Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன் மானைத் தேடி....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

part3rama1.GIF

தங்கள் குடிலுக்கு.. அருகில் வந்தவிட்ட பொன் மானை கண்டுவிட்டாள் சீதா. அதன் வழுவழுப்பான தசைப்பிடிப்பான ஹன்சிகா போன்ற மொழுமொழு உடலும் வெண் புள்ளிகள் போட்ட அழகு ரோமமும் அவளைக் கவர்ந்துவிட.... தன் அடிமையான கணவனை நோக்கி.. டேய் அந்தப் பொன் மானைப் பிடித்து வந்து வெட்டி.. நல்லா உப்பும் மிளகாய்த் தூளும் போட்டு.. பொரியல் செய்து தா. மிச்சத்தை அவிச்சு வத்தல் போடு.. இங்கு தங்கி இருக்கும் காலம் வரை நான் அதைச் சுவைத்துச் சாப்பிட வேண்டும்.. என்று கட்டளை இட்டாள்..!

சீதாவின் குரலைக் கேட்ட தொடை நடுங்கிக் கணவன் இராமன்.. குரலால் குழைந்தபடி.. ஓமம்மா.. இந்தா முடிச்சிடுறன். நீங்க சொன்னா.. எள்ளென்றால் நான் எண்ணெய்யா நிப்பன்.

ஏய் ஏய்.. வீண் பேச்சு வேணாம். நீ.. எள்ளாவும் நிற்க வேணாம்.. எண்ணெய்யாவும் வழிய வேணாம்.. சொன்னதைச் செய். மான் ஓடிடப் போகுது....

சீதாவின் காட்டுக் கத்தலில் பயந்து போன இராமன்.. அவளின் கத்தலில் மிரண்டு போய் ஓட வெளிக்கிட்ட மானைத் துரத்திக் கொண்டு ஓடுமாப் போல ஓடினான். அப்பாடா.. இந்த இராட்சசி முகத்தில முழிச்சாலே இதுதாண்டாப்பா கதி..! இப்பவாவது கொஞ்சம் நிம்மதியா இருக்குது.. என்று.. சீதாவை விட்டே தூர ஓடியவன் நின்று மூச்சுவாங்கிக் கொண்டான்...!

மானைத் துரத்திக் கொண்டு போன.. இராமன் நீண்ட நேரம் திரும்பி வராததால்.. சீதா கோபப்பட்டாள். எங்க போச்சுதோ.. அந்த எருமை. அதெட்ட ஒரு வேலையைச் சென்னா ஒழுங்கா செய்யுதா. எப்ப பாரு.. ஏதாச்சும் இடக்குமுடக்கா செய்து கொண்டு. இப்ப எங்க போய் எவளிண்ட வாய் பார்த்துக் கொண்டு நிற்குதோ..??! சொன்னா ஒரு காரியம் ஒழுங்காச் செய்யத் தெரியாது. அதுக்குள்ள மீசையையும் வழிச்சுப் போட்டு.. ஆம்பிளை என்று கொண்டு திரியுது. டேய் இலச்சுமணா.. என்னடா செய்யுறா அங்க...

ஓம்.. அண்ணி.. நான் இங்க இருக்கிறன். அணில் பிடிச்சு உரிச்சுக்கிட்டு இருக்கிறன். உங்களுக்கு பொரியல் செய்ய..!

நீ தாண்டா ஆம்பிளை. உன் கொண்ணனும் இருக்கானே. உதில ஒரு பொன் மான் வந்திச்சு. பிடிச்சு பொரியலும் செய்து..வத்தலும் போடச் சொன்னன்.. இந்தா பிடிச்சுக் கொண்டு வாறன் என்ற போன உன் கொண்ணனைக் காணேல்ல. எங்க போய் ஏமலாந்திட்டு நிற்குதோ தெரியல்ல.. போய் ஒருக்கா உதில.. பார்த்துக் கொண்டு வாவன்..

இந்தா அண்ணி.. போறன். அணிலை உரிச்சு.. உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு வைச்சிருக்கிறன். வெளியில நெருப்பு மூட்டி விட்டிருக்கிறன். இந்த முறைக்கு பொரிக்காமல்.. பாபிகியு போல.. வாட்டி எடுப்பமே அண்ணி..!

ஏதோ செய்து தொலை. இப்ப கொண்ணனை போய் எங்க நிற்குதென்று பார்த்துக் கொண்டு வா....! போ... போகேக்க அந்த ஐபோனையும் கொண்டு போ... அப்பதான்.. லொக்கேசன் கண்டுபிடிக்கலாம்.. என்ன..

சரி அண்ணி. போயிட்டு வாறன்.

போய் தொலையுங்கடா. இப்ப தான் நிம்மதி. அண்ணனும் தம்பியும் நம்மளப் போட்டு சித்திரவதை செய்யுதுங்க. உந்தக் குடும்பத்தில போய் மாட்டிக் கொண்டு.. மாடிமனையில வாழ வேண்டிய நான்.. காட்டுக்க கிடந்து அல்லல் படுறன்... டேய் விசுவாமித்திரர்.. கிழடா.. நீ நல்லாய் இருப்பாயாடா...! எங்கப்பன்.. ஒரு றப்பர் வில்லை வைச்சு.. அதை உடை உடை என்று கொண்டு நிண்டான்.. ஒரு பயபுள்ள.... அந்த இஞ்சு போன.. றப்பர் வில்லை உடைக்க முடியல்ல. நீ.. வந்து எல்லாத்தையும் கெடுத்து கெட்டுச் சுவராக்கிட்டாய்டா. என் வாழ்க்கையே போச்சு...! அட.. இந்த நேரத்தில.. யாரது.. கோலிங் பெல் அடிக்கிறது...

அது வந்து.. அம்மா தாயே பிச்சை போடுங்க...

பிச்சையா.. காட்டுக்கையுமாடா வந்திட்டிங்க. நாட்டுக்க தான் உங்க தொல்லைன்னு.. காட்டுக்க வந்தா..

அம்மா தாயி.. பசி தாங்க முடியல்ல...

கொஞ்சம் பொறு.. அணில் கொந்தின.. காகம் கொத்தின.. எலி அரிச்ச.. பழங்கள் கொஞ்சம் கிடக்குது.. வெட்டித் தாறன்.

எதையெண்டாலும்... போடுங்க தாயி. போடுறதெண்டால்.. இந்த கோட்டை தாண்டி வந்து போடுங்க தாயி...

அதென்ன கோடு.. ரோடு எண்டு கொண்டு.. என் புருசனே எனக்கு கோடு போட முடியல்ல.. நீ றூட்டுப் போடுறீயோ..

இல்லத் தாயி... நான் சுத்தப்பத்தமான ஆளா. அதுதான் தாயி...

கப்பு தாங்க முடியல்ல.. சுத்தப்பத்தமான ஆள் என்றா...... இந்தா... இதை வாங்கிக்கோ...! ஏய்.. என்ன தாறத வாங்காம.. ஏண்டா என் கையைப் பிடிச்சு இழுக்கிறா...

அனுஷ்கா மாதிரி.. சிக்கென்று இருக்கீங்களா.. அதுதான் தொட்டுப் பார்த்தன்...

நீ.. இருக்கிற கேட்டுக்கு அனுஷ்கா கேட்குதாக்கும்... விடுறா கைய..!

இல்ல தாயி... நான் உங்களோட ஒரு டூயட் குத்தாட்டம் போடலாமோ என்று நினைச்சன் தாயி...

குத்தாட்டம்... ஐ..... ரெம்ப ஜோரா இருக்கே. வா.. அங்கின போய் பத்தைக்க நின்று குத்தாட்டம் போடுவம்.

நோ... நோ... நான் சிறீலங்கா எயார் லைன்ஸ் புக் பண்ணி இருக்கேன். வாங்க சிறீலங்கா போய் குத்தாட்டம் போடலாம்..!

சிறீலங்கா... ஓ.. நோ... அது பயங்கரமான இடமாச்சே. ராஜபக்ச என்ற அரக்கன் அங்க தானே இருக்கான்..!

அவனே நான் தான்...

(இராமா..... என்று கத்திக் கொண்டு... சீதா அலறி அடிச்சுக் கொண்டு ஓடுகிறார்)

சீதா... நீ எங்கையும் ஓட முடியாது... அந்தப் பக்கத்தால.. கோத்தா வாறான்... இந்தப் பக்கத்தால பசில் வாறான்.. கிழக்கால கருணா வாறான்.. வடக்கால டக்கிளஸ் வாறான்.. வவுனியாவுக்குள்ளால சித்தார்த்தன் வாறான்.. கொழும்புக்குள்ளால சுமந்திரன் வாறான்... எல்லாருமே ரெம்ப வெறியோட இருக்காங்க.. கண்டிப் பக்கம் போனே.. புத்த பிக்குங்கள்.. குதறிடுவாங்க. நுவரெலியா பக்கம் போனே.. ஆறுமுகம் கண்டம் பண்ணிடுவா...! நான் ஒருத்தன் தான் அதுக்குள்ள கொஞ்சம் நிதானம்.. வந்து சரணடைஞ்சிடு.. முள்ளிவாய்க்காலில புலிகளைப் போட்டுத்தள்ளினது போல போட்டுத்தள்ளமாட்டன். அலரி மாளிகையில உனக்கு ஒரு இடம் தாறன்... நில்லு சீதா நில்லு...

கொஞ்சம் பொறுங்க.. ராஜபக்ச.. அவசரப்படாதேங்க. உங்க குளோஸ் பிரன்சுங்க.. மன்மோகன் சிங்கட்டையும்.. சோனியா காந்தியிட்டையும் கோல் போட்டு கேட்டிட்டு சொல்லுறன். அப்படியே.. நம்ம கருணாநிதியிட்ட நல்ல பட்டறிவு கொமண்டு கேட்டுக்கிறன்.. வெயிட்.. பிளீஸ்..!

நோ...நோ.. வெயிட் பண்ண எல்லாம் எனக்கும் நேரமில்ல. சிறீலங்கன் எயார் லைன்ஸ்.. போகப் போகுது.. கெதியா சரணடைஞ்சிடு.. இல்ல.. சுட்டு என்றாலும்.. நம்ம ஆமிப் பசங்க போல.. உன் பிணத்தை என்றாலும் அடைஞ்சே தீருவன். அப்புறம்.. காட்டுக்குள் பெண் புலியை வேட்டையாடிய.. ராஜபக்ச.. துட்டகைமுனுவை.. வென்ற வீரன் என்று லங்காதீபல இருந்து ஹிண்டு வரை நியூஸ் போட்டிடுவன். நில்லு சீதா.... உனக்கு என்னைப் பற்றி சரியா தெரியல்ல.. வயசாகிட்டுதடி.. ஓட முடியல்ல.. இளைக்குதடி.. நில்லடி... சீதா நில்லு........

டுமீர்.....

சொன்னன்.. கேட்ட மாட்டேன் என்றிட்டாள். பாவி மவ.. பாதியில போயிட்டாளே..!

(சீதாவின் செத்த பிணத்தைக் கொற கொறன்னு இழுத்துக் கொண்டு.. ராஜபக்ச.. காட்டுக்குள் மறைகிறார்.)

+++++++++++++++++++++++++

குடிலுக்கு அண்ணணோட திரும்பிற.. இலச்சுமணன்.. அண்ணியை காணாமல் அங்கும் இங்கும் தேடுறான்...

அண்ணா அண்ணியைக் காணேல்ல..

என்ன அண்ணியை.. காணேல்லையா. அப்பாடா.. இப்பதாண்டா நிம்மதி...!

என்னண்ணா இப்படிச் சொல்லுறீங்க. அவா என்னதான் கத்தினாலும்.. குளறினாலும்.. நம்ம அண்ணி இல்லையா..!! நம்ம சொந்தம் இல்லையா..!!!

ஆமால்ல.. என் பொண்டாட்டியில்ல.. உன் அண்ணியில்ல. அவளை.. இந்தக் காட்டுக்க எங்க போய் தேடுவன்..

அண்ணா.. அதோ பாருங்க.. சிறீலங்கன் எயார் லைன்ஸ் பறக்குது.. இதோ பாருங்க.. ஐபோன் நியூஸ் அப்ஸில.. அப்டேட் நியூஸ் போட்டிருக்குது.. ராஜபக்ச.. இந்தியா விஜயம். செங்கம்பள வரவேற்பு அளித்தார் மன்மோகன் சிங். சோனியா ராஜபக்சவிற்கு பாராட்டு. கனிமொழி அன்போடு போர்த்திய.. பொன்னாடை அரிச்சுதா.. இல்ல சுகமா இருந்திச்சா.. கருணாநிதி குசலம் விசாரிப்பு. ரைஸ்மா.. சா.. சுஷ்மா விபூதி சந்தனம் சாந்துப் பொட்டு வழங்கி வரவேற்பு. அத்தோடு ராஜபக்சே.. காட்டில் பெண் புலி வேட்டை.

ஐயோ.. இலச்சுமணா.. என் சீதாவை ராஜபக்ச கொன்னுட்டான்டா. அண்ணியின்ட நிலையைப் பாரடா...!

ஐயோ அண்ணி.... அனுஷ்கா போல இருந்த நீங்க.. இப்படி ஆகிட்டீங்களே..!

இதுதாண்டா சொல்லுறது.. கல்லானாலும் கணவன்.. புள்ளானாலும் புருசன்னு. அதைச் சும்மா சொல்லேல்ல.. எறியிற கல்லா இருந்தாயினும் கணவன் காப்பான்.. புள்ளா தண்ணி அடிச்சிருந்தாலும் புல்லா வளைஞ்சு நின்று.. கணவன் காப்பான்.. என்று சொல்லி இருக்காங்க. இப்ப பார்த்தியா.. சீதா என்னை விரட்டி விட்டதால.. அவளுக்கு வந்த கதிய..! புருசனை.. குஸ்பு போல.. பொம்பிளைங்க..மதிக்க வேணாம்.. அட்லீஸ் மிதிக்காமலாவது இருக்கலாமில்ல. இந்த சீதா.. உலகப் பெண்களுக்கே ஒரு பாடம்..!

என்னவோண்ணா.. உங்களை நினைச்சா தான் கவலையா இருக்குதண்ணா. அண்ணியை தவிர வேற யாரண்ணா உங்களைக் கட்டிக்குவா. உங்கட.. பறட்டத்தலையும்.. நீலக் கறுப்பு உடம்பும்... பார்க்கவே எனக்கே.. அப்பப்ப சகிக்க முடியுறதில்ல.. எனி எவ வருவா.. ஒரு முட்டாளும் வராள்..! இருந்தாலும் பாருங்க.... உந்த ராஜபக்சயை சும்மா விடவே கூடாதுண்ணா.. பழிவாங்கியே தீரனும்.

அது நடக்காதடா..! சூளைமேட்டில சும்மா இருக்க முடியாம.. பட்டப்பகலில துப்பாக்கியால பொதுசனத்தை சுட்டவனுக்கே.. மக்கள் திலகம் எம் ஜி ஆர் என்று.. புகழ் சூட்டுறாங்கடா. அப்படிப்பட்ட ஆக்களிருக்கிற நம்மூரில.... ராஜபக்ச வந்து அண்ணியை வேட்டையாடிட்டு போறது ஒன்றும் பெரிய காரியமில்லைடா இலச்சுமணா. இதெல்லாம்.. இந்திய அரசியலில் சகஜம்டா. நாம தான் நம்மளத் தேற்றிக்கணும்..!

சரிண்ணா.. அப்ப கிளம்புங்க.. நாங்க இப்பவே அயோத்திக்கு போயி.. பாபர் மசூதியை கட்டப் போறமுன்னு.. ஒரு கதையைக் கிளப்பி விடுவம். அப்புறம் பாருங்க.... ரவ் கக்கீமுன்னு ஒருத்தன் வலிய சிறீலங்காவில இருந்து கோல் பண்ணி நமக்கு சப்போட் தருவாண்ணா. அவனை வைச்சே ராஜபக்ச கதையை முடிச்சிடனும். இல்ல.. கலவரப் போரை ஆரம்பிச்சு விடுவம் அண்ணா. அப்புறம்.. நாங்க கூலா.. நியூஸ் சனலில அதைப் பார்த்து ரசிச்சுக்கிட்டு இருக்கலாம்.. இப்ப நடவுங்கண்ணா.

சரி வாடா தம்பி போவம். ஊரில அப்பா அம்மா கதிதான் என்னவோ தெரியல்ல..!! தர்மம் தலை காக்கும் டா.

சும்மா.. வெட்டிப் பஞ்ச் எதுக்கண்ணா.. தொப்பியை எடுத்து மாட்டிக்குங்க.. அட்லீஸ் தலையில வெயிலாவது படாமல் காக்குமண்ணா.

(யாவும் கற்பனை)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

522323_309962329075052_100001838612850_699744_1124150745_n.jpg

562238_368144599905085_1429786330_n.jpg

இந்தப் படங்கள் இங்கும் அமைவது சாலப் பொருந்தும்.... :lol::)

படங்கள்:facebook

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.