Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த கதை சோக கதை..:D

Featured Replies

2010 ஆம் ஆண்டின் பிற்பகுதி ஒரு சனிக்கிழமை காலை நேரம் வேலையில் நிண்டு கொண்டிருந்த எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு

"ஹலோ நான் ஜொனிகதைக்கிறன் உங்க university க்கு முன்னால தான் நிக்கிறன்" " நான் u .k la இருந்து விடுமுறைல இங்க வந்திருக்கன் என் நண்பன் ஒருவனை தேடி வந்தன் இப்போது அவனின்ட தொடர்பும் அட்ரஸ் ம் இல்லை எனக்கு தங்குவதற்கு கூட இடம் இல்லை நடுதெருவில நிக்கிறன்" என்ன செய்கிறதெண்டு தெரியல எண்டு அழுவாரை போல சொல்லி கொண்டே போனது மறுமுனை

எனக்கோ யோசனை :rolleyes: லண்டன்ல இருந்து ஒருத்தன் வாரான் இவ்வளவு தூரம் அட்ரஸ் போன் நம்பர் ஏதும் இல்லாமலா ஒருவரை தேடி வருவான் சரி எதற்கும் வேலை முடிச்சு போய் கதைப்பம் எண்டிட்டு அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டு அவனின் சொந்த இடங்களை பற்றி விசாரிச்சன்

யாழ்ப்பாணம் டவுன் சொந்த இடம் என்றும் லண்டன் ல படிச்சு கொண்டு இருக்கிறதாகவும் தனது காதலிய தேடி எனது நாட்டிற்கு வந்ததாகவும் இங்க வந்தால் அவள் குடுத்த அட்ரஸ் ல யாருமே அப்பிடி இல்லை என்றும் சொன்னான். உங்களிற்கு எப்பிடி என் நம்பர் கிடைச்சது எண்டு கேட்டன் அவளும் நீங்க படிக்கும் இடத்தில தான் படிக்கிறதாக சொன்னதாகவும் இங்க வந்து விசாரிச்சு பார்க்கும் போது அப்பிடி யாரும் இல்லை என்றும் இலங்கைய சேர்ந்த தமிழ் மாணவர்கள் போன் நம்பர் என்று வேறு சிலரின் நம்பர் உடனும் என் நம்பர் தந்ததாகவும்

எனக்கு தான் முதலில் போன் பண்ணினதகவும் சொன்னான்.

சரி அவளுக்கு என்ன பேர் என கேட்டேன் வினோதினி என்றும் அப்பிடி ஆரும் உங்க batch ல அல்லது உங்களுக்கு அடுத்த batch ல படிக்கினமா என கேட்டான் நான் எங்க கூட இலங்கையை சேர்ந்த மாணவிகள் எவருமே இல்லை எங்க இடத்தில என்று உறுதியா சொன்னன்.

ஏன் இப்பிடி செய்தாள் தெரியல என்று கவலை பட்டு கொண்டிருந்தான். நான் சொன்னன் எனது பிரெண்ட் நம்பர் தெல்லாம் அவனுக்கு call பண்ணி சொன்னால் அவன் எங்க வீடுக்கு கூட்டிடு போவான் அங்க போய் நில்லுங்க நான் evening வாறன் பிறகு எல்லாத்தையும் கதைச்சு கொள்ளுவம் என்று சொன்னன்.

சிறிது நேரத்தில் எனது பிரெண்ட் சஞ்சய் call பண்ணினான் டேய் ஒருத்தன் call பண்ணினான் உனக்கு தெரியுமா அவனை

என்று கேட்டான் நான் "எனக்கு அவனை தெரியாதுடா ஆரையோ தேடி வந்தானாம் நிக்கிறதுக்கு கூட இடம் இல்லையாம் பாவம் எங்க இடத்தில நிக்கட்டும்" என்று சொல்ல "தெரியாது என்றாய் ஏதும் பிரச்சினை வந்தால் என்ன செய்கிற" இது சஞ்சய் , அவன் பய பட்டத்துக்கும் காரணம் இருக்கு எங்க இடத்தில் தேவை இல்லாத பிரச்சினைகளில் மாட்டு பட்டால் உடனடியாக சிறிலங்காவுக்கு அனுப்பி விட்டிடுவார்கள் அந்த பயம் எல்லாருக்கும் "அப்பிடி எண்டால் அவனை என்ன நடுதெருவில நிக்கட்டும் என்று சொல்றியோ" "ஒரு நாளைக்கு தானேடா ஏதோ சமாளிப்பம் " "சரி போய் கூட்டி வாறன் ஏதும் பிரச்சினை வந்தால் உண்ட பொறுப்பு " சரிடா பிரச்சினை ஏதும் வராது நீ கூட்டி வா என்றிட்டு நான் என் வேலையில் busy

ஆகிட்டன் வேலைக்கு மத்தியில அவனைப்பற்றிய நினைவே எனக்கு மறந்து போனது evening வீட்டுக்கு போகும் போது அவன் இல்லை போய்ட்டான்

"எங்கடா அவன் " அவன் போய்ட்டான் எங்கடா ஆளை பிடிச்சனீ சரியான தூள் அடிக்கிற பார்ட்டி போல

மாறி மாறி கதைக்கிறான் அவனின்ட காதலிய தேடி வந்தவனாம் காதலிண்ட நம்பர் தெரியாதாம் facebook la மட்டும் தானாம் பழக்கம் skypla ஒரு நாள் கதைச்சவனாம் அவளை தேடி லண்டன் ல இருந்து இங்க வந்து இருக்கான் சரியான சாவு கிராக்கிடா அவன். எங்கட appartment girls ரூம் எல்லாம் போய் தட்டி அவைக்கு பிரச்சினை கொடுத்து இருக்கான் பிரச்சினை ஆகி apartment management தான் எங்கட நம்பர் குடுத்து இருக்கு திங்க கிழமை university ல என்ன நடக்க போகுதோ தெரியல விசாரணைக்கு கூப்பிடுவார்களோ என்று பேசி கொண்டிருந்தார்கள்.இப்பிடியும் ஒருத்தன் இருப்பானா என்ற சிந்தனை எனக்குள் ஓடிகொண்டிருக்க நான் போய் குளிச்சிட்டு வந்து வேற என்ன சொன்னான் என அவர்களிட்ட கேட்டன்.

எங்கேயோ இருக்கிறவனுக்கு எப்பிடிடா எங்க campus பேர் தெரியும் தமிழ் girls 3 பேர் இருக்கிறதாக chat பண்ணும் போது சொன்னவளாம் இன்னொரு கேர்ள் இந்திய முஸ்லிம் என்று சொல்றான் அப்பிடி ஆர்டா இங்க இருக்கிற

என்று என்னை கேட்டார்கள் எனக்கு முஸ்லிம் கேர்ள் என்றவுடன் எங்கேயோ பொறி தட்டின போல இருந்திச்சு :icon_idea:

***********************************************************************************************************************************************************

இரண்டு கிழமைக்கு முன்னர்

யாழினி என்னும் எனது fb fack accunt திறந்து பார்த்து கொண்டிருந்தன்

அந்த accunt இன்னொரு பெண்ணுக்காக open பண்ணின (அந்த சொந்த சோக கதைய பிறகு சொல்றன் ) அதில் அவள் on லைன் வருகிற நேரம் மட்டும் அதில ஓன் லைன் நிப்பன் மற்றும்படி அதில போறேல்ல பெரிசாக

வழமைக்கு மாறாக மாலை நேரம் அதை திறந்து பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு frend req வந்திருந்தது ஒரு பாகிஸ்தான் நடிகை படம் போட்டு ஒரு பெண்ணின் fb அது நானும் பெண் தானே என்றிட்டு add பண்ணினன் add பண்ணினால் அதே நேரம் அவவும் ஓன் லைன் நிண்டா பிறகென்ன கடலை தொடங்கியாச்சு :lol: வழமையான கேள்விகள் கேட்டு

மாறி மாறி reply பண்ணி கொண்டிருக்கும் போது தனக்கு இன்னும் 2 கிழமைகளில் vacation எனவும் நான் இருக்கும் நாடுக்கு வர போகிறதாகவும் சொன்னா நானும் ohh இங்க நல்ல இடம்கள் பார்கிறதுக்கு இருக்கு செலவுகளும் குறைவு வாங்க எண்டு சொன்னன் அவ பெண் என்பதால் நான் எனது உண்மையான விபரம்களை சொல்லி இருந்தன் என் கூட 3 பேர் தங்கி இருப்பதாகவும் அதில் ஒருவர் மதுரை முஸ்லிம் என்று சொல்லி இருந்தன்.

fb தொடர்ந்து இருக்கிறவங்களுக்கு பெண் பெயரில ஆண் கதைச்சால் கூட கொஞ்ச நேரம்

கதைத்து கொண்டிருக்கும் போது கண்டு பிடிக்க முடியும் கடைசியில் அவ நான் ஒன்று சொன்னால் கோப பட மாட்டீங்களா என்று கேட்டா ? என்ன என்று கேட்கும் போது தான் boy என்று சொன்னா பொங்கி வந்த கோபத்தை அடக்கி கொண்டு ஏன்டா ஒரு பையன் கூடவா இவ்வளவு நேரமும் கடலை போட்டன் என்று மனசுக்க நினைச்சு கொண்டு ohh என்று reply பண்ணிட்டு நானும் boy தான் என்று message பண்ணி நான் வெளில போக போறன் என்று bye சொல்லிட்டு cut பண்ண அவனும் போய்ட்டு வாங்க w8 பண்ணுறன் என்று reply போட்டான் ங்கொய்யால w8 பண்ணுறியா பண்ணு இந்த பக்கம் வந்திட்டால் பாரு ^_^ எண்டு மனசுக்க நினைச்சு கொண்டு ஒரு smily ய reply ஆக அனுப்பிட்டு cut பண்ணிட்டன் .

எதிர் பாராத விதமாக எங்களின் வீடு இணைய தொடர்பு துண்டிக்கபட அதற்கு பிந்தைய நாள்களில் எனக்கு facebook வர முடியாமல் போய்விட்டது

************************************************************************************************************************************************

நடந்ததை என் நண்பர்களிடம் சொல்லி ஒரு வேளை அவனாக இருப்பனோடா அவன் skypla எல்லாம் கதைச்சது எண்டு சொல்லி இருக்கான் நான் அவன் கூட கதைச்சதே 30 நிமிசங்கள் தான் அதும் facebook chat என்று சொன்னன்

டேய் அவன் போல தான் இருக்கு நல்ல வேளை எங்க வீட்ல இண்டநெட் இல்லாததால தப்பிச்சிடாய் இருந்து இருந்தால் சிலவேளை இங்க ஒரு கொலை கூட விழுந்து இருக்கும் அவன் நிண்ட நிலைக்கு எண்டு சொல்லி நண்பர்கள் நக்கல் அடிச்சு கொண்டிருந்தார்கள்

எனக்கு அதிர்ச்சி இப்பிடி முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பெண்னுக்காக இவ்வளவு தூரம் எல்லாம் வருவாங்களா என்று யோசித்து கொண்டு இருந்தன் அடுத்த நாள் எனது கல்வி நிறுவன இணையத்தினூடு அந்த fack accunt check பண்ணினன்

3 மெசேஜ் அவன் கிட்ட இருந்து வந்திருந்தது

தான் எனது நாட்டில் நிற்பதாகவும் தன்னை ஏமாற்றாமல் எனது அட்ரஸ் னை அனுப்பும் படியும் கெஞ்சி கேட்டு இருந்தான் ஆனால் எனது fack accunt பெயர்

யாழினி அவன் மெசேஜ் ளையும் வினோதினி என்ற பெயரையே பாவித்து இருந்தான் நண்பர்களிடமும் வினோதினி என்ற பெயரையே சொல்லி கேட்டிருந்தான் நான் நினைக்கிறன் தனது காதலி என தப்பாக

நினைத்து இருந்திருக்கிறான் . டேய் நானும் ஒரு boy தாண்டா என அவனுக்கு பதில் அனுப்புவம் என

நினைச்சிட்டுவேண்டாம் இதோடையே போகட்டும் எல்லாம் என்றிட்டு அந்த accunt deactivate பண்ணிட்டன் அதற்கு பிறகு எனது சொந்த facebook லையே தெரியாத யாரையும் add பண்றதும் இல்லை அப்பிடி add பண்ணினாலும் எல்லாரும் chat off தான்

*யாவும் கற்பனை இல்லை

* பெயர்கள் மாற்றபட்டுள்ளது

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வேகமாகவா?

அப்படி என்னதான் கடலை போட்டுக் கதைத்தீர்கள்?

  • தொடங்கியவர்

இவ்வளவு வேகமாகவா?

அப்படி என்னதான் கடலை போட்டுக் கதைத்தீர்கள்?

அப்பிடி எதுவுமே வித்தியாசமாக கதைக்கவே இல்லை அக்கா ஆண் என்று சொன்னால் பிறகும் தொடர்ந்து கதைக்க மனசு வருமா ? :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.