Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை பெண் சிப்பாயை சுட்டுவிட்டு கடற்படை சிப்பாய் தற்கொலை.

Featured Replies

கடற்படைசிப்பாய் யொருவரை துப்பாக்கியால் சுட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார்.

அதையடுத்து அந்த கடற்படைச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.இதுபோன்ற உள்மோதல்கள் சிறிலங்கா படையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.

கடந்தமாதம் சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் மூவரும், கடந்தவாரம் யாழ்.நகரில் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் இவ்வாறான உள்முரண்பாட்டினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=18248

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது காரணம் முன்புபோல் பாதுகாப்பு அச்சுறுத்தல் படையினருக்கு இல்லை முகாம்களில் இருந்து கொசிப்பிங் அடிக்கும் படையினர் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படவே கொலைகளும் தற்கொலைகளும் தொடர்ந்து அதிகளவில் நிகழ வாய்ப்பு உள்ளது இவைய் எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்தை பார்க்காத விரக்தி பார்த்தவர்களுக்கு குடும்ப கஸ்ரம் பற்றிய விரக்கதி எல்லாம் சேர்ந்தே இவ்வாறான முடிவு எடுக்க தூண்டுகின்றது ........

ராணுவத்திற்கு சுட பயிற்சி வழங்கப்பட்டது உண்மைதான்.தற்போது சுடுவதற்கு தமிழர்கள் இல்லாதவிடத்து சிங்களவரை சுடுகிறார்கள் நியாயமாகத்தான் இருக்கா?

இது ஒரு மனநோய்க்கு அறிகுறி .

பலர் சொல்வது போல குடும்பத்தை பார்க்காத விரக்தி ஒரு காரணம்

கூட்டமாக சேர்ந்து கொலை செய்வது வேறு . போரில் வென்ற ராணுவ வீரர்கள் அந்த கொலைகள் பற்றி தனிமையில் வேலையின்றி இருக்கும்போது நினைத்து பார்த்தால் அடி மனதினுள் தன்னால் ஏற்படும் ஒரு வித பயம் . அந்த பயம் நீங்க போதை தேவை படுகிறது.

அந்த போதை மனிதனை ஆட்கொள்ள ஆரம்பித்த பின் போதை இன்றி இருக்கும் போது அமைதியாகவோ அல்லது எதிர்மாறாக ஒரு வெறியோடோ இருப்பர்.

மேலும் தன் தொடர்ச்சியாக இருக்கும் போது எதிரியை நண்பனாக மனது நினைப்பதும் நண்பனை எதிரியாக நினைக்கும் ஒரு தனிப்பட்ட நிலைக்கு மனிதன் செல்வான் . உதாரணமாக கடத்தப்பட்ட பலரும் கடத்தியவர்களை பற்றி பெருமையாக கூறுவதும் நகமும் சதையுமாக இருந்தவர்கள் திடீரென ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி தூற்றுவதும் இதுவே. இந்த நோய்க்கு எதோ ஒரு பெயர் உள்ளது . தயவு செய்து மேலதிக விவரங்கள் யாருக்கேனும் தெரிந்தால் இணைக்கவும் . பயணம் திரைப்படத்தில் இந்த நோயின் பேரை அந்த டாக்டர் சொல்லுவார். ஞாபகம் வர மாட்டேங்குது .

தெளிவாக ஒரு சிறிய விடயம் கூறுகிறேன் . ஒரு தெற்கு பக்கம் சேர்ந்த ஒரு சிங்கள போராளியிடம் தமிழர்கள் நம் எதிரிகள் என மனதில் ஊட்டப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்க படுகிறான். ஆனால் அவனுக்கு தமிழர்கள் சரி நேரடியாகவே சொல்கிறேன் . புலிகள் செய்த தாக்குதல் அல்லது கொலைகள் கேள்விப்பட்டு இருப்பானே தவிர அனுபவம் இருக்காது .

இங்கு வந்த பின் அவன் கட்டளை படி தமிழர்களை கொல்கிறான், கொடுமை படுத்துகிறான், ஆனால் எதிர்ப்பு என்பது தமிழர்களிடம் இருந்து வராது . தொடர்ச்சியாக இது நடக்கும்போது உள்மனம் சந்தேகத்தை விதைக்க ஆரம்பிக்கும் . மேலும் லீவு தராமல் வேலை சுமைகள் கொடுக்கும் மேலதிகாரிகள் மீது வெறி பிறக்கும் . கேள்விப்பட்டு மற்றும் காசுக்காக மட்டும் போர் புரிய வரும் பலருக்கும் உள்ள பிரச்சனை இது . இதனால் தான் இலங்கை படையில் இருந்து ஓடியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது . மேலும் ஒருவரோ இருவரோ எங்குமே நிற்க மாட்டார்கள் . நாலு ஐந்து என தான் அலைவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

காதல் விவகாரம் - இலங்கைப்படையினரிடையே சுடுபாடு அதிகரிப்பு: திருமலையில் கடற்படைச்சிப்பாய், பெண்சிப்பாயை சுட்டுக்கொன்று தானும் தன்னைச் சுட்டு இறந்தார்!

Srilanak-navu-womenwings150-news.jpg

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு சிறிலங்கா கடற்படையினர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அதையடுத்து அந்த கடற்படைச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இதுபோன்ற உள்மோதல்கள் சிறிலங்கா படையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடந்தமாதம் சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் மூவரும், கடந்தவாரம் யாழ்.நகரில் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் இவ்வாறான உள்முரண்பாட்டினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகளின்படி காதல் விவகாரமே காரணமென கடற்படைவட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=59777&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.