Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

சரியான விடை

பாராட்டுக்கள். :D

  • Replies 4.5k
  • Views 398.7k
  • Created
  • Last Reply

1. மூர்ஸ் (Moore's) விதி என்றால் என்ன?

சரியான பதில் சொல்பவருக்கு ஒரு வைர நெக்லஸ் படம் பரிசாகத் தரப்படும். பலர் சரியான பதிலைச் சொன்னால் பரிசாக எதுவும் தரப்படமாட்டாது.

மாப்பிள்ளை அண்ணா! விடையை சொல்லுங்கோ. எங்களுக்கு எங்கட தலைவிதி மட்டும் தான் ஞாபகம் இருக்கு மற்ற விதி எல்லாம் மறந்து போச்சு. :rolleyes:

Edited by யாழ்வினோ

மாப்பூ.... எங்க தலைமறைவாகீரிங்க. :icon_idea:

கோர்டன் மூர்(Gordon Moore) என்பவர் கம்பியூட்டர் சிப்ஸ்(Computer Chips) செய்யும் உலகின் மிகப்பெரிய பிரபல இன்டெல்(Intel) நிறுவனத்தின் உருவாக்குனர்(Founder). இவர் 1965ம் ஆண்டு ஒரு கன அங்குலம் பரப்பளவு இன்டிகிறேட்டட் சேர்க்கிட்களில்(Integrated Circuits) உள்ள ட்ரான்ஸ்ஸிஸ்டர்களின்(Transistors) எண்ணிக்கை ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் இரண்டு மடங்காகின்றது என்ற தனது இந்த அவதானிப்பை வெளியிட்டார். (the number of transistors per square inch on integrated circuits had doubled every year since the integrated circuit was invented. Moore predicted that this trend would continue for the foreseeable future). இவரது இந்த அவதானிப்பு இன்றுவரை உண்மையாக இருக்கின்றது. இவ் அவதானிப்பே மூர்ஸ் விதியென உலகில் கம்பியூட்டர் விஞ்ஞானத்தில் பிரபலமாகப் பேசப்படுகின்றது. இதைப்பற்றி விளக்கமாக அறிவத்ற்கு இங்கே கிளிக்குங்கள் => மூர்ஸ் விதி

எனது அடுத்த கேள்வி டிரான்ஸ்டிட்டெரை(Transistor) கண்டுபிடித்தது யார்? இவர்களிற்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது?

முதலாவது கேள்விக்கான விடை :- மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது

அவர்களின் பெயர் விபரம்:-

1) John Bardeen

2) Walter Brattain

3) William Shockley

இரண்டாவது கேள்விக்கான விடை :- நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1956

மாப்பிள்ளை அண்ணா! சரியா?? :icon_idea:

Edited by யாழ்வினோ

வினோ, சரியான விடை. வாழ்த்துக்கள்! இது பொதுஅறிவுச் சோதனைகளில் வழமையாகக் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று!

1) கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

2) அவர் எந்த நாட்டில் பிறந்தார்?

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

1) கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

2) அவர் எந்த நாட்டில் பிறந்தார்?

Konrad Zuse

germany

முதலாவது கேள்விக்கான விடை

"Alan Turing "

இரண்டாவது கேள்விக்கான விடை

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில்

இந்த விடை சரியா?

சுட்டி, கறுப்பி அக்கா இருவரும் கூறிய பெயர் தவறு.

இங்கிலாந்து நாட்டவர், லண்டனில் பிறந்தவர் என்பது சரி.

நாளைக்கு விடை சொல்லுகிறேன் அதுவரை முயற்சிக்கவும்.

சரியான விடை:- கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - Charles Babbage (1791-1871) London, England.

Note:-

நவீன கணினி விஞ்ஞான உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - Alan Turing (1912-1954) London, England.

1936 ஆம் ஆண்டு உலகின் முதல் program-controlled computer இனை உருவாக்கியவர் - Konrad Zuse (1910-1995) Germany.

பல்வேறு காலகட்டங்களில் பலர் கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டுள்ளனர் இப்படி கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்களில் மிகவும் மூத்தவர் அதாவது பழமை வாய்ந்தவர் 1623 ஆம் ஆண்டு Automatic Calculator இனை கண்டுபிடித்த Wilhelm Schickard (1592 - 1635) ஆவார். சுருக்கமாக சொன்னால் கணினிக்கு தந்தைமார் பலர் . ஆனால் கணினியின் தந்தை யார் என்ற கேள்விக்கு சரியான விடை Charles Babbage (1791-1871) என்பது தான்.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுகள் அழகு

சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing)

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் I

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

ரஷ்யா

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

1957 ஆம் ஆண்டு

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் I

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

ரஷ்யா

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

1957 ஆம் ஆண்டு

ஸ்புட்னிக் - I ( Sputnik - I) என்பது தவறான விடை.

ஸ்புட்னிக் - I ( Sputnik - I) விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்படவில்லை. அது விண்வெளியின் Atmosphere இனை ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலம். 04 - October - 1957 அன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட ஸ்புட்னிக் - I ( Sputnik - I) விண்கலம் 3 கிழமைகள் விண்வெளியின் Atmosphere பற்றிய தகவல்களை Russia விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது பின்னர் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கலம் பழுதடைந்த காரணத்தால் அது செயலிழந்தது.

Edited by யாழ்வினோ

முயற்சி செய்து பாருங்கள். முடியாவிடின் நாளை காலை விடையினை சொல்கிறேன்.

1) சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing) முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன? Luna - 9

2) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது? Russia

3) எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது? 03 - February - 1966

சந்திரன் பற்றிய ஆராட்சிகள் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் சந்திரனில் தரையிறக்கப்படவில்லை மாறாக அந்த விண்கலம் சந்திரன் மீது மோதவிடப்பட்டது (Crash Landing). பல விதமான விஞ்ஞான ஆய்வு உபகரணங்கள், கமராக்கள் பொருத்தப்பட்ட விண்கலமானது சந்திரனை படம் பிடித்து கட்டளை மையத்துக்கு அனுப்பியவாறு சென்று சந்திரனில் மோதி அழிந்துவிடும். விண்கலமானது சந்திரனில் மோதும் இறுதி நொடிகளில் கட்டளை மையத்துக்கு அனுப்பிய படங்களில் சந்திரனின் மேற்பரப்பு, தரைத்தோற்றம் போன்றவற்றை அவதானித்த விஞ்ஞானிகள் அவற்றை பதிவு செய்து பின்னர் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்பரப்பை படம் பிடித்தவாறு சென்று சந்திரனில் மோதுவதற்காக 02 - January - 1959 முதன் முதலில் ரஷியாவினால் அனுப்பப்பட்ட Luna - I (Lunik - I) விண்கலம் நேரக்கணிப்பு பிழைத்தமையால் சந்திரனில் மோதாமல் சந்திரனை தாண்டி சென்றுவிட்டது. அதனை தொடர்ந்து 12 - September - 1959 அனுப்பப்பட்ட Luna - II (Lunik - II) விண்கலம் கமராக்கள் உற்பட 391 Kg விஞ்ஞான உபகரணங்களை சுமந்து சென்று வெற்றிகரமாக சந்திரனில் மோதியது (Crash Landing). அதன்போது படங்கள் உற்பட சந்திரனின் Atmosphere சம்மந்தமான தகவல்களையும் கட்டளை மையத்துக்கு அனுப்பியது.

Note:- சந்திரனை சென்றடைந்த முதல் ஆளில்லாத விண்கலம் (Crash Landing) Luna - II (Lunik - II) - 12 - September - 1959.

இதன் பின்னர் விஞ்ஞானத்தில் ஏற்ப்பட்ட வளர்ச்சியினால் சந்திரனில் தரையிறங்கக்கூடிய ஆளில்லாத விண்கலத்தினை வடிவமைத்து அனுப்பிய ரஷியா விஞ்ஞானிகள் பல தடவைகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தனர் ஆனால் அவர்களின் விடா முயற்சியால் 03 - February - 1966 அன்று ஆளில்லாத விண்கலமான Luna - 9 முதன் முதலாக சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது (Soft Landing).

1) விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் யார்?

2) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

3) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

4) விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் யார்?

5) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

6) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

1) விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் யார்?

Major Yuri Alexeyevich Gagarin

விண்கலத்தின் பெயர் - Vostok

2) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

ரஷ்யா

3) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

12 - 04 - 1961

4) விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் யார்?

Lieutenant Valentina Tereshkova

விண்கலத்தின் பெயர் - Vostok - VI

5) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

ரஷ்யா

6) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

16 - 06 - 1963

Edited by யாழ்வினோ

1) யாழ் பொது நூலகம் எத்த ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது?

2) யாழ் பொது நூலகம் யாரால் திறந்துவைக்கப்பட்டது?

3) யாழ் பொது நூலகம் எந்த ஆண்டில் எரியூட்டப்பட்டது?

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

1) யாழ் பொது நூலகம் எத்த ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது?

11.10.1959இல்

2) யாழ் பொது நூலகம் யாரால் திறந்துவைக்கப்பட்டது?

முன்னால் யாழ் மேயர். அ.த.துரையப்பா

3) யாழ் பொது நூலகம் எந்த ஆண்டில் எரியூட்டப்பட்டது?

05.31.1981 ல்

சரியான விடைகள்

குறிப்பு:- 31-05-1981 நள்ளிரவு 12 மணிக்கு பின் நூலகம் எரிக்கப்பட்டமையால் எரிக்கப்பட்ட திகதி 01-06-1981 என்று தான் கருதப்படுகின்றது.

எங்க நம்மட கேள்விக்கு யாராவது சரியான பதிலை சொல்லுங்க பார்க்கலாம்.

Bluetoothற்கும் Infrared தொழில்நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எவை?

Edited by மாப்பிளை

மாப்பிளை அண்ணா விடையை சொல்லுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.