Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் 200 போர்க்குற்றவாளிகள் லண்டனில் புகலிடம்

Featured Replies

பிரித்தானியாவில் தளர்வாக உள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான போர்க்குற்றவாளிகள் அங்கு புகலிடம் தேடியுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்ற மோசமான கொடூரங்களை இழைத்துள்ள போதும் இவர்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியாதுள்ளது.

ஐரோப்பாவின் மனிதஉரிமைச் சட்டங்களே அதற்குக் காரணம்.

இவ்வாறு லண்டனில் புகலிடம் தேடியுள்ள போர்க்குற்றவாளிகளில் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், ருவாண்டா, சியாராலியோன், சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்களாவர்.

கடந்த 18 மாதங்களில் இவ்வாறான 207 சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவின் எல்லை முகவரகம் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் அவர்களில் 12 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவை பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இன்னும் வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று லண்டனைத் தளமாக கொண்ட அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளதாகவும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 18 மாதங்களாகப் பணியாற்றியிருந்தார்.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, இராஜதந்திர விலக்குரிமையை விலக்கிக் கொள்ளுமாறு பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதும், அதனை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20120509106161

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.