Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இரு ஆசிரிய சகோதிரகளின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இரு ஆசிரிய சகோதிரகளின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

யாழ்.பலாலி வீதியில் ஆசிரியர்களான இரு சகோதரிகள் கிணற்றிலிருந்து சடலமாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கொட்டடி நமசிவாய பாடசாலை ஆங்கில பாட ஆசிரியரான சங்கரப்பிள்ளை சாளினி (கீதாஞ்சலி), யாழ்.கொக்குவில் ஆங்கில பாட ஆசிரியரான சங்கரப்பிள்ளை தனுஜா (சொர்ணலதா) ஆகிய இரு இளம் சகோதரிகளே மரணமடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களது மரணம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இவர்கள் இருவரின் சடலமும் யாழ்.பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24510

யாழில் ஒரு வீட்டில் இரு பெண்கள் சடலமாக மீட்பு

3cc321c8d3d48ec6b42cc30f1e6e2371.jpg

யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்.பலாலி வீதி 2ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலமும் கிணற்றிலிருந்து ஒரு சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இருவரும் சகோதரிகள் எனக் கூறப்படுகிறது.

இரவரில் மூத்தவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளையவர் கிணற்றிலிருந்தும் சடலமாக மீட்கப்பட்டனர்.

அதேபகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி (வயது 43) ஷாலினி (வயது 40) என்ற இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சடலங்களை மீட்ட யாழ். காவற்றுறையினர், உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக, யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதித்து, முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://184.107.230.1...86976615312140#

Edited by செந்தமிழாளன்

(2ம் இணைப்பு) photo.pngPhoto

யாழ். கோண்டாவில் பகுதியில் இரு சகோதரிகள் தற்கொலை!

[ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 06:44.33 AM GMT ] [ யாழ் நிருபர் ]

jaffna_14412_1.jpg

யாழ்.கோண்டாவில் பகுதியில் பெண் சகோதரிகள் இருவர் இன்று காலை தூக்கிட்டும், கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

சகோதரிகளான ச.கீதாஞ்சலி (வயது42), ச.சுவர்ணலதா (வயது40) ஆகிய இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் நீண்டநேரம் வெளியே வராமையினால் வீட்டில் இருந்தவர்கள் சந்தேகத்தில் அறையை உடைத்து திறந்துள்ளனர்.

அப்போதே கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி சுவர்ணலதா வீட்டின் பின்னாலுள்ள கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இதேவேளை கீதாஞ்சலி கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியை எனவும், சுவர்ணலதா கொட்டடி நமசிவாயம் வித்தியாலய ஆசிரியை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தினால் கோண்டாவில் பகுதி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதனையடுத்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

http://www.tamilwin.com/show-RUmqyESYOUjoz.html

அக்காதங்கை வாய்ச்சண்டை இருவரது உயிரையும் பறித்தது யாழ்ப்பாணத்தில் பரிதாப சம்பவம்

SUNDAY, 15 APRIL 2012 00:23 HITS: 123

  • emailButton.png
  • printButton.png

யாழ்நகர் நிருபர்

சகோதரிகள் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அரைமணி நேர இடைவெளியில் அவ்விருவரதும் உயிர்களைப் பறித்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணத்தில் புதுவருட தினமான வெள்ளிக்கிழமை மாலைஇடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கும் இலுப்பையடிச்சந்திக்குமிடையில் பலாலி வீதியில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில்இடம்பெற்ற இந்தத் துயரச்சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆங்கில ஆசிரியையான செல்வி சங்கரப்பிள்ளைசுவர்ணலதாவும் (43 வயது) அவரது சகோதரியும் கொட்டடி நமசிவாயம் வித்தியாலய ஆங்கில ஆசிரியையான செல்வி ச.கீதாஞ்சலியுமே (40 வயது) உயிரிழந்தவர்களாவர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

இவ்விருவரும் தாய் தந்தை மற்றும் இரு சகோதரிகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்தனர்.

புதுவருடம் பிறப்பதற்கு முன் இவ்விரு சகோதரிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுவணர்லதா தொலைக்காட்சி இருக்கும் அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டார். இவ்வாறான வாய்த்தர்க்கம் இடையிடையே ஏற்படுவதால் இதனை யாரும் பொருட்படுத்தவில்லை. எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அந்த அறைக்கதவை தட்டிய போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது, பல தடவைகள் அழைத்தும் பதில் வராததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பஞ்சாபியின் மேல் சால்வையால் மின்விசிறியில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வீட்டிலிருந்தோர் கத்திக்குளறியவாறு சால்வையை வெட்டி உடலை கீழே இறக்கிய போது அவர் இறந்துவிட்டதை அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சகோதரி உணர்ந்து கொண்டார்.

பதைபதைத்த பெற்றோர் கீழே கிடந்த மகளின் உடலை வாகனமொன்றில் ஏற்றி யாழ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்து விட்டாரென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்பத்திரியில் இருந்துவீடு திரும்பிய அவர்கள் மற்ற மகளைக் காணாது எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். கிடைக்காது போகவே இரவு 8.30 மணியளவில் வீட்டின்பின்புறத்திலுள்ள கிணற்றை சென்று பார்த்த போது கீதாஞ்சலியின் உடல் மிதப்பது தெரிந்தது.அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போய்விட்டனர்.

சகோதரி தூக்கில் தொங்கி உயிரிழந்ததை கண்டே அவரது உடல் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன் மற்ற சகோதரி கிணற்றினுள் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

நேற்றுக்காலை இவர்களது வீட்டிற்கு வந்த பொலிஸார் கிணற்றினுள்ளிருந்து சடலத்தை வெளியே எடுத்து யாழ் ஆஸ்பத்திரி சவச்சாலைக்கு கொண்டு சென்று சகோதரியின் உடலுடன் இவரது உடலையும் வைத்தனர்.

இருவரதும் மரண விசாரணைகளின் பின் சடலங்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆங்கில ஆசிரியைகளான இவ்விரு சகோதரிகளினதும் அவலச் சாவு யாழ். மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/12773-2012-04-14-18-54-35.html

ஒரே வீட்டில் ஒரே இரவில் இரண்டு சகோதரிகள் தற்கொலை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-15 12:26:07| யாழ்ப்பாணம்]

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு

ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் அடுத் தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் பலாலி வீதியில் ஆரியகுளத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு 7.30 மற்றும் 7.45 மணியளவில் இடம்பெற்றுள் ளது. இச்சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆங்கில ஆசிரியையான சங்கரப்பிள்ளை சுவர்ணலதா (வயது-43), யாழ். கொட்டடி நமசிவாய வித்தி யாலய ஆங்கில ஆசிரியையான சங்கரப்பிள்ளை கீதாஞ்சலி (வயது-40) ஆகிய சகோதரிகளே உயிரிழந்த வர்களாவர். இச்சம்பவத்துக்கு அவர்களிடையே இடம் பெற்ற கருத்து மோதலே காரணம் என பெற்றோர் கூறுகின்றனர்.

இது குறித்து பெற்றோர் தெரிவித்ததாவது, நேற்று முன்தினம் மாலை இச் சகோதரிகளுக்கிடையில் கருத்து மோதல் இடம் பெற் றுள்ளது.இதனைத் தொடர்ந்து மூத்த சகோதரி அறையினுள் சென்று விட்டார். பின்னர் 7.30 மணியளவில் அவ் அறைக்குச் சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலை யில் சடலமாக காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரது சடலத்தை உறவினர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் மற்றைய சகோதரி இரவு 7.45 மணியளவில் கிணற்றுக்குள் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு திரும்பியவர்களால் இவரது சடலம் கிணற்றி னுள் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. இச் சகோதரிகளின் தற்கொலை யாழ். குடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சகோதரிகளும் நீண்ட நேரம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் அதன் விளைவாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் எனவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை யாழ்.குடாநாட்டில் தற் கொலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இவற்றினைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வுகளும், போதனைகளும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இம் மாதத்தில் மட்டும் 8 பெண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=28169

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.