Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ளை விவகாரம் – 6 மாத அவகாசம் கொடுக்கப்பட்டதாம்!(பிபிசி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dambulla-100x100.jpg

தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் இன்று திங்கட்கிழமை நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் கூறினார்.

1982 ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட புனிதப் பிரதேசத்தின் திட்ட வரைபடத்தில் முஸ்லிம் பள்ளிவாசலோ, இந்துக் கோவிலோ இருக்க வில்லை என்று கூறிய சுமங்கள தேரர், அந்த வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 20ம் திகதி தான் தலைமை தாங்கி நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் போது வன்முறைத் தனமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் அவர் கூறினார்.

ஊடகங்களே போலியான வீடியோ காட்சிகள் மூலம் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டதாகவும் சுமங்கள தேரர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் ஹிஸ்புல்லா கருத்து

இதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின்படி, தம்புள்ளைப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சுமங்கள தேரரையும் முஸ்லிம் பள்ளிவாசல் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

வரும் மூன்று மாதங்களுக்கு குறித்த பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்துவதில் பிரச்சனை இருக்காது என்று சுமங்கள தேரர் தன்னிடம் உத்தரவாதம் அளித்துள்ளதாக அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் குறிப்பிட்டார்.

பள்ளிவாசலை குறித்த இடங்களிலிருந்து அகற்றுவது குறித்து பள்ளிவாசல் பிரதிநிதிகளும் முஸ்லிம் மத பிரமுகர்களும் பிரதேச மக்களுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி – பிபிசி

http://www.saritham.com/?p=57848

சிங்களத்திற்கு இப்போ சனிபகவான் வர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார் போல ......................... :rolleyes::lol::D

இந்திய எதிர்கட்சியின் செவ்விகளை இருட்டடிப்பு செய்ய் முடியாத போது இப்படி கவனத்தை மூன்று மாதம் திசை திருப்ப வேண்டும்.

ராமர் கோயில் கட்டுவதற்கான பாபர் மசூதி இடிப்பைவிட இது மோசமாக உள்ளதே. வேலியே பயிரை மேய்ந்தால்...

Sri Lanka to demolish mosque and Hindu temple following protest by Buddhist monks

DAMBULLA, Sri Lanka — Sri Lankan officials have decided to demolish a mosque and a Hindu temple under pressure from Buddhist monks who demanded their removal from a Buddhist sacred area.

Thousands of Buddhist monks and lay supporters stormed the mosque in the central Sri Lankan town of Dambulla on Friday, saying it was constructed illegally. They forced their way into the building and damaged some furniture, dispersing only after officials promised a solution on Monday.

Mohamed Saleemdeen, a board member of the mosque, denied it was an illegal building and said it had been there long before the area was declared a sacred zone about 20 years ago.

He said his father and grandfather were officials at the mosque.

http://www.washingto...5ubT_story.html

முகநூலில் ஏற்ற நல்ல இணைப்பு. நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.