Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிக்பாமில் மினிசூறாவளி! 200ற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் பறந்தன! பலருக்கு காயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newsaaaa-100x100.jpg

வவுனியா செட்டிகுளத்தில் இன்று மாலை திடீரென வீசிய சூறாவளியினால், மனிக்பாம் முகாமில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மினி சூறாவளியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தற்காலிக வீடுகளின் கூரைத் தகடுகள் பறந்து சென்று தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு காயமடைந்த 9 பேர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமர் முகாமில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காற்று காரணமாக அங்கு மின்சாரம் தடைபபட்டு இருள் சூழ்ந்திருப்பதனால், காயமடைந்தவர்கள் எத்தனைபேர் எத்தனை வீடுகள் சேதமடைந்தன, சேத விபரம் என்ன என்பதை உடனடியாக அறிய முடியாதிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் செட்டிகுளம் பகுதிக்கான தொலைபேசி சேவைகளும் சீர்குலைந்துள்ளன. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய தகவல்களை அறிவது கடினமாகியுள்ளது. செட்டிகுளம் வைத்தியசாலையுடனும் தொடர்புகளை மேற்கொள்ள முடியாதிருக்கின்றது.

சூறாவளியினால் மனிக்பாமில் கடமையில் உள்ள பொலிசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதான வீதிப்பகுதியில் காயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://www.saritham.com/?p=55695

இதனைப் பற்றிய பிந்திய செய்தி யாருக்காவது தெரியுமா?

மூன்று வருடங்களின் முன் முன்னணி வகுத்த இந்த 'மணிக் பாம்' மினி சூறாவளியைப் பற்றி

தமிழ் தேசியப் பூசாரிகளுக்கு / மாற்றுக் மாணிக்கங்களுக்கு / இலக்கிய படையல்கள் செய்து அவிப்பவர்கள்

யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று வருடங்களின் முன் முன்னணி வகுத்த இந்த 'மணிக் பாம்' மினி சூறாவளியைப் பற்றி

தமிழ் தேசியப் பூசாரிகளுக்கு / மாற்றுக் மாணிக்கங்களுக்கு / இலக்கிய படையல்கள் செய்து அவிப்பவர்கள்

யாருக்காவது தெரியுமா?

சாரி. ஆறுமணிக்கு பூஜாண்ட படம் பார்கோணும்.  அதுக்கிடல வேண்டின சூப்பர் சிங்கர் ஆயிரத்து முன்னூறாவது சீடி பார்கோணும்.

என்னது மாணிக் பார்மில வசந்தம் வீசினதா? ப்ரெசிடென்ட் சொன்னத செய்துட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருடங்களின் முன் முன்னணி வகுத்த இந்த 'மணிக் பாம்' மினி சூறாவளியைப் பற்றி

தமிழ் தேசியப் பூசாரிகளுக்கு / மாற்றுக்  மாணிக்கங்களுக்கு /  இலக்கிய  படையல்கள்   செய்து அவிப்பவர்கள்

யாருக்காவது  தெரியுமா?

நான் இப்ப சிட்னி முருகன் கோயிலுக்கு போக வேணும் அங்குமுருகனுக்கு பூசாரி செய்யும் பூஜையை பார்க்க வேணும் அப்புறம் பக்தர்களால் படைக்கப்பட்ட படையலை ருசி பார்க்கவேணும்...மெனிக்கெ பார்ம் எங்க இருக்கு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய தகவல்களின் படி,

இரண்டுமுகாம்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகளின் கூரைகள் காற்றினால் பிடுங்கி வீசப்பட்டிருப்பதாகவும் மக்கள் இரவு படுப்பதற்கு வசதியின்றி இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு உணவுத் தயார்ப்படுத்தல்களும் பாதிக்கப்பட்டமையால் அங்கு உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://www.saritham.com/?p=55695

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.