத்தது போல் வாழ முடியாது என்ற அச்சத்தின் காரணமாக தற்போது பொது வேட்பாளரை நிறுத்தி இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டதன் நோக்கம் ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும் பின்னர் புலம்பெயர் அமைப்புக்களின் வழிகாட்டலில் தவறான பாதையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியினை வழங்கும் புலம்பெயர் புலிகள் என தம்மை அடையாளப்படுத்தும் விடுதலைப் புலிகள் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் தற்போது பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குவதாக அறிகிறோம். இவர்களது செயற்பாடுகளால் தெற்கில் குறைந்திருக்கும் இனவாதத்திற்கு உரம் போட்டுள்ளனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா உதவும், சர்வதேசம் வரப்போகுது, இதனால் தமிழீழம் வரப்போகிறது என சொல்லி தெற்கில் பூதாகரமாக காட்டப்படும். எனவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்ற மாய மானுக்கு வாக்களிப்பது எதிர்காலத்தில் எமது தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார இருப்பை பாதிக்கும். தெற்கில் தமிழர்களுக்கு உச்ச பட்ச உரிமையை வழங்கும் வகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சோசலிசக் கட்சியின் சிறீதுங்க ஜயசூரியவும் மக்கள் போராட்ட முன்னணியின் நுவான் போபகேவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தேவையற்ற இனவாத கருத்துக்களை தவிர்க்க முடியும். தற்போதைய நிலையில் ரணிலோ சஜித்தோ அனுரவோ மூவரில் யார் வந்தாலும் தமிழர்கள் ஜக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுக்காக பேரம்பேசும் நிலைமை காணப்படுகின்றது. தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி என்பதை விட கூட்டு களவு என்றே சொல்லலாம். எந்தவொரு அரசியல் கட்சியும் தமது பணக்கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படையாக வைக்க வேண்டும். ஜனநாயகம் வெளிப்படைத் தன்மை என பேசுபவர்கள் அதனை செய்யவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வாறு செயற்பட முடியாது. அவர்கள் ஆயுத இயக்கம். மில்லியன் கணக்கில் ஆயுதம் வாங்கினோம் என கணக்கு காட்டமுடியாது. வெளிப்படையாக ஜனநாயக அரசியல் செய்பவர்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும் என்பவர்கள் தமது கணக்கு விடயத்தில் பலவீனமாக இருக்கிறார்கள். அது பாரிய மோசடி என நான் நம்புகிறேன். விடுதலைப் புலிகள் இருக்கும்போது இலங்கை அரசாங்கத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. சரி தவறுக்கு அப்பால் இராணுவ கட்டமைப்பை வைத்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு எதுவும் கிடையாது. விடுதலைப் புலிகளின் நிறங்களான சிவப்பு மஞ்சளை பயன்படுத்தி சிறுவர்கள் மற்றும் இளையோரை பயன்படுத்தி உணர்ச்சியை தூண்டி தற்கொலைக்கு அனுப்ப செயற்படுகிறார்கள் – என்றார் https://www.todayjaffna.com/364833
  4. யார் அந்த JVP யினர் ? அவர்களது பிரதான கொள்கை என்ன ? கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜே.வி.பி பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலில் அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்ற நிலைக்கு இவர்களின் வளர்ச்சி உள்ளதனை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜே.வி.பி யினர் இந்த நாட்டை நாசமாக்கிய வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், குழப்பக்காரர்கள் என்றெல்லாம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. தேர்தல் காலம் என்பதனால் இது அரசியலுக்காக கூறப்பட்டாலும், இன்றை இளைய தலைமுறையினருக்கு உண்மையான வரலாறுகளை எத்திவைப்பது எமது கடமையாகும். அவ்வாறு உண்மைகளை கூறுகின்றபோது இந்த கட்டுரை எழுதுகின்றவரையும் ஜே.வி.பியை சேர்ந்தவர் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் கருத்துக்களை துல்லியமாக விளங்கிக்கொள்வதில் மந்தபுத்தியுள்ள பலர் முகநூல் எழுத்தாளர்களாக உள்ளனர். ஜேவிபி யின் தலைவர் ரோகன விஜயவீர அன்றைய சோவியத் யூனியனின் தலைநகரான மொஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் கல்விகற்றபோது “மாக்சிசம், லெனிநிசம்” ஆகிய அரசியல் சித்தாந்தங்களில் கவரப்பட்டார். இவர் இலங்கைக்கு வந்ததன் பின்பு சேகுவேராவின் புரட்சியை பின்பற்றி அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் விதத்தில் 1965 இல் இடதுசாரி அமைப்பினை நிறுவியதுடன் சிங்கள இளைஞர்களுக்கு தனது அரசியல் சித்தாந்தத்தை போதித்தார். 1970 இல் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற பெயரில் இயக்கத்தை கட்டியமைத்து அதே ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்தனர். இதற்காக தெற்கிலுள்ள பெரும் செல்வந்தர்கள் நிதி உதவிகளை வழங்கிவந்தனர். உலகில் முதலாளித்துவம், சோஷலிச சமஉடமைக் கொள்கை ஆகிய இரண்டு பிரதான பொருளாதாரக் கொள்கைகள் உள்ளன. அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகள் பின்பற்றுகின்ற முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையானது தனி நபர் முதலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இங்கே உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு எந்தவித முன்னுரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பின்பற்றுகின்ற சோஷலிச சமஉடமைக் கொள்கையானது “கால்மாக்ஸ், லெனின்” ஆகியோர்களின் பொருளாதார சித்தாந்தத்தை பின்பற்றுகின்ற கொள்கையாகும். இங்கே முதலாளிகளுக்கு முன்னுரிமை இல்லை. பாட்டாளி வர்க்கத்தினர்களுக்கே முன்னுரிமை உள்ளது. உழைக்கின்ற பாட்டாளிகளின் உழைப்பானது முதலாளிகளினால் சுரண்டப்பட்டு செல்வம் தனி நபர்களிடம் குவிக்கப்படுகின்றது. ஆனால் கஷ்டப்பட்டு உழைக்கும் வர்க்கத்துக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. அத்துடன் முதலாளி வர்க்கத்தினர், உழைக்கின்ற பாட்டாளி வர்க்கத்தினை சுரண்டி ஆளும் வர்க்கமாக ஆட்சி செய்வதுடன், உழைக்கும் வர்க்கத்தினர் ஆளப்படுகின்ற அடிமைகளாக வாழ்கின்றனர். முதலாளித்துவ வாதிகளின் பொருளாதார சுரண்டல்களையும், ஊழல்களையும் ஒழித்து சம உடமை பொருளாதார கொள்கையினை இலங்கையில் நடைமுறைப்படுத்தி தொழிலாளர்களின் உயர்வினை மேம்படுத்துவதுதான் ஜே.வி.பி யினரின் பிரதான கொள்கையாகும். தொடரும்................. முகம்மத் இக்பால் சாய்ந்தமருது இரண்டாவது தொடர் உலகில் மனித இனம் உருவானதிலிருந்து புரட்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் குறைவில்லை. வலதுசாரிக் கொள்கைக்கு எதிராக இடதுசாரிகளும், முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினரும் மற்றும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டுவதற்காகவும், ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆழக்கூடாது என்பதற்காகவும் போராட்டங்களும், புரட்சிகளும் அன்றுதொட்டு இன்றுவரை உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் நடந்தவண்ணமே உள்ளன. அவ்வாறான நியாயமான போராட்டங்களில் தங்களது உயிரை அர்ப்பணித்து போராடுகின்ற போராளிகளை அழிக்கும் நோக்கில் “பயங்கரவாதிகள்” என்று அதிகார வர்க்கத்தினரால் ஊடகங்கள் மூலமாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் போராட்டத்தை அடக்குவதற்காக முதலாளித்துவ அரச இயந்திரம் மேற்கொள்ளுகின்ற கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, காணாமல் ஆக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற அரச பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு போராளிகளை பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தில் அதிகார சக்திகள் வெற்றியடைகின்றன. அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியபோது தலிபான்களையும் மற்றும் பாலஸ்தீன போராளிகளை இன்றுவரைக்கும் பயங்கரவாதிகள் என்றே பட்டியலிடப்பட்டனர். அதுபோலவே இலங்கையில் முதலாளித்துவ சுரண்டல் சக்திகளிடம் இருக்கின்ற ஆட்சி அதிகாரத்தை பறித்து சமஉடமைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக 1971, 1987, 1988,1989 ஆகிய காலங்களில் ஒரு இலட்சியத்துடன் தங்களது உயிர்களை அர்ப்பணித்து போராடிய ஜே.வி.பி அமைப்பினர் பயங்கரவாதிகள், கலகக்காரர்கள், குழப்பவாதிகள் என்றெலாம் அழைக்கப்பட்டு வருகின்றனர். ஈரானில் மேற்குலக சக்திகளின் பொம்மையாக இருந்த ஷா மன்னருக்கு எதிராக 1979 இல் ஆயதுல்லாஹ் கொமைனி தலைமையில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அரபு வசந்தம் என்ற போர்வையில் மக்கள் புரட்சியின் காரணமாக துனிசியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிரியா போன்ற சில நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிகளும் போராட்டங்களும் தோல்வியடைந்தது. அண்மையில் வங்காளதேசில் ஏற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் புரட்சியின் காரணமாக ஆட்சித் தலைவரான பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடினார். இங்கே கவனிக்க வேண்டிய விடையம் என்னவென்றால், போராடும் வரைக்கும் போராளிகள் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவார்கள். போராட்டம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு “பயங்கரவாதிகள்” என்ற சொல் மறைந்துவிடுவதுடன் அவர்கள் ராஜதந்திரிகளாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் போராட்டம் தோல்வியடைந்தால் அவர்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் பயங்கரவாதிகளாகவே கான்பிக்கப்படுவார்கள். இதனையே உலகம் நம்புகிறது. ஒரு இலட்சியத்துடன் நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிரைப் பணயம்வைத்து நடாத்துகின்ற போராட்டத்தினை வெறும் ஒரே வார்த்தையில் “வன்முறை” “குழப்பம் விளைவித்தல்” என்று கூறுவதானது அறியாமையின் வெளிப்பாடாகும். கியூபாவில் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோர்களின் தலைமையில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு 1959 இல் சோஷலிச சமஉடமை ஆட்சி நிறுவப்பட்டது. அதுபோன்றதொரு ஆட்சியை இலங்கையில் நிறுவுவதற்கு ரோகன விஜயவீர தலைமையில் ஜே.வி.பியினர் திட்டமிட்டனர். தொடரும்...... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது மூன்றாவது தொடர் இலங்கையில் பாகிஸ்தான் இராணுவமும், இந்தியாவின் இராஜதந்திரமும். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்ட சிந்தனைகளை ஆயுதங்களின்றி ஜனநாயக ரீதியில் மேலெழச் செய்வதற்கு அதிகார சக்திகள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எப்படியும் இவர்களை அழித்தொழிக்கவே முற்படுவார்கள். இதனால் ஆயுதப் புரட்சிதான் இதற்கு ஒரே தீர்வு என்ற அடிப்படையில் மக்கள் ஆதரவுடன் அனைத்து தயார்படுத்தல்களுடனும் முழு நாட்டையும் கைப்பற்றும் புரட்சியில் ரோகன விஜவீர தலைமையிலான ஜேவிபி இயக்க சிங்கள இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். 1971.04.05 ம் திகதி அதிகாலையில் வெல்லவாய பொலிஸ் நிலையம்மீது முதன்முதலாக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டில் தென்பகுதியில் உள்ள 93 பொலிஸ் நிலையங்கள் ஒரே நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டது. இதில் 35 பொலிஸ் நிலையங்கள் முற்றாக புரட்சியாளர்களிடம் வீழ்ந்தது. பல பொலிஸ் நிலையங்களில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் நிலையத்திலிருந்து தப்பி ஓடினர். ஆரம்பத்தில் இவர்களது தாக்குதல் எதிர்பார்த்ததையும் விட மிக விரைவாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திருந்தது. தென்னிலங்கையின் பல மாவட்டங்கள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மிகவும் திட்டமிடப்பட்ட பாரியளவிலான இந்த தாக்குதல் இந்தளவுக்கு வெற்றியளிக்குமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை சிறைப்பிடிப்பதற்கு அல்லது கொலை செய்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஜே.வி.பியினர் தென்னிலங்கையை கைபற்றிக்கொண்டு கொழும்பை நோக்கி விரைந்தனர். இன்னும் சில மணிநேரங்களில் கொழும்பு முற்றாக வீழ்ந்துவிடும் என்ற பதற்றம் நிலவியது. அன்றைய இலங்கை இராணுவத்திடம் இன்று இருப்பதுபோன்று நவீன ஆயுதங்களும், ஆளணிகளும் இருக்கவில்லை. அதனால் ஜே.வி.பியினரை எதிர்த்து போரிடும் ஆற்றல் அவர்களிடம் இருக்கவில்லை. இராணுவத்துக்குள் அவர்களது பலமான ஊடுருவல் இருந்ததுடன் ஜே.வி.பி யினர்களின் திட்டமிடலை அன்றைய அரசு முன்கூட்டியே அறிந்துகொள்ளாதது புலனாய்வுத் தோல்வியாகும். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களை தோற்கடித்து நாட்டை பாதுகாப்பதென்றால் வெளிநாட்டிடமிருந்து உடனடி இராணுவ உதவியை கோருவதென்று ஆட்சியாளர்களினால் முடிவெடுக்கப்பட்டது. தாமதிக்கின்ற ஒவ்வொரு மணித்தியாலங்களும் ஆபத்தானதாகவே இருந்தது. அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இலங்கைக்கு நெருக்கமான உறவு காணப்பட்டதுடன், இந்தியாவுடன் சற்று ராஜதந்திர முறுகல் இருந்தது. பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரிப்பதற்காக வங்காளதேசில் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானிலிருந்து வங்காளதேஸ் நோக்கி செல்கின்ற பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இதனால் இலங்கைமீது இந்தியா கடும் கோபத்தில் இருந்தது. அவ்வாறான சூழ்நிலையிலேயே இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இந்தியாவிடம் இராணுவ உதவியை கோராமல், இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள பாகிஸ்தானிடம் இராணுவ உதவியை கோரியதற்கு காரணமாகும். பாகிஸ்தான் விமானப்படையும், இராணுவமும் குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் அவசர அவசரமாக இரத்மலான விமான நிலையத்தில் வந்திறங்கி ஜே.வி.பி போராளிகளை அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில் இந்தியா களத்தில் இறங்கியது. அதாவது பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் வந்திறங்கியது இந்தியாவினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் மூலமாக இலங்கைக்கு முழுஅளவிலான அழுத்தம் வழங்கியதுடன், தாங்கள் உதவப்போவதாக வலிந்து உதவிக்கரம் நீட்டியது. உடனடியாக இந்திய இராணுவத்தினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கி ஜே.வி.பி யினரின் கிளர்ச்சியினை ஒழிப்பதற்கு உதவிபுரிந்தனர். தொடரும்............. முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அரச இயந்திரங்களின் துஸ்பிரயோகமும், JVP யின் பிழையான திட்டமிடலும். 9/10/2024 11:26:00 AM LATEST NEWS , Slider , கட்டுரை நான்காவது தொடர் இந்தியாவின் உதவியுடன் ஜே.வி.பி யின் புரட்சியை கட்டுப்படுத்துவதற்கு இரண்டரை மாத காலங்கள் தேவைப்பட்டது. அதாவது 1971 ஏப்ரல் ஆரம்பம் தொடக்கம் ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு பின்பு புரட்சி நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டரை மாத காலங்களுக்குள் நடைபெற்ற சண்டையில் இரண்டு தரப்பிலிருந்தும் சுமார் இருபதாயிரம் (20,000) பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் இளைஞர்கள் அதிகம். அரச பயங்கரவாதம் தனது கோரமுகத்தை மக்கள் மீது காண்பித்தது. ஜே.வி.பி யின் வன்முறைகளைவிட அரச இயந்திரங்களின் அத்துமீறல்கள் அதிகளவில் இருந்தன. இரக்கமின்றி வகைதொகையின்றி சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி போராளிகள் இராணுவத்தினரையும், பொலிசாரையும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களையும் குறி வைத்தனர். ஆனால் இராணுவத்தினரோ தாங்கள் சந்தேகப்பட்டவர்கள், ஜே.வி.பி யினர்களுடன் தொடர்பினைக் கொண்டவர்கள் அனைவரையும் அவர்கள் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் வகை தொகையின்றி கொன்று குவித்ததுடன், கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதில் பல்கலைக்கழக மாணவர்களும் ஏராளம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பிரபலமான சிங்கள அழகுராணியாக இருந்த இருபத்திரெண்டு வயதுடைய மன்னம்பேரி என்பவள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு நிர்வானமாக வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதன்பின்பு பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்டாள். இதில் வேடிக்கை என்ன தெரியுமா ? இந்த ஜே.வி.பி புரட்சியை அடக்குவதற்கு சோவியத் யூனியன், சீனா போன்ற சோஷலிச சமஉடமைக் கொள்கையை பின்பற்றுகின்ற நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததுதான். அதாவது எந்தக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக ஜே.வி.பி யினர் போராடினார்களோ, அதே கொள்கையுடைய நாடுகள் அந்த கொள்கையினை நசுக்குவதற்கு உதவி புரிந்தன என்பதுதான் ஆச்சர்யமானது. புரட்சி அடக்கப்பட்டு சிவில் நிருவாகம் ஏற்படுத்தப்பட்டதன் பின்பு தென்னிலங்கையில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அத்துடன் ஏற்கனவே 1971 இல் ஜேவிபி யின் தலைவர் ரோகன விஜயவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்பு ஜே.வி.பி இயக்கம் தடை செய்யப்பட்டது. இந்த புரட்சியி நடவடிக்கையினை ஜே.வி.பி யினர் மிக துல்லியமாகவும், இரகசியமாகவும் திட்டமிட்டு நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், இறுதியில் அது வெற்றி என்னும் இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தமைக்கு காரணம் என்ன என்பது பற்றி ஆராய வேண்டும். பொதுவாக ஒரு நாட்டை இலகுவாகவும், விரைவாகவும் கைப்பற்றுவதென்றால் அனைத்து சக்திகளையும் பாவித்து முதலில் அதன் தலைநகரை கைப்பற்ற வேண்டும். கட்டளை மைய்யங்களான நாட்டின் ஆட்சித் தலைவர், முப்படைகளின் தலைமையகம், பாராளுமன்றம், திறைசேரி, விமானநிலையம், ஒலி, ஒளி பரப்பு நிலையங்கள் என அனைத்து தலைமை செயலகங்களும் தலைநகரில் அமைந்து உள்ளதனால், தங்களது முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி கொழும்பை கைப்பற்றி இருந்தால் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவ படைமுகாம்கள் உட்பட அனைத்து அரச இயந்திரங்களும் செயலிழந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் தெற்கின் பெரும்பாலான நிலப்பரப்பை கைப்பற்றியதன் மூலம் தங்களது படைகளை அகலக்கால் ஊன்றச் செய்தனர். அதாவது தென்னிலங்கையில் தங்களால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பிரதேசங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக முக்கிய நிலைகளில் அதிகளவான போராளிகளை அமர்த்தி பாதுகாக்க வேண்டிய நிலை புரட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இது அவர்களது இராணுவ திட்டமிடலில் உள்ள குறைபாடாகும். தொடரும்.......... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது இந்த ஜனநாயக செயற்பாட்டுக்கான ஜே.வி.பி மீதான தடையும், மீள் எழுச்சியும் 9/10/2024 11:31:00 AM LATEST NEWS , Slider , கட்டுரை ஐந்தாவது தொடர் சில நேரம் ஜே.வி.பி.யின் புரட்சி வெற்றியடைந்திருந்தால், இன்று நாட்டின் அரசியல் நிலைமை முற்றாக வேறுவிதத்தில் இருந்திருக்கும். குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அது மட்டுமல்லாது தமிழர்களின் விடுதலை போராட்டம் எழுச்சி பெறவேண்டிய தேவை இருந்திருக்காது. அல்லது முதலாளித்துவ சக்திகளான மேற்கு நாடுகளின் ஆதரவுடன் தமிழர்களின் அரசியல் நோக்கம் இலக்கை அடைந்திருக்கலாம். 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்ததன் பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான கொள்கையினை கடைப்பிடித்தார். அந்தவகையில் 1978 இல் ரோகன விஜயவீர சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஜே.வி.பி தனக்கு சவாலாக உருவாகுமென்று தெரிந்திருந்தால் அதன் தலைவரை ஜனாதிபதி ஜே.ஆர் விடுதலை செய்திருக்க வாய்ப்பில்லை. வன்முறை அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட்டனர். அதன் வெளிப்பாடாக 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி யின் தலைவர் ரோகன விஜயவீர போட்டியிட்டு 4.19 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். இது சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஜே.வி.பி புத்துயிர் பெறுவதனை காண்பித்தது. ஜே.வி.பி யின் பெயரை உச்சரித்தாலே தங்களை இராணுவம் போட்டுத் தள்ளிவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியிலிருந்து நீங்கியது. அதன் பின்பு மீண்டும் ஜே.வி.பி யின் செல்வாக்கு தென்னிலங்கையில் படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. இந்த நிலையில் பொது தேர்தலை நடாத்துவதற்கு ஜே.ஆர் விரும்பவில்லை. அவ்வாறு தேர்தல் நடந்தால் தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து வீதமான செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்படுவதுடன், ஜே.வி.பி க்கு கணிசமான பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் என்ற காரனத்தினாலேயே நேரடியாக பொது தேர்தலுக்கு செல்லவில்லை. பொது தேர்தலுக்கு செல்லாமல் சர்வர்சன வாக்கெடுப்புக்கு சென்றதானது ஜே.ஆரின் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு என்று தெரிவித்து அதனை எதிர்த்து ஜே.வி.பி யினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பொது தேர்தலை நடத்த வேண்டுமா ? வேண்டாமா ? என்று மக்களிடம் கருத்தறிதல் என்ற போர்வையில் 1982 இல் சர்வர்சன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த தேர்தலானது அதிகாரத்தை பயன்படுத்தி மிகவும் முறைகேடாக நடைபெற்ற தேர்தல் என்று அப்போது விமர்சிக்கப்பட்டதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட நிலையில், ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிமீது வெறுப்புக்கொண்ட சிங்கள மக்கள் மாற்று முகாமாக ஜே.வி.பி யை நாடினர். சிங்கள மக்கள் மத்தியில் ஜே.வி.பி யினரின் செல்வாக்கு அதிகரித்து வருவதனை அறிந்துகொண்ட ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன அவர்கள், அதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது பல அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்தவகையில் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான ஜூலைக் கலவரம் நடைபெற்றதற்கு ஜே.வி.பி யினரே முழுக் காரணம் என்று குற்றம் சுமத்தியதுடன் மீண்டும் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டது. அந்த தடையினால் ஜே.வி.பி யினர் தாக்கல் செய்திருந்த வழக்கு புஸ்வாணமானது. ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை ஏற்பட்டது. மறுபுறத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளைஞர்களின் தனி நாடு கோரிய போராட்டம் எழுச்சியடைந்தது. ஜே.வி.பி தங்களை மீளக் கட்டமைத்தாலும் தென்னிலங்கையில் மீண்டுமொரு கிளர்ச்சியில் இறங்குவதற்குரிய சூழ்நிலை இல்லாததன் காரணமாக அரசாங்கத்தின் முழுக் கவனமும் வடகிழக்கு பகுதிகளில் இருந்தது. தொடரும்.......... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அரசியல் சூழ்சிகளும், கொலைக்களமாக காட்சியளித்த தென்னிலங்கையும். 9/10/2024 11:35:00 AM LATEST NEWS , Slider , கட்டுரை ஆறாவது தொடர் இந்தநிலையில் பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது 1983 ஜுலை 23ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 15 இராணுவத்தினர்களின் சடலங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கொழும்பு - பொரள்ளை மயானத்தில் அடக்கம் செய்வதன்மூலம் மக்களை திரட்டி வன்முறை ஒன்றினை தோற்றுவிப்பதற்கான சூழலை ஜே.ஆரின் அரசாங்கம் ஏற்படுத்தியது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சிறில் மெத்யு மேற்கொண்டிருந்தார். அன்றைய போராட்ட வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவு பெரியளவில் இராணுவத்தினர் கொல்லப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதனால் சிங்கள இளைஞர்கள் தூண்டப்பட்டு தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் இறங்கினர். இதுவே ஜூலைக் கலவரம் எனப்படுகிறது. இந்த ஜூலைக் கலவரத்திற்கும் ஜே.வி.பி யினர்களுக்கும் சம்பந்தம் உள்ளதென்று பாதிக்கப்பட்ட தரப்புக்களான எந்தவொரு தமிழ் இயக்கங்களோ அல்லது தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ் வரலாற்றுக் குறிப்புக்களிலோ குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக ஜே.ஆரின் அரசாங்கத்தை மாத்திரமே குற்றம்சாட்டினர். ஆனால் ஜே.ஆரின் அரசாங்கம் ஜே.வி.பி மீது பழியை சுமத்தி அவர்களது இயக்கத்தை முற்றாக தடை செய்ததன் காரணமாக ஜனநாயக அரசியலில் பங்கெடுத்த ஜே.வி.பி யினர் மீண்டும் வன்முறை அரசியலுக்கு தூண்டப்பட்டனர். அதாவது ஜே.வி.பி யை ஜனநாயக அரசியலிலிருந்து வன்முறை அரசியலுக்குள் தள்ளியது ஜே.ஆரின் அரசாங்கம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. அதுமட்டுமல்லாது ஜூலைக் கலவரத்தின் பின்புதான் தமிழர்களின் ஈழப்போராட்டம் புத்தெழுச்சி பெற்றது. இவைகள் அனைத்துக்கும் ஜே.ஆரின் சர்வாதிகார நடவடிக்கைகளே காரணமாகும். 1987 இல் இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை ஜே.வி.பி கடுமையாக எதிர்த்ததுடன், இந்திய அமைதிப் படையினரின் இலங்கை வருகைக்கு எதிராக செயற்பட்டது. இதே நிலைப்பாட்டில் பிரேமதாசாவும், விடுதலைப் புலிகளும் இருந்தனர். அத்துடன் இந்தியப் படையை வெளியேற்றும் போராட்டத்திற்காக ஜே.வி.பி க்கு புலிகள் ஆயுதங்களை வழங்கி உதவி புரிந்ததாக அப்போது சில செய்திகள் கசிந்தது. 1987 தொடக்கம் 1989 வரைக்கும் இந்திய அமைதிப் படையினர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே மீண்டும் ஜே.வி.பி யினர் தெற்கில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். ஜே.வி.பி யின் இந்த இரண்டாவது கிளர்ச்சியானது 1971 இல் நடைபெற்ற முதலாவது கிளர்ச்சியை போன்று தங்களது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரே தடவையில் ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக ஆங்காங்கே குண்டுவெடிப்புக்களும், வங்கிக் கொள்ளைகளும், பொலிஸ் நிலையம், இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதில் கண்டி பல்லேகல இராணுவ முகாம், கட்டுநாயக்க மற்றும் பண்ணல விமானப்படை தளங்கள், பாராளுமன்றம் மீதான தாக்குதல் மற்றும் இந்திய படையினர் மீதான சில தாக்குதல்களும் முக்கியமான தாக்குதல் சம்பவங்களாகும். மூன்றாண்டுகள் நடைபெற்ற ஜே.வி.பி யினர்களுடனான சண்டைகள் 1989 நவம்பரில் இல் அதன் தலைவர் ரோகன விஜயவீர கைது செய்யப்பட்டதன் பின்பு முடிவு நிலையை அடைந்தது. இந்த சண்டைகளில் சுமார் அறுபதாயிரம் (60,000) உயிர்கள் பலியானதுடன் பலர் காணாமல் போனார்கள். ஏராளமான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டது. குறிப்பாக அரச சொத்துக்கள் பெருமளவில் சேதமாக்கப்பட்டன. தென்னிலங்கையின் பல பிரதேசங்களிலும் ஆங்காங்கே மூலை முடுக்குகளிலெல்லாம் பிணங்கள் வீசப்பட்டுக் கிடந்தது. குறிப்பாக வீதிகளில் டயர்களில் எரிந்த நிலையிலும், குளக்கரைகளிலும் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட பிணங்களுக்கு குறைவிருக்கவில்லை. மேலும் களனி கங்கை, நில்வளவ கங்கை போன்ற கங்கைகளில் அடிக்கடி பிணங்கள் மிதந்து வருகின்ற காட்சிகள் காணப்பட்டது. ஜே.வி.பி யுடன் சம்பந்தட்டவர் என்று சந்தேகப்பட்ட அனைவரும் பிணமாக காட்சியளித்தனர். இதில் ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணமல் ஆக்கப்பட்டனர். அவைகள் ஒருபுறமிருக்க உலகை திரும்பிப் பார்க்கச்செய்யும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதுதான் சூரியகந்த மனிதப் புதைகுழியாகும். பாரியளவிலான இந்த மனிதப்புதைகுழி கண்டெடுக்கப்பட்டு தோண்டப்பட்டது. காணாமல் போனவர்கள், தடுத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு பின்பு கொலை செய்யப்பட்டு இரகசியமாக புதைக்கப்பட்டிருக்க முடியும். தொடரும்.......... முகம்மத் இக்பால் ஜனாதிபதி பிரேமதாசாவும், பட்டலந்த வதை முகாமும். ஜே.வி.பி யின் இரண்டாவது எழுச்சி 1987, 1988, 1989 ஆகிய மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது. குறித்த காலகட்டத்தில் வடகிழக்கில் தமிழ் இயக்கங்களுடனான சமாதான பேச்சுவார்த்தை, இந்தியப் படைனர்களின் வருகை, தமிழ் இயக்கங்களின் ஆயுதக் களைவு, இந்தியப் படையுடன் விடுதலைப் புலிகளின் யுத்தம், வடகிழக்கு மாகாண சபை தேர்தல் என தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனம் அனைத்தும் வடகிழக்கு பகுதியை முதன்மைப் படுத்தியதாக இருந்தது. இதன் காரணமாக தென்னிலங்கையில் ஜே.வி.பி யின் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிராக நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை முதன்மைப்படுத்தவில்லை. இந்த நிலையில் ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்பு ஜே.வி.பி யினரை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் அவரது அழைப்பை ஜே.வி.பி நிராகரித்தது. ஜனாதிபதி பிரேமதாசாவிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரது அரசியல் எதிரிகளை விட்டுவைப்பதில்லை. அதாவது மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள அமைப்புக்கள் குறிப்பாக தனக்கு போட்டியாக உள்ளவர்கள் அல்லது எதிர்காலத்தில் போட்டியாக வரக்கூடியவர்கள் ஆகியோர்களை முதலில் தனக்கு நண்பர்களாக மாற்றிகொண்டு அரசியல் செய்ய முற்படுவார். அது சாத்தியமற்றதாக இருந்தால் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவார். இதுதான் பிரேமதாசாவின் கொள்கை. சிங்களப் பகுதிகளில் எப்போதுமில்லாத அளவில் ஜே.வி.பி க்கு செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டது. அதனால்தான் ஜே.வி.பி யின் கொள்கைகள் பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவர்களை அரசியல் பங்காளிகளாக ஆக்கிக்கொள்வதற்காக சமாதான பேச்சுக்கு அழைத்திருந்தார் பிரேமதாச. தென்னிலங்கையில் ஜே.வி.பி யினர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை உக்கிரமடைந்தது. இதற்கென்று விசேடமாக “ப்ளக் கெட்ஸ், யெலோ கெட்ஸ், ஸ்கோபியன், ஈகிள்ஸ்” போன்ற துணைப்படைகள் அமைக்கப்பட்டதுடன், பல வதைமுகாம்கள் பிரேமதாசா அரசினால் உருவாக்கப்பட்டது. அந்தவகையில் ஜே.வி.பி யின் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ரணில் விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டதுதான் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட “பட்டளந்த” வதைமுகாமாகும். சித்திரவதை என்ற வார்த்தைக்கு அர்த்தமே பட்டலந்ததான் என்று கூறப்படுகின்றது. பின்னாட்களில் சந்திரிக்கா ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்ததன் பின்பு பட்டலந்த விசாரணை ஆணைக்குழு 1996 இல் நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தது. அதில் கொல்லப்பட்டவர்களில் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கண்டறியப்பட்டது. 1988 இல் கம்பஹா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 64 கட்டடங்களை உள்ளடக்கிய இரசாயன உர ஆலை அதிகாரிகள் விடுதியையே இலங்கை பொலிஸ் தனது முக்கியமான சித்திரவதை முகாமாக மாற்றியிருந்தது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமிற்கு பொறுப்பாக செயற்பட்டார். கடத்தி வரப்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் நிர்வாணமாக கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சுமார் பத்தாயிரம் இளைஞர்கள் இந்த வதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. பட்டலந்த வதைமுகாம் படுகொலைகள் பற்றி 1996 நவம்பரில் குற்றத்தடுப்பு பிரிவினராலும், 1997 ல் ஜனாதிபதி ஆணைக் குளுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார். பின்பு பதினொரு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அவர்களை கைதுசெய்ய இருந்த நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றிருந்தார். தொடரும்............ முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/09/blog-post_47.html
  5. கலாபூஷணம் பரீட் இக்பால் கிளிநொச்சியில் பறிபோகும் நிலையில் 50 வருடம் வாழ்ந்த இடம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலை புலிகளினால் ஒட்டுமொத்த வடமாகாண முஸ்லிம்களும் குறுகிய மணித்துளியில் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் உலகம் அறிந்த விடயம். . 34 வருடங்கள் கடந்தும் விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் சிலரால் அபகரிக்கப்பட்டதால் கிளிநொச்சி பிரதான வீதி கந்தசாமி கோயில் முன்பாக இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் அவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 34 வருடம் கடந்தும் அவர்கள் புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் பல தடவை மாவட்டச் செயலகம் பிரதேச செயலகம் போன்றவற்றுக்கு பல முறைப்பாடுகளை கொடுத்தும் அவர்களுக்கான தீர்வை அவர்களினால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை 09/09/2024 திங்கட்கிழமை காலை ஊடக சந்திப்பில் யாழ் முஸ்லிம் வட்டார சர்வதேச மனித உரிமைகள் பணிப்பாளர் ஆரிப் அப்துல் பரீட் அவர்கள் கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு விடயம் சம்பந்தமாக பத்திரிகையாளர்களை ஒன்று கூட்டி விபரித்தார். பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு தங்களின் அவல நிலைகளை பத்திரிகையாளர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சகல ஆவணங்கள் இருந்தும் அவர்களுடைய சொந்த இடத்துக்கு செல்ல முடியாத அவல நிலையை கண்ணீரோடு தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் போன்றவர்கள் இந்த ஏழைகளுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம் https://madawalaenews.com/4225.html
  6. ஆம் 70களின் ஆரம்பத்தில் பிறந்த என் வயதையொத்த‌ என் சிங்கள நண்பர்கள் 1990 களின் நடுப்பகுதியில் தாங்களை ஒரு தேசாபிமானியாக காட்டிக்கொண்டார்கள். பழக இனிமையானவர்கள் என்றாலும் இனவாதமும் சிங்கள பவுத்த மேலாதிக்கம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும். புலிகளையும், தமிழ் மக்களையும் பற்றி இழிவாகவே கதைப்பார்கள், என்ன ஆச்சர்யம், இன்று இவர்களில் பலர் வெளினாடுகளிலேயே இருக்கின்றார்கள். தாங்கள் பிள்ளைகளை வெளினாடுகளுக்கு அனுப்பிவிட்டு 50 வயதை கடந்த இவர்களும் வெளினாடுகளுக்கு ஓடி விட்டார்கள் அங்கிருந்து இலங்கையயை தூசிக்கின்றார்கள். காலம் எப்படி இவர்களை மாற்றிவிட்டது.
  7. எம்.எல்.எம்.மன்சூர் சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக கருத்­துக்­களை பதிவு செய்யும் அர­சியல் விமர்­ச­கர்கள் அனை­வரும் பொது­வாக பயன்­ப­டுத்தும் ஒரு சொல் ‘தீர­ணாத்­மக’ என்­பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடி­வாகப் போகும் தருணம்’ என்று சொல்­லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட 76 வருட கால வர­லாற்றில் மிக மிக நிர்­ண­ய­மான ஒரு கட்­டத்தில் வந்து நின்­றி­ருக்­கி­றது என்ற அபிப்­பி­ராயம் பொது­வாக அனைத்துத் தரப்­புக்கள் மத்­தி­யிலும் நிலவி வரு­கி­றது. முன்னர் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்­றிலும் வேறு­பட்ட ஓர் இயல்பை கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்­தல்­களில் இது­வ­ரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்­டி­யாக மாற்­ற­ம­டைந்­தி­ருப்­பது முத­லா­வது விசேஷம். பலர் நாமல் ராஜ­பக்­சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்­முனைப் போட்டி’ என்று சொல்லி வந்­தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்­பி­டத்­தக்க போட்­டி­யா­ள­ராக இருந்து வரு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை. தேர்­தல்­களில் இது­வ­ரையில் 5% க்கு குறை­வான வாக்­கு­களை மட்­டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்­டி­யா­ள­ராக எழுச்­சி­ய­டைந்­தி­ருப்­பது இரண்­டா­வது சிறப்­பம்சம். 1990கள் தொடக்கம் ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சா­ரங்­களின் போது சிங்­கள சமூ­கத்தின் கொடிய எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த தமிழ் பிரி­வி­னை­வாதம், டயஸ்­போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்­வைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் போன்ற கோஷங்கள் பிரச்­சார மேடை­க­ளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருப்­பது. அடுத்த விசேஷம். அதா­வது, கடந்த 20 ஆண்­டு­களில் வெளிப்­ப­டை­யாக இன­வாதம் பேசப்­ப­டாமல் நடத்­தப்­படும் முத­லா­வது தேர்தல் இது. சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் (Sinhala Heartland) தெளி­வா­கவே ஒரு ஜேவிபி / என்­பிபி ஆத­ரவு அலை நிலவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக வெவ்­வேறு தரப்­புக்­களால் பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்ட கருத்துக் கணிப்­புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்­ஜிதம் செய்­தி­ருக்­கின்­றன. அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அணி மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைக்கும் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் கூட ‘ஆம் அவர்­க­ளுக்கு ஒரு ஆத­ரவு அலை இருந்து வரு­கி­றது; அதை மறுக்க முடி­யாது’ என்ற பீடி­கை­யு­ட­னேயே தமது கருத்­துக்­களை முன்­வைக்­கி­றார்கள். அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்­வைத்­தி­ருக்கும் பிரச்­சார சுலோ­கங்கள் பெரி­தாக வாக்­கா­ளர்­களை கவ­ரக்­கூ­டி­ய­வை­யாக இருந்து வர­வில்லை. சார்­பு­ரீ­தியில், ஜேவிபி / என்­பிபி அணிக்குக் கிடைத்­தி­ருக்கும் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அனு­கூலம் – ‘எதிரி யார்’ என்­பதை தெளி­வாக அடை­யாளம் காட்டக் கூடிய ஆற்றல். சஜித் அணியை பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்­பது அவர்­க­ளுக்கே தெளி­வில்­லாமல் இருப்­பது முக்­கி­ய­மான ஒரு பல­வீனம். ராஜ­பக்­ச­களின் அர­வ­ணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்­ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திரு­டர்­களை களை எடுப்போம்’ போன்ற ஜன­ரஞ்­சக சுலோ­கங்­களை முன்­வைக்கும் தார்­மீக உரி­மையை இழந்­தி­ருக்­கிறார் சஜித். அவ­ரு­டைய மற்­றொரு பல­வீனம் இன்­றைய இலங்­கையின் பொரு­ளா­தார யதார்த்­தங்­க­ளுக்கு துளியும் சம்­பந்­த­மில்­லாத விதத்தில் கோமா­ளித்­த­ன­மான வாக்­கு­று­தி­களை வழங்­கு­வது. சொல்­லப்­போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­கி­ர­ம­ரத்ன போன்ற நாட்டு நடப்­புக்­களை நன்கு அறிந்து வைத்­தி­ருக்கும் SJB முக்­கி­யஸ்­தர்­களை பெரும் சங்­க­டத்தில் நெளிய வைக்கும் வாக்­கு­று­திகள் அவை. ‘அநுர குமா­ரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்­வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்­க­ளுக்கும் கொடுத்துப் பார்ப்­போமே’ என்­பது. அதா­வது, ‘இவ்­வ­ளவு காலமும் எத்­த­னையோ பேருக்கு வாக்­க­ளித்து ஏமாந்­தி­ருக்­கிறோம். கடை­சியில் இன்­றைய வங்­கு­ரோத்து நிலைதான் எமக்கு எஞ்­சி­யி­ருக்­கின்­றது’ என்ற ஆதங்­கமே இந்தப் பேச்­சுக்­களில் தொனிக்­கி­றது. அத­னையே அதா­வது – ‘ இந்தத் தடவை திசை­காட்­டிக்கு’ என்று மக்கள் சொல்­வ­தையே – ஜேவிபி/ என்­பிபி அணி தனது பிரச்­சார சுலோ­க­மாக பயன்­ப­டுத்தி வரு­கி­றது. குறிப்­பாக, 2022 அற­க­லய மக்கள் எழுச்­சிக்குப் பின்னர் நாட்டில் உரு­வாக்­கி­யி­ருக்கும் ஜேவிபி/ என்­பிபி ஆத­ரவு அலையின் குடி­ச­ன­வியல் பண்­புகள் (Demographic Features) எவை, புதி­தாக ஜேவிபி ஆத­ர­வா­ளர்­க­ளாக சேர்ந்­தி­ருக்கும் பல இலட்சக் கணக்­கா­ன­வர்கள் எங்­கி­ருந்து வந்­தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்­களைத் தள்­ளிய சமூக, உள­வியல் கார­ணிகள் எவை போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்­நோக்கிச் செல்ல வேண்டும். 2004 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜாதிக ஹெல உரு­மய (JHU) கட்சி சார்பில் மேல் மாகா­ணத்தில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­களில் 9 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­னார்கள். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் புத்த பிக்­குகள். விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போரை சந்­தி­ரிகா – மங்­கள அர­சாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்­கள -பௌத்த உணர்­வா­ளர்­களின் ஒரு பிரி­வி­னரே இவ்­விதம் திடீர் JHU ஆத­ர­வா­ளர்­க­ளாக மாறி­யி­ருந்­தார்கள். அவர்­களை அவ்­விதம் அணி திரட்­டு­வதில் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க முதன்­மை­யான ஒரு பாத்­தி­ரத்தை வகித்­தி­ருந்தார். கங்­கொ­ட­வில சோம தேரர் உரு­வாக்­கிய பௌத்த எழுச்சி அலை­யினால் தூண்­டப்­பட்­டி­ருந்த ஒரு பிரி­வி­னரின் இன உணர்­வு­களை அச்­சந்­தர்ப்­பத்தில் ரண­வக்க மிகவும் சாதுர்­ய­மாக தனக்கு சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார். இந்தச் சமூகப் பிரி­வினர் மேல் மாகா­ணத்தில் – குறிப்­பாக கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் – செறிந்து வாழ்ந்து வரு­கி­றார்கள். 1980 களில் உரு­வா­கிய தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்று, வெளி மாகா­ணங்­க­ளி­லி­ருந்து வந்து கொழும்பு புற நகர் பகு­தி­களில் குடி­யே­றி­ய­வர்கள். ஜே.ஆர். அறி­முகம் செய்து வைத்த திறந்த பொரு­ளா­தார கொள்­கையின் மூலம் பய­ன­டைந்த முதல் தலை­மு­றை­யினர் கிட்­டத்­தட்ட இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கா­ளர்­களைக் கொண்­டி­ருக்கும் கெஸ்­பாவ, கடு­வெல, கோட்டே, மக­ர­கம, ஹோமா­கம போன்ற கொழும்பு மாவட்­டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகு­தி­களில் இந்த வகுப்­பி­னரின் பிர­சன்னம் அதிகம். சிங்­கள மத்­திய தர வரக்­கத்தின் ஒரு புதிய பிரி­வி­னரின் எழுச்­சி­யாக (Sociological Phenomenon) அப்­பொ­ழுது அது பார்க்­கப்­பட்­டது. கொழும்பு மாவட்­டத்தில் கெஸ்­பாவ மற்றும் மக­ர­கம போன்ற தொகு­தி­களில் வாக்­கு­களின் அடிப்­ப­டையில் யூஎன்­பியை மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளி­விட்டு, JHU இரண்­டா­வது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அள­வுக்கு அப்­போ­தைய சிங்­கள பௌத்த அலை வலு­வா­ன­தாக இருந்து வந்­தது. இதே­போல கம்­பஹா மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் JHU கணி­ச­மான அள­வி­லான வாக்­கு­களை பெற்றுக் கொண்­டி­ருந்­தது. அதன் பின்னர் இந்தப் பிரி­வினர் 21 ஆம் நூற்­றாண்டு சிங்­கள பெருந் தேசி­ய­வா­தத்தின் ‘Trendsetter’ களாக உரு­வா­கி­ய­துடன், அவர்கள் தூண்­டி­விட்ட அந்த உணர்வு சிங்­கள சமூகம் நெடு­கிலும் மிக வேக­மாக பர­வி­யது. 2010, 2019 ஜனா­தி­பதி தேர்­தல்­களில் முறையே மஹிந்­த­வுக்கும், கோட்­டா­ப­ய­வுக்கும் இப்­பி­ரி­வி­னரே அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள். 2022 பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பா­டுகள் போன்ற பிரச்­சி­னைகள் அவர்கள் இது­வ­ரையில் அனு­ப­வித்து வந்த ‘Comfort Zone’ இலி­ருந்து அவர்­களை வெளியில் எடுத்து வந்­தன. அந்த நிலையில், ராஜ­பக்­ச­களை ஆத­ரித்த அதே அளவு தீவி­ரத்­துடன் அவர்­களை எதிர்க்­கவும் தொடங்­கி­னார்கள். சுருக்­க­மாகச் சொன்னால் 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கிய படித்த சிங்­கள நடுத்­தர வர்க்­கத்தை சேர்ந்­த­வர்கள் பல இலட்­சக்­க­ணக்கில் இப்­பொ­ழுது திசை­காட்­டியின் பக்கம் வந்­தி­ருக்­கி­றார்கள். இந்த அலை ‘கம்­யூனிஸ்ட் / சோஷ­லிச ஆத­ரவு அலை அல்ல’. என்­பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமா­ரவும், அந்த அணியின் ஏனைய தலை­வர்­களும் (குறிப்­பாக லால் காந்த போன்­ற­வர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். ஜேவிபி / என்­பிபி மேடையில் கழுத்­துப்­பட்டி அணிந்த கன­வான்கள் ஏராளம் பேர் உட்­கார்ந்­தி­ருக்கும் காட்சி மற்­றொரு சுவா­ரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்­திர கட்சி போன்ற பாரம்­ப­ரிய கட்­சி­களின் பிரச்­சார மேடை­களில் கூட முன்னர் அந்த மாதி­ரி­யான காட்­சிகள் தென்­ப­ட­வில்லை. கட்­சிக்கு ஒரு கண்­ணி­ய­மான, மத்­திய தர வர்க்க முகத்­தோற்­றத்தை முன்­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தின் குறி­யீடு அது. ஒரு பெரும்­போக்கு அர­சியல் கட்­சி­யாக (Mainstream Political Party) மாற்­ற­ம­டை­வ­தற்கு ஜேவிபி செலுத்­தி­யி­ருக்கும் விலையே என்­பிபி அணியின் இணைப்பு. 1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்­சி­களின் போது நில­விய இலங்கை சமூகம் – குறிப்­பாக சிங்­கள சமூகம் – இப்­பொ­ழுது பெரும் மாற்­றங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது. நகர்ப்­பு­றங்­க­ளிலும், கிராமப் புறங்­க­ளிலும் புதிய மத்­திய தர வர்க்­கத்­தினர் எழுச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றார்கள். இன்­றைய இலங்­கையின் நுகர்வு கலா­சா­ரத்தின் பிர­மாண்­மான வளர்ச்­சியின் பின்­ன­ணியில் இருந்து வரு­ப­வர்கள் அவர்கள். முன்­னைய தலை­மு­றை­க­ளிலும் பார்க்க முற்­றிலும் வேறு­பட்ட அபி­லா­ஷை­களை கொண்­டி­ருப்­ப­வர்கள். இலங்கை பொது சமூ­கத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உட­ன­டி­யாக எமக்­கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்­தி­ய­டிப்போம்’ போன்ற கோஷங்­களை இச்­ச­மூகப் பிரி­வி­னரே கையில் எடுத்­தி­ருக்­கி­றார்கள். காலி­மு­கத்­திடல் அற­க­லய பூமியில் குமார் குண­ரத்­னத்தின் ‘பெரட்­டு­காமி’ கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட சுலோ­கங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்­யூ­னிஸ்­டுகள் காண விழையும் சமூக மாற்­றத்தை வலி­யு­றுத்­து­பவை. ஆனால், இன்­றைய இலங்­கையில் அச்­சு­லோ­கங்கள் அதே அர்த்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை இங்கு முக்­கி­ய­மாக சுட்டிக் காட்ட வேண்டும். இந்தக் கோஷங்­களை முன்­வைத்து வரு­ப­வர்கள் எதிர்­பார்க்கும் உண்­மை­யான ‘System Change’ எது? இன்­றைய ஊழல் அர­சி­யல்­வா­தி­களை பிர­தி­யீடு செய்யும் பொருட்டு எந்த வகை­யான மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்? அவர்­க­ளு­டைய ஆதர்ச புர்­ஷர்கள் யார்? தனது முறை வரும் வரையில் பொறு­மை­யுடன் கியூ வரி­சையில் காத்­தி­ருக்கும் ஒரு ஜனா­தி­பதி. போக்­கு­வ­ரத்து விதி மீற­லொன்றை இழைத்து விட்டு அதற்கு அப­ராதம் செலுத்தும் ஒரு பிர­தம மந்­திரி. தனது பிள்­ளையை பொறுப்­புடன் பள்­ளிக்கு அழைத்துச் செல்லும் தந்­தை­யான ஒரு அரச தலைவர் போன்­ற­வர்­களை காட்டும் காணொ­ளி­களை புதிய தலை­மு­றை­யினர் பிர­மிப்­புடன் பார்க்­கி­றார்கள். தமது ஆதர்­சங்­க­ளாக அவர்­களை கொண்­டாடி வரு­கி­றார்கள். ஆனால், மேற்­படி உதா­ர­ணங்கள் அனைத்தும் லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டவை என்­பது தான் இங்­குள்ள சுவா­ரஸ்யம். ஊழல், முறை­கே­டுகள் இல்­லாத எவ­ருக்கும் பார­பட்சம் காட்­டாத அரச நிர்­வாக கட்­ட­மைப்­புக்­க­ளுக்­கான ஆதர்­சங்­க­ளா­கவும் இந்த மேலைய லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளையே இவர்கள் சுட்டிக் காட்­டு­கி­றார்கள். “நான் சுதந்­தி­ரத்­திற்கு முன்னர் பிறந்­தவன். வாழ்நாள் முழு­வதும் ஒரு தேசா­பி­மா­னி­யா­கவே இருந்­தி­ருக்­கிறேன். எனது வாழ்க்­கையின் முதல் 75 ஆண்­டு­களை இந்த மண்­ணி­லேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடி­யாத நிலையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனது பிள்­ளைகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்கள். அவர்­க­ளு­டைய வற்­பு­றுத்­தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடு­க­ளையும் ஒப்­பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அள­வுக்கு சீர­ழிந்­த­வர்­க­ளாக இருந்து வரு­கிறோம் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது” என்­கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்­சியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த ஒரு முன்­னணி சிங்­கள நாடகக் கலைஞர். மேற்­படி கூற்று இன்று ஜேவிபி / என்­பிபி அணியின் பின்னால் திரண்­டி­ருக்கும் சிங்­கள மத்­திய தர வர்க்­கத்­தி­னரின் மதிப்­பீ­டுகள் மற்றும் எதிர்­பார்ப்­புக்கள் என்­ப­வற்றின் துல்­லி­ய­மான ஒரு பிர­தி­ப­லிப்பு எனச் சொல்லலாம். சரி­யாகச் சொன்னால் இலங்­கையின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்­றத்தை எதிர்­பார்க்­க­வில்லை. இவர்­களில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் நவ லிபரல் பொரு­ளா­தா­ரத்தின் ஆத­ர­வா­ளர்கள். ஆகவே, இந்தப் பின்­ன­ணியில், அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி வைக்கும் விட­யத்­திலும், அவர்­களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விட­யத்­திலும் ஒரு எதிர்­கால ஜேவிபி / என்­பிபி அர­சாங்கம் கடும் சவால்­களை எதிர்­நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/17705
  8. ஊடகவியலாளர்- ஏ சி பௌசுல் அலிம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிப் பழகி வந்த சுமந்திரன் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, தனிநபர் சட்ட முன்வரைவுகளை தடுப்பதற்கு சாட்சி சமர்ப்பித்து, ரணில் விக்ரமசிங்கவை இனவாதி என குற்றம் சுமத்தியுள்ளர். தமிழ் மக்கள் சுமந்திரன் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு அறிந்துள்ள நிலையில், அவர் ரணிலை குற்றம் சுமத்துவதற்கு எந்த தகுதியும் இல்லை என்ற கேள்வி எழுகிறது. ஒன்றாக இருந்து குழிபறித்த கூட்டத்தில் இருந்தவர் சுமந்திரன் என்பதை அவர் மறக்க முடியுமா? என்று கேட்க வேண்டி இருக்கிறது. சுமந்திரன் ஒரு சட்ட வல்லுநராகவும், வாதத் திறமை கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால், அவர் மனசாட்சியை தொட்டுப் பேச வேண்டும். ரணிலை நம்ப வைத்து மோக்ஷம் செய்தவர் சுமந்திரன் என்பது தமிழ் மக்களுக்குப் புதிதல்ல ஏனைய மக்களும் இதை நன்கு அறிந்துள்ளனர். சம்பந்தன் ஐயா உயிரோடு இருந்தபோது அவரோடு இணைந்து உறவாடி தமிழினத்தை ஏமாற்றி வந்தவர் இன்று சம்பந்தன் ஐயா உயிரோடு இருந்திருந்தால் இந்த இழிவான செயல்களை கண்டித்திருப்பார் என்பது நிச்சயம். தமிழர் சமூகத்தின் நலனை முன்னெடுக்கும் வழியில் செயல்பட்டிருந்தால் தமிழரசு கட்சியும், சுமந்திரனும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து அவருக்கு ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு சுமந்திரன் செய்திருக்கும் செயல்கள், ரணிலின் முதுகில் குத்திய கொடுமையான செயலாகவே தமிழர் சமூகத்தால் பார்க்கப்படுகின்றன. ரணில் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ளனர் அவர் ஒருபோதும் தமிழினத்துக்கு எதிரானவர் அல்ல.வடக்கு மக்களுக்கு குரல் கொடுத்து வந்த ரணிலின் செயல்களை சுமந்திரன் போன்றவர்கள் மறந்தாலும், தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கப் போவதில்லை. சுமந்திரன் அவரின் போலித்தனத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க ஒரு இனவாதி எனக் குற்றம் சுமத்தி அவரை பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் அல்ல. சுமந்திரன் செய்யும் துரோகத்தை தமிழ் மக்கள் விரைவில் வெளிப்படுத்துவர். ஏற்கெனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் குழப்பம் ஏற்படுத்தி, தமிழரசு கட்சிக்குள் சண்டையை தூண்டியவர் என்று தெரியும். இந்நிலையில் ரணிலை இனவாதி என சுமந்திரன் சொன்னால், அவரே அதைவிட மோசமான இனவாதியாக இருக்கும். தமிழ் மக்கள் சுமந்திரனின் துரோகித்தனத்தை நன்கு அறிந்து கொண்டுள்ளனர். வெற்றி, தோல்வி எதுவாயினும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயங்கியவர் சுமந்திரன் என்பதால், அவரை மக்கள் எப்படி நம்பப் போகிறார்கள்? சுமந்திரனின் போலித்தனமான முகம் கலைந்து விட்டது; அவரை நம்புவதற்கு தமிழ் மக்கள் தயங்குகின்றனர். ஹக்கீம், ரிஷாட் போன்ற முஸ்லிம் தலைவர்கள் சஜித் பக்கம் சென்றதால் அச்சம் கொண்டு, தன்னிச்சையாக தமிழரசு தீர்மானம் என அறிவித்துள்ளார் சுமந்திரன். தமிழரசு முக்கிய குழுவினர் கூட அவரது முடிவை எதிர்த்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டார்கள். சஜித்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் தான் சுமந்திரன் ரணிலை கைவிட்டு, சஜித்திடம் நல்ல பெயர் வாங்க முற்பட்டார். சட்டப் பாடத்தை நன்கு கற்றவர் அரசியல் பாடத்தை இன்னும் கற்றுக் கொள்ளாததுதான் கவலையாகும். சுமந்திரன் இன்னும் எத்தனை போலி நாடகங்களை அரங்கேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். https://madawalaenews.com/3772.html
  9. சுவிசில், சுவிஸ் ஆர்மி கத்தி (swiss army knife) பிர‌பலம் என்று கேள்விப்ப்ட்டுள்ளேன். அதை கையில் வைத்து காட்டி, சுழற்றி படம் பிடித்தாரோ தெரியாது.
  10. சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதையெல்லாம் கடந்து கோட் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.. கோட் படத்தின் கதை: SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முறியடித்து வருகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: ஒட்டுமொத்த படத்தையும் டபுள் ஆக்‌ஷனில் விஜய் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என விஜய்யின் டீமில் உள்ளவர்களின் நடிப்பும் அவர்களுக்குள் நடக்கும் ட்விஸ்ட்டும் கலக்கல். இளம் விஜய்யாக வரும் டீ ஏஜிங் விஜய்க்கு ஜீவன் என பெயர் வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் அவர் பண்ணும் சேட்டைகள் மற்றும் அலப்பறைகள் தான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. விஜய்யும் காமெடி காட்சிகளில் தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம் உள்ளிட்டோருக்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமியோக்கள் அதிரடி: விஜயகாந்தின் ஏஐ கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான் படமே தொடங்குகிறது. ஏற்கனவே சோஷியல் மீடியாவில் லீக்கான பல பிரபலங்களும் கேமியோவாக நடித்து தூள் கிளப்பியுள்ளனர். அதிலும், கிளைமேக்ஸ் கேமியோ வேறலெவல். பிளஸ்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அந்த இறுதி கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இளம் விஜய்யின் டீ ஏஜிங் அந்நியமாக தெரிந்தாலும், படம் போகிற போக்கில் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததே இந்த படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான படம் பிடிக்கும் என்பதை பார்த்து ஸ்க்ரீன்பிளே செய்திருக்கும் விதம் சிறப்பு. தளபதி விஜய் இப்படியெல்லாம் நடித்து விட்டு தமிழ் சினிமாவை விட்டே செல்லப் போகிறேன் என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். மைனஸ்: டீ ஏஜிங், சிஜி குறைகள் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும், சில இடங்களில் அடிவாங்கத்தான் செய்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வேகத்தடையாக மாறியுள்ளது. தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான மோதல்கள், வில்லன் போர்ஷன் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் ஸ்ட்ராங்கான விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சில இடங்களில் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட சினிமாட்டிக் லிபர்ட்டி மற்ற ஆடியன்ஸை கவருமா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. சில சில குறைகளை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்தமாக படமாக பார்த்தால் நிச்சயம் இந்த கோட் பிளாக்பஸ்டர் தான். சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதையெல்லாம் கடந்து கோட் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.. கோட் படத்தின் கதை: SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முறியடித்து வருகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: ஒட்டுமொத்த படத்தையும் டபுள் ஆக்‌ஷனில் விஜய் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என விஜய்யின் டீமில் உள்ளவர்களின் நடிப்பும் அவர்களுக்குள் நடக்கும் ட்விஸ்ட்டும் கலக்கல். இளம் விஜய்யாக வரும் டீ ஏஜிங் விஜய்க்கு ஜீவன் என பெயர் வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் அவர் பண்ணும் சேட்டைகள் மற்றும் அலப்பறைகள் தான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. விஜய்யும் காமெடி காட்சிகளில் தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம் உள்ளிட்டோருக்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமியோக்கள் அதிரடி: விஜயகாந்தின் ஏஐ கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான் படமே தொடங்குகிறது. ஏற்கனவே சோஷியல் மீடியாவில் லீக்கான பல பிரபலங்களும் கேமியோவாக நடித்து தூள் கிளப்பியுள்ளனர். அதிலும், கிளைமேக்ஸ் கேமியோ வேறலெவல். பிளஸ்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அந்த இறுதி கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இளம் விஜய்யின் டீ ஏஜிங் அந்நியமாக தெரிந்தாலும், படம் போகிற போக்கில் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததே இந்த படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான படம் பிடிக்கும் என்பதை பார்த்து ஸ்க்ரீன்பிளே செய்திருக்கும் விதம் சிறப்பு. தளபதி விஜய் இப்படியெல்லாம் நடித்து விட்டு தமிழ் சினிமாவை விட்டே செல்லப் போகிறேன் என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். மைனஸ்: டீ ஏஜிங், சிஜி குறைகள் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும், சில இடங்களில் அடிவாங்கத்தான் செய்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வேகத்தடையாக மாறியுள்ளது. தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான மோதல்கள், வில்லன் போர்ஷன் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் ஸ்ட்ராங்கான விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சில இடங்களில் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட சினிமாட்டிக் லிபர்ட்டி மற்ற ஆடியன்ஸை கவருமா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. சில சில குறைகளை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்தமாக படமாக பார்த்தால் நிச்சயம் இந்த கோட் பிளாக்பஸ்டர் தான். https://tamil.filmibeat.com/reviews/goat-review-in-tamil-vijays-double-action-avatar-is-pakka-treat-to-thalapathy-fans-141135.html
  11. ஸஃபார் அஹ்மத் ahmedzafaar@gmail.com ஒன்­ப­தா­வது ஜனா­தி­பதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறி­கெட்டுச் சென்று கொண்­டி­ருக்­கி­றது. அனுமார் வால் போன்று முப்­பத்­தெட்டு வேட்­பா­ளர்­க­ளுடன் வாக்குச் சீட்டு அச்­சி­டப்­பட்டுக் கொண்டு இருக்கும் இத்­த­ரு­ணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்­பதோ மூன்று பேருக்கும் இடையில் தான். ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, அழிவில் இருந்த நாட்டை தான் மீட்­டெ­டுத்­ததாய்க் கூறிக் கொண்டு கள­மி­றங்கி இருக்­கிறார். எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வி­டமோ அள்ளி வீசு­வ­தற்குக் கட்டுக் கட்டாய் வாக்­கு­று­திகள் அவர் சட்­டைப்­பையில் பத்­தி­ரமாய் இருக்­கின்­றன. தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க, சம்­பூரண­மான அர­சியல் ஒழுங்கு மாற்றம் என்று கூறிக் கொண்டு பம்­ப­ரமாய் சுழன்று கொண்­டி­ருக்­கிறார். தனிப்­பட்ட குரோ­தங்­களால் பகைத்துக் கொண்டும், முறைத்துக் கொண்­டு­மி­ருந்­தாலும் சஜித்தும், ரணிலும் ஐக்­கிய தேசியக் கட்சி என்ற ஒரே பாச­றையில் வளர்ந்­த­வர்கள். ஆரம்­ப­கா­லத்தில் ரணில் செய்­வது எல்லாம் நாம் முன்­வைக்கும் பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்கள் தான் என்று சஜித்தின் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்­ஷடி சில்வா வீணை வாசித்துக் கொண்­டி­ருந்தார். இப்­போது என்ன ஆனதோ தெரி­ய­வில்லை.ஹர்ஷ எதையும் சொல்­வ­தில்லை. ஹர்ஷ உட்­பட பதி­னைந்து, இரு­பது பேர் ரணி­லிடம் சர­ணா­க­தி­ய­டை­வார்கள் என்று கடந்த இரண்டு வரு­டமாய் உலா­விய வதந்­தியும் அப்­ப­டியே செத்துப் போய்­விட்­டது. வேறு வழி­யின்றி ரணில், மக்­களின் பரி­கா­சத்­திற்கும், எள்­ள­லுக்­கு­முள்ளான பொது­ஜன முன்­ன­ணியின் கணி­ச­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைச் சேர்த்துக் கொண்டு பவனி வரு­கிறார். நூறுக்கும் மேற்­பட்ட பொது­ஜன முன்­னணி உறுப்­பி­னர்கள் இன்று ராஜ­பக்­சாக்­களைக் கைவிட்டு விட்டு ரணி­லோடு இருக்­கி­றார்கள். பேசாமல் ரணிலை பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ராக நிய­மிக்­கலாம் போல இருக்­கி­றது. தேர்தல் கோலங்­களை அவ­தா­னிக்கும் போது எல்­லோ­ருக்கும் பொது எதி­ரியாய் தேசிய மக்கள் சக்தி இருப்­ப­தாகத் தெரி­கி­றது. தொட்­ட­துக்­கெல்லாம் குறை­பி­டிக்கும் கொடு­மைக்­கார மாமி­யிடம் அகப்­பட்ட மரு­மகள் போலத்தான் அநு­ர­கு­மா­ர­வி­னதும் தேசிய மக்கள் சக்­தி­யி­னதும் நிலைமை இருக்­கி­றது. என்­னதான் தேசி­ய­ மக்கள் சக்தி என்று கூறிக் கொண்­டாலும் ஜே.வி.பி சித்­தாந்­தப்­பு­லத்தில் வளர்ந்­த­வர்கள் இவர்கள் என்­ற­வாறு 1988/1989ம் ஆண்டு கால ஜே.வி.பி கிளர்ச்சி மீண்டும் சமூ­க­வ­லைத்­ளங்­களில் தூசு தட்டி எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் இம்­முறை இந்த சேறு­பூ­சல்கள், வழக்­க­மான தேர்­தல்­கால வாக்­கி­யங்கள் எதுவும் பெரி­ய­ளவில் சிங்­கள மக்­க­ளிடம் எடு­ப­ட­வில்லை.1980ம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரிமை பறிப்பு, 1981ல் எரிக்­கப்­பட்ட யாழ்­நூ­லகம், 1982ம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­தாமல் தன் சொல்­படி கேட்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒப்­பு­த­லுடன் நடத்­திய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு என்னும் மோசடித் தேர்தல், சிங்­கள மக்­களின் அரச எதிர்ப்பை மடை­மாற்ற அதனைத் தொடர்ந்து 1983ல் ஜே.ஆர் அரசு நடத்­திய ஜூலைக் கல­வரம் என்று இலங்கை நிரந்­தர இருட்­டுக்குள் விழு­வ­தற்குக் கார­ண­மான அத்­த­னையும் புள்­ளி­வி­ப­ரங்­க­ளுடன் அதே சமூ­க­வ­லை­த்த­ளங்­களில் முன்­வைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. வழக்­கமாய் இலங்கைத் தேர்­தல்­களில் இன­வாதம் ஒன்­றுதான் பேசு பொரு­ளாகும். ‘தமிழன் நாடு கேட்­கிறான். தேசத்தைக் காப்­பாற்ற வாக்குப் போடுங்கள்’ என்ற கோஷம் புலிகள் உயிர்ப்­புடன் இருக்கும் வரை இருந்­தது. 2009ம் ஆண்டு புலிகள் முற்றாய்த் துடைத்­தெ­றி­யப்­பட்ட பின்னர் அர­சியல் செய்ய ‘இஸ்­லா­மோ­போ­பியா’ பேசு­பொ­ரு­ளா­னது. 2019ம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு கோட்­டா­ப­ய­விற்கு தேர்தல் விஞ்­ஞா­பனம் உண்­மையில் தேவைப்­பட்­டி­ருக்­கவே இல்லை. முஸ்லிம் வெறுப்பு அவரை வெல்­ல­வைக்கத் தாரா­ளமாய்ப் போது­மா­னதாய் இருந்­தது. இந்த தேர்­தலில் இத்­தகு இன­வாதப் பரப்­பு­ரைகள் எல்லாம் காலி­யாகிப் போன­தற்கு 2022ம் ஆண்டு மக்கள் எழுச்­சிக்குப் பிற­கான இலங்­கையைப் புரிந்து கொள்­வது முக்­கியம். வயிற்றுப் பசியும், வரி­சை­களும், தட்­டுப்­பாடும் மக்­க­ளுக்கு குறிப்­பி­டத்­தக்க அளவில் அர­சியல் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. முன்னாள் இன­வா­திகள் எல்லாம் ‘நாங்கள் இன­வா­திகள் அல்லர்’ என்று மேடை தோறும் சத்­தியம் செய்­யு­ம­ள­வுக்கு நிலைமை மாறி இருக்­கி­றது. இதனால் தானோ என்­னவோ இப்­போது இலங்கை அர­சி­யலில் பெரும் மாற்று சக்­தியாய் உரு­வெ­டுத்து இருக்கும் ஜே.வி.பிக்கு எப்­படி வசை­பா­டலாம் என்று புரி­யாமல் பாரம்­ப­ரியக் கட்­சி­களின் தலை­வர்­களும், அவர்­க­ளது பக்த கோடி­களும் 1988 –1989ம் ஆண்­டு­கால சர்­வ­நாச சரித்­தி­ரத்தில் தம் வகி­பா­கத்தை இடது கையால் மறைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப பேசிக் கொண்டு இருக்­கி­றார்கள். சரி, இப்­போ­தைய நிலை­மையில் இம்­மூன்று போட்­டி­யா­ளர்­க­ளி­னதும் நிலைமை என்ன? ரணில் வரி­சையை ஒழித்­தார்தான், தட்­டுப்­பாட்டை நீக்­கினார் தான், அத்­தி­ய­வ­சி­யங்­களை பல்­பொருள் அங்­கா­டி­களில் ராக்­கையில் நிரப்­பினார் தான். ஆனால் அதற்­காக மக்கள் கொடுத்த விலை ரொம்­பவே அதிகம். இது எல்­லோ­ரையும் விட ரணி­லுக்குத் தெரியும். அவ­ருக்கு தேர்தல் என்­றாலே அலர்­ஜி­யா­கி­வி­டு­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலை ஒத்­தி­வைத்­தது போல ஜனா­தி­பதித் தேர்­தலைத் தள்ளிப் போட அவரால் முடி­ய­வில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது அர­சியல் சாச­னத்தில் தெளிவாய் வரை­ய­றுக்­கப்­பட்ட ஒன்று. அதற்­காக ஜனா­தி­பதித் தேர்தல் என்ற அறி­விப்பைப் பெற்றுக் கொள்­வது ஒன்றும் இலங்கைப் பிர­ஜை­க­ளுக்கு அத்­தனை இலகுவான காரி­யமாய் இருக்­க­வில்லை. ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வசிக்கும் ராஜ­கு­மா­ரியை அடையப் போகும் போது இள­வ­ர­சர்­க­ளுக்கு ஏற்­படும் சிர­மங்­களைப் போலத்தான் ரணில் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் தேசத்தில் தேர்­தலைப் பெற்றுக் கொள்ள மெனக்­கி­டு­வதும் என்­ப­தற்கு கடந்த இரு மாதங்­களாய் நடந்து வந்த கண்­ணுக்குத் தெரி­யாத சூழ்ச்­சி­களே போது­மான சான்று. சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு மின்­சாரம், நீர்க்­கட்­ட­ணங்கள் எல்லாம் மூன்று மடங்­கா­கின. அரச ஊழி­யர்­களின் சம்­பளப் பெறு­மதி முப்­பத்­தாறு சத­வீ­தத்தால் தேய்­மா­னத்­திற்­குள்­ளா­னது. கிட்­டத்­தட்ட இரு­பத்­தைந்து சத­வீ­த­ம­ன­வர்கள் வறு­மைக்­கோட்­டிற்குள் தட­ாலடியாய் உள்­வாங்­கப்­பட்­டார்கள். வேலை­யின்மை அதி­க­ரித்­தது. இறக்­கு­மதிக் கட்­டு­ப்பா­டு­களால் மூலப் பொருள்­க­ளுக்குத் தட்­டு­ப்பாடு ஏற்­பட நூற்றுக்கணக்­கான தொழிற்­சா­லைகள் மூடு­விழாக் கண்­டன. கடந்த இரண்டு வரு­டத்தில் மட்டும் ஆறு லட்சம் பேர் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­னார்கள். இந்த வலியும் வேத­னை­மிகு தியா­கங்­களும் சாமா­னி­யர்­க­ளுக்கு மட்­டுமாய் இருந்­தது தான் இங்கே சோகம். கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஆயி­ரத்து இரு­நூறு பில்­லியன் ரூபாய்கள் வரி ஏய்ப்பு நடந்து இருப்­பதாய்க் கூறு­கி­றது திறை­சேறி. அதா­வது இலங்­கையின் பிர­தான வருவாய் மூலா­தா­ரங்­க­ளான சுங்கம், இறை­வரித் திணைக்­களம், மது­சாரத் திணைக்­களம் அற­விடத் தவ­றிய தொகை இது. இந்­த ­வ­ரி­களை எல்லாம் முறை­யாக அற­விட எந்­த­வொரு திட்­ட­மு­மின்றி சர்­வ­தேச நாணய நிதியம் சொன்­ன­படி வரி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க நடந்த கபடி ஆட்­டத்தில் மொத்­தமாய்ப் பாதிக்­கப்­பட்­டது அப்­பா­விகள் தான். 2027 வரை கடன்­களை மீள் செலுத்த தேவை இல்லை என்று இலங்கை கடன் மறு­சீ­ர­மைப்பு ஒப்­பந்­தங்­களில் கைச்­சாத்­திட்­டுள்­ளது. மற்­ற­படி, எப்­போதும் போல அந்­நியச் செலா­வ­ணியை அள்ளித் தரும் சுற்­று­லாத்­து­றையும், வெளி­நாடு வாழ் இலங்­கை­யர்கள் அனுப்பும் பண­முமே டொலர் கையி­ருப்பைப் பேண உதவிக் கொண்டு இருக்­கின்­றன. உற்­பத்­திகள் என்று எது­வு­மில்லை. இஞ்சி, பால், மீன், முட்டை என உணவுப் பொருட்­களைக் கூட இறக்­கு­மதி செய்ய வேண்டி இருக்­கி­றது நிலைமை. இப்­ப­டி­யாக சர்­வ­தேச நாணய நிதி­யத்தை பூச்­சாண்­டி­யாகக் காட்டிக் கொண்டு மக்­களின் மானி­யங்­க­ளுக்கும், நிவா­ர­ணங்­க­ளுக்கும் ஆப்புச் சொரு­கிய ரணில் இப்­போது திடீர் கிறிஸ்­மஸ் தாத்தா அவ­தாரம் எடுத்து இருக்­கிறார். 2025 ஜன­வரி முதல் அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை 25 முதல் 50 சத­வீ­தமாய் அதி­க­ரிக்கப் போவதாய் சர்­வ­தேச நாணய நிதி­யமே அரண்டு ஓடு­ம­ள­வுக்கு ஒரு வாக்­கு­று­தியை அறி­வித்து இருக்­கிறார். இதற்கு மட்டும் மாதம் மூவா­யி­ரத்து அறு­நூறு கோடி ரூபாய் மேல­தி­கமாய் செல­வாகும் என்று சொல்­லப்­படும் நிலையில் தப்பித் தவறி ரணில் வென்றால் இப்­ப­ணத்தை திரட்ட யார் மீது வரி விதிப்பார் என்று தெரி­ய­வில்லை. மூச்­சு­வி­டு­வ­தற்கும் வரி விதித்தால் தான் இதெல்லாம் சாத்­தியம். இதை எல்லாம் தாண்­டியும் ரணி­லுக்கு வர்த்­தக சமூ­கத்தில் இருக்கும் செல்­வாக்கை குறைத்து மதிப்­பிட முடி­யாது. ரணில் யாரோடு ஆட்சி செய்­தாலும் சரி, இப்­படி தெரிந்த பிசாசே இருந்­து­விட்டுப் போகட்டும் என்று கரு­து­ப­வர்­களும் இருக்­கி­றார்கள். அவர்­களின் அபி­லா­ஷைகள் ரணிலை வெல்ல வைக்க இன்­றைய திக­தியில் போது­மா­னதாய் இல்லை. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, தன் அப்பா முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவைப் போல அர­சி­யலில் ஒரு முதிர்ச்­சி­யான ஒரு­வ­ரல்ல. சில சம­யங்­களில் அவ­ரது நட­வ­டிக்­கை­களும், பேச்சும் மூடன் – மட்டி கதை­களில் வரு­வது போன்று இருக்கும். நான் ஜனா­தி­ப­தி­யானால் நீங்கள் மகிழ்ச்­சியாய் இருக்­கி­றீர்­களா என்று அறிந்து கொள்ள இரவு வேளை­களில் உங்கள் வீடு தேடி வருவேன் என்பார். யானை விரட்டும் மந்­திரம் சொல்வார். மூன்றாம் வகுப்பு படிக்கும் பிள்­ளை­க­ளிடம் ‘என் அருமைத் தோழர்­களே! இந்த ரணிலைப் பாருங்கள்’ என்று உரை­யாற்றி பேட்டை எங்கும் பயப் பிராந்­தியை ஏற்­ப­டுத்­தி­விட்டுப் போவார். திடீ­ரென்று ஆங்­கி­லத்தில் பேசுவார். வெள்­ளைக்­கா­ரனே தோற்­கு­ம­ள­வுக்கு அந்த ஆங்­கிலம் இருக்கும். IELTS மாண­வர்­க­ளுக்கு நல்ல பிர­யோ­ச­னமாய் இருக்கும். சஜித் பிரே­ம­தாஸ தனக்கு அடித்­தள சிங்­கள மக்­களின் ஆத­ரவு நிச்­சயம் இருக்­கி­றது என்று நினைக்­கிறார். 2020ம் ஆண்டு ஐ.தே.க யை உடைத்துக் கொண்டு சஜித் பிரே­ம­தாஸ வெளி­யே­றிய போது வழக்­கமாய் ரணி­லுக்கு ஸலாம் போடும் தமிழ்- முஸ்லிம் கூட்­ட­ணி­களும் சஜித்­தோடு சேர்ந்து கொண்­டன. அதே கூட்­ட­ணிதான் இன்­னமும் தொடர்­கி­றது. இவர்­களின் தயவில் மலை­யகம் மற்றும் வடக்கு – கிழக்கில் பெரு­வா­ரி­யான வாக்­கு­களை அள்ள முடியும் என்­பது சஜித்தின் திட்டம். ரணி­லோடு ஒப்­பிடும் போது சஜித்­திற்கு சிங்­கள மாவட்­டங்­களில் வாக்கு வங்கி இருக்­கி­றது. வடக்கு–கிழக்குக்கு வெளியே தமிழ்–முஸ்­லிம்­களின் பர­வ­லான ஆத­ரவும் இருக்­கி­றது. இதெல்லாம் பலனைத் தருமா என்­ப­துதான் கேள்வி. சந்­தே­கமே இல்லை. ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸா­நா­யக்க தான் இம்­முறை பெரும்­பா­லன சிங்­கள மக்­களின் விருப்­பத்­திற்­கு­ரிய தேர்வு. முன்னர் ராஜ­பக்ச கம்­பெனி கோலோச்­சிய இலங்­கையின் தெற்கு மாவட்­டங்கள் உட்­பட வடக்கு – கிழக்கைத் தவிர ஏனைய மாவட்­டங்­களில் அநு­ரவின் கொடிதான் பறக்­கி­றது. கடந்த எழு­பத்­தாறு வருட காலமாய் மாறி மாறி ஆண்ட பாரம்­ப­ரியக் கட்­சிகள் மீது ஏற்­பட்டு இருக்கும் கார­மான விமர்­ச­னமும் 2022ம் ஆண்டு ஏற்­பட்ட மக்கள் புரட்­சி­யுமே பெரும்­பான்மை சமூ­கத்தின் அலை அநுர மீது திரும்பி இருக்கப் பிர­தான காரணம். சரி.என்­னதான் சிங்­களப் பிர­தே­சங்­களில் ஜே.வி.பி அதன் செல்­வாக்கை அதி­க­ரித்துக் கொண்­டாலும் வடக்கு – கிழக்கில் அதுவும் தமி­ழர்கள் மத்­தியில் இன்­னமும் தவழும் நிலை­யி­லேயே இருக்­கி­றது. மகிந்த ராஜ­பக்­சவுடன் தேனி­லவில் இருந்த காலப் போக்கில் ஜே.வி.பி, தேசிய இனப்­பி­ரச்சினை தொடர்­பாக பேணி வந்த கொள்­கைகள் இதற்குக் காரணமாய் இருக்கலாம். அல்லது ஜே.வி.பி இன் கொள்கைகள் பற்றிய போதிய தெளிவின்மையாக இருக்கலாம். இதேவேளை ஏனைய மாவட்டங்களைப் போலவே கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முன்னர் இருந்ததைவிட ஜே.வி.பி யின் செல்வாக்கு கணிசமாய் அதிகரித்து இருக்கிறது. ஜே.வி.பி இற்கு இத்தேர்தல் களத்தில் அமைந்திருக்கும் ஜாக்பாட் அதிர்ஷ்டம் என்னவென்றால் இது நாள்வரையான முக்கிய தேர்தல்களில் ஒன்றாய் இருந்த ரணிலும் சஜித்தும் பிரிந்திருப்பதுதான். அதுவும் வடக்கு மற்றும் கிழக்கில் வாக்குகள் ரணில் என்றும் சஜித் என்றும் சிதறும் போது ஜே.வி.பி மூன்றாம் இடத்திற்கு வந்தாலும் சேதாரம் ஒன்றுமில்லை. ஜே.வி.பி இன் வெற்றி என்பது வடக்கு–கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே சிங்கள வாக்குகளை எந்தளவுக்கு அள்ளும் என்பதிலேயே முழுமையாய் தங்கியிருக்கிறது. சரி ஜே.வி.பி யின் பிரதான பலவீனம் என்ன? வடக்கு கிழக்கில் சிறுபான்மை வாக்குகளைக் கவரப் பெரிய திட்டம் எதுவும் இன்றி இப்போதே வென்றுவிட்டதாய் நினைத்துக் கொண்டு அடுத்த கெபினட் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதுதான்.- Vidivelli https://www.vidivelli.lk/article/17687
  12. தமிழக_அரசியல் – நேற்று வெளியிடப்பட்ட அரசியல் கட்சிக்கொடி, ஸ்பெயின் நாட்டுக் கொடியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக புகார் அளிக்கபட்டது. தமிழக வெற்றிக் கழக இருப்பதாக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார். முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. https://madawalaenews.com/3015.html
  13. இப்ப‌டியெல்லாம் அழகிய பிரதமர்கள் இருக்கின்றார்களா?
  14. ஒரு தலித் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும் என்றும் ஆனால் எந்த காலத்திலும் ஒரு தலீத்தை முதலமைச்சர் ஆக முடியாது என்றும் திருமாவளவன் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற திருமாவளவனின் கருத்தை எதிர்க்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். https://tamil.webdunia.com/
  15. 9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஈராக் நாட்டின் அரசு அனுமதி அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டில் தற்போது பெண்களின் திருமண வயது 18 என்று உள்ள நிலையில் புதிய மசோதா அவர்களின் படி ஆண்களுக்கு 15 வயதிலும் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்துடன் ஒன்பது வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது சட்டமயமாக்கப்படுகிறது. பெண்களின் திருமண வயது 18 என்று இருந்தபோதிலும் ஏற்கனவே ஈராக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. தற்போது ஈராக் அரசாங்கமே பெண்களின் திருமண வயது 9 என அறிவித்ததால் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. https://tamil.webdunia.com/
  16. திரு­கோ­ண­மலை, குச்­ச­வெளி, இலந்­தைக்­குளம் பகு­தியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான வயல் காணி­களை அப்­ப­கு­தி­யி­லுள்ள விகா­ரையின் விகா­ரா­தி­பதி துப்­ப­ரவு செய்­வதால் அப்­ப­கு­தியில் பதற்ற நிலை எழுந்­துள்­ளது. இச் சம்­ப­வ­மா­னது 25.07.2024 அன்று இடம்­பெற்­றுள்­ளது. குச்­ச­வெளி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட இலந்­தைக்­குளம் 5ஆம் கட்­டைப்­ப­கு­தி­யி­லுள்ள பிச்­சமல் புரான ரஜ­மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி குச்­ச­வெ­ளியான் குளத்­துக்கு அருகே, முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான விவ­சாய நிலங்­களை ஜே.சி.பி இயந்­திரம் மூலம் துப்­பு­ரவு செய்ய முயற்­சித்த போது அங்கு பதற்ற நிலை தோன்­றி­யது. அப் பகு­திக்கு வருகை தந்த காணி உரி­மை­யா­ளர்கள் தமது காணி­களை பௌத்த பிக்கு தலை­மை­யி­லான குழு­வினர் ஆக்­கி­ர­மிப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­ய­தை­ய­டுத்து அங்கு பதற்­ற­மான நிலை தோற்றம் பெற்­றது. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட காணி உரி­மை­யா­ளர்கள் குச்­ச­வெளி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­துடன்; ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கும் அறி­வித்­துள்­ள­தாக குச்­ச­வெளி விவ­சாய சம்­மே­ள­னத்தின் தலைவர் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரி­வித்தார். இந்த விடயம் குச்­ச­வெளி பிர­தேச செய­லா­ளரின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, குறித்த காணி துப்­பு­ரவு நட­வ­டிக்கை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரி­வித்தார். இக் காணி­களின் வர­லாறு தொடர்பில் ஜே.எம்.ரகுமான் யூசுப் மேலும் குறிப்­பி­டு­கையில், “இலந்­தைக்­குளம் பகு­தியில் காலா­கா­ல­மாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்­தத்தின் கார­ண­மாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்­டிய காலப்­ப­கு­தி­களில் வெவ்­வேறு பிர­தே­சங்­களில் இடம்­பெ­யர்ந்து வாழ்ந்து வந்­தனர். இங்கு வாழ்ந்த மக்­க­ளுக்கு 1 ஏக்கர் குடி­யி­ருப்புக் காணியும் 2 ஏக்கர் வயல் நிலமும் சொந்­த­மா­க­வி­ருந்­தது. யுத்தம் நிறை­வுக்கு வந்த பின்னர் இப் பகு­தியில் மக்கள் குடி­யி­ருக்­கா­விட்­டாலும் தமது வயல் நிலங்­களில் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­தனர். இந் நிலையில் இப் பிர­தே­சத்­தி­லுள்ள பௌத்த விகா­ரையில் உள்ள பிக்கு, ஹம்­பாந்­தோட்டை வீர­கெட்­டிய பகு­தியைச் சேர்ந்­தவர். இவர் வீர­கெட்­டிய பகு­தி­யி­லுள்ள சிங்­க­ள­வர்­களை இங்கு அழைத்து வந்து எமது காணி­களை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து, துப்­பு­ரவு செய்து விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டவும் அங்கு பௌத்த விகாரை ஒன்றை அமைக்­கவும் முயற்­சித்து வரு­கிறார். இப் பகு­தியில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­வ­தற்­கான சதித்­திட்­ட­மா­கவே இதனைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது. இப் பகு­தியில் மக்கள் வாழ்ந்­த­தற்­கான பிறப்பு அத்­தாட்சி பத்­திரம், இறப்பு அத்­தாட்சிப் பத்­திரம், காணி ஆவ­ணங்கள் உட்­பட உடைந்த பாட­சாலைக் கட்­டடம், அரச கட்­ட­டங்­களும் இன்னும் ஆதா­ரங்­க­ளாக உள்­ளன. 1968 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்ட கிணறு ஒன்றும் அதே இடத்தில் இன்­னமும் உள்­ளது. அப்­போது கட்­டப்­பட்ட வயல் வரம்­பு­களும் இன்னும் அழி­யாமல் காணப்­ப­டு­கின்­றது. இப் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 300 ஏக்கர் காணி உள்­ளது. அதில் 22 ஏக்கர் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள நிலத்­தையே இப்­போது பௌத்த பிக்கு ஆக்­கி­ர­மிக்க முனை­கிறார். முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு கடந்த காலங்களில் உடந்தையாகவிருந்தார். எனினும் வன இலாகா திணைக்களத்தின் எதிர்ப்பு காரணமாக அவரது காலப்பகுதியில் இக் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கை வெற்றி பெறவில்லை. இந்நிலையில்தான் சில வருடங்கள் கழிந்து மீண்டும் இந்த ஆக்கிரமிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.- Vidivelli
  17. (எம் ஆர்.எம்.வசீம், இரா­ஜ­துரை ஹஷான்) கிழக்கு மாகா­ணத்தில் அப்­பாவி மக்­களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்து இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­றுள்ள நிதி நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளரை நாட்­டுக்கு கொண்டு வர முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முன்­வைத்­துள்ள கேள்­விகள் இன்று வரை இழு­பறி நிலையில் உள்­ளது. ஒன்று பதி­ல­ளி­யுங்கள், இல்­லையேல் வாய்­மூல விடைக்­கான வினாக்கள் முறை­மையை இரத்து செய்­யுங்கள் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமர்வின் போது மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். சம்­மாந்­துறை, கல்­முனை,பொத்­துவில், ஏறாவூர் மற்றும் மரு­த­முனை ஆகிய பகு­தி­களில் 2014.02.05 ஆம் திகதி முதல் ப்ரிவெல்த் க்ளோபல் பிரைவட் லிமிடெட் எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திச் செல்­லப்­பட்­டதா,? அந்­நி­று­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக பணி­யாற்­றிய அஹமட் செரீம் முஹம்­மது சிஹாப் மற்றும் பாத்­திமா பர்­ஸானா மார்கார் ஆகியோர் சுமார் 1400 பேரின் 170 கோடி ரூபா­வுக்கும் மேற்­பட்ட நிதியை மோசடி செய்­துள்­ளார்கள் என்­ப­தையும், மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட பணி­யா­ளரும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் இன்று வரை இந்­தி­யாவில் தலை­ம­றை­வாகி இருப்­ப­தையும் இது தொடர்பில் கல்­முனை மற்றும் சம்­மாந்­துறை பொலிஸ் நிலை­யங்­களில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­தையும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் அறி­வாரா? இவர்­களை கைது செய்து இலங்­கைக்கு அழைத்து வர எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் என்­ன­வென்­ப­தையும் அமைச்சர் சபைக்கு அறி­விப்­பாரா? என கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். இந்த கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் சார்பில் ஆளுங்­கட்­சியின் பிர­தம கொற­டா­வான பிர­சன்ன ரண­துங்க 3 மாதங்கள் கால­ அவ­காசம் கோரினார். இதன்­போது எழுந்து உரை­யாற்­றிய தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம், இந்த கேள்­வி­களை 2020 செப்­டெம்பர் மாதம் கேட்டேன். நடுத்­தர மக்­களின் 170 கோடி ரூபா மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது.இந்த நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­ற­தாக குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. பாதிக்­கப்­பட்ட மக்கள் எம்­மிடம் முறை­யிட்டு, பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக பதிலை எதிர்­பார்த்­துள்­ளார்கள். 2020 முதல் இன்று வரை மூன்று தட­வைகள் இந்த கேள்­வி­களை தொடர்ந்து சமர்ப்­பித்­துள்ளேன்.ஆனால் இது­வரை பதில் கிடைக்­க­வில்லை.மக்கள் மத்­தியில் செல்லும் போது பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எம்­மிடம் கேள்வி கேட்­கி­றார்கள்.தொடர்ந்து தாம­தப்­ப­டுத்­து­வதால் நாங்­களும் இதில் தொடர்­பு­பட்­டுள்ளோம் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சந்­தே­கப்­ப­டு­வார்கள். முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் பற்றி கேட்கும் போது அதற்கு பதி­ல­ளிக்­காமல் காலம் தாழ்த்­து­வது முறை­யற்­றது. ஆகவே சபா­நா­யகர் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட வேண்டும் என்றார். இதன்­போது சபைக்கு தலைமை தாங்­கிய சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன, ‘நீங்கள் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பா­ட­ளித்­தீர்­களா’ என்று கேள்­வி­யெ­ழுப்­பினார். தொடர்ந்து உரை­யாற்­றிய சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம், வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சின் ஊடாக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு இவ்­வி­ட­யங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இருப்­பினும் இது­வரை முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கைகள் ஏதும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இலங்கை பொலிஸார் இவ்­வி­ட­யத்தை நீதி­மன்­றத்­துக்கு அறி­வித்து பிடி­யாணை உத்­த­ரவை பெற்­றுக்­கொண்டால் அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கலாம் என்று இந்­திய அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.ஆகவே இவ்­வி­ட­யத்தில் உட­ன­டி­யாக தீர்வை பெற்­றுக்­கொ­டுங்கள் என்றார். இதன்­போது எழுந்து உரை­யாற்­றிய சபை முதல்வர் சுசில் பிரே­ம­ஜ­யந்த, இது பாரிய நிதி மோச­டி­யாகும். 170 கோடி ரூபா மோசடி செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ஆகவே இந்த விடயம் குறித்து முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களின் முன்­னேற்­றத்­தன்மை தொடர்பில் விட­ய­தா­னத்­துக்கு பொறுப்­பான அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி இரு நாட்களுக்குள் அறிவிக்கிறேன் என்றார். – Vidivelli
  18. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்துமாறு தொழில் வாண்மையாளர் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் அர­சாங்க அதி­கா­ரி­க­ளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்­கப்­பட்டு உரி­மை­களும் மறுக்­கப்­பட்டு வரு­வ­தாக தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றியம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளது. அத்­துடன், இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வழங்கும் செயற்­திட்­டத்­தின்­போது வடக்கு, கிழக்­கி­லுள்ள முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தும் கவனம் செலுத்­து­மாறும் அவ்­வ­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் பிர­மு­கர்­களை மட்­டக்­க­ளப்பு “ஈஸ்ட் லகூன்” உல்­லாச விடு­தியில் சந்­தித்தார். இதன்போது மட்­டக்­க­ளப்பு மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் தொடர்பில் கருத்துக்களை தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றிய தவி­சாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் அவ் அமைப்பின் உபதலைவர் ஜாபீர் நளீமி ஆகியோர் பல்வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தனர். முதலில் கருத்து தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் ஒன்­றி­யத்தின் தவி­சாளர் முபீன் அண்­மையில் வட­மா­கா­ணத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி ஆகிய நீங்கள் 13 ஆம் திருத்­தத்தை பொலிஸ் அதி­காரம் இன்றி நடை­மு­றைப்­ப­டுத்தப் போவ­தாக கூறி இருந்­தீர்கள். உண்­மையில் இலங்­கையின் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­பட வேண்­டி­யதை முஸ்லிம் சமூகம் வர­வேற்­கி­றது. ஆனால் நான் பின்னால் சொல்லப் போகின்ற பல்­வேறு கார­ணங்­க­ளினால் இத்­த­கைய தீர்­வுகள் வழங்­கப்­ப­டு­வது முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்­தாக முடிந்து விடுமா? என்று அச்சம் முஸ்­லிம்­க­ளுக்­குள்ளே தொட­ராக இருந்து வரு­கின்­றது. காரணம் இங்கே பத­வியில் இருக்­கின்ற தமிழ் அதி­கா­ரிகள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் கிழக்கு மாகா­ணத்தில், வட­மா­கா­ணத்தில் முஸ்­லிம்­களை நசுக்கும் போக்­கி­னையே கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். தற்­போது அர­சியல் யாப்பின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள அதி­காரப் பர­வ­லாக்க நடை­மு­றை­களின் ஊடாக அதா­வது பிர­தேச செய­லகம், கச்­சேரி முறை­மை­களின் ஊடாக அவ்வதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­தியே முஸ்­லிம்­களின் உரி­மை­களை தொடர்ந்­து­தேச்­சி­யாக இந்த தமிழ் அதி­கா­ரிகள் மறுத்து வரு­கின்­றனர். எனவே இவர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை கொடுக்­கின்றபோது அவ் அதி­கா­ரங்­களைக் கொண்டு மேலும் முஸ்­லிம்­களை அவர்கள் நசுக்­கு­வார்கள் என்ற அச்சம் முஸ்­லிம்­களை பீடித்­துள்­ளது. என­வேதான் 13வது திருத்தம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு என்ன என்ற கேள்­வியை அதி­மே­தகு ஜனா­தி­ப­தி­யா­கிய உங்­களைப் பார்த்து நாங்கள் கேட்­கின்றோம்? இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை நீங்கள் வழங்க வேண்டும். ஆனால் அத்­தீர்வு வழங்­கு­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய பொருத்­த­மான தீர்­வையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று உங்­களை மிகத் தாழ்­மை­யாக கேட்­டுக்­கொள்­கிறோம். அடுத்த விட­ய­மாக தங்கள் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­வது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் பாரிய நிலப்­பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­கின்­றனர். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 27% வாழ்­கின்ற முஸ்­லிம்கள் வெறு­மனே 46 சதுர கிலோ­மீட்டர் காணி­யையே பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது. மட்­டக்­க­ளப்­பிலே 2854 சதுர கிலோ­மீட்டர் மொத்த காணியில் தமிழ் பிர­தே­சத்தில் 2808 சதுர கிலோ­மீட்டர் அவர்­க­ளுக்கு உரி­ய­தாக காணப்­பட நான்கு பிர­தேச செய­ல­கங்­களைக் கொண்ட முஸ்­லிம்கள் வெறு­மனே 46 சதுர கிலோ மீற்றர் காணி­க­ளையே பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது. இது மொத்த காணி அளவில் 1.5 வீதம் ஆகும். 2023 ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்ட புள்ளி விவர அறிக்­கை­யின்­படி முஸ்­லிம்­களின் விகி­தா­சாரம் 27% ஆகும் எனவே, 27 வீதத்­திற்கு மொத்­த­மாக முஸ்­லிம்­க­ளுக்கு 770 சதுர கிலோ­மீட்டர் காணி உரித்­து­டை­யது ஆனால் மட்­டக்­க­ளப்பு கச்­சேரி திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்­களின் காணி உரி­மை­களை மறுத்து வெறும் 46 சதுர கிலோ மீட்­ட­ருக்குள் அவர்­களை முடக்­கி­யுள்­ளது. கடந்த உள்­நாட்டு யுத்­தத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் 33 கிரா­மங்­களில் இருந்து பல­வந்­த­மாக துரத்தி அடிக்­கப்­பட்­டனர். அவ்­வாறு வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே அமைந்­துள்ள காத்­தான்­குடி, ஏறாவூர், கல்­குடா போன்ற பிர­தே­சங்­களில் குடி­யே­றினர். இதனால் ஏற்­க­னவே அங்கு நில­விய காணி­தட்­டுப்­பாடு மேலும் பாரிய தட்­டுப்­பாட்டை அம் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யது. அத்­தோடு 1999 ஆம் ஆண்டு அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட பனம்பல ஆணைக்குழு­விற்கு புதிய பிர­தேச செய­லக கோரிக்­கையை முன்­வைத்த தமிழ் தரப்­பினர் தங்­க­ளுக்­கான ஒரு புதிய தமிழ் பிர­தேச செய­ல­க­மாக கோரளை தெற்கு கிரான் பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்­கு­கின்ற போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு காணி இருந்த ஒரே­ ஒரு பிர­தே­ச­மான கோரளை மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தில் இருந்து ஐந்து கிரா­மங்­களை திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் இணைத்து தங்­க­ளுக்­கான பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்கிக் கொண்­டனர். ஏற்­க­னவே பல­மான காணி தட்­டுப்­பாட்டை எதிர்­நோக்­கிய முஸ்­லிம்­க­ளுக்கு இத்­த­கைய திட்­ட­மிட்ட செயல் அவர்­களின் காணியை உரி­மையை மேலும் மிகப்­பெ­ரிய சிக்­க­லுக்கு உள்­ளா­கி­யது. எனவே மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்­களின் விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப 770 சதுர கிலோ­மீட்டர் காணியை நீங்கள் உங்கள் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கிறோம். இலங்­கையில் புதிய பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக 1999 ஆம் ஆண்டு பணம்­ப­லன ஆணை குழு அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்­டது, இவ்­வா­ணைக்­குழு இலங்­கையின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் செய்து ஆறு பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­கி­யது. இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­களில் இரண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உரு­வாக்­கப்­பட்­டது. அதில் ஒன்று கோர­ளை­ப்பற்று மத்தி பிர­தேச செய­லகம் ஆகும். இக்­கோ­ர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் முஸ்­லிம்­க­ளுக்கு என உரு­வாக்­கப்­பட்­ட­துடன் அதே­வேளை கோர­ளைப்­பற்று தெற்கு கிரான் பிர­தேச செய­லகம் தமி­ழர்­க­ளுக்­கான உரு­வாக்­கப்­பட்­டது. இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­களில் கிரான் பிர­தேச செய­ல­கத்தை உத்­தி­யோகப்பற்­றற்ற முறையில் 620 சதுர கிலோ­மீட்டர் காணியை வழங்கி அப்­பி­ர­தேச செய­ல­கத்தை இயங்­கு­வ­தற்கு மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லகம் அனு­மதி வழங்­கி­யது. அதே வேளை முஸ்­லிம்­க­ளுக்கு என உரு­வாக்­கப்­பட்ட அதா­வது 240 சதுர கிலோ­மீட்டர் காணி பரப்பைக் கொண்ட கோர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்தை அதற்­கு­ரிய காணி அள­வீட்­டினை அள­வீடு செய்­யாமல் மட்­டக்­க­ளப்பு கச்­சேரி மறுத்து வரு­வ­துடன் இன்று வரை சுமார் 23 வரு­டங்கள் கடந்தும் இக் கோரளை மத்தி முஸ்லிம் பிர­தேச செய­லகம் வெறும் ஆறு சதுர கிலோ­மீட்­ட­ருடன் இயங்கி வரு­கி­றது. அத்­துடன், 2000 ஆண்டு இச்­செ­ய­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தையும் இது­வரை அமுல்­ப­டுத்­தாமல் இழுத்­த­டித்து முஸ்­லிம்­களின் காணி உரி­மையை இந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லகம் மறுத்­து­வ­ரு­கி­றது. இது­வ­ரையில் 9 அர­சாங்க அதி­பர்கள் அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தை மறுத்து அர­சாங்­கத்தின் ஆணைக் குழுவின் சிபா­ரி­சையும் மறுத்து முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் செய்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இது தொடர்பில் அர­சாங்கம் இது­வரை உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், ஜனா­தி­பதி, பிர­தமர் என பலரை சந்­தித்தும் இது­வரை இந்த அநி­யா­யத்­துக்கு முடிவு கிடைக்­க­வில்லை. எனவே உங்­க­ளு­டைய காலத்­தி­லா­வது இந்த பிரச்­சினையை தீர்த்து வையுங்கள் என்றார். அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, இனப்­பி­ரச்­சினைத் தீர்வு தொடர்பில் சக­ல­ரு­டனும் கலந்­து­ரை­யாடி தீர்வை வழங்க எதிர்­பார்க்­கிறோம். ஏனை­ய­ வி­வ­கா­ரங்கள் தொடர்பில் தேர்தல் முடிந்­ததன் பின்னால் மீண்டும் வருகை தந்து எல்­லோ­ரி­டமும் கலந்­து­ரை­யாடி இதற்­கான தீர்­வு­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றி­யத்தின் உப தலை­வ­ரான அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி, காத்­தான்­கு­டியின் எல்லை பிரச்­சி­னைகள் மிக நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கின்­றன. இவ் எல்­லைகள் தொடர்பில் தெளி­வான மூன்று வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் இருந்தும் இரண்டு பக்க எல்­லை­க­ளிலும் முஸ்­லிம்­களின் காணி அடாத்­தாக ஏனைய பிர­தேச செய­ல­கங்­களால் கைப்­பற்­றப்­பட்டு நிர்­வாகம் செய்­யப்­ப­டு­கி­றது. பாரிய காணித்­தட்­டுப்­பாட்டை எதிர்நோக்கும் காத்­தான்­கு­டிக்கு இது மிகப்­பெ­ரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. எனவே இவ் எல்லை பிரச்­சினையை தீர்த்துத் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம். மேலும் காத்­தான்­குடி பிர­தேச சபை நகர சபை­யாக தரம் உயர்த்­தப்­பட்ட வேளையில் காத்­தான்­கு­டியின் காணிப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் அமுல்­ப­டுத்­தப்­பட்ட “உரு­மய” வேலைத் திட்­டத்தில் காத்­தான்­கு­டியில் பாரிய காணிப் பிரச்­சி­னையை எதிர்­நோக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை. எனவே புதிய காத்­தான்­கு­டியை ஒரு பிர­தேச சபை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­ப­தியை கேட்டுக் கொள்­வ­தோடு அப்­பி­ர­தேச சபை­யுடன் காத்­தான்­கு­டிக்கு நெருக்­க­மாக உள்ள முஸ்லிம் கிரா­மங்­க­ளான பூனொச்­சி­முனை, மஞ்சந் தொடுவாய், பால­முனை போன்ற கிரா­மங்­க­ளையும் இணைத்து புதிய காத்­தான்­குடி பிர­தேச சபை ஒன்றை உரு­வாக்கித் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம் என்றார்.- Vidivelli
  19. எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள், பிரிட்டனின் நிலவரம் பற்றியும் பேச வேண்டும் இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிறவெறி குறித்து கவனம் செலுத்த வேண்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியாவில் வடக்கு பிரதேசத்தில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதனால் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன்,பலர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு முஸ்லிம் இளைஞர். இதில் பலியான சிறுமிகள் ருவாண்டா நாட்டில் இருந்து வருகை தந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று ஒருசில ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னர் பிரிட்டனின் புறநகர் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.தெற்கு பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க முயற்சித்துள்ளார்கள்.பாதுகாப்பு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பிரிட்டன் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே எமது பாராளுமன்றம் செயற்படுகிறது.இலங்கையின் விவகாரங்கள் பற்றி பிரிட்டன் பாராளுமன்றத்தில் அதிகளவில் பேசப்படும்,தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்.எனவே இலங்கைக்கு ஜனநாயகம் பற்றி பேசும் பிரிட்டனில் 2011 ஆம் ஆண்டும் நிறவெறி செயற்பாடுகள் மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றன.இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிலைவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.jaffnamuslim.com/2024/08/blog-post_921.html
  20. 7 தமிழ் கட்சிகளுடைய வேட்பாளராக, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய பா.அரியநேத்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு | Tamil Presidential Candidate மேலும், பொதுவேட்பாளராக களமிறங்குவதற்காக தவராசா மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த அரிநேந்திரன் முலிம்களுக்கு எதிராக இனவாதப் பேச்சுக்களை பேசி வந்தமை குறிப்பிடத்தக்கது https://www.jaffnamuslim.com/2024/08/7.html
  21. காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 34 வருடங்களுக்கு முன், இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இன்று 03-08-2024 நினைவு கூறப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும்ஆ பள்ளிவாசலில், இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும். அவர்களுக்காக பிரார்த்திப்போம். https://www.jaffnamuslim.com/2024/08/34.html கிழக்கு முஸ்லிம்களின் இழப்புகளுக்கு நீதி வேண்டும் காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இஷா தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் விடு­தலைப் புலி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டு இன்­றுடன் சரி­யாக 33 வரு­டங்­க­ளா­கின்­றன. இன்­றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். இதனை நினைவு கூரும் முக­மாக இன்று காத்­தான்­கு­டியில் பல நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட இயக்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்­லிம்கள் சந்­தித்த இழப்­பு­களின் உச்­ச­பட்­சமே இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லை­யாகும். கிழக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்ற வேண்டும் என்­பதே அன்று புலி­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இதன் கார­ண­மாக காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஏறாவூர் படு­கொலை, அளிஞ்­சிப்­பொத்­தானை படு­கொலை, குருக்­கள்­மடம் கடத்­தலும் படு­கொ­லையும்,பல்­வேறு குணடுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அவ்­வப்­போ­தான ஆட்­க­டத்­தல்கள், கல்­வி­மான்­களை இலக்கு வைத்த படு­கொ­லைகள் என அக் காலப்­ப­கு­தியில் ஆயுதம் தாங்­கிய குழுக்­களால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான வன்­மு­றை­களால் சுமார் 7000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி பல்­லா­யிரக் கணக்­கான ஏக்கர் நிலங்­களை முஸ்­லிம்கள் இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக இன்று கிழக்கு மாகா­ணத்தில் மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் மிக நெருக்­க­மாக வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது பல்­வேறு சுகா­தார மற்றும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளது. இந்த நாட்டை பிரி­வி­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் பாரிய விலையைக் கொடுத்­துள்­ளனர். வடக்கு முஸ்­லிம்கள் தமது தாய­கத்­தி­லி­ருந்து எவ்­வாறு விரட்­டப்­பட்­டதன் மூலம் தமது வாழ்­வையே தொலைத்­தார்­களோ அதே­போன்று கிழக்கு முஸ்­லிம்­களும் மேற்­கு­றிப்­பிட்ட வன்­மு­றை­களால் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளனர். இருப்­பினும் இவற்­றுக்கு இது­வரை குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான எந்­த­வித நஷ்­ட­யீ­டு­க­ளையோ நீதி­யையோ அவர்கள் பெற­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். கடந்த காலங்­களில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது முஸ்­லிம்­களைத் தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறும் இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும் கோரிக்­கை­வி­டுத்தும் அவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்கள் சார்பில் பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவற்­றுக்கு எவரும் உரிய பதி­ல­ளிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட கடந்த காலங்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் அவ­லங்­களை வைத்தே அர­சியல் செய்து அதி­கா­ரங்­க­ளுக்கு வந்­தனர். முஸ்லிம் தனித்­துவக் கட்­சிகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் இந்த இழப்­பு­களை சந்­தைப்­ப­டுத்­தியும் அவற்­றுக்கு தீர்வு தரு­வ­தா­கவும் கூறியே அர­சியல் செய்­தன. இன்றும் செய்து வரு­கின்­றன. எனினும் மக்­க­ளுக்கு எந்­த­வித நலனும் கிடைத்­த­தாக இல்லை. அண்­மைக்­கா­ல­மாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் எனத் தெரி­வித்து வரு­கிறார். அண்­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் குழு­வு­டனும் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இருப்­பினும் வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களின் கடந்த கால இழப்­புகள் தொடர்பில் எந்­த­வித கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் முன்வைத்த பிரச்சினைகளில்இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தரப்பே இதனை ஒரு பிரச்­சி­னை­யாக கருதி ஜனாதிபதியிடம் பேசாத போது இவ்விடயத்துக்கு அவர் முக்கியத்துமவளிப்பார் என எதிர்பார்க்க முடியாது. எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும். யுத்த காலத்தில் முஸ்லிம் தரப்பின் இழப்புகள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டனவோ அதேபோன்று தற்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக 33 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் இன்றைய ஷுஹதாக்கள் தினத்தில் அனைவரும் அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனைப் பேசுபொருளாக்க வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/15564
  22. லங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது. "மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன. மூதூர் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதித்தான் எனவும், அதுவொரு தற்செயல் நிகழ்ச்சியெனவும் வாதிடுபவர்களும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதில் எந்த தவறும் இல்லையென வாதிடுபவர்களும் இன்னமும் உள்ளனர். மேற்படி கருத்துக் கொண்டவர்களின் நிலைப்பாடுகளை விட, மனிதர்களை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, ஆதிக்கத் தரப்புகளின் மீறல்களை துணிந்து கண்டிக்கும், அவற்றை அம்பலப்படுத்தும் குரல்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணமிது! அந்தக் குரல்களின் உறுதியிலும் தீர்க்கத்திலும்தான் உண்மையான நிம்மதியும் மனித வாழ்விற்கான நம்பிக்கைகளும் தங்கி உள்ளன. வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை வடக்கு கிழக்கு தாயகத்திலிருந்து விரட்டியடிப்பதும் அவர்களைக் கொன்றொழிப்பதுமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தமும் செயற்பாடுமாகும், இதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை. 1990 இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து புலிகளால் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து ஏற்பட்ட அமைதிச் சூழலிலும் அம் மக்களால் வட மாகாணத்திற்கு சென்று வாழ முடியவில்லை, திரும்பிச் செல்ல வடமாகாண முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தி வந்துள்ளன. 1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும். 1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான இராணுவ நெருக்குவாரங்களைத் தொடுத்து அவர்களை வெளியேற்ற தெண்டித்தனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் இராணுவ முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இறுதியில் புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் பெரிதும் தோல்வியையே சந்தித்தனர். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியை புலிகளினால் சாத்தியப்படுத்த முடியாது போனாலுங்கூட, முஸ்லிம்கள் தொடர்பில் தமது சித்தாந்தத்தையோ, செயற்பாடுகளையோ கைவிடவில்லை. மிக மோசமான இராணுவ, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை காலத்திற்கு காலமும் தருணம் கிடைக்கும் பொழுதுகளிலும் புலித் தலைமை நிறைவேற்றியே வந்திருக்கின்றன. இந்த இனச் சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஒரு விளைவாகவே, கடந்த ஆகஸ்ட் 2006 மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றமும் நிகழ்ந்தது. உலகளவில் இன்று மாறிவரும் அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, புலிகள் தந்திரோபாய அடிப்படையில் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை திட்டமிட்டு நடத்தினர். இருந்தும், மூதூர் மக்களின் தாயகம் திரும்பும் உறுதியான முடிவும், வாழ்வும், மீண்டும் மூதூர் மக்களை தமது தாயக மண்ணிற்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. கிளாந்திமுனை மலையடிவாரக் கூட்டுப் படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் மரித்துப்போக வாய்ப்பிருந்தும், அச் சூழலின் புற நிலைகளின் காரணமாக பெருமளவு உயிர்ப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கிளாந்தி முனை மலையடிவாரத்தை மூதூர் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைக்கான கொலைக்களமாகவே பார்க்கின்றனர். அந்த நாளின் அனுபவங்களை அச்சத்துடன் இன்றும் இன்னும் நினைவுகூர்கின்றனர் வயது, பால் வேறுபாடின்றி.... நான்கு தினங்கள் நீடித்த மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின்போது 54 பேர் மரணமடைந்தும் 1176 பேர் காயமடைந்துமுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்திழப்புகளும், பெருமளவு மனச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன. மூதூர் முஸ்லிம்களை வெளியேற்றுவதுதான் புலிகளின் நீண்டகாலத் திட்டமென்பதும், பெருமளவு கூட்டுப் படுகொலையை நடாத்துவதே புலிகளின் நோக்கமாக விருந்தது என்பதற்குமான சாட்சியம், அந்த துயர வாழ்வை நேரடியாக எதிர்கொண்ட முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் உயிர்களுமாகும். இதற்கு வேறு சாட்சியங்கள் தேடிப் போகவேண்டிய எந்த அவசியமும் இல்லை. முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை, வெளி உலகுக்கான பிரச்சார ரீதியான பொய்களைக் கொண்டதாகவும் அகரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் சித்தாந்த விரோதமிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளதை நாம் அறிவோம். தாகத்திற்கு தண்ணீர் வழங்கும் புலிகளின் பிரச்சாரத் தந்திரத்தை மூதூர் வெளியேற்றத்தின் போது புலிகள் கடைப்பிடித்தனர். இடம்பெயர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு புலி உறுப்பினர்கள் "தாகசாந்தி" வழங்கியதை புலி ஊடகங்களும், புலி ஆதரவாளர்களும் பெரிய விடயமாக பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தனர்... தமது உண்மை முகத்தை மறைக்க திட்டமிட்ட பிரச்சாரத்தில் செயற்கையாக புலிகள் ஈடுபட்டனர். புலிகளின் இந்தப் பிரச்சாரங்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும், புலிகளின் முஸ்லிம் விரோதத்தை நன்கு அறிந்தவர்களிடமும் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை, ஏனெனில் இவர்களுக்குத் தெரியும் புலிகளின் உண்மை முகம்! வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதோ, காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலைகளின் போதோ... அந்தச் சூழலை ஆவணமாக்கும் உடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது பெரும் இழப்பே. அந்த நிகழ்வு மூதூர் வெளியேற்றத்தின் போதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறையின் பால் இச்சிறு தொகுப்பு வெளியிடப்படுகிறது. இச்சிறு தொகுப்பில் சொல்லப்பட்டவைகள், மூதூர் மக்கள் அனுபவித்த மிகப்பெரும் துயரின் ஒரு சிறு பக்கமேயாகும்! இச்சிறு தொகுப்பின் கதை சொல்லி, 53 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியராகும்... தனது அனுபவங்களை அவரது வார்த்தையில் இங்கு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வெளியேற்றத்தின்போது தான் அனுபவித்ததையும் கண்டதையுமே எந்த மிகையுமின்றி தெரியப்படுத்தி உள்ளார். எமது இந்த முயற்சிக்கு தனது அனுபவத்தை வழங்கிய அவருக்கு எமது நன்றிகள். கந்தளாய்க்கு வந்து சேர்ந்த மூதூர், தோப்பூர் முஸ்லிம்களை இலங்கை அரசு நடாத்திய விதமும், அவர்கள் அகதிவாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கெதிரான கந்தளாய் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டிய, இந்த வெளியேற்றத்துடன் தொடர்புபட்ட முக்கியத்துவமான தொடர் நிகழ்வுகளாகும்.. அந்த அனுபவங்களையும் எதிர்காலத்தில் ஒரு சிறு ஆவணமாக பதிவு செய்யவேயுள்ளோம்! https://tamilcircle.info/ 006.08.01ஆம் திகதி மூதூர், புலிப் பயங்கரவாதிகளினால் முற்றுகையிடப்படுகிறது. முற்றுகையின் விளைவாக ஏற்பட்ட யுத்த களத்தில் அப்பாவி பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்: மரணமானோர் - 54 படுகாயமடைந்தோர் - 196 காணாமற்போனோர் - 05 மனநிலை பாதிக்கப்பட்டோர் - 24 பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் - 1425 முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகள் - 286 மக்களில் 99% மானோரின் வீடுகளிலிருந்த சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டது. வயல்நிலங்கள், கால்நடைகள், மீன்பிடி, விவசாயம், வியாபாரத்தளங்கள் என அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டன. 2006.08.04 ஆம் திகதி யுத்தத்தின் கொடூரத்தை தாங்க முடியாது மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்தார்கள் சுமார் 1 மாதகாலம் அகதி வாழ்வை அனுபவித்த மூதூர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பி சொந்த மண்ணில் குடியேறினார்கள். அப்பாவி மக்களை அழித்து அகதிகளாக்க நினைத்தோர் தடயமின்றி மறைந்து போயினர். - அபு அரிய்யா - https://www.jaffnamuslim.com/2024/08/18.html
  23. ஐந்து பெண்களை திருமணம் செய்த நபரொருவர், 49 பெண்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால். 34 வயதான இவர், தான் ஒரு பொலிஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சமாலால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள், காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி சமாலை கைதுசெய்தனர். குறிப்பாக, சமாலை கைதுசெ ய்ய பொலிஸார், ஒரு பெண் அதிகாரியை பயன்படுத்தி பொறி வைத்தனர். அந்த பெண் அதிகாரியை திருமணம் தொடர்பாக சமால் சந்திக்க வந்தபோது அவரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட சமாலிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை திருமண தளங்கள் மூலம் குறிவைத்து தான் ஒரு பொலிஸ் அதிகாரி எனக்கூறி சமால் அவர்களிடம் பேசியும் சந்தித்தும் வந்துள்ளார். பின்னர், திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை கட்டாயப்படுத்தி கார் மற்றும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. சமாலால் பாதிக்கப்பட்ட பெண், முதலில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று ரூ.8.15 லட்சம் மதிப்பிலான காரை வாங்கியுள்ளார். மேலும் தொழில் தொடங்க ரூ.36 லட்சம் கொடுத்துள்ளார். மற்றொரு பெண், வங்கியில் கடன் வாங்கி ரூ.8.60 லட்சம் பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும் சமாலுக்கு கொடுத்துள்ளார். இந்த பணத்தின் மூலம் சமால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, பணத்தை திரும்ப கேட்டபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்துள்ளார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், அவர் மேலும் 49 பெண்களுடன் மேட்ரிமோனியல் தளத்தில் சாட்டிங்கில் இருப்பது பொலிஸாருக்கு தெரிய வந்தது. அவரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், ரூ.2.10 லட்சம் ரொக்கம், கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் திருமணம் செய்துகொண்டதற்கான இரண்டு ஒப்பந்த சான்றிதழ்களை பொலிஸார் கைப்பற்றினர். சமலின் மூன்று வங்கிக் கணக்குகளையும் பொலிஸார் முடக்கினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது https://madawalaenews.com/1780.html
  24. எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார். இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார். குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். முதியவர் உயிரிழந்ததையடுத்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட போது திருமணம் குறித்து அவர் கேட்டுக்கொண்டே இருந்ததது மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டதால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். https://madawalaenews.com/1797.html
  25. குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குழந்தையின் தாயார், " குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது https://seithy.com/breifNews.php?newsID=320990&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.