Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா அரைவழி நண்பன்.

Featured Replies

யுத்தக்குற்ற விசாரணை: அமெரிக்கா அரைவழி நண்பன்.

29.02.2012

இக்கட்டுரை ஒரு கொள்கை ஆய்வுக் கட்டுரையாகவும் ஒரு கொள்கை வகுப்புக் கட்டுரையாகவும் அமைந்துள்ளதுடன் இலங்கைத்தீவு தொடர்பான சர்வதேச மற்றும் பிராந்திய அரசியலின் உடற்கூற்றியலை விளக்குவதாயும் அமைந்துள்ளது. இவற்றுடன் கூடவே ஓர் அரசியல் நிலைப்பாட்டையும் இக்கட்டுரை கோடிகாட்டி நிற்கின்றது.

முள்ளிவாய்க்கால் யுத்தம் ஒரு சர்வதேச யுத்தத்தினதும், ஒரு பிராந்திய யுத்தத்தினதும், ஒரு முதற் பகுதியாய் முடிவடைந்துள்ளது. அதன் இரண்டாம் பகுதி இப்போது ஆரம்பமாகிவிட்டது.

சீன-அமெரிக்க சர்வதேச வியூகமும், இந்திய-சீன பிராந்திய வியூகமும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் யுத்தமாய் வெடித் தெழுந்ததே இதன் முதலாவது பகுதியாய் அமைந்தது.

சீனாவை எதிர் கொள்வதற்கான அமெரிக்க வியூகத்தின் முதலாவது பகுதி புலி எதிர்ப்பு அரசியலாய் அமைய, அதன் இரண்டாவது பகுதி ராஜபக்ஷ அரசாங்க எதிர்ப்பாக அமைகிறது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தையும், சிங்கள அரசையும் பெரிதும் சர்வதேச பரிமாணத்தில் பார்க்கத் தவறுவோமேயானால், இலங்கையின் இனப்பிரச்சினையையும், தமிழரின் இரத்த ஆற்றையும் சிறிதும் புரிந்துகொள்ள முடியாதவர்களாகிவிடுவோம்.

அரசியல் பொருளாதார, தத்துவார்த்த அர்த்தத்தில் இன்று உலகில் ஒற்றை மைய அரசியல் பொருளாதாரமே உண்டு. அது நிதிமூலதன தகவல் ஆதிக்க ஒற்றை மைய ஏகாதிபத்திய அரசியல்; பொருளாதார ஒழுங்கே ஆகும். இன்று சோசலிசம் என்றும், ஏகாதிபத்தியம் என்றும் இரண்டு வேறுபட்ட பொருளாதார ஒழுங்கு உலக அரசியலில் இல்லை. ஆனால் இ;ந்த ஒற்றை மைய அரசியல் பொருளாதாரம் ஸ்தாபிதம் அடைந்துவிட்ட போதிலும், பிரச்சினை என்னவெனில் இதற்கு அரசியல் இராணுவத் தலைமைத்துவத்தை யார் தாங்குவது என்பதுதான். இன்று அமெரிக்காவே அதற்குத் தலைமை தாங்குகிறது. ஆனால் வேகமாக வளர்ந்துவரும் சீனா இந்துசமுத்திரத்தில் தன்னைப் பலப்படுத்துவதன் மூலம், காலகதியில் ஏகாதிபத்திய ஒற்றை மைய அரசியலுக்கான தலைமையை தனதாக்கிக் கொள்ளவோ, அல்லது அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கவோ முற்பட்டுள்ளது. இப்பின்னணியில் இலங்கைத்தீவு தலையாய இடத்தை வகிக்கிறது.

பனிப்போர் முடிந்தபின் உருவான முற்றிலும் திறந்த உலக அரசியல் பொருளாதாரத்திற்கான சர்வதேச ஒழுங்கு மற்றும் சட்டவிதிகளைப் பயன்படுத்தி இலங்கையை தனது வலைக்குள் அகப்படுத்திக் கொள்ள சீனா திட்டமிடலாயிற்று. இதற்காக தனக்குச் சாதகமான ஓர் அரசாங்கம் இலங்கையில் அமையுமிடத்து அதன் மூலம் அமைதியான முறையில் தன் பிடியை இலங்கையில் இறுக்க முடியுமெனவும், அதன்வழி இந்துசமுத்திரத்தில் தன்னைப் பலப்படுத்த முடியுமெனவும் சீனா திடமாக நம்பலாயிற்று. இதற்காக ராஜபக்ஷா அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் சீனா (பீஜிங்) ஆர்வம் காட்டியது. மாறாக அமெரிக்கா (வாஷிங்டன்) ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவர விரும்பியது. இங்குதான் இனப்பிரச்சினை இதுவிடயத்தில் ஒரு கருவியாக்கப்பட்டது.

2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை விடுதலைப்புலிகள் பகிஸ்கரித்தமையானது ராஜபக்ஷா பதவிக்குவர வாய்ப்பளித்தாக வாஷிங்டன் புலிகள் மீது சீற்றம் கொண்டது. ராஜபக்ஷாவின் வெற்றி சர்வதேச அர்த்தத்தில் பீஜிங்கின் வெற்றியாக வாஷிங்டனாலும், மொத்த மேற்குலகாலும்

பார்க்கப்பட்டது. ஆதலால் சீனாவிற்கு எதிரான இந்துசமுத்திர யுத்தத்தை புலிகளுக்கு எதிரான யுத்தத்திலிருந்து ஆரம்பிக்க வாஷிங்டன் முற்பட்டது. 2005-ம் ஆண்டின் பின்பு மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களில் 5 ஆயுதக் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்து உதவியதாக ஜனாதிபதி ராஜபக்ஷ 2009-ம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தமை இங்கு கவனிக்கத் தக்கது.

வாஷிங்டனின் இந்துசமுத்திரத் திட்டத்தில் முதல் கட்ட எதிரியாக புலிகளும், இரண்டாம் கட்ட எதிரியாக ராஜபக்ஷ அரசாங்கமும் அமைந்தன. புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தில் அமெரிக்காவை அரைவழி நண்பனாக (ர்யடக றயல கசநைனெ) ராஜபக்ஷ அரசாங்கம் கருதியது. ஆதலால் அமெரிக்காவின் உதவியை அது முழு அளவில் பெற்றுக் கொண்டது. அவ்வாறு அமெரிக்க உதவியைப் பெறும் போது சிவப்புச் சாய ஜே.வி.பி இனரோ, அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோசம் எழுப்பும் ராஜபக்ஷாக்களுக்கோ அமெரிக்காவை ஏகாதிபத்தியம் என்று கூறி அமெரிக்க உதவிகளைப் புறம் தள்ளவில்லை.

புலிகளின் வீழ்ச்சியோடு அமெரிக்காவின் முதல் கட்டம் நிறைவடைந்தது. உண்மையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவானது. சீனாவிற்கு முழு நீள வெற்றியையும், ராஜபக்ஷ குடும்பத்திற்கு குறுங்கால வெற்றியையும் கொடுத்த அதேவேளை பிராந்திய அரசியல் அர்தத்தில் இந்தியாவிற்கு அடிப்படைத் தோல்வியையும், உலகளாவிய அரசியலில் அமெரிக்காவிற்கு அடிப்படைத் தோல்வியையும் கொடுத்தது. ஆனால் புது டில்லிக்கும், வாஷிங்டனுக்கும் ஒருவகை ஆறுதல் வெற்றிகளைக் கொடுத்தது. அதை விபரமாக நோக்குவோம். அதாவது தனது இந்துசமுத்திர பிராந்தியத்திற்கான தனது நீண்டகால சீன எதிர்ப்பு வியூகத்தில் புலிகளைத் தோற்கடிப்பதை ஒரு முதல் கட்டமாக அமெரிக்கா திட்டமிட்டது.

அந்தவகையில் அது அமெரிக்காவிற்கு ஆறுதல் அளிக்கும் வெற்றிதான். அதேவேளை ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்தி சீனாவைப் புறம் தள்ளாத வரைக்கும் வாஷிங்டனின் இந்த யுத்தம் ஓயமுடியாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் யுத்தத்தின் மூலம் பிராந்திய வியூகத்தில் சீனாவிடம் இலங்கையை கனிசமான அளவு இந்தியா பறிகொடுத்து விட்டதாயினும், முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி தொடர்பான விடயத்தில் புதுடில்லி தனது கணக்கை தீர்த்துக் கொள்ள முடிந்துள்ளது. அதாவது இந்திய அரசிற்கு இந்த யுத்தம் தோல்வியே ஆனாலும், பதவியில் இருக்கும் அரசாங்கத்திற்கு இது ஒரு உளவியல் திருப்தியை அளித்துள்ளது.

இனவாத மற்றும் புலி எதிர்ப்பு அரசியலையே தமது அரசியலாகக் கொண்ட ஜே.வி.பி இனருக்கு புலிகளின் வீழ்ச்சியே ஜே.வி.பி இனரின் வீழ்ச்சியாகவும்; அமைந்தது. முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் ஐந்தொகைக் கணக்கெடுப்பு மேற்கூறியவாறே அமைந்தது. இனி கையிருப்பிலுள்ள இந்த ஐதொகைக் கணக்கிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்குவோம்.

பின்லேடன் சாம்ராட்சியம், சதாம் ஹ_சையின் தர்பார், கேணல் கடாபி ராட்சியம், என்பனவற்றிக்கு எல்லாம். முற்றுப்புள்ளியிட்ட வரிசையில் புலிகளின் எழுச்சிக்கும் அமெரிக்கா முற்றுப்புள்ளி இட்டது. இப்போது அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியதாக எஞ்சியிருக்கும் சக்திகள் ஈரான், ராஜபக்ஷ அரசாங்கம், சிரிய அரசாங்கம் என்பனவாகும். இம்மூன்றையும் எதிர்;கொள்வதன் மூலம், தனது நீண்டகால எதிரியான சீனாவை எதிர்கொள்வதற்குரிய பலத்தை அமெரிக்காவால் ஈட்ட முடியும்.

இந்த சர்வதேச அரசியல் சக்கர அச்சை விளங்கிக் கொண்டால்தான் ஈழத்தமிழர் தொடர்பான அரசியலை நாம் புரிந்து செயற்பட முடியும். இன்றைய நிலையில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் அரசியல் ஆயுதம் ஈழத்தமிழர் விவகாரமும், முள்ளிவாய்க்கால் படுகொலையும்தான்.

இலங்கை அரசு அமெரிக்காவின் எதிரியல்ல. ராஜபக்ஷ அரசாங்கம்தான் அமெரிக்காவின் எதிரி. அதுவும் அரைவழி நண்பன், அரைவழி எதிரி என்ற பரிமாணத்தைக் கொண்டது. அரைவழி நண்பன் என்ற அதன் பரிமாணம் முடிவடைந்து விட்டது. இனி அரைவழி எதிரி என்ற பரிமாணமே உண்டு. புலிகளை வீழ்த்தும் வரை தமிழருடனான அமெரிக்காவின் உறவு அரைவழிப் பகைமை கொண்டதாக இருந்தது. ஆனால் புலிகளின் வீழ்ச்சியின் பின்பு தமிழருடான அமெரிக்காவின் உறவு அரைவழி நண்பன் என்ற நிலைக்கு மாறியுள்ளது. இதனை மிக நுணுக்கமாக நாம் ஆராய வேண்டும்.

தமிழர்கள் மீதான இனப்படுகொலை உலகின் கண்ணுக்குத் தெரிந்ததும் நிரூபிக்கப்படக் கூடியதாயும் உள்ளது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது பாதுகாப்புச் செயலளரான அவரின் சகோதரனான கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவர் மீதும் சர்வதேச விசாரணையின் மூலம் அவர்களைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதில் 21-ம் ஆண்டின் தொழில் நுட்பத்திற்கு கஸ்டம் ஏதும் இருக்க மாட்டாது. ஆனால் இங்கு பிரச்சினை மிகவும் கொதி நிலையானதும், இலகுவில் பதங்கெடக் கூடியதுமாகும்.

அதாவது சர்வதேச விசாரணை ஒன்றை ஏதாவது ஒரு வழியில் மேற்குலகால் கொண்டுவர முடியும். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவெனில் அவ்வாறு சர்வதேச மேற்குலகால் கொண்டுவந்து நிரூபிக்குமிடத்து சிங்கள இனவாதம் முற்றிலும் மேற்குல எதிர்ப்புடன் மக்கள் மயப்பட்டு ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் பலமடையும். அதாவது சர்வதேச விசாரணையின் மூலம் ராஜபக்ஷ சகோதரர்கள் இருவரும் குற்றவாளிகளாக் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் அடுத்த இரு சகோதரர்களான பசில் ராஜபக்ஷாவும், சமல் ராஜபக்ஷாவும் அரசியல் அரங்கில் உள்ளனர். முதல் இரு சகோதரர்கள் சிறை சென்றால் ஒரு புதிய சிங்கள இ;னவாத தேசிய எழுச்சியின் மூலம் ராஜபக்ஷா குடும்பம் அரியணையில் மேலும் பல தசாப்தங்கள் தொடர்ந்து அரியணையில் இருப்பது பலமுடன் தொடரமுடியும். ஈரானிய மக்கள் மத்தியில் நூறு வீத அமெரிக்க எதிர்ப்பு இருப்பது போல இலங்கையில் சிங்கள பௌத்தர் மத்தியில் நூறுவீத அமெரிக்க எதிர்ப்பு தோன்ற வாய்ப்பு இருப்பதுடன் மட்டுமல்லாது அது சீன ஆதரவாக பூதாகாரப்பட்டும் விடக்கூடிய ஆபத்து உண்டென வாஷிங்டன் கருதுகிறது போல் தெரிகிறது. எனவேதான் சர்வதேச விசாரணையை விடவும், ஓர் உள்நாட்டு விசாரணை புத்;திசாலித்தனமாக வாஷிங்டனுக்கு தோன்றுகிறது.

ஓர் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதன் மூலம், உள்நாட்டுச் சிங்கள நீதவான்களே வழக்கு விசாரணையில் ஈடுபடுவர். அது சுயாதீனமான விசாரணையாக இருக்குமிடத்து ராஜபக்ஷாக்களின் போர்க்குற்றம் சிங்கள மக்கள் மத்தியில் அம்பலமாகும் என்றும், சிங்கள நீதாவான்கள் விசாரிப்பதால் அது மேற்குலக எதிர்ப்பு வாதத்தை உருவாக்காது சிங்களவர்களுக்கிடையில் இருவேறு முகாம்களை உருவாக்கி இறுதியில் ராஜபக்ஷாக்களை பதவி கவிழ்க்க உதவுமென அமெரிக்கா கணக்கிடுகிறது போல் தெரிகிறது. ஆதலாற்தான் சர்வதேச விசாரணையை விடவும், அது உள்நாட்டு விசாரணையை அதிகம் அழுத்திக் கோருகிறது.

ஆனால் அமெரிக்கா போடும் கணக்குச் சிங்கள இனவாதத்தைக் கையாளும் விடயத்தில் வெற்றியளிக்கப் போவதில்லை. சிங்கள இனவாதத்தின் வரலாற்றைத் தெரிந்தாற்தான் அதன் பலத்தைப் புரிந்து கொள்ள முடியும். 2010-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டணியும், முஸ்லிம் காங்கிரசும், மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகளும் ராஜபக்ஷாவிற்கு எதிராக பொன்சேகாவிற்கு ஆதரவளித்தமையை மையமாகக் கொண்டு ராஜபக்ஷ அனுதாப இனவாத அலையை ராஜபக்ஷாக்களால் தோற்றுவிக்க முடிந்ததன் விளைவே ராஜபக்ஷாவின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகளாகும். இந்நிலையில் தேசபக்தனாகவும், தேசிய வீரனாகவும், துட்டகாமியின் மறு உருவமாகவும் சிங்கள

மக்களால் பார்க்கப்படும் ராஜபக்ஷாவிற்கு எதிரான அரசியலை இனவாதத்தின் பெயரால் நிலைநிறுத்த ராஜபக்ஷாக்களால் முடியும்.

இலங்கையின் இன அரசியலானது சமரச எல்;லைகளை எப்போதோ தாண்டிவிட்டது. இலங்கைத்தீவு இரண்டாக உடையாமல், இனி இலங்கை அரசியலை ஒருவராலும் கையாள முடியாது. உள்நாட்டு, வெளிநாட்டு சமரச அரசியல் முயற்சிகளும், மற்றும் விசாரணை அரசியலும், இறுதியில் பொய்த்துப்போய் இலங்கைத்தீவு இரண்டாக உடைவதில் வரலாறு சென்று முடியும். இப்போது அமெரிக்க மற்றும் மேற்குலக நிலைப்பாட்டை சர்வதேசக் கண்ணோட்டத்தில் நாம் மேற்கண்டவாறு புரிந்து கொண்டுள்ளோம். இவ்விடயத்தில் எம்மத்தியில் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது மேற்குலகம் தற்போது ஈழத்தமிழரின் அரைவழி நண்பன் என்ற இரண்டாம் கட்டத்திற்கு வந்துள்ளது. “விடிவாமளவும் விளக்கென” மேற்குலகின் அரைவழி நண்பன் பாத்திரத்தைத் தமிழர்கள் புரிந்தாக வேண்டும். “பசித்திருப்பதில் கஞ்சி மேல்” என இருக்கும் ஒரு சிங்களப் பழமொழியும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஸ்ராலின் தலைமையிலான சோவியத் யூனியனும், மாஓ சேதும் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசும், அமெரிக்கா, மற்றும் பிரித்தானியாவுடன் கைகோர்த்தனவே தவிர ஏகாதிபத்தியம் என்று கூறி அமெரிக்காவை உதறித்தள்ளவில்லை. ஆயிரம் முரண்பாடுகள் எதிரும் புதிருமாக இருக்குமேயாயினும், ஒரு புள்ளியில் அம்முரண்பாடுகள் இரு அணிகளாக மட்டுமே அமைய முடியும்.

  • தொடங்கியவர்

இக் கட்டுரை ஆய்வாளரும் முள்ளிவாய்க்கால் முடிவின் பின் தப்பித்து இந்தியாவிற்குச் சென்ற திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டது. இது இங்கு முன்னர் பிரசுரிக்கப்பட்டதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சே வாயாலை டைடாநிக்கையே கவிழ்ப்பான்.  அவனையெல்லாம் ஆதாரமாக பாவிக்கலாமா? 

மற்றும் இவ் "ஆய்வு" கட்டுரையில் பெரிதாக ஆதாரங்கள் இல்லை.  

திருவாளர் திருநாவுக்கரசு பற்றி எம் எல்லோர்க்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஆம் எம் தாயகம் எங்கள் [தமிழர்களின்] கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வேளையில் தமிழ் தேசிய தொலைக்காட்சியில் நிலவரம் என்னும் நிகழ்வின்போது இவரது பல ஆய்வுகளை கேட்டுள்ளேன்.சிறந்த ஓர் ஆய்வாளராக இவர் இருந்தார் என்பது உண்மை.இந்தக்கட்டுரையை வாசிக்கும் போதும் இன்று கட்டுரைகள் எழுதும் ..............எம்மவர் கருத்துக்கள்,ஆய்வுகளை விட பல உண்மைகள் இதில் இருப்பதாக உணர்கிறேன்.......

பின்குறிப்பு.........தோழர் இறைவனிடம் நான் கேட்பது என்னவென்றால் நான் கருதும் திருநாவுக்கரசு தான் இந்தக்கட்டுரையை எழுதினாரா அல்லது வேறுஒரு திருநாவுக்கரசா. நன்றி...............

  • தொடங்கியவர்

நீங்கள் கருதும் நபர்தான் தமிழ்சூரியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.