Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாமானியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by சாமானியன்

  1. பொங்கல் வந்தது, டும்.. டும் ... பொங்கல் போய் வரியம் வந்தது, டும் .. டும் ... வரியம் போய் தீபாவளி வந்தது, டும் ,, டும் ... தீபாவளி போய் கிரிஸ்மஸ் வந்தது, டும் .. டும் ... கிரிஸ்மஸ் போய் நியூ இயர் வந்தது, டும் ,, டும் .. இப்ப தேர்தல் வந்திருக்கு டுமக்கு டும் டும் .. நிறம் மாறாத பூக்கள் தேடியலைகின்றன காதுகளை .. டுமக்கு டுமக்கு டும் டும் டும்மோவ் .......
  2. எய்ப்பு சாதாரணமாக ஒருவரை நலிக்கும். கவிஞர், எய்ப்பு தன்னை "நலியும்" போது என்று குறிப்பிடுவது , தன்னை நலிக்கையில் அதுவாக தானும் நலிந்து போகின்றது என்பதாலா .. வேறுவகையில் சொல்வதானால் , எய்ப்பு தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று சொல்ல வருகிறாரா ..
  3. சந்தடி சாக்கில் நீங்கள் எடுத்து எறியும் கல்லின் இலக்கினை நோக்குகையில் , மதிய உணவில் நினையாப்பிரகாரமாக கடிபட்ட கார மிளகாயின் உறைப்பின் கடுமையையும் மீறி மெலிதாக சிரிப்பொன்று வருகிறது 😊 தாங்க்ஸ்.....
  4. இதில ஒரு கவலையான விடயம் என்னவென்றால், இந்த முட்டாளுகள் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய தேவை அநேகம் வராது. ஆனால் இவையிண்ட சந்ததிகள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எங்கட கடவுள் மாரிடம் சொல்லி, அவரின்ட இம்ப்ளெமெண்டஷன் மொடலை கொஞ்சம் மோடிஃபை பண்ணி, பலனை இப்பவே அனுபவிக்கிற பெர்ஸன்டேஜை அதிகரிக்கச் சொல்ல வேணும் ...
  5. இந்த மூன்றாவது பந்தியில கால் , அரைக்கால், முக்கால், முழு மற்றும் தலைகீழ், தலை மேல், ஒரு கால், இருகால் புள்ளி வகையாறாக்களை எவ்வாறு சரியாகப் போடுவது எண்டு பண்டிதர் யாரேனும் அறிவுறுத்துவினமே ....🤫
  6. நாம நாலு பொடியங்கள் சேர்ந்து இப்ப மூண்டு குழாய்க்கிணறு கட்டிக் குடுத்திருக்கிறம். வால்வினால் தண்ணீ வந்து நிலத்தில விழுற இடத்தில ஒரு சிறிய கொங்கிறீட் பாத்தி போட பொருட்களை வாங்கித் தாறம், பயனாளிகள் கூடச் சேர்ந்து கட்டுவார்களோ எண்டு கேட்க ; "ஐயோ ஐயா, அடிக்க வந்திடுவாங்கள், அங்கையிருந்து காசு வருது - வந்தாயா, கிணறு அடிச்சாயா,, போனாயா,, எண்டிருக்க வேணும்" எண்டு தான் சொல்லுவினம் எண்டு சொல்லுறார் கிணறு அடிக்கிறவர் .. குழாய் கிணறு எண்டாலே யாருக்காவது அடி தான் விழும் போல கிடக்கு மக்காள் ....
  7. வீடு விற்கப் போட்டிருக்கிறோம் . சுற்றி வர சீனப் பிரைஜைகள் . பார்க்கவருபவர்களும் பெரும்பாலும் அப்படியே . நேற்று இரண்டு இளம் பெண்மணிகள் வந்து ஒருமணித்தியாலமாக சுற்றி பார்த்து விட்டுஇ பக்கத்து வீட்டு வயதான ( 75 வயது ) பெண்மணியிடமும் கதைத்து விட்டு போயிருக்கிறார்கள் . என்ன சொன்னார்கள் என்று கேட்டேன். அவர்கள் லெஸ்பியன் என்று நினைக்கிறேன் என்றெல்லோ கிழவி மறுமொழி சொல்லத் தொடங்குகுது...
  8. 2009 இல் அவர்கள் அனுப்ப முயற்சித்த கப்பல் இன்னமும் நங்கூரம் எடுபடாமலே இருக்கு ....
  9. கனடா ஒரு சாத்தியமான தெரிவாக இருக்கக் கூடும், அவரது உறவினர்கள் நண்பர்கள் எவராவது ஏற்கெனவே அங்கே இருந்தால் ..... இந்தியாவின் கனடாவிற்கான கடல் கடந்த பயங்கரவாதமும் சாத்தியமான முன்னிலை அனுபவங்களையும் விபரங்களையும் பெறுவதற்கு கனடா ஆவலாக இருக்கும். அமெரிக்காவும் மூடிய கதவின் பின்னாலிருந்து இதனை ஆதரிக்கும். அவர்களுக்கெல்லாம் இஃதொரு கோல்டன் ஒப்பேர்ச்சுனிடி ....
  10. குழுமத்தில் இருக்கும் அனைவரையும் விட மிஸ்டர் பீன் , வெகு கெட்டிக்காரர் என்பது ஒரு வெளிப்படையான பாக்ட் 🙂
  11. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை. பொருளாதார ரீதியான தீர்வே உள்ளது. அறிவியல் தீர்வை தேட வேண்டும். அதனைவிடுத்து சில அரசியல் குழுக்கள் பழைய அரசியல் தீர்வுகளை கூறி பிரசித்தமடைய முயற்சிப்பது கவலைக்குரியதாகும். "2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதாரம் சரிந்தது. 2022 ஆம்ஆண்டை விட 2023இல் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இது தற்செயலாக நடந்ததல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது." நுட்பமான கொள்கை --கடன் வாங்கிக் கல்யாணம் 😀
  12. இதிலென்ன சூக்குமம் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் ஊழல் நதியில் நீந்தி விளையாடும் அரசுகள் இருக்கும் இடத்தில் தம் காலை நனைப்பதை விரும்புவது இயற்கை. சிலகோடி அன்பளிப்பில், சாதாரணமக்களின் பலநூற்றுக்கணக்கான கோடி சொத்துக்களை உறிஞ்சுவது மிக மிக இலகு.. வேறொன்றில்லை ........
  13. நாம் நிறைவானவர்கள் எனும் சுதந்திர மனப்பான்மையை வைத்திராத இலங்கைத் தமிழர் எவரேனும் இருப்பர் என்று நான் கருதவில்லை . எழுநூறு ரௌடிகளுடன் இங்கே வந்து, அடாத்தாக இன்னமும் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகுது.. ஆடும்வரை ஆடுங்க ........
  14. கவுரவ குத்தியருக்கு இதிலொரு சந்தோஷய. இவ்வளவு நாளும் சர்வதேசம் வந்தால் தானும் சிலவேளை போகவேண்டி வருமோ எண்டு ஜோஜனா ஈந்திருக்கும் .. இனியென்ன ஏகேடி க்கு மந்திரிக்க என்ன செய்யலாம் எண்டு வியூகம் போட வாண்டியது தானே ....
  15. உங்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன் கப்பித்தான். சிலநாட்களுக்கு முன்னரேதான் அவதானித்த விடயம் என்பதால் மறந்திருக்கவும் சந்தர்ப்பம் இல்லை. இன்னுமொரு சுவாரசியமான விடயம் - "துப்பினால் 250 ரூபாய் தண்டம்"- என்றும் மெட்ரோ நிலையங்களில் ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டி வைத்திருக்கிறார்கள். எவராவது மெட்ரோ நிலையங்களில் துப்பி நான் காணவில்லை. முந்தைய வருட(2022) இறுதியில் பாரிஸ் மெட்ரோவை பல நாட்கள் உபயோகித்திருந்தேன். டெல்லி, பாரிஸ் மெட்ரோ இரண்டிலுமே அறிவித்தல் மொழியை விட வித்தியாசம் வேறேதும் கண்டிலேன்.
  16. கடந்த சில வாரங்களை இந்தியாவில் விடுமுறையில் செலவிட்டிருந்தேன். டெல்லி மெட்ரோ அடிக்கடி பயன்படுத்தியிருந்தேன். உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது. எதிர்பாராத விடயம் ஒன்றையும் அவதானித்தேன். இரயில் வந்து நின்றததும் பயணிகள் வாசலருகே ஏறுவதற்காக அமைதியாக வரிசையில் காத்து நின்றனர். இறங்குபவர்களை வாசலின் ஒருபக்கமாக இறங்க விட்டு இவர்கள் ஒவ்வொருவராக உள்ளே ஏறிக்கொண்டிருந்தனர். யப்பானியசத்தை டில்லியில் கண்ட நேரம் அது. இந்தியா வெகு விரைவாக வயதுக்கு வந்து கொண்டிருக்கிறது .
  17. இயர் எண்டு ஹாலிடே ட்ரிப் உடன் கிளைம் பண்றத்துக்கு ஆஃபீஸியலாக சமுனான்சலாகே ஏதாவது சேர்க்க வாணும் தானே மக்கே.. பெரிய சீரியஸா எடுக்க வாணாம் தானே ..
  18. இதில் ஈடுபடும் ஆணோ , பெண்ணோ, தத்தமது சட்டபூர்வமான துணைகளும் இப்பிடி குருவி சுடப்போனால் கெம்பி எழுவினம் . தேன் பூசி எழுதப்படும் மனோவியல் என்று மறைக்கப்படும் சால்ஜாப்புகள் எல்லாம் அங்கே பல்லிளித்து அடிபட்டுப்போகும் . போங்கய்யா, போய் புருஷன் பெண்சாதிக்கு உண்மையாய் இருந்து சீவியுங்கப்பா ....
  19. உள்வீட்டு அலுவல் எண்டு முடிக்கச் சொல்லி வந்திருக்கோ தெரியவில்லை .. அது தான் உள்வீட்டு ஆக்களின்ர DNA எடுத்து , பின் பொருத்தி , பின் முடித்து விடலாம் ..
  20. காணிப்பிரச்சினை பற்றி கதை வருவதால் தோன்றிற்று .. " தோம்பு " என்றால் என்ன ...
  21. சகோதரி, உங்கள் பதிவுகள் முழுவதும் வாசித்து முடிய இன்னமும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை - in progress… நன்றாக இருக்கிறது. நானும் சென்ற மாசி மாதம் இலங்கை சென்றிருந்தேன். உங்களை ஒட்டிய பல அனுபவங்கள் எனக்கும் கிடைத்தன. பயணங்கள் இனிமையானவை. உங்கள் கையில் தூங்கி விழுந்த அந்த வயோதிபரின் தலையை நீங்கள் தள்ளி விட்ட படலம் வாசிக்கும் போது நினைவில் தட்டி நிற்கும் நிகழ்வொன்று.. சென்ற வருட இறுதியில் ஐரோப்பிய பயணம் சென்றிருந்த போது , உலகிலேயே சாய்வு கூடிய ரயில் பாதையில் பயணம் செய்து சுவிஸ் ஆல்ப்ஸின் உச்சியொன்றிற்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது. மனோரம்மியமான சுற்றுப்புற சூழல் காட்சிகள். ( சிவந்த மண் சிவாஜி -காஞ்சனா காட்சிகளை மனதில் கொள்க…) . மிகுந்த ஆர்வத்துடன் எனது போன் கமராவை செல்ஃபீ தடியில் கொழுவி சீற்றிட்கு கீழே முழந்தாளிட்டபடி வெளியேயிருந்த சுற்றுப்புற சூழ்நிலைகளை கவர் பண்ணிக் கொண்டிருந்தேன். சில காட்சிகளை ரயில் தாண்டு முன் பிடித்துவிடவேண்டுமே என்று, எனது பொசிஷனை அடிக்கடி நகர்த்திக்கொண்டிருந்திருந்தேன் என்று நினைக்கிறேன் . இருந்தாற்போல் எனது கால் ஒன்றிற்கு இன்னொரு காலினால் பலத்த அடியொன்று விழ, திடுக்கிட்டுப் போய் கீழே பார்த்தேன். சுருங்கிப்போன சிறிய காலொன்று எனக்கு உதைத்து விட்டு விலகிக் கொண்டிருந்தது. சற்றே நிமிர்ந்து பார்த்தால் ஒரு 95 வயது மதிக்கக் கூடிய ஒரு பெண்மணி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தார் , அந்த காலுக்கு சொந்தக்காரராக. ஆர்வக்கோளாறில் அவரது காலுக்கு இடித்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டு , அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அவர் மன்னிக்கவில்லை என அவர் முகக்குறிப்பு உணர்த்திற்று . பேரிளம் பூவையர் பொது போக்குவரத்து இடங்களில் அப்பாவி ஆடவர் மீது தவறுதலாக நடக்கும் நிகழ்வுகளுக்கு கடும் கோபம் கொள்வதும் ஏனோ . இந்தத்தன்மை இனம் , மொழி , கலாச்சாரம் தாண்டி உலகளாவிய ரீதியில் ஒன்றாகவே இருப்பது போல தோன்றுகிறதே ……
  22. கூகிள் தற்போது2,800 டாலர் வரை மதிப்புள்ள தனது பங்குகளை இருபதாகப் பிரித்து ஒரு பங்கு ஏறத்தாழ 140 டாலருக்கு சந்தையில் விடப் போகிறார்கள் - வாங்கிக் கொள்ளலாமே ....
  23. பங்கு வர்த்தகத்தில் இதுவரை ஒரு $50,000 அளவில் தொலைத்து விட்டிருக்கும் கனடாவில் இருக்கும் நண்பன் ஒருவனின் சிபாரிசின் பேரில் தான் இதில் இறங்கியிருக்கிறேன், ஏதேனும் பிழைத்தால் மச்சான் என்னிட்ட வரப்படாது என்ற அவனின் நிபந்தனையுடன். அவன் இப்ப வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகள் வாங்கின விலையை விட 50% எண்டாலும் இப்ப கூடி இருக்கெண்டு சொன்னது கொசுறு செய்தி. நிகழ்தகவு மிகவும் குறைவாக இருக்கக் கூடிய சம்பவம் ஒன்றும் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது நேற்றிரவு. எனது Debit Card இன் காலாவதி திகதி 30 செப்டம்பர் 2021 என்பதனை நேற்று இந்த திகதியை இன்புட் பண்ணும் போது தான் பார்த்தேன். புதிய கார்டு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் தபாலில் வந்தும் அதை எங்கேயோ வைத்ததும் ஞாபகம் வந்தது. இரவு 12 மணி வரை இருக்கிற கார்டை பாவிக்கலாம் என்று நான் யோசித்தது தான் எனது ஒரு மணி நேர உழைப்பை compromise பண்ணி , ஊர்க்காவின் பயணம் கடினமான கல் முள் பாதையில் தான் என்ற பழைய கவிதையை மீண்டும் பிரமிக்க வைத்ததோ.. இன்று புதிய கார்டு உடன் (இப்ப அதை எங்கே வைத்தது என்று தேட வேண்டும்) மீண்டும் முயற்சி செய்ய, வளைவின் பின் பாதை நல்ல பாதையாக இருக்கிறதா என்று தெரிந்து விடும்….
  24. கிரிப்டொ கொயின் வாங்குவதற்கான முதலாவது நடவடிக்கையில் கடந்த 1 மணி நேரமாக ( இங்க இப்ப இரவு 11:59 - Brisbane Time ) ஈடுபட்டு 12 பாஸ்வேர்ட் எல்லாம் எழுதி எடுத்து திருப்பி என்டர் பண்ணி ஒரு 1750 டாலரை பதிந்து (with my debit card details) Payment Authorise பண்ண எனது வங்கிக்கு connect பண்ணி One Time Password உம் என்டெர் பண்ணி அழுத்திவிட்டு கணக்கு சரி பார்க்கப்படுகிறது திரையை மூடாதே என்ற எச்சரிக்கையை திரில்லோட பார்த்துக் கொண்டிருக்க -- டொட் டொடைங் ..Your Payment is not approved , use a different card or contact your bank எண்டு வருகுது .. முன்பு கெட்ட பாடல் ஒன்று தூரத்தில் ஒலிக்குமாப் போல இருப்பது ஒருவேளை பிரமை தானோ .. ஊர்காவிற்கு செல்லும் பாதைகள் கடினம் தான் கல்லும் முள்ளும் னிறைந்தன என்றாலும் என் பாதங்கள் தொடர்ந்து நடக்கும் .😕

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.