Search the Community
Showing results for tags 'மட்டக்களப்பு'.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198146
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196648
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்களால்; 1989ம் ஆண்டு இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர்; மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும். மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது. இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது "முன்னுரை" மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், மாதயிதழ்கள், நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகளால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும். இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும். *****
- 164 replies
-
- 6
-
- முஸ்லிம்கள்
- சோனகர்
-
(and 59 more)
Tagged with:
- முஸ்லிம்கள்
- சோனகர்
- படுகொலைகள்
- வன்புணர்ச்சி
- கொலை
- குற்றம்
- இனவழிப்பு
- இனப்படுகொலை
- முஸ்லிம் ஊர்காவல் படை
- இஸ்லாமியர்
- ஜிஹாத்
- ஜிகாத்
- தமிழர்
- தமிழீழம்
- ஈழம்
- விடுதலைப் புலிகள்
- சிறிலங்கா
- அதிரடிப்படை
- காத்தான்குடி
- திருகோணமலை
- மட்டக்களப்பு
- அம்பாறை
- முஸ்லிம் படுகொலை
- காத்தான்குடி படுகொலை
- பள்ளிவாசல்
- மசூதி
- தமிழ் இனப்படுகொலை
- சிறிலங்கா இராணுவம்
- இராணுவம்
- ஊர்காவல்படை
- முஸ்லிம்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்
- இஸ்லாமியர்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லீம்கள் செய்த படுகொலைகள்
- நிகழ்த்திய
- முசுலிம்
- அழிவுகள்
- கொலைகள்
- வீரமுனை படுகொலை
- ஊர்காவல் படை
- காடையர்கள்
- muslim
- massacres
- tamils
- sri lanka
- tamil eelam
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- முஸ்லிம் தாக்குதல்
- பள்ளிவாசல் தாக்குதல்
- இஸ்லாமியர் மீதான கொலை
- வன்முறை
- கற்பழிப்பு
- அடிதடி
- படுகொலை
- கொள்ளை
- தமிழர் படுகொலை
- தாக்குதல்
- முஸ்லிம்கள் படுகொலை
- காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை
- ஏறாவூர் படுகொலை
-
29 JUL, 2024 | 12:27 PM மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (29) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாவற்காடு கிராமத்தில் கடந்த 2022 ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்டு இயங்கி வரும் சூரிய சக்தி மின் உற்பத்தி (சோலார் பவர்) நிலையம் மேலும் பல மடங்கு விஸ்தரிக்கப்படவிருப்பதாக கூறி சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சூரிய மின் உற்பத்தியை விஸ்தரித்தால் தமது விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புக்களுக்கும் கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இதன்போது தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த விஸ்தரிப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர். https://www.virakesari.lk/article/189679
-
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 04:14 PM மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாதாட் கிராமத்தில் தனது மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தடியால் தாக்கியதாக குறித்த பெண்ணின் கணவரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் முதல் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் புத்தளம் பகுதியில் உள்ள மேலும் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் குறித்த இரண்டாவது கணவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாகவும் குறித்த கணவரும் குறித்த பெண்ணை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த இரண்டாவது கணவரின் பிள்ளை குறித்த பெண்ணினால் தாக்கப்படுவதாக அயலவர்களினால் குறித்த நபருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் ஊரான ஏறாவூர் சாதாட்ற்கு வந்த இரண்டாவது கணவர் தனது பிள்ளையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு குறித்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பெண்ணின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து பார்த்த போது தனது பிள்ளையை குறித்த பெண் தாக்கியது காணொளியாக எடுக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். உடனடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து பொலிஸாரிடம் காணொளியை காண்பித்துள்ளார். இதன்போது பொலிஸார் அதிர்ச்சியடைந்த நிலையில் குறித்த காணொளிக்கு அமைய குறித்த பெண்ணை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/184798
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு ஒரு சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களிலேயே இடம்பெறுவதாகவும், அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில், இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்தானது மருத்துவ துறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாகவும், அத்துடன் பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302244
-
மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை மின்சார சபையின் 90 மெகாவொட் ஒப்பந்த நடைமுறையின் கீழ் கட்டப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது X கணக்கில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். BackBay Solar தனியார் நிறுவனத்தினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295196