Jump to content

குடும்பிமலை வேறு; தொப்பிக்கல் வேறு, குழம்ப வேண்டாம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

மூலம்:   https://www.facebook.com/TrincoAid/posts/334149313677151/

(தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவர் நன்னிச் சோழன் ஆவார்)

---------------------------------------------------------------------------

 

 

குடும்பிமலை எதிர் தொப்பிக்கல்

 

 

கல் தோன்றிய காலத்தில் இருந்தே இந்தப் பிரதேசத்தில் இருக்கும்

 1. குசலான மலை,
 2. கேவர் மலை,
 3. தொப்பிகல் மலை,
 4. கார் மலை,
 5. குடும்பி மலை,
 6. நாகம்பு மலை,
 7. ரெண்டு கல் மலை,
 8. படர் மலை,
 9. மண் மலை

போன்ற பல மலைகளில் இதுவும் ஒன்று. பெரிய மலைகள் என்று இல்லாமல், மலைக் குன்றுகள் என்றே சொல்லலாம். இன்று நிலஆக்கிரமிப்பின் அடையாளமாக தொப்பிகல் மலையும், குடும்பி மலையும் விளங்குகின்றன.

A-15 திருமலை வீதியில் மட்டக்களப்பில் இருந்து 24வது கிலோமீட்டர் தூரத்தில் வரும் கிரான் சந்தியில் இருந்து, புலி பாய்ந்தகல் வீதியில் வடமுனையை நோக்கிச் செல்லும் பாதையில் 26வது கிலோமீட்டர் பிரிந்து 6-7 கிலோமீட்டர் சென்றால் குடும்பி மலைக் கிராமம் இருக்கின்றது.

 


வரலாற்று சிறப்பு மிக்க எந்த தடயங்களும் இல்லா விட்டாலும், அண்மைக்கால வரலாற்றில் இடம்பிடித்து விட்ட ஒரு மலையாகவும், பெயராகவும் இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் இடம் பெற்று விட்டது. தொப்பிக்கல் மலை சம்பந்தமாக மயக்கமான தெளிவற்ற நிலை பலரிடமும் இருக்கின்றது.

1977ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கள அரசினதும், பாதுகாப்பு படைகளினதும் பேசு பொருளாக இந்த மலை இருந்து வருகின்றது.

திடீர் என்று 2006ஆம் ஆண்டு இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோடு (google) வலைதளத்திலும் தேடப்படும் ஒரு பொருளாக இந்தப் பிரதேசம் மாறியது. அத்தோடு உள்ளூரிலும், அண்டைய நாடுகளில் இருந்தும் இந்தப் பிரதேசத்தை எல்லோரும் ஆவலோடும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

என்ன நடக்கின்றது? எப்படி நடந்ததது? என்ற பல கேள்விகள் எல்லோருடைய மனங்களையும் கிளறிக் கொண்டு இருந்தது. போதாக்குறைக்கு இலங்கை அரசாங்கமும், இராணுவத்தினரும், அரச ஊடகங்கள் ஊடாக தொப்பிக் கல் மலைப் பிரதேசம் பற்றியே பேசிக் கொண்டு இருந்தது.

main-qimg-aaaddc1029a4f7161a9cdccf7802491a.jpg

'குடும்பிமலை என்ற குன்றை தொப்பிக்கல் என்று மாற்றிப் புனைந்து வெளியிடப்பட்ட தாள்'🤬

அத்தோடு இலங்கை மத்திய வங்கியும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தொப்பிக்கல் மலை என்று, குடும்பி மலையின் படத்தை 1000ஆம் ரூபா நாணயத்தாளில் பதிவிட்டு அந்தப் பிரதேசத்தில் அரச படையினர் சிங்கள கொடியைப் பறக்க விடுவது போன்று அதி தீவிரமாக ஏற்றிக் கொண்டிருப்பதாக சாட்சிப்படுத்தி இருந்தது. இது ஒரு முக்கியத்துவம் மிக்க வரலாற்றுப் பதிவாக சிங்கள அரசு பதிவிட்டிருந்தது.

இந்தக் கொடி ஏற்றப்படுவதற்கு முன் இங்கே இந்தப் பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்த 'புலிக் கொடி' பற்றியும், அதன் வரலாற்று தடம் பற்றியும் ஆய்வாளர்களை தேடிப் பார்க்க தூண்டிய ஒரு நிகழ்வாக இதைப் பார்க்கலாம். முதலில் தொப்பிக்கல் மலை, குடும்பி மலை இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தூரம் என்பவற்றைப் பார்ப்போம்.

 


 • குடும்பி மலை:

main-qimg-558218fcd0f38271a3e4efc926967132.jpg

Kudumpi malai.jpg

இந்தக் குடும்பி மலை, கிரான் சந்தியில் இருந்து 26ஆவது மைல்கல்லில் இருந்து குறுக்காக 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. சாதாரணமாக ஒரு சூடு நெல் கதிர்களை அறுத்து குவித்து வைப்பது போன்று தோற்றத்தில் இருக்கும்.

அடி வாரம் அகன்றும், விரிந்தும், வட்டமாகவும், உச்சியில் ஒரு கல்லும் உடையாது, இந்த உச்சிக்கல் தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு குடும்பியைப் போல (பிராமணர்கள் கட்டும் குடும்பியைப் போல) இருக்கும். இந்த தோற்றத்தை தூரத்தில் இருந்து பார்த்தல் தெளிவாகத் தெரியும்.

 


 • தொப்பிக்கல் மலை:

main-qimg-6426e40a2c2c9aa03ce794cb1f991f6d.jpg

Thoppikkal malai.jpg

தொப்பிக்கல் மலை என்பது அதே பாதையில் மியான் குளச்சந்தியில் இருந்து 30ஆவது கிலோமீட்டரில் பிரிந்து தென் கிழக்குப் பக்கமாக 5 கிலோமீட்டர் சென்று பெரிய மியான் கல் வழியாக வெள்ளைக் கல் மலை, பால வட்டவான், மயிலத்த மடு, மாதவணை போன்ற காட்டுப் பிரதேசங்களை அண்டியதாக கிரானில் இருந்தது சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது.

அதே போல் செங்கலடிச் சந்தியில் இருந்து பதுளை வீதியில் சென்று மேற்குப் பக்கமாக, மாவடி ஓடை, புலுட்டு மான் ஓடை, வழியாகவும் (சரியான பாதை இல்லை) செல்லலாம். பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு - திருமலை வீதியில் மன்னப்பிட்டிச் சந்தி ஊடாக அருகம்பல என்ற சிங்கள கிராமத்தை தாண்டி கிழக்குப் பக்கமாக, மாந்தலை ஆற்றரைக் கடந்தும் தொப்பிக்கல் மலைக்குப் போகலாம்.

இது வட்ட வடிவம் அல்லாத முன் பக்கத்திற்க்கு மட்டும் முனை வைத்த ஒரு தொப்பியை வைத்தது போன்று தோற்றத்தில் இருக்கும், இந்தப் பிரதேசத்தில் இன்னும் ஒருவரும் குடியேறவில்லை. (2017 ஆம் ஆண்டு நிலவரப்படி)

ஆனால் நீண்ட காலமாக வந்தாறு மூலை, சித்தாண்டி, கிரான் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பருவ காலத்தில் மாடுகள் தங்கள் கால் நடைகளை மேய்ப்பதற்காக இங்கு வருவார்கள். இந்தப் பகுதி நீண்ட காலமாக தமிழர்களின் கால் நடைகள் மேய்க்கும் மேய்ச்சல் தரையாகவே பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் யுத்தம் முடிந்த பிறகு பெரும்பான்மை இனத்தவர்கள் மியான் கல், மாந்தலை ஆற்றைக் கடந்தது வந்து இந்த பிரதேசத்தில் இருந்த காடுகளை அழித்து நெல்லும், வேறு உப உணவுப்பயிர்களும் செய்தார்கள். அத்தோடு இங்கு உள்ள தமிழர்களின் கால் நடைகளை துப்பாக்கியால் சுட்டும், சுருக்கு வைத்துப் பிடித்தும் அநியாயம் செய்தார்கள். இதைக் கேட்கச் சென்ற தமிழர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். கால் நடைகளை கட்டி வைத்து நட்ட ஈடும் அறவிட்டார்கள். இவர்கள் காடுகளை அழித்த போது வன இலாக்காவினர் கண்டு கொள்ளவில்லை. இவர்களுக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும், மாந்தலை ஆற்று ஓரத்தில் முகாம் அமைத்து பாதுகாப்புப் படையினர் இருந்தார்கள்.

இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கும், அத்து மீறிய குடி யேற்றத்துக்கும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் நீண்ட காலமாக பல முயற்சிகளை எடுத்து பல தரப்பினர்களிடம் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வத்திருக்கின்றார்கள். இதன் படி ஒரு பெரிய காவலரண் அமைக்கப்பட்டதோடு, இங்குள்ள கால் நடை வளர்ப்போருக்கு பாதுகாப்பும், கால் நடைகளுக்கான குடிநீர் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.


 

இந்த இரண்டு மலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களே, தொப்பிக்கல் மலையின் மறுபெயர் தான் குடும்பி மலை என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த மயக்கத்தை ஏற்படுத்தியது இலங்கை அரசாங்கமும், படைகளுமே ஆகும்.

குடும்பி மலையைச் சுற்றி மீரானக் கடவை, சின்ன மியான்கல், பெரிய மீயான்கள் குளம், கிரான் வட்டை, அசுரவணச் சோலை போன்ற பல கிராமங்கள் இருக்கின்றன.

1960 ஆண்டு காலப் பகுதியில் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள்இ காடுகள் வெட்டி சேனைப் பயிரும் வேளான்மையும் செய்து வந்தார்கள். 1970 ம் ஆண்டு காலப் பகுதியில் தேக்கு மரம் நாட்டும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி பலருக்கு இங்கே குடியேற வாய்ப்புக்கள் கிட்டியது.

1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு பௌத்த பிக்குவின் தலைமையில் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் இப்பகுதியில் கொண்டு குடியேற்றப்பட்டு தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழர்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்தக் குடியேற்றத்திற்கு பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதி தீவிரமாக செயல்பட்டார். அத்தோடு அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது. இந்தக் காலப்ப் பகுதியில் “பொடியன்களின் ” ஆத்திரம் மேலோங்கியதால், இந்தக் குடியிருப்புக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டதோடு, குடியேற்றவாசிகளும் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

குடுப்பி மலையை அண்டிய கிராமங்களில் - சின்ன மீயான்கல், பெரிய மீயான்கல் - ஆகியவற்றில் 69 குடும்பங்களும் எனயா பகுதிகளில் எல்லாம் சேர்த்து மொத்தம் 169 குடும்பங்களைச் சேர்ந்த 774 பேர் குடியிருக்கின்றார்கள். குடும்பி மலைக் குமரன் வித்தியாலயத்தில் 14 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றார்கள். இது ஒரு ஆரம்பப் பிரிவுப் பாடசாலையாகும். இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த, கோவிந்தமூர்த்தி பிரசாகினி, பரமகுமார் யசாஜினி, பொன்னுத்துரை சரோஜினி, சற்குணாந்தம் சுலக்சனா ஆகியோர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மடுவடிப் பிள்ளையார், முத்துமாரி அம்மன், கண்ணகி அம்மன், வேங்கையடி முருகன் போன்ற ஆலயங்களையும் கட்டி வழிபட்டு வருகின்றார்கள் . மியான் கல் குளம் 1600 ஏக்கர் வயல் நிலத்திற்கு நீர் பாய்ச்சக் கூடிய குளமாகும். இங்கு தொண்டு நிறுவனங்களினால் குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டிருக்கின்றது.

போர்க் காலத்தில் விடுதலைப் போராட்டத்தோடு இந்த மக்கள் இரண்டறக் கலந்திருந்தார்கள். பல போராளிகளையும், மாவீரர்களையும் தந்த மண், இந்த மண். போரழிவுகளின் தடங்களையும் இன்றும் இங்கே காணலாம்.

போர் முடிந்த பின்னர் இந்தப் பகுதி ஒரு ஆக்கிரமிப்புப் பிரதேசமாகவே இருக்கின்றது. மீயான் கல் குளச்சந்தியில் பெரியதொரு இராணுவ முகாமும், வசதிகளுடன் கூடிய உல்லாச விடுதியும் இருக்கின்றது. இந்த விடுதியை இராணுவத்தினரே நடத்தி வருகின்றார்கள்.

கிரான் ஆற்று ஓரம் இருந்து, புலி பாய்ந்த கல், தரவை, நெடும் பாதை எங்கும் இராணுவ முகாம்களும், காவல் அரண்களும் இன்று இங்கு இருப்பதைக் காணலாம். இவ்வாறு சிங்கள பெளத்த பேரினவாத அரச இயந்திரத்தின் நில ஆக்கிரமிப்பின் அடையாளமாக குடும்பிமலையும், தொப்பிக்கல் மலையும் காணப்படுகின்றது.

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

 • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
 • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நன்னிச் சோழன் said:

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

 • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
 • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
25 minutes ago, goshan_che said:

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

 

அண்ணை இது நான் எழுதியது அன்று... வேசுபுக்கில் புல்லு மேஞ்சு கொண்டு போகும் போது ஆணி குத்துவது போல கிடைத்தது. அப்படியே கொண்டு வந்து இங்கு போட்டு விட்டேன். 

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2021 at 01:22, goshan_che said:

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

உகந்தைக்கு போகும் வழியில் இருப்பதும் குடும்பி மலை தான் ,தொப்பிஹல  என சிங்களத்தில் சொல்வார்கள்,

உன்னிச்சை போகும் வழியில இருப்பதும் குடும்பி மலைதான் ஆனால் இந்த மலைதான் பிரபலமான மலைப்பகுதி புலிகள் இருந்த காலத்தில் ராணுவம் கிழக்கை கைப்பற்றிய போது பாரிய முகாமிட்டுள்ளது இதனால் இப்போது தொப்பிஹல என்றே அழைக்கப்படுகிறது .

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
On 3/10/2021 at 15:25, நன்னிச் சோழன் said:

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

 • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
 • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

இந்த தகவல் தவறானது என்பதையும் மேலே கட்டுரையில் உள்ளதே சரியானது என்பதையும் வாசகருக்கு நான் தெளிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இந்த தகவல் தவறானது என்பதையும் மேலே கட்டுரையில் உள்ளதே சரியானது என்பதையும் வாசகருக்கு நான் தெளிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி நன்னி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

நன்றி நன்னி

🙏🙏

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம் வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை. சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது. பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால், அவரின் வாழ்க்கைத் தரம் சிறப்பு என்பதாகக் கொள்ளப்படும். வாழ்வுநிலை மேம்பட்டதாக இருந்தால், வாழ்க்கைத்தரமும் சிறப்பாகத்தானே அமைந்தாக வேண்டும்? உடல்நலம், இன்பம் இவற்றுக்கெல்லாம் வாழ்வுநிலைதானே அடிப்படை? ஆமாம். எனினும், வசதிகள் இருந்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கைத்தரம் அமைந்து விடாது. நீர்நிலை இருந்தால்தான் நீச்சல் அடிக்கமுடியும். ஆனால் நீர்நிலை இருப்பதாலேயே ஒருவர் நீச்சல்காரர் ஆகிவிட முடியாது. அதைப்போன்றதுதான் இவையிரண்டும். கடலளவு நீர் இருந்தால்தான் நீச்சல்காரர் ஆக முடியுமென்பதும் இல்லை. போதிய அளவுக்கான நீர்நிலை இருக்க, அவர் நீச்சல் பழகியிருக்க, அவர் நீச்சல்காரராக உருவெடுப்பார். அதே போன்றதுதான் வாழ்க்கைத்தரம் என்பதும். போதிய அளவு, தேவைப்படும் அளவுக்கான வாழ்வுநிலை அமையப் பெற்று, பண்புநலம், உடல்நலம், பயிற்சி, தன்னுமை(லிபர்ட்டி), இலக்கியம், கலை, சிந்தனையாற்றல், கேளிக்கை முதலானவையும் அமையப் பெறும் போது, அவருக்கான வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாக அமையும். ”The quality of life is more important than life itself. Quality of life actually begins at home - it's in your street, around your community.” -Charles Kennedy வாழ்வுநிலையெனும் வர்க்கபேதத்தில் புதையுண்டு விடாமல், வாழ்க்கைத்தரம் நோக்கிய பயணம் இன்புறுகவே! பணிவுடன் பழமைபேசி https://maniyinpakkam.blogspot.com/2022/08/vs.html
  • மிகுந்த கஸ்டத்தில் வாழும் மலையக மக்கள் கேட் கும் 1000 ரூபா சம்பள உயர்வை கொடுக்க முடியாதவர்கள் அவர்களினால் நாட்டின் பொருளாதாரம் தாங்கப்படுகிறது என்று தெரிந்தும் கூட. நன்றி கெட்டவர்கள்.
  • தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. சிக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை' வெப் தொடராகிறது - கதை என்ன? நபில் அஹமது பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2022, 12:21 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,NFAI   படக்குறிப்பு, தியாகராஜ பாகவதர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய கொலை வழக்காக கருதப்படும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ்- ல் வெப் தொடராக உருவாகி வருகிறது. 1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் பின்னணி, இது தொடராக எடுக்கப்படுவதன் காரணம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது. யார் இந்த லட்சுமி காந்தன்? சி.என்.லட்சுமி காந்தன், பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட அன்றைய மதராஸ் மாகாணத்தில் 1940 ஆம் ஆண்டு 'சினிமா தூது' என்ற பத்திரிக்கையை துவங்கி நடத்தி வந்தார். இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்ததால் காகித பற்றாக்குறை இருந்தது. அதனால் புதிதாக துவங்கிய பல பத்திரிக்கை நிறுவனங்களுக்கு பேப்பர் லைசென்ஸ் வழங்கப்படவில்லை. அதில் 'சினிமா தூது' பத்திரிக்கையும் அடக்கம். இருப்பினும் லட்சுமி காந்தன் பல வழிகளில் முயன்று அனுமதி பெறாமலேயே பத்திரிக்கையை வெளியிட்டு வந்தார். 'சினிமா தூது' பத்திரிக்கையில் திரைத்துறையிலிருந்த முக்கிய நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக எழுதினார். இதனால், கோபமடைந்த திரைத்துறைச் சார்ந்த சிலர் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று பத்திரிகை உரிமையை முடக்கினர்.   'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? "நீ ஸ்கிரிப்ட் எழுதி நான் பார்க்கவில்லையே" - ஸ்டாலின் சொன்னதை நினைவுகூரும் கிருத்திகா உதயநிதி மல்லிகா ஷெராவத் பேட்டி: "சமரசம் செய்யாததால் பட வாய்ப்புகள் குறைந்தன" இதனை அறிந்து கொண்ட லட்சுமி காந்தன், புதியதாக பத்திரிகை துவங்க பிரிட்டிஷ் அரசு தடைவிதித்து இருந்ததால், ஏற்கெனவே துவங்கி சிறு பத்திரிக்கையாக வெளிவந்துக்கொண்டு இருந்த 'இந்து நேசன்' என்ற பத்திரிக்கையை விலை கொடுத்து வாங்கி முன்பை விட மிக அதிகமாக திரைத்துறையைச் சார்ந்த பல தரப்பட்ட நபர்களை பற்றி எழுத துவங்கினார். இது அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக விளங்கியது. லட்சுமிகாந்தன் கொல்லப்பட்டது எப்படி? தொடர்ந்து திரைத்துறையை சார்ந்தவர்களை தாக்கி 'இந்து நேசன்' பத்திரிக்கையில் எழுதி வந்த லட்சுமிகாந்தனுக்கு எதிரிகள் பெருகினர். இதனால் 08-11-1944 அன்று லட்சுமிகாந்தன் மதராஸ் மாகாணம் புரசைவாக்கம் பகுதியில் ரிக்‌ஷாவில் சென்ற போது மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.   பட மூலாதாரம்,NFAI   படக்குறிப்பு, என்.எஸ். கிருஷ்ணன் உயிருக்கு போராடிய லட்சுமிகாந்தனை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே அடுத்த நாள் 09-11-1944 அன்று உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் லட்சுமிகாந்தன் உயிர் பிரிந்தது. அதன் பின் வழக்கு விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர் டிசம்பர் மாதம் 8 பேர் மீது லட்சுமி காந்தனை கொலை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அந்த 8 பேரில் நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு உள்ளிட்டோரும் அடங்குவார்கள். கொலை மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்வழக்கு மதராஸ் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட 8 பேருக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலிருந்த மிகப்பெரிய வழக்குரைஞர்கள் வாதிட்டனர். வழக்கில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் இன்னொருவர் மீது குற்றச்சாட்டு வலுவாக இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உட்பட அனைவருக்கும் குற்றத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 1945-ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 தீர்ப்பை எதிர்த்து மதராஸ் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்து தண்டனையை உறுதி செய்தது. இதனால் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் 1946-ஆம் ஆண்டு தங்கள் வழக்கை லண்டனிலுள்ள 'ப்ரிவி கவுன்ஸிலுக்கு' எடுத்துச் சென்று நடத்தினர். 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'ப்ரிவி கவுன்ஸில்' வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன் பின் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மறுவிசாரணை செய்து இருவரும் குற்றமற்றவர்கள் என 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது. விடுதலை ஆன தியாகராஜ பாகவதருக்கு அதன் பின் திரைத்துறையில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. மீண்டெழ முடியாமல் அவர் திரைத்துறையைவிட்டே விலகினார். வெப் தொடராக லட்சுமி காந்தன் கொலை வழக்கு வெப் தொடராக தயாராகும் லட்சுமி காந்தன் கொலை வழக்கை இயக்குநர் சூர்ய பிரதாப் இயக்குகிறார். தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஒரு கொலை வழக்கால் எப்படி வீழ்ந்தார் என்பதை மையமாக வைத்து வெப் தொடரை இயக்க முடிவு செய்ததாக பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.   பட மூலாதாரம்,SURYA PRATAP   படக்குறிப்பு, இயக்குநர் பிரதாப் "என்னுடைய சினிமா பயணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் படத்தில் துவங்கியது. அதில் இணை இயக்குநராக பணியாற்றினேன் அதன் பின் ஈரோஸ் நிறுவனத்திற்கு 'பொன்னியின் செல்வன்' கதையை வெப் தொடராக தயாரிக்க இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் முயன்றார் அதை நான் இயக்குவதாக இருந்தது பல்வேறு காரணங்களுக்காக அது நடைபெறாமல் போனது அதன் பின் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கதைக்கான தேடல்களை துவங்கிவிட்டேன் அதன் பின் பல ஓடிடி தளங்களுக்கு இக்கதையை விவரிக்கும் முயற்சியை துவங்கினேன், தற்போது இந்த வெப் தொடரின் தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் மூலம் சோனி லிவ் ஓடிடி தளத்திற்கும் கதையை அனுப்பினோம் மற்ற நிறுவனங்களை விட சோனி லிவ் இக்கதையில் மிகுந்த ஆர்வம் காட்டியது அதற்கு காரணமாக நான் கருதுவது அவர்கள் ஓடிடி சார்பில் வெளியிட்ட பல வெப் தொடர்களில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் நீட்சியாக தான் தற்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன்" என்றார். "நான் இந்த சம்பவத்தை பற்றி படிக்க துவங்கிய போது ஒரு வெப் தொடருக்கான மிகச்சிறந்த கதை கருவாக தோன்றியது, இவ்வழக்கு குறித்து மக்களுக்கு தெரிந்த பொதுவான விடயங்களை தாண்டி இதன் பின் மிகப்பெரிய அரசியல் உள்ளது அதுவே இத்தொடரின் மிக முக்கியமான பகுதி, தொடர் வெளியாகும் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துக்கொண்டு இருக்கிறது இறுதியான பின் தகவல் தெரிவிக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். இந்த வெப் தொடரை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்தி அளித்த பேட்டியில், "இந்த வெப் தொடர் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கதை கேட்கும் போது எனக்கு இருந்தது, தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிந்தவுடன் அந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது." என்றார்.   பட மூலாதாரம்,KARTHIK   படக்குறிப்பு, தயாரிப்பாளர் கார்த்திக் "இந்த தொடரில் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வர வேண்டும் அதற்காக 4 பிரம்மாண்ட செட்டுகள் சென்னையில் அமைக்கும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது. அது போக கல்கத்தாவில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் அதே போல் மைசூரில் சில நாட்களும் இலங்கையில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறினார். இந்த வெப் தொடர் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதால் திறமையான ஷோ ரன்னர் தேவைப்பட்டது இயக்குநர் ஏ.எல்.விஜய் எனக்கு நல்ல நண்பர் ஏற்கனவே அவர் 'மதராஸப் பட்டிணம்' 'தலைவி' போன்ற படங்களை இயக்கியதால் அவர் ஷோ ரன்னராக இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நம்பினேன் சோனி லிவ் அதனை ஏற்றுக்கொண்டது ஏ.எல்.விஜய் அவர்களும் சம்மதம் தெரிவித்தார்" என்று கூறினார். தியாகராஜ பாகவதரின் பின்னணி தியாகராஜ பாகவதர் 1934 ஆம் ஆண்டு 'பவளக்கொடி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர், இப்படம் சுமார் 100 வாரங்கள் ஓடியது. அதனை தொடர்ந்து மொத்தம் 15 திரைப்படங்கள் நடித்தார் அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1944ஆம் ஆண்டும் 16 அக்டோபர் தீபாவளி அன்று வெளியான இவர் நடிப்பில் வெளியான 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் 22 நவம்பர் 1946 வரை சுமார் 133 வாரங்கள் அதாவது 3 தீபாவளிகள் ஓடி சாதனை படைத்தது. அப்போதே இப்படம் 10 லட்சம் வசூலித்தும் சாதனை படைத்தது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இவ்வளவு சாதனைக்குரிய ஒருவரின் இறுதி காலம் மிக மோசமாக அமைந்தது இன்றும் கூட தியாகராஜ பாகவதரின் சந்ததியினர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் உள்ளனர். கடந்த 28ம் தேதி ஜூன் மாதம் 2021ஆம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் தியாகராஜ பாகவதரின் 2-ஆவது மனைவி ராஜம்மாள் அவர்களின் மகள் அமிர்தலட்சுமி என்பவரின் மகன் சாய் ராம் என்பவர் ஒரு கோரிக்கை மனு அளித்தார், மனுவில் தான் புகைப்பட கலைஞராக இருந்ததாகவும் கொரோனா பரவல் காரணமாக வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வீட்டு வாடகை கூட கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எட்டிய உடன் தமிழக அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒன்றும் 5 லட்ச ரூபாய் உதவியாகவும் அளித்து இருந்தார். இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.1 லட்சம் நிதி அளித்து உதவியதாகவும் நடிகர் பார்த்திபன் சில பொருளாதர உதவிகள் செய்ததாகவும் சாய்ராம் கூறினார். நடிகர் சூர்யா தங்களின் அகரம் அறக்கட்டளையின் மூலம் குழந்தைகளின் படிப்பிற்கு உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/arts-and-culture-62498952
  • அந்த உளவு விமானத்திலேயே சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள். 🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.