Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையார் பிடிக்க அது குரங்கான கதைபோல - போர் வெற்றியைக் கொண்டாட ஒரு நூலைப் பிரசவிக்க, அதுவே போர்க்குற்ற நிரூபண ஆவணமாக மாறி நிற்கின்றது.:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் பிடிக்க அது குரங்கான கதைபோல - போர் வெற்றியைக் கொண்டாட ஒரு நூலைப் பிரசவிக்க, அதுவே போர்க்குற்ற நிரூபண ஆவணமாக மாறி நிற்கின்றது.:-பனங்காட்டான்-

விழுதுகளோடு இணைந்து , வேரொடு ஒன்றாகி இனப்படுகொலை புரிந்தவர்களை போர்க்குற்ற கூண்டில் ஏற்றும்வரை ஓயமாட்டோம் என்று உலகுக்கு எடுத்துக் கூறுவதே மே 18 போர்க்குற்ற நாளின் இதய தாகம்.

  இனி என்ன செய்யப்போகிறோம்?

எங்களின் அடுத்த பயணம் எந்தத் திசை நோக்கியது?

எங்களை அழிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி புரிந்த நாடுகளுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எதற்காக இப்படித் தண்டித்தார்கள்?

முள்ளிவாய்க்கால் என்பது பின்னடைவு என்றால் இதிலிருந்து மீள்வதற்கு எங்களுக்கு வழியே இல்லையா?

மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் நாங்கள் விடை காண முடியாது எங்கள் முன்னால் விரிந்து எழுந்து நின்ற வினாக்கள் இவை. ஏதிலிகளாகவும் , பரதேசிகளாகவும், பத்துலட்சம் பேர் வரையில் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்குரிய நாகரிகமான பெயர் புலம்பெயர் தமிழர். தாயகத்தில் இன்னும் எத்தனையோ லட்சம் மக்கள் முழுமையாக இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர்'

அவர்கள் வாழ்ந்த மண்ணை பார்த்தவர்களைப் பார்த்தே ஆயிரம் நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது. அவர்களுக்கு உள்நாட்டு அகதிகள் என்று பெயர் சூட்டி, முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் ஓங்கி எழுந்த 'இனி என்ன செய்யப்போகிறோம்'என்ற கேள்வி அனுமார் வால்போல நீண்டு செல்கிறது. சிறிலங்கா என்ற சின்னத்தீவு இப்போது சீனலங்காவாக மாறி , மனித அவலத்துக்கு பெயர் போய், மனிதாபிமானத்துக்குச் சவால் விடுகிறது.

இறுதி யுத்தம் (?) என்று சொல்லப்படும் வன்னிப் போரின் அவலங்களை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட குழுவுக்கு'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' என்று பெயர் சூட்டினார்கள்.

இதன் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இறுதி அறிக்கை கையளிக்கப்பட்டு அரையாண்டு முடிந்துவிட்டது.

இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , காலாண்டு முடியப்போகின்றது. அறிக்கையை கிடப்பில்போட முற்படும் சிங்களப் பேரினவாத அரசு , அதற்காக புதுப்புது கதைகள் பலவற்றை அவிழ்த்து விடுகின்றது. பரிந்துரைகளில் பலவற்றை அரசு ஏற்கனவே நிறைவேற்றிவிட்டதாக ஒரு அமைச்சர் சொல்கிறார்.

எஞ்சியிருப்பவைகளை என்ன செய்யலாம் என அரசாங்கத்தின் கூட்டுக் கட்சிகளிடம் ஜனாதிபதி அபிப்பிராயம் கேட்டிருப்பதாக இன்னொரு அமைச்சர் தெரிவிக்கிறார்.

உள்நாட்டு விவகாரத்திற்கு வெளிநாடுகள் எந்தத் தீர்வையும் திணிக்கக்கூடாது என்கிறார் மற்றொரு அமைச்சர்.

ஆக , நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்பவை, எங்கள் கண்முன்னால் அரோகரோவாகப் போவதைப் பார்க்கின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் துணிவுடன் விடயங்களை எடுத்துக்கூறியவர்களை அரசாங்கப் படையினர் துணை இராணுவக் குழுவின் உதவியுடன் அச்சுறுத்தி வருகின்றனர். பலர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு 'அன்புத் தொல்லை'க்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வன்னிக் குடிமக்கள் எங்கே போனார்கள் என்று ஆதாரப் புள்ளிவிபரங்களுடன் கேட்ட மன்னார் ஆயர் ராயப்பு யோசப் அவர்களின் இருப்பிடத்திற்குச் (ஆயர் இல்லம்) சென்ற இரகசியப் பொலிசார்,பயமுறுத்தும் பாணியில் அவரைக் கேள்விகளால் துளைத்துள்ளனர்.

பொலிசார் இப்படியாக விசாரித்தது தமக்கு எதுவும் தெரியாது என்று அப்பட்டமாகப் பொய் கூறுகின்றார்பொலிஸ்மா அதிபர் இலங்கக்கூன். காவல்துறை இயந்திரத்தில் தமக்கு மேலே கோதபாய ராஜபக்ச என்பவர் இருப்பதை இலங்கக்கூன் அறியாதவரல்ல.

சரத் பொன்சேகாவுக்கு மரண தண்டனை வழங்குவேன் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்சர்வதேச வானொலி ஒன்றுக்கு முழக்கமிட்ட கோதபாயவின் 'போர் வெற்றி' நூல் இந்தவாரம் வெளிவந்துள்ளது.

விடுதலைப் புலிகளை தோற்கடித்த வெற்றியின் சாதனை கோதபாயவுக்கு மட்டுமே உரியது என்றவாறு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இதனை எழுதியவர் சிங்கள இனவாதம் கக்கும் 'திவய்ன' என்ற சிங்களத் தினசரியின் (ஐலண்ட் ஆங்கிலப் பத்திரிகையின் சகோதர பத்திரிகை இது) ஊடகவியலாளர் சந்திரப்பெரும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோதபாய சொன்னவைகளை வரிக்குவரி சந்திரப்பெரும அப்படியே எழுதினார் என விடயமறிந்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நூல், இந்த வேளையில் வந்திருப்பதில் சில நன்மைகள் உள்ளன. வன்னி யுத்த படுகொலைகள் , சொத்துகள் எரிப்பு, அழிவுகள், பொதுமக்களும் போராளிகளும் காணாமல் போனது உட்பட்ட இனப் படுகொலைக்கான சகல போர்க்குற்றங்களுக்கும் ஒருவரே பொறுப்பு; அவரே சூத்திரதாரி; அது வேறுயாரும் அல்ல, நானேதான் என்று பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ச சொல்வதை�லின் வரிகளுக்கிடையில் காணலாம்.

யுத்த கால ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க நிர்பந்தத்தால் விடுதலை செய்ய (சிலவேளை அவர் இப்போது விடுதலை செய்யப்பட்டுமிருக்கலாம்) இலங்கை அரசின் தலைவர்மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துவரும் இவ்வேளையில், �சகல போர்க்குற்றங்களுக்கும் நானே பொறுப்பு� என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போல 'கோதபாயவின் போர் வெற்றி' நூல் அமைந்துள்ளது.

கோதபாயவின் போர்க்குற்றங்களுக்குக் கூடுதல் பங்களாராக விளங்கும் சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட மகிந்த ராஜபக்ச இதன் வெளியிட்டு வைபவத்தில் கலந்து மிகவும் மகிழ்ந்துள்ளார் .

இதில் பங்கேற்ற இன்னொரு முக்கியஸ்தார் இலங்கைக்கான இந்தியாவின் தூதுவர் அசோக் கே. காந்தா. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாண்டு நினைவுகளை உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர் 'இனப்படுகொலைக்கான போர்க் குற்ற நாள்' ஆக வெளிப்படுத்திவரும் இந்நாட்களில், போர்க்குற்ற நாயகர்களில் முக்கியமானவரான கோதபாயவின் நூல் இதற்கான முடிக்குரிய சாட்சியாக வெளிவந்திருப்பது முற்றிலும் எதிர்பாராதது.

பிள்ளையார் பிடிக்க அது குரங்கான கதைபோல, போர் வெற்றியைக் கொண்டாட ஒரு நூலைப் பிரசவிக்க, அதுவே போர்க்குற்ற நிரூபண ஆவணமாக மாறி நிற்கின்றது.

ஜெனிவாத் தீர்மானம் , படிப்படியாக காலக்கிரமத்தில் இலங்கை அரசை போர்க்குற்றத்துள் இழுத்துச் செல்வதற்கான முதற் கயிறு. என்றோ ஒரு நாள் இனப்படுகொலை குற்றத்துள் இலங்கை அரசை இந்தக் கயிறு சிக்கவைக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு.

அதற்கு முன்னர் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயமாக்க சகல நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. இதனை, சிங்கள அரசின் ஒருதலைப் பட்சமான ஐந்தாம் கட்டப்போர்என்று இந்திய தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் பிரமுகர் மணியரசன் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

ஒற்றை மொழியோடு மட்டுமே உலகத்துடன் பேசிவந்த தமிழர் , இன்று உலகின் அத்தனை மொழிகள் ஊடாகவும், உலகத்தாருடன் பேசி வருகின்றனர் என்று கவிஞர் அறிவுமதி குறிப்பிட்டது போன்று, தமிழீழ விடுதலையின் வேட்கையை சிங்களத்துக்கு எதிரான போர்க்குற்ற ஒலியின் ஊடாக உலகம் இப்போது தனது செவிப் பாறைகளில் உள்வாங்கத் தொடங்கியுள்ளது.

விழுதுகளை ஒன்றிணைத்து வேரொடு இணைத்தெழுந்து உலகத் தமிழர் போர்க்குற்றத்திற்கு எழுப்பும் குரல், சிங்களத் தேசத்தை ஆட்டம் காணச் செய்வதை அங்கிருந்துவரும் பிதற்றல்கள் ஊடாக உணர முடிகின்றது. இதனால் , போர்க்குற்ற நிகழ்வுகளை சர்வதேச ரீதியாக நசுக்கவும், ஒழிக்கவும் சிங்கள தேசம் தனது முகவர்களை நேரடியாகப் பயன்படுத்துகிறதா?

இப்போது இவர்களால் முக்கிய இலக்காக அடையாளம் காணப்பட்டிருப்பது , போர்க்குற்ற நாள். இலங்கையில் சிங்கள அரசு போர் வெற்றி நாளைக் கொண்டாடுகையில், சர்வதேச ரீதியாக தமிழர் ஒன்றிணைந்து போர்க்குற்ற நாள் நிகழ்வுகளை நடத்துக்கூடாது என்பது ராஜபக்ச சகோதரர்களின் விருப்பம்.

இதற்காக அவர்களின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்படுவதே தேசிய துக்கநாள் என்று பொதுமக்கள் கருதுகின்றனர் . தமிழீழ விடுதலைப் பயணத்தில் எந்தவேளையிலும் இடம்பெற்றிராத ஒரு சொற்பதம் 'துக்கநாள்' என்பது. எத்தனை எத்தனையோ தளபதிகளையும், வீர வேங்கைகளையும் சுதந்திரப் பறவைகளையும் இழந்த வேளையிலும் கூட தேசியத் தலைவர் அதற்கென துக்கநாள் என்றொரு நாளை என்றுமே பிரகடனப்படுத்தவில்லை.

நவம்பர் 27இல் வரும் மாவீரர் நாளை தேசிய நினைவெழுச்சி நாளாக்கி, அந்த மறவர்களின் தடத்தில் மக்கள் பாதம் பதிக்க வேண்டும் என்பதைச் செயலில் காட்டுபவர்கள், தேசியத் தலைவரின் கொள்கையில் பற்றுறுதிமிக்க தேசபக்தர்கள். இவர்களின் அகராதியில் 'துக்கநாள்' என்றொரு நாள் கிடையாது என்பதை, தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்பவைகளைப் புரிந்தவர்களுக்குத் தெரியும்.

இதனைப் புரியாதவர்களும் , இதனைத் தெரிந்துகொள்ள விரும்பாதவர்களும் தமிழரின் நேரிய செல்நெறிப் பாதையை இடைமறித்து, மக்களைப் பிளவுபடுத்தும் நோக்குடன் போர்க்குக்குற்ற நாளுக்கும் போட்டியாக துக்கநாளைக் கொண்டாட விரும்புகின்றனரா என்று மக்கள் கேட்கின்றனர்.

தங்கள் பிள்ளைகளை , தங்கள் கூடப் பிறந்தவர்களை, தங்கள் பெற்றோரை, மாவீரத் தெய்வங்களை சிங்களத்தின் இனஅழிப்பில் பறிகொடுத்த ஒவ்வொருவரும், சிங்களத்தைப் போர்க்குற்ற கூண்டில் நிறுத்த துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

அதனை உலகுக்கு வெளிப்படுத்த எமக்குக் கிடைத்த நாள் மே 18. சரித்திரமாக மாறியிருக்கும் முள்ளிவாய்க்காலை இந்த நாளில் ஒவ்வொரு நாட்டிலும் சித்தரித்து , போர்க்குற்ற நாளை வீச்சுடன் மேற்கொள்வதே எமக்கு இடப்பட்ட தார்மீகக் கடமை.

ஓலமிட்டுக் கட்டியழுது துக்கம் கொண்டாடினால் , அதன் ஊடாக சிங்களத்தை இனப்படுகொலைப் போர்க்குற்றத்திலிருந்து தப்பவைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மகிந்த அரசுக்கு துணைபோகின்றவர்கள் துக்கநாள் கொண்டாட விரும்புகின்றனரோ என எண்ணத்தோன்றுகிறது.

வலி தந்தவனுக்கே வலியைக் கொடுப்பதற்கு'துக்கநாள் ஒருபோதும் உதவாது. மாறாக, அவனுக்கு வலியேற்படாமல் தடுக்கவே இது உதவும்.

போர்க்குற்றவாளிகளை அதற்கான கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என உரத்துக் கூறுவோம்.

இதுவே ,போர்க்குற்ற நாளின் இதய தாகம்!

- செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.