Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்

12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்

கடந்த 12வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகுபதி சர்மாவும்(புதியமகசீன்சிறை) அவரது மனைவியும்(வெலிக்கடை பெண்கள் பிரிவு) சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்விருவரும் 09.02.2000ம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் மீதான குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டனர். 4ம்,6ம் மாடிகள் என இலங்கையின் கொடும் சித்திரவதை கூடங்கள் யாவிலும் வைத்து மிகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இவர்களுக்கு 3பிள்ளைகள். மூத்தமகன் இந்தியாவில் திருமணம் முடித்து வாழ்கிறார். ஆயினும் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலமை அந்த மகனுக்கு. பெற்றோர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டம் சிறையில் அடைக்க மற்றைய 2பி;ள்ளைகளும் உறவினர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலமையில் மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிஷனில் வளர்ந்து வருகின்றனர். தாயும் தந்தையும் 2000ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நேரம் பெண்பிள்ளைக்கு 7வயது ஆண்பிள்ளைக்கு 5வயது. தற்போது அந்தப்பிள்ளைகள் உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றனர். குழந்தைப்பருவத்தில் கிடைக்க வேண்டிய தாயன்பும் தந்தையின் அன்பும் பெறாத துரதிஸ்டக் குழந்தைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சின்னஞ்சிறு வயதில் பெற்றோரைப் பிரிதல் என்பதன் வலியை அந்தக் குழந்தைகள் இன்றுவரையும் அனுபவித்து வருகின்றனர். தமது குழந்தைகள் சிறுவர் இல்லத்தில் வளர்வதனை உயிருடன் வாழ்கிற பெற்றோருக்கு எவ்வளவு வலியைத் தரும் என்பதனை உலகுவாழ் அம்மாக்களும் அப்பாக்களும் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பது கூட 6மாதத்திற்கு ஒருமுறைதான். தற்போதைய நவீனங்களைத் தங்களது பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டுமென்ற அவா எங்கள் எல்லோரையும் போல இந்தப் பெற்றோருக்கும் உண்டு. ஆயினும் தொடர்ந்து சிறையில் இவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

இரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி சர்மா தொடர் சித்திரவதைகள் உடற்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புற்று மருந்தோடு நோயாளியாக வெலிக்கடை பெண்கள் பிரிவு சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வசந்தி சர்மா அண்மையில் சத்திரசிகிச்கையொன்று மேற்கொள்ளப்பட்ட நிலமையில் மிகுந்த துயரத்தோடு வாழ்கிறார்.

இவர்கள் இந்துமதகுருவாக இருப்பதனால் இவர்களால் மாமிசத்தையோ அல்லது ஒவ்வாத உணவுகளையோ உண்ண முடியாது தவிக்கின்றனர். சிறைச்சாலை உணவான சோறு சம்பல் அல்லது எப்போதாவது கிடைக்கிற மரக்கறிகளையுமே உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சிறையில் உடல் உளம் யாவும் பாதிப்புற்று தங்கள் விடுதலையின் நாளை எண்ணிக் கொண்டிருக்கிற இந்தத் தம்பதியினர் தமக்கான உலர் உணவுகள் தங்கள் அடிப்படைத் தேவைகளாக சவர்க்காரம் , பற்பசை போன்ற தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் உறவுகளிடம் பண உதவியினை வேண்டி நேசக்கரத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கருணையுள்ளம் கொண்டவர்களே….!

இந்தத்தம்பதிகளுக்கு மாதம் ஆளுக்கு 5ஆயிரம் ரூபா உதவியினை வழங்கி இவர்களுக்கான சிறு நிம்மதியைக் கொடுங்கள் என நேசக்கரம் எல்லாரையும் வேண்டி நிற்கிறது.

1) பூசகராகத் தமது கடமைகளோடு நிற்காமல் ஏன் இந்தச் சிறைவாழ்வை இவர்கள் அனுபவிக்கிறார்கள் ?

2) 7வயதிலும் 5வயதிலும் இருந்த தங்கள் பிஞ்சுக் குழந்தைகளைப் பிரிந்தது யாருக்காக ?

3) மனநலம் பாதிக்கப்பட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டும் சிறையில் ஏன் இவர்கள் தண்டிக்கப்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள் ?

புலத்து தமிழ் உறவுகளே இந்தத் தாய்க்கும் தந்தைக்கும் உங்கள் நேசக்கரங்களைக் கொடுத்து உதவுங்கள்.

உதவ விரும்புவோர் நேரடியாகவே உங்கள் உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

ரகுபதி சர்மா அவர்கள் எழுதிய கண்ணீர் கடிதம்:-

1-1.jpg

2.jpg

3-1.jpg

4-1.jpg

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்புகளுக்கு :-

உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

  • கருத்துக்கள உறவுகள்

7 வருடங்களிற்கு முன்னர் ஜயரம்மா மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட காலங்களில் அவரை வெளியில் விடுவித்திருக்கலாம் ஆனால் அன்று அவரிற்கு யாரும் உதவ முன்வரவில்லை. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 வருடங்களிற்கு முன்னர் ஜயரம்மா மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட காலங்களில் அவரை வெளியில் விடுவித்திருக்கலாம் ஆனால் அன்று அவரிற்கு யாரும் உதவ முன்வரவில்லை. :(

இப்போது 12வருடங்கள் கழிந்த நிலமையில் மிகுந்து உடற்தாக்கங்களுடன் இருவரும் அவதிப்படுகிறார்கள். சட்ட உதவிக்கும் யாரும் உதவியில்லை. மாந்த அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்யக் கேட்டு இறஞ்சுகிறார்கள். இவ்வுதவியையேனும் செய்தால் அது பேருதவியாக இருக்கும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதவி பெற்ற ரகுபதி சர்மாவின் நன்றிகள்

12வருடகாலமமாக சிறையில் அவலப்படுகிற ரகுபதி சர்மாவும் அவரது மனைவிக்குமான மாதாந்த உதவியை நேசக்கரம் மூலம் உதவி கோரியிருந்தனர். அவர்களது வேண்டுதலையேற்று பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் 350€ மேலும் பிரித்தானியாவிலிருந்து நவரட்ணம் நரேந்திரன் என்பவர் 50€ உதவியிருந்தனர். மொத்தமாக இவ்விருவரது உதவியும் இலங்கை ரூபா 64500ரூபா கிடைத்திருந்தது. இவ்வுதவியிலிருந்து ரகுபதி சர்மா அவர்களுக்கு 6மாதங்களுக்கான உதவியாக 60ஆயிரம் ரூபாவினை வழங்கியுள்ளோம். மீதி 4500ரூபாவினையும் ஜனகன் என்ற கைதியின் குழந்தையின் 3மாதங்களுக்கான கல்விச்செலவிற்கும் வழங்கியுள்ளோம்.

ஆறுமாதங்களின் பின்னர் ரகுபதி சர்மா அவர்களது குடும்பத்திற்கான தொடர்ந்த உதவியினை பிரித்தானியாவிலிருந்து பூரணி அவர்கள் உதவ முன்வந்துள்ளார். உதவியவர்களுக்கும் தொடர்ந்து உதவவுள்ளவர்களுக்கும் நேசக்கரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ரகுபதி சர்மா அவர்கள் எழுதிய நன்றிக்கடிதம் :-

Sharma-hindu-priest-1.jpg

Sharma-hindu-priest-2.jpg

Sharma-hindu-priest-3.jpg

Sharma-hindu-priest-4.jpg

தொடர்புபட்ட செய்தி இணைப்பு :-

http://tamilnews24.com/nesakkaram/ta/?p=1415

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூரணி றொகானுக்கு ரகுபதி சர்மாவின் நன்றி

மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரகுபதி சர்மா அவர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து திரு திருமதி. றொகான் பூரணி குடும்பம் முன்வந்து வழங்கிய உதவிக்கு ருகுபதி சர்மா எழுதிய நன்றிக்கடிதம். திரு.திருமதி. ரகுபதி சர்மா குடும்பத்திற்கு தொடர்ந்து உதவ முன்வந்த பூரணிக்கும் றொகனுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.

Sharma-to-poorani-letter-1.jpg

Sharma-to-poorani-letter-2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.