Jump to content

எமது சோழர் படைகளின் வரலாறுகள்


Recommended Posts

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது.

ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை இராஜராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்கள் சேகரித்திருக்கிறார். இவற்றை இராஜராஜனுக்கு முன்னும் பின்னும் இருந்த பிரிவுகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 70 ஆக உயரும். இவை ஒவ்வொன்றின் பெயரும், அப்படைய துவக்கிய காலத்தையும் சூழ்நிலையையும் மக்களுக்கு நினைவூட்டுவதாய் இருந்திருக்கக்கூடும். இதுவரை நாம் அறியாத அரசர்களின் பல விருதுகளே இவற்றின் பெயர்களாயின. உதாரணத்திற்கு பார்த்திப சேகரன், சமரகேசரி, விக்கிரமசிங்கன், தாயதொங்கன், தானதொங்கன், சண்டபராக்கிரமன், இராஜகுஞ்சரயன் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.

சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றியும் குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. கைக்கோளாளரைக் கொண்ட பிரிவு "கைக்கோளப் பெறும் படை" என்று அழைக்கப்பட்டது. கைக்கோளர் என்றால் நெசவாளரைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளக்கூடாது. கைப்பலம் பொருந்திய வீரர்களைக் கொண்ட படைப் பிரிவைக் குறிப்பதாக கொள்ளவது பொருத்தமாகயிருக்கும்.

வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவாவிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இடங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட(அணி) படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது ஆனால் இது சரியான ஒன்று இல்லை. மாறாக இவர்கள் நிரந்தரமான நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகர்களாகப் பணிபுரிந்தனர். பெயருக்கேற்ப வேளை வரும்போது இவர்கள் தம் உயிரையும் கொடுத்து அரசனைக் காப்பாற்றினர் என்றுதான் கருதவேண்டும்.

பிற்கால இலக்கியச் சான்றுகள் சில இக்கருத்துக்கு வலிவு தருகின்றன. பிற்காலப் பாண்டிய நாட்டில் பணியாற்றிய "தென்னவன் ஆபத்துதவிகள்" என்போர் இவ்வேளைக்காரரைப் போன்றவரே. இவர்கள் அனைவரும் அரசரின் அருகிலேயே இருந்தனர் என்றும், மிக்க அதிகாரம் பெற்றிருந்தனர் என்றும் மார்க்கோபோலோ குறித்துள்ளார். படைகளுக்குள் சிறுதனம் பெருதனம் என்ற பாகுபாடும் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து தெரியவருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள திருவாலீசுரத்திலிருக்கும் அரியதொரு கல்வெட்டு அங்கிருந்த மூன்று கை மகாசேனை(மூன்று அங்கங்களைக் கொண்ட பெரும் சேனை)யைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகிறது. அக்கல்வெட்டு முதலாம் இராஜராஜன் அல்லது முதலாம் இராஜேந்திரன் காலத்திலோ எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். அக்கல்வெட்டில் காணப்படுபவை.

இவர்கள் விஷ்ணுவையையும் சிவபெருமானையும் வழிபட்டனர். கன்னரதேவனைத் தோற்கடித்துத் துரத்தினர்; காங்கேயனை வென்றனர்; கல்பாடம் என்ற ஊரையும் கடற்கரையிலுள்ள விழிஞத்தையும் அழித்தனர். கடல் கடந்து கிழக்கே சென்று மாதோட்டத்தை அழித்தனர்; மலை நாட்டைக் கைப்பற்றினர்; சாலையிலுள்ள கடற்படையை அறுத்தனர்; வள்ளாளன் என்ற சாளுக்கியரை புறம்காட்டி ஓடச் செய்தனர்; வனவாசி நகரைக் கைப்பற்றினர்; இச்சாதனைகளுக்காக காளஹஸ்தியிலுள்ள தமிழ்ப் புலவர்களால் புகழ்ந்து பாடப் பெற்றனர்; மேலும், குச்சி மலையிலுள்ள கோட்டையை அழித்து உச்சந்தி நகரைப் பிடித்தனர். தங்களை எதிர்த்த வடுகர்களை முறியடித்தனர். வாதாபிக் கோட்டையைத் தகர்த்து அந்நகரையும் கைப்பற்றினர். இம்மகா சேனையினர் பாண்டிய நாட்டில் தங்கியிருந்தனர் என்றும் மூவகையான பெரும் சேனையைச் சார்ந்த அஞ்சாநெஞ்சம் படைத்த வீரர்கள் என்றும் குறிக்கப்படுகின்றனர். திருவாலீசுரம் கோயிலையும் அதைச் சார்ந்த பூசாரி மற்றும் பணியாட்கள் உட்பட அனைத்தையும் இச்சேனையினர் பேணிவந்தனர்.

மேலே குறிப்பிட்டுள்ள வெற்றிகள் அனைத்தும் இராஜராஜன், அவரது மகன் இராஜேந்திரன் காலத்தில் அடைந்த வெற்றிகளாகும். கி.பி. 1096ல் பொறிக்கப்பட்ட சேரன் மாதேவி(சேரமாதேவி) கல்வெட்டு ஒன்றில் இம்மாசேனையினரின் வீரக்கனவுகள் பற்றிக் கூறப்படுகிறது. மற்றொரு கோயிலையும் அதன் சொத்துக்களையும் இம்மான்சேனை தன் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவந்தது என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும்பின்வருமாறு எழுதியுள்ளார். "இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 6 அல்லது 7 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.

இராஜேந்திரனின் படை வீரரை ஏற்றிச் சென்ற "எண்ணிலடங்காக் கப்பல்கள்" கடல் கடந்து ஸ்ரீவிஜயத்தையும் அதைச் சார்ந்த தீவுகளையும் கைப்பற்றியது ஒரு திடீர் சாதனை அல்ல; சோழர்கள் கடைபிடித்த திட்டவட்டமான கடற்படைக் கொள்கையின் விளைவேயாகும். சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா(மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது.

9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலத்தீவு(Sri Lanka and Maldives) ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது. இவையெல்லாம் இம்முயற்சியால் சோழர் கண்ட வெற்றிகளாகும்.

காந்தளூர்ச் சாலை கலமறுத்து, சேரர் படையை முறியடித்துத் தென்னிந்தியக் கடலில் சோழர் தங்கள் நிகரற்ற ஆதிக்கத்தை நிலைநாட்டினர். சோழர் காலத்திய கலங்களின் அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நேரடியான சான்றுகள் யாதும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மூன்று வகைக் கலங்கள் சோழ மண்டலக் கரையில் உலாவின என்று "பெரிப்ளூஸ்" என்னும் நூல் கூறியுள்ளதையும் பிறகு இராஜேந்திரன் பெரியதொரு கப்பற்படையைக் கொண்டு வெற்றிச் சாதனைகள் புரிந்ததையும் நோக்கும் பொழுது, சோழர் கப்பற்படை சிறியதும் பெரியதுமான பல கொண்ட சிறந்த படையாக அமைக்கப் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது.

போர் என்பது இருதரப்பிலுமுள்ள படை வீரர்களுக்கிடையே மட்டும் நடந்த சண்டை எனக்கருதவும், நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கவில்லை என்ற ஓர் எண்ணத்திற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. சோழர் கல்வெட்டுக்களிலிருந்தும் அவர்களுடன் போரிட்ட சாளுக்கியரின் கல்வெட்டுக்களிலிருந்தும் நமக்கு தெரியவருவது, அவர்கள் செய்த கடும் போரினால் துங்கபத்திரை நதியின் இரு பக்கங்களில் இருந்த மக்களிடையே பல தலைமுறைக்குத் தாங்கமுடியாத துயரங்களை அப்போர் உண்டாக்கியது. போரிடும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சில உயர்ந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கூட மரந்து, அமைதியாக வாழ்ந்த மக்கள் பலவாறு துன்புறுத்தப்பட்டனர்.

ஈழத்திலும் கருநாடகப் பகுதியிலும் கிடைத்துள்ள சான்றுகளை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாத சாளுக்கியக் கல்வெட்டுக்கள் முதலாம் இராஜேந்திரன் கோயில்களை அழித்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றன. சமய வேறுபாட்டினால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், பொருளாசையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சாளுக்கிய நாட்டில் செல்வச் செழிப்புடன் இருந்த பல சமணப் பள்ளிகள்(பஸ்திக்குகள்) ஆழ்ந்த சிவபக்தனான ராஜேந்திரனுக்கு நல்ல வேட்டைக் களமாக அமைந்தன என்று தெரிகிறது. அயல்நாட்டுப் படையெடுப்புக்களிலிருந்து சோழர்களுக்கு கிடைத்த பொருள்கள் ஏராளம். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பொன்னையும் பொருளையும் தான், அரசர்கள் தானமாக வாரிக்கொடுத்தனர் என்று அவர்கள் கல்வெட்டுக்கள் வெளிப்படையாக கூறுகின்றன.

பொதுவாக போர்க்களத்தின் மூலம் கிடைத்த பொருள் எல்லாம் அரசரையே சாரும். அவைகளை தன் விருப்பம் போல் பயன்படுத்தலாம். சீப்புலி பாகி நாடுகளில் கைப்பற்றப்பட்ட தொள்ளாயிரம் ஆடுகளை முதலாம் இராஜராஜன் தமது 6-ம் ஆட்சி ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருக்கும் துர்க்கைக் கோயிலுக்குத் தானமாக அளித்துத் தமது பெயரில் பத்து நந்தா விளக்கேற்றி வைக்கப் பணித்தார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மற்றொரு கல்வெட்டில் மலைநாட்டைக் கைப்பற்றி, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட படிமங்களில் மரகதத்தேவர் படிமம் ஒன்றை அதிகார் ஒருவர் அரசனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பழனம் என்னும் ஊரில் கோயில் கொள்ளச் செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88

Link to comment
Share on other sites

முக்கால சோழர் பற்றிய தொகுப்பு பிரமாதம்.!

முள்ளிவாய்க்கால் சோழனின் நிலை ?

Link to comment
Share on other sites

முக்கால சோழர் பற்றிய தொகுப்பு பிரமாதம்.!

முள்ளிவாய்க்கால் சோழனின் நிலை ?

என்னங்க இப்புடி சொல்லீட்டிங்க அண்ணன் ?? ராஜராஜசோழனுக்கப்புறம் இவங்கதானே மிலேனியத்து சோழனா எங்க முன்னாடி படை நடத்தியிருக்காரு ? இருபது இருபத்தி ஐஞ்சு கோலியாத்துக்களுக்கு முன்னாடி தனியொரு தாவீதா நின்னு படைநடத்தினாரே , அவரு சுத்தவீரனுங்க ஓக்கேயா ? இனி பித்துக்குளியாட்டம் இப்புடி எல்லாம் எழுதாதீங்க சொல்லீட்டேன் ஆமா :):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பகிர்வு 'சொப்னா', நன்றிகள்!

கடைசியில் சோழன் செய்து முடித்தது, பார்பனர்களைத் தமிழ் நாட்டில் குடியமர்த்தியதும், (ஆரிய குடி என்ற இடம் உங்கள் நினைவுக்கு வராவிட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல!) வட இந்திய மதமொன்றை, ஆசியா முழுவதும் பரப்பியதும் தான்!

Link to comment
Share on other sites

நல்ல ஒரு பகிர்வு 'சொப்னா', நன்றிகள்!

கடைசியில் சோழன் செய்து முடித்தது, பார்பனர்களைத் தமிழ் நாட்டில் குடியமர்த்தியதும், (ஆரிய குடி என்ற இடம் உங்கள் நினைவுக்கு வராவிட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல!) வட இந்திய மதமொன்றை, ஆசியா முழுவதும் பரப்பியதும் தான்!

நீங்க அரியக்குடியை சொல்றீங்கனு நினைக்கிறேங்க . கறெக்ட்டா ?எந்த சர்க்கரவத்தீங்க தப்பு செய்யலை ? சொல்லுங்க . அவங்களோட தப்பை மட்டும் சொல்றதால என்னங்க லாபம் ? ரெண்டையும் சொல்லணும் . ஒங்க கருத்துக்கு நன்றி சொல்றேங்க புங்கையூரன் அண்ணன் :):):D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்துப் பேரேடுத்தான், பாரி மன்னன்!

தன் தாயின் திதியன்று மாமிசம் புசித்த பாவத்துக்குப் பரிகாரம் தேடி,ஆயிரம் பிராமணரை, தமிழ்நாட்டில் குடியேற்றித் தமிழனின், வளம் மிக்க நிலங்கள் அனைத்தையும், தானம் செய்தான் இன்னொருவன். அதுவும் ஒரு பிராமண மந்திரியின் ஆலோசனையின் பேரில்!

ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் நீதிக் கோரிக்கைக்காக, தனது ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான், மனு நீதி கண்ட சோழன்!

இந்த மன்னர்களின் முடிவுகளால், பெருமைப் படுகின்றோம்!

எங்காவது பகுத்தறிவு தெரிகின்றதா?

இவ்வளவு அழிவின் பின்னும், இதைத் தானே தமிழன் செய்து கொண்டிருக்கிறான், சொப்னா!

தவறாக நினைக்காதீர்கள்!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், கனக விசயர், தலையில், கல்லேற்றிய கதையில் இருந்து, வெளியே வந்து. யதார்த்தத்தில் தமிழனின் இன்றைய நிலையைப் பார்த்து, ஏதாவது செய்ய முயற்சிப்போம்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இணைப்புக்கு நன்றி,சொப்னா.

நன்றீங்க நுணாவிலன் அண்ணன் :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
    • சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024   சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர், தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன். இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.   https://www.battinatham.com/2024/11/blog-post_28.html
    • இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁
    • Tamils in US: கவலையா or நம்பிக்கையா? Trump வெற்றி குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் சொல்வதென்ன? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்பின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது குடியேற்றம் தான். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்பு அமைப்பேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? பிபிசிக்காக அமெரிக்காவில் இருந்து விஷ்ணு வி ராஜா மற்றும் அய்யப்பன் கோதண்டராமன்   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.