Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் பாதுகாத்து பேணப்பட்டுவந்த வல்லை ஆவணக்காப்பக நூல்கள் - 07.05.12 அன்று வல்லையில் கையளிப்பு செய்யப்படுகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பாதுகாத்து பேணப்பட்டுவந்த வல்லை ஆவணக்காப்பக நூல்கள் - 07.05.12 அன்று வல்லையில் கையளிப்பு செய்யப்படுகிறது! camera_icon.jpeg

[sunday, 2012-05-06 21:16:35]

valva-historical150seithy.jpg

1969 ஏப்பிரல் 7,8,9 மல்லாகம் தமிழரசுக்கட்சி மாநாடு நடந்தது. மேற்படி மாநாட்டில் குரும்பசிட்டி கனகரத்தினத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணக்கண்காட்சியும் பெரு மளவு மக்களினால் விரும்பிப் பார்க்கப்பட்டது. அந்த ஆவணக்கண்காட்சி ஈழத் தமிழர்களின் வாழ்வினைச் சித்திரிக்கும் பத்திரிகைச் செய்திகள், துணுக்குகள் என்ப வற்றின் ஊடாக வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருந்தது.

மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளிற்கிடையே ஆன பரபரப்பான நேரங்களிலும் ஒரு இளைஞனின் பார்வையில் பட்ட இந்த ஆவணக் கண்காட்சி அவன் மனதைப் பற்றிக் கொண்டது. ஏன்! எங்களுரின் செய்திகளையும் இவ்வாறு ஆவணமாக்கினால் என்ன? முடிவு! அன்றுமுதல் தன் கண்ணில்பட்ட கைகளில் அகப்பட்ட ஊர் செய்திகளையும் தகவல்களையும் சேகரிக்க முற்பட்டார். இவ்வாறு தேடமுற்பட்டபோது இவருடன் உடனிருந்த நண்பர்களான ந.அனந்தராஜ், ச.காந்திதாசன் என்பவர்களும் கைகொடுக்கவே மூவரின்பயணமும் தொடர்ந்தது. இவ்வாறு இவர்கள் சேர்ந்தபயணத்தில் பிறந்ததே "வல்வெட்டித்துறைக் கப்பலின் அமெரிக்கப் பயணம்" என்னும் சிறு கை நூலாகும். இந்நூல் 1974 இல் உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்களிற்கு வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறை மண்ணின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை எடுத்தியம்பும் கடலோடிப் பாரம்பரியத்தின் ஓர் அடையாளச்சின்னமாக விளங்கும் புகழ்பெற்ற சுந்தரமேஸ்திரியாரின் "அன்னபூரணி அம்மாள்� என்ற பாய்க்கப்பலின் அமெரிக்க பயணம் பற்றி, ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறு குறிப்பாகவே அக்கை நூல் அன்று காணப்பட்டது.

அம்மலரின் அடிக்குறிப்பில் இம்மலரிலுள்ள பொதுக்கட்டுரைகள் யாவும் ந.அனந்தராஜ், ச.காந்திதாசன், ந.நகுலசிகாமணி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகிக் கொண் டிருக்கும் "வல்வை வரலாற்று" நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்நூல் வல்வையின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தாங்கிக் கொண்டு விரைவில் வெளிவர இருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் அசாதாரண சூழ்நிலை கருக்கொண்ட காலம் பொருள்தேடி திரைகடலோடி திரவியம் தேடஆரம்பித்த காலம் ஆனாலும் மனதில் அடங்காத வல்வையின் ஆவணத் தாகம் இவைகளின் ஊடாக அவரின் தொடரான பயணம்.

நண்பர்கள் திக்கொன்றாய் திசைமாறிப் பறந்தார்கள். திரைகடலோடி திரவியம் தேடிய இவரே கடல் கடந்து 1992 இல் கனடாவில் குடிபுகுந்தார். புதியநாடு, வேற்றின மக்கள், ஆனால் வல்வையில்கொண்ட தாகம்தீரவில்லை. இடையற்ற வேலை நேரங்களிலும் இடைவிடாத தேடுதல் இறுதியில் முன் கூறிய "வல்வை வரலாற்று நூல்" இருபத்திமூன்று வருடங்கள் கடந்து 1997இல் "வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" நூலாக கனடாவில் விரிந்து கொண்டது. வல்வை மண்ணின் வரலாறு, பாரம்பரியம், கல்வி, கலை, கலாச்சாரம் என 57 தலையங்கங்களின் கீழ் விரிந்த அம்மலர் வல்வை மண்ணின் பல்சுவைப் பக்கங்களினை ஆவணமாக்கித் தந்ததுடன் நில்லாமல், கனடாவில் ஈழத்தமிழர்களின் கிராமங்கள் நகரங்கள் என்பனவற்றின் சிறப்பினைக் கூறும் பின்வந்த பலநூல்களிற்கு வழிகாட்டியாகவும் உந்துகோலாகவும் மாறியது.

வல்வெட்டித்துறை பற்றிய செய்திகளைச் சேகரித்துத் தொகுத்ததன் மூலம் "வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" நூல் முதலாம் பதிப்பாக வெளிவந்திருந்தது. தொடர்ந்த தேடுதலில் வல்வெட்டித்துறையின் இலக்கியப் புலமையை பறைசாற்றி வரும் புலவரென்ற பெயருக்கேற்றவாறு மறைந்தபின்னும் �வல்வை வைத்திலிங்கப்புலவர்"; என போற்றப்படுபவரின் கந்தரலங்காரம் நூலின் பிரதியொன்று கிடைத்தது. ஏற்கனவே 1912 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்த நூல் அதன் ஆசிரியர் மறைந்து 100 வருடங்களின்பின் 2001இல் மூன்றாம் பதிப்பாக வெளிவந்தது. இது மேற்படி ஆசிரியரான வைத்திலிங்கப் புலவரின் புலமைக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது. அத்துடன் வல்வை என்ற பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டு வழிகாட்டிய புலவர் போன்று �கந்தர் அலங்கார நூலின்� புதிய பதிப்பாசிரியரும் வல்வை.நகுலசிகாமணி என தன்னை அழைத்துக்கொள்வது வாழையடி வாழையாக வல்வையின்யின் வளர்ந்துவரும் புலமைக்குச் சான்றாக உள்ளது.

2001 இல் வைத்திலிங்கப் புலவரின் "கந்தரலங்காரம்" உரைநடை வெளியிடப்பட்ட நாளில் "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" எனும் நூலும் இரண்டாம் பதிப்பாக மலர்ந்தது. வல்வெட்டித்துறை பற்றிய பல வரலாறுகளைக் கொண்ட இந்த நூல் 1918 இல் வெளிவந்திருந்தது. யாழ் - வசாவிளான் வேலுப்பிள்ளை (கல்லடி) என்பவரால் எழுதி வெளியிடப்பெற்ற "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" என்னும் இந்நூல் பெயருக் கேற்றவாறு யாழ்ப்பாணத்தின் பல வரலாற்றுச் சம்பவங்களின் சான்றாதாரமாக உள்ளது. வல்வெட்டித்துறை என்ற குடும்பத்தின் பெருமைகளை ஆவணமாக்கிய நகுலசிகாமணி யாழ்ப்பாணச் சமூகத்தின் பெருமைகளை உள்வாங்கிய "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" நூலையும் மீள்பதிப்புச் செய்தார். இதன் மூலம் பலருக்கும் பயன்பெறும் பனுவலை மீளவும் உயிர்ப்பித்துக் கொண்ட பெருமையைப் பெற்றார். அதுவரை பல வருடகாலமாக அவருக்குள்ளே அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆவணம் என்னும் நதி பொங்கிப் பிரவாகித்து புதுவேகம்கொண்டு புரண்டோடத்தொடங்கியது. வல்வெட்டித்துறை ஆவணக் காப்பகம் என்றபெயரில் அது கொண்டுவந்து தந்தவைகள் வரலாறு, இலக்கியம், சமயம், சமூகம், அரசியல் என பல்வேறு பட்டவையாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியினை தனி மனிதனாக புரியும் இவரின் சாதனை நிகரற்றது. பல்கலைக் கழகங்கள் நிறைந்த தமிழகத்தில் இருந்து தேடிப்பெற்றுக்கொணட்ட பல பழம்தமிழ் நூல்களையே இவர் மீள்பதிப்புச் செய்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவரால் மீள்பதிப்புச் செய்யப்பட்டதுமான அட்டவணை ஆண்டு வரிசைப்படி கீழ்வருமாறு இவரால் மீள்பதிப்புச் செய்யப்பட்டதும் எழுதப்பட்டதும். "வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" முதலாம் பதிப்பு 1997. "கந்தர் அலங்காரம்" - வல்வை வைத்திலிங்கப் புலவர் - 1912 "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" - வசாவிளான் கல்லடி வேலுப்பிள்ளை - 1918 யாழ்ப்பாண வைபவ மாலை - குல.சபாநாதன் - 1884 சேர்.பொன்.அருணாசலம் அருணாசலத்தின் வாழ்க்கை வரலாறு. "வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" - இரண்டாம் பதிப்பு - 2006 நீச்சு வீரன் நவரத்தினசாமி - லியோன்பிள்ளை 1954. தொண்டமானாறு செல்வச்சந்நிதியும் வரலாறும் - செ.நாகலிங்கம் 1974. சிவராத்திரி புராணம் வைத்திலிங்கபிள்ளை உரை - 1881 ளு.து.ஏ.செல்வநாயகம் யு வுசுஐடீருவுநு. - TRIBUTE. - 1978 RE �OPENING OF NORTH CEYLON PORT - 1951 கந்தபுராணத்தில் வள்ளியம்மை திருமணப்படலம், - வைத்திலிங்கப் புலவர்- 1889 "தெய்வானையம்மை" - 1889 திருக்குறள் அதிகாரச் சாரமாகிய திருத்தாலாட்டு - வல்வை கணேச பண்டிதர் - 1919. திருமுருகாற்றுப்படை உரை - ஆறுமுகநாவலர் - 1853 மறைசையந்தாதி - நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் - 1913 மாரியம்மன் மான்மியம் - 1972 உடுப்பிட்டி சிவசம்புப்புலவர் வரலாறும் ஆக்கங்களும் - வல்வை ந.நகுலசிகாமணி-2010 கல்வளையந்தாதி மூலமும் உரையும் (பழைய) - நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்-2012

இவ்வாறு வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள், உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் வாழ்க்கையும் ஆக்கங்களும் என்னும் இரு நூல்களின் ஆசிரியராகவும் மேலும் நூல்களிற்கு புத்துயிர்கொடுத்த பதிப்பாசிரியராகவும் பவனிவரும்இவர் இவ்வாறான பாதை யில் புதியதளத்திலும் காலூன்றலானார். பழையநூல்களில் வல்வையின் செய்திகளை தேடுவதாக ஆரம்பித்த இவரின்பயணம் இதற்காக பழையநூல்களை தேடுவதிலும் சேகரிப்பதுமாக விரிந்தது. இதன்பயனாக காலக்கிரமத்தில் இவரதுஇல்லம் ஒரு நூல்நிலையமாக மாற்றம்கண்டது. பழம் பனுவல் தேடுவோர். நகுலசிகாமணியின் இல்லத்தை நூல் நிலையமாக்கி நாடி வரஆரம்பித்தனர். கனடாவில் இருப்பவர்மட்டுமன்றி அமெரிக்கா, லண்டன், நியூசிலாந்து, இலங்கை என்னும்இடங்களிலிருந்து வரும்புத்தக ஆர்வலர்களும் மட்டுமன்றி பல்துறைசார்ந்த பேராசிரியர்களும் இவர் வீட்டைநாடினர். இதனால் இவரிடம் இருந்தநூல்கள் ஆராய்ச்சிக்குதவும் நூல்களாகமாற்றம்கண்டு எதையும்உறுதிபட உரைக் கும் ஆவணங்களாக மாறின "வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்" என்ற பெயரிற்கு இசைந்தாற்போல் இவரின் பயணம் தொடர்ந்தது.

நாட்டில் ஏற்பட்டிருந்த தற்கால ஓய்வினைப் பயன்படுத்தி 2004 இல் குடும்பத்தினருடன் தாயகம் திரும்பியிருந்த இவர் அதுவரைதான் சேர்த்துவைத்திருந்த கிடைத்தற்கரிய ஆவணப்பொக்கிஷங்களையும் கொண்டுசென்றார். அவைகளை வல்வெட்டித்துறை அ.மி. கல்லூரியின் சாதாரண வல்வையின் பொதுமக்களிற்கும் விளங்கும் வகையில் காட்சிப் படுத்தினார். அம்மண்ணில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் அம்மக்களின் உயிரோட்டமாக திகழ்ந்த அக்கண்காட்சியில் பார்வையாளருக்கான கருத்துப்பதிவு புத்தகமும் இவரால் வைக்கப் பட்டிருந்தது. 1969 இல் இவருக்குக் கிடைத்திருந்த தாகம்போலவே அந்த மண்ணின் மக்கள் ஒவ்வொருவருக்கும் எங்கிருந்தாலும் இருக்கும். இதற்கு மாற்றுக்கருத்தில்லை. இதன் ஒரு அடையாளமாக அம்மண்ணின் மைந்தர்களில் ஒருவரின் கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது இக்கண்காட்சியை நிர்நதரமாக்கினால் என்ன? என்று. அதைப்படித்ததும் நிச்சயம்கொண்டார். வல்வை மண்ணில் கண் காட்சியாக வைக்கப்பட்ட வல்வையின் ஆவணப்பொருட்கள் வல்வெட்டித்துறை யிலேயே நிரந்தரமாகப் பேணப்படவேண்டும். அதற்காக ஒருகாட்சியகம் அங்கேயே உருவாக்கப்படவேண்டும் பெருமைமிகு மண்ணின் வரலாறு, பாரம்பரியம், கலை கலாச்சாரம் என தேடுவோருக்கு வல்வை மண்ணிலேயே ஒரு வாசல்வேண்டும். உறுதியோடு செயல்படலானார். 40 வருடங்களாக மனதில் ஊறி வளர்ந்தகனவு,20 வருடங்களாக கனடாவில் இயங்கிய கனடா வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமாக எமது மண்ணில் இன்று பாதம் பதிக்கிறது. வேரோடி மண்ணோடி விழுதூன்றிய ஆவணக்காப்பகம் எமது மண்ணிற்குப் புதுமை சேர்க்கின்றது. சில பல்கலைக்கழகங்களில் காணப்படும் நூல்நிலையம் தவிர்ந்த ஆவணக்காப்பகங்கள் தேசியரீதியாக காணப்படும் தொல்பொருட்காட்சி சாலைகள் தவிர தனி ஒரு ஊருக்காக எங்கும் ஆவணக் காட்சியகம் இதுவரை உலகத்தில் எங்கும் அமைக்கப்பட்டதாக வரலாறு ஏதுமில்லை. அமைக்கப்படுமா என்பது சந்தேகமே!

ஆவணக்காப்பகம் அமைக்கப்படுவதற்கு சுருங்கக் கூறினால் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு நீண்ட நெடிய பெருமைமிகு வரலாறும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றாதாரங்களும் ஆவணமாகக் காணப்படவேண்டும். சொல்லவே இனிக்கும் சுவைகொண்ட வல்வை என்ற சொல்லிற்கும் வலிமை அதிகம். வல்வெட்டித்துறை இது பட்டினமோ நகரமோ அல்ல சுவை நிர்வாக அலகுக்கானவை. வல்வெட்டித்துறை இது ஒரு குடும்பப்பெயர். இக்குடும்பத்திற்கு இரண்டாயிரம் வருட நீண்ட நெடிய வரலாறு உண்டு. இலங்கைத் திருநாட்டின் வம்சவரலாறு கூறும் மகாவம்சமும் வல்வெட்டித்துறை வரலாறு கூறும் ஆவணங்களில் ஒன்று. சோழரின் வரலாறுகூறும் பட்டினப்பாலையும் வல்வையின் மகிமைகூறும் ஆவணங்களில் இன் னொன்று இவைபோல் ஆயிரம் ஆயிரம்வரலாறு கள் எம்மிடம் உண்டு. அவைகளின் நிகழ்கால தரிசனமாக இவ்வல்வெட்டித்துறை ஆவணக்காப் பகம் எதிர்காலத்தில் திகழும். வல்வெட்டித்துறை என்ற இனிய குடும்பத்தில் ஏற்றப்படும் குத்து விளக்கான வல்வெட்டித்துறை ஆவணக்காப்பகத்தை ஏற்றிடும் திரு.ந.நகுல சிகாமணி, உமா நகுலசிகாமணி தம்பதியினருக்கு நெஞ்சார நன்றிகூறும் வல்வை மக்களுடன் மக்களாக

தமிழ்.நீ.பொன்.சிவகுமாரன்

கனடா

15-04-2012.

Opening-of-Images-of-Valvai-550952-001.jpg

நன்றி - செய்தியிணையம்

... வல்லை வேறு, வல்வை வேறு ... செய்தி இணையத்தின் கவனத்துக்கு!

<_<

... கனடாவில் பாதுகாத்ததை வல்வையில் கவனமாக ஒரு இடத்தில் வைத்திருப்போம், அப்போதுதான் சிங்களவனுக்கு எரிக்க வசதியாக இருக்கும்! ... யாழ் நூலகம், காட்லி நூலகம் என பலவற்றில் பன்னூற்றாண்டு கால தமிழர்களின் பொக்கிஷங்களை சேகரித்து வைத்து .... கொழுத்த உதவினோம்! :icon_idea:

பாதுகாப்பு நிலைமைகள் தமிழர் கைகளில் கிடைக்கும்வரை ஆவணங்களை பாதுகாப்பான வெளிநாடுகளில் பேணுவது சிறந்தது!

அவற்றின் பிரதிகளை digital, microfilm, போன்ற வடிவில் தாயகத்தில் வைக்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.