Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போன இளைஞன் சடலமாகக் கண்டுபிடிப்பு

Featured Replies

காணாமற்போன இளைஞன் சடலமாகக் கண்டுபிடிப்பு

யாழ். வடமராட்சிப் பகுதியில் காணாமற்போன இளைஞன் பற்றை ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 13ம் திகதி புத்தாண்டில் அன்று மாலை 6 மணிக்கு தனது உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற குறித்த இளைஞன் மறுநாள் வரை வீடு திரும்பாமையை அடுத்து அவர் காணாமல்போனதாக, வல்வெட்டித்துறை காவற்றுறை நிலையத்தில் இளைஞனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞன், இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றரில் உள்ள ஒரு பற்றைக்குள் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார். கெருடாவில் தொண்டமனாற்றைச் சேர்ந்த சிவலிங்கம் சிவகுமார் என்ற 18 வயது இளைஞனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த சடலம் தொடர்பில், வல்வெட்டித்துறை காவற்றுறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவற்றுறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=78430986718488994

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியான தற்கொலைகளும், இப்படியான சம்பவங்களும், ஒருவகையில் இனஅழிப்போ எனச் சந்தேகிக்க வைக்கின்றது. நம் சமூகம் இது தொடர்பாகக் கவனமாக இருக்க வேண்டும்....

யுத்த காலம் போன்ற இழப்பு தடுப்பதும் தவிர்ப்பதும் எங்ஙனம்?

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-17 09:35:08| யாழ்ப்பாணம்]

என் இனமே! என்சனமே! ஏன்தான் இப்படி உயிரிழந்து போகின்றோம்.இதைத் தடுப்பதும், தவிர்ப்பதும் எங்ஙனம்? இப்படி கட்டாந்தரையில் நின்று கத்த வேண்டும் போல் இருக்கின்றது. அந்தளவிற்கு எங்கள் மண்ணில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் துர்மரணம் நடந்து கொண்டே இருக் கின்றது. தற்கொலை ஒரு புறம், விபத்து மரணம் மறு புறம், மர்ம மரணம் இன்னொருபுறம் என்ற வாறு எங்கள் பிள்ளைகள் மரணித்துப் போவதை நினைக்கும்போது வேதனை தாளமுடியவில்லை.

இந்த மரணங்களைப் பார்க்கும்போது, யுத்தகால உயிரிழப்புகள் போல இருப்பதை உணர முடிகின்றது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரே வீட் டில் இரண்டு ஆசிரிய சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர். நேற்றுமுன்தினம் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்துக் குள்ளாகி பரிதாபகரமாகப் பலியாகிப் போயினர். இதற்கு முன்னதாக தூக்கில் தொங்கியபடி இளம் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இது தவிர எரிந்து, கிணற்றில் வீழ்ந்து, கடலில் மூழ்கி, மின்சாரம் தாக்கி இப்படியாக உயி ரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இதைத் தடுப்பது பற்றி அனைவரும் காத்திரமாகச் சிந்திக்க வேண்டும்.

இல்லையேல் எங்கள் இளம் பிள்ளைகள் தற்கொலை பற்றியோ விபத்தின் ஆபத்து பற்றியோ இம்மியும் கவலை கொள்ளாதவர்களாக மாறி விடுவார்கள்.இந்த நாட்டிற்கு இருபத்தொரு பிள்ளைகளைப் பெற்றுத்தந்த சிங்கள இனத்தைச் சேர் ந்த தாய் ஒருவரை இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்தராஜபக்­ஷ அவர்கள் அண்மையில் பரிசில் வழங்கிக் கெளரவித்தார். மூன்றாவது பிள்ளையைப் பெற்றெடுக்கும் பொலிஸாருக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுப் பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தென்பகுதி நிலைமை இருக்கையில், எங்கள் மண்ணில் நடக்கின்ற அவல மரணங்களை - இளம் பிள்ளைகளின் இழப்புகளை தடுக்க,தவிர்க்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

இதற்காக பெண்கள் அமைப்புகள் பெரும் பங்காற்ற முடியும் என்பது நமது நம்பிக்கை. இதற்கு மேலாக வீதி விபத்துகள், ஒழுங்கு மீறல்கள், வேகக்கட்டுப்பாடுகள் தொடர்பில் கடுமையானதும் ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்தாக வேண்டும். இல்லையேல் மரணம் மலிந்த பூமி என்பதில் இருந்து எங்கள் மண் விடுதலை பெற முடியாது போகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=28181

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகாலங்களில் கிறீஸ் பூதம் மர்மமனிதர்களால் காணமல் போன தமிழர்கள் அல்லது கொல்லப்பட்ட தமிழர்கள் போல இப்போது ........ அடிக்கடி நிகழும் சுருக்கிட்டு இறந்த நிலையில் பாள்அடைந்த கிணற்றில் இறந்த நிலையில் என தொடரும் ................ தமிழர்களின் (தற்கொலைகள்) கொலைகள் .................. மக்களின் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது ...........அத்துடன் இதுவும் இன அழிப்பின் மாற்று வடிவமோ என எண்ணத்தோன்றுகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.