Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வீடுகள் யாழ்.முஸ்லிம்களுக்கும் வேண்டும் – அஸ்வர் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

asvar-100x100.jpg

இந்திய உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம். அஸ்வர் இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடமும் வலியுறுத்தினார்.நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு பயணம் செய்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் இடம்பெற்றது.

அதில் அஸ்வர் மேலும் தெரிவித்ததாவது.

48 மணித்தியாலங்களில் யாழ். குடாநாட்டிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் இன்னமும் சிங்கள கிராமங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். இந்த இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய வீட்டுத் திட்டதற்கு முஸ்லீம்களக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனு ஒன்றைக் கைச்சாத்திட்டு கெழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் .கே. காந்தாவிடம் கையளித்தேன்.

இந்தியவீட்டுத் திட்டங்கள் முஸ்லீம்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்த தற்போது இலங்கை வந்திருக்கும், இந்திய நாடாளுமன்ற குழுவினர் அந்தச் சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=57577

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வர் அவர்களே நீங்கள் கேட்கவேண்டியது சவூதி அரேபியாவிடம் அதை விடுத்து ஏன் இந்தியாவிடம் கேட்கின்றீர்கள்.

ஐநாவில் வாக்கெடுப்பின்போது ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு திரட்ட உங்கட ஆட்கள் பல இஸ்லாமிய நாடுகளுக்கு சென்றிருந்தார்கள் பேசுவதற்கு அப்படியானால் உங்களுக்கு தமிழ்மக்கள் மேல் அக்கறை இல்லை என்பதுதானே பொருள் ஆகையால் தமிழர்களுக்காக கட்டப்படும் வீடுகளில் பங்கு கேட்பதில் நியாயம் இல்லைத்தானே ஆகவே நீங்கள் பாகிஸ்தானிடம் வீடு கட்டித்தரும்படி கேட்கலாம்.

உண்மைதான் அரபு நாடுகளிடம் கேட்கலாம்

இல்லை எண்டா இலங்கை அரசிடம் கேட்கலாம்

நானும் பார்க்கிறேன் பெரும் அழிவின் போது எந்த முஸ்லிமும் தமிழன் பற்றி வாய் திறப்பதில்லை. சிங்களவனுக்கு போய் உதவி செய்வான் காட்டி கொடுப்பான் காப்பாற்றுவான் எல்லாம் முடிய வருவான் தனக்கு பங்கு வேணும் தனி தரப்பு வேணும் எண்டு இவங்களை என்ன செய்வது எண்டே புரியல

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லீம்களின் வீடுகளை விடுதலைப்புலிகள் உடைக்கவே இல்லை. அதை உடைத்தது.. சிறீலங்கா இராணுவமும்.. இந்திய இராணுவமும். அவர்களிடம் முஸ்லீம்களும் வீடு கேட்பதில் நியாயம் இருக்கிறது தான்..! எனவே இந்திய வீட்டுத் திட்டம்.. 50,000 வீடுகளுக்கு மேலதிகமாக இந்தியப்படைகள் காலத்திலும் சிறீலங்காப் படைகளை முஸ்லீம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ஏவி விட்டு இடித்த காலத்திலும் உடைந்த வீடுகளுக்கு மாற்றீடாக அமைத்துக் கொடுப்பது அவசியமே..!

சிங்களம் தமிழ் மக்களுக்கு மட்டும் எதிரியல்ல..! முஸ்லீம்களுக்கும் அது எதிரி. இந்தியாவும் அதே..! சீனாவும் அதே..!

அதேபோல் பாகிஸ்தானின் இராணுவ ஆயுத ஒத்துழைப்போடு 1983 இல் இருந்து.. சிறீலங்காப் படைகளால் அழிக்கப்பட்ட பெரும்பாலான தமிழ் மக்களின் வீடுகளையும் சில முஸ்லீம் மக்களின் வீடுகளையும் கட்டித்தர முஸ்லீம்கள் பாகிஸ்தானையும் கோருவதே அல்லா சத்தியமாக நியாயமான நடவடிக்கையாக இருக்கும்..! அப்படி கோர முடியாதவர்கள்.. இந்திய வீட்டுத் திட்டத்தில் முஸ்லீம்களை அடக்கக் கோருவது அபந்தமாகவே இருக்கும்..!

மூதூர்.. சம்பூர்.. சாவகச்சேரி.. வாகரை.. வன்னி.. என்று எங்கும் பாகிஸ்தானின் மல்ரி பரல் தாக்குதலில் சீரழிக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்களே அதிகம்..! அந்த வகையில் அவற்றை பாகிஸ்தானிடம் கேட்டு சீர்ப்படுத்திக் கொடுப்பதே.. புட்டுக்கு தேங்காய்ப்பூவாக தமிழ் மக்களோடு வாழ விளையும் முஸ்லீம் சகோதர்கள் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும். செய்வார்களா..??! இல்லை.. தமிழர்களை இன்னும் இன்னும் கொன்றொழிக்க.. மனித உரிமைகள் மீறப்படுவதை ஊக்குவிப்பார்களா..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

தம்புள்ளையில் பள்ளிவாசல் மற்றும் இந்து ஆலயத்தை அகற்றுமாறு பிக்குகள் கோரிக்கை

03_CI.jpg

தம்புள்ளையில் பள்ளிவாசல மற்றும் இந்து ஆலயத்தை அகற்றுமாறு பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்புள்ளை பௌத்த புனித வலயத்தில் பள்ளிவாசல் மற்றும் இந்து ஆலயம் அமையக்கப்பட்டுள்ளதாக பௌத்த பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.

கந்தலம சந்தியில் அமைந்தள்ள முஸ்லிம் பள்ளிவாசல் நோக்கில் பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டமாக சென்றனர்

தென்னிலங்கை முஸ்லிம் தலைவர்களுக்கு வடக்கு / கிழக்கு முஸ்லிம்களின் நலன் பற்றியோ அல்லது அவர்களின் அரசியல் அபிலாசைகள் பற்றியோ அக்கறையும் பிரக்ஞையும் இல்லை. இவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப தமிழ் மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதே

வடக்கு / கிழக்கு முஸ்லிம்களுக்கு என புதிய தலைமைத்துவம் ஏற்படுவது ஒன்றே இத்தகையவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.