Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பாராளுமன்ற குழு

Featured Replies

முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவுக்கும் போங்கள்- இந்திய குழுவுக்கு உலகத் தமிழர் இயக்கம் கோரிக்கை

இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இடங்களை இந்திய எம்.பிக்கள் குழு பார்வையிட வேண்டும் என்று உலகத் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய எம்.பிக்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் சுஸ்மா சுவராஜ் மற்றும் எம்.பிக்களுக்கு உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சமுத்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்ற போரில் 2 லட்சத்து 16 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். உள்நாட்டுப் போரினால் தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கு பகுதி முற்றாக அழிந்துபோயுள்ளது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இந்தியா பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகாலமாக இந்தியாவும் இலங்கையும் இந்த உதவிகள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. 50 ஆயிரம் வீடு கட்டும் திட்டத்துக்கு உதவி, 52 டிராக்டர்கள், 50 ஆயிரம் மிதிவண்டிகள் இவை மட்டுமல்லாது மறுவாழ்வுக்கு 192 மில்லியன் ரூபாய் நிதி உதவி என இந்தியா வழங்கியிருக்கிறது. திருகோணமலை திருக்க்கேதீசுவரம் கோயிலை சீரமைக்க 326 மில்லியன் ரூபாய் நிதி உதவி, பள்ளிகளை சீரமைக்க 187 மில்லியன் ரூபாய் நிதி உதவி, கட்டமைப்பு பணிகளுக்கு 425 அமெரிக்க டாலர் கடனுதவி, ரயில்வே திட்டங்களுக்கு 37.5 மில்லியன் டாலர் கடனுதவி என பல்வேறு திட்டங்களை இந்தியா அளித்துள்ளது.

இவைமட்டுமின்றி இலங்கை மற்றும் இந்திய அரசுகள் வெளியிடும் அறிக்கைகளில் வடகிழக்கு வாழ் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டும் வருகிறது.

இந்தியா இத்தனை செய்தாலும்கூட சீனாவிடமிருந்தே அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான உதவிகளையும் இலங்கை பெற்று வருவது என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இந்த நிலையில் இந்திய எம்.பிக்கள் குழு இலங்கைக்கு செல்கிறது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழுமையாக ராணுவமயமாக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், சம்பூர், வாகரை என போரினால் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இந்திய எம்.பிக்கள் குழு செல்லுமேயானால் நிச்சயம் நாம் வரவேற்போம்.

மேலும் மன்னார், மட்டக்களப்பு பாதிரியார்களையும் யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் மற்றும் மாணவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் இந்திய எம்.பிக்கள் குழு கண்டிப்பாக சந்திக்க வேண்டும். இதை தவிர்த்து இலங்கை அதிகார்கள் அழைத்துச் செல்லும் "சுற்றுலா"வாக தங்கள் பயணம் இருக்கக் கூடாது.

இந்திய அரசுக்கு எம்.பிக்கள் குழு சொல்ல வேண்டிய சில விஷயங்களையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

1. இலங்கையை இந்திய அரசு ஆதரிப்பது என்பது தமிழர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல... இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் கூட எதிரானதே...

2. கடனுதவி, புனரமைப்பு விஷயங்களை மட்டுமே பார்க்காமல் போர்க் குற்றங்களுக்கும் இலங்கையைப் பொறுப்பாக்க வேண்டும். ஐ.நா. குழுவின் அறிக்கையின்படியான போர்க் குற்றங்கள் பற்றி விசாரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3. வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து முற்றாக ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும்.

4. கொழும்பு மற்றும் தூத்துக்குடி இடையே கப்பல் போக்குவரத்து இயக்குவதைவிட ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து இயக்கப்படுவதே சரியானது. குறைவான கட்டணமும்கூட.

5. வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய தாயகத்தில் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள, வங்கதேச மக்களைப் போல தமிழ் மக்கள் கண்ணியத்துடன் சம உரிமையுடன் வாழ வழியேற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.oneindi...so-aid0216.html

Edited by akootha

  • தொடங்கியவர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்

இந்தியாவிலிருந்து இன்று வருகை தரவுள்ள இந்திய பாராளுமன்ற குழுவினர் நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கையை தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த காலம் எமது நாட்டில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைநாட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது.

அத்தோடு யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட பலரை புனர்வாழ்வளித்து சமூக மயப்படுத்தி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது. ஆனால் பயங்கரவாதம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான எமது பிள்ளைகளும் உறவினர்களும் இலங்கையில் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து வருடம் தொடக்கம் பதினெட்டு வருடங்கள் வரை எவ்வித முடிவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இளைஞர்கள் பெண்கள் வயோதிபர்கள் மற்றும் சிறார்கள் என பலரும் இருக்கின்றனர். இவர்கள் பல்வேறு துன்பங்களையும் சொல்லொண்ணா துயரங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றார்கள்.

எனவே பாரத தேசத்திலிருந்து இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினராகிய நீங்கள் எங்கள் பிள்ளைகள் உறவினர்கள் விடுதலைக்காக அரசாங்கத்தை வலியுறுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தொப்புள் கொடி உறவாகிய நீங்கள் பல வழிகளில் எங்களுக்காக குரல் கொடுத்து வருகிறீர்கள். அதை நாம் மறந்து விடவில்லை.

இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். யுத்தத்தில் நாம் பட்ட துயரங்களோடு எங்கள் பிள்ளைகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. எனவே இப்படி இருக்கும் போது நாட்டில் இன ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்பே கிடையாது.

எனவே பிறந்துள்ள புதிய நந்தன வருடம் எமக்கு சிறப்பாக அமைவதற்கு எங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இது உங்களது வருகையின் ஊடாகக் கிட்ட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37621

  • தொடங்கியவர்

மகிந்தவுடன் விருந்து வேண்டாம்! மெனிக்பாம் மக்களைச் சந்திக்க அனுமதிக்குக!! -

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!!!

'இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் இடம்பெறும் புனரமைப்;புப் பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம்.'

இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில், அவர்களிடம் நேற்று மத்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கிக் கூறினார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாமார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேசுவது குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்பவரும் 21ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதியுடன் விருந்துபசாரக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் இதன்போது கூறப்பட்டது. இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்

இக்குழுவில் இருந்து அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சியிகள் வெளியேறியுள்ள நிலையில், சிறிலங்கா ஜனாதிபதியுடனதன விருந்துபசார நிகழ்ச்சியை மாற்ற வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.

சிறிலங்கா ஜனாதிபதியுடன் எதிர்வரும் 21ஆம் திகதி காலை சாப்பிடுவதற்கு பதிலாக, 20ஆம் திகதி மாலை அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யும் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தொடரூந்து திட்டப் பணிகளை பார்வையிடும் நிகழ்ச்சியை இரத்துச் செய்து விட்டு மெனிக்பாம் முகாம்களில் உள்ள தமிழ் மக்களைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

http://www.pongutham...3a-b019164c00f6

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் தடுத்து வைக்கப்படிருக்கும் அரசியல் கைதிகளுடன் பேசவும் அனுமதிக்குமாறு கோர வேண்டும்.

  • தொடங்கியவர்

....அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா "தமிழர் வியூகத்தை" கையிலெடுத்துள்ளார். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் மத்திய அரசில் பங்கேற்கும் தி.மு.க.விற்கு "செக்" வைத்திருக்கிறார்.

தமிழகத்தில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்த "தமிழினத் தலைவர்" யார் என்ற யுத்தம் பரபரப்பான அடுத்தடுத்த காட்சிகளை உருவாக்கக்கூடியது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. நீடிக்கும் வரை "இலங்கை தமிழர் பிரச்சினையை" முன் வைத்து அ.தி.மு.க. இந்த வியூகத்தை மேலும் மேலும் உற்சாகமாக எடுத்துச் செல்லும் என்பதே இன்றைய நிலைமை. ஏனென்றால் காங்கிரஸுடன் இருந்து கொண்டு தமிழர்களுக்காக பாடுபடுகிறேன் என்று கூறுவது "மடியில் பூனையை கட்டிக் கொண்டு சகுணம் பார்ப்பது போன்றதே" என்றே தமிழறிஞர்கள் பலரும் கருத்து கூறுகிறார்கள். ஆகவே அ.தி.மு.க. வகுத்துள்ள "தமிழர் வியூகம்" என்ற சக்கர வியூகத்தில் சிக்காமல் தி.மு.க. எப்படி தப்பிக்கப் போகிறது என்பதே அக்கட்சிக்கு இப்போது சிம்மசொப்பனமாக இருக்கப் போகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101091

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.