Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தில் கண்ணீரை வரவளைத்த சில காட்சிகள்

Featured Replies

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய உண்ணாவிரதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டார்கள்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த தகவல்கள் அனைவவருக்கும் கண்ணீரை வரவளைப்பதாக அமைந்திருந்தது.

முல்லைத்தீவைச் சேர்ந்த நடேசு முரளீதரன் (43), முரளீதரன் கிருஷ்ணகுமாரி, முரளீதரன் சாருஜன் (7), அபிதா(5) ஆகியோர் முல்லைத்தீவு செல்வபுரத்தில் வைத்து 18.05.2009 அன்று இராணுவப் பேருந்தில் ஏற்றியதை நேரில் கண்ட சாட்சியான அவரது உறவினர் காணாமல் போனோரின் புகைப்படத்துடன் கண்ணீர்விட்டு அழுதது அனைவரது நெஞ்சையும் நெகிழ்வித்தது. காணாமல் போனோரின் இன்றைய வயது மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 25.05.2006 அன்று துணுக்காய் பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க துணுக்காய் கிளை உதவி முகாமையாளர் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். அவரது தாய் தனது மகனின் புகைப்படத்துடன் தான் ஏறாத இடம் இல்லை, தட்டாத கதவில்லை என்று கண்ணீர்மல்கக் கூறினார்.

முல்லைத்தீவு செல்வபுரத்தில் இராணுவத்திடம் பதிவு செய்து நீண்டநேரம் தனது குடும்பத்தினருடன் உரையாடிக்கொண்டிருந்த சிவராசா பகீதரனை அழைத்து இராணுவத்தினர் பேருந்தில் ஏற்றியதைப் பார்த்த அவரது துணைவியார் கண்ணீர்மல்க தனது கணவரை மீட்டுத்தருமாறு உருக்கமுடன் கண்ணீர்விட்டழுத காட்சி கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

24tna4-580x435.jpg

24tna3-580x435.jpg

24tna2-580x435.jpg

24tna1-580x435.jpg

24tna-580x435.jpg

http://www.pooraayam.com/mukiaya/4360-2012-05-24-08-15-52.html

Edited by ஊர்பூராயம்

எங்கே தமிழினத்தின் உரிமைகளை விலைபேசத் தயங்காத கூட்டமைப்பின் பச்சோந்திகளான சம்பந்தன், சுமந்திரன், சரவணபவன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.