Everything posted by சாமானியன்
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இதில் ஐம்பத்து வீதமானவற்றை உடனடியாக வட கிழக்கில் போரினால் அங்கவீனமுற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு ( முன்னாள் போராளிகள் உட்பட) பிரித்து வழங்க வேண்டும் . எஞ்சிய அரைவாசியை , ஓரிரு வருடங்களுக்குள் உரிமை கோரப்படாவிட்டால் , அவற்றையும் இவ்வாறே செய்ய வேண்டும் . ( இப்ப யாரவது புத்திசாலி ஓருவன் வந்து , முதல் குடுத்த அரைவாசிக்குள் யாராவது உரிமை கோரினால் என்ன செய்வது எண்டு கேட்டால் .. கொலை தான் விழும் - கேக்கிற ஆளை )
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
பனீர் ஐ விட்டு விட்டீர்களே .. நேற்று இங்கே மெல்பேர்னில் வாங்கியது , மேட் இன் கனடா , Fried paneer கிலோ $20 . இலங்கை சமாச்சாரம் நிறைய இருக்கு அந்த கடையில் அநேகமானவற்றில் லேபிள் சிங்களத்திலும் இங்கிலீஷிலும் மட்டுமே உண்டு , அவற்றினை தவிர்த்து விடுவேன் . ( உப்பிட பேரைப் பார்க்கதேடா மடையா, டேஸ்ட்டை மட்டும் பாரடா .. Mind voice )
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
யாழில் உள்ள வேறு சிலரையும் நிரலில் சேர்த்துக் கொள்ளலாம் போல தெரிகிறதே .. 🙃
-
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்
ஒரு வருடம் எத்தனை பேர் இந்த துறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்இ ஒரு வருடத்தில் எத்தனை பேருக்கு தமிழ் பகுதிகளில் தொழில் வாய்ப்பு இருக்கிறது போன்ற புள்ளி விபரங்கள் உண்டா ஐயா ? தீர்மானமான கருத்துக்கள் இந்த புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் என நம்புகிறேன் நாமெல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் வகையினர் அல்லவே !!
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
ரொம்ப சரிங்க, புள்ளைக்கு பதிலா பொறுப்பில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாம் போயிடலாம் ஜெயிலுக்கு . கொஞ்சம் விஜாரிச்சு சொல்லிடுங்க , ஏங்கினை போய் ரிப்போர்ட் பண்றத்துன்னு நாலு பேத்தோட அஞ்சாவதாகவோ ஆறாவதாவோ , புள்ளை பொழை விட்டிடுச்சு . கம்னு கெடப்பியா , அத்தை வுட்டுட்டு, பெனாத்திட்டிருக்கியே
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
நாப்பதாச்சு , தள்ளிப்படுங்கோ என்கிற உலகில் ..
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
// மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?// தையிட்டியில் பவுத்த வழிபாடு சரியாக 1345 ம் ஆண்டு , பங்குனி மாதம் இரண்டாம் திகதி தொடங்கியது . ஆனபடியால் , தையிட்டியில் , அங்கினேக்கு அக்கம் பக்கத்தில இருக்கிற உறுதிக்காணிகளையெல்லாம் பிடிச்சு , பன்சல , மண்டபம் , இத்தியாத்தி ஐடம்ஸை கட்டிக்கொள்வது சாலச்சிறந்ததவும் பொருத்தமானதும் ஆகி நிற்கின்றது
-
அப்பா......
என்ன , எல்லோரும் தங்கள் முதுகுகளில் தாங்களே ஷாட் போட்டுக் கொள்ளுகினம்.. இந்த ட்ரம்பன் வந்த நாளில் இருந்து எல்லாமே அப்பிடி இப்பிடித்த தான் இருக்கு ...
-
யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!
யாருக்கு எந்த வகை முட்டாசி குடுக்கிறதெண்டு மக்கள் தெளிவாயிருக்கினம் எனபதை நீங்கள் அறிஞ்ஞில்லா ?
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
அது சரி , இன்டெர்நாஷனல் மென்ஸ் டே எப்பவாம் வருது ..?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
என்னமோ நம்ம ஜெலன்ஸ்கியின் லெவலுக்கு கனம் ஆமையாரை எலிவேட் பண்ணியே தீர்வது என்றொரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது மாதிரியெல்லோ இருக்கு .. ?!
-
கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி!
நல்லவனுக்கு ஒரு ஆசை கெட்டவனுக்கு ஒரு ஆசை இடையில நிக்கிறவனுக்கும் ஒரு ஆசை கூட்டிக் கழித்தால் ஆசையே அலை போலே நாம் எல்லாம் அதன் மேலே தான் மிஞ்சும் ...
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
சமகாலத்து குளிர்காலம் முடிவடை போழ்துகளில் உக்ரேனியத்து நந்திக்கடல்களில் அலைகள் மீண்டும் மேலெழும் துருப்பம்மான் செல்வார் அங்கே அடையாளம் காண உடன் போவார் யாராக இருக்கும் ? 😡
-
மாவையின் மரணம் தொடர்பில் கொட்டித் தீர்க்கப்படும் ஆதங்கங்கள்
இப்ப பொது வெளிகளில் எல்லோருமே அருச்சுனா மாதிரி காண்டீபத்துடன் திரிய வெளிக்கிட்டிட்ட மாதிரி இருக்கு . அது கூட பரவாயில்லை .. தங்கத்தையும் தேடிப்போய் இ இருக்கிற வைரத்தை இழக்காதிருந்தால் சரி தான்
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
இதுக்குத்தான் ஓடி விளங்கவேணும் எண்டு சொல்லுறவையோ .. அவர் பகல் நேராக கணக்கெல்லோ விட்டிருக்கிறார் .. இருக்கிற இடத்தில சரியா 12 மணித்தியாலம் பகல் போல கிடக்கு
-
கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!
என்ன உலகமய்யா இது .. இங்கிலீசு பத்திரிக்கை எழுதுகிறான் " தமிழ் எம் பி யின் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு " எண்டு .. அதே சம்பவத்தை தினக்குரல் போடுது " எம் பி யின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு " எண்டு .. செய்வினைகளும் செயப்பாட்டு வினைகளும் சும்மா புகுந்து விளையாடுகின்றன
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கஸ்தூரி மிஸ் தமிழ்நாடு ஆகவும் இருந்திருக்கிறார் , இது போதாதா ...😀 கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
நம்மட பொஸ் என்னை தனியா கடை வழிய விடுவதில்லை , தான் சொல்லாத கண்ட கண்ட சாமான்களை வாங்கி வந்து விடுவேன் எண்டு . நேற்று என்னை பால் பாண் வாங்க சொல்ல நான் கேட்டனான் , நீர் வரேல்லையோ எண்டு . என்ன இந்த சாரியோட வூலிசிற்குள்ள வரவோ . அது சரி வராது என்று ஆள் ஜகா வாங்கி விட்டது . அருமையாக கிடைக்கிற சந்தர்ப்பம் என்ற பரபரப்பில் , குறு பார்வைகளைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை , ஆள் மனம் மாறேக்கு முன்னர் போய் வந்து விடுவோம் எண்டு . செக்கவுட் பெண்மணியின் வழமைக்கு மாறான கவனிப்பு ஒரு கிகுளுப்பாக தான் இருந்தது . ம்ம்ம் .. சூரன் போர் வருடத்தில் ஒரு தடவை தானே வரும் ..
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
நேற்று சூரன் போர் முடிய , வரும் வழியில் பால் பாண் வாங்கவேண்டும் என்ற பாரியாரின் கட்டளையை சிரமேற்கொண்டு , விபூதி சந்தனப் பொட்டு , வேட்டிசகிதம் வூலிசிற்குள் போனேன் . உள்ளே சென்ற நேரம் தொடக்கம் வெளியே வரும் வர பார்வைக்கணைகள் . செக்கவுட் ஒபெரட்டரின் கஸ்டமர் சேவை வழமையை விட மேம்பட்டிருந்ததை உணரக்கூடியதாக இருந்தது . சாமானியன் நானொரு வலதுசாரியோ ..? 😀
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்
அந்த வரலாற்றுத் தெளிவின்மை மூலம் தானே இந்த கோடிக்கணக்கான பணத்தை மற்றப்பக்கமாக நீவிர் வைத்திருக்கிறீர் ..? // கஜேந்திரகுமார் எவ்வளவு பங்கு LOLC இல் வைத்துள்ளார்கள் என்பதை ஒரு கூகிள் தேடுதல் மூலம் எடுக்கலாம். கீழே போட்டுள்ளேன். அவருக்கும் அவரது அம்மாவுக்கும் சேர்த்து 2 மில்லியன் பங்குகள் உள்ளன. ஒரு பங்கு Rs500. ஆகவே இவர்களுக்கு மாத்திரம் Rs 1 பில்லியன் (100 கோடி) பெறுமதியான பங்குகள் உள்ளன. https://stock.ideabeam.com/company/LOLC/shareholder-other?page=2et Outlook for Android // தெளிவிருந்திருந்தால் , வடகிழக்கில் மாத்திரம் முதலீடு செய்திருப்பீரே அண்ணாத்தை ..???
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
புத்தனாயிருந்து , இப்ப பிள்ளையாராகிட்டீங்கன்னுட்டு சொல்லவேயில்லயே .. உங்களோட டூ .. 😀 அது சரி , கேட்டுத் தான் அனுப்பினீகளா , கேளாமலே கொடுத்தீகளா, அடி ஆத்தி ?
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
ஆறுமுகன் சோதரனின் நேசா ! சிங்கள நண்பர் ஒருவர் , AKD கட்சியின் தென் பகுதி தேர்தல் அலுவலக செலவிற்கு என்னிடம் நிதி பங்களிப்பு கோரியிருந்தார் . அனுப்பியிருந்திருக்கிறேன் ...
-
தமிழ்த்தாய் வாழ்த்து - சுப.சோமசுந்தரம்
தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); எனில் தமிழகம் என்று நேரேயே அமைத்து விட வேண்டியதது தானே ஏனிந்த சுத்து மாத்து சாரே //தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே..// ஐயா , தமிழ் சமூகத்தை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறீக போல இருக்கு .. சனாதனம் , ரிஷி , நீட் எல்லாமே தமிழ் சமூகத்திற்கு எதிரான கேவலமான விடயங்கள் என்று தமிழ் மக்கள் சொன்னார்களா .. என்னா சாரே , கண்மூடித் தனமா இருக்கே வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே
-
வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு - சுமந்திரன்
"(B) பார் " புகழ் திருநீறு தாரி யாழ் முதலமைச்சராக இருந்த காலங்களில் இதே விடயம் பற்றி பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இப்ப இந்த "சுத்து மாத்து" இடையில புகுந்து தான் தான் இதை தொடக்கி வைத்த மாதிரி கடை விடுகுது ? 🤣