Everything posted by colomban
-
முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது !
Less than a minute wp-content/uploads/2024/11/img_6488-1-780x976.jpg.webp முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது ! ஆனால் இங்கே பிரபாகரனின் புகைப்படத்தையும் கொடியையும் வைத்து நினைவுகூர்கின்றனர் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் “ சிவாஜிலிங்கம் உங்களுக்கு ஒரு போதும் இந்த நாட்டை பிடிக்கவும் முடியாது பிடிக்கவும் விடமாட்டோம்” என கூறினார். https://madawalaenews.com/9360.html
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பள்ளிவாசல் திறந்துவைப்பு
கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கொழும்பு – அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையில் ஜும்மா பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் (மதனி) அவர்கள் கலந்து திறந்து வைத்தார். மேலும் கெளரவ அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்களும் அனைத்து பீட பீடாதிபதிகளும் மூவின மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நான்கு மதத்தினருக்கும் சரிசமமாக தலா 2 ஏக்கர் காணி, அவரவர் மத ஸ்தலங்களை அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்கள் ஒதுக்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்போது 4 மத ஸ்தலங்களும் அமைக்கப்பட்டு மத நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. *கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்* https://lankasri.com/srilanka அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும் அந்த வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்கையும் தேடி வரும் பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும் பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும் பள்ளி செல்ல மனமில்லையோ படைத்தவன் நினைவில்லையோ பள்ளி செல்ல மனமில்லையோ படைத்தவன் நினைவில்லையோ யாழில் தக்பீர் முழங்கட்டும், பாங்கோசை கேட்கட்டும்
-
திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !
நூருல் ஹுதா உமர்- நாடு யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பலவற்றிலும் சிக்கித் தவித்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்க முஸ்லிம் அமைச்சர்களின் வகிபாகம் அதிகமாக இருந்துள்ளதை நாம் அறிவோம். இப்படியான நிலையில் அமைச்சரவைக்குள் முஸ்லிங்கள் உள்வாங்கப்பட்டமைக்கு காரணமாக முஸ்லிம் எம்.பிக்கள் அனுபவமற்ற தன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கூறும் காரணங்கள் அவர்களின் வேட்பாளர்கள் அவர்களே குறைத்து எடை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து அவர்கள் விடுபட்டு திறமையான பலரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார். இன்று ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி அவர்களுக்கு வாக்களிக்காத ஏனைய கட்சி ஆதரவாளர்களுக்கும் இருந்தது. அவர்களது அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து வீணான செலவுகள் கட்டுப்படுத்துவதில் அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மக்கள் மத்தியில் அவர்களை பற்றி நம்பிக்கையை கொண்டு வந்துள்ளதுடன் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய உரிமையை வழங்க மறுத்ததனூடாக முஸ்லிம் சமூகத்தின் அதிருப்தியையும் அவர்கள் எதிர் கொண்டுள்ளார்கள். நாங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் நாட்டுக்கு நன்மையான வேலைத்திட்டங்களையும், முன்னெடுப்புக்களையும் ஆதரிக்கிறோம். உதாரணமாக குறைந்த செலவில் தேர்தல் நடத்தியது, வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தலை நடத்தியது, வாக்காளர்களுக்கு தேர்தல் கால லஞ்சத்தை வழங்காமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகளில் கட்டுப்பாடு போன்ற பல விடயங்களை கூறலாம். இப்படியான முன்மாதிரிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஏன் கணிசமான வாக்குகளை வழங்கினார்கள் என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. தமது சமூக அரசியல் தலைமைகளிடமிருந்து மக்கள் எதிர்பார்த்த அரசியல் அடைவுகளை அவர்கள் ஒழுங்கான முறையில் கடந்த காலங்களில் வழங்காமையினாலும், அரசியல் தலைவர்கள் சமூகம் எதிர்பார்த்த விடயங்களில் சிறப்பாக செயற்படாமையினாலும் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் விரக்தி காரணமாகவே தேசிய மக்கள் சக்தியை நோக்கி சிறுபான்மை மக்கள் அணி திரண்டார்கள். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு பிரதிநிதியையாவது அமைச்சரவைக்குள் உள்வாங்காமல் விட்டது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறான நிலைகளிலிருந்து விடுபட்டு தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கைகள் சிறுபான்மை முஸ்லிம் மக்களை அரவணைத்து செல்லும் விதமாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் கூட அமைச்சரவையில் ஒரு சமூகம் சார்ந்தவர் இருப்பது என்பது அந்த சமூகத்துக்கான அங்கீகாரம் என்பதை ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அவ்வாறான அங்கீகாரம் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவில்லை. இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அமைக்கப்பட்ட சகல அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் இடம்பெற்று வந்ததுடன் அவர்கள் எல்லோரும் நாட்டுக்கும், தன் சமூகத்திற்கும் நிறையவே சேவையாற்றியுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 10-15 வருடங்களில் அமைச்சராக இருந்த ஒரு சிலரை தவிர வரலாற்று நெடுகிலும் முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டுக்கும், முஸ்லிம்களுக்கும் நிறைய சேவைகளை வழங்கி உள்ளதை நாம் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். மேலும், நாட்டின் அந்நிய செலாவணி ஒழுங்குபடுத்தல் கள், உள்நாட்டு உற்பத்தி மேம்பாடுகள், ஏற்றுமதி, இறக்குமதி விடய சீரமைப்புகள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை சிறப்பாக முன்னேற்ற தேசிய மக்கள் சக்தி எடுக்கும் முயற்சிகள் மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் இந்நிலையில் சிறுபான்மை சமூகமொன்று பாதிக்கும் விதமாக அரசாங்கம் நடப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கும் சிறப்பாக அமையாது என்றார். https://www.importmirror.com/2024/11/blog-post_872.html
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
முகவர் மூலமாக 60 இலட்சம் கொடுத்து போனது தப்புதானே. பின்பு ஆபத்தில் சிக்கியவுடன் சிங்கள ஜனதிபதிக்கு மகஜர். இலங்கை தியேட்டர்களில் தற்போது சிடிசன் எனும் ஒர் சிங்கள படம் ஓடுகின்றது. மிகவும் விறுவிருப்பன படம். இவ்வாறு சட்டவிரோதமாக வெளினாடு செல்லுபவர்களின் கதை. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.
-
திசைகாட்டியின் அதிசயிக்கத்தக்க வெற்றியும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்
றிப்தி அலி கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரிய வெற்றியினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சுவீகரித்தது. செப்டம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சுமார் 120 ஆசனங்களையே அக்கட்சி பெறும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர். இந்த எதிர்வுகூறலுக்கு முற்றிலும் மாற்றமாகவே பொதுமக்களின் வாக்களிப்பு அமையப் பெற்றிருந்தது. இலங்கை வரலாற்றில் எந்தவொரு தனிக் கட்சியும் கைப்பற்றதாக 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பறியுள்ளது. இந்த எண்ணிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை விட அதிகமான ஆசனங்களாகும். எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையின்மையின் காரணமாகவே ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தளவு அதிக எண்ணிக்கையான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் இன்று அவர்களினால் ஆட்சியினை கைப்பற்றியிருக்க முடியும். அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது போன்று பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டமையினால் அவர்களுக்கு வாக்களிப்பதில் எந்தப் பிரயோசனமுமில்லை என பொதுமக்கள் உணர்ந்துவிட்டனர். இதேநிலை தான் சிறுபான்மை அரசியலிலும் காணப்பட்டது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கின. இதன் காரணமாகவே அக்கட்சிகளின் வாக்குகளில் பாரிய சரிவு ஏற்பட்டது. குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி – அதன் கோட்டையான யாழ். மாவட்டத்தினையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அதன் கோட்டையான அம்பாறை மாவட்டத்தையும் இன்று இழந்துள்ளன. இவ்வாறு சிறுபான்மைக் கட்சிகள் எதிர்கால தேர்தல்களில் பிளவுபட்டு களமிறங்கினால், அக்கட்சிகள் முகவரியற்றுப் போய்விடும் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வட மாகாணத்தில் யாழ். மற்றும் வன்னி ஆகிய இரண்டு மாவட்டங்களையும் ஒரு தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது இலங்கை வரலாற்றில் முதற் தடவையாகும். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு தேசியக் கட்சி வெற்றி பெற்றமையும் முதலாவது சந்தர்ப்பமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களை வெற்றியீட்டிய ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை. இதற்கான காரணம் ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள பங்காளிக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டமையாகும். இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் இரண்டு ஆசனங்களை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால் கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை நிச்சயமாக கைப்பற்றியிருக்க முடியும். கடந்த பாராளுமன்றத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் ஆசனங்களும் காணப்பட்டன. எனினும் இந்தத் தேர்தலில் திருகோணமலையில் ஒரு முஸ்லிம் ஆசனத்தையும், அம்பாறையில் இரண்டு முஸ்லிம் ஆசனங்களையும் மாத்திரமே பெற முடிந்தது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து தேசிய மக்கள் சக்திக்கு 75,000க்கு மேற்பட்ட வாக்குகள் வழங்கிய போதிலும் ஒரு முஸ்லிம் ஆசனத்தினை பெற முடியவில்லை. இதற்கு பிரதேசவாதமும், வேட்பாளர்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையுமே பிரதான காரணமாகும். இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்து போட்டியிட்டிருந்தால் இரண்டு ஆசனங்களை நிச்சயமாக கைப்பற்றியிருக்க முடியும். எனினும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் பிழையான வியூகத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டு. மாவட்டத்தில் ஆசனத்தினை இழந்துள்ளது. இந்தத் தவறினை தற்போது அக்கட்சியினர் உணர்ந்துள்ளனர். கடந்த பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து ஜனாஸா எரிப்பின் போது வாய்மூடி மௌனியாக இருந்தவர்களில் காதர் மஸ்தானைத் தவிர ஏனைய அனைவரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சில முஸ்லிம் தலைவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் சில கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் இந்தத் தேர்தலில் களமிறங்கின. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினைத் தோற்கடிப்பதற்காக கண்டி மாவட்டத்தில் உதைபந்துச் சின்னத்தில் சுயேட்சைக்குழுவொன்று போட்டியிட்டது. இந்த சுயேட்சைக்குழு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 13,378 ஆகும். இது 5 சதவீதத்தினைக் கூட தாண்டவில்லை. இது போன்று தான் புத்தளம் மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (7,083 வாக்குகள்), ஐக்கிய தேசிய கூட்டமைப்பும் (6,410 வாக்குகள்) தனித்தனியாக போட்டியிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் 5 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளையே பெற்றிருந்தன. குறித்த 13,493 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் அக்கட்சியின் ஆசனமொன்று அதிகரிக்கப்பட்டு முஸ்லிமொருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். இதேவேளை, களுத்துறை, கம்பஹா, குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீமும் றிசாத் பதியுதீனும் இணைந்து ஒரு வேட்பாளரை மாத்திரம் நிறுத்தியிருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நிச்சயம் ஒரு ஆசனத்தினைப் பெற்றிருக்க முடியும். இந்தத் தவறினை தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளாமையினால், மாத்தறை, குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் ஊடாக குறித்த மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் நீண்ட கால தாகம் தீர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம்கள் அங்கம் வகித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வரை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக 17 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இதனிடையே அநுர குமார திநாசாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படாமை பாரிய கருத்தாடலொன்றை இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அமைச்சுக்களின் செயலாளர் நியமனத்திலும் முஸ்லிம் அதிகாரி உள்ளடக்கப்படாமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும், நாங்கள் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை. பிரதி அமைச்சர் நியமனத்தில் முஸ்லிம்கள் நிச்சயம் உள்ளடக்கப்படுவர் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. எப்படியோ இந்த ஜனாதிபதியின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக உள்ளனர். இதனால் அனைத்து நியமனங்களிலும் முஸ்லிம் சமூகத்தினையும் உள்வாங்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18123
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இதற்கு முன் நீங்கள் இவ்வாறு எழுதியுள்ளீர்கள் ஐயா. அசானி என்னும் மலையக சிறுமி பாடல் போற்றியொன்றில் வெற்றிபெற்றபோது இவ்வாறனதொரு கருத்தைதான் எழுதினீர்கள். நான் பலமுறை இதை அவதானிதுள்ளேன்.
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
@வைரவன் நன்றி உடனடி பதிலுக்கு. எப்பொழுதாவது இருந்து வருவீர்கள். உங்கள் பதில்கள் வெடி மாறி இருக்கும். ஒரு இந்திய வம்சாவளி தமிழனான நான் அல்வாயனினாலும் மீராவினாலும் மேலே எழுதப்பட்ட இரண்டு கருத்துக்களை வாசித்தபோது மனம் வேதனைப்பட்டது. வீடியோவை பார்க்கவில்லை. கடந்த இரண்டு வாரமாக கடும்மழை, வீடுகளில் எல்லாம் நீர் நிரம்பிபுள்ளது. மக்கள் எவ்வ்ளவோ கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். யாரோ ஒரு மனிதர் வந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள், கூறுகின்றார், தேற்றுகின்றார். மக்களும் அவர்மீது அன்புகொள்வார்கள். இதுதானே மனித இயல்பு. யாரா இருந்தால் என்ன. ஒரு வார்த்தை பாராட்டலாமே? அப்பட்டமான ஒரு யாழ்பாண இனவாதத்தை கக்கியுள்ளீர்கள். ஊர் இரண்டுபட்டால்?... யார் ஐயா இரண்டு படுத்தியது? ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20, 30 இயக்கங்களாக பிரிந்து தங்களுக்குள் அடிபட்டு, தங்கள் சொந்த இனத்தையே அழித்து, சகோதர்களையே கொன்று, இன்று நதியாற்று நடுத்தெருவில் இருக்கும் இந்த மக்களுக்கு இப்பொழுதுதேவை அன்பும் அரவணப்பும். எந்த ஒரு விடயத்தில் ஐயா நீங்கள் ஒற்றுமை பட்டுள்ளீர்கள்? ஒரு சாதரணா பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் 10 யாழ்ப்பணத்தவர்களுக்கு இடையில் ஒரு விடயத்தில் ஒற்றுமையுண்டா? கடந்த தேர்தலில்தான் பார்த்தோமே சொந்த மக்களாலே 30, 40 வருடமாக இருந்த இந்த அரசியல்வாதிகள் தூக்கி ஏறியப்பட்டார்களே? ஒரு இந்திய வமசாவளி தமிழர் யாழ்பாணத்திற்கு அமைச்சர நியமிக்கப்பட்டு இப்படி மக்களை ஆறுதல்படுத்துவது குற்றமா?
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நல்ல விரிவான பதில் கோஷன். ஆனால் இது பிரக்டிகலாக இருக்காது என நினக்கின்றேன். என்னுடைய பிறப்பத்தட்சி பதிவில். என்னை இலங்கை தமிழர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். என்னுடை பெற்றோர் இருவரும் கொழும்பிலே பிறந்தவர்கள். ஆனால் என்னுடையா தாய்வழி, தந்தைவழி தாத்தா, பாட்டிமார்கள் பிரித்தானிய காலனித்துவகாலத்தில் தொழிலுக்காக இங்கு வந்து தங்கிவிட்டவர்கள். குடியுரிமை கிடைத்த பிற்பாடு அவர்கள் தாங்களை இலங்கை தமிழராகவே அடையாளப்ப்டுத்தி கொண்டார்கள். நீங்கள் இந்திய permanent residence பற்றி குறிப்பிட்டது உண்மை, என்னுடைய இளைய தங்கையிடம் இந்த PR உண்டு என நினக்கின்றேன். மதுரையில் என்னுடைய பாட்டியின் deed extract மூலம் இதை நிருபிக்க கூடியதாக இருந்தது என நினக்கின்றேன். ஆக பிறப்பத்தாட்சி பேப்பரில் நான் இலங்கை தமிழன், ஆனால் உண்மையில் இந்திய வம்சாவளி தமிழன். ஐசே, மச்சான் பேரு மதுர....வா, மைனர் குஞ்சி வா...
-
யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
வாசுகி சிவகுமார்- மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவலுகள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது. 26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது. தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது? எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை. ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன. https://www.importmirror.com/2024/11/mp.html
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
கோசான் எனக்கொரு சந்தேகம். இலங்கை வம்சாவழி தமிழவர்கள் என்பவர்கள் யார்? என்ன வரைவிலக்கணம்? (இங்கு நீங்கள் வடக்கு கிழக்கு என ப்ரக்கடில் போட காரணம் என்ன?)
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா? “அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா?” இன ரீதியான அமைச்சர் நியமனம் மக்கள் ஆணைக்கு முரணானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் அமைச்சரவையில் முஸ்லீம் அமைச்சர் நியமனம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு தனது கருத்தாக கூறியிருந்தார். அவ்வாறெனில் புதிய அமைச்சரவையில் புத்தசாசன அமைச்சு ஒன்று வழங்கப்பட்டுள்ளதே. இதனை எந்த இனவாதமாக நோக்கமுடியாதா? இது மிகத் தெளிவான அநீதியான மனநிலையாகும் ஒரு தேசியமாக தேசியமக்கள் சக்தி பயணிக்கும் என்ற கூறிய விமல்ரத்நாயக்க அவர்கள் புத்தசாசன அமைச்சை மறந்துவிட்டாரா? அல்லது பெளத்த தேசியமாகத்தான் இந்த நாட்டவர்கள் பயணிக்க வேண்டும் என்று கூறு வருகின்றாரா? என்ற சந்தேகம் எமக்கு எண்ணத் தோன்றுகிறது. புத்தசாசனத்திற்குப் பதிலாக மத நல்லிணக்க அமைச்சு அல்லது சமய விவகார அமைச்சு என்று பொதுவான அமைச்சு வழங்கப்பட்டிருந்தால் விமல் ரத்நாயக்க அவர்களின் கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவரின் கூற்று பெளத்த இனவாதத்தையே பிரதிபலிக்கின்றது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இனவாதம் இருக்கக் கூடாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அப்பட்டமான இனவாதத்தை திணிப்பதானது, இனவாதத்திற்கூடாக ஆட்சிபீடமேறியவர்களைவிட மிகவும் மோசமானவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பதே யதார்த்தம். பல்லின இலங்கையில் பன்மைக் கலாசாரங்களுடன், சமய நம்பிக்கைகளுடன் பல்லின சமூகமாக வேறுபாட்டில் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் இலங்கையர்கள் என்ற உணர்வுகளுடன் ஒரேநாட்டவர்களாக அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் பங்குபற்றுவதுதான் அழகாக இருக்கும். இதிலும், பெளத்த தேசியவாத கருத்துக்களை தெளிவாகப் போசி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களில் கூட இவ்வாறு முஸ்லீம்கள் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியவிடயமாகும். இது போன்ற இனவாத விடயங்கள் system change க்கூடாக நடைபெறலாம் என்பதற்காகத்தான் எந்தவித அரசாங்கத்திற்கும் 2/3 பெரும்பாண்மை சென்றுவிடக் கூடாது என்றும் அவ்வாறான அபரிவிதமான அதிகாரங்கள் ஆட்சியாளர்களை மனிதர்கள் என்ற அடிப்படையில் பிழையான நடைமுறைகளுக்குள் இட்டுச் செல்லும் என்பது இவ்வளவு விரைவாக அமுல்ப்படுத்தப்படும் என்று கூட நாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான் கவலை இவைகளுக்கு மத்தியில் NPP க்கு வெளியிலிருந்து வேறுகட்சிகளுக் கூடாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது பாராளுமன்றத்திலாவது குரலாக இருக்கும் என்ற ஆருதலாவது இருக்கிறது.இவ்வாறான சந்தர்பத்தில் முஸ்லீம்கள் சார்பாக NPP க்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடந்தகால தவறுகளை, பிழைகளைத் திருத்தி இதயசுத்தியுடன் எமது சமூகத்திற்காக துணிவுடன் செயற்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம். MLM.சுஹைல் https://madawalaenews.com/8706.html
-
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று
பாராளுமன்றத்திற்குள் இப்படியும் நடந்தது பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார் டாக்டர் அர்ஜுனா இராமநாதன். அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார் அர்ஜுனா.. புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால் ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என்கிறார் அர்ஜுனா... அநேகமாக இனி சபைக்குள் சரவெடிதான்... (நன்றி - Siva Ramasamy) https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_129.html
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல ! இனவாதி என கூறப்பட்ட மஹிந்தவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2005-2010 ) மகிந்தவின் கீழ் அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இருந்த எமது பா.உ. கள்* 1.ALM.அதாஉல்லா 2.ரிசாட் பதியுதீன் 3.றஊப் ஹகீம் (தபால்) 4.பேரியல் அஸ்றப் 5.AHM.பெளசி 6M.H.முஹம்மட் *Deputy -பிரதி அமைச்சர்கள்* 1.Basheer 2.Husain bahaila 3.MIM.Hizbullah 4.abdul Majeed 5.Cader (காதர் ஹாஜ்யார் கண்டி) 6.Faizer Mushthafa (*மகிந்தவின் 2 வது ஆட்சிக்காலத்தில் (2010-2015) மகிந்தயோடு அமைச்சரவையில் இருந்தவரகள்*). 1.AHM.பெளசி 2.றஊப் ஹகீம் (நீதி) 3ALM.அதாஉல்லா 4.ரிசாட் பதியுதீன் 5.Abdul Cader கண்டி 6.Abdul haleem கண்டி 7.Basheer segudawuth *பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள்* 1.பைசர் முஸ்தபா 2.ஹிஸ்புல்லா 3.அமீர் அலி 4.ஹசன் அலி 5.பசீர் சேகுதாவூத் சரி இப்ப விசயத்துக்கு வருவோம், இதெல்லாம் பிழ ஆகவே சிஸ்டம் சேஞ்ச் (சிலருக்கு சிஸ்டமே விளங்கல்ல அப்ப எப்புடி சேஞ்ச் விளங்கும் என்பது வேற கத) .நாட்டில் சட்டத்தை இயற்றுவது பாராளுமன்றம்.ஆனால் ஆளுகின்ற *ஒழுங்குவிதிகளை* ( by- laws / regulations ) உருவாக்கும் மிக மிக முக்கியமான இடம் அமைச்சரவையாகும்.அமைச்சரவை முடிவுகள் கூட்டுப்பொறுப்புடையதாகவும்,சில போது இரகசியமானதாகவும் பேணப்படவேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும். இப்படியான மிக மிக முக்கியமான 21அமைச்சர்கள் நியமனங்களில் ஒண்றுகூட முஸ்லிம் இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல.அனுரவிற்கும் அங்குள்ள அத்தனைபேருக்கும் இது தெரிந்தும் தைரியமாக முஸ்லிம் ஒருவரும் இல்லாமல் நியமணங்களை வழங்கியுள்ளார்கள். இதற்கு பிறகு அவர்கள் ஒருவரை நியமிக்கலாம் ஆனால் அதற்கே பலமட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதென்பது நுட்பமான அழுத்தங்களின் ஆரம்பகட்டமாகவே தோன்றுகின்றது.அமைச்சரவையில் முஸ்லிம்களின் விடயங்கள்தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்த ஓரிருவராவது அவசியம் அல்லவா. தமிழ் சமூகத்தில் இருவரை நியமித்து விட்டு (அவர்களுக்கு அப்படி என்னதகுதியோ தெரியாது,இவ்வாறு சொல்வதனால் சகோதர அந்த இனத்தை கொச்சைப்படுத்தும் அர்த்தமாகாது) இன்னொரு சமூகத்தை அவமானப்படுத்தக்கூடாது.அல்லது முஸ்லிம்கள் இங்கு ஒரு இனமல்ல அவர்கள் சாதாரண ஒரு குழுதான் என உலகிற்குச்சொல்லும் உள்குத்தா என்றும் புரியவில்லை.எமது முந்தைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கலாம், அவர்கள் அமைச்சரவையில் எம் சமூகம் சார்ந்த நிலைப்பாட்டை ஆகக்குறைந்தது தெளிவாவது படுத்தின பல சந்தர்ப்பங்கள் உண்டல்லவா (இதில் விமர்சனங்கள் இல்லாமலில்லை) அதேநேரம் தமது அமைச்சுக்கள் ஊடாக ஒதுக்கப்படும் நிதிகளைப்பயன்படுத்தி எமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சேவைகளையாவது செய்தார்களல்லவா(ஒரேயடியாக நண்றிமறத்தலும் பிழைதானே). ஒருவருடைய பிரதிநிதித்துவம் என்பது அங்கீகாரம்,கெளரவம் அதனை இல்லாமல் செய்ததை நியாயப்படுத்த நினைக்கும் சில முகநூல் NPP போராளிகள் கொள்ளை அழகு. எந்தகட்சியாக இருந்தாலும் பிழையை பிழை என்று கூறும் மனநிலைப்பக்குவம் நம் அனைவரிடமும் இருக்கவேண்டும்.இவர்களது கொம்மியூனிச சாயல் சிலபோது மதவிடயங்களில் தலையிட்டாலும்,மம மாலிமாவ மாத்தயா எண்டுக்கு நிக்கமுடியாது என்பதும் வெளிப்படையானது. இலங்கை அரசியலில் வடகிழக்கு தவிர்ந்த அரசியல்வேறு ,வடகிழக்கு அரசியல்வேறு.வடகிழக்கு 30 வருட யுத்தத்தையும்,31 ஆயிரம் பிரச்சினைகளுடனும், இரத்தம் தோய்ந்த வரலாற்றுடனும் நிற்கின்ற பூமியாகும். இங்கு மேட்டுக்குடி அரசியலின் இயல்பில் அல்லுண்டு *கண்மூடித்தனமாக* போவதும் சிக்கலாகிவிடலாம். *அழகிய வண்ணாத்துப்பூச்சியும் ஒரு புழு தான் சகோதரயா* ML.M.Jahid- (B.A) Varipathanchenai https://madawalaenews.com/8766.html
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
10 இலட்சம் முஸ்லிம்கள் NPP க்கு வாக்களித்தனர், உணர்வுகளைப் புரியாது செயற்படுவது கவலைக்குரியது இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் மக்களும் இந்நாட்டின் பிரசைகள். அந்த வகையில் இந்த சமுகமும் ஏனைய சமுகங்களைப் போன்று கௌரவத்துடன் இந்நாட்டில் வாழ விரும்புகின்றது. இந்நாட்டின் சுதந்திர காலம் தொட்டு நியமிக்கப்பட்டு வந்த அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இந்த அரசாங்கம் நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமுகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. சமுக வலைத்தளங்களை அவதானிக்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த அரசாங்கத்தின் கடந்த குறுகிய கால செயற்பாடுகள் சிலவற்றை பாரக்கும் போது முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட 6 தவிசாளர் பதவிகளில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளரும் நியமிக்கப்படவில்லை. இந்த விடயம் பேசு பொருளான பின்னர் ஒரு முஸ்லிம் தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற 18 தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பான பெயர்ப் பட்டியல் முன்னர் வெளியிடப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரதும் பெயர் வெளிவரவில்லை. பின்னர் இதுவும் பேசுபொருளான பின்னர் ஒரு முஸ்லிம் உறுப்பினரது பெயரோடு புதிய பட்டியல் வெளியானது. அந்த வரிசையிலேயே இப்போது இந்த அரசாங்கம் நியமித்துள்ள அமைச்சரவையில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த கோத்தாபாய ராஜபக்ஸ அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த உதாரணங்களை வைத்து நோக்கும் போது இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகின்றது. இப்படியிருந்தால் இந்த ஆரம்பத்திலேயே இது கலையப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்ற முஸ்லிம்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அளிக்கப்பட்டுள்ள சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளுள் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள வாக்கு விபரங்களை நுணுகி ஆராய்கின்ற போது இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். முஸ்லிம்களின் இந்தளவு பெரிய எண்ணிக்கை வாக்குகளைக் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் புரிந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெவித்தார் https://www.jaffnamuslim.com/2024/11/10-npp.html
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளது ஆடை - உரிமையை உறுதிப்படுத்துவாரா பிரதமர் ஹரினி..? அஷ்ஷெய்க் ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி) உயர்தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளது ஆடை விவகாரத்தில் அரச சுற்றுநிருபத்தினை அமுல்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படுமா? எதிர்வரும் 25-11-2024 முதல் இலங்கையில் உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற ஏற்பாடாயிருக்கிறது. பரீட்சையில் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்களையும், வளமான பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய பரீட்சைகள் வரும்போது கடந்த பல வருடங்களாக, முஸ்லிம் மாணவிகளின் ஆடை விவகாரம் சில பரீட்சை மண்டபங்களில் வைத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுவருதும், இதனால் முஸ்லிம் மாணவிகள் சங்கடங்களுக்குள்ளாவதும் வழமையாகிவிட்டது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாரிய எதிர்பார்ப்போடு, ஒருவித மனதயக்கத்தோடே முகம்கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக மாணவிகள் இதில் ஓரளவு அதிகமான மனஅழுத்தத்துடனும், பயத்துடனுமே பரீட்சைகளுக்கு தோற்றுகின்றனர். இவ்வாரான நிலையில் எதிர்வரும் உயர்தரப் பரீட்சையின் போது முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கும் ஆடை குறித்த (பர்தா-தலையை மறைக்கும்) தெளிவான நிலைப்பாட்டை கல்வி, உயர்கல்விக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூர்ய அவர்கள் பரீட்சை ஆணையாளருக்கும், பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுருத்தல்கள் வழங்க அவரச நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பரீட்சை மண்டபத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவிகளது பர்தாக்கள், பரீட்சை மண்டப அதிகாரகளால் களையப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் பரீட்சைக்கு தோற்றாமல் இருந்ததாகவும் கடந்த காலங்களில் பேசப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களது பிள்ளைகள் பெரும்பாலான ஆண் பரீட்சாத்திகளுடன் (வகுப்பறைகளில்) அமர்த்தப்பட்டு பரீட்சைக்கு தோற்ற பணித்துள்ளனர். இதனால் அம்மாணவிகள் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலே பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். எனவே மாணவர்களுக்கு தங்களது பாடசாலை சீருடையோடு பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான சட்டபூர்மான அனுமதியினை (சுற்றுநிருபத்தை) அரசு வழங்கியிருக்கும் போது, அதற்கு மாற்றமாக செயல்படும் அதிகாரிகள் தண்டிக்கப்டவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா (தலை மற்றும் காதுகள் மறைக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை சீருடை) அணிந்து வருவதால் அவர்கள் கதைப்பதாகவும், Headset போன்றவற்றை பயண்படுத்துவதாகவும், பர்தாவினுள் பார்த்து எழுதுவதற்கான துனுக்குகளை மறைத்து வருவதாகவும் பரீட்சை மண்டப அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். அவ்வாறான நிலைமைகளில் அதன் நம்பகத் தன்மை உறுதிப்டுத்தப்பட்டால், அவ்வாரு பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் மாணவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களது பரீட்சை தடைசெய்யப்பட்டு, பரீட்சைகளில் தோற்றுகின்ற அவகாசம் மறுக்கப்படவும் வேண்டும். நேற்றைய (18-11-2024) தினம் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவிகள் 21 பேருக்கு வழங்கப்பட்ட போதிலும், ஒரு முஸ்லிம் உறுப்பினருக்காவது அவ்வாரான ஓர் அமைச்சுப் பதவியை வழங்காத இந்த அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை சற்று தளர்ந்துள்ள நிலையில், எதிர்வரும் உயர்தரப் பரீட்சைகளின் போதாவது முஸ்லிம் மாணவிகளது ஆடைவிவகாரத்தில் அரச சுற்றுநிருப்த்தின்படி பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பார்களா? என்று எதிர்பார்த்திருக்கின்றனர். இப்போது தேசிய மக்கள் சக்தியே ஆளும் கட்சியாக இருக்கின்றது என்று சாக்குபோக்கு கூறாமல், எதிர்கட்சிகளில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனிகளாக இருக்காமல், இம்மாணவர்கள் தோற்றும் பாடசாலைமட்ட இறுதிப் பரீட்சையாகவும், தங்களது எதிர்காலத்தை தீர்மாணிக்கின்ற மிக முக்கியமான பரீட்சையாகவும் இது இடம்பெற இருப்பதால் இதுவிடயத்தில் அக்கரை செலுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாரு வேண்டிக் கொள்கிறோம். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_335.html
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
NPP யின் இடதுசாரிக் கொள்கை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் ? “நாங்கள் கலக்கலாம் ஆனால் அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது எமது நாட்டில் பல்கலைக்கழக மானவர்களாக இருக்கும்போது JVP யின் கொள்கையில் கவரப்பட்டு இடதுசாரியாகவும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்பு வலதுசாரியாகவும் மாறிவிடுகின்றனர். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் JVP யின் ஆதிக்கத்துக்கு வந்தபின்பு அம்மாணவர்கள் தொடர்ந்து அதே கொள்கையில் இருந்திருந்தால், எப்பவோ இந்த நாட்டை JVP ஆட்சி அமைத்திருக்கும். வலதுசாரிக் கொள்கையில் இருப்பது இலகு. கட்டுப்பாடுடன்கூடிய இடதுசாரிக் கொள்கையில் தொடர்ந்து பயணிப்பது கடினம். JVP யின் ஆரம்பகால முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் பின்னாட்களில் JVP யின் கொள்கையை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ வாதிகளாக மாறினர். அந்தவகையில் JVP தலைவரே இனவாதியாக மாறிய வரலாறுகள் இன்றுள்ள முஸ்லிம் புதிய போராளிகளுக்கு தெரியாது. அதாவது நீண்டகாலங்கள் JVP யின் தலைவராக பதவி வகித்த சோமவன்ச அமரசிங்க மற்றும் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் JVP வளர்ச்சிக்காக இன்று உள்ளவர்களைவிட அரும்பாடுபட்டவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் பின்னாட்களில் கொள்கையினை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாது இனவாதியாக முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். விடையம் அவ்வாறிருக்கும்போது, தேசிய அரசியலை கூர்ந்து கவனிக்காமல், ஊழலை ஒழித்தல் என்ற பிரச்சாரத்துக்கு மயங்கி எங்களது தனித்துவ அடையாளத்தினை இழந்துவிட முடியாது. சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாங்கள் தனித்துவ சக்தியாக NPP க்குள் கலக்கலாமே தவிர, எங்களது தனித்துவத்தினை இழந்து அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது. ஏனெனில் அனைவரும் மனிதர்கள். அவர்கள் எந்நேரமும் கொள்கை மாறலாம் அல்லது மரணிக்கலாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/11/npp_14.html
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சு பதவி கொடுப்பதன் மூலம் அரசு பற்றிய விமர்சனங்களை தவிர்க்க முடியும்.- முபாறக் முப்தி முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சு பதவி கொடுப்பதன் மூலம் அரசு பற்றிய விமர்சனங்களை தவிர்க்க முடியும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி கௌரவ ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது பற்றி ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடக பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தின் அமைச்சரவை மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. இரண்டு தமிழர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டமை மூலம் தமிழ் மக்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இன்றைய அமைச்சரவை நியமிக்கப்படும் நிகழ்வில் யார் முஸ்லிம் அமைச்சர் என்பதை முழு முஸ்லிம்களுடன் ஆவலுடன் எதிர் பார்த்தனர். ஆனாலும் எவரும் நியமிக்கப்படாதது கவலைக்குரியதாகும். இது விடயம் முஸ்லிம் சமூகத்தின் கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை சமூக வலையத்தளங்கள் சொல்கின்றன. முதல் நிகழ்விலேயே இந்நியமனம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் இன்னமும் காலதாமதம் ஆகவில்லை. ஆகவே கௌரவ ஜனாதிபதி அவர்கள் உடனடியாக முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிப்பதுடன் முஸ்லிம் சமய விவகாரத்துக்கென பிரதி அமைச்சு ஒன்றை உருவாக்கும்படியும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கௌரவ ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறது. https://www.importmirror.com/2024/11/blog-post_336.html
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை 🧭 தோழர்கள் விட்ட முதலாவதும் பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறாகும் முதலாவதாக இது பல்லின பலமத பல மொழி பலகலாசார பண்புகளைக் கொண்ட தேசம் என்பதனைப் பிரதிபலிக்கும் அரசியலமைப்பை அரசை அரச யந்திரத்தை கொண்டிருக்க வேண்டிய தேசம் என்பது அரசியல் அரிச்சுவடிப் பாடமாகும். அத்தகைய அடிப்படைப் பண்புகளுக்கு மதிப்பளிப்பது அறிவியல், உளவியல், சமூகவியல், விஞ்ஞான, நிபுணத்துவ அடிப்படைகளுக்கு புறம்பானதென எவரேனும் அதிகப்பிரசங்கித் தனமாக நியாயப்படுத்தினால் அவர்களது அறிவியல் நிபுணத்துவ தராதரங்களை மீள்பரிசீலனை செய்தல் வேண்டும். இனவாதம், மொழிவாதம், மதவாதமில்லாத இலங்கையர் நாம் என்ற அடையாளத்தை முன் வைத்து சகல சமூகங்களுக்கும் பொதுவான சவால்களுக்கு ஓரணி நின்று முகம் கொடுத்தல் என்பது சமூகம்சார் தனித்துவங்களை சமரசம் செய்து கொள்வதல்ல என்பதனை நாம் புரிந்து கொள்தல் வேண்டும். இனவாதம், மொழிவாதம், மதவாதம், பிரதேசவாதம் வேறு சமூகங்களின் இனத்துவ உரிமைகளை அடையாளங்களை அவற்றிற்கான அங்கீகாரங்களை, நியாயமான பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக் கொள்வது என்பது வேறு என்பதனை எமது தோழமைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதனைப் புரிந்து கொள்ள நாம் சமூகங்களாகவும் தேசமாகவும் கொடுத்த பாரிய விலைகளின் பின்விளைவுகளே எமது தாய்நாட்டை இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதனை நாம் அறிவோம், சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றை மீள எழுத முன்வந்துள்ள நாம் அதே ஆரம்பப் புள்ளிகளில் மீண்டும் சங்கமம் ஆகி விடலாகாது. ஒரு தேசத்தில் அமைதி சமாதானமும் சகவாழ்வும் நிலவினால் மாத்திரமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட முடியும் அதன் அடிப்படையிலேயே பொருளாதார சுபீட்சம் ஏற்பட முடியும், அதுவே சர்வதேச அளவில் அரசியல் சாசனங்களின் அடிப்படை சித்தாந்தமாகும். இத்தகைய அடிப்படை பண்புகள் இல்லாது போகின்ற பொழுது அந்த இடைவெளிகளூடாக தேசிய பிராந்திய சர்வதேச சதிகார சக்திகள் ஊடுருவி தலையீடுகளை மேற் கொண்டு தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும், மேலாதிக்க போட்டிகளுக்கும் கூலிப்படைகள் கொண்டு சதித்திட்டங்களை தீட்ட முனைகின்றன, அது இன்று ஒரு தேசமாக எமக்குப் புதிய விடயமல்ல. ஒரு தேசமாக 2015 ஆம் ஆண்டு அழிவின் விளிம்பில் இருந்து நாம் எழுந்து நிற்க முனைந்த பொழுது, வங்குரோத்து நிலையில் இருந்து மீள எத்தனித்த பொழுது எத்தகைய சதித்திட்டம் 2019 இல் அரங்கேறியது என்பதனையும் தொடர்ந்து சுனாமிபோல் எம்மைக் காவிக் கொண்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளையும் நாம் நன்கு அறிவோம்.. அதன் விளைவாக நாம் ஒரு தேசமாக மக்கள் எழுச்சியிற்கு முகம் கொடுத்தோம், அரகலய எனும் மக்கள் எழுச்சியின் ஜனநாயக பரிமாணங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும் உருக் கொடுத்த தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தி அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தந்தோம்.. தேசிய மக்கள் சக்தியின் மீதும் அதன் தலைமை மீதும், குறிப்பாக ஜனாதிபதி தோழர் அநுர மீதும் நாம் வைத்துள்ள நம்பிக்கை கிஞ்சித்தும் பழுதடைந்து விடக்கூடாது, சர்வதேச சமூகத்தில் குறிப்பாக அரபு முஸ்லிம் உலகில் அது ஒரு கேள்வியாக இருக்கக் கூடாது என்பதில் அதன் ஆதரவாளர்களாக செயற்பட்ட தொண்டர்களும் தோழர்களுமாக நாம் உறுதியாகவே இருக்கின்றோம், அத்தகைய திடமான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. உரிமைகளுக்கான, அடிப்படை உரிமைகளுக்கான ஜனநாயக அரசியல் போராட்ட வடிவங்கள் என்றவகையில் அதன் மைய நீரோட்டத்தில் இணைந்து கொண்டு எமது நியாயமான மனக்குறைகளை அபிலாஷைகளை அடைந்து கொள்ளவே நாம் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் அணிதிரண்டிருக்கிறோம். “நாம் ஆட்சிக்கு வர முன் எமக்கு ஒரு அரசியல் இயக்கமாக முன்னுரிமைகள் கடப்பாடுகள் இருந்தன, ஆனால் இன்று மக்கள் ஆட்சியை எம்மிடம் தந்துள்ளார்கள், மூன்றில் இரு பெரும்பான்மையையும் தந்துள்ளார்கள், தற்போது ஒரு அரசாங்கமாக எமது முன்னுரிமைகள் கடப்பாடுகள் பற்றி நாம் ஒட்டு மொத்த தேச மக்களுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்” என ஜனாதிபதி தோழர் அநுர வலியுறுத்தியது போல் இந்த தேசத்தின் இறுதி எதிர்பார்ப்பாக அமைந்துள்ள இந்த தேசிய ஒருமைப்பாட்டு அரசு முன்நோக்கி நகரும் என்ற நம்பிக்கையில் அதனை பாதுகாக்கவும் நாம் ஒரு தேசமாக ஒன்றினைந்து பயணிப்போம். புதிய அமைச்சரவையில் இன்று எமது பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்ற பிந்திய தகவலுக்கு நன்றி கூறி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து புதிய அமைச்சர்களுக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! *மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்* ✍️ 18.11.2024 || SHARE முன்னாள் பொதுச் செயலாளர் தேசிய ஷூரா சபை முன்னாள் ஸவூதி அரேபிய ஜித்தா நகரிற்கான கொன்ஸல் ஜெனரல் முன்னாள் அரசியல் நிபுணத்துவ ஆய்வாளர் ஸவூதி மற்றும் கத்தார் தூதரகங்கள். முன்னாள் கொன்ஸுலர் அதிகாரி குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகங்கள். https://madawalaenews.com/8595.html
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
ஒன்றாக பொங்கல் பொங்க வாருங்கள். ஒன்றாக கயிரிழுகும் போட்டிக்கும் வாருங்கள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣புரூடாஸ் நீயுமா?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இப்பொழுது ஒரு வீடியோ பார்த்தேன் மக்கள் டக்ள்சை சுற்றி வளைத்து தாக்குகின்றார்கள்
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
ஐசே க்றீம் என்பதை, கிறீஸ் போத்தல் என்று வாசித்து விட்டேன் வா. போன கிழமை கொஞ்சநாளா ஒரு கராஜிக்கு ஒடிடிங் செய்ய போனேவா, consumable stock ல் அங்க ஒரே க்றீஸ் போத்தல், லுப்ரிகன்ட் பூசுதல், ஒயில் செஞ்சிங், ஜக் அடித்தல், வசலின் குப்பி, வேலை முடிய கைதுடைக்க கொட்டன் துணி என ஒரே இந்த ஜராவா சாமன்கள் தான் வா
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
தினமும் தொலைக்காட்சியில் வடக்கு கிழக்கு மீனவர்களின் துன்பத்தை காட்டுவார்கள் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கும். மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான மீன்களை தடை செய்யப்பட்ட வலைகளையும் உப்கரணங்களையும் பாவித்து மீன் செல்கின்றார்கள். இந்த விடயத்தில் நான் சிங்களவனின் பக்கமே.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
என்னுடய தெரிவு ரஞ்சன் ரமனாயக்க. ஆனால் இவர் கட்சி இங்கு லிஸ்டில் இல்லையே என்ன காரணம்? . எனவே அடுத்த தெரிவு அனுரவுக்கு இட்டுள்ளேன்.
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_201.html இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அவர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார். SHARE THIS Share it Tweet Share it Share it Pin it