Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை சிறையில் வைத்து கொலைசெய்ய முயற்சி! பயங்கரச் சதி அம்பலம்!! சிறிலங்கா உளவுத்துறை சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

perarivaalan.jpg

இந்திய முன்னால் பிரதமர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோரை சிறையில் வைத்து படுபொலைசெய்யத் தீட்டப்பட்ட பயங்கர சதி அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்த பேரதிர்ச்சிதரும் சதித்திட்டத்தில் சிறிலங்கா உள்ளிட்ட வெளிநாட்டு உளவுத்துறையின் பங்களிப்பு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக தற்காலிகமாக தூக்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்சிலையில் வேலூர் சிறையில் உள்ள சக கைதிகளை வைத்தே இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த படுகொலைச் சதித்திட்டம் தமிழக உளவுத்துறை மற்றும் சிறைத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அந்த முயற்சியில் இந்த சதிக்கும்பல் ஈடுபட்டுள்ளதால் அதிதீவிர பாதுகாப்பு வளையத்தில் மூவரும் 24மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக எமக்குக் கிடைத்துள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த படுகொலை சதித்திட்டத்தில் உச்சமாக இவர்களது சாப்பாட்டில் சயனைட் விசம் கலந்து கொடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சதிமுயற்சிக்கு சிறைக்குள் இருந்து ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் இருவர் என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னணியில்தான் குறித்த இரண்டு ஆயுள்தண்டனை கைதிகளையும் சிலநாட்களிற்கு முன்னர் புழல் சிறைக்கு மாற்றியுள்ளார்கள்.

காங்கிரசு கட்சிக்கு ஒத்துழைக்க மறுத்து தமிழகத்தில் ஆட்சி செய்துவரும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது ஆட்சிக்கு நெருக்கடியினை ஏற்படுத்தவும் தமிழ் உணர்வாளர்களை ஆட்சிக்கு எதிராக திருப்பிவிடவும் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ஈழத்தமிழர் விடையத்தில் அதிக அக்கறையுடன் தமிழக முதல்வர் செயற்பட்டு அதனை வைத்து மத்திய அரசிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதனால் இந்த படுகொலைச் சம்பவத்தை அரங்கேற்றி தமிழகத்தை பெரும் பரபரப்பிற்குள் இட்டுச் செல்வதன் மூலம் ஜெயலலிதாவின் அரசிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதே இந்த சதியின் பின் நிற்பவர்களது திட்டமாக உள்ளது.

மிக அண்மையில் ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதற்கு தமிழகத்தின் அழுத்தம்தான் பிரதான காரணமாக இருந்தது. முன்னர் கருணாநிதியின் ஒத்திசைவான அரசு தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்று குவிக்க சிறிலங்காவிற்கு முழுஒத்துழைப்பு கொடுப்பதற்கு எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டிருக்கவில்லை.

தற்போது தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்ப்பினால் சிங்கள தேசத்தை எதிர்த்து வாக்களிக்கும் நிலை ஏற்பட்டதால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவும் தமது நாட்டிற்கெதிராக பல்வேறு தளங்களில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாலும் தமிழ்த் தேசிய சக்திகளை சுதந்திரமாக செய்ற்பட அனுமதித்துள்ளதாலும் சிங்கள தேசமும் தமிழக அரசின் மீது ஆத்திரமடைந்து இருக்கும் பின்னணியில் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உறுதியுடன் போராடிவரும் நிலையில் அவர்களையும் திசைதிருப்புவதற்காகவே வெளிநாட்டு உளவுத்துறையின் உதவியுடன் இந்த படுகொலை சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக எம்மிடம் கருத்துத் தெரிவத்த முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சதித்திட்டத்தில் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பங்களிப்பும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்தியாளர் குழு.

http://www.eeladhesa...lle-nachrichten

மும்பாய் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானின் வழிநடத்தலும் சீனாவின் தார்மீக ஆதரவும் கொண்ட சிங்களம் இதற்கு மேலாகவும் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மையாக இருந்தால்.. புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி என்கிற இலங்கையின் குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாகவும் பார்க்கலாம்.! :unsure:

இதில் இலங்கை இருக்கா இல்லையா என்று பார்க்க செய்தியில் விளக்கம் காணாது.

பார்த்தால் இந்தியா இலங்கைக்கு பழிக்குப்பழியாக ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களுக்கு இலக்கு வைக்கிறது போலிருக்கு.

1.சென்மத்துப்பகையாக சோனியா கருதும் மூவரையும் முடித்துவிட்டு பழியை எங்காவது போடுவது.

2.தமிழ் நாட்டிலிருந்து புலிகள் வருவதாக கூறும் இலங்கை தமிழ்நாட்டில் ஒற்றர்களை வைத்து ஊடுருவியிருக்கிறது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.