Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவினை போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியும் ! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலைமை வழக்கு தொடுனர்

Featured Replies

சிறிலங்காவினை போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியும் ! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலைமை வழக்கு தொடுனர்

By naatham On 15 Apr, 2012 At 08:50 AM

Fatou-Bensouda-ICC-deputy-007-300x180.jpgசர்வதேச நாடுகளின் விரிவான தலையீடுள் ஊடாக சிறிலங்காவினை அதன் போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்புதிய தலைமை வழக்கு தொடுனர், கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக்கழக சட்டவியல் கருத்தரங்கொன்றில் பங்குபற்றிப் பேசிய தலைமை வழக்கு தொடுனர் ஃபாத்து பென்சூத்தா அவர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதற்படியில் குற்றங்களை, தான் விசாரித்து தீர்ப்பளிக்குமென்றும், அது இயலாதபட்சத்தில், பரந்துபட்ட சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தி, குற்றம் புரிவோரை பொறுப்பு கூறவைப்பதுண்டு என்றும், அதனடிப்படையில் சிறிலங்காவினை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் தீர்ப்புகளின் கீழ் கொண்டுவர முடியுமென்று தெரிவித்தார்.

சர்வேசே குற்றவியல் நீதி மன்ற ரோம் உடன்படிக்கையில் சிறிலங்கா ஒப்பமிடாத நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஃபாத்து பென்சூத்தா அவர்கள், சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் சேவை, அதன் அங்கத்தவ நாடுகளுக்கு மட்டுமாகும் என தெரிவித்தார்

fatou-bensouda-nicole-samson-luis-moreno-ocampo-2009-1-26-8-33-20-300x199.jpgஆனாலும் ஐ.நா பாதுகாப்பு சபையால் கையளிக்கப்படும் விசாரணைகளையும், அங்கத்துவமில்லாத நாடுகள் தமக்கு இயலாமல் போய்விட்ட வழக்குகளை கையளிக்கும் போதும், சர்வதேச குற்றவியல் நீதி மன்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை விசாரித்து தீர்ப்பளிப்பதுண்டு என எடுத்துரைத்துள்ளார்.

சிறிலங்காவினை பொறுத்தளவில் இவையாவும் கைகூடாத நிலையில், சர்வதேச நாடுகளின் விரிவான தலையீடுதான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சிறிலங்காவின் போர்குற்ற விவகாரத்தில் தலையிட வைக்க முடியுமென்று தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்புதிய தலைமை வழக்கு தொடுனர் கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்களோடு கலந்துரையாடியதோடு தமிழர்கள் தொடார்பிலான களஆய்வுக் கையேடு ஒன்றினையும் அவருக்கு கையளித்தார்.

இக்கையேட்டினை பிரதமரின் ஆலோசகர் தெய்வேந்திரன் கந்தையா அவர்கள் இக்கருத்தரங்கிற்கென சிறப்பாக உருவாக்கியிருந்தார்.

இதேவேளை இக்கருத்தரங்கில் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் சிலரும் பங்கெடுத்திருந்தனர்.

நாதம் ஊடகசேவை

  • தொடங்கியவர்

இங்கே பெரிய விடயம், இலங்கையை உடனேயே தண்டிக்கலாமா இல்லையா என்பதல்ல.

அவர்களின் Chief Prosecutor தனது வாயால் இலங்கையின் குற்றங்களை விபரிப்பதுதான். இவர் ஒரு ஸ்ர்வதேச நிலையில் இருக்கும் வழக்கு தொடுனர். உண்மையாக நடந்த சம்பவத்தின் குற்றங்களின் பின்னணியை விபரிக்கிறார். அதாவது இங்கே ஒரு நீதி மன்றம் இல்லையாயினும், இந்த தர அதிகாரியின் வாயால் வந்தவற்றை சர்வதேசம் தாக்கல் செய்ய பட்ட வழக்காக ஏற்க முன் வரவேண்டும். அவரின் வாயால் வந்தவற்றை, சாட்சியங்களை கூட்டி, சரிபிழை பார்த்து தீர்ப்பு வழங்கவேண்டும்.

இப்போது இலங்கைக்கு ICC அதிகாரிகள் புலிகளாக மாறிவிட்டார்கள் அல்லது புலிகளுக்காக பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று அறிக்கை வெளிவிடவேண்டிய தேவை வந்து விட்டது.

Edited by மல்லையூரான்

நல்ல செய்தி.

பொதுவாக தனிப்பட்ட குற்றம் செய்தவர்கள் நல்ல வழக்கறிஞர் இருந்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளுவார்கள் இல்லை தண்டனை காலத்தை குறைத்துக்கொள்ளுவார்கள்.

அதுபோலவே ஒரு இனப்படுகொலையை செய்தவர்களை தண்டிக்க விடாமுயற்சியும், உழைப்பும், பரப்புரையும், பணமும் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

பொஸ்ரன் பல்கலைக்கழக கருத்தரங்கில் நா.க.த.அரசின் பிரதிநிதிகளுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய தலைமை வழக்கு தொடுனர், கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்கள்

DSC09447.JPG

DSC09449.JPG

DSC09443.JPG

DSC09452.JPG

ஜெனீவாவில் பல்வேறு தரப்பினரால் கிடைத்த சாதகமான சூழ்நிலையை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.

இவர்களது முயற்சிகள் நல்லது. ஆனால் ஆளுக்காள் கூட நின்று படம் எடுத்து அதை ஊடகங்களில் பிரசுரித்து தம்பட்டம் அடிப்பது தேவையற்றது. இது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்! தேவையற்ற தம்பட்டங்களால் சாதகமான சூழ்நிலையை கெடுக்கவும் வேண்டாம்!

இதைப் பார்த்து இவர்கள் எதோ பெரிசாக சாதித்துவிட்டார்கள் என்று நம்பும் நிலையில் தமிழர் இல்லை.

Show காட்டாமல் வேலை செய்யப் பழக வேண்டும்!

  • தொடங்கியவர்

ஆராவமுதன்: உங்களின் அறிவுரை விளங்கிக்கொள்ளத்தக்கது. கையில் கிடைத்த படங்களை தேவயான அனுமதிகளை பெற்றபின் பிரசுரித்ததிற்கான முழு காரணத்தையும் இந்த திரியில் விளங்க வைக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

இது ஒரு பகிரங்க கருத்தரங்கு. இவற்றில் மக்களை ஆர்வம் காட்ட வைக்க சிறு அளவிலான விளம்பரம் தேவை. இல்லையேல் TGTE ஒழுங்குசெய்யும் கருத்தரங்குகளுக்கு நமது ஆர்வலர்களை வர வைப்பது கடினம்.

இது தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளாக நடை பெறவில்லை. பார்வையாளர் வரிசையில் யாரும் இருந்திருந்திருக்க முடியும்.

திரியில் காணப்படும் பெரும்பாலான விபரங்கள், நாதம் நியூசிலும், யூரியூப்பிலும் ஏற்கனவே வந்திருப்பவையும் தான்.

இணந்து செயல் படுவதற்கு முகங்களை தெரியாத போது மக்கள் தயங்குகிறார்கள். நாம் சுய விளம்பரத்திற்கும், அறிமுகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையையும் அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.

திரும்பவும், இதை பிரசுரித்ததிற்கான முழுக் காரணத்தையும் இந்த திரியில் விளங்க வைக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தேவையான போது நாம் பகிர்ந்து கொள்ளலாம்

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.