Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வரின் வியூக அரசியலுக்குள் வீழும் மாங்காய்கள்! (காணொளி இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jeya17.jpg

சிறிலங்காவுக்கான இந்தியக் குழுவில் இருந்து தி.மு.கவும் விலகுவதாக சற்று முன்னர் மு.கருணாநிதி அறிவித்திருப்பதானது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வியூக அரசியலுக்குள் வீழ்ந்து விட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், சிறிலங்கா அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளதோடு அககுழுவில் இருந்து தனது கட்சி உறுப்பினரை விலக்கிவிட்டார்.

இந்நிலையில் 16-04-2012 திங்கட்கிழமை அன்று இந்தியக்குழுவினர் சிறிலங்காவுக்கு செல்லவுள்ள நிலையில் மு.கருணாநிதியின் அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில் தமிழக முதலமைச் செல்வி ஜெயலிதாவின் அதிரடி அரசியல் வியூகதத்தின் தொடர்சியாக இந்தியக்குழுவினரின் சிறிலங்காவுக்கான பயணத்தினை மையப்படுத்தி செல்வி ஜெயலலிதா வகுத்த அரசியல் வியூகத்துக்குள் ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தனது கட்சிப் பிரதிநிதியை பயணக்குழுவில் இடம்பெறவேண்டாமென நிறுத்தியதால் இந்தியத் தூதுக்குழுவின் பயண நோக்கத்திற்கு எந்தவிதமான தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றாலும் இந்திய மத்திய அரசுக்கும் தனது பரம அரசியல் எதிரியான தி.மு.க.வுக்கும் இலங்கைக்கும் அரசியல் ரீதியாக அவர் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று பெஸ்ட் போஸ்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜெயலலிதா வியூக அரசியல் நகர்வானது ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதோடு ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல இந்திய மத்திய அரசியல் களத்திலும் தன்னுடைய வியூகத்துக்குள் இரு களங்களையும் வீழ்த்துகின்ற வல்லமையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.

சிறிலங்கா அரசுடன் நட்புறவுடன் காட்சியளிப்பதற்குப் பதிலாக கடுமையான முறையில் செயற்படவேண்டுமென்பதே ஜெயலலிதாவின் நிலைப்பாடகவுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில் முதலில் களத்தில் குதித்த செல்வி ஜெயலிலதா மத்திய அரசுக்கு மட்டுமல்ல திமுகவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

அதில் வெற்றியும் கண்டாhர். தற்போது இந்தியக்குழுவின் சிறிலங்காவுக்கான பயண விவகாரத்திலும் அதிரடி அரசியலை வெளிப்படுத்திய ஜெயலிலதாவின் வியூகத்துக்குள் தற்போது திமுகவும் வீழ்ந்து விட்டது என்தற்கான சாட்சியாகவே தற்போது மு.கருணாநிதியின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்திய மத்திய அரசியலை மையப்படுத்தி நகரும் செல்வி ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்கள் தமிழக எல்லையினையும் தாண்டிய அரசியல் சாணக்கியத்தைக் கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.

http://youtu.be/D9KQRbRM_J8

அகரதன்

http://www.vannionli...-post_7080.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதாவின் முடிவுகள் வரவேற்கத் தக்கவை, என்ற போதிலும், இவரின் அந்தரங்க ஆலோசகர் 'சோ ராமசாமி' என்பதை நாங்கள், இலகுவில் மறந்து விடக்கூடாது!

இவர் இப்போது எடுக்கும் முடிவுகள், தமிழ்நாட்டில் வளர்ந்து வரும், தமிழர்கள் தங்களைத் தனியான ஒரு இனமாக அடையாளம் கண்டு கொள்வதை, தாமதப் படுத்தும் முயற்சியாகக் கூட இருக்கலாம்! நெடுமாறன், சீமான், போன்றவர்களால் வளர்த்தெடுக்கப் பட்ட தமிழ் உணர்ச்சியானது, அகில இந்திய ரீதியில், இந்திய அரசியலின் பெரும்பான்மைக் கட்சிகளின் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது!

இதைத் தவிர்க்கும் முகமாக, ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகள், தமிழர்களை ஒரு 'மயக்க' நிலையில் வைத்திருப்பதோடு, சீமானதும், நெடுமாறனதும் கொள்கைகளின் அதீத வளர்ச்சியைக், கொஞ்சக் காலம் தள்ளிப் போடும், அல்லது இல்லாமல் செய்துவிடும்!

தமிழ்க்கடவுளான முருகனின், அதீத வளர்ச்சியின் போது, தேவேந்திரனின் மகள் தேவயானையை முருகனுக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்துச் சம்பந்தியாக்கியது,பார்ப்பனீயம்! அந்தப் பெருமையில், முருகனை இழந்த தமிழ் மக்கள், பெருமையின் உச்சத்துக்கே சென்றனர்! ஆனால், ஆயிரம் தெய்வங்களைக் கொண்ட இந்து மதம், ஆயிரத்து ஒன்றாக, முருகனைத் தெய்வமாக்கியதன் மூலம், எதையும் இழக்காமல், தமிழ்த் தெய்வம் ஒன்றைத் தனதாக்கிக் கொண்டது!

அதே போலத் தான் இதுவும் இருக்கலாமோ, என்ற பயம் உள்ளது எனினும், செல்வி ஜெயலலிதாவின் முடிவுகளுக்கு, வாழ்த்துக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.