Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே-18: கொண்டாடும் நாளா? அஞ்சலி செலுத்தும் நாளா? - மனித உரிமை செயற்பாட்டாளர் கேள்வி

Featured Replies

யுத்தத்தின் இறுதிக்கட்டம் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடுவதை அடியோடு வெறுத்தனர். இதற்குப் பதிலாக அவர்கள் அஞ்சலி செலுத்துவதிலும், துக்கம் கடைப்பிடிப்பதிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறு Groundviews இணையத்தளத்தில் Ruki எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

சிறிலங்கா அரசாங்கமானது தான் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் கொண்டாடியுள்ளது. இவ்வாண்டின் மே மாதமானது 'யுத்த கதாநாயகர்களை மதிப்பளிக்கும் மாதம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கான தயார்ப்படுத்தல்கள் பெரியளவில் மேற்கொள்ளப்பட்டதால் இவற்றுக்கு இடையூறு விளைவிக்காது, கடந்த சில நாட்களாக கொழும்பில் உள்ள வீதிகள் சிலவற்றில் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறெனினும், யுத்தத்தின் இறுதிக்கட்டம் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடுவதை அடியோடு வெறுத்தனர். இதற்குப் பதிலாக அவர்கள் அஞ்சலி செலுத்துவதிலும், துக்கம் கடைப்பிடிப்பதிலும் ஈடுபட்டனர்.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் போது சேதமடைந்திருந்த, இன்னமும் புனரமைப்புச் செய்யப்படாதிருந்த தேவாலயம் ஒன்றில் மே 18 காலை இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவுமே இச்சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

மே 18, 2009 அன்று படுகொலை செய்யப்பட்ட வணக்கத்துக்குரிய சாரா அடிகளார் என அறியப்படும் அருட்சகோதரர் சரத்ஜீவன் அவர்களினதும், கொல்லப்பட்ட ஏனைய மக்களினதும் நினைவாக அத்தேவாலயத்தில் இரு நினைவுத்தூபிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள், இந்துக்கள் உள்ளடங்கலாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தேவாலயத்தில் இடம்பெற்ற இறந்தவர்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இச்சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் 20 கத்தோலிக்க மதகுருமார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரார்த்தனை நிகழ்வு முடிந்த பின்னர், போரின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபிகளில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மதகுரு ஒருவர், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் அனுராதபுரம் போன்ற இடங்களிலிருந்து இத்தேவாலயத்துக்கு வருகை தந்திருந்த சிங்கள மக்களை வரவேற்றார். பெரும்பாலான சிங்கள மக்கள் யுத்த வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதேவேளை, இத் தேவாலயத்துக்கு வருகை தந்திருந்த மிகக் குறைந்த எண்ணிக்கையான இந்த சிங்கள மக்கள் அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர்.

மே 18 மதியம், யுத்தத்தின் போது காணாமற் போன மற்றும் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தியதை நான் நேரில் பார்த்தேன். இதில் கலந்துகொண்டிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்து பெண்கள் பலர் கதறி அழுதனர், அத்துடன் மற்றும் சில பெண்கள் கோப உணர்வுடன் காணப்பட்டனர்.

அன்று பிற்பகல், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இவ்வாறான நிகழ்வொன்றில் கலந்து கொண்டேன். போரின் போது காணாமற் போன மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரும் மெழுகுதிரிகளை ஏற்றி தமது அஞ்சலியைச் செலுத்தினர். இதில் சிலர் காணாமற் போன மற்றும் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நடந்த துன்பகரமான சம்பவங்களை எடுத்துக் கூறினர்.

உண்மையில் இவ்வாறான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அச்சத்தின் காரணமாக மனம் விட்டு அழ முடியாது தவித்தனர். தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் சிலர் அச்சப்பட்டனர். இவர்கள் தாம் சந்தித்த துன்பகரமான யுத்த சம்பவங்களை வெளியில் கூறுவதில் தயக்கமடைந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய ஒருவருக்கு அச்சறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இவர் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இவ்வாறான நினைவுகூரல் நிகழ்வொன்றை மேற்கொள்வது வழமையாகும். மே 17 பிற்பகல், முகந்தெரியாத சிலர் குறிப்பிட்ட இந்நபரைச் சந்தித்து இவர் தொடர்பாகவும், இவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வன்னியில் இவ்வாறானதொரு நிகழ்வை மேற்கொண்ட கத்தோலிக்க மதகுரு ஒருவரையும் மே 17 அன்று இராணுவத்தினர் விசாரணை செய்ததுடன், அடுத்த நாட் காலை எவ்வாறான நிகழ்வும், பிரார்த்தனையும் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் விசாரித்தமையும் குறிப்பிடத்தக்கது. மே 18 காலை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் கடுமையாகத் தாக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டார். இவர் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது நண்பர்கள் எம்மிடம் தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிறிதொரு கிராமத்தில் உள்ள தேவாலய மதகுருவைச் சந்தித்த இராணுவத்தினர் மே 18 தொடக்கம் 20 வரை எந்தவொரு சிறப்பு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என எச்சரித்திருந்தனர். குறிப்பாக தேவாலயத்தில் வழமையான பிரார்த்தனையை மேற்கொள்ளலாம் என்றும் ஆனால் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாகவும் எந்தவொரு சிறப்பு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும் சிறிலங்கா இராணுவத்தினர், அத் தேவாலய மதகுருவிடம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

போரின் போது கொல்லப்பட்ட 1-2 வயதுக் குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் போன்றோரும் விடுதலைப் புலி உறுப்பினர்களா என அத் தேவாலய மதகுரு தன்னை அச்சுறுத்திய இராணுவத்திடம் திருப்பிக் கேட்டபோது, அவ் இராணுவத்தினர் எந்தவொரு பதிலையும் அளிக்காது திரும்பிச் சென்று விட்டனர்.

சில மாதங்களின் முன்னர், போரின் போது கொல்லப்பட்ட மக்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றை இங்கே குறிப்பிட்ட மதகுரு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது, இவ்வாறான எந்தவொரு நினைவுத் தூபியையும் அமைக்க வேண்டாம் என அம்மதகுரு மீது இராணுவத்தினர் அழுத்தத்தை மேற்கொண்டிருந்தனர்.

நவம்பர் 27, 2011 அன்று சிறிலங்காவின் வடக்கில் உள்ள தேவாலயங்களிலோ அல்லது இந்து ஆலயங்களிலோ மற்றும் சில சிறப்பு இடங்களிலோ மணி ஒலிக்கக் கூடாது எனவும், எந்தவொரு விளக்குகளும் ஏற்றக் கூடாது என சிறிலங்கா இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் கடந்த ஆண்டில் நவம்பர் 27 ஞாயிறு தினமாக இருந்ததால் தேவாலயங்களில் ஞாயிறுகளில் வழமையாக, காலங்காலமாக, உலகெங்கும் மேற்கொள்ளப்படும் காலைப் பிரார்த்தனையைக் கூட வைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் வடக்கில் தடைவிதித்திருந்தனர்.

மே 18 அன்று கிளிநொச்சி நகருக்கு அப்பால் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றில் போரின் போது காணாமற் போன மற்றும் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக மேற்கொள்ளப்பட்ட வணக்க நிகழ்வை கண்காணிப்பதற்கு இராணுவத்தினரும் காவற்துறையினரும் பிரசன்னமாகியிருந்தனர். இந்நிகழ்வில் நாம் கலந்து கொண்டிருந்த போது, அங்கு நின்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் எம்மை ஒளிப்படம் பிடித்தததுடன், நாங்கள் எமது வாகனங்களில் ஏறிச் செல்லும் வரை எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எனது நண்பர்கள் இவர் ஒரு சிறிலங்கா புலனாய்வு அதிகாரி என அடையாளங் கண்டுகொண்டனர். இதன் பின்னர் நாம் வீதி வழியாக சென்று கொண்டிருந்த போது, எமது வாகனம் சோதனைச் சாவடி ஒன்றில் நிறுத்தப்பட்டு எம்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் நான் பல தடவைகள் சிறிலங்காவின் வடபகுதிக்கு பயணித்த போதிலும் இவ்வாறானதொரு விசாரணைக்கும், இவ்வாறானதொரு சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரி எம்மைக் கண்காணித்ததால் இவ்வாறான சோதனை மேற்கொள்ளப்பட்டதா அல்லது தற்செயலாக நடந்தததா என்பது எமக்கத் தெரியாது.

தமது உறவுகளை இழந்து பாதிப்புக்குள்ளான மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பெப்ரவரி 04 அன்று அதாவது சிறிலங்காவின் சுதந்திர நாளன்று இவ்வாறான சிறப்பு நிகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த போதிலும், இதனை சிறிலங்கா அரசாங்கம் அசட்டை செய்துள்ளது.

காணாமற் போன மற்றும் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக மத அல்லது மதம் சாரா நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும் போது அவற்றைக் குழப்பும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடுகின்றது. அத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்துபவர்களை சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்துகின்றது. அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து தலையீடு செய்கின்றது.

யுத்தம் முடிவடைந்து விட்டது என்பதில் நான் மகிழ்வடைகின்றேன். ஆனால் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட விதம் குறிப்பாக இறுதி யுத்தம் தொடர்பில் நான் அதிருப்தி கொள்கின்றேன், அது தொடர்பில் நான் நிறைவுகொள்ளவில்லை. நாட்டிலுள்ள ஒரு சாரார் தமது அன்புக்குரியவர்களை நினைந்து அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது அவற்றைக் குழப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒருபோதும் நாட்டில் உண்மையான, நேர்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்கிக் கொடுக்காது.

கொல்லப்பட்ட மற்றும் காணாமற் போனவர்களை நினைவுகூருவதற்காக நினைவுத்தூபிகளை அமைத்து வனக்க நிகழ்வுகளை மேற்கொள்பவர்களின் வீரத்தை, துணிச்சலை, உறுதியை நான் என்றும் வரவேற்கின்றேன். இவ்வாறான துணிச்சலும், தூரநோக்கும் நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு வழிகோலும் என நான் நம்புகின்றேன்.

http://www.puthinappalakai.com/view.php?20120521106240

கடந்த வெள்ளி அன்று இங்கு சுவிசில் உள்ள பேர்ண் மாநிலத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இதுகளை என்னவென்று சொல்வது? இதற்க்கு நாள் பார்த்துக்கொடுத்த இந்த அய்யர்மர்களை என்னவென்று சொல்வது? அதற்க்கு சம்மதித்த கோயில் நிர்வாகத்தை என்னவென்று சொல்வது?

கடந்த வெள்ளி அன்று இங்கு சுவிசில் உள்ள பேர்ண் மாநிலத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இதுகளை என்னவென்று சொல்வது? இதற்க்கு நாள் பார்த்துக்கொடுத்த இந்த அய்யர்மர்களை என்னவென்று சொல்வது? அதற்க்கு சம்மதித்த கோயில்நிர்வாகத்தை என்னவென்று சொல்வது?

மன்னிக்க வேண்டும் அன்பரே . இந்த கருத்து முற்றினும் கோணலான காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்து போல உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.