Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தமிழ்ச் சிறுமியைச் சுட்ட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை

Featured Replies

லண்டனில் தமிழ்ச் சிறுமி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட மூவருக்கு நீதிமன்றம் நேற்று ஆயுள்தண்டனை விதித்துள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொள்ளையடிப்பதற்காக புகுந்த மூவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துசா கமலேஸ்வரன் என்ற சிறுமி நெஞ்சில் படுகாயமடைந்தார்.

இதனால் அவர் உடல் செயலிழந்த நிலையில் தற்போது சக்கரநாற்காலியில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுமி சுடப்பட்ட காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் காணொலிப் பதிவுக் கருவியில் பதிவானது.

இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்த பிரித்தானியக் காவல்துறையினர், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.

குற்றவாளிகளில் ஒருவர் குறைந்தது 17 ஆண்டுகளும், ஏனைய இருவர் குறைந்தது 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதனை சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகள மூவரும் 19, 20, 21 வயதுகளையுடைய கறுப்பினத்தவர்களாவர்.

இந்தச் சம்பவத்தின் போது வர்த்தக நிலைய உரிமையாளரான றொசான் செல்வக்குமாரின் தலையிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

அவரது தலையில் இருந்து அந்தக் குண்டு இன்னமும் அகற்ற முடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்புக் குறித்து சிறுமி துசாவின் பெற்றோரான ஜெயக்குமார் ஞானசேகரன் மற்றும் சர்மிளா கமலேஸ்வரன் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

http://www.puthinappalakai.com/view.php?20120420106031

_59310706_grant-kolawole-mccalla_464.jpg

Nathaniel Grant, Anthony McCalla and Kazeem Kolawole were described as a risk to the public

Three men have been jailed for life for a shooting in a south London shop which left a five-year-old girl paralysed.

Thusha Kamaleswaran was shot in the chest and Roshan Selvakumar, 35, was also shot in Brixton, last March.

Nathaniel Grant, Kazeem Kolawole and Anthony McCalla were convicted of causing both victims grievous bodily harm with intent and attempted murder of rival gang member Roshaun Bryan.

Grant was told he would serve at least 17 years and Kolawole and McCalla 14.

Judge Martin Stephens QC said the crimes were "of the utmost gravity", adding: "Not one of you has, in my judgment, shown a sliver of remorse."

http://www.bbc.co.uk...london-17766713

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.