Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க 'உலகத்தை அணிதிரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு ஒன்று இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது

இக்கலந்தாய்வரங்கின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'யாழ்ப்பாணத்தில் சிறந்த அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளை தடுக்க முடியும்

இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும்

எமது சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் எமக்கு இயற்கையால் எந்தப் பிரச்சனையும் வராது வரமுடியாது' என்றார்.

  • தொடங்கியவர்

ஒரு பக்கம் கொடிய இராணுவ அடக்குமுறை ஆட்சி;

மறுபக்கம் அதன் அழுங்குப்பிடியில் அரசியல் ஆட்சி;

ஒரு பக்கம் மண்ணை கிண்டி விற்கும் டக்லஸ்;

மறுபக்கம் சுண்ணாம்புக்கல்லை ஏற்றும் பசில்;

இப்படிப்பல பல துன்பியல் நிகழ்வுகளுக்கு நடுவே பூதமாக வளரும் சூழல் பிரச்சனைகள்.

அமெரிக்கா முன்னின்று, தொழில்நுட்ப, பொருளாதார உதவிகள் செய்து வேலையற்றிருக்கும் மக்களை கொண்டு துப்பரவாக்குவிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

கிணற்றுநீர் வற்றும் காலங்களில் ஊற்றுக்களுடன் மலசலகூட கழிவுநீர் கலக்கும் அபாயமுள்ளது வேள்ட் விஷன் நிறுவன திட்ட முகாமையாளர்

வடமாகாணத்தில் போஷாக்கென்பது பெரும் பிரச்சினையான விடயமாக உள்ளது. குறிப்பாக முன்பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் மத்தியில் இது அவதானிக்கப்பட்டுள்ளதென வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை சாவகச்சேரி நகர சபையின் மீசாலை பொதுநூலக அபிவிருத்தி ஆலோசனைச் சபையின் உதவியுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கலும், போஷாக்குணவு பற்றிய கருத்தமர்வும் இடம்பெற்றபோது நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நகரபிதா இ. தேவசகாயம் பிள்ளை தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

முன்பள்ளி மாணவர்களின் போஷாக்கு ஆசிரியர்களின் கல்வி மேம்பாடு மற்றும் முன்பள்ளிகளில் அதிகமாகக் காணப்படும் வளப்பற்றாக்குறை போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதேச சபைகள், நகரசபைகள், சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் கல்வித் திணைக்களங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளோம்.

இத் திட்டங்களை மேம்படுத்துவற்கு பெற்றோர்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிணற்று நீர் வற்றும் காலங்களில் மலசலகூடக் கழிவு நீரும் கிணற்று நீர் ஊற்றுக்களுடன் கலக்கும் அபாயமும் யாழ்.மாவட்டத்தில் காணப்படுகின்றது.

நீர்பரிசோதனையில் இது ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலசல கூடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை மட்டும் வேறு தொட்டிக்குள் செலுத்தி அதனை சுத்திகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

மழை காலங்களில் நீரைச் சேமித்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். சிறு குளங்களை அமைத்து மழை நீரைக் கடல் நீருடன் சேர விடாது சேமிக்க வேண்டும்.

இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நகர சபைகள், பிரதேச சபைகள், சனசமூக நிலையங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் என்பன முன்வர வேண்டும் என்றார்.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/12266-2012-04-04-21-01-01.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்... கழிவு நீர் வடிகால் குழாயமைப்பு இல்லாததால்... இப்பவாவது, நன்னீர் கிடைக்கின்றது.

இல்லாவிடில், எப்போதோ.... யாழ்ப்பாணம் பாலைவனமாகி இருக்கும்.

குளிக்கும் நீர் அந்த மண்ணிலேயே... ஊறி விடுவதால், சிறிது ஆறுதல்.

ரயில்வே தண்டவாளம் போட்ட... வெள்ளைக்காரன், கழிவு நீர் போவதற்கும் வாய்க்கால் போட்டிருந்தால்... நிலைமை மோசமாகியிருக்கும்.

யாழ்ப்பாணத்தில்... கழிவு நீர் வடிகால் குழாயமைப்பு இல்லாததால்... இப்பவாவது, நன்னீர் கிடைக்கின்றது.

இல்லாவிடில், எப்போதோ.... யாழ்ப்பாணம் பாலைவனமாகி இருக்கும்.

குளிக்கும் நீர் அந்த மண்ணிலேயே... ஊறி விடுவதால், சிறிது ஆறுதல்.

ரயில்வே தண்டவாளம் போட்ட... வெள்ளைக்காரன், கழிவு நீர் போவதற்கும் வாய்க்கால் போட்டிருந்தால்... நிலைமை மோசமாகியிருக்கும்.

உண்மைதான்.

யாழ்ப்பாணத்து கிணற்று நீரிலேயே உலகில் அதிகளாவான e.coli என்னும் பக்றீரியாக்கள் உள்ளன. இதற்குக் காரணம் மலசல கூட நீர் கிணற்று நீருடன் ஒரு வகையில் தொடர்பு கொள்வதாலேயே. இந்த e.coli பெரும்பாலும் மனிதருக்கு குடலில் இருந்து நன்மை செய்யும் பக்றீரியாவே.

தீவுப்பகுதிகளில் இராணுவம் கிணறுகளில் இருந்து பெரிய வாட்டர் பம்ப் மூலம் பவுசர்களில் நீர் ஏற்றிச்செல்வதால் சில இடங்களில் நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறியுள்ளன.

  • தொடங்கியவர்

உண்மைதான்.

யாழ்ப்பாணத்து கிணற்று நீரிலேயே உலகில் அதிகளாவான e.coli என்னும் பக்றீரியாக்கள் உள்ளன. இதற்குக் காரணம் மலசல கூட நீர் கிணற்று நீருடன் ஒரு வகையில் தொடர்பு கொள்வதாலேயே. இந்த e.coli பெரும்பாலும் மனிதருக்கு குடலில் இருந்து நன்மை செய்யும் பக்றீரியாவே.

தீவுப்பகுதிகளில் இராணுவம் கிணறுகளில் இருந்து பெரிய வாட்டர் பம்ப் மூலம் பவுசர்களில் நீர் ஏற்றிச்செல்வதால் சில இடங்களில் நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறியுள்ளன.

40000 + ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேறினால் ... அவர்களின் மலத்தால் ஏற்படும் பாதிப்பும் குறையும், அவர்கள் குடிக்கும் தண்ணீரும் எமது மண்ணை வளம்படுத்த உதவும்.

1994ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், ஈழநாதத்தில் உதவிஆசிரியராக பணியாற்றிய எனது நண்பனொருவனுடன் அவன் ஓர் கட்டுரை எழுதுவதற்காக இத்துறையில் யாழ்ப்பாணத்தில் நிபுணத்துவம்பெற்ற பெரியவர் ஒருவரை நீர்வேலி என்று நினைக்கின்றேன், பேட்டிகாணச்சென்றோம். யாழ்ப்பாணத்து நீர் உப்புநீராகும் அபாயம்பற்றி அப்போது அவர்விரிவாகக்கூறினார். உரையாடல் முழுவதும் நினைவில் இல்லை. குறிப்பாக கடல்நீர் யாழ்ப்பாணத்து ஏரியில் கலப்பது சம்மந்தமாகவும் பின்னர் உள்ளூர் நீர்உவர்ப்புத்தன்மை அடைவதாகவும்  ஏதோ அவர் நிறையவிடயங்கள் பேசினார் என்று ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நிறைய குளங்கள் இருக்கின்றன. அவற்றைத் தூர்வாரி பெய்யும் மழைநீரை ஓழுங்காகத் தேக்கினால் நீர்பஞ்சப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.

நிலத்தடி நன்நீரைப் பாதுகாக்க சில வழிமுறைகள்.

யாழ் தீபகற்பத்தில் உள்ள பல சிறு குளங்களை மீளவும் தூர் எடுத்தல்.

பெரிய காணிகளில் மழை நீரை சேமிக்கும் அகழிகள் அமைத்தலைக் கட்டாயம் ஆக்குதல்.

பரந்தளவில் மரங்களை நாட்டுதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.