Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும் – மத்திய வங்கி எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ajith%20nivad%20kabral.jpg

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2011ல் 8.3 சதவீதமாகக் காணப்பட்ட சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7.2 வீதமாகச் சரிவடையும் என மத்திய வங்கி ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தது.

வட்டி வீதம் அதிகரிப்பு, சிறிலங்கா ரூபாவின் நாணயப் பெறுமதியில் சரிவு ஏற்பட்டமை, வர்த்தக மீதி பாதகமாக உள்ளதால் அதனை சீர்செய்வதற்காக இறக்குமதிப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை போன்றவற்றால் சிறிலங்காவின் பொருளாதாரம் 2012 இல் கடும் சரிவை எட்டும் என, நேற்று வெளியிடப்பட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் விலையில் தளம்பல் ஏற்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் பொருளாதாரத் தளம்பலானது 2011ல் 6.7 சதவீதமாகவும், அதற்கு முந்திய ஆண்டில் இது 6.2 சதவீதமாகவும் காணப்பட்டதுடன், இப் பொருளாதாரத் தளம்பல் 2012 இல் மேலும் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு சிறிலங்காவில் 40 ஆண்டுகாலமாகத் நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், 2010 இல் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 8.0 சதவீதமாகக் காணப்பட்டது. 2011ல் இந்த வளர்ச்சி வீதம் 8.3 சதவீதமாக அதிகரித்தது.

கடந்த ஆண்டில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்துக்கு பின்னான பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீடாக ஒரு பில்லியன் காணப்படுகின்றது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2010 இல் வெளிநாட்டு முதலீடு 516 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது.

'சிறிலங்கா மீதான வெளிநாட்டு முதலீடு, சாத்தியப்பாடான எல்லைக்கு கணிசமான அளவு கீழேயே இருக்கிறது.

இதனால், சிறிலங்கா மேலும் புதிய வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும்' எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

http://www.puthinapp...?20120410105964

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து நாட்டை பொருளாதார ரீதியில் கட்டி எழுப்பவேண்டும் என்று கடந்தவாரம் பசில் கூறியிருந்தாரே :rolleyes:

இந்திய உல்லாசபிரயாணத்துறை இலக்கு வைக்கப்படல் வேண்டும் - காந்தி சிலை உடைக்கப்பட்ட விடயம் பிரச்சாரபடுத்தப்படல் வேண்டும்

அவுஸ்திரேலிய உல்லாசபிரயாணத்துறை இலக்கு வைக்கப்படல் வேண்டும் - அவுஸ்திரேலிய பிரசை கடத்தப்பட்டு நாடு கடத்தப்பட்ட விடயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தானே ஓடாத வியாபாரம் எடுத்து நடத்தும் சட்டம் கொண்டுவந்தநீன்கள்? 

அப்படியன்றால் சிறி லங்காவை யார் கையக படுத்துவது? 

சூட்டு போட்ட இந்த கூலி, அப்பத்தை எப்பவோ ராஜபக்சே குடும்பத்திடம் பிரித்து கொடுத்துவிட்டது. 

ஐரோப்பாவில் மட்டும் இருபது பில்லியன் டாலருக்கு ராஜபக்சே குடும்ப சொத்து. 

எப்படி நாடு உருப்படும்?  சிறி லங்கா இளையோர் வீத்யில் இறங்கி இந்த சர்வாதிகாரிகளை விரட்டி அடிக்கோணும். 

Rajabakse family secret assets stole from uneducated, dirt poor Sri lankans.

Europe - $20 billion

USA - $40 billion

Australia - $8 billion

Canada(Chitranganee) - $10 billion

Remember Dictator also has an IPL team, several exotic islands with cottages, private air line, cruise ships.

Sri Lankan agent writers won't mention this. Why Prof. Cheran?

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது. :icon_mrgreen:

புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது. :icon_mrgreen:

மேற்குலகத்தில் வாழ்பதால், பொருளாதார தடை விதிக்கப்பட்டால், விரும்பினாலும் உதவுவதில் தடைகள் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது. :icon_mrgreen:

புலம் பெயர் தமிழரும் இப்ப நல்ல சிக்கனம். ரிசெசன் வருது எண்டு தங்கம் வாங்கி சேர்க்கினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது. :icon_mrgreen:

காட்டாறு சொல்வதில் உண்மை இல்லாமலும் இல்லை ............... புலம் பெயர் தமிழர்கள் துரதிஸ்டவசமாக சிறிலங்கன் விமான சேவையை பயன்படுத்துவதன் மூலமும் விடுமுறைக்கு செல்வதன் ஊடாகவும் ஒருபகுதி வருமானம் சிறிலங்காவுக்கு கிடைக்கின்றது என்பது மறுக்க முடியாதது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.