Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன் அரசுடன் பேச ஆசைப்படுகிறது கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன் அரசுடன் பேச ஆசைப்படுகிறது கூட்டமைப்பு!

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி சில இணக்கப்பாட்டிற்கு வர விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் தீர்வு விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் முறிவடைந்தது.

அதற்கு பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் என்ற கோரிக்கையை அரசு தரப்பு நிராகரித்தமையாகும்.

எனினும் பொலிஸ் அதிகார விடயம் குறித்து பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பேசப்படும் என மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சேர்வதற்கு முன்னர் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

"பாராளுமன்றத் தெரிவுக் குழு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர் அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பன்முகப் பேச்சுவார்த்தை என்பது பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு வழிசெய்வதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் நுட்பம் என சுரேஸ் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறச் செய்வது அரசாங்கத்தின் மற்றுமொரு தந்திரோபாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் தீர்வொன்றை காண பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கடந்த வாரம் அழைப்பு விடுத்ததோடு அதற்கு மத்தியஸ்த்தம் வகிக்கத் தான் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை வந்து சென்ற இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜ்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு கோரியிருந்ததார்.

எனினும் கூட்டமைப்பு அவை அனைத்தையும் நிராகரித்துவிட்டு தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. :unsure: :unsure:

http://www.adaderana.lk/tamil/news.php?nid=25099

கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க பின்வரும் நிபந்தனைகளை சிங்கள அரசும், சர்வதேசமும் கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். வேறு வழியே இல்லை என்பதை தெரிவித்து விடவேண்டும்.

(1) ஏற்கனவே சட்டமாக்கப்பட்டுள்ள 13வது திருத்தங்களை உடனடியாக முழுமையாக (காணி, போலிஸ் அதிகாரங்கள் உட்பட) உடன் அமுல்படுத்த வேண்டும்.

(2) சிங்கள பயங்கரவாத அரசு இதுவரை பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட உடன்பாட்டை உடன் அமுல்படுத்த வேண்டும். அதற்கு தேவையான சட்ட வரைபுகளை தமிழர் அறுதிப் பெரும்பான்மை (2/3) இன்றி பாராளுமன்றத்தாலும் மாற்ற முடியாதபடி சட்டமியற்றவேண்டும்.

(3) சிங்கள பயங்கரவாத அரசு 13வது திருத்தங்களுக்கு மேற்பட்ட, சிங்கள பாராளுமன்றத்தால், சிங்கள நிர்வாகங்களால் மாற்ற முடியாத அதிகாரங்களுடன் கூடிய மாதிரி தீர்வுத்திட்ட வரைபை முதலில் முன்வைக்க வேண்டும்.

(அமெரிக்காவும் சிங்கள அரசின் பெரும் பங்கை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. ஹிந்திய போலி ஜனநாயக அரசுக்கு தமிழர் தீர்வு மீது உண்மையான அக்கறையில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை).

(4) ஐக்கிய தேசிய கட்சியும் அதனது மாதிரி அதிகார பரவல் தீர்வுத்திட்ட வரைபை முதலில் முன்வைக்க வேண்டும்.

(5) தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் / ஆலோசகர்கள் / அவதானிகள் முன்னிலையில் குறித்த கால வரையறைக்குள் - 3 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க பங்குபற்றும் ஒவ்வொரு தரப்பும் உறுதி மொழி வழங்க வேண்டும். தமிழின படுகொலைகளுக்கு நேரடியாக உதவியவர்கள் (உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான், பௌத்த நாடுகள் போன்றவை) மத்தியஸ்தம் வகிக்கத் தகுதியற்றவர்கள்.

(6) குறித்த காலத்துக்குள் சிங்களத் தரப்புகள் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப் படுத்தாவிட்டால், உடனடியாக அமெரிக்கா - ஐரோப்பா தலைமையிலான நாடுகள் தமிழருக்கு உரிய தீர்வினை எந்தவொரு வகையிலும் பெற்றுக் கொடுப்பதாக எழுத்து மூலமான உறுதி மொழிகள் வழங்க வேண்டும்.

(7) அத்துடன் சிங்கள அரசை பயங்கரவாத அரசாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப் படுத்த வேண்டும்.

(8) பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நியமங்களுக்கமைய நட்ட ஈடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

(9) தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்திருக்கும் முஸ்லிம்களும், சிங்களவர்களும் உடன் அப்புறப்படுத்த வேண்டும்.

இவை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், உறுதி மொழிகளைப் பெற்ற பின்னர் - கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ள சம்மதிக்கலாம்.

2012-05-04.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.