Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம்,இணையம் மற்றும் பழைய சினிப் புத்தகங்களில் சேகரித்த சினிமாத் துணுக்குகள் அப்பப்ப தொடர்ச்சியாக இங்கு.....

1) எடுக்கபடாமலே நின்று போன தெலுங்கு படம், லோ பட்ஜெட் தெலுங்கு படம் ஒன்று என்று அஜீத் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் "அமராவதி" என்கிற ஒரு படத்தின் மூலம் அவருக்கு வெளிச்சம் கிடைக்க செய்தவர் இயக்குனர் செல்வா. செல்வா-வின் திருமணத்தில் கலந்து கொண்ட அந்த இளம் அஜீத்தின் புகைப்படம் உங்களுக்காக......

529523_203471323089788_153944858042435_253409_2137243389_n.jpg

2) ரஜினிகாந்தின் மெகா ஹிட் படமான "பாட்ஷா"வை முதலில் ஆர்.கே.செல்வமணிதான் இயக்குவதாக இருந்தது. செல்வமணியை அழைத்த ரஜினி, " வேறு எந்த கமிட்மென்டையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்; திரைக்கதை வேலை முடிஞ்சதும் சூட்டிங் போயிடலாம்" என்று கூறியுள்ளார்.

இதை கேள்விப்பட்ட விஜயகாந்த் தரப்பினர் செல்வமணிக்கும் தெரியாமல், விஜயகாந்த் நடிக்கும் படத்தை செல்வமணி இயக்குவதாக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தனர். இதை கண்டு அப்செட் ஆன ரஜினி; செல்வமணியை நீக்கிவிட்டு சுரேஷ் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்தார்.

இந்த பிரச்சனையில் செல்வமணிக்கும் ரோஜாவிற்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டு அவர்களது காதலில் ஓர் விரிசல் ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்.

533268_203414006428853_153944858042435_253235_1963777934_n.jpg

3) சிவாஜி கணேசன் - பத்மினி ஜோடியாக நடித்த முதல் படம் "பணம்". படத்துக்கு வசனம் கலைஞர் கருணாநிதி, இயக்கம் - ண்.ஸ்.கிருஷ்ணன். இந்த படத்தின் முன் பதிவு ஆரம்பம் விளம்பரம் உங்களுக்காக.

விளம்பரத்திண் மூலம் "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" - அதற்கு முன்பு "பராசக்தி கணேசன்" என்று அழைக்கப்பட்டிருபது தெரிய வருகிறது.

556658_202886459814941_153944858042435_252143_563564458_n.jpg

4) சாஸ்திர சம்பிராதயங்களில் நம்பிக்கை இல்லாத கமல்ஹாசன், தன்னுடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்காக முழு சம்பிராதாயங்களுடன் வாணி கணபதியை மணந்த போது எடுத்த பிரத்யேக படம்...

இந்த படத்தில் வாணியின் காலில் மெட்டி அணிவித்து விடுகிறார் கமல். கேரளாவின் பிரபல சினிமா பத்திரிகையான “நானா”-வில் வந்த புகைப்படம் இது.

542779_201997073237213_153944858042435_250277_991792570_n.jpg

5) மக்கள் திலகமாக உயர்ந்திருந்த நிலையிலும் நடனம் ஆட தெரியாதவர் என்கிற விமர்சனத்திற்கு ஆளான எம்.ஜி.ஆர், ஒரு படத்தில் “சிவ தாண்டவமே” ஆடியிருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆமாம்.“ஸ்ரீ முருகன்” என்கிற படத்தில் எம்.ஜி.ஆர் ஆடிய சிவ தாண்டவம்” அவருக்கு பெரும் புகழை பெற்று கொடுத்திருக்கிறது.

முதலமைச்சரான பின் இந்த படத்தின் பிரிண்ட்-களுக்காக பெரும் தேடுதல் வேட்டை நடத்தி இருக்கிறார் எம்.ஜி.ஆர். ஆனால் ஒரு தீ விபத்தில் இந்த படத்தின் நெகடிவ், பாசிடிவ் பிரிண்ட்கள் எரிந்து சாம்பலாகிவிட இந்த புகைப்படம் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது. அது உங்களுக்காக.

319861_197356223701298_153944858042435_240527_1589666188_n.jpg

6) தெரிந்த விஷயம்:-பதினாறு வயதினிலே தயாரிப்பாளர் ராஜ்கண்ணு ஒரு லாரி ஓட்டுனர் என்பது.

தெரியாத விஷயம்:- படம் எடுக்க வேண்டும் என்ற தீராத கனவுடன் இருந்த அவரிடம் வந்த பாரதிராஜா, நாலரை லட்சம் ரூபாய் இருந்தால் ஒரு படம் பண்ணி தருகிறேன் என்றிருக்கிறார். ஆனால் அந்த பணத்துக்குள் படம் எடுக்க முடியாததால் தனது லாரியை விற்று படத்தை முடித்திருக்கிறார் ராஜ்கண்ணு. ஆனால் படத்தை வாங்க யாரும் வராததால் ஆறு ப்ரிண்ட்களுடன் தமிழகம் முழுவதும் தானே வெளியிட்டிருக்கிறார். முதல் நான்கு வாரங்கள் படம் ஓடவே இல்லை.

ஆனால், அதன் பின் “பதினாறு வயதினிலே” ஓடிய ஓட்டத்தில் வருமான வரித்துறை ரெய்டுகளுக்கு பயந்து, தலைமறைவாகி விட்டாராம் ராஜ்கண்ணு. படத்தின் ரீமேக் உரிமையை கேட்டு பல மொழிகளின் பிரபல தயாரிப்பாளர்களும் ராஜ்கண்ணுவை வலை வீசி தேடியிருக்கிறார்கள். கடைசியில் ஒரு வழியாக, மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த ராஜ்கண்ணுவை பிடித்து ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்கள்.

550022_201653329938254_153944858042435_249875_1833312699_n.jpg

7) யேசுதாசும் அவரது மனைவி பிரபாவும் காதல் திருமணம் மட்டுமல்ல கலப்பு திருமணமும் செய்தவர்கள்.

பிரபா- யேசுதாஸை இப்போதும் குருவாயூருக்குள் அனுமதிக்காத ஹிந்து மதம். யேசுதாஸ் – கட்டுபாடு மிகுந்த கிறிஸ்துவ குடும்பம்.

பிரபாவுக்கு பதினைந்து வயது இருக்கும் போதே யேசுதாஸின் மீது காதல் பூத்திருக்கிறது. பிரபாவின் காலுக்கும் கீழே நீண்டிருக்கும் தலைமுடிதான் யேசுதாசை பிரபாவின் மீது காதல் கொள்ள வைத்ததாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பிரபா.

இந்த காதல் திருமணமாக அரங்கேறிய அந்த புகைப்படம் !

538846_201604629943124_153944858042435_249806_715642660_n.jpg

8) கோ- பட நாயகி கார்த்திகா நடிக்க வருவதற்கு முன்னால், அவரது அம்மா ராதாவுடன் எடுத்த ஒரு படம்.

555127_201537396616514_153944858042435_249694_2011410841_n.jpg

9) நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, என்று பலமுகம் காட்டும் டி.ராஜேந்தரின், அதிகம் பார்க்கப்படாத அவரது திருமண போட்டோ.

டி.ராஜேந்தர், உஷா இருவருக்கும் காதல் தோல்வி இருந்ததாகவும், அந்த தோல்வியின் வலியை இருவரும் பகிர்ந்து கொண்ட போது, இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒரு அன்பு உருவாகி அதுதான் திருமணத்தில் முடிந்தது என்கிறார்கள் சீனியர் சினிமா நிருபர்கள்.

அந்த அன்பை வெளிபடுத்தும் பொருட்டுத்தான் “உயிருள்ளவரை உஷா” என்று தன்னுடைய படத்திற்கு பெயர் வைத்தார் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

559773_201470269956560_153944858042435_249563_464011519_n.jpg

Edited by சுபேஸ்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதவும் கே.ஜே ஜேசுதாசும்......

431474_10150571473413020_804097507_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் ஒய்.ஜி.மகேந்திரன், மௌலி, ரமேஷ் அரவிந்த், கிரேசி மோகன் முதலானோர் எஞ்சினியர்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி, ராதா ரவி, சோ முதலானோர் வக்கீல்கள்.

பிரபல மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் ஒரு வக்கீல். நையாண்டி தர்பாரில் அவரை பேட்டி கண்ட யூகி சேது அடித்த காமெண்ட் :

“லாயர்கள் எல்லாரும் லையர்கள் என்று சொல்வார்கள் ஆனால் நீங்க லயர் (லயம் என்றால் தாளம்) ஆயிட்டீங்களே, எப்படி?”

_____________________________________________________________________________________________________

தமிழில் கொடி கட்டிப் பறந்த பின்னணிப் பாடகர்களான டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ்,எ.எல்.ராகவன்,எஸ்.பி.பி.,யேசுதாஸ்,பி.சுசீலா,எஸ்.ஜானகி யாருக்குமே தாய் மொழி தமிழ் இல்லை.

___________________________________________________________________________________________________

ஒரே நாளில் ஒரு கதாநாயகனின் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் நூறு நாட்கள் ஓடிய பெருமை ஒரே ஒரு நடிகருக்கு மட்டுமே உண்டு. அவர் சிவாஜி கணேசன். படங்கள் ; சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள்.

_______________________________________________________________________________________________________________

எம்.ஜி.ஆரோடு போட்ட ஐந்தாண்டு காண்டிராக்ட் முடிந்து செல்வி.ஜெயலலிதா நடித்த முதல் படம் சிவாஜியின் கலாட்டா கல்யாணம். அந்தப் படத்தின் துவக்கமே ஒரு பாடல்தான். அது : “நல்ல இடம், நீ வந்த இடம்”-குசும்பு by கண்ணதாசன்.

______________________________________________________________________________________________________________

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பராசக்தி படத்தில் ஒரு பாடல் எழுத கண்ணதாசன் விரும்பினாராம். ஆனால் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் அந்த பிரபலமான நீதிமன்றக் காட்சியில் நீதிபதியாக அமர்ந்து வசனம் பேசஅவருக்கு வாய்ப்பு கிட்டியதாம்.

_________________________________________________________________________________________________

மெல்லிசை மன்னர் எம் எஸ் வியும் இளையராஜாவும் இணைந்து இசை அமைத்த படம் மெல்லத் திறந்தது கதவு! இப்படத்தின் ஒரு பிரபலமான பாடல், “ வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே” என்பதாகும். இந்தப் பாடல் சண்டிராணி என்ற விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த படத்தின் பாடலை மாற்றி அமைத்ததாகும். அந்த ப் பாடலானது, “ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே” என்ற பாடல். இதை இசைஞானி இளையராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம்.

_________________________________________________________________________________________________

ஹேமமாலினி நடித்த முதல் படம்!

இது சத்தியம் என்ற படத்தில் வரும் சிங்காரத் தேருக்குச் சேலை கட்டி என்ற சீர்காழி கோவிந்தராஜன், எல் ஆர் ஈஸ்வரி இருவரும் பாடிய நடனப் பாடலுக்கு நடிகை ஹேமமாலினி நடனக் குழுவுடன் நடனம் ஆடியிருக்கிறார். இது தான் அவருடைய முதல் திரைப்படம்.

____________________________________________________________________________________________________________

மெல்லிசை மன்னர்கள் உருவான கதை

மறைந்த மாமேதை சி ஆர் சுப்பராமனிடம் விஸ்வநாதன் ஹார்மோனியம் வாசித்தும், ராமமூர்த்தி வயலின் வாசித்தும் பணியாற்றி வந்தனர். சி ஆர் சுப்பராமன் உடல் நலம் குன்றியதும் அவர் விஸ்வநாதனிடம் இனி நான் மேற்பார்வை மட்டும் தான் பார்ப்பேன், இனி நீயே இசை அமைத்துக் கொள் என்று சொல்லி விட்டாராம். சுப்பராமன் மறைவுக்குப் பின் அவர் இசை அமைத்துக் கொண்டிருந்த படத்தயாரிப்பாளர்கள் எல்லாம் வந்து விஸ்வநாதனிடம், " உங்களிடம் சுப்பராமன் பெருமதிப்பு வைத்திருந்தார், நீங்கள் தான் படங்களை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனராம். விஸ்வநாதன் ராமமூர்த்தி நம்மை விட வயசானவர் ஆயிற்றே அவரை விட்டு விட்டுத் தனியாகப் போகக் கூடாது என்று அவரையும் சேர்த்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடம் போய் நாங்கள் இருவரும் சேர்ந்து இசை அமைக்கிறோம் என்று சொல்லி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் உருவானார்கள். சுப்பராமனின் பாதி வேலையில் நின்ற படங்கள் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்தனர்.

___________________________________________________________________________________________________________

ஒரு முறை ஒரு சிவாஜி கணேசனின் படம் ஒன்றிற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பதாக இருந்தது. ஒரு டூயட் பாடல் மலேசியா/சிங்கப்பூர் போய் எடுக்கத்திட்டமிட்டிருந்தார்களாம். பாடல் கவிஞர் கண்ணதாசன். திரைப் படக் குழு மே மாதம் மலேசியா போவதாக இருந்தார்கள். ஆனால் நாள்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல் வரிகளாக எழுத இயலவில்லையாம். எம் எஸ் வி திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷூட்டிங் இருக்கிறது பாடலை விரைவில் கொடுங்கள் என்று மே மாதம் வந்து கொண்டேயிருக்கிறது என்ற கவலையால் நினைவூட்டிக்கொண்டே யிருந்தாராம். ஒரு நாள் பொறுமையிழந்த கவிஞர், என்ன நீ மே மே மே என்று தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாய். இந்தா பிடி பாட்டு என்று ஒரு பாடல் எழுதிக் கொடுத்தாராம். இப்பாடல், ஒவ்வொரு வரியிலும் மே என்று முடியும் பாடல். "அன்பு நடமாடும் கலைக்கூடமே" என்று தொடங்கும் அருமையான பாடல். இதுதான் கவிஞர் கண்ணதாசனின் திறமை.

___________________________________________________________________________________________________________________________

ஒரு முறை கே பாலசந்தரின் பட்டினப் பிரவேசம் படத்திற்காக ஒரு மெட்டு போட்டு ரெடியாக வைத்திருந்தாராம் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். சில தினங்கள் முயற்சித்துப் பார்த்தும் கவிஞர் கண்ணதாசனுக்கு வார்த்தைகள் வந்து விழவில்லையாம். மெட்டை மாற்றி விடலாமா என்று கவிஞர் எம் எஸ் வியிடம் கேட்டாராம். இல்லை இல்லை பாலசந்தருக்குப் பிடித்த மெட்டு மாற்ற முடியாது என்று சொல்லி விட்டாராம். கண்ணதாசன் அந்த மெட்டைத் திரும்பவும் எம் எஸ் வியை பாடச் சொன்னாராம். அவர் தானனா தனா தனா என்று எப்போதும் போல பாடாமல், லா ல லா ல லா லல்லா லலா லலா லலா என்று பாடிக் காண்பித்தாராம். உடனே கவிஞர் இந்த லா ல லாவுக்கா என்னால் பாட்டு எழுத முடியாது என்று உடனே வான் நிலா நிலா அல்ல என்று எல்லா வரிகளும் லா வில் முடியும் வண்ணம் அருமையான பாடல் முழுவதும் அப்போதே எழுதிக் கொடுத்தாராம். உண்மையிலே ஒரு மஹா கவிதான் கண்ணதாசன்.

________________________________________________________________________________________________________________

Edited by சுபேஸ்

_____________________________________________________________________________________________________

தமிழில் கொடி கட்டிப் பறந்த பின்னணிப் பாடகர்களான டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ்,எ.எல்.ராகவன்,எஸ்.பி.பி.,யேசுதாஸ்,பி.சுசீலா,எஸ்.ஜானகி யாருக்குமே தாய் மொழி தமிழ் இல்லை.

___________________________________________________________________________________________________

TMS மதுரைத் தமிழன் என்று தான் அறிந்ததாக நினவு சுபேஸ்.

அவர்கள் மட்டுமா, சித்ரா, மனோ, சுஜாதா, சுனந்தா, இப்படி பலர் தமிழ் தாய்மொழி இல்லாமலே தமிழில் நல்ல பாடல்களைப் பாடியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் திருமண படம்.இத்திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது.

Goundamanis_Wedding_Photo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் திருமண படம்.இத்திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது.

Goundamanis_Wedding_Photo.jpg

கவுண்டமணியின் முகமே விவாகரத்தில் முடியத்தான் போகின்றது என்று காட்டுகின்றது! :lol:

ஒரு முறை ஒரு சிவாஜி கணேசனின் படம் ஒன்றிற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பதாக இருந்தது. ஒரு டூயட் பாடல் மலேசியா/சிங்கப்பூர் போய் எடுக்கத்திட்டமிட்டிருந்தார்களாம். பாடல் கவிஞர் கண்ணதாசன். திரைப் படக் குழு மே மாதம் மலேசியா போவதாக இருந்தார்கள். ஆனால் நாள்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல் வரிகளாக எழுத இயலவில்லையாம். எம் எஸ் வி திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷூட்டிங் இருக்கிறது பாடலை விரைவில் கொடுங்கள் என்று மே மாதம் வந்து கொண்டேயிருக்கிறது என்ற கவலையால் நினைவூட்டிக்கொண்டே யிருந்தாராம். ஒரு நாள் பொறுமையிழந்த கவிஞர், என்ன நீ மே மே மே என்று தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாய். இந்தா பிடி பாட்டு என்று ஒரு பாடல் எழுதிக் கொடுத்தாராம். இப்பாடல், ஒவ்வொரு வரியிலும் மே என்று முடியும் பாடல். "அன்பு நடமாடும் கலைக்கூடமே" என்று தொடங்கும் அருமையான பாடல். இதுதான் கவிஞர் கண்ணதாசனின் திறமை.

http://www.youtube.com/watch?v=twb3fk1FMlw

  • கருத்துக்கள உறவுகள்

ilayaraja-marriage-rare-photo.jpg

இசைஞானி இளையராஜா தம்பதிகளின்(rare) திருமண படம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Very Rare pic .

Santhanam Marriage pic

317920_304948379599935_974992414_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.