Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணுவத்தினரின் படைமுகாம்கள் அகற்றப்படுவது கட்டாயம் - பொன்சேகா

Featured Replies

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு; படைமுகாம்கள் அகற்றப்படுவது கட்டாயம் உதயனுக்குப் பொன்சேகா பரபரப்புப் பேட்டி

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

"உதயனு"க்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றின்போது இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

சந்தேகத்தின் பேரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2010 ஆம் ஆண்டுக்குள் மீள் குடியேற்றத்தை எப்படி முடிப்பது என்பது பற்றியும் எந்தெந்த இடங்களில் படைமுகாம்களை அகற்றுவது என்பது பற்றியும் தமிழ்மக்களை எதுவித தொல்லைகளுமின்றி எப்படிக் குடியேற்றுவது என்பது தொடர்பிலும் திட்டங்களை வகுத்திருந்தேன். அந்தத் திட்டங்களை அவர்கள் அப்போது வெறுத்தனர். ஆனால் 2012 அதாவது இன்றுவரை இவர்களால் ஒன்று கூடச் செய்யமுடியாமல் போயுள்ளது.

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். இராணுவ முகாம்களால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுமாயின் உண்மையில் அது பிரச்சினைதான். அதே போல், கிட்டத்தட்ட 12 ஆயி ரம் முன்னாள் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வளித்திருக்கிறோம்.

அவர்களுக்குச் சரியான புனர்வாழ்வளிக்கப்பட்டதா? அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்களா என்பதையும் பார்க்கவேண்டி இருக்கிறது. மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுத்த பின்னர் இராணுவ முகாம்களைப் படிப்படியாக அகற்றலாம்.

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தினர் தலையிடக் கூடாது. அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவம் இராணுவத்தின் வேலையை மட்டும்தான் செய்யவேண்டும்.

கடந்த மூன்று வருடங் களில் இராணுவத்தை இவர் கள் சிவில் நிர்வாகத்திலி ருந்து விலக்கியிருக்கலாம். இப்போது இவர்களால் போடப்பட்டிருக்கும் அதிகாரிகள் கூட தகுதிவாய்ந் தவர்கள் அல்லர். அரசியல் அடிவருடிகளைத்தான் இவர் கள் நியமித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைப் பாருங்கள். இதுதான் நிலைமை. கொள்கை இல்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=280851076425131559

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் குரலாக ஒலிக்கிறான்.. பதவிக்கு வந்தால் பிளேட்டை மாத்துவாங்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் குரலாக ஒலிக்கிறான்.. பதவிக்கு வந்தால் பிளேட்டை மாத்துவாங்கள்.. :D

அதுதான் அவர்களுக்கு கைதேர்ந்த கலையாச்சே ...... :blink:

சிங்களவன் எல்லோருமே தமிழன் விடயத்தில் ஒரேமாதிரி இருக்கின்றாங்கள் :(

  • தொடங்கியவர்

வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சிறிலங்காப் படையினரை நிலைநிறுத்த முடியும்; பிரித்தானியா

சிறிலங்காவில் வடக்கு கிழக்கில் மட்டும் பாரியளவில் படையினரை குவிக்காது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினர் நிலைநிறுத்த முடியும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கில் அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதனைப் போன்று வடக்கு கிழக்கிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை வரையறுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா போன்று இலங்கையிலும் நாட்டின் சகல பாகங்களிலும் இராணுவம் முகாம்கள் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதாகவும் வடக்கு கிழக்கில் மட்டும் பாரியளவில் படையினரை குவிக்காது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினர் நிலைநிறுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் ஏனைய பல நாடுகளைப் போன்றே புலிகள் அமைப்பு பிரித்தானியாவிலும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=555991077325592767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.